அல்லாஹ்வின் தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல்

ஈமானின் நான்காவது கடமை இறைத் தூதர்களை விசுவாசம் கொள்வதாகும், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் நேர்வழியைக் காட்டி, அதன்பால் இட்டுச் செல்ல அனுப்பப்பட்டவர்களே ரசூல்மார்கள் மற்றும் நபிமார்களாவர்.

الاسم : الإيمان بالرسل عليهم السلام


تأليف: محمد إمتياز يوسف

نبذة مختصرة: كتاب باللغة التاميلية يبين الركن الرابع من أركان الإيمان وهو الإيمان بالرسل - عليهم السلام - بأنهم أرسلوا من الله لهداية الناس وإرشادهم إلى الحق.


இறைதூதர்களை விசுவாசம் கொள்ளுதல்

 

 

] Tamil – தமிழ் –[ تاميلي 

M.S.M.இம்தியாஸ் யூசுப்





2014 - 1435
 
 
الإيمان بالرسل عليهم السلام
« باللغة التاميلية »

محمد إمتياز يوسف










2014 - 1435
 
 
இறைதூதர்களை விசுவாசம் கொள்ளுதல்
M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
PART-01
ஈமானின் நான்காவது கடமை இறைத் தூதர்களை விசுவாசம் கொள்வதாகும்.
மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் நேர்வழியைக் காட்டி,அதன்பால் இட்டுச் செல்ல அனுப்பப்பட்டவர்களே ரசூல்மார்கள் மற்றும்  நபிமார்களாவர்.
ரசூல் என்பதற்கு தூதர்  என பொருளாகும். இதன் பன்மைச் சொல் ருசுல் என்பதாகும்.
நபி என்பதற்கு செய்தியைச் சொல்பவர் என பொருளாகும். இதன் பன்மைச் சொல் அன்பிய்யா என்பதாகும்.
              அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்ற வாறு இறைத்தூதர்களை நம்பிக் கொள்வது எங்கள் மீது கடமை யாக் கப்பட்டுள்ளது.
آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
(முஃமின்களாகிய) அவர்கள் அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் ஈமான் கொண்டுள்ளனர். அவனது தூதர் களில் எவருக்குமிடையில் வேறுபாடு காட்ட மாட்டோம். எங்கள் இரட்சகனே! உனது மன்னிப்பை கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது என்றும் கூறுகின்றனர். (2:285)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا } [النساء: 136
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் (4:136)
ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனது மலக்கு களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர் களையும் மறுமை நாளையும் கலாகத்ரையும் விசுவாசம் கொள்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உமர் (ரழி), நூல்: முஸ்லிம்)
            இறைத்தூதர்களில் ஒருவரையேனும் நம்பிக் கொள்ள மறுத்தால் அவர் ஈமானின் வட்டத்தை விட்டும் வெளியேறியவராவார்.
قَبْلُ وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا } [النساء: 136
எவர் அல்லாஹ்வையும். அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களை யும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்று விட்டார்.(4:136)
          இறைத்தூதர்களை அல்லாஹ்வின் தெரிவின்படி அனுப்பப் பட்டார்களே தவிர மனித தேர்வினால் தேர்ந்தெடுக்கப் பட்ட வர்களல்ல.
اللَّهُ يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلًا وَمِنَ النَّاسِ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ [الحج: 75
அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களி லிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன். பார்ப்ப வன்.(22:75)
               அல்லாஹ்வின் வழியை விட்டும் மக்கள் நெறி பிறழும் போது அவர்களை நேர்வழிப்படுத்துவதற்காக இறை வழிபாட்டை (இபாதத்களை) நேர்த்தியாக நிறைவேற்று வதற்காக அதன் வழிகளை காண்பிப்பதற்காக  இறைத் தூதர்கள் காலத்திற்கு காலம் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ  النحل: 36
அல்லாஹ்வை வணங்குங்கள், மேலும் அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் தாகூத்தை  விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். (16:36)
          தாங்கள் தவறிழைக்கும் போது அல்லது நேர்வழியை விட்டும் அகழும் போது நேர்வழியை காண்பிக்க இறைத் தூதர்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வில்லை என்று மறுமையில் மக்கள் வாதாடாமல் இருப்பதற்காகவே இறைத்தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்
رُسُلًا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا } [النساء: 165
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர் களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாள னாகவும் இருக்கின் றான்.(4:165)
          மனித சமூகம் படைக்கப்பட்டு இந்த உலகிற்கு அனுப்பப்படு முன் ஆன்மாக்களாக இருந்த சந்தரப்பத் திலே அல்லாஹ்விடம் கொடுத்த உறுதி மொழியை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ (172) أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِنْ بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ (173) وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ} [الأعراف: 172 – 174
 உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து; “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக; (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே, நாங்களோ அவர் களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விட லாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினை வூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.(7:172-174)
             மனிதர்கள் மீது அன்பு கொண்ட அல்லாஹ் மக்கள் கொடுத்த வாக்குறுதியை விட்டும் தடம் புரண்ட போதும் கூட நேர்வழி காட்டுவதற்காக ஒவ்வவொரு சமூகத்திற்கும் ஒருதூதரை அனுப்பி வைத்தான்.
وَلِكُلِّ قَوْمٍ هَادٍ
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஒரு வழிகாட்டி உண்டு.(13:7
وَإِنْ مِنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ
எந்தவொரு சமுதாயத்திலும் அதில் எச்சரிக்கை  செய்பவர் வராமல் இருந்ததில்லை (35:24)
இவ்வாறாக அனுப்பப்பட்ட 25 நபிமார்களின் பெயர்களை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ (83) وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (84) وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنَ الصَّالِحِينَ (85) وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ } [الأنعام: 83 – 86
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்றாஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம். நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம். நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபை யும் (சந்ததி யாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரை யும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்.இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலை மான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம். இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்று முள்ளவர்களே.

 இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.(6:83-86)
{وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا } [مريم: 56
(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்திய வானாக) நபியாக இருந்தார்.(19:56)
{كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ (123) إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ (124) إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ } [الشعراء: 123 – 125
ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறிய போது, “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக் குரிய (இறை) தூதன் ஆவேன்.(26:123-125)
{كَذَّبَتْ ثَمُودُ الْمُرْسَلِينَ  إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَالِحٌ أَلَا تَتَّقُونَ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ }
ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ், “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?”எனக் கூறியபோது “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக் கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.(26:141-142)
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ  إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ }
ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவ னுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறிய போது“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.(26:177-178)
وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِنَ الْأَخْيَارِ
இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும்,அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந் தனர்.(38:48)
{مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا } [الأحزاب: 40

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக் கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  (33:40)
குறிப்பிட்ட சில நபிமார்களின் பெயர்கள் சொல்லப்பட்ட போதும் பெயர்கள் சொல்லப் படாத நபிமார்களும் உள்ளனர் என்று அல்லாஹ் கூறுகிறான்.
{وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ } [النساء: 164
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம். இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம். ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூற வில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.(4:64)
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ مِنْهُمْ مَنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَنْ لَمْ نَقْصُصْ عَلَيْكَ } [غافر: 78
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலரு டைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். இன்னும் எவர்களுடைய வர லாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர். (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை. ஆகவே அல்லாஹ் வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக் கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.  (40:78)
எல்லா நபிமார்களுக்கும் சிறப்புக்கள் வழங்கப்பட்ட அதேவேளை சில நபிமார்களுக்கு விஷேடமான சிறப்புக் களையும் அற்புதங்களையும் அல்லாஹ் வழங்கி அவர்களை சிறப்பித்துள்ளான். அவர்களுடன் பேசியுமுள் ளான்.
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ [البقرة: 253
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின் றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின் றான். (2:253)
وَرَبُّكَ أَعْلَمُ بِمَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيِّينَ عَلَى بَعْضٍ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا} [الإسراء: 55
உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மை யாக்கியிருக்கிறோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
தான் நாடிய இறைத்தூதர்களுக்கு சிறப்புக்களை வழங்கியிருந்தாலும் அவர்களில் யாரையும் ஏற்றத் தாழ்வுடன் நோக்கக் கூடாது  என்பதை மேலேயுள்ள 2:285 வசனத்திலும் பின்வரும் வசனத்திலும் அல்லாஹ் கூறு கிறான்.
قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ } [آل عمران: 84
“அல்லாஹ்வையும்,எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும்,இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்க ளுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்ட வற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக(3:84)
صحيح البخاري (3/ 121)
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُخَيِّرُوا بَيْنَ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ تَنْشَقُّ عَنْهُ الأَرْضُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ، أَمْ حُوسِبَ بِصَعْقَةِ الأُولَى»
நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்ப வராகக் காண்பேன்.
'மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போது மென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு)விட்டதா என்று எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
      நபிமார்கள் தங்களது சமூகத்தவர்களால் கடுமையான இம்சைகளுக்கும் சோதனை களுக்கும் துன்பங் களுக்கும் ஆளானார்கள். சில பேர் கொலை கூட செய்யப் பட்டார்கள். இந்த நபிமார்களில் ஐந்து பேர் உலுல் அஸ்ம் என சிறப்பித்து அழைக்கப்படுகிறார்கள். நபி நூஹ் (அலை), நபி இப்றாஹீம் (அலை), நபி மூஸா (அலை), நபி ஈஸா (அலை), நபி முஹம்மத் (ஸல்) ஆகியோராவர் உலுல் அஸ்ம்களாவர் என இப்னு அப்பாஸ் (ரழி) கூறி, பின்வரும் வசனத்திற்கு விளக்கம் கூறினர்.
فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ
நமது தூதர்களில் உறுதிமிக்கோர் பொறுமையாக இருந்தது போல் (நபியே) நீரும் பொறுமையாக இருப்பீராக. (46:35)
இந்த இறைதூதர்களில் முதலாவதாக அனுப்பப்பட்டவர் நபி நூஹ் (அலை) அவர்களாவர். ஆதம் நபியுடைய சந்ததிகளில் முதன் முதலாக இணைவைப்பை தோற்று வித்து  செயற்பட ஆரம்பித்த போது நபி நூஹ் (அலை) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப் பட்டார்கள்.
நூஹ் (அலை) அவர்கள் அம் மக்களிடம் அல்லாஹ்வின் வல்லமைகள், ஆற்றல்கள் மற்றும் பாவமன்னிப்பையும் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்தார்கள். இது பற்றி அல்லாஹ் சூரா நூஹ் எனும் அத்தியாயத்தில் தெளிவாக குறிப்பிடுகிறான்.
إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ
நபியே! நிச்சயமாக நாம் நூஹுக்கும் அவருக்கு பின்வந்த நபிமார்களுக்கும் வஹி அறிவித்தது போன்றே உமக்கும் வஹி அறிவித்தோம். (4:163)
மறுமை நாளில் தங்களுக்காக அல்லாஹ் விடம் பரிந்துரைக்குமாறு -ஷபாஅத் செய்திடு மாறு- மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அப்போது தனக்கு ஷபாஅத் செய்ய இயலாது என்ற காரணத்தைக் கூறிவிட்டு நீங்கள் நூஹிடம் செல்லுங்கள். அல்லாஹ் அனுப்பி வைத்த முதல் தூதர் அவர்ஆவார் என ஆதம் (அலை) கூறுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல் புகாரி
பூமியில் மனிதர்கள் வாழ்வதனாலேயே  மனிதர்களி லிருந்தே நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். தவிர வானத்திலிருந்து எந்தவொரு மலக்கும்   நபியாக அனுப்பப்பட வில்லை.
. وَمَا مَنَعَ النَّاسَ أَنْ يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى إِلَّا أَنْ قَالُوا أَبَعَثَ اللَّهُ بَشَرًا رَسُولًا  قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَسُولًا  قُلْ كَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا } [الإسراء: 94 – 96
மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்”என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெது வும் தடுக்கவில்லை.(நபியே!) நீர் கூறும், “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால்,நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று. “எனக்கிடையிலும்,உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமான வன். நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின் றான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.(17:94-96)
அது போல் இறைத்தூதர்கள் ஆண்களிலிருந்து மட்டுமே தெரிவு செய்யப்பட்டார்களே தவிர பெண்களிலிருந்து எவரும் நபியாக அனுப்பப்படவில்லை.
{وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ} [الأنبياء: 7
(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை. அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால்(நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).(21:7)
நபி நூஹ் (அலை) அவர்கள் முதல் இறுதித்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ் இஸ்லாம் என்கிற மார்க்கத்தையே கொடுத்தான்
شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ } [الشورى: 13
நூஹுக்கு எதனை அவன் உபதேசித் தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக் கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்,நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடிய வர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டு கிறான்.(43:13)
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ } [آل عمران: 85
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிட மிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்த கைய) வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.(3:85)
இஸ்லாம் மார்க்கத்தை  பின்பற்றிய அச் சமூகத்தினர்கள் முஸ்லிம்கள் என்று அழைக்கவும் பட்டார்கள். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
{فَإِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ} [يونس: 72
நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரி டத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று  நூஹ் (அலை) தனது சமூகத் தைப் பார்த்து கூறினார்). (10:72)
{رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ} [البقرة: 128
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம் களாக்குவாயாக;எங்கள் சந்ததியினரிட மிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை (கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக.நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும்,அளவிலா அன்புடை யோனாகவும் இருக்கின்றாய்.”( இப்றாகீம் (அலை) கூறினார்.) 2:128.
وَقَالَ مُوسَى يَا قَوْمِ إِنْ كُنْتُمْ آمَنْتُمْ بِاللَّهِ فَعَلَيْهِ تَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُسْلِمِينَ} [يونس: 84
மூஸா (தம் சமூகத்தவரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர் களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.(2:84)
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِنَ الْمُسْلِمِينَ
(ஆத் நபியின் சமூகத்தார் வசித்த ஊரில்)அதில் முஸ்லிம் களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர,ஒருவரையும் நாம் காணவில்லை.(51:36)
إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ } [النمل: 30، 31
நிச்சயமாக இது (இக்கடிதம்) ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. இன்னும் நிச்சயமாக இது “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது. “நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (முஸ்லிம்களாக) என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).  (27:30-31)
فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.(3:52)
قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ  وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ الْمُسْلِمِينَ} [الزمر: 11، 12
(நபியே! இன்னும்) “மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப் பட்டிருக்கின்றேன்” என்றும் கூறுவீராக. “அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள் ளேன்” (என்றும் முஹம்மதே நீர் கூறுவீராக) .(39:11-12)
            எந்தவொரு இறைத்தூதரும் தன்னு டைய பெயரால் மதத்தை உருவாக்கிட வில்லை. தன்னை பின்பற்றுபவர் களை  தன்னுடைய பெயரில் பக்தர்களாகவோ சிஷ்யர் களாகவோ உருவாக்கிடவுமில்லை.
            நபிமார்கள் காட்டிய அற்புதம் மக்களால் செய்ய முடியாதவையாகவே இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இது மாயமோ மந்திரமோ அல்ல என்பதையும் விளங்கிக் கொண்டனர் இதனை அரபியில் முஃஜிஸாத் எனப்படும்.
وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ} [الرعد: 38
எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை, ஒவ்வொரு தவணைக் கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(13:38)
       இறைத்தூதர்கள் ஆன்மீகம் லௌகீகம் என்று இரு பக்க வாழ்வையும் மக்கள் முன்வைத்து போதித்து அல்லாஹ் விரும்பும் சமூகத்தையும் ஆட்சி அதிகாரத்தை யும் ஏற்படுத்தினார்கள். ஆன்மீகத்தின் ஒரு வழியாக குடும்ப வாழ்விலும் ஈடுபட்டார்கள். இறைத்தூதர்கள் மணம் முடித்தவர்களாகவே இருந்தார்கள்.
{وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً [الرعد: 38
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம், அவர்களுக்கும் மனைவி யரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்.  (13:38)
இறை திருப்தியை பெறுவதற்கு திருமணத்தை துறக்க வேண்டும், துறவரத்தை ஏற்க வேண்டும் என்று ஒரு போதும் எந்தவொரு தூதரும் போதிக்க வில்லை. இறை திருப்தி முறையான குடும்பவாழ்வில் உள்ளது என்றே போதித்தார்கள்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
உங்கள் கருத்துக்களை அறிவிக்க;






 
அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட எல்லா தூதர் களும் இந்த பூமியிலே மரணித்து விட்டார்கள். அல்லாஹ் எந்த நபிக்கும் எந்த மனிதனுக்கும் நித்திய வாழ்வை கொடுக்க வில்லை.
وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِنْ قَبْلِكَ الْخُلْدَ أَفَإِنْ مِتَّ فَهُمُ الْخَالِدُونَ
நபியே உமக்கு முன்னர் எந்தவொரு மனித ருக்கும் (மரணமற்ற) நிரந்தரத்தன்மையை நாம் ஏற்படுத்த வில்லை. நீர் மரணித்து விட அவர்கள் நிரந்தரமாக இருப்பார்களா?(21:34)
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ
முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் வந்து சென்று விட்டனர். (3:144)
அல்லாஹ் அனுப்பிய இறைத்தூதர்களில்  விதிவிலக்காக ஈஸா (அலை) அவர்கள் மட்டும் இன்னும் இறக்கவில்லை.
யூத சமூகத்தவர்களுக்கு அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட இறைத்தூதர்களில் ஒருவரே ஈஸா நபி.  யூதர்கள் ஈஸா நபியை இறைத் தூதராக ஏற்க வில்லை. அவரது போதனை களை யும் ஏற்க வில்லை. எனவே அவரை கொலை செய்திட வேண்டும் என்று சூழ்ச்சி செய்தனர். இவர்களது பிடியிலிருந்து ஈஸா நபியை பாதுகாக்கும் முகமாக அல்லாஹ் ஈஸா நபியை தன் பால் உயர்த்திக் கொண்டான். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا  بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا
மேலும் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹை நாமே கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதினாலும் (சபிக்கப்பட்டனர்.) அவர்கள் அவரைக் கொலை செய்யவும் இல்லை அவரைச் சிலுவையில் அறையவும் இல்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டோர் அவர் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை. மாறாக அவரை அல்லாஹ் தன் பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்த வனாகவும் ஞானமிக்கவனாகவும்  இருக் கின்றான்.(4:157-159)
இந்த வசனம் யூதர்கள் கூறுவது போல் கிறிஸ்தவர்கள் நம்புவது போல் ஈஸா நபி கொல்லப்படவுமில்லை சிலுவையில் அறையப் படவுமில்லை உயிருடன் அல்லாஹ் வின் பால் உயர்த்தப்பட்டார் என்பதை  திட்டவட்டமாக தெரிவிக்கின்றது. 
ஒட்டு மொத்தமாக நிராகரித்த யூதர்கள் ஈஸா நபியை நம்பிக்கை கொள்ளும் நாள் வரும் என்பதை இந்த வசனம் முன்னறிவிப்பு செய்கின்றது  2014 வருடங்கள் கடந்துள்ள இந்நிலையில்  இது காலவரை யூதர்கள் ஈஸா நபியை ஏற்றுக் கொள்ளவில்லை. அது போல் கிறிஸ்தவர்களும் அல்குர்ஆன் கூறுவது போல் ஈஸா நபியை முறையாக நம்பிக்கை கொள்ளவு மில்லை. ஈஸா நபியை கடவுளாகவும் கடவுளி ன் குமாரராகவும் முக்கடவுள் சித்தாந்தத்தில் வைத்து கிறிஸ்தவர்கள் வணங்குகிறார்கள். வேதம் கொடுக்கப்பட்ட இவ்விரு சாராரும் மீண்டும் சரியாக நம்பிக்கை கொள்ளும் அந்த நாள்  அவரது மரணத்திற்கு முன்  இந்த பூமியில் உருவாகும் என்பதையும் அறிவிக் கின்றது. உலக அழிவிற்கு அடையாளமாக அவரது வருகை அமையும்.
அவரது மீள்வருகையைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
நிச்சயமாக (ஈஸாவாகிய) அவர் மறுமைக்கான அடையாள மாவார். அது குறித்து நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். என்னையே பின் பற்றுங்கள் இதுவே நேர்வழியாகும். (43:61)
ஈஸா நபி பூமிக்கு வருவதைப்பற்றி இவ்வசனம் குறிப்பிடுகின்றது அவர் எப்படி பூமிக்கு இறங்கு வார் என்பதை நபி (ஸல்) அவர்களின் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.
ஈஸா நபி புதிதாக இறைத்தூதுத்துவத்தை கொண்டு வரமாட்டார்.நபி முஹம்மத் (ஸல்) அவர்களது மார்க்கத்தின் அடிப்படையிலேயே மக்களை வழிநடாத்துவார்.
குறிப்பிட்ட காலம் வாழ்ந்த பின் அவரும் மரணிப்பார். முஸ்லிம்கள் அவருக்கு ஜனாஸா தொழுகையை நடாத்தி நல்லடக்கம் செய்வார் கள்.
 உலகிற்கு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதித் தூதராக நபி முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
முஹம்மத் நபி எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியாவார். உம்மி சமூகமான மக்கா சமூகத்தி லிருந்தே நபியாக அனுப்பப்பட்டார்கள்.
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
 அவன்தான் (எழுத்தறிவற்ற) உம்மிகளிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவனது வசனங்களை அவர் அவர்களுக்கு ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தப் படுத்துவார். மேலும் வேதத்தையும் ஞானத்தை யும் அவர்களுக்கு அவர் கற்றுக் கொடுப்பார். அவர்களோ இதற்கு முன் தெளிவான வழி கேட்டிலேயே இருந்தனர்.
இதுவரை இவர்களுடன் சேராத இவர்களி லுள்ள ஏனையோருக்கும் (தூதராக அனுப்பி னான்.) அவன் யாவற்றையும் மிகைத்தவன்  ஞானமிக்க வன். (62:2-3)
பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்து பிறந்து 6ம் வயதில் தாயையும் இழந்து ஆனாதையான முஹம்மத் நபி சிறுவயதிலிருந்து ஆடுமேய்ப்ப வராகவும் தனது பெரியப்பாவுடன் வியாபாரத் தில் ஈடுபடக்கூடியவராகவும் இருந்தார். எந்த பள்ளிகூடத்திற்கும் போனதில்லை. எந்த வொரு வரிடமும் சென்று ஒரு எழுத்து கூட படித்ததில்லை.
படிக்கத்தெரியாத முஹம்மத்(ஸல்) அவர்களை தேர்ந்தெடுத்ததன் மூலம் அல்குர்ஆன் ஓர் இறை வேதம் என்பதை அல்லாஹ் உறுதிப் படுத்தினான்.
وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذًا لَارْتَابَ الْمُبْطِلُونَ 
அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மதே! இதற்கு முன் எந்த வேதத்தையும் ஓதுபவராக இருந்தது மில்லை. உமது வலக்கரத்தால் அதனை நீர் எழுதவுமில்லை. அவ்வாறெனில் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பர். (29:48)
நபி(ஸல்)அவர்கள் தனது நிலையைப்பற்றி கூறும் போது
أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُ قَالَ: «إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ، الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ  -   صحيح البخاري
நாங்கள் எழுதப்பட்டிக்கத் தெரியாத கணக்குப் பார்க்கத் தெரியாத உம்மி சமூகம், மாதம் என்பது இப்படி இப்படி இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது ஒரு முறை 29 என்றும் இன்னுமொறு முறை 30 என்றும் கைகளால் சுற்றிக் காட்டினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) (நூல்: புகாரி)
முஹம்மத் நபி (ஸல்) அவர்களை உலக மக்களுக்கு அருட் கொடையாகவும் சகல இன மக்களுக்கு தூதராகவும் அல்லாஹ் அனுப்பி வைத்தான்.
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
நபியே உம்மை அகிலத்தாருக்கு அருளாகவே அனுப்பி யுள்ளோம். (21:107)
قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்குமான அல்லாஹ்வின் தூதரா வேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன. (உண்மையாக) வணங்கப் படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனே உயிர்ப்பிக்கிறான். இன்னும் மரணிக்கச் செய்கிறான் என்று (நபியே!) நீர் கூறுவீராக! ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், (எழுத்தறிவற்ற) உம்மி நபியாகிய அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரும், அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும்  நம்பிக்கை கொள்கிறார். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அவரையே பின்பற்றுங்கள். (7:158)

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
நபியே மனிதர்கள் அனைவருக்கும் நன்மாராயம் கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி நாம் உம்மை அனுப்பவில்லை. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (34:28)
தன்னுடைய தூதுத்துவம் உலக மக்களுக் குரியதேயன்றி அரபு சமூகத்தவருக்கு மட்டும் உரியதல்ல என்பதையும் நபி (ஸல்) அவர்களும் மக்களுக்கு போதித்தார்கள்.
أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِي المَغَانِمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً- صحيح البخاري
எனக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்களில் எவருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விடயங்கள் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஒரு மாத பயண தூரத்தின் அளவு அச்சத்தைக் கெண்டு உதவி செய்யப் பட் டுள்ளேன்.
2. இந்தப் பூமி தொழுமிடமாகவும் சுத்தம் செய்யப்படக் கூடியதாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. எனவே, என் உம்மத்தில் யாரேனும் தொழுகையை அடைந்து கொண் டால் (அந்த இடத்திலே) தொழுது கொள்ளட்டும்.
3. எதரிகள் யுத்தகளத்தில் விட்டும் செல்லும் பொருட்கள் (கனீமத்கள்) எனக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளது. எனக்கு முன் எவருக்கும் அது ஆகுமாக்கப்படவில்லை.
4. (மறுமையில் முஸ்லிம்களுக்கு பரிந்துரை செய்யும்) ஷபாஅத்தும் தரப்பட் டுள்ளது.
5. முழு மனித சமூகத்திற்குரியவராகவும் நான் அனுப்பப்பட்டுள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுராரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பெயர் குர்ஆனில் (3:144. 33:40. 47:2. 48:29 ஆகிய)நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது.
முஹம்மத் என்ற பெயரை தவிர வேறு பெயர் களும் தனக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ صحيح البخاري
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.
1. முஹம்மத் (புகழப்பட்டவர்)
2. அஹ்மத் (புகழுக்குரியவர்)
3. அல்மாஹி (என் மூலமாக அல்லாஹ் குப்ரை அழிக்கிறான்)
4. அல்ஹாஷிர் (மறுமையில் மக்கள் என் அருகில் திரட்டப்படுவார்கள்)
5. அல் ஆகிப் (எனக்குப் பிறகு வேறு நபி யில்லை) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முத்ஹிம் (ரழி), நூல்: புகாரி
முஹம்மத் நபியின் வருகைப் பற்றி முன்னைய வேதங்களிலும் நபிமார்கள் மூலம் முன்னறி விப்புச் செய்யப் பட்டது

الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப்பட்டிருப்பதை, தங்களிடமுள்ள தவ்ராத் திலும் இன்ஜீலிலும் கண்டு கொள்வார்கள்.  அவர் அவர்களுக்கு நன்மையை ஏவி, தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையான வற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி, தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும், அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்கு வார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப் பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் தாம் வெற்றி யாளர்கள்.(7:157)
ஈஸா நபி தனது சமூகத்தவருக்கு முஹம்மத் நபியை குறித்து முன்னறிவிப்புச் செய்ததை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ
இஸ்ராயிலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் எனக்குப் பின் வரும் அஹ்மத் என்ற பெயருடைய ஒரு தூதர் பற்றி நன்மாராயம் கூறுபவர்களாகவும் உங்களிடம் (அனுப்பப் பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன் என மர்யமின் மகன் ஈஸா கூறியதை (நபியே!நீர் எண்ணிப்பார்ப்பிராக) அவர் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது இது தெளிவான சூனியமே என்று அவர்கள் கூறினார்கள்;(61:6)
முஸ்லிம்கள் எல்லா இறைத்தூதர்களை நம்பி ஏற்றுக் கொன்டுள்ளது போல் யூத கிறிஸ்தவர் களும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை ஏற்று பின்பற்றுவது கடமையாகும். அவர்களிடம் இருக்கும் உண்மையான வேதத்தில்  (Old Testment & New Testment) நிச்சயமாக இந்த முன்னறிவிப்பு காணப்படுகிறது
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ، وَلَا نَصْرَانِيٌّ، ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ، إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ صحيح مسلم 
முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறுகிறேன் இந்த உம்மத்தில் என்னைப் பற்றி கேள்வியுற்ற யூதரோ அல்லது கிறிஸ்தவரோ எனக்கு கொடுக்கப் பட்ட தூதுத்துவத்தை விசுவாசிக்காமல் மரணித்தால் நரகவாதிகளில் உள்ளவராக ஆகிவிடுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுப்பப் பட்ட நபிமார்களின் வருகையை முஹம்மத் நபியின் வருகையுடன்  அல்லாஹ் முற்றுப்புள்ளி வைத்தான். அவருக்குப்பின் எந்தவொரு தூத ரும் அனுப்பிவைக்கப்படமாட்டாது. யாராவது தன்னை இறைதூதர் என்று கூறிவந்தால் அவர் பெரும் பொய்யர் ஆவார்.
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மத் (நபி) உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தை யாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (33:40)
தனக்கு பின் எந்தவொரு நபியும் வரமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்களும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي، وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ» قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ، أَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ صحيح البخاري
பனூ இஸ்ரவேலர்களை நபிமார்கள் வழி நடத்தினார்கள். ஒரு நபி மரணித்து விடும் போது மற்றொரு நபி வரக்கூடியவராக இருந்தார். நிச்சயமாக எனக்குப் பின் வேறொரு நபி வர  மாட்டார். எனினும் குலபாக்கள் (ஆட்சியாளர் களே) அதிகம் பேர் வருவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (அவர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என்று) எங்களுக்கு ஏவுகிறீர்கள்? என்று நபித் தோழர்கள் கேட்டார்கள். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக வரும் போது அவர்களது உறுதிப்பிரமானத்தை கொடுத்து அவர்களது உரிமையையும் நிறைவேற்றுங்கள். உங்களை அவர்கள் எப்படி நிர்வகித்தார்கள் என்று அல்லாஹ் அவர்களிடம் கேட்க இருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) (நூல்: புகாரி)
அல்லாஹ்வினால் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் அல்குர்ஆன் என்று அழைக்கப் படுகிறது. குர்ஆன் எனும் பெயரைத் தவிர வேறு சிறப்பு பெயர்களாலும் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
அல்கிதாப் 21:1 (வேதநூல்)
அல்பயான் 3:138 (தெளிவுரை)
அல்புர்கான். 25:1 (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து காட்டுபவை)
அத் திக்ரு 14:9 (நினைவுறுத்தல்)
அந் நூர் 7:157 (பிரகாசம்)
  அஷ்ஷிபா 10:57 (நிவாரணம்)
அல்மவ்இலத் 10:57 (உபதேசம்)
அத் தன்ஸீல் 26:192 (அருளப்படடவை)
ஹப்லுல்லாஹ் 3:103 (அல்லாஹ்வின் கையிறு)
அல்லாஹ்வின் வார்த்தையான அல்குர்ஆனில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் எந்தவொரு வார்த்தையும் இடம்பெறவில்லை. நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகள் அடங்கிய பொன் மொழிகளை அல்ஹதீஸ் என அழைக்கப் படுகிறது.
இந்தவேதம் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப சிறிது சிறிதாக 23 வருட காலம் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்டது. அதனை  ஒளிவு மறைவின்றி கூட்டல் குறைவின்றி முழுமையாக நபி(ஸல்) அவர்கள் மக்கள் முன் வைத்தார்கள். அவர்களது தூதுத்துவம் முழுமைப்  பெற்றது என்பதை அல்லாஹ் உறுதி செய்தான்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا 
இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்க ளுக்கு நான் முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது பூரணப் படுத்தி விட்டேன். மேலும் நான் இஸ்லாத்தை யே உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன். (5:3)
 
தொடரும் இன்ஷா அல்லாஹ்
உங்கள் கருத்துக்களை அறிவிக்க;