இஸ்லாம் பூரணமான மார்க்கமாகும்

1. ஏகத்துவம். நல்லுணர்வுகளை ஏற்படுத்துதல்.
2. நற்கருமங்களுக்கும் அதுவல்லாதவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கல்.
3. ஷரீஆ சட்டங்களை விடுத்து ஏனைய சட்டங்களை அமுல் படுத்துதல் குறித்து.
4. சமூகத்தில் மனிதனின் நிலை.
5. பொருளாதாரம்.
6. அரசியல்.
7. முஸ்லிம்கள் மீதான காபிர்களின் ஆதிக்கம்.
8. காபிர்களின் எதிரில் முஸ்லிம்களின் பலவீன நிலை.
9. உள்ளங்கள் ஒன்று படாமை

இஸ்லாம் ஓர் பூரண மார்க்கம்


< தமிழ் >
        
முஹம்மத் அல்அமீன் முஹம்மத் பின் அல் முஹ்தார் அல் சங்கீதி
நூலாசியர்



செய்யத்  இஸ்மாயில் இமாம் பின் யஹ்யா மவ்லானா
மொழிபெயர்த்தவர்

முஹம்மத் அமீன்
மீனாய்வு செய்தவர்

الإسلام  دين كامل

        

اسم المؤلف
محمد الأمين بن محمد المختار الشنقيطي



ترجمة:
سيد إسماعيل إمام بن يحي مولانا
مراجعة:
محمد أمين
                                  என்னுரை
                    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
                  அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு  ஆரம்பம் செய்கிறேன்
புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் நமது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
மனிதன் இவ்வுலகிலும், அதனை அடுத்து மறு உலகிலும் சீரும் சிறப்புமாக வாழ அவனுக்கொரு மார்க்கமும் வழிகாட்டியும் தேவை. மனிதனின் அறிவும் சிந்தனையும் எவ்வளவு உயர்ந்த போதிலும் அவை பூரணத்துவம் பெறுவதில்லை. ஈற்றில் அவை குறைபாடுள்ளதாகவே இருக்கும். எனவே மனிதனின் விடிவுக்காக அவன் ஏற்படுத்திக் கொள்ளும் வழி முறைகளில், குறையும் தவறும் இருப்பது தவிர்க்க முடியாதவை.
ஆகையால் அனைத்தும் அறிந்த அல்லாஹ் ஒருவனே பரிபூரணமான அறிவும், ஆற்றலும், பலமும் மிக்கவன். மனிதனின் தேவைகள் பிரச்சினைகள் குறித்து நன்கறிந்தவன் அவன் ஒருவனே. எனவே மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனை வெறுமனே விட்டுவிட வில்லை அவனுக்கு வழி காட்டவென ஒரு மார்க்கத்தையும் மற்றும் வழிகாட்டிகளையும் அவன் ஏற்படுத்தினான். தன்னுடைய மார்க்கமாக தீனுல் இஸ்லாத்தையும், வழிகாட்டிகளாக ரஸுல் மார்களையும்  தேர்ந்தெடுத்தான். ஈற்றில் நமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதி நபியாக தேர்வு செய்தான். மேலும் அவர்களைக் கொண்டு அது வரை மார்க்கத்தில் விட்டு வைத்த சகல இடை வெளிகளையும் நிறைவு செய்து இஸ்லாம் மார்க்கத்தை அவன் பரிபூரணப்படுத்தி வைத்தான். ஆகையால் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவுடன் நபிமார்களின் வருகை முற்றுப் பெற்றது. இனியொரு நபியின் வருகையும் மற்றுமொரு மார்க்கமும் தேவையற்றதாகிவிட்டது.
14 நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இஸ்லாத்தின் மீதும் அதன் வழிகாட்டி நமது தூதர் முஹம்மது அவர்களின் மீதும் சேறு பூசும் முயற்சியில் இஸ்லாத்தின் எதிரிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற போதிலும், அவர்களால் இஸ்லாத்தின் வளர்ச்சியில் எந்தத் தடையையும் ஏற்படுத்திவிட முடியவில்லை. மாறாக இஸ்லாம் மார்க்கம் முன்னொருபோதும் இல்லாத வாறு வளர்ச்சிப் படியின் உச்சத்தை எட்டியுள்ளது. இதுவே இஸ்லாம் ஒரு பூரண மார்க்கம் எனபதற்குப் போதிய அத்தாட்சியாகும்.
மனிதனின் தேவைகளும் பிரச்சினைகளும் என்னவென்பதை இஸ்லாம் இனம் கண்டுள்ளது. எனவே அதற்குத் தேவையான சகல தீர்வுகளும் அதன் வேத நூல் அல்குர்ஆனில் உள்ளடக்கப் பட்டுள்ளன. மனிதனின் இத்தகைய தேவைகளில் பத்து விடயங்களைத் தெரிவு செய்து, அஷ்ஷெய்க் முஹம்மத் அல்அமீன் பின் முஹம்மத் அல்முக்தார் ஷன்கீதீ அவர்கள்  الإسلام دين كامل  என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். அதனையே அடியேன் “இஸ்லாம் ஓர் பூரண மார்க்கம்” என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளேன். இதன் மூலம் யாவரும் பயன் பெற அல்லாஹ் அருள் புரிவானாக.
وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين
y.m.s.i.Imam (Rashadi-Bangaloor)
19-10-2015

 


இஸ்லாம் ஓர் பூரண மார்க்கம்
அளவற்ற அருள்ளாளனும் நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின்  திரு நாமம் கொண்டு  ஆரம்பம்செய்கிறேன்     
புகழ் யாவும் சர்வ உலகின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே சொந்தம்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَ‌ضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ(المائدة/3)
“இன்றைய தினம்  உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை பரிபூரணமாக்கி என்னுடைய அருளையும் உங்கள் மீது நான் பூர்த்தியாக்கி வைத்து விட்டேன். மேலும் .உங்களுடைய இஸ்லாத்தையே மார்க்கமாகவும் தேர்ந்தேடுத்திருக் கின்றேன்.” (5/3) என்று அல்லாஹ் அருள் மறையில்  குறிப்பிடுகிறான்,
இவ்வசனம் வெள்ளிக்கிழமை, அரபா தினமன்று ஹஜ்ஜதுல் விதாவின் போது அருளப்பட்டது. அன்று மாலை நபியவர்கள் அரபா மைதானத்தில்  இவ்வசனம் இறங்கி ஹஜ் பயணம் முடிந்த பின் எண்பத்தோர் இரவுகள் மாத்திரமே ரஸூல் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். நமது மார்க்கத்தில் கூட்டல், குறைத்தல் செய்யத் தேவை இல்லாதவாறு  அதனை நமக்கு  அல்லாஹ் சம்பூரணப் படுத்தித் தந்திருக்கின்றான் என்பதை இவ்வசனத்தில் தெளிவு படுத்தியுள்ளான். ஆகையால்தான் இறுதித் தூதர் நபி(ஸல்)க்குப் பின் நபிமார்களின் வருகைக்கும் அவன் முற்றுப் புள்ளி வைத்தான்.  மேலும்  இஸ்லாத்தையே மார்க்கமாக ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் அவன் இவ்வாக்கியத்தின் மூலம் தெளிவு படுத்தியுள்ளான். இதுவல்லாத எதனையும் அவன் யாரிடமிருந்தும்  ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் பிரகடணப் படுத்தியுள்ளான் என்பதை பின் வரும் வசனங்கள்  தெளிவுபடுத்துகின்றன.
وَمَن يَبْتَغِ غَيْرَ‌ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَ‌ةِ مِنَ الْخَاسِرِ‌ينَ ﴿٨٥﴾ (آل عمران/85)
“இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக  அது ஒரு போதும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார். .  (3/85)
إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ ۗ )آل عمران/19)        
“நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்”(3/19)     
وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي (المائدة/3)
“என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டேன்”(5/3)
இவ்வுலகிலும் மறு உலகிலும் சிறுஷ்டிகளுக்கு வழிகாட்டத் தேவையான எதனையும் இஸ்லாம்  விட்டு வைக்கவில்லை என்பது இவ்வசனங்களின் மூலம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு உதாரணமாக அல்குர்ஆன் முன்வைத்துள்ள விடயங்களிலிருந்து, முக்கியமான பத்து விடயங்களை முன்வைக்க  விரும்புகிறேன். அவையாவன,
ஏகத்துவம்.
நல்லுணர்வுகளை ஏற்படுத்துதல்.
 நற்கருமங்களுக்கும் அதுவல்லாதவற்றுக்கும் இடையே உள்ள     வேறுபாடுகளை விளக்கல்.
 ஷரீஆ சட்டங்களை விடுத்து ஏனைய சட்டங்களை அமுல் படுத்துதல் குறித்து.
சமூகத்தில் மனிதனின் நிலை.
பொருளாதாரம்.
அரசியல்.
முஸ்லிம்கள் மீதான காபிர்களின் ஆதிக்கம்.
காபிர்களின் எதிரில் முஸ்லிம்களின் பலவீன நிலை.
உள்ளங்கள் ஒன்று படாமை

    முதலாவது - ஏகத்துவம்:
அல்குர்ஆனை ஓதுகின்றவர் ஏகத்துவம் மூன்று வகைளில் உள்ளடக்கப் பட்டிருப்பதைக் அவதானிக்கலாம்.
1-முதலாம் வகை  ‘ருபூபிய்யத்’ பற்றி:
ருபூபிய்யத் என்பதன் பொருள் பராமரித்தல் என்பதாகும். எல்லா சிருஷ்டிகளையும் அல்லாஹ் ஒருவன் தான் பராமரித்து வருகின்றான். அதன் தகுதியும் ஆற்றலும் அவன் ஒருவனிடமே உண்டு.  அவ்விடயத்தில் அவன் ஏகன். அவனுக்கு இணை எதுவுமில்லை என்பதே ருபூபிய்யத்  எனப்படு கிறது. இது பல இறைவசனங்கள் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாகப்  பின் வரும் திரு வசனங்களைக் குறிப்பிடலாம்..
 وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّـهُ ۖ )الزخرف/87)
“அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடம் நீங்கள் கேட்பீர்களாயின், நிச்சயமாக அல்லாஹ்தான் எனக் கூறுவார்கள்”(43/87)
قُلْ مَن يَرْ‌زُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْ‌ضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ‌ وَمَن يُخْرِ‌جُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِ‌جُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ‌ الْأَمْرَ‌ ۚ فَسَيَقُولُونَ اللَّـهُ ۚ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ ﴿٣١ /  يونس﴾
“நபியே! நீங்கள் கேளுங்கள் வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும், உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனுக்கும் பார்வைக்கும் உரிமை யாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவை யையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்?, எல்லாக் காரியங்களை யும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்? என அதற்கவர்கள் “அல்லாஹ்தான்” எனக் கூறுவார்கள். அவ்வாறாயின் (அல்லாஹ்வுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா? எனக் கேளுங்கள்”(10/31)
ஆனால் ‘பிர்அவ்ன்’ அனைத்தையும் பராமரிக்கும் அல்லாஹ்வின் ருபூபிய்யத் எனும் பண்பை நிராகரித்து வந்தான் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது,
قَالَ فِرْ‌عَوْنُ وَمَا رَ‌بُّ الْعَالَمِينَ ﴿٢٣/ الشعراء﴾   
 “பிர்அவ்ன் உலகத்தாரின் இரட்சகன் யார் என்று கேட்டான்?” (26/23)
பிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ்வின் ‘ருபூபிய்யத்தை நிராகரித்தமைக்குக் காரணம் அவனின் அகந்தையும், மடமையுமே என்பதை பின்வரும் வசனம் சாட்சிப் படுத்துகின்றது.
قَالَ لَقَدْ عَلِمْتَ مَا أَنزَلَ هَـؤُلَاءِ إِلَّا رَ‌بُّ السَّمَاوَاتِ وَالْأَرْ‌ضِ بَصَائِرَ‌ (الإسراء/17)
“வானங்களையும் பூமியையும் படைத்த இரட்சகனே இவ்வத்தாட்சிகளை படிப்பினையாக இறக்கி வைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய்” (17/102)
மூஸா (அலை) அவர்களுக்கு அற்புதங்களை அத்தாட்சியாக அல்லாஹ் வழங்கிய போது அதனை பிர்அவ்ன் ஏற்க மறுத்தான். அவ்வமயம் மூஸா(அலை) அவர்கள் பிர்அவ்னிடம் இதுவெல்லாம் விண்ணையும் மண்ணையும் இரட்சித்து வரும் இறைவனிடமிருந்து வந்தன என்பதை நீ அறிவாய், என்று கூறிய செய்தியையே இத்திரு வசனம் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து அல்லாஹ்தான் சர்வ வஸ்துக்களினதும் இரட்சகன் என்பது பிர்அவ்னுக்குத் தெரியாமாலில்லை ஆயினும் அவன் பெருமையும் அகங்காரமும் கொண்டிருந்ததன் காரணமாகவே அதனை ஏற்க மறுத்தான் என்பது தெளிவாகின்றது. பிர்அவ்ன் மாத்திரம் அல்ல பொதுவாக இறை நிராகரிப்பாளர் எல்லோரும் போல் அல்லாஹ்வையும், அவன் நபிமார்களுக்கு   வழங்கிய அத்தாட்சிகளை அறிந்திருந்த போதிலும் வேண்டுமென்றே அதனை ஏற்க மறுத்தனர் என்பதை அடுத்து வரும் வசனம் இவ்வாறு எடுத்துரைக்கின்றது.
وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا ۚ                
 “அவர்களது உள்ளங்கள் அவற்றை (உண்மை யென) உறுதி கொண்ட போதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவற்றை அவர்கள் மறுத்தார்கள்.”(27/14)
இவ் உண்மைகளை அவர்கள் அறிந்திருந்த படியால் தான் ‘ருபூபிய்யத்’ இரட்சித்தல் எனும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான விடயத்தை உறுதி படுத்துமுகமான கேள்விகளை அவர்களிடம் அல்லாஹ் முன்வைக்கின்றான். இதற்கு உதாரணமாக பின் வரும் வசளங்களைக் குறிப்பிடலாம்.
أَفِي اللَّـهِ شَكٌّ فَاطِرِ‌ السَّمَاوَاتِ وَالْأَرْ‌ضِ ۖ(إبراهيم/10)
“வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் வைப் பற்றியா சந்தேகம் கொள்கின்றீர்கள்? (14/10)
قُلْ أَغَيْرَ‌ اللَّـهِ أَبْغِي رَ‌بًّا وَهُوَ رَ‌بُّ كُلِّ شَيْءٍ ۚ
 “அனைவரையும் படைத்து வளர்த்த அல்லாஹ்வை விடுத்து மற்றெவரையாவது எனக்கு இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா?(6/164)
قُلْ مَن رَّ‌بُّ السَّمَاوَاتِ وَالْأَرْ‌ضِ قُلِ اللَّـهُ ۚ(الرعد/16)  
“வானங்களையும் பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்? என்று நீங்கள் கேளுங்கள். அதற்கு அல்லாஹ்தான் என்று நீங்களே  கூறுங்கள்.”(13/16)
உண்மையைத் தெரிந்து வைத்துள்ள இறை மறுப்பாளர்கள்  சில வேளை இந்த வினாவுக்குப் பதில் தராமல் மௌனியாக இருப்பார்கள், ஆகையால் நீங்களே அதன் விடையையும் கூறி விடுங்கள் என்று அல்லாஹ் நபிக்கு இவ்வாறு கட்டளையிட்டுள்ளான்.
எவ்வாறாயினும் ‘ருபூபிய்யத்’ பற்றிய காபிர்களின் இத்தகைய நம்பிக்கை அவர்களுக்குப் பயன் தராது. ஏனெனில் இந்நம்பிக்கை தூய்மையானதல்ல. இவ்விடயத்தில் அவர்கள் அல்லாஹ் அல்லாதவை களையும் இணையாக ஆக்கிக் கொள்கின்றனர். இதனை பின் வரும் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
وَمَا يُؤْمِنُ أَكْثَرُ‌هُم بِاللَّـهِ إِلَّا وَهُم مُّشْرِ‌كُونَ ﴿١٠٦/ يوسف﴾
“அவர்களில் பெரும்பான்மையினர் அல்லாஹ்வின் மீது இணை வைத்தவர்களாகவே அன்றி, அவன் மீது நம்பிக்கை கொள்வதில்லை.(12/106)
مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّ‌بُونَا إِلَى اللَّـهِ زُلْفَىٰ (الزمر/3)

“அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை”  (39/3) என்று அல்லாஹ் அல்லாதவைகளை வணங்கி வருகின்ற வர்கள் கூறுவர், என அல்லாஹ் குறிப்பிடு கின்றான்.
وَيَقُولُونَ هَـؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّـهِ ۚ قُلْ أَتُنَبِّئُونَ اللَّـهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْ‌ضِ ۚ (يونس/18)   
“இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை. என்று கூறுகின்றனர். (இவற்றின் மூலம்) “அல்லாஹ்வுக்குத் தெரியாதவைகளையா அவனுக்கு அறியத் தருகின்றீர்கள்?” என்று அவர்களிடம் கூறுங்கள்”(10/18)
அல்லாஹ் அல்லாதவைகளை வணங்கி வருவோர் இவ்வாறுதான் நியாயம் கூறுவர் என்பதை அல்லாஹ் இங்கு தெளிவு படுத்துகின்றான். எவ்வாறாயினும் காபிர்களின் இணையுடன் கூடிய அவர்களின் ஏகத்துவம் எப்பயனுமளிக்காது.
இரண்டாவது: இபாதத்தில் ஏகத்துவம்
இந்த விடயத்தில்தான் எல்லா நபிமார்களுக்கும் அவர்களின் சமூகத்திற்கும் இடையில் போராட்டம் இருந்து வந்தது. இவ்வகை தவ்ஹீதை உறுதி படுத்துவதற்காகத்தான்  நபிமார்களும் அனுப்பப் பட்டனர். அதன் சாராம்சம் لاإله إلاالله அல்லாஹ்வை அன்றி வணக்கத்திற்குத் தகுதியானவர் எவரும் இல்லை” என்ற வாக்கியத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளது. இது negative, positive- என்கின்ற எதிர்மறை, நேர்மறை ஆகிய இரண்டு அடிப்படைகளைக் கொண்டது.
இதிலுள்ள negative- எதிர்மறை  لا- இல்லை என்பதன் மூலம், அல்லாஹ் அல்லாத ஏனைய சகல கடவுள்களும், அவற்றுக்காக நிறைவேற்றப்படும் சகல வழிபாடுகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அதன் positive- நேர்மறை  إلاالله- அல்லாஹ்வை அன்றி என்பதன் மூலம், வணக்கத்திற்குத் தகுதியான கடவுள் அல்லாஹ் ஒருவனே என்ற விடயமும்,மற்றும் அனுமதிக்கப் பட்டுள்ள சகல வழிபாடுகளும் அவன் ஒருவனுக்கே தகும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அல்குர்ஆனின் அதிகமான வசனங்கள் உறுதிபடுத்துகின்றன. எடுத்துக்காட்டாக பின்வரும் வசனங்களைக் கவனிப்போம் .
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّ‌سُولًا أَنِ اعْبُدُوا اللَّـهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ           (النحل/36)
ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கின்றோம். அவர்கள்” அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.” என்று கூறிச் சென்றனர்.(16/36)
وَمَا أَرْ‌سَلْنَا مِن قَبْلِكَ مِن رَّ‌سُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِله إِلَّا أَنَا فَاعْبُدُونِ ﴿٢٥/الأنبياء﴾
உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம் நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவனில்லை, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என நாம் வஹி அறிவிக்காமலில்லை.(21/25)      
فَمَن يَكْفُرْ‌ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّـهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْ‌وَةِ الْوُثْقَىٰ (البقرة/256)
எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் அறுந்திடாத பலமானதொரு கயிற்றைப் கற்றிப்பிடித்துக் கொண்டார்.(2/256)
وَاسْأَلْ مَنْ أَرْ‌سَلْنَا مِن قَبْلِكَ مِن رُّ‌سُلِنَا أَجَعَلْنَا مِن دُونِ الرَّ‌حْمَـنِ آلِهَةً يُعْبَدُونَ ﴿٤٥/الزخرف﴾
உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களை நீங்கள் கேளுங்கள். வணங்குவதற்கு ரஹ்மானையன்றி வேறு கடவுள்களை நாம் ஆக்கினோமா?” என்று(43/45)
قُلْ إِنَّمَا يُوحَىٰ إِلَيَّ أَنَّمَا إِلَـهُكُمْ إِلَـهٌ وَاحِدٌ ۖ فَهَلْ أَنتُم مُّسْلِمُونَ ﴿١٠٨/الأنبياء﴾
நீங்கள் கூறுங்கள் “எனக்கு வஹி அறிவிக்கப் படுவதெல்லாம் உங்களுடைய வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே” என்றுதான். ஆகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக” (21/108)
மூன்றாவது: அல்லாஹ்வின்  திரு நாமங்களில்
 அல்குர்ஆனின் தெளிவூட்டலின்படி இது இரண்டு அடிப்படைகளைக் கொண்டதாக விளங்குகின்றது. அவையாவன:
1-சிருஷ்டிகளின் பண்புகளுடன் ஒப்பீடு செய்வதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
2-அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனது தூதரும் எப்படி வர்ணனை செய்துள்ளனரோ அவ்வாறே அவனின் பரிபூரணத் தன்மைக்கும், மேண்மைக்கும் ஏற்ப யதார்த்த பூர்வமாக  ஈமான் கொள்வது அவசியம்.  ஏனெனில் அல்லாஹ்வைப் பற்றிய வர்ணணைகளை செய்வதற்கு அவனை நன்கு அறிந்தவர்கள் அல்லாஹ்வையும், ரஸூல் (ஸல்) அவர்களையும் தவிர வேறு எவரும் இல்லை. ஆகையால் அல்லாஹ்வும் அவனின் தூதரும் அல்லாஹ்வைப் பற்றி வர்ணனை செய்துள்ள விடயங்களின் மீது அப்படியே விசுவாசம் கொள்வது அவசியமாகும்.
மேலும் எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்தான், நபியவர்கள் தன்னிச்சையாக எதனையும் சொல்ல மாட்டார்கள் என்பதைப் பின்வரும் திரு வாசகங்கள் அறியத்தருகின்றன.
أَأَنتُمْ أَعْلَمُ أَمِ اللَّـهُ ۗ    (البقرة/140)
“நன்கறிந்தவர்கள் நீங்களா? அல்லது அல்லாஹ்வா? (2/140)
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ ﴿٣﴾ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ ﴿٤/النجم﴾
“(நபி (ஸல்) அவர்கள் இஷ்டப்படி எதனையும் கூறுவதில்லை. இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதே” (53/3,4)
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ‌ ﴿١١/الشورى﴾
“அவனுக்கு ஒப்பானது எதுமில்லை. அவன் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்” (42/11)
என்ற திரு வசனத்தின் முதலாவது பகுதியில், தனக்கொத்த பண்புகளை  அல்லாஹ் நிராகரித்தும், அடுத்த பகுதியில் தனக்கென பண்புகள் உண்டென்பதனையும் உறுதி படுத்தி இருக்கின்றான்.
மேலும் அவனை யாராலும் முழுமையாக அறிய முடியாது என்பதை அடுத்து வரும் வசனம்  தெளிவு படுத்துகின்றது.
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِهِ عِلْمًا ﴿١١٠/ طه﴾         “அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்புள்ளதை யும் அவன் நன்கறிவான், எனினும் அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.”(20/110)
    இரண்டவாது: நல்லுணர்வை ஏற்படுத்துதல்.
மனிதன் பாவ காரியங்களில் இருந்து விடுபட நல்லுபதேசமும்,  நல்லுணர்வையும் ஏற்படுத்தும் விடயங்கள் அவசியமாகும். ஆகையால் அவன் நல்லுணர்வு பெறவும், நல்லுபதேசம் பெறவும் அல்லாஹ்  பூமியின் பால் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். அல்லாஹ் அடியார்களின் மறைவான, வெளிப்படையான சகல நடவடிக்கைளையும் அறிந்தவனாகவும் அவற்றைக் கண்காணிப்பவனா கவும் இருக்கின்றான் என்ற உணர்வே மிகப் பெரிய நல்லுபசேமாகவும், மனதில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் விளங்குகின்றது என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை அல்குர்ஆன் அடிக்கடி நினைவூட்டு கின்றது.
மனதால் உணரத்தக்க, மனிதனுக்கு அச்சத்தையும் உணர்வையும் ஏற்படுத்தக்  கூடிய இவ்விடயத்தை உணர்த்துவதற்காக  அறிஞர்கள் இப்படி ஒரு உவமானம் தருகின்றனர். “மனிதர்களைக் கொலை செய்து கடுந் தண்டனை வழங்கி வரும் ஒரு கொடுங்கோலன் அவனது வீரர்கள் வாள்கள் சகிதம் நிற்கின்றனர். இரத்தம் தோய்ந்த சவுக்குகள் தயார் நிலையில் வைக்கப்படுள்ளன. இந்நிலையில் அவனின் புதல்வியரும், மனைவியரும் அவனைச் சூழ வீற்றிருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவ்வமயம் அங்கு சமூகம் தந்துள்ளவர்களில் யாராவது அவனின் மனைவியரில் அல்லது புதல்வியரில் எவரை யேனும் தான் அடைந்து கொள்ள வேண்டுமென நினைக்கத் துணிவானா? ஒரு போதும் அவன் நினைக்கமாட்டான். மாறாக அங்கு சமூகம் தந்துள்ளவர்களின் உள்ளம் அச்சத்தால் நிறைந்தி ருக்கும். அவர்களின் பார்வையில் அச்சம் குடி கொண்டிருக்கும். பூரண அமைதியை எதிர்பார்த்த வண்ணம் அவர்களின் அவையவங்களும் அசைவற்றிருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்னும் ஒரு நாட்டின் தலைவர் இரவில் நிகழ்ந்த விடயங்களை எல்லாம் காலையில் தெரிந்து கொள்வார் என்பதைக் குடி மக்கள் அறிந்திருந்தால், அவர்கள் அவனின் தண்டனைக்கு அஞ்சி தவறான காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்வார்கள் என்பது நிச்சயம்.
ஆனால் அல்லாஹ் இத்தகையை உவமானங்களை விட்டும் மிகவும் மேலானவன். ஏனெனில் அரசனின் அறிவைப் பார்க்கிலும் அல்லாஹ்வின் அறிவு மிக மிக விசாலமானது, அல்லாஹ் மிகப் பலம் வாய்ந்தவன், கடுமையாகத் தண்டணை வழங்கக்கூடியவன் என்பதிலும், மேலும் தான் தடை செய்துள்ள விடயங்களில் அவன் மிக்க அக்கறையுள்ளவன் ஆகையால் அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன், அனைத்தையும் அவதானிக்கின்றவன் என்பதை மனிதன் நிஜமாகவே நம்புவானாகில் அவன் பாவ காரியங்களின் பக்கம் நெருங்கமாட்டான்.
அல்லாஹ் மனிதனைப் படைத்ததன் அடிப்படை நோக்கம் மனிதன் தன் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயலாற்ற வேண்டும் எனபதற்காகவே.
وماَ خَلَقتُ الجِن والإنْسَ إلا لِيَعْبُدوْنَ (الذارات/56)
“ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்கன்றி நான் படைக்க வில்லை” (51/56) என்ற திருவசனம் தெளிவாக எடுத்துரைக் கின்றது.  மேலும் தெளிவுபடுத்தகையில்.
لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ﴿٧/ الكهف﴾
“நிச்சயமாக அவர்களில் யார் நற்கருமம் புரிபவர்கள் என்பதை நாம் சோதிப்பதற்காகவே பூமியிலுள்ளவற்றை அலங்காரமாக்கி வைத்தோம்” (18/7)
وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْ‌ضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْ‌شُهُ عَلَى الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۗ (هود/ 7)
“அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்ப தற்காக இவற்றை அவன் படைத்தான்.” (11/7)
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ   (الملك/2)
“உங்களில்  நல்லமல் செய்பவர்கள் யார் என்பதைச் சோதிப்பதற்க்காகவே அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்தான்.” (67/2)
எனவே மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதன் நோக்கம் அவன் ஏக இறைவனை வழிபட வேண்டுமென்ப தற்காகவே. அப்படியாயின் முறைப்படி நிறைவேற்றப்படும் வழிபாடுகளை மாத்திரமே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். அதுவல்லாத வழிபாடுகளை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே ஏற்றுக் கொள்ளத் தக்க வழிபாடு எவ்வாறு அமையப் பெறவேண்டு மென்பதை தெளிவு படுத்த விரும்பிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்  أَخْبِرْنِي عَنِ الإحْسَانِ ‘இஹ்ஸான், என்றால் என்ன என்பதை எனக்கு அறியத் தாருங்கள் என்றார்கள்.
ஏனெனில் இஹ்ஸான் அடிப்படையில் நிறை வேற்றப்படும் வழிபாட்டையே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற படியால்தான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அது பற்றி நபி அவர்களிடம் விசாரித்தார்கள். அதற்கு நபி அவர்கள்,
أنْ تَعْبُدَالله كأنكَ تَرَاهُ فَإنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإنهُ يَرَاكَ
“நீங்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது போன்று அவனை வணங்குவதாகும், நீங்கள் அவனைப் பார்க்கவில்லையாயினும் நிச்சயமாக அவன் உங்களைப் பார்க்கின்றான்” என்ற உணர்வுடன் வணங்குவது என நபியவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வை வழிப்படுகின்ற போது அவனை நேரில் பார்ப்பது போன்ற எண்ணம் மனதில் நிழலாடுமாயின் அல்லது அல்லாஹ் தன்னைப் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உறுதியான எண்ணம் உள்ளத்தில் வருமானால் அவ்வழிபாடு பரிசுத்தமானதாகவும், உயிரோட்ட மிக்கதாகவும் இருக்கும். அப்படியான வழி பாட்டைத்தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். அவ்வாறு தான் தீய கருமம் எதனையும் செய்யத் துணியும் ஒருவனிடம் ‘இஹ்ஸான்’ என்ற மனோ நிலை காணப்படும் போது அத் தவறைச் செய்யாது தவிர்ந்து கொள்வான்.
 எனவே இம்மனப்பாங்கானது மனிதனுக்கு நல்லுணர்வை ஏற்படுத்தும் போதகனையாக விளங்குமாகையால் தான் அல்குர்ஆன் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது. அல்குர்ஆனின் எந்தவொரு பக்கத்தை புரட்டினாலும், அங்கு இப்படியான ஒரு உபதேசம் இருப்பதை நீங்கள் காணத் தவறமாட்டீர்கள். எனவே இவ்உணர்வை ஏற்படுத்தும் ஒரு சில அல்குர்ஆன் வசனங்களை இங்கு கவனிப்போம்.     
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَ‌بُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِ‌يدِ ﴿١٦﴾ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ ﴿١٧﴾ مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَ‌قِيبٌ عَتِيدٌ ﴿١٨/ق﴾
“நிச்சயமாக நாம் தான் மனிதனைப் படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணங்களையும் நாம் அறிவோம். பிடரிலுள்ள இரத்த நாளத்தை விடவும் நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம்.”
“வலப்புரத்தில் ஒருவரும் இடப்புரத்தில் ஒருவருமாக இருவர் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.”
“எதனைக் கூறியபோதிலும் அதனை எழுத காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை.” (50:16,17,18)   
فَلَنَقُصَّنَّ عَلَيْهِم بِعِلْمٍ ۖ وَمَا كُنَّا غَائِبِينَ ﴿٧/الأعراف  ﴾
“நிச்சயமாக நாம் அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை. (7/7)
وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِن قُرْ‌آنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ ۚ وَمَا يَعْزُبُ عَن رَّ‌بِّكَ مِن مِّثْقَالِ ذَرَّ‌ةٍ فِي الْأَرْ‌ضِ وَلَا فِي السَّمَاءِ وَلَا أَصْغَرَ‌ مِن ذَلِكَ وَلَا أَكْبَرَ‌ إِلَّا فِي كِتَابٍ مُّبِينٍ ﴿٦١/يونس﴾
“நீங்கள் எந்நிலையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து எதை ஓதியபோதிலும், நீங்கள் எதை செய்த போதிலும் நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் உங்களது இறைவனுக்குத் தெரியாமல் தவறி விடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ, அல்லது பெரிதோ அவனுடைய விரிவான பதிவுப் பத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை.(10/61)     
أَلَا إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَ‌هُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ ۚ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّ‌ونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ‌ ﴿٥/هود﴾
“நிச்சயமாக அவர்கள், அல்லாஹ்வுக்கு மறைப்பதற்காக தங்கள் உள்ளங்களில் மறைக்கக் கருதுகின்றனர், நபியே அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் தங்களின் போர்வையைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ளும் சமயத்தில் அவர்கள் மறைத்துக் கொள்வதையும் அவன் அறிவான்.நிச்சயமாக அவன் உள்ளங்களிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன்.(11/5)

    மூன்றாவது விடயம்: நற் கருமங்களுக்கும் அது வல்லாதவைக்கும் இடையே உள்ள வேறு பாட்டை விளக்கல்
 ஒரு காரியம் ஏற்றுக் கொள்ளப்பட மூன்று அம்சங்கள் இருப்பது அவசியம் என்பதை அல்குர்ஆன் தெளிவு படுத்துகின்றது. அதில் ஒரு விடயத்திலேனும் மாறுதல் ஏற்படின் கியாமத்து நாளில் அவனுடைய நற் கருமம் அவனுக்குப் பயனளிக்கமாட்டாது.
முதலாவது:
அவன் செய்யும் காரியங்கள் ரஸூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த விடயத்தை ஒத்திருக்க வேண்டும். இதனை பின்வரும் வசனங்கள் உறுதி செய்கின்றன.
  وَمَا آتَاكُمُ الرَّ‌سُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ(الحشر/7)                     
அல்லாஹ்வின் தூதர் உங்களுக்குக் கொண்டு வந்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டும் விலகிக்கொள்ளுங்கள்.” (59/7)
مَّن يُطِعِ الرَّ‌سُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ ۖ (النساء/80 )
“எவர் அல்லாஹ்வின் தூதருக்குக் வழிப்படு கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவராவார்.”(4/80)
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي (آل عمران/31)
 “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருப்பின் என்னைப் பின்பற்றுங்கள்.” என நபியே நீங்கள் கூறுங்கள்”(3/31)
أَمْ لَهُمْ شُرَ‌كَاءُ شَرَ‌عُوا لَهُم مِّنَ الدِّينِ مَا لَمْ يَأْذَن بِهِ اللَّهُ ۚ (الشورى/21)
அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக் கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா?” (42/21)
آللَّهُ أَذِنَ لَكُمْ ۖ أَمْ عَلَى اللَّهِ تَفْتَرُ‌ونَ ﴿٥٩/يونس(
“அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக் கின்றானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுகின்றீர்களா?” (10/59)
இரண்டாவது:  அவன் நிறைவேற்றும் காரியங்கள் அல்லாஹ்வுக்கென்ற தூய எண்ணம் கொண்டதாக இருத்தல் வேண்டும். இதனை பின்வரும் வசனங்கள் உறுதி செய்கின்றன.
وَمَا أُمِرُ‌وا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ (البينة/5)
“அல்லாஹ்வின் தூய மார்க்கத்தைப் பின்பற்றி, அல்லாஹ் ஒருவனை தூய்மையாக வணங்கி வருமாறே அவர்களுக்குக் கட்டளையிடப் பட்டது” (98/5)  
قُلْ إِنِّي أُمِرْ‌تُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ ﴿١١﴾ وَأُمِرْ‌تُ لِأَنْ أَكُونَ أَوَّلَ الْمُسْلِمِينَ ﴿١٢﴾ قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَ‌بِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ ﴿١٣﴾ قُلِ اللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَّهُ دِينِي ﴿١٤﴾ فَاعْبُدُوا مَا شِئْتُم مِّن دُونِهِ ۗ (الزمر/11,15 )
“முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கங்களை கலப்பற்றதாக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். என்றும்“அவனுக்கு வழிப்பட்டவர்களில் முதன்மை யானவராக இருக்குமாறும் நான் ஏவப் பட்டுள்ளேன்” என்றும் கூறுங்கள்”
“என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான ஒரு நாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்” என்று கூறுவீராக”
“அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என்னுடைய வணக்கம் அனைத்தும் உரித்தானது”என்றும் கூறுங்கள்“(ஆனாலும் உங்கள் இஷ்டப்படி) அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்” (39/11-15)
மூன்றாவது: நிறைவேற்றும் காரியங்கள் சரியான அகீதாவின் அடிப்படையில் அமையப் பெற்றிருத்தல் வேண்டும். ஏனெனில்  கருமம், கட்டிடத்தின் கூரையைப் போன்றதும், அகீதா அதன் அத்திவாரத்தைப் போன்றதுமாகும். ஆகையால் அமல் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அதனுடன் ஈமான் இருப்பது அவசியமாகும் என்பதைப் பின் வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.  
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ‌ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فأُولئك يَدْخُلُوْنَ الْجَنةَ  (النساء/124)
“ஆணாயினும் பெண்ணாயினும் எவர் உண்மையான நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரோ அவர்கள்தான் சொர்க்கம் நுழைவார்கள் "(4/124)
அடியானின் அமல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், அவன் சொர்கத்தைப் பெறுவதற்கும் காரணமாக அமைவது ஈமானுடன் கூடிய நற்கிரிகைகள், என்பதை  وهومؤمن   அவன் ஈமான் கொண்ட நிலையில் எனும் சொல் தெளிவுபடுத்துகின்றது. மேலும் ஈமான் இல்லாதவனின் நற்கிரிகை பயனளிக்காது, என்பதை அடுத்து வரும்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورً‌ا ﴿٢٣/الفرقان﴾
“அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நோக்கினால், அவற்றை நாம்  பறக்கும் தூசிகளைப் போல் ஆக்கிவிடுவோம்” (25/23) அதாவது பயனற்றவையாய் ஆக்கிவிடுவோம்.
أُولَـئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الْآخِرَ‌ةِ إِلَّا النَّارُ‌ ۖ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِلٌ مَّا كَانُوا يَعْمَلُونَ ﴿١٦/هود﴾
“மறுமையிலோ இத்தகையவர்களுக்கு நரக நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் அங்கு செய்தவை யாவும் அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.”(11/16)
ஈமான் இல்லாத அமல் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை என்பதை உணர்த்தும் இது போன்று  இன்னும் பல திரு வசனங்கள் அல்குர்ஆனிலே இருக்கின்றன.
    நான்காவது விடயம்: ஷரீஆ சட்டங்களை விடுத்து ஏனைய சட்டங்களை அமுல்படுத்தல் குறித்து
இது பகிரங்கமான இறை நிராகரிப்பும் ஷிர்க்குமாகும் என்று அல்குர்ஆன் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. ஆடொன்று மரணித்த போது “அதனைக் கொன்றவர் யார்?’ என ரஸூல் (ஸல்) அவர்களிடம் விசாரிக்குமாறு காபிர்களின் உள்ளத்தில் ஓர் எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்தினான். காபிர்கள் வினவினய போது நபியவர்கள் “அல்லாஹ்தான் அதனைக் கொன்றான்” என்று பதிலளித்தார்கள்.மீண்டும் அந்தக் காபிர்களின் உள்ளத்தில் “உங்களின் கரங்களால் அறுத்தவை ஹலாலாகவும், அல்லாஹ் வின் கரத்தால் அறுத்தவை ஹராமாக நீங்கள் அல்லாஹ்வை விடவும் மேலானவர்களா?” என்று நபியவர்களிடம் கேட்கும் படியான எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்தினான்.(அபூதாவூத், திர்மிதீ)
எனவே அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கினான்.
وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِ‌كُونَ ﴿١٢١/الأنعام)
“உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தன்னுடைய நண்பர்களைத் தூண்டுகின்றனர். அவர்களுக்கு வழிப்பட்டால் நிச்சயமாக நீங்கள் இணைவைத்து வணங்குப வர்கள்தான்” (6/121)    
இவ்வசனத்தில் إنكم لمشركون - நிச்சயமாக நீங்கள் இணை வைக்கின்றவர்கள்தான் என்ற சொல்லின் மூலம், அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாறாக ஷைத்தானுக்கு வழிப்படுகின்றவன் முஷ்ரிக் என்று அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறுகின்றான். எனவே செத்த பிராணியை உண்ணுவதை அல்லாஹ் ஹராமாக்கியிருக்கும் போது, அதனை எவரேனும் ஹலால் எனக் காண்பாராகில் அது  ஷிர்க்காகும், அது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் என்பதில் முஸ்லிம்கள் ஒருமித்த கருத்தை உடையவர்களாக இருக்கின்றனர். மேலும் இத்தகைய பாரிய தவறைப் புரிகின்றவர்களிடம் நாளை மறுமை நாளில் அல்லாஹ்
  “أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَن لَّا تَعْبُدُوا الشَّيْطَانَ ۖ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ ﴿٦٠﴾ وَأَنِ اعْبُدُونِي ۚ هَـذَا صِرَ‌اطٌ مُّسْتَقِيمٌ ﴿٦١/يس﴾  
“ஆதமின் சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது என்றும், நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும், நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழி எனவும் நான் உங்களிடம் உறுதி மொழி வாங்கவில்லையா?” (36/60,61)   எனக் கூறி அவர்களை இழிவு படுத்துவான்.
மேலும் அல்லாஹ்வின் ‘கலீல்’ -- நண்பன் இப்றாஹீம் (அலை) அவர்கள் தன் தந்தையிடம்,
  “يَا أَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطَانَ ۖ(مريم/44)
“என் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்”(19/44) என்று கூறினார்கள்.
இவ்வாறே அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாறாக ஷைத்தானுக்கு வழிப்படக் கூடாதென்பதை பின் வரும் வசனங்களும் வழியுறுத்துகின்றன.
إِن يَدْعُونَ مِن دُونِهِ إِلَّا إِنَاثًا وَإِن يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَّرِ‌يدًا ﴿١١٧/النساء)
“அல்லாஹ்வை விடுத்து அவர்கள் பெண்களையே அழைத்தனர். மேலும் அவர்கள் துஷ்ட ஷைத்தான்களையே அன்றி அழைக்கவில்லை. (“4/117)
وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ‌ مِّنَ الْمُشْرِ‌كِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَ‌كَاؤُهُمْ (الأنعام/137)
“அவ்வாறே, இணைவைப்போரில் பலருக்குத் தங்களின் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன.” (6/137)  
اتَّخَذُوا أَحْبَارَ‌هُمْ وَرُ‌هْبَانَهُمْ أَرْ‌بَابًا (التوبة/31)
“இவர்கள் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசி களையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர்” (9/31)
ألَمْ تَرَ‌ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِ‌يدُونَ أَن يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُ‌وا أَن يَكْفُرُ‌وا بِهِ وَيُرِ‌يدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا ﴿٦٠ /النساء)
“உங்கள்மீது இறக்கப்பட்டதையும், உங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் கூறுகின்றனரோ  அவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடப் பட்ட ஒரு விஷமியையே அவர்கள் தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றனர். அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகின்றான்.”(4/60)  
وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَـئِكَ هُمُ الْكَافِرُ‌ونَ ﴿٤٤/المائدة﴾
“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பாளர்களே!”(5/44)
 أَفَغَيْرَ‌ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا ۚ وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِّن رَّ‌بِّكَ بِالْحَقِّ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِ‌ينَ ﴿١١٤/الأنعام﴾
“அல்லாஹ் அல்லாத மற்றவரையா தீர்ப்பளிக்கும் நீதிபதியாக நான் எடுத்துக் கொள்வேன்? அவன்தான் எல்லா விளக்கமான இவ்வேதத்தை உங்களுக்கு இறக்கியருள் புரிந்திருக்கின்றான்” (என்று நபியே! நீங்கள் கூறுங்கள்) எவர்களுக்கு நாம் இவ்வேதத்தை கொடுத்திருக்கின்றேமோ அவர்கள், இது மெய்யாகவே உங்கள் இறைவனிட மிருந்து உண்மையைக் கொண்டே இறக்கியருளப் பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகையால் சந்தேகப்படுபவர்களில் நீங்களும் ஒருவராகி விட வேண்டாம்”(6/114
  وَتَمَّتْ  كَلِمَتُ رَ‌بِّكَ صِدْقًا وَعَدْلًا ۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿١١٥/الأنعام)
“உங்களது இறைவனின் வாக்கு உண்மையாலும் நீதத்தாலும் முழுமையாகிவிட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுவோர் யாருமில்லை. அவன் செவியுறபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.” (6/115)

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ ۚ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِّقَوْمٍ يُوقِنُونَ ﴿٥٠/المائدة﴾
“அறியாமைக் கால சட்டங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே உறுதி கொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்?” (5/50)
    ஐந்தாவது விடயம்:   சமூகத்தில்  மக்கள்  அந்தஸ்து
சமூகத்தில் வாழும் மக்கள் ஒரே படித்தரத்தை உடையவர்களல்ல. எனவே அவர்கள் மத்தியில் காணப்படும் பொறாமை, வஞ்சித்தலை அகற்றி ஒளிமயமான பாதையை அல்குர்ஆன் காட்டித் தருகின்றது. முதலில் சமுதாயத்தின் தலைவருக்கு குர்ஆன் இடும் கட்டளையினைக் கவனியுங்கள்.    

    وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ ﴿٢١٥/اللشعراء﴾
“உங்களைப் பின்பற்றி நடக்கும் நம்பிக்கை யாளர்களிடம் கணிவாக நடந்து கொள்ளுங்கள்.” (26/215)
فَبِمَا رَ‌حْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ‌ لَهُمْ وَشَاوِرْ‌هُمْ فِي الْأَمْر‌ (آل عمران/159)
“அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களின் மீது மென்மையாக நடந்து கொள்கின்றீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர் களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே அவர்களை மன்னித்து, அவர்களுக்காக மன்னிப்பும் தேடுவீராக. மேலும் சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசிப்பீராக.”(3/159)  
இது தலைவர்கள் குடிமக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு  அல்குர்ஆனின்  கட்டளை எனில், குடிமக்கள் தலைவர்களுடன்  எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை  அடுத்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّ‌سُولَ وَأُولِي الْأَمْرِ‌ مِنكُمْ ۖ (النساء/59)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் வழிப்பட்டு நடவுங்கள். மேலும் உங்கள் தலைவருக்கும் கட்டுப்பட்டு நடவுங்கள்.” (4/59)
இனி பிள்ளைகள், மனைவியர் போன்ற தனிநபருடன் தொடர்பட்டு அல்குர்ஆன் பிறப்பிக்கும் கட்டளை  கவனிப்போம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارً‌ا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَ‌ةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَ‌هُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُ‌ونَ ﴿٦/التحريم)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிக்கட்டை மனிதர்களும், கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான மலக்குகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்னர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் சிறிதும் மாறு செய்ய மாட்டார்கள். அவர்கள் தங்களுக்கிடப்பட்ட  கட்டளைகளையே  செய்து வருவார்கள்.” (66/6)  
தனிப்பட்ட சமூக அமைப்புகளின் தலைவர்கள் தங்களின் பொறுப்பிலிருக்கின்றவர்களை எவ்வாறு எச்சரிக்கையுடனும், கட்டுக்கோப்புடனும் வைத்தி ருக்க வேண்டுமென்பதை அடுத்து வரும் வசனம் எடுத்துரைக்கின்றது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُ‌وهُمْ ۚ وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُ‌وا فَإِنَّ اللَّهَ غَفُورٌ‌ رَّ‌حِيمٌ ﴿التغابن/١٤﴾
நம்பிக்கையாளர்களே!  உங்கள் மனைவியரிலும், சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்குன்றனர். ஆகவே! அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்களை சகித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடைய வனுமாக இருக்கின்றான்.”64/14)  
சமூகத்தின் ஒவ்வொரு தனி நபரும் தம் மத்தியில் பரஸ்பரம் நீதியாக எவ்வாறு  நடந்து கொள்ள வேண்டுமென்பதை அடுத்து வரும் வசனம் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது.
إِنَّ اللَّهَ يَأْمُرُ‌ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْ‌بَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ‌ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُ‌ونَ ﴿٩٠/النحل﴾
“நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மைகள் செய்து  உறவினர்களுக்குக் கொடுத்துதவி செய்யும் படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், அநியாயம், பாவம் ஆகியவைகளைத் தடுத்திருக்கின்றான். நீங்கள் ஞாபகத்தில்  வைத்துக் கொள்ளும் பொருட்டு அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16/90)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرً‌ا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا (الحجرات/12)               
“நம்பிக்கையாளர்களே! சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் சந்தேகங்களில் சில பாவமானவைகளாகும்.” (49/12)
   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ‌ قَوْمٌ مِّن قَوْمٍ عَسَى أَن يَكُونُوا خَيْرً‌ا مِّنْهُمْ وَلَا نِسَاءٌ مِّن نِّسَاءٍِ عَسَى أَن يَكُنَّ خَيْرً‌ا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُولَـئِكَ هُمُ الظَّالِمُونَ ﴿١١/الحجرات﴾
“நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம் ஏனெனில் அவர்கள் இவர்களை விட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே  எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) அவர்கள் இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூற வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர் பட்டப்பெயர் சூட்டுவது மகா கெட்டதாகும். எவர்கள் இவற்றைத் தவிர்ந்து கொள்ளவில்லையோ அவர்கள்தான் அநியாயக் காரர்கள்”(49/11)  
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ‌ وَالتَّقْوَى ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ (المائدة/2)
“நன்மைக்கும், இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறலுக்கும் உதவியாக இருந்து விட வேண்டாம். (5/2)
وَأَمْرُ‌هُمْ شُورَ‌ى بَيْنَهُمْ  (الشورى/38)
“அவர்கள் தங்களின் காரியத்தை தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள்”(42/38)
எந்த சமூகமாயினும் அது தன் மக்களின் எதிர் நடவடிக்கைகள், தீங்குகளை விட்டு முற்றிலும் நிம்மதி பெற்றிருக்க முடியாது. ஏதேனும் ஒருவரிடமிருந்து ஏதேனும் தீமை  ஏற்படாமல்  இருக்காது. எனவே இந்த சமூக நோயைப் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் மூன்று இடங்களில் குறிப்பிட்டுள்ளான். அதற்கான பரிகாரமோ, தீமை செய்தவனின் தீமையை புறக்கணித்து விட்டு அதனை நற்கருமத்தின் மூலம் எதிர் கொள்வதே என்றும்,  ஷைத்தானிடமிருந்து வரும் தீமையை ஒழிப்பதற்கான ஒரே பரிகாரம் அதன் தீமையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது என விளக்கியுள்ளான்.  அவற்றில் ஒன்று அல்அஃராப்f அத்தியாத்தின் பின்வரும் வசனங்களாகும்.
خُذِ الْعَفْوَ وَأْمُرْ‌ بِالْعُرْ‌فِ وَأَعْرِ‌ضْ عَنِ الْجَاهِلِينَ ﴿١٩٩/الأعراف﴾
“இவ்வறிவீனர்(களின் செயல்)களை புறக்கணித்து, நீங்கள் மன்னிப்பைக் கைக்கொள்ளுங்கள், மேலும் நன்மையை ஏவி வாருங்கள்.(7/199)
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۚ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٠٠/الأعراف﴾
“ஷைத்தான் யாதெரு எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து தூண்டினால்  உடனே  நீங்கள் காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுப வனும், நன்கறிந்தவனாகவும்  இருக்கின்றான். (7/200)

இரண்டவது இடம் அல்முஃமினூன்  அத்தியாத்தின் பின்வரும் வசனங்கள்,
إدْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ السَّيِّئَةَ ۚ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ ﴿٩٦/المؤمنون﴾
“தீமையை, மிக அழகியதைக் கொண்டே நீங்கள் தடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள்  கூறுவதை  நாம்  நன்கறிவோம்.(23//96)
وَقُل رَّ‌بِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ ﴿٩٧﴾ وَأَعُوذُ بِكَ رَ‌بِّ أَن يَحْضُرُ‌ونِ ﴿٩٨ المؤمنون﴾
மேலும் (நபியே!“ என் இறைவனே! ஷைத்தா னுடைய தூண்டுதல்களிலிருந்து என்னைக் காப்பற்றுவாயாக” என்றும், “என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்க  நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றும் நீங்கள் கூறுங்கள்.”(23/97,98)
மூன்றாவது இடம் ‘புfஸ்ஸிலத்’ அத்தியாயத்தில் வரும் பின்வரும் வசனங்கள்.  அதில் ஷைத்தானிய நோய்களுக்கு வானுலக   சிகிச்சை மூலம் பயன் பெற   அல்லாஹ்வின் அருள் கிட்ட வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருளைப் பெற பொறுமை அவசியம் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இனி அந்த வசனங்களைக் காண்போம்    
ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ ﴿٣٤﴾ وَمَا يُلَقَّاهَا إِلَّا الَّذِينَ صَبَرُ‌وا وَمَا يُلَقَّاهَا إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ ﴿٣٥/فصلت﴾
“நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுங்கள், அவ்வாறாயின் உங்களுடைய கொடிய எதிரியை உங்களுடைய உண்மையான நண்பனைப் போல் காண்பீர்கள்.”
“பொறுமையாளர்களையும், பெரும் பாக்கிய முடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைந்து கொள்ளமாட்டார்கள்” (41/34,35)
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۖ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿٣٦/فصلت﴾
“ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் உங்களைத் தூண்டும் சமயத்தில் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் செவியுறுபவனும் நன்கறிபவனுமாக இருக்கின்றான்.” (41/36)
பொதுவாக எதிரிகளுடனும், தவறிழைப்பவர்களு டனும் நளினமாகவும் இறக்கமாகவும் நடந்து கொள்வது பயன் தரும் அனுகு முறை என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  அது பயனளிக்கமாட்டாது. எனவே நளினமாக நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் கடினமாக நடந்து கொள்வது மடமை என்பது போல், கடினமாக நடந்து கொள்ள வேண்டி சந்தர்ப்பங்களில் நளினமாக நடந்து கொள்வதும் முட்டாள் தனமாகும். ஆகையால்தான் முஸ்லிம்களை அழித்தொழிக்கும் காரியத்தில் ஈடுபாடு கொள்ளும் கடும் போக்கு கொண்ட காபிர்கள் விடயத்தில் கடும் போக்கைக் கையாளு மாறு பல அல்குர்ஆன் வசனங்களின் மூலம் அல்லாஹ் வழியுறுத்துகின்றான். அவ்வாறான சில வசனங்களை இனி கவனிப்போம்.  
فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِ‌ينَ  (المائدة/54)
“வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான், அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்  பணிவாக நடந்து கொள்வார் கள். நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடைய வர்களாக இருப்பார்கள்”(5/54)
مُّحَمَّدٌ رَّ‌سُولُ اللَّهِ ۚ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ‌ رُ‌حَمَاءُ بَيْنَهُمْ (الفتح/29)
“அல்லாஹ்வின் திருத்தூதரும், அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.” (48/29)
يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ‌ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ ۚ  (التوبة/73)
“நபியே! நிராகரிப்பாளர்களுடனும், நயவஞ்சகர் களுடனும் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்களை கண்டிப்பாக நடத்துங்கள்.”(9/73)
    ஆறாவது விடயம்: பொருளாதாரம்.    
பொருளாதாரத்தின் பல பிரிவுகளுக்குத் தேவையான அடிப்படைகளை அல்குர்ஆன் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. பொருளாதாரம் இரு அடிப்படைகளைக் கொண்டுள்ளது:
1-பொருளீட்டலில் நல் வழியைக் கையாளுதல்.
2-பொருளை நல் வழியில் செலவு செய்தல்.
  فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُ‌وا فِي الْأَرْ‌ضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُ‌وا اللَّهَ كَثِيرً‌ا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿الجمعة/١٠﴾
(ஜும்ஆ) தொழுகை முடிவு பெற்றால், பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.(62/10)
கூட்டுத் தொழுகைக்குச்  சமூகமளிக்கும் மக்களிடையே தங்களின் தொழிலுக்காக, வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும்  வேறு பல தேவை களுக்காக வெளியே செல்ல அவசியமுள்ளவர்கள் இருப்பார்கள். எனவே இவ்வாறான நிலைகளை கருத்தில் கொள்வது அவசியம். ஹலாலான பொருளீட்டல் குறித்து  அடுத்து வரும் வசனங்கள் உணர்த்துகின்றன.   
وَآخَرُ‌ونَ يَضْرِ‌بُونَ فِي الْأَرْ‌ضِ يَبْتَغُونَ مِن فَضْلِ اللهِ ۙ ...................(المزمل/20)
“ சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியின் பல பாகங்களுக்கும் செல்கின்றனர்”.............. (73/20)
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّ‌بِّكُمْ ۚ (البقرة/198)
“ நீங்கள் உமது இறைவனுடைய அருளைத் தேடிக் கொள்வதில் உங்கள் மீது குற்றமாகாது”(2/198)
إِلَّا أَن تَكُونَ تِجَارَ‌ةً عَن تَرَ‌اضٍ مِّنكُمْ ۚ  (النساء/29
“உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தகத்தின் மூலமேயன்றி, ஒருவர் மற்றவரின் பொருள்களை உண்ண வேண்டாம்” (4/29)
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ (البقرة/275)
“அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்துள்ளான்” (2/275)
 فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا ۚ(الأنفال/69)
“உங்களுக்குக் கிடைத்த ஆகுமான ‘கனீமத்’ பொருள்களையே உண்ணுங்கள்”(8/69)
பொருளீட்டும் முறை ஹலாலானதாகவும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்கு உட்பட்டதா கவும் இருப்பது அவசியம் என்பதை வழியுறுத்தும் இது போன்ற வேறு திருவசனங்களும் இருக்கின்றன.இது இவ்வாறிருக்க பொருளை செலவு செய்யும் விடயத்தில் விரயம் செய்யவோ, அதில் கருமித்தனமோ இருக்கக் கூடாது. இரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையே சிறந்த பொருளாதாரத்தின் பண்பாகும். எனவேதான் பொருளை எவ்வாறு செலவு செய்ய வேண்டுமென்பதை அடுத்து வரும் வசனங்கள் தெளிவுபடுதுகின்றன.
 وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ (الإسراء/29)
“(செலவு செய்யாமல்) உங்களின் கையை கழுத்தில் மாட்டிக் கொள்ளவோ.அல்லது முற்றிலும் விரித்து விடவுவோ வேண்டாம்”(17/29)

وَالَّذِينَ إِذَا أَنفَقُوا لَمْ يُسْرِ‌فُوا وَلَمْ يَقْتُرُ‌وا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا ﴿٦٧/ الفرقان(
“அன்றி, அவர்கள் தானம்  கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்து விடவுமாட்டார்கள். கஞ்சத் தனம் செய்யவுமாட்டார்கள். இரண்டிட்கும் மத்திய தரத்தில் இருப்பார்கள் (25/67)   
وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ(البفرة/219
“எவ்வளவு செலவு செய்வதென உங்களிடம் கேட்கின்றனர். மீதமுள்ளதை(செலவு செய்யும்படி) நீங்கள் கூறுங்கள்”(2/219)
فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَ‌ةً ثُمَّ يُغْلَبُونَ ۗالأنفال36 (
“இவ்வாறு அவர்கள் செலவு செய்வது, பின்னர் அவர்களுக்கு துக்கமாக்கிவிடும். பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்.(8/36)
    ஏழாவது விடயம்: அரசியல்
அரசியலின் அடிப்படைகள் பற்றி அல்குர்ஆனில் தெளிவுபடுத்தப் பட்டுருக்கின்றது. அரசியல் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் என இரண்டு அடிப்படைகளைக் கொண்டதாகும். அவை இரண்டு அடிப்படைகளின் பக்கம் தேவை கொண்டதாகும். அவையாவன,
ஒன்று: எதிரியின் கெடுபிடிகளை அடக்கி ஒடுக்குவதற்குத் தேவையான பலத்தைத் தயார் படுத்திக் கொள்ளுதல். இது பற்றி அல்லாஹ்   
  وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّ‌بَاطِ الْخَيْلِ تُرْ‌هِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ (الأنفال/60)
“அவர்களை எதிர்ப்பதற்குத் தேவையான சக்தி களையும், கட்டி வளர்க்கப்பட்ட  குதிரைகளையும் உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் தயார் படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் பயமடையச் செய்யலாம்.”(8/60)
இரண்டு: உண்மையான ஒற்றுமையுடன் இப் பலத்தைக் கட்டிக்காத்தல்.
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّ‌قُوا ۚ (آل عمران/103)
“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் பிரிந்திட வேண்டாம்” (3/103)
وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِ‌يحُكُمْ ۖ (الأنفال/46)
“உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை   இழந்திடு வீர்கள், மேலும் உங்களது பலம் குன்றிவிடும்” (8/46)
மேலும் சமாதானம், போர்த்தவிர்ப்பு, மற்றும் ஒப்பந்த முறிவு போன்ற நடவடிக்கைகள் எவ்வாறான சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை  அல்குர்ஆன் தெளிவு படுத்துகின்றது.       
فَأَتِمُّوا إِلَيْهِمْ عَهْدَهُمْ إِلَى مُدَّتِهِمْ ۚ (التوبة/4)
“அவர்களது உடன்படிக்கையை அதன் தவனை வரையில் முழுமைபடுத்தி வையுங்கள்.”(9/4)
فَمَا اسْتَقَامُوا لَكُمْ فَاسْتَقِيمُوا لَهُمْ ۚ (التوبة/7)
“(உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரையில் நீங்களும் அவர்களுடன் உறுதியாக இருங்கள்.”(9/7)
وَإِمَّا تَخَافَنَّ مِن قَوْمٍ خِيَانَةً فَانبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ ۚ (الأنفال/58)
“எந்த வகுப்பினரும் மோசம் செய்வார்கள் என நீங்கள் பயந்தால், அதற்குச் சமமாக (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடமே எறிந்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளை நேசிப்பதில்லை.”(8/58)
وَأَذَانٌ مِّنَ اللَّهِ وَرَ‌سُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ‌ أَنَّ اللَّهَ بَرِ‌يءٌ مِّنَ الْمُشْرِ‌كِينَ ۙ وَرَ‌سُولُهُ (التوبة/3)
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களிடம் (செய்து கொண்ட உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக் கொண்டனர் என்ற விஷயத்தை இம்மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கின்றனர்.”(9/3)
மேலும் காபிர்களின் சூழ்ச்சிகளையும், அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சந்தர்ப்பங்களை பயன் படுத்திக் கொள்வதைப் பற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், போர் முணையில் தொழுகையில் ஈடுபடும் வேளையில் காபிர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்லாமியப் படையைத் தாக்கிவிடலாம். எனவே இச்சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய போராளிகளின் ஒரு பிரிவினர் தொழுகையில் இருக்கும் போதே ஆயுதங்களைக் கையில் ஏந்தியவாறு எச்சரிக்கையுடன் இருக்க அல்லாஹ் உத்தரவிடுகின்றான்.
ياأَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَ‌كُمْ (النساء/71)
”நம்பிக்கையாளர்களே! எச்சரிக்கையாகவே இருங்கள்.” (4/71)
 وَلْيَأْخُذُوا حِذْرَ‌هُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ الَّذِينَ كَفَرُ‌وا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ (النساء/102(
“தொழுகையில் உங்களுடன் சேர்ந்து கொள்ளும்) அவர்களும் தங்கள் ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் (எதிரிகளான) அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும். ஏனென்றால் நீங்கள் உங்கள் ஆயுதங்களில் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டுமென அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர்.”(4/102)
“உள்நாட்டுக் கொள்கை:
சமூக பாதுகாப்பையும், அமைதியையும் உறுதிப் படுத்தி அநீதியை ஒழித்து, உரியவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதையும் அடிப்படையாகக் கொண்டதே உள்நாட்டுக் கொள்கை. இஸ்லாமிய உள்நாட்டுக் கொள்கையானது ஆறு விடயங்களை உள்ளடக்கியதாகும். அவையாவன:
ஒன்று; மார்க்கத்தைப் பாதுகாத்தல்
இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை நோக்கம் மார்க்கத்தைப் பாதுகாத்தலாகும். எனவேதான்     مَنْ بَدل دِيْنَهُ فَاقْتُلُوْهُ “எவர் தன்னுடைய மார்க்கத்தை மாற்றிக் கொண்டரோ, அவனை கொன்று விடுங்கள்” என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ) இந்நபிமொழி மார்க்கத்தை மாற்றி அதனை அழிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றது. எனவேதான் மார்க்கத்தைப் பாதுகாத்தல் இஸ்லாமிய உள்நாட்டுக் கொள்கையின் ஒரு அங்கமாக்கப்பட்டுள்ளது.   
இரண்டாவது; உயிரைப் பாதுகாத்தல்
குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலமும், பழிவாங்குவதன் மூலமும்  குடிமக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. எனவேதான் قِصاَص பழிவாங்களை அல்லாஹ் சட்டமாக்கியுள்ளான்.
وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ (البقرة/179)
“அறிவுடைய மக்களே! பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு.” (2/179)
كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى ۖ (178)
“கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழி வாங்குவது உங்கள் மீது கடமையாக்கப் பட்டிருக்கின்றது.”(2/178)
وَمَن قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا (الإسراء/33)
“எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப் பட்டுவிட்டால் அவனுடைய வாரிசுகளுக்கு (பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக் கின்றோம்.” (17/33)
மேலும் மனிதனின் சிந்தையை பாதுகாப்பதும் கடமையாகும். போதைவஸ்து பாவனை மூலம் சிந்தனை பாதிக்கப்படுகின்றது. எனவேதான் சகல போதைப் பொருட்களையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. மேலும் மதுபானம் அருந்துகின்ற வனுக்கு 40 கசையடியையும் அது விதித்துள்ளது.
அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,
يَا أَيُّهَا الَّذِين آمَنُوا إِنَّمَا الْخَمْرُ‌ وَالْمَيْسِرُ‌ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِ‌جْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿٩٠/المائدة﴾
“நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் சிலை வணக்கமும் அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே இவைகளி லிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள்.” (5/90)
மேலும்  போதைப் பொருள் குறித்து,
كُل مُسْكِر حَرَام, مَاأسْكَرَ كَثِيْرُهُ فَقَلِيْلُهُ حَرَام (إبن ماجة)
“போதை தரும் அனைத்தும் தடைசெய்யப் பட்டதாகும். எனவே அதிக அளவிலான போதைப் பொருளாயினும்  சொற்ப அளவிலான போதைப் பொருளாயினும் அது ஹராமானதே.” என்று, ரஸூல் (ஸல்) அவர்கள்  கூறினார்கள்.     (இப்னுமாஜா)  
நான்காவது; பரம்பரைகளைப் பாதுகாத்தல்
விபச்சாரம் பரம்பரை ஒழுங்கில் குளருபடியை ஏற்படுத்தும் காரணியாகும். ஆகையால் அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு விபச்சாரக் குற்றத்திற்கென தனிப்பட்ட தண்டனையை அல்லாஹ் விதித்துள்ளான்.
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ (النور/2)
“விபச்சாரம் செய்த பெண் , ஆண் ஒவ்வொருக்கும் நூறு கசையடிகள் வழங்குங்கள்.(24/2)
ஐந்தாவது மானத்தைப் பாதுகாத்தல்
குடிமக்கள் அனைவரின் சுயகௌரவத்தை பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவேதான் அவதூறு சொல்பவனை கசையடி வழங்கி தண்டிக்கு மாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்,  
وَالَّذِينَ يَرْ‌مُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْ‌بَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً  (النور/4)
“எவரேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி நான்கு சாட்சிகளை கொண்டுவரவில்லையோ அவனை நீங்கள் என்பது கசையடியுங்கள்”(24/4)
ஆறாவது உடைமைகளைப் பாதுகாத்தல்
மக்களின் உடமைகைளைப் பாதுகாக்கும் பொருட்டு திருடனின் கை வெட்டப்படுவதை அல்லாஹ் விதியாக்கியிருக்கின்றான்.
 وَالسَّارِ‌قُ وَالسَّارِ‌قَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللَّهِ ۗ (المائدة/38)
“ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும், அவர்களின் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்துவிடுங்கள். இது அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை யாகும்,” (5/38)
இவற்றிலிருந்து இஸ்லாமிய அரசானது சமூகத்தின் உள்வாரி, வெளிவாரி நலன்களையும் பொறுப்பேற்றுள்ளது என்பது துலாம்பரமாகும்.
ஏழாவது விடயம்: முஸ்லிம்கள் மீது காபிர்களின் ஆதிக்கம்
 ரஸூல் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தங்களின் மீதான காபிர்களின்   ஆதிக்கம் நபித் தோழர்களுக்குப் பிரச்சினையாகத் தென்பட்டது. குறிப்பாக உஹது யுத்தத்தின் போது, காபிர்களின் கடுமையான தாக்குதலுக்கு முஸ்லிம்கள் இலக்காகினர். எனவே தாம் உண்மையான மார்க்கத்தின் மீதும் காபிர்கள் தவறான மார்க்கத்தின் மீதும் இருக்க, அக் காபிர்கள் தங்கள் மீது எப்படி ஆதிக்கம் கொள்ள முடியமென ஸஹாபாக்கள்  பேசிக் கொண்டனர்.
 அதற்கு அல்லாஹ் தன்னுடைய இந்த வாசகத்தின் மூலம் அவர்களுக்கு விளக்கமளித்தான்,
أَوَلَمَّا أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَدْ أَصَبْتُم مِّثْلَيْهَا قُلْتُمْ أَنَّى هَـذَا ۖ قُلْ هُوَ مِنْ عِندِ أَنفُسِكُمْ (آل عمران/165)
“(பத்ருப் போரில்) இதைவிட இருமடங்கு கஷ்டத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்தக் கஷ்டம் உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எவ்வாறு என நீங்கள் கேட்டீர்கள். இது உங்களால்தான் ஏற்பட்ட தென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன் எனவும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.”(3/165)
وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِ ۖ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ‌ وَعَصَيْتُم مِّن بَعْدِ مَا أَرَ‌اكُم مَّا تُحِبُّونَ ۚ مِنكُم مَّن يُرِ‌يدُ الدُّنْيَا وَمِنكُم مَّن يُرِ‌يدُ الْآخِرَ‌ةَ ۚ ثُمَّ صَرَ‌فَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۖ (آل عمران/152)
“அல்லாஹ்வின் கட்டளைப்படி நீங்கள் அவர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில், அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்து, நீங்கள் விரும்பியதையும் உங்களுக்குக் காண்பித்தான். அதன்பின்னர் நீங்கள் மாறு செய்து அவ்விஷயத்தில் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு தைரியத்தை யும் இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உண்டு. மறு உலகை விரும்புபவர்களும் உண்டு. ஆகவே உங்களை அவன் சோதிப்பதற்காக அவர்களை விட்டும் உங்களை பின்னடையும்படி செய்தான். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய குற்றங்களை மன்னித்து விட்டான். ஏனெனில் அல்லாஹ் நம்பிக்கையாளர் கள் மீது அருள்புரிபவனாக இருக்கின்றான்.” (3/152)
உஹுது யுத்தத்தில் நபித் தோழர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளும், இழப்புகளும் இவ்வசனங்களின் மூலம் எடுத்தக் காட்டப்பட்டிருக்கின்றன. மேலும் முஸ்லிம் படைகளின் பின்புரத்தால் எதிரிகள் வருவதைத் தடுப்பதற்காக உஹுது மலையின் மீது வில் வீரர்கள் சிலர் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர், முதலில் முஸ்லிம் அணியினருக்குக் கிடைத்த வெற்றியைக் கண்டு தங்களுக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் பிறப்பித்த உத்தரவை புரம் தள்ளி விட்டு, யுத்தகளத்திலிருந்து காபிர்கள் விட்டுச் சென்ற ஆஸ்திகளைச் சேகரிக்கச் சென்றனர். அதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட எதிரிகள் இரு முணை தாக்குதல் மூலம் முஸ்லிம்களை மீண்டும் எதிர்கொண்டு அவர்களைத் தாக்கினர். இதனால் முஸ்லிம்களுக்கு பலத்த சேதமும் இழப்பும் ஏற்பட்டது. எனவே இந்த பேரிழப்புக்குக் காரணம் முஸ்லிமகள் சிலரின் தவறும் பேராசையுமே. அதாவது நபித் தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதே உஹுது யுத்தத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கும், சோதனைக் கும் காரணம் என்பதை அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். எனவே முஸ்லிம்களின் மீது காபிர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படக் காரணம் முஸ்லிம்களே, ஆகையால் அவர்கள் தங்களின் வாழ்கையை மீள்பரிசீலனை செய்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை உஹுது சம்பவம் கற்றுத் தருகின்றது.
    ஒன்பதாவது விடயம்: காபிர்களுக்கு முன்னிலையில்  முஸ்லிம்களின் பலவீனமும் அதற்கான பரிகாரமும்.

இதன் பரிகாரம் பற்றி தன்னுடைய வேதத்தில் அல்லாஹ் தெளிவாக எடுத்துரைத்துள்ளான். உரிய முறையில் உளத்தூய்மையுடன் அடியார்கள் காரியங்களை நிறைவேற்றி வருவார்களாயின் அதன் பயனாக தங்களை விட பலசாலிகளையும் வெற்றி கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் பெற்றுக் கொடுப்பான்.  எனவேதான் ‘பைஅதுர் ரிழ்வான்’ ஒப்பந்தத்தின் போது நபித் தோழர்களின் உண்மையான மனத்தூய்மையைக் கண்ட அல்லாஹ், அவர்களின் ‘இக்லாஸை’ தனது திரு வசனத்தின் மூலம் சிலாகித்துக் கூறுகின்றான்.
لَّقَدْ رَ‌ضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَ‌ةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ (18/الفتح)
“அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களை நிச்சயமாக அல்லாஹ் பொருந்திக்கொண்டான். ஏனெனில் அவர்களின் உள்ளத்திலிருந்ததை அவன் நன்கறிவான்.”(48/18)
மேலும் அவர்களின் தூய எண்ணத்தின் காரணமாக அவர்களால் செய்ய இயலாமல் இருந்த காரியத்தைச் செய்யும் பலமுள்ளவர்களாகவும் அல்லாஹ் ஆக்குவான் என்பதை அடுத்து வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவு படுத்துகின்றான்.    
وَأُخْرَ‌ى لَمْ تَقْدِرُ‌وا عَلَيْهَا قَدْ أَحَاطَ اللَّهُ بِهَا ۚ (الفتح/21)
மற்றொரு வெற்றியும் இருக்கின்றது, அதற்கு நீங்கள் இன்னும் சக்தி பெற்றவர்களாகவில்லை. எனினும் அல்லாஹ் அதனை சூழ்ந்து கொண்டிருக்கின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனுமாக இருக்கின்றான். (48/21)
முஸ்லிம்களிடம் போதிய படைப் பலம் இல்லாத அந்த நேரத்தில், அவர்களின் தூய்மையான எண்ணத்தின் காரணமாக ரோம பாரசீக, சாம்ராஜ்யத்தை கைப்பற்றும் வல்லமையைப் பின்னர் பெற்றுத்தரவுள்ளதை  நபித் தோழர் களுக்கு அல்லாஹ் தெளிவு படுத்தினான். அல்லாஹ்வின் வாக்குறுதியின்படி ஸஹாபாக்கள் ரோமா புரியையும், பாரசீகத்தையும் கைப்பற்றினர். அவ்வாரே ‘அஹ்ஸாப்’ யுத்தத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக காபிர்கள் முற்றுகையில் ஈடுபட்ட வேளை, முஸ்லிம்களின் உளத் தூய்மையை அறிந்த அல்லாஹ் அவர்களின் உளத்தூய்மையையே பலவீனத்தை நீக்கும் நிவாரணியாக மாற்றி அமைத்தான். இது பற்றி அல்லாஹ்.    
إِذْ جَاءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ‌ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ‌ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا ﴿١٠﴾ هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا ﴿١١/الأحزاب﴾
“உங்களுக்கு மேல்புறமிருந்தும், கீழ்புறமிருந்தும் அவர்கள் வந்த சமயத்தில் உங்களுடைய கண்கள் திறந்தவாறே, உங்கள் தொண்டைக் குழிகள் அடைத்து அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தை நினைத்துப் பாருங்கள்.” (33/10)
“அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு மிகப்பலமான அதிர்ச்சிக்குள்ளாகப்பட்டனர்.” (33/11)
இவ்வாறு முஸ்லிம்கள் நலிவுற்றும், முற்றுகைக்கு உற்பட்டும் இருந்த சமயத்தில் அல்லாஹ்வின் மீதான உளத்தூய்மையே அவர்களின்  நெருக்கடி களையும் பலவீனத்தையும் நீக்கும் நிவாரணியாக மாறியது. இதனையே அல்லாஹ்வின் இத் திருவசனம் தெளிவு படுத்துகின்றது.
 
وَلَمَّا رَ‌أَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَـذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَ‌سُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَ‌سُولُهُ ۚ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا ﴿٢٢/الأحزاب﴾
“நம்பிக்கையாளர்கள் எதிரிப்படையை கண்ட பொழுது “இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார் கள் எனச் சொன்னார்கள். இன்னும் அவர்க ளுடைய நம்பிக்கையையும் அடிபணிதலையும் அன்றி அதிகப்படுத்தி விடவில்லை.(33/22)
மேலும் முஃமின்களின் தூய்மையான ஈமானின் காரணமாக அவர்கள் பெற்றுக் கொண்ட இன்னும் சில அனுகூலங்களை அடுத்து வரும் வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
وَرَ‌دَّ اللَّهُ الَّذِينَ كَفَرُ‌وا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا خَيْرً‌ا ۚ وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ ۚ وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا ﴿٢٥﴾ وَأَنزَلَ الَّذِينَ ظَاهَرُ‌وهُم مِّنْ أَهْلِ الْكِتَابِ مِن صَيَاصِيهِمْ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّ‌عْبَ فَرِ‌يقًا تَقْتُلُونَ وَتَأْسِرُ‌ونَ فَرِ‌يقًا ﴿٢٦﴾ وَأَوْرَ‌ثَكُمْ أَرْ‌ضَهُمْ وَدِيَارَ‌هُمْ وَأَمْوَالَهُمْ وَأَرْ‌ضًا لَّمْ تَطَئُوهَا ۚ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرً‌ا ﴿٢٧/الأحزاب﴾
“நிராகரிப்பாளர்கள் தங்களின் கோபத்தின் மீது மூழ்கியிருக்க அவர்களை அல்லாஹ்  திருப்பி விட்டான். அவர்கள் யாதொரு நன்மையையும் அடையவில்லை.இப்போரில் நஷ்டமேயடைந்தார் கள். நம்பிக்கையாளர்ளுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அவன் மிக்க பலவானாகவும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.” (33/25)
“எதிரிகளுக்கு உதவிய வேதத்தை உடையவர்களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்க வைத்து உள்ளங்களில் நடுக்கத்தை அவன் போட்டுவிட்டான். ஆகவேதான் அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் கொன்று விட்டீர்கள். மற்றொரு தொகையினரை சிறை பிடித்தீர்கள்.” (33/26)
இவ்வாறே ஹுனைன் யுத்தத்தின் போது மலக்குகளையும், புயல்காற்றையும் அல்லாஹ் ஏவி,  எதிரிகளை முறியடிக்கச் செய்து முஸ்லிம் படையினருக்கு உதவி செய்தான். அந்த சம்பவத்தை அடுத்து வரும் திரு வசனத்தின் மூலம் அல்லாஹ் நினைவூட்டுகின்றான்.   
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُ‌وا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْ‌سَلْنَا عَلَيْهِمْ رِ‌يحًا وَجُنُودًا لَّمْ تَرَ‌وْهَا (الأحزاب/9)
“நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது படைகள் வந்த சமயத்தில் காற்றையும், உங்கள் கண்ணகளுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம்தான் ஏவினோம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருந்தான்.” (33/9)
அது மாத்திரமல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்த எத்தனையோ சிறு படைகள் தங்களைவிட பலம் பொருந்திய பெரும் படைகளை வெற்றி கொண்டுள்ளன. அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான்.இதனை அல்லாஹ்வின் திருவாக்கு இவ்வாறு குறிப்பிடுகின்றது.  
كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَ‌ةً بِإِذْنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِ‌ينَ ﴿٢٤٩ /البقرة)
“அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் வெற்றி பெற்று இருக்கின்றனர். அல்லாஹ் பொறுமையாளர்களுடனே இருக்கின்றான்.” (2/249)
மேலும் பத்ர் யுத்தத்தின் போது, இஸ்லாமிய சிறு படை, காபிர்களின் பெரும் படையை வென்றது. இது இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதற்குத் தகுந்த ஆதாரமாகும். இந்த சம்பவத்தை அல்லாஹ் குறிப்பிடும் போது, آية - அத்தாட்சி, بينة- ஆதாரம், فرقان- தீர்ப்பு எனும் சொற்றொடர்களைப் பயன் படுத்தியிருப்பதைக் காணலாம். இங்கு பத்ர் சம்பவத்தைக் குறிப்பிடும்  வசனங்களைக் கவனியுங்கள்.
قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا ۖ فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَ‌ى كَافِرَ‌ةٌ (آل عمران/13)
“சந்தித்துக் கொண்ட இரு சேனைகளில் மெய்யா கவே உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. ஒரு கூட்டம் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியக்கூடியதாகவும், மற்றொரு கூட்டம் இறை நிராகரிப்பாளர்களாகவும் இருந்தனர் (3/13)

إِن كُنتُمْ آمَنتُم بِاللَّهِ وَمَا أَنزَلْنَا عَلَى عَبْدِنَا يَوْمَ الْفُرْ‌قَانِ  (الأنفال/41)
“يوم الفرقان  - தீர்ப்பளித்த நாளில் நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்ததையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால்” (8/41)  
لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَن بَيِّنَةٍ (الأنفال/42)
“அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்கா கவும், பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்துடன் தப்பித்துக் கொள்வதற்காகவுமே அல்லாஹ் இவ்வாறு செய்தான்.”(8/42)
எனவே முஃமினான ஒரு சிறு கூட்டம் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காபிரான பெரும் படைகளை தோற்கடிக்க முடியும் என்பதில் ஐயமில்லை. இது முதல் யுத்தமான பத்ர் போரில் நிரூபனமானது. இப்போரில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய உதவியை இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
 وَلَقَدْ نَصَرَ‌كُمُ اللَّهُ بِبَدْرٍ‌ وَأَنتُمْ أَذِلَّةٌ (آل عمران123  (
“பத்ரில் நீங்கள் சிறுதொகையாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்.”(3/123)
إِذْ يُوحِي رَ‌بُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا ۚ سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُ‌وا الرُّ‌عْبَ  (الأنفال/12)
“உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன், ஆகவே நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப் படுத்துங்கள். நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்க ளில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம்” என்று அறிவித்ததை நினைவு கூர்ந்து பாருங்கள்” (8/12)
அல்லாஹ்வின் உதவியை முஃமின்கள் அடைவதற்கு அவர்களின் பண்புகள் எவ்வாறு அமையப் பெற்றித்தல் வேண்டும் என்பதையும், அவர்களின் பண்பு மற்றையவர்களின் பண்புகளிலி ருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கும் என்பதையும் பின் வரும் வசனங்கள் தெளிவு படுத்துகிறான்.
وَلَيَنصُرَ‌نَّ اللَّهُ مَن يَنصُرُ‌هُ ۗ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ (40/الحج)
“யார் அல்லாஹ்விற்கு உதவி செய்கின்றாரோ அவருக்கு நிச்சயம் அல்லாஹ் உதவி செய்கிறான்.” (22/40)
الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْ‌ضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُ‌وا بِالْمَعْرُ‌وفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ‌ ۗ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ‌ ﴿٤١/الحج)
“இவர்கள் எத்தகையவர்கள் என்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகை யைக் கடைப்பிடித்து வருவார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையானவைகளை ஏவி தீமையைத் தடுப்பார்கள். சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.(22/41)
முற்றுகையின் போது அல்லாஹ் அளித்துள்ள நிவாரணம் பற்றி இது வரை நாம் சுட்டிக் காட்டினோம். அவ்வாறே முஸ்லிம்களுக்கு எதிராகக் காபிர்களும் முனாபிக்குகளும்  பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவார் களாயின், அவ்வமயம் பலமான ஈமானும்,தூய எண்ணத்துடனும் அல்லாஹ்வின் பால் கவனம் செலுத்துவது அதற்கு நிவாரணமாக அமையுமென ‘அல்முனாபிகூன்’ எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டியுள்ளான்.
  هُمُ الَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُوا عَلَى مَنْ عِندَ رَ‌سُولِ اللَّهِ حَتَّى يَنفَضُّوا ۗ (المنافقون/7)
“இவர்கள்தாம் கூறுகின்றனர் “அல்லாஹ்வுடைய தூதருடன் இருப்பவர்களுக்கு நீங்கள் யாதொரு தானமும் செய்யாதீர்கள். அப்படியானால் அவர்கள் அவர்களை விட்டும் விலகி விடுவார்கள்” என” 63/7)
وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْ‌ضِ وَلَـكِنَّ الْمُنَافِقِينَ لَا يَفْقَهُونَ ﴿٧/المنافقون﴾
(ஆயினும்) வானங்கள், பூமியில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே. எனினும் இதனை நயவஞ்சகர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.” (63/7)
இவ்வசனத்திள் வானத்திலும் பூமியிலும் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றபடியால், முஸ்லிம் களை இஸ்லாத்தை விட்டும் அப்புறப்படுத்த முனாபிக்குகள் திட்டமிட்ட பொருளாதார தடைகளை கொண்டு வந்த போதிலும் அது சாத்தியப்படமாட்டாது. இதனை முனாபிக்குகள் அறியாதவர்களாகவே இருக்கின்றனர் என்பதை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் அறிவிக்கின் றான். மேலும் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர் களுக்கு எவ்வாறு உணவளிப்பான் என்பதை அடுத்து வரும் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَ‌جًا ﴿٢ /الطلاق)
“எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார் களோ, அவர்களுக்கு  அவன் ஒரு வழியை ஏற்படுத்தித் தருவான்.(65/2)
وَيَرْ‌زُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ (الطلاق3 )
 “அன்றி அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு உணவளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ அவர்களுக்கு அவனே போதுமானவன்.”(65/3)
அடுத்து வரும் வசனம் இதனை மேலும் தெளிவுபடுத்துகிறது
وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِن فَضْلِهِ إِن شَاءَ ۚ  (التوبة/28)  
“வறுமை வந்து விடுமோ என நீங்கள் பயந்தீர்களா யின், அல்லாஹ் நாடினால் அதிசீக்கிரத்தில் தன் அருளைக் கொண்டு உங்களை செல்வந்தர்கள் ஆக்கி விடுவான்.” (9/28)
    பத்தாவது விடயம்: உள்ளங்கள் ஒன்று படாமை
உள்ளங்கள் ஒன்றுபடாமைக்கும், சமூகம் பிளவு பட்டிருப்பதற்கும் காரணம் மனிதன் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமையே என்பதை ‘அல்ஹஷ்ர் அத்தியாயத்தில் பின் வரும் வசனம் தெளிவு படுத்துகின்றது.
   تَحْسَبُهُمْ جَمِيعًا وَقُلُوبُهُمْ شَتَّى ۚ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُونَ ﴿١٤/الحشر﴾
“அவர்கள் அனைவரும் ஒன்று பட்டிருப்பதாக நீங்கள் எண்ணுகின்றீர்கள். ஆனால் அவர்களுடைய உள்ளங்கள் சிதறிக்கிடக்கின்றன.  மெய்யாகவே அவர்கள் அறிவற்றவர்கள் என்பது தான் இதற்குக் காரணமாகும்.” 59/14)
வஹியின் மூலம்தான் அறிவின் பலவீனத்தை அகற்றி அறிவுக்கு ஒளியூட்டவும் முடியும். ஏனெனில் மனித அறிவின் மூலம் அறிய முடியா நலன்களை புரிந்து கொள்ள வஹியின் மூலமே வழிகாட்ட முடியும். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்,
)  أَوَمَن كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورً‌ا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَن مَّثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِ‌جٍ مِّنْهَا ۚ (الأنعام/122)
“மரணித்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து, மனிதர் களுக்கிடையே நடமாடுவதற்குரிய ஒளியைக் கொடுத்தோம் அவன் அதனைக் கொண்டு நடமாடினான். இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமல் இருப்பவர் இதற்கு சமமாவாரா? (6/122(
இறந்துபோன உள்ளத்திற்கு ஈமானின் ஜோதி புத்துயிர் அளிக்கின்றது, அது செல்ல வேண்டிய பாதையில் ஒளியையும் தருகின்றது என்பதை இத்திரு வசனம் தெளிவு படுத்துகிறது. மேலும் ஒரு வசனத்தில்.  
أللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِ‌جُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ‌ (البقرة/257)
“அல்லாஹ்வே இறைநம்பிக்கையாளர்களின் பாது காவலன், அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகின்றான்.” (2/257)
أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَ‌اطٍ مُّسْتَقِيمٍ ﴿٢٢/الملك﴾
“முகம் குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் செல்பவன் அடைந்துகொள்வானா?
இவ்வாறு சமூகத்தில் நிலவும் பிளவுகள் நீங்கி உள்ளங்கள் ஒன்றுபட்டு ஐக்கியத்துடன் வாழ வஹியின் அறிவு அவசியம் என்பதை உணர்த்தும் பல திரு வசனங்கள் இருக்கின்றன.
எவ்வாறாயினும் மனித நலன்களின் மீது அக்கறையுள்ள உலகு மூன்று விடயங்களின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.
குழப்பத்தின் மூலவேர்களை ஒழித்தல்
சமூகத்தின் அத்தியாவசிய விடயங்களை நிறைவேற்றுவதன் மூலம் இந்த இலக்கை அடையலாம். முன்னர் குறிப்பிட்ட மார்க்கம், உயிர், சிந்தனை, பரம்பரை, சுய கௌரவம், செல்வம் எனும் ஆறு விடயங்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
நலனுக்கான வழிகளை ஏற்படுத்துதல்
வியாபாரம், குத்தகை போன்ற கொடுக்கல், வாங்கல் போன்ற மக்கள் நலனுடன் தொடர்புடைய பொதுத் தேவைகளை மக்கள் தமக்கிடையே சட்டபூர்வாக பரிமாறிக் கொள்வதற் கேற்ற சூழலை ஏற்படுத்துதல்.
நல்லாழுக்கத்தையும், நல்ல பழக்க வழக்கங்களை யும் கட்டியெழுப்பல்
இயற்கையாக மனிதன் மெருகூட்டும் காரியங்களை ஆர்வமூட்டி அசுத்தமான காரியங்களைத் தடை செய்தல், ஏழை பந்துக்களுக்கு தர்மம் செய்வதைக் கட்டாயப் படுத்தல் போன்ற விடயங்களும் இதில் அடங்கும்.
இஸ்லாத்தின் நேரிய வழிகாட்டலுக்கமைய வாழப் பழகிக் கொண்டால் இவற்றைப் பேணி நடப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது. ஏனெனில் இஸ்லாத்தின் சட்டங்கள் மனிதனால் உருவாக்கப் பட்டவை அல்ல, அவை அல்லாஹ்வால் உருவாக்கப்படவை.
الر‌ ۚ كِتَابٌ أُحْكِمَتْ آيَاتُهُ ثُمَّ فُصِّلَتْ مِن لَّدُنْ حَكِيمٍ خَبِيرٍ‌ ﴿١/هود﴾
“அலிஃப் லாம் றா. இது வேத நூலின் உறுதி செய்யப்பட்ட வசனங்கள், இவை அனைத்தும் அறிந்த ஞானவானிடமிருந்து  விவரிக்கப்பட்டன.” (11/1)
وصلى الله على محمد وعلى اله وصحبه أجمعي


       
          

 

 


Contents


الصفحة    العنوان    م
1    ஏகத்துவம்    1
    நல்லுணர்வுகளை ஏற்படுத்துதல்    2
    நற்கருமங்களுக்கும் அதுவல்லாதவற்றுக்கும் இடையே உள்ள     வேறுபாடுகளை விளக்கல்.    3
    ஷரீஆ சட்டங்களை விடுத்து ஏனைய சட்டங்களை அமுல் படுத்துதல் குறித்து    4
    சமூகத்தில் மனிதனின் நிலை    5
    பொருளாதாரம்    6
    அரசியல்    7
    முஸ்லிம்கள் மீதான காபிர்களின் ஆதிக்கம்.     8
    காபிர்களின் எதிரில் முஸ்லிம்களின் பலவீன நிலை.    9
    உள்ளங்கள் ஒன்று படாமை    10
        11
        12
        13
        14
        15