உத்தம ஸஹாபாக்கள் மகிமையும்

ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.

உத்தம ஸஹாபாக்கள் மகிமையும்

அவர்கள் பால் நம்மீதுள்ள கடமையும்
>தமிழ்-Tamil تاميلي ->
        

கலாநிதி ஸாலிஹ் பின் அப்துல் அஸீஸ் பின் ஸிந்தீ




அஷ் ஷெய்க் முபாரக்
மொழி பெயர்த்தவர்
ஜாசிம் இப்னு தஇயான்-  முஹம்மத் அமீன்
மீளாய்வு செய்தவர்

 
حقوق الصحابة رضي الله عنهم على الأمة

        
د. صالح بن عبد العزيز بن عثمان سندي



ترجمة: الشيخ أحمد مبارك محمد مخدوم
مراجعة: جاسم بن دعيان ومحمد أمين

 
உத்தம ஸஹாபாக்கள் மகிமையும்

அவர்கள் பால் நம்மீதுள்ள கடமையும்

 

 

கலாநிதி ஸாலிஹ் பின் அப்துல் அஸீஸ் பின் ஸிந்தீ
அகீதா துறை போதனாசிரியர்
 இஸ்லாமிய பல்கலைக் கழகம் - மதீனா

 

 

 

 

 

முன்னுரை
அதிக மன்னிப்பை வழங்கும் சகலரையும் மிகைத்த அல்லாஹ்வுக்கே சர்வ புகழும் உரித்து. அவன் தனித்தவன் அடக்கியாள்பவன். அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன் நபி மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. மேலும் அன்னாரது தூய குடும்பத்தார் அன்ஸாரிகள் முஹாஜிர்களைச் சார்ந்த தோழர்கள் மீதும் உண்டாவதாக.
நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் நினைவுப்படுத்தப்படுவதன் மூலம் உள்ளங்கள் புலகாங்கிதம் கொள்கின்றன. சபைகளும் பாடங்கள் நடைபெறும் இடமும் அலங்காரம் பெறுகின்றன. ஏன் அவ்வாறு இருக்க முடியாது! அடியாரில் தூய்மையானவர்கள் அவர்கள். மனிதரில் சிரேஷ்டமானோர். மானிட சமூகத்துக்கென வெளிப்படுத்தப்பட்ட சிறந்த சமுதாயத்தினர் சிறப்பும் கண்ணியமும் அவர்களுக்குண்டு இஸ்லாத்தை ஏற்க முந்தியவர்களும் உயர் அந்தஸ்தைப் பெற்றோரும் அவர்களே!
இஸ்லாத்தை ஏற்பதற்கு முந்திக் கொண்டோரும் ஹிஜ்ரத்தை மேற்கொள்ள முன்வந்தோரும் அவர்களிலே உள்ளனர். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்தினர். ஹுதைபிய்யாவின் போது மரத்துக்குக் கீழ் தம் நபிக்கு “பைஅத்” எனும் சத்தியப் பிரமாணம் செய்தோரும் அவர்களிலுள்ளனர்.
அவர்களது உள்ளங்களை அல்லாஹ் தக்வாவுக்காகப் பரீட்சித்தான். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழியையும் காட்டினான். அவர்கள் அறிவுடையோராவர். அவர்கள் மீது தம்மிறைவனின் சாந்தியும் அருளும் கிடைக்கட்டுமாக. அவர்களே நேர்வழி பெற்றோர். அவர்களுக்கு அல்லாஹ் தன் அருளையும் திருப்தியையும் நிலையான சுகண்டிகளையும் நற்சோபணம் கூறியுள்ளான்.
நிச்சயமாக, அவர்களே “தக்வா” எனும் பயபக்தியைக் கடைப்பிடித்தோர். அதற்குரிய வர்களும் அவர்களே. தமது விசுவாசத்தோடு மேலும் அது அவர்களது உள்ளங்களில் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் சாந்தியை இறக்கினான். அல்லாஹ்வின் அருள் காரணமாக எந்தத் தீங்கும் ஏற்படாது மீண்டவர்கள் அவர்களே
அவர்கள் பற்றி அல்லாஹ்
 يَا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ (8-64)
“நபியே! அல்லாஹ்வும் விசுவாசங் கொண்டவர்களில் இருந்தும் உங்களைத் தொடர்ந்தோரும் உங்களுக்கு போதுமாவார்கள்” (08:64) என்று கூறியுள்ளான்.
மேலும், அவர்களது அநதஸ்தைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. (அல் அன்பால் 62)
அந்தத் தூயவர்கள், உத்தமர்கள், பரிசுத்த வான்கள் தம் உயிரையும் பொருளையும் வீடு, பிள்ளை, குடும்பத்தார் அனைத்தையும் தியாகம் செய்தவர்கள். ஊரை விட்டும் பிரிந்து தம் நேசர்களையும் வெறுத்துச் சென்றனர். ஏன் அல்லாஹ்வுக்காக தம் பெற்றோரோடும் உறவினர்களோடும் போராடினர்.
பொறுமையோடு தம் உயிரைத் தத்தம் செய்தனர். அல்லாஹ்விடம் நற்கூலி நாடி செலவிட்டனர்.. தம்மை ஒதுக்கி வாழ்ந்தோர் விடயமாக அல்லாஹ் மீது சாட்டினர். எல்லாவித நேசர், நெருங்கியோரை விடவும் இறை திருப்தியையே தேர்ந்தெடுத்தனர்.
அவர்களே அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத்தை மேற்கொண்ட முஹாஜிரீன்கள். அவர்கள் தம் வீடு, சொத்து அனைத்தை விட்டும் வெளி யேற்றப்பட்டவர்கள். அவர்கள் அருளையும் திருப்தியையும் நாடியவர்களாக அல்லாஹ் வுக்கும் அவன் தூதருக்கும் உதவுவோராக இருந்தனர். அவர்களே உண்மையானவர்கள்.
அவர்களுக்கு அடுத்து அன்ஸாரிகளாவர். அவர்கள் மற்றோருக்கு முதன்மையளிக்கும் சமத்துவம் பேணுவோராவார். அரபுக் கோத்திரத்தின் மத்தியில் மிகவும் கண்ணியத்துக்குரியோராவார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்குரிய அபயமளிக்கும் பாதுகாப்பான இடமாக அந்த அன்ஸாரிகளின் இடத்தையே எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் பொறுமையோடிருக்க பிறரிடம் கையேந்தாதோர். தேர்ந்தெடுக்கப்பட்ட மணம் கமலும் மலர்கள்.
وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
(9 سورة الحشر)
அவர்களு(டைய வருகை)க்கு முன்னரே (மதீனாவில்) இருப்பிடத்தையும் ஈமானையும் அமைத்துக் கொண்டோருக்கும் (பங்குண்டு). அவர்கள் தம்மிடம் ஹிஜ்ரத் செய்து வந்தோரை நேசிப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டவை குறித்து தமது உள்ளங்களில் எவ்வித காழ்ப்புணர்வு கொள்ளவும் மாட்டார்கள். மேலும்,  தமக்குத் தேவையிருந்த போதும் தம்மை விட (அவர்களையே) முற்படுத்து வார்கள். (59:9).
அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் தம் நடவடிக்கைகளில் அந்தத் தோழர்கள் மீது அன்புக் கொள்வதிலே லயித்துவிட்டனர். அந்தத் தோழர்களை அல்லாஹ்வுக்காக நேசிப்பதிலும் கண்ணியப்படுத்துவதிலும் பணிந்து நின்றனர். அந்தத் தோழர்கள் மீது பகைமையை வெளிப்படுத்திக் கொண்டு கோபத்தை மறைத்துக் கொண்டும் உள்ளோரை விட்டும் ஒதுங்கி விட்டனர். அவர்கள் விடயமாக அல்லாஹ் கூறிய வார்த்தையும் உண்மையாகிவிட்டது.
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّالِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
இவர்களுக்குப் பின்வருவோர் எங்கள் இரட்சகனே! எங்களையும் நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக. இன்னும் நம்பிக்கைக் கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதங்களை ஏற்படுத்தி விடாதே எங்கள் இரட்சகனே நிச்சயமாக நீ மிக்க கருணையுள்ளவனும் நிகரற்ற அன்புடையோனுமாவாய் என்று கூறுவார்கள். (ஸூரதுல் ஹஷ்ர் 10)
அல்லாஹ்வைப் போற்றி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது தோழர்கள் மீதும்  ஸலாத்தும் ஸலாமும் கூறிய பின் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோழர்கள் மீது அன்னாரது உம்மத்தவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடுகள் மகத்தானவைகள் ஆகும். அது அடிக்கடி நினைவு கூறப்பட வேண்டிய முக்கிய அம்சமொன்றும் ஆகும். விஷேடமாக மன நோய் பிடித்துள்ளவர்களால் அந்தத் தோழர்களை நோக்கி எரியப்படும் நச்சுக் கருத்துக்களுக்கெதிராக அந்தத் தோழர்கள் பற்றிய சிறப்பை அவர்கள் மீது நாம் செலுத்த வேண்டிய கடப்பாடுகளை எடுத்துக் கூறுவது இன்றியமையாததாகும். அந்த மனநோயாளர் கள் தம்மால் முடியுமான வழிகளால் எல்லாம் அத்தோழர்கள் மீது நச்சுக் கருத்தை ஊதுகின்றனர். எந்தளவென்றால் அஹ்லுஸ் ஸஷுன்னத்தைச் சேர்ந்த சிலர் அந்த நச்சுக் கருத்துக்களால் கவரப்பட்டு உத்தம ஸஹாபாக்களுக்கெதிராக “புதிய தகவல்” என்பதன் ஊடாகவும் மேலும் தகவல் சாதனங்கள் ஊடாகவும் எதிர்ப் பிரச்சாரம் செய்பவராக மாறிவிட்டார்கள். எனவே, அவர்களால் செய்யப்படும் குழப்படிகள் மிகப் பெரியதாக ஆகிவிட்டன. அல்லாஹ்வே நல்லுதவி புரிய வேண்டும்.
கண்ணியமிக்கத் தோழர்கள் மீது முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடுகளை நினைவுப்படுத்தும் வண்ணம் உள்ளடக்கிய சில பக்கங்கள் எழுதப்படுவது மிகவும் இன்றிமையாதது எனக் கருதினேன். அதுவும் சுருக்கமாகவும், தெளிவாகவும் விபரிக்கப்பட வேண்டும் எனவும் அதிலே குறித்த விடயம் பற்றி அஹ்லுஸ் ஸஷுன்னாவுடைய கொள்கைகள் ஆதாரங்களோடு உள்ளடங்கிய தாகவும் அமைய வேண்டும் என விரும்பினேன். அதற்காக அல்லாஹ்வைக் கொண்டு உதவி வேண்டினேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அதனை அங்கீகரித்து அதன் மூலம் பயனளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டவனாக எழுதினேன்.
ஸஹாபாக்கள் என்பவர்கள் யார்?
ஸஹாபி என்பவர் ஷரீஆத் பரிபாஷையில்: “தான் விசுவாசங் கொண்டு முஃமினான நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து அதே ஈமானுடன் இஸ்லாத்தில் வாழ்ந்து மரணித்தவராவார்”. இந்த வரைவிலக்கணம் சகல அறிஞர்களும் ஏகோபித்ததாகும்.
எனவே அவர்களது தோழமையை நிரூபிப்பதற்கு, அன்னாரோடு நீண்ட சகவாசம் கொள்ளுதல் யுத்தத்தில் ஈடுபடுதல் ஹதீஸ்களை அறிவித்தல் போன்ற மேலதிக நிபந்தனைகள் கூறப்படுவதில்லை. இமாம் இப்னு கஸீர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“ஸஹாபாக்கள் என்போர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முஸ்லிமான நிலையில் கண்டவராவர். அவருடைய நீண்ட சகவாசம் கொள்ளாதவராக அன்னாரது ஹதீஸ்களை ரிவாயத் (அறிவித்தல்) செய்யாதவராக இருந்தாலும் சரியே. இது முற்கால, பிற்கால அறிஞர்கள் எல்லோரதும் ஏகோபித்த கருத்தாகும்”.
(இக்திஸார் உலூமில் ஹதீஸ் 1பாகம் 491பக்கம்)
மேலும், இமாம் அஹ்மத் பின் ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்கள்  கூறினார்கள்.
“ஒரு வருடமோ, ஒரு மாதமோ, ஒரு நாளோ, ஒரு மணி நேரமோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இருந்தவர் அல்லது அன்னாரைக் கண்டவர் அவர்களின் தோழர்களை சேர்ந்தவராவார். ஒவ்வொரு வருக்கும் அவரவர் தோழமைக்கு உரிய சிறப்பு உண்டு”.
(அல் கிபாயா பீ இல்மி ரிவாயா 51 பக்கம்)
இமாம் புகாரி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தன் ஸஹீஹுல் புகாரியிலே பின்வருமாறு கூறினார்கள்:
“யார் ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தோழமைக் கொண்டார்களோ அல்லது முஸ்லிம்களில் எவரும் அன்னாரைக் கண்டார்களோ அவர் அன்னாரின் தோழர்களைச் சேர்ந்தவராவார்”.
இதுவே அரபு மொழி பொருளோடு ஒத்ததாகும். அதாவது, ஒன்றை ஒன்றோடொன்று நெருக்கமாக இருக்க வைப்பதும் சந்திக்க வைப்பதுமாகும். அதற்கு குறிப்பிட்ட எல்லை இல்லை. மேலும், அது நிகழ நீண்ட சகவாசம் அல்லது உறவு இருக்க வேண்டியதும் இல்லை.
இதனை அல்குர்ஆனிலிருந்து விளங்க முடிகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்:
فَأَنجَيْنَاهُ وَأَصْحَابَ السَّفِينَةِ وَجَعَلْنَاهَا آيَةً لِّلْعَالَمِينَ
அவரையம் அவருடன் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றி அதை அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (ஸூரதுல் அன்கபூத் 29: 15)
أَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّا أَصْحَابَ السَّبْتِ
அஸ்ஹாபுஸ் ஸப்த் எனும் சனிக்கிழமைக் காரர்களை சபித்தது போல்…ஸூரதுன் நிஸா 47
மேலும்இ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;:
“ إنكن صواحب يوسف”         بخاري 664 ومسلم 418
நிச்சயமாக நீங்கள் யுசுபின் ஆட்கள்.
மேற் குறித்த ஆதாரங்களின் மூலம் தோழமை (صحبة) ஒரு பொதுவார்த்தை எனவும் அது குறைந்தோர் அதிகமானோர் மீதும் உபயோகிக்கப்படும் என காண முடிகிறது. ஆதலால்தான் ஒரு வருடம், ஒரு மாதம், ஒரு மணி நேரம் தோழமை கொண்டிருந்தாலும் என கூறப்படுகிறது.
மேலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு குறுகிய காலம் தோழமைக் கொண்டவரையும் உள்ளடக்கும் என்பதும் மிகவும் தெளிவானதாகும். இது மாத்திரமல்ல, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முஃமினாக கண்டவருக்கும் அது கூறப்படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “ஒரு காலம் வரும் அக்காலத்தில் மனிதர்கள் போர் செய்வார்கள். அந்நேரத்தில் உங்களில் எவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்டதுண்டா என்று கேட்கப்படும். அதற்கவர்கள் ஆம் என்பர். அவர்களுக்கு திறந்து கொடுக்கப்படும். பிறகு மனிதர்களில் மற்றுமொரு கூட்டம் போரில் ஈடுபடுவர். அவர்களிடம் உங்களில் யாரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தோழமை கொண்டதுண்டா என்று கேட்கப்படும். ஆம் என்பார்கள். அவர்களுக்கும் திறந்து கொடுக்கப்படும். பின்னர் மனிதர்களில் ஒரு சாரார் போரில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கும் உங்களில் எவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தோழமைக் கொண்டவரை தோழராக கண்டதுண்டா என்று கேட்கப்படும். ஆம் என்பார்கள் அவர்களுக்கும் திறந்து கொடுக்கப்படும். புகாரி 3649 முஸ்லிம் 2532
இரண்டாவது வினாவில் தோழரைக் கண்டவரைப் பற்றி கூறப்பட்டது அதன்மூலம் காண்பவரும்
இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோழர் தான் என்பது விளங்குகிறது. (மின்ஹாஜுஸ் ஸஷுன்னா 8 பாகம்; 386 பக்கம்)
இக்கருத்தை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கிறது.
“அபுஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக பின்வருமாறு அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நான் எமது சகோதரர்களைக் காண ஆசைப்படுகிறேன் என்று கூறியதும் உத்தமத் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உங்களுடைய சகோதரர்கள் அல்லவா என்றுக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் என்னுடைய தோழர்கள். ஆனாலும் என்னுடைய சகோதரர்கள் இன்னும் வரவில்லை என்றார்கள். (முஸ்லிம் 249)
அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் மற்றுமொரு ஹதீஸ் பின்வருமாறு உள்ளது.
“நீங்கள் என்னுடைய தோழர்கள். எனினும், என்னைக் காணாமலே என்னை விசுவாசித்த வர்கள் எனது சகோதரர்களாவர்.
(முஸ்னத் அஹ்மத் 12601)
அவர்களுடைய தோழர்கள் யார் என்பதை வரையறுத்து குறிப்பிடுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காண விரும்பியவர்கள் அன்னாரது சகோதரர்கள் எனவும் அன்னாரை சந்தித்துக் கண்டவர் தோழர் என்றும் வரையறுத்திருக்கிறது. எனவே அன்னாரை விசுவாசித்து அவரைக் கண்டவர் அன்னாரின் தோழர்களைச் சேர்ந்தவராவார்.
நிச்சயமாக உத்தமத் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காபிர்களும் முனாபிக்குகளும் கண்டதைப் போன்று வெறுமனே கண்ட பாக்கியம் பெற்றவர் அல்லர். எனினும், அல்லாஹ் அந்த சிரேஷ்டமானவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காண வைத்ததோடு அவர்களை பின்தொடரவும், வழிப்படவும், அன்பு கொள்ளவும் வைத்து கண்ணியப்படுத்தினான். அவர்களை ஈமான் கொள்வதென்பதன் நோக்கம் அவர்களை முற்றிலும் ஏற்று நடப்பதாகும். அன்னாரை பகைப்பவனை பகைமை கொள்வதுமாகும். இதுவே அவர்களுடைய அந்தஸ்தை தனித்துவப் படுத்தக் கூடியதுமாகும். உண்மையிலேயே அவர்களுக் குரிய இந்த உயர்ந்த அநதஸ்தை நாம் பாதுகாத்துக் கொள்வதாகும். ஏன் அவ்வாறிருக்க முடியாது. அன்னாரை பார்ப்பது சந்திப்பது நெருங்குவது அனைத்தும் அருள் நிறைந்த ஒளிமயமான அபிவிருத்தி மிக்க ஒன்றாகும். பார்வை மங்கிய ஒருவனன்றி இவ்வுண்மையை மறுக்க மாட்டான்.
(இதன் மூலம் தற்காலத்தில் காணப்படும் சில நூதன கருத்துக்களை வெளிப்படுத்தும் அற்பர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நீண்ட தோழமை கொள்ளாதவர்கள் தோழர்கள் அல்ல என்று பரப்புவதானது ஸஹாபாக்கள் சிலர் மீது கொண்ட ஓரவஞ்சனையினால் மேற் கண்ட சிறப்பை இல்லாமல் செய்வதற்கேயாகும்.  இவ்வாறு செய்வது தெளிவான வழிகேடும் ஆதாரங்களை ஏற்காத தற்பெருமையும் முஃமின்களின் வழியை சேர்ந்து நடக்காத குணமும் சலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையை மீறலும் அவர்களின் அகீதாவை எதிர்த்து நிற்பதுமாகும்.)
உம்மத்தவர் மீது ஸஹாபாக்கள் பால் உள்ள கடமைப்பாடுகளை பத்து அம்சங்களுள் சுருக்கிச் சொல்லலாம்:
1.முதலாவது அம்சம் -    அவர்கள் மீது அன்புக் கொள்ளல்.
அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களை அல்லாஹ்வுக்காக உண்மையான நேசங் கொள்கிறவர்கள் ஆவர். யார் அவர்களை அன்பு வைத்து தலைமைக்கு ஏற்று அவர்களுக்குரிய உரிமைகளைப் பேணி அவர்களின் சிறப்பை அறிந்து நடந்து கொள்கிறார்களோ அவர்கள் விமோசனம் அடைந்தவர்களைச் சார்ந்தவர் ஆவார். மேலும்இ யார் அவர்களின் மீது கோபங்காட்டி அவர்களைத் திட்டி அவர்களின் எதிரிகள் அவர்களை எவ்வண்ணம் சம்பந்தப்படுத்தி பேசுவார்களோ அவர்கள் அழிவையே அடைந்துக் கொள்வர்.
இதற்கு ஆதாரம் பின்வருமாறு:
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّالِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
இவர்களுக்குப் பின்வருவோர் எங்கள் இரட்சகனே எங்களையும் நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக. இன்னும் நம்பிக்கைக் கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதங்களை ஏற்படுத்தி விடாதே. எங்கள் இரட்சகனே நிச்சயமாக நீ மிக்க கருணையுள்ளவனும் நிகரற்ற அன்புடையோனுமாவாய் என்று கூறுவார்கள். (ஸூரதுல் ஹஷ்ர் 10)
ஸஹீஹுல் புகாரி 3ஃ39 ஸஹீஹு முஸ்லிம் 3784 ஆகிய இரண்டு கிரந்தங்களிலும் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஈமானுக்கு அடையாளம் அன்ஸாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்துக்கு அடையாளம் அன்ஸாரிகளை வெறுப்பதாகும்.
இவ்விடயம் அன்ஸாரிகள் விடயத்தில் உள்ள கடப்பாடு என்றால் முஹாஜிரீன்கள் அதை விட உயர்வானவர்களாகும். பொதுவாக அவர்கள் எல்லோரும் சிறப்புக்குரியர்களாவர். மேலும் அவர்கள் அன்ஸாரிகள் உதவியது போன்று அல்லாஹ்வுக்காக உதவி செய்த அல்லாஹ்வின் உதவியாளர்களும் ஆவார்கள். குர்ஆன் சுன்னா அறிவிக்கும் அல்லாஹ்வுக் காக அன்பு செலுத்துவதன் சிறப்பு பற்றிய அனைத்து ஆதாரங்கள் அல்லாஹ்வும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தமத் தோழர்களையும் அன்பு கொள்வதில் அடங்குகிறது. ஏனெனில் அவர்கள் மனிதர்களில் மேலானவர்களாவர்.
இமாம் அல் தஹாவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தன் நூலிலே பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களை அன்பு வைப்போம். அவர்களை அன்புக் கொள்வதில் எவர் விடயத்திலும் எல்லை மீற மாட்டோம். அவர்களில் எவர்களை விட்டும் ஒதுங்கிக் கொள்ளவும் மாட்டோம். அவர்களை கோபிப்போரை நாமும் கோபிப்போம். அவர்களை கோபித்து கெடுதி கூறுகின்ற வர்களை நாமும் கோபிப்போம். அந்த தோழர்களை நேசிப்பது சன்மார்க்கமும் (தீனும்) விசுவாசமும் (ஈமானும்) நன்முறையில் நடப்பதும் (இஹ்ஸான்) ஆகும். அவர்கள் மீது பகைமை கொள்வது குப்ர் (நிராகரிப்பு) நிபாக் (நயவஞ்சகம்) துக்யான் (வரம்பு மீறல்) ஆகும். (அல் அகீததுத் தஹாவிய்யா பக்கம் 467)
இவ்விடத்திலே இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று மிகவும் சிறப்பாய் உள்ளது. அன்னார் கூறினார்கள்:
“நம் முன்னோர் தம் பிள்ளைகளுக்கு குர்ஆனிலுள்ள ஸூராக்களை கற்றுக் கொடுப்பது போல் அபூபக்ர், உமர் றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் மீது அன்பு கொள்வதையும் கற்றுக் கொடுப்பார்கள்”.
(ஷர்ஹ் இஃதிகாத் உஸூலு அஹ்லுஸ் ஸஷுன்னதி வல் ஜமாஅஹ் 7 பாகம் 1140 பக்கம்)
இமாம் அபூ நுஐம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தம் அல்ஹில்யா (8;338) யிலே பிஷ்ர் இப்னு ஹாரிஸ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக பின்வரும் விடயத்தை பதிந்துள்ளார்கள். அதாவதுஇ “என்னிலே உள்ள உறுதிமிக்க அமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் மீதுள்ள அன்பாகும்”.
மேலும்இ இமாம் அபூ நுஐம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷஷுஐப் இப்னு ஹர்ப் அவர்கள் வாயிலாக பின்வரும் விடயத்தை அதே நூல் 7ஃ 27 யில் பதிவு செய்துள்ளார்கள். ஷஷுஐப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ஆஸிம் இப்னு முஹம்மத் என்பவரிடத்தில் சுப்யான் தவ்ரி றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. அன்னாரின் சிறப்புக்களை ஒவ்வொன்றாக எண்ணி 15 சிறப்புக்களை கணக்கிட்டுச் சொன்னார்கள். அப்பொழுது ஆஸிம் இப்னு முஹம்மத் அங்கிருந்தவர்களிடம் நிPங்கள் சுப்யானின் சிறப்புக்களை எண்ணி முடித்து விட்டீர்களா என்று கூறிவிட்டு நிச்சயமாக நான் நீங்கள் குறிப்பிட்ட சிறப்புக்கள் அனைத்தை விடவும் ஒரு சிறப்பான விடயத்தை சுப்யானிலே காண்கிறேன். அதுதான் அவர்களது உள்ளம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோழர்கள் விடயமாக எந்தப் பொல்லாங்கும் இல்லாமல் தெளிவாக இருந்ததாகும் என்பார்கள்”.
2.    இரண்டாவது அம்சம்    -    அவர்களின் சிறப்பு நேர்மை இந்த உம்மத்தில் தூய்மையானவர்கள் நிரப்பமானவர்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் மிகவும் நெருக்கமானவர்கள் என்று நம்புவது.
இந்த உம்மத்திலே ஸஹாபாக்கள் போன்று சிறப்பிலும் நலவிலும் சரியானதைச் செய்வதிலும் சமமாக யாரும் இல்லை. இதுவே அனைத்து முஸ்லிம்கள் மத்தியிலும் உள்ள ஏகோபித்துள்ள நிலைப்பாடாகும். நூதனங்களை கூறும் அற்பர்களின் கூற்றுக்கு எந்த பெறுமதியும் இல்லை.
இமாம் இப்னுல் கையிம் ஒரு கவிதையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
 “மானுட சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பிரிவினர் ஸஹாபாக்கள் ஆவார்கள் என சன்மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துள்ளனர். அவர்கள் மத்தியில் முரண்பாடுகள் ஒன்றும் காணப்படவில்லை”. நூனிய்யா 2ஃ461.
அந்தத் தோழர்கள் மீதுள்ள சிறப்புக்களோ அதிகம் உள்ளன. அல்லாஹ்வின் வேத நூல் அல்குர்ஆனில் அவர்கள் மீது குறிப்பிட்ட பாராட்டுக்கள் நிறையவே உள்ளன. அவர்களில் காணப்பட்ட உண்மை அவர்களது சரயான ஈமான் (விசுவாசம்) கலப்பற்ற அன்பு நிறைந்த புத்திக் கூர்மை தீர்க்கதரிசனக் கருத்து அவர்களின் உபதேசத்தின் தூய்மை அமானிதத்தில் தெளிவு என்பவற்றை அறிந்த அல்லாஹ் அவர்களை அவ்வாறு அல்குர்ஆனிலே பாராட்டி விட்டான். அவற்றிற் சில பின்வருமாறு:
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿١٠٠﴾
மேலும், முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரி களில் (ஈமான் கொள்வதில்) முதலாமவர்களாக முந்திக் கொண்டோரையும், அவர்களை நற் செயல்களில் பின்பற்றியோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.  அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவன் அவர்களுக்குச் சுவனச் சோலைகளைத் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (சூரா தவ்பா 100)
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يُهَاجِرُوْا مَا لَـكُمْ مِّنْ وَّلَايَتِهِمْ مِّنْ شَىْءٍ حَتّٰى يُهَاجِرُوْا‌ ۚ وَاِنِ اسْتَـنْصَرُوْكُمْ فِى الدِّيْنِ فَعَلَيْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து தங்களது செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போரும் புரிந்தனரோ அவர்களும், எவர்களிடம் புகலிடம் அளித்து உதவியும் செய்தார்களோ அவர்கள் அனைவரும் சிலர் மற்றும் சிலருக்கு உற்ற நண்பர்களாவர். மேலும் எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யவில்லையோ அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களின் எந்த விடயத்திலும் உங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனினும் உங்களுக்கும் எந்தக் கூட்டத்தின ருக்குமிடையில் உடன்படிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு எதிராக அல்லாமல் இவர்கள் உங்களிடம் மார்க்க விஷயத்தில் உதவி கோரினால் உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவனாவான்.
(சூரா அன்பால் 72)
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اَاوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا‌ ؕ لَّهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போரும் புரிந்தனரோ அவர்களும் எவர்கள் புகலிடம் அளித்து உதவியும் செய்தார்களோ அவர்களுமே உண்மையான நம்பிக்கையா ளர்களாவர். அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான ஆகாரமும் உண்டு. (சூரா அன்பால் 74)
لَّقَد تَّابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِن بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ ۚ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَّحِيمٌ (117
அல்லாஹ் இந்த நபியையும், முஹாஜிர் களையும், அன்ஸாரிகளையும் மன்னித்து விட்டான். அவர்கள் தங்களிலுள்ள ஒரு சாராரின் உள்ளங்கள் தடுமாறும் நிலையை அண்மித்த பின்னரும், கஷ்டமான நேரத்தில் அவரைப் பின்பற்றினர். பின்னரும் அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்களுடன் பெரும் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன்.     (சூரா தவ்பா 117)
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள் காஃபிர் களிடம் கண்டிப்பானவர்கள் தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும் ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விட மிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுப வர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும். இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது. அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில் அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது. இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான். சூரா அல்பத்ஹ் 29
 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّكَفِّرَ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيُدْخِلَـكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ يَوْمَ لَا يُخْزِى اللّٰهُ النَّبِىَّ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ‌ ۚ نُوْرُهُمْ يَسْعٰى بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا‌ ۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டும் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். சூரா தஹ்ரீம் 8
وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُوْلَئِكَ هُمُ الرَّاشِدُونَ الحجراتஃ7}
 فَضْلًا مِّنَ اللَّهِ وَنِعْمَةً وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ الحجراتஃ8}﴾
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.  (இது) அல்லாஹ் விடமிருந்துள்ள அனுக்கிரமும், அருள்கொடை யினாலுமேயாகும். மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன். சூரா அல்ஹுஜ்ராத் 7, 8
وَمَا لَكُمْ أَلَّا تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا يَسْتَوِي مِنْكُمْ مَنْ أَنْفَقَ مِنْ قَبْلِالْفَتْحِ وَقَاتَلَ أُولَٰئِكَ أَعْظَمُ دَرَجَةً مِنَ الَّذِينَ أَنْفَقُوا مِنْ بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ﴿١٠﴾
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களை விட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்தி ருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.  
(சூரா அல் ஹதீத் 10)
قُلِ الْحَمْدُ لِلَّهِ وَسَلامٌ عَلى عِبادِهِ الَّذِينَ اصْطَفى آللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ
(நபியே!) நீர் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை) யா?”  சூரா அன் நம்ல் 59
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُالْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ ۚ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ ﴿١١٠﴾
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின் (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (சூரா ஆல இம்ரான் 110)
وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا ۗ وَمَا جَعَلْنَاالْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَىٰ عَقِبَيْهِ ۚ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ ۗ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ ۚ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ ﴿١٤٣﴾
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும் ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிக் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.    (சூரா பகரா 143)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவிலே காணப்படும் ஆதாரங்களில் ஸஹீஹ் முஸ்லிம் 4ஃ 2531 பின்வருமாறு:
“நட்சத்திரங்கள் வானலோகத்தில் உள்ள பாதுகாப்பளிப்பனவாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானம் எச்சரிக்கை கூறப்பட்டதாக வந்துவிடும். நான் எனது தோழர்களுக்கு பாதுகாப்பாளனாக இருக்கிறேன். நான் சென்று விட்டால் எச்சரிக்கப்பட்டது அவர்களை வந்தடையும். எனது தோழர்கள் எனது உம்மத்தில் பாதுகாவலர்கள் ஆவர். எனது தோழர்கள் சென்று விட்டால் அவர்கள் எச்சரிக்கப்பட்டது வந்துவிடும்.
இதற்கு விளக்கம் அளித்த அபுல் அப்பாஸ் அல்குர்துபீ என்பவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் இருந்து வரும் காலமெல்லாம் சன்மார்க்கம் நிலைபெற்றி ருந்தது சத்தியம் ஓங்கி இருந்தது. எதிரிகளுக்கு எதிராக வெற்றி கிடைத்துக் கொண்டே இருந்தது. தோழர்கள் சென்று விட்ட பொழுது ஆசைகள் மிகைத்து விட்டன. எதிரிகள் அடர்ந்து விட்டனர். சன்மார்க்க விடயங்கள் குறைந்துக் கொண்டே செல்கின்றன. அதனுடைய உறுதியோ குறைந்து புவியிலே அல்லாஹ்! அல்லாஹ்! என்று சொல்லும் எவரும் இல்லாத நிலைக்கு தள்ளிவிட்டனர். அதுவே இந்த உம்மத்தவர்களுக்கு விடுக்கப் பட்ட எச்சரிக்கையாகும். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது தோழர்களைத் திட்ட வேண்டாம் உங்களில் எவரும் உஹத் மலையளவு தங்கத்தை செலவிட்ட போதும் அவர்களில் ஒருவருடைய இரண்டு கையளவு (முத்) தர்மத்தின் நன்மையையோ அதன் பாதியையோ அடைந்துக் கொள்ள மாட்டீர்கள். (ஆதாரம் ஸஹீஹுல் புகாரி)
இந்த ஹதீஸஷுக்கு குறிப்புரை வழங்கிய இமாம் அல் ஷவ்கானி அவர்கள் அழகானதொரு குறிப்பை பின்வருமாறு கூறியுள்ளார்கள். குறிப்பிட்ட ஹதீஸ் மூலம் ஸஹாபாக்களில் பின்வந்தோர் விளிக்கப் பட்டுள்ளனர். உஹத் மலையளவு தங்கம் செலவிட்டாலும் ஸஹாபாக்கள் செலவிட்ட ஒரு முத்தளவோ அதன் பாதியையோ அடைந்துக் கொள்ள முடியாதென்றால் எம்மில் எவரும் உஹத் மலையளவு செலவிட்டாலும் அவர்கள் அடைந்த நன்மையின் ஒரு வித்தின் பிரமாணமாயினும் அல்லது அதில் அரைவாசியின் நன்மையையும் அடைந்துக் கொள்வோம் என நான் எண்ணவில்லை.
(இர்ஷாதுஸ் ஸாஇல் தலாயில் மஸாயி;ல் 45 பக்கம்)
மேற்குறித்த நபிமொழியோடு சேர்ந்தது தான் பின்வரும் நபிமொழியும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“மனிதர்களில் சிரேஷ்டமானவர்கள் எனது நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாவர். பின்னர் அவர்களை அடுத்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் களாவர். அதற்குப் பின்னர் அவர்களை அடுத்தவர்களாவர்”.
இவ்வாறு தன் தோழர்கள் நேர்மையானவர்கள் என்று கூறியவரும் சிரேஷ்டமானவர்கள் என்று வர்ணித்து கூறியவரும் மனோ இச்சையோடு பேசாத உத்தமத் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழரைப் பற்றி கூறிய நேர்மையும் சிறப்புக்களும் ஆகும். அன்னார் குறிப்பிட்ட நேர்மைப்படுத்தலை விட சிறந்த ஒன்று இருக்க முடியுமா. அவர்கள் கூற்றை விடவும் மேலான ஒன்று இருக்க முடியுமா.     (புகாரி 6ஃ3 3651 முஸ்லிம் 2533)
மேலும் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களைப் பற்றி பின்வருமாறு வர்ணித்துக் கூறினார்கள். இப்னு உமர், ஹஸன் பஸரி ஆகியோரும் கூறியதாக பதியப்பட்டுள்ளது.
“யாரேனும் எவரையும் பின்பற்ற நாடினால் காலஞ் சென்ற (தோழர்களை) பின்பற்றுங்கள் நிச்சயமாக உயிரோடுள்ளவருக்கு சோதனைகள் ஏற்படாமல் இருக்குமென அச்சம் தீர முடியாது. முன் சென்றவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் ஆவர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் இந்த உம்மத்தில் காணப்பட்ட சிறந்தவர்களாவர். மேலும் உள்ளந்தெளிந்த வர்களும் ஆழமான அறிவு கொண்டோரும் சிரமத்தில் குறைந்தோரும் அவர்களாவர். அந்தச் சமூகத்தினரை அல்லாஹ் தன் நபியின் தோழமைக்கும் தன் தீனை நிலைநாட்டவும் தேர்ந்தெடுத்தான். எனவே அவர்களுடைய சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய நடைமுறையை தொடருங்கள். அவர்களது நற்பண்புகளையும் மார்க்க நெறிகளையும் பற்றிப் பிடியுங்கள். நிச்சயமாக அவர்கள் நேர் வழியிலே இருந்தனர்.
இமாம் அபூஹம் அல்தானி அவர்கள் தன் கவிதையொன்றில் பின்வருமாறு குறிப்பிடு கிறார்கள்.
“நபியின் தோழர்கள் நல்லவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்ட தலைவர்கள். எம் இறைவன் அவர்களை தன்னருளால் கண்ணியப் படுத்தினான். மேலும், கண்ணியத்தையும் சிறப்பையும் அளித்து அவர்களை சொந்தப் படுத்தினான்”.
இந்த வார்த்தைகளில் கூறப்பட்டுள்ள அவர்களுடைய அழகிய பண்புகளை சிறந்த நற்குணங்களை நியாய பூர்வமாக சிந்நிப்பவன் அந்தத் தோழர்கள் அறிவு, நேர்மை, ஜிஹாத் மற்றும் நற்காரியங்கள் அனைத்திலும் முந்திக் கொண்டு உயர்வான அந்தஸ்தை அடைந்துள்ளனர் என்பதை கண்டுகொள்வான். எனவே அவ்விடயங்கள் மூலம் அவர்கள் தமக்கு முன் சென்றோரை முந்தி விட்டனர். பின்னுள்ளோரை தவறிவிட்டனர். நீண்ட காலத்திற்கு அதிகாரம் கொண்டனர். உயர்வான இடங்களின் கம்பங்களை தாண்டிவிட்டனர். எமக்கு இஸ்லாம் வந்து சேர அவர்களே காரணமாயிருந்தனர். மேலும் வெற்றியையும் ஈடேற்றத்தையும் ஈட்டிக் கொள்வதில் உள்ள அனைத்து நலவுகள், நேர்வழி, காரணம் என்பவற்றை கற்றுக் கொள்வதிலும் அவர்களே காரணமாயிருந்தனர். இந்த உம்மத் அந்தத் தோழர்களின் அறிவு நேர்மை ஜிஹாத் என்பவைகளின் தொடர் மறுமை நாள் வரை இருந்து வருவர். எவரும் அந்தத் தோழர்க ளுடைய வழி மூலம் அன்றி பயனுள்ள கல்வியையும் எந்த ஒரு தீர்ப்பையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய ஜிஹாதின் காரணமாகவும் வெற்றியின் காரணமாகவுமன்றி புவியில் எவ்விடமும் அபயமளிக்குமிடமாக ஆகவும் மாட்டாது. எந்தவொரு தலைவரோ ஆட்சியாளரோ நீதமாகவும் நேர்வழியில் இருப்பதாகவும் இருந்தால் அது அந்தத் தோழர்கள் மூலம் வந்து சேர்ந்த காரணமாகவே அன்றி வேறில்லை. அவர்கள் வாளேந்தி, நாடுகளை வெற்றிக் கொண்டனர். ஈமான் மூலம் உள்ளங்களை வெற்றிக் கொண்டனர். நேர்மை மூலம் நாட்டில் ஆட்சி செய்தனர். உள்ளங்களை அறிவு நேர்வழி என்பன மூலம் ஆட்கொண்டனர். மறுமை நாள் வரை இந்த உம்மத்தினருடைய கூலி அளவு அவர்களுக்கும் கூலி உண்டு. தமக்கென்றிருந்த கூலி;க்கு மேலதிகமாக அவர்களுக்கு அது கிடைத்தே தீரும். தன் அருளைக் கொண்டும் ரஹ்மத்தைக் கொண்டும் தான் நாடியோரை சொந்தப்படுத்திய அல்லாஹ் தூய்மையானவன்.
இவர்கள் விடயமாக இமாம் இப்னு தைமிய்யா றஹிமஹுல்லாஹ் கூறிய பின்வரும் கூற்று எவ்வளவு அழகாக இருக்கிறது.
“யார் ஸஹாபாக்கள் என்ற கூட்டத்தவரின் வாழ்க்கையை அறிவு ரீதியாக தெளிவாக அவதானித்து மேலும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பையும் சிந்தித்துப் பார்ப்பார் களாயின் நிச்சயமாக நபிமார்களுக்குப் பின் உள்ள மனிதர்களில் மிக சிரேஷ்டமானவர்கள் அந்தத் தோழர்கள் தான் என்பதை திட்டவட்டமாக அறிந்துக் கொள்வான். அவர்களைப் போன்று முன் எவரும் இருக்கவும் இல்லை. பின்னர் இருக்கப் போறதும் இல்லை. அவர்கள் இந்த உம்மத்தில் வந்த சிறந்த நூற்றாண்டைச் சேர்ந்த தூயவர்கள் ஆவர். அந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் உம்மத்துக்களில் சிறந்தவர்களும் அல்லாஹ்விடம் கண்ணியம் பொருந்திய வர்களும் ஆவர். (அல்வாஸிதிய்யா 3ஃ102)
இந்த உயர்ந்த சிறப்பிற்காக அவர்களுக்கென்றே உள்ள சிறப்பான அநதஸ்துக்காக அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் நிச்சயமாக ஸஹாபாக்கள் அனைவரும் நேர்மையான வர்கள்ள. அவர்களில் குறைக் கூறப்பட எவரும் இல்லை. அவர்களில் குற்றம் குறை ஏற்படுவதை விட்டும் அவர்களுடைய அநதஸ்தை அல்லாஹ் தூய்மைப்படுத்தி இருக்கிறான். அவர்கள் அனைவரும் நேர்மை மிகு தலைவர்களும் தளபதிகளும் ஆவர். இது அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தன் மூலம் அறியப்பட்ட விடயமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை சிறந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று தூய்மைப் படுத்தியன் மூலமும அறியப்பட்டதாகும். மேலும் அவர்கள் மனிதர்கள் மத்தியில் வெளிப் படுத்தப்பட்ட சிறப்பான உம்மத்தவராவர். எனவே அல்லாஹ் தனது நபிக்கு தோழமைக் கொள்ளவும் உதவி செய்யவும் திருப்திக் கொண்டதை விட வேறொரு நேர்மையான வார்த்தை கிடையாது. அல்லாஹ் தூய்மைப் படுத்திக் கூறிய சான்றை விடவும் வேறு சான்று கிடையாது. அதைவிடவும் நிரப்பமான ஒரு நேர்மைப்படுத்தும் வார்தையும் கிடையாது என்று அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் ஏகோபித்துள்ளனர்.
இப்னு அப்துல் பர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.:
“ஸஹாபாக்களைப் பற்றி அவர்களுடைய நிலைமையைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டியதில்லை என்று அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் ஏகோபித்த முடிவின் பிரகாரம் அவர்கள் எல்லோரும் நேர்மையானவர்களே. அவர்கள் எல்லோரும் நல்லனவற்றுக்கும் தக்வாவுக்கும் உரியவராவர். மேலும் நல்ல அனைத்து விடயங்களைக் கொண்டும் பயபக்தியோடு உள்ளவர்கள் என்று சான்று கூற மிகவம் பொருத்தமானவர்களும் தகுந்தவர்களும் ஆவார்”. (அல் இஸ்தீஆப் 1ஃ19)
3.    மூன்றாவது அம்சம் - ஆதாரங்கள் மூலம் பெறப்பட்ட வகையில் அத்தோழர்களின் சிறப்பை விசுவாசித்தல்
நிச்சயமாகஇ அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர்களிடம் உள்ள முடிவு யாதெனில் நிச்சயமாக உத்தமத் தோழர்கள் அனைவரும் சிறப்பிலே ஒன்றானவர்கள். அந்த சிறப்பில் ஏற்றத் தாழ்வு உள்ளவர்கள் சிலரை விட சிலர் சிறப்பானவர்கள். அதனால் எவரும் சிறப்பானவர் என்பதன் காரணமாக சிறப்பாக்கப்பட்டவர் குறைந்தவர் அல்ல என்பதாகும்.
பொதுவாகவே தோழர்களில் சிறப்பானவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்னமாரயம் கூறப்பட்ட 10 பேர்களாவர். அவர்கள்:
அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ என்ற சுவனலோக நன்மாராயம் பெற்ற நால்வரும் ஸஃத். ஸயீத், அப்துர் ரஹ்மான் பின் அவ்ப், தல்ஹா, ஆமிர், ஷுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவர். பத்துப் பேரில் நான்கு கலீபாக்களும் சிரேஷ்டமானவர்கள் ஆவர். கிலாபத்திலே அவர்களுக்கிருந்த அநதஸ்துப் போல் அவர்களுடைய சிறப்பின் அந்தஸ்தும் இருக்கின்றது.
அத்துஹ்பா அஸ்ஸனிய்யா ஆசிரியர் அவர்கள் பின்வருமாறு ஒரு கவிதையில் கூறுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களையும் குடும்பத்தவர் களையும் தலைமைக்கு ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் எல்லோரது சிறப்பையும் உலகெங்கும் பரத்திக் கொள்ளுங்கள். தூய அன்பை அவர்களுக்கு வழங்குங்கள். அபூபக்ர், உமர் ஆகிய இருவரின் சிறப்பையும் முற்படுத்து வதில் தீவிரம் கொள்ளுங்கள். அவ்விருவரை யும் அடுத்து உஸ்மான பின்னர் வீரர் அலீ ஆகியோருக்கும் உள்ள சிறப்பை வழங்குங்கள்.
அபூபக்ர், உமர் றழியல்லாஹு அன்ஹு ஆகிய இருவருக்கும் உள்ள அநதஸ்து மிகவும் உயர்ந்ததாகும். அவ்விருவருமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அடுத்துள்ள சிரேஷ்டமானவர்கள் ஆவர். பொதுவாகவே நபிமார்களுக்குப் பின்னுள்ள மனிதர்களில் சிறப்பானவர்கள் அவ்விருவரும் ஆவர். அவ்விருவரிலும் அபூபக்ரே முதன்மையானவர் ஆவார்.
அஹ்லுல் பைத்தைச் சேர்ந்த அபூ ஜஹ்பர் அல் பாகிர் என்ற பெரியாரது கூற்று ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். அதாவது யார் அபூபக்ர், உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பை அறியவில்லையோ அவர் சுன்னத்தை அறியாதவர் ஆவார். (அல் ஹுஜ்ஜஹ் பி பயானில் மஹஜ்ஜஹ் 2ஃ350)
இமாம் ஷஅபி றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
“அபூபக்ர், உமர் ஆகியோரை அன்பு வைப்பதும் அவ்விருவரின் சிறப்பைப் பற்றி அறிந்து வைப்பது சுன்னத்தைச் சேர்ந்ததாகும்”. (அல் ஹுஜ்ஜஹ் பி பயானில் மஹஜ்ஜஹ் 2ஃ337)
நன்மாராயம் கூறப்பட்ட ஸஹாபாக்களை அடுத்து பத்ரிலே கலந்துக் கொண்டவர்கள் பின்னர் உஹதிலே கலந்துக் கொண்டவர்கள் பின்னர் பைஅத்துல் றிழ்வான் எனும் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்துக் கொண்டோர் ஆகியோர் முறையே சிறப்பு பெறுவர். இவ்வாறே இமாம் இப்னு கஸீர், இமாம் இப்னுஸ் ஸலாஹ், இமாம் நவவி றஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்களில் ஒரு சாராரும் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஹுதைபிய்யா உடன்படிக்கையோடு தொடர்பானவர்களை உஹுதிலே கலந்துக் கொண்டோரை விட முற்படுத்தியும் மற்றும் சிலறை மாற்றியும் அகழிப் போரிலே கலந்துக் கொண்டவர்களை உஹுதுப் போராளிகளுக்கு அடுத்து சிறப்பாக்கியும் ஹுதைபி;ய்யா உடன்படிக்கையில் கலந்துக் கொண்டோரை அதற்குப் பின்னர் சிறப்புப் படுத்திக் கூறுகின்றனர். அல்லாஹ்வே யாவையும் அறிந்தவன்.) மொத்தத்தில் அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் அன்ஸாரி களை விடவும் முஹாஜிரீன்களை சிறப்பாக்கு கின்ளனர். அவ்வாறே இஸ்லாத்தில் பின்னர் சேர்ந்தோரை விட முந்தியவர்களை சிறப்பு படுத்தி பேசுகின்றனர்.
உத்தமப் பெண் தோழிகளில் கதீஜா, பாத்திமா, ஆயிஷா றழியல்லாஹு அன்ஹுன்ன ஆகியோர் முறையே சிறப்பு பெறும் மூவரும் ஆவர். அல்லாஹ் அவர்கள் எல்லோரையும் பொருந்திக் கொள்வானாக.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.:
“இந்த உம்மத்திலுள்ள சிறந்த பெண்கள் கதீஜா, ஆயிஷாஇ,பாத்திமா றழியல்லாஹு அன்ஹா ஆகியோராவார்கள். அவர்களின் சிறப்பில் ஒருவரை விட மற்றொருவர் சிறப்பு என்பதில் அபிப்பிராய வேறுபாடும் விளக்கமும் உண்டு”.     (மஜ்மூஉல் பதாயா 2ஃ481)

இங்கு நாம் ஒன்றை அவதானிக்க வேண்டும். அனைத்து அறிஞர்களும் கூறுகிறார்கள். நிச்சயமாக ஸஹாபாக்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பின் வந்த ஒருவரையொ ருவரை விட சிறப்பானவர்களாவர். இதற்கு மாறாக எவ்வாறு ஐயங்கொள்ள முடியும். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்ததன் மூலம் ஜெயம் பெற்றவர்கள். அந்தத் தோழர்கள் (அல்லாஹ்வின் பாதையில்) செலவிட்டு அடைந்த நன்மையை அல்லது இரண்டு கையளவோ அதில் பாதி நன்மையையோ பின் வந்த எவரும் உஹத் மலையளவு தங்கம் செலவிட்டாலும் அடைந்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அந்தத் தோழர்களில் தொழுகை, ஜிஹாத், ஏனைய அமல்களைப் பொறுத்து எவ்வாறிருக்குமென்று பாருங்கள். எவ்வாறு அவர்களின் உயர் அந்தஸ்தை ஐயங்கொள்ள முடியும். அவர்கள் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

وَ مَا لَـكُمْ اَلَّا تُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِيْـرَاثُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ‌ؕ لَا يَسْتَوِىْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ‌ ؕ اُولٰٓٮِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِيْنَ اَنْفَقُوْا مِنْۢ بَعْدُ وَقَاتَلُوْا‌ ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள் பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்ட வர்களைவிட அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்தி ருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.      (சூரா அல்ஹதீத் 10)

وَاعْلَمُوْۤا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِ‌ؕ لَوْ يُطِيْعُكُمْ فِىْ كَثِيْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَ لٰـكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَيْكُمُ الْاِيْمَانَ وَزَيَّنَهٗ فِىْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الرّٰشِدُوْنَۙ‏
 அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடை யே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.     (சூரா அல் ஹுஜுராத் 7)
மேலும் அவர்கள் விடயமாக எவ்வாறு ஐயங் கொள்ள முடியும். அவர்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி 3651)
خير الناس قرني
“முஆவியா இப்னு இம்ரான் என்ற பெரியாரிடம் முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்களை விட உமரிப்னு அப்துல் அஸீஸ் றஹிமஹுல்லாஹ் எங்கே என்று கேட்கப்பட்டது. அந்தப் பெரியார் இந்தக் கேள்வியைக் கண்டு கோபப்பட்டு அல்லாஹ் வின் தூதருடைய தோழர்களோடு எவரையும் ஒத்துப் பார்க்கலாகாது. முஆவியா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோழர், மருமகன், வஹியை எழுதியவர், அல்லாஹ்வின் வஹியைப் பதிவதில் நம்பிக்கையாளராக இருந்தவர் எனக் கூறினார். (தாரீக் மதீனத் திமிஷ்க் 9ஃ208)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் உத்தமத் தோழர் எவரோடும் வேறெவரையும் ஒப்பு நோக்கப்படலாமா என கேட்கப்பட்ட போது அல்லாஹ் பாதுகாப்பானாக. அப்படியானால் முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் உமரிப்னு அப்துல் அஸீஸ் றஹிமஹுல்லாஹ் அவர்களை விட சிறப்பானவர்களா என்று கேட்கப்பட்டது. ஆம்இ என் உயிர் மீது சத்தியமாக “மனிதரில் சிறந்தோர் எனது நூற்றாண்டைச் சேர்ந்தோர் ஆவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று கூறினார்கள் இமாம் அவர்கள்.
மேலும் இமாம் அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு குறைவாக தோழமை கொண்டோர் அன்னாரைக் காணாதோரை விட மேலானவர்களாவர். அவர்கள் எல்லாவித அமல்கள் மூலமும் அல்லாஹ்வை சந்தித்தாலும் கூட என்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும் அதிலே பொறுமையோடிருப்பதானது நெருப்புக் கட்டியொன்றை கையில் வைத்திருப்பது போலாகும். அக்காலத்தில் ஒருவர் அமல் செய்வது அவர்களில் ஐம்பது மனிதர் செய்யும் அமல் போன்று நன்மையடைவார் என்றார்கள். அவர்களில் ஐம்பது பேருடைய நன்மையா எனக் கேட்கப்பட்ட போது உங்களில் ஐம்பது பேருடையது போன்று என்றார்கள்”. (அபூதாவு+த் 4341)
இந்த ஹதீஸிக்குரிய விபரம் யாதெனில் குறித்த ஒரு விடயம் பற்றியதன்றி மொத்தச் சிறப்பை விடவும் என்பதல்ல. அதாவது அக்காலத்தில் கடைப்பிடிக்கும் பொறுமை ஸஹாபாக்கள் ஐம்பது பேரின் பொறுமையை விட மேலானது என்பதாகும். அதாவது ஒரு குறித்த விடயத்திலுள்ள சிறப்புப் பற்றியதாகும்.
இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
“அக்காலத்தில் ஒருவர் செய்யும் அமலின் கூலி உங்களிலுள்ள ஐம்பது பேருக்கு சமம் என்பது ஸஹாபாக்களை விட மற்றவர்கள் சிறப்பு என்பதைக் காட்டவில்லை. வெறுமனே அதிகமான கூலி கிடைக்கும் என்பது ஸஹாபாக்களுக்குரிய மொத்த சிறப்பையும் ஈட்டித் தரும் என்பதல்ல. செய்யும் அமலுக்கு ஏற்ப அதுபோன்ற அமல்களின் சிறப்பும் ஏற்றத்தாழ்வும் உண்டு. அவ்வாறு வெற்றியடைந்தோர் யாவரெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரடியாக கண்டவர்களாவர். அதிலே வேறெவரும் சமமாக மாட்டார்கள். (ஃபத்ஹு பாரி 7ஃ7)
4.    நான்காவது அம்சம்    -    அந்தத் தோழர்கள் பற்றி நலவன கூறலும் புகழ்வதும் அவர்களது நல்ல விடயங்களைப் பரப்புவதும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களையும் தலைவர்களாக ஏற்பீராக. அவர்கள் அனைவரது நல்ல விடயங்களையும் பரவச் செய்வாயாக. சந்தேகமன்றி இது அவர்களின் அன்பின் ஒரு பகுதியாகும். எவரது உள்ளம் அந்தத் தோழர்கள் மீதுள்ள அன்பினால் நிரம்புமோ அப்போது அவர்களது நாவு அந்தத் தோழர்களை போற்றிக் கொண்டேயிருக்கும். இதுவே அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினரது பண்டு தொட்டு இருந்து வரும் ஒன்றாக விசுவாசத்தில் ஒன்றெனப் பதியப்பட்டுள்ளதுமாகும்.
இமாம் முஸனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுவதாவது:
“அந்த தோழர்களது சிறப்புக்களை எடுத்துக் கூறுவதும் அவர்கள் நற்கருமங்களைப் பிரஸ்தாபிப்பதுமாகும்”.(ஷரஹுஸ் ஸஷுன்னா 87)
இப்னு அபிஸ் ஸமனைன் என்ற பெரியார் கூறினார்கள்: அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் கூறுவது யாதெனில் ஒரு மனிதன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோழர் மீதுள்ள அன்பை விசுவாசிப்பதோடு அவர்களின் சிறப்புகளைப் பரப்புவதுமாகும் என்றார்கள்.
இப்னு அபீதாவூத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தன் கவிதையொன்றில் பின்வருமாறு கூறுகிறார்:
“தோழர்கள் எல்லோர் மீதும் நல்வார்த்தையே கூறு
அவர்களை சபித்துத் திட்டி குறைகாண்பவனாய் இராதே”
5. ஐந்தாவது அம்சம்     - அந்தத் தோழர்களுக்கு அல்லாஹ்வின் அருளும், சுவனமும் உண்டென பொதுவாக சான்று பகர்வதும் அல்குர்ஆன் அஸ்ஸஷுன்னா என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு சுவனம் உள்ளது என்று சாட்சியம் பகர்வது
உத்தமத் தோழர்கள் சுவனவாசிகள் என்றே அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் விசுவாசிக்கின்றனர்.
இதனைக் குறிப்பிடும் அல்குர்ஆன் வசனங்கள் முன்னர் கூறப்பட்டன.
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏
இன்னும் முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும் அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தி யிருக்கின்றான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (சூரா தௌபா 100)
وَ مَا لَـكُمْ اَلَّا تُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِيْـرَاثُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ‌ؕ لَا يَسْتَوِىْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ‌ ؕ اُولٰٓٮِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِيْنَ اَنْفَقُوْا مِنْۢ بَعْدُ وَقَاتَلُوْا‌ ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின் செலவு செய்து போரிட்ட வர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்தி ருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.          (சூரா அல்ஹதீத் 10)
வஹீ மூலம் சுவர்க்க நற்சோபணம் சொல்லப்பட்ட உத்தமத் தோழர்கள் பத்துப் பேர். அப்துல்லாஹ் பின் ஸலாம், கைஸ் பின் ஸாபித், உக்காஷா பின் மிஹ்ஸன் றழியல்லாஹு அன்ஹும் போன்றவர்களும் சுவனவாசிகள் என அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் விசுவாசிப்பர்.
    அபூஉஸ்மான் அல் ஸாபூனி என்ற பெரியார் கூறியுள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன தோழர்களை ஹதீஸ் கலை வல்லுனர்கள் சான்று பகர்கின்றனர். நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அது தெரியாமல் கூறவில்லை. அல்லாஹ் தன் தூதருக்கு நாடிய மறைபொருள்கள் பற்றி காட்டியுள்ளான் எனவும் நம்புவர்.
6. ஆறாவது அம்சம்    -    உத்தமத் தோழர்க ளுக்காகப் பிரார்த்தித்தல், பிழைபொறுக்கத் தேடுதல், அவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியை வேண்டுதல்.
அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் உத்தமத் தோழர்களுக்காகப் பிழைப் பொறுக்கத் தேடுதல், அவர்களைப் போற்றுதல், அவர்கள் மீது அல்லாஹ் அருள் கிடைக்க பிரார்த்தித்தல் என்பன யாவும் கடமையானது என ஏகோபித்துள்ளனர்.
    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்கள் மீது அன்பும் கண்ணியமும் முஸ்லிம்களது உள்ளத்தில் நிரம்பி விடுகின்ற போது அந்தத் தோழர்க ளுக்காக வாய் நிரம்ப துஆச் செய்வதோடு அவர்களுக்காக பிழைபொறுக்கவும் நாவுகள் முன்னாகி மொழிந்து இறைஞ்சுகின்றன.
இமாம் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வரும் பொருள்பட ஒரு கவிதையில் கூறினார்கள்.:
“இரகசியத்திலும் பரகசியத்திலும் செய்ய வேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளது போல் என்றென்றும் அந்தத் தோழர்களுக்காக பிழை பொறுக்க வேண்டி நிற்பேன். எந்தளவென்றால் “றழியல்லாஹு அன்ஹு“ என்ற வார்த்தை அந்தத் தோழர்களுக்கே சொந்தமானதாக ஆகிவிட்டது. அந்தத் தோழர்களில் எந்தவொருவரின் நாமம் கூறப்பட்ட போதிலும் அங்கு றழியல்லாஹு அன்ஹு என்று கூறப்படாதிருக்க முடியாதென்று ஆகிவிட்டது. அவர்களில் எவர்களது நாமம் பிரஸ்தாபிக்கப்பட்டாலும் “றழியல்லாஹு அன்ஹு“ என்ற வார்த்தை சேர்த்தே கூறப்படுகிறது. இது முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்ததாகும். ஏனெனில் அல்லாஹ் அதுபற்றி எமக்கு அறிவித்துள்ளான்.
رضي الله عنهم ورضوا عنه
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள். (சூரா முஜாதலா 22)
இமாம் ஷவ்கானி றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
இந்த உம்மத்திலே வந்த நம்முன்னோர்களும் பின்னோர்களுமான நல்லவர்கள் ஸஹாபாக் கள் மீது றழியல்லாஹு அன்ஹு என்று கூறும் அளவு வழக்கம் அமைந்துவிட்டது. பின்வந்தோருக்கு “றஹிமஹுல்லாஹ்” என்று கூறுவதும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்பதும் வழமையாகிவிட்டது. அல்குர்ஆன் எமக்கு இவ்விடயமாக பின்வருமாறு வழிகாட்டியுள்ளது.
وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.     (சூரா அல் ஹஷ்ர் 10)
7.    ஏழாவது அம்சம்     - உத்தமத் தோழர்களில் வெளிப்பட்ட தவறுகள் பற்றி வாய் மூடி இருப்பது அவ்வாறான உணர்வுகளின் போது பார்வையைத் தாழ்த்தி நடந்து கொள்வதும்
அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் ஷீரீஅத்தைக் கடைப்பிடிக்கும் நடு நிலைமை வாதிகள், உண்மைக்குப் புறம்பாகவோ அளவு மீறியோ நடந்து கொள்ளாதவர்கள். ஆதலால் தான் உத்தம ஸஹாபாக்களின் உயர் அந்தஸ்தை நம்புகின்றனர். அதன் மூலம் அந்தத் தோழர் பாவங்களை விட்டும் முற்றிலும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்ற கருத்தைக் கொள்ளாதவர்கள். அவர்கள் நேர்மையானவர்கள் என்று கூறப்படுவதால் தவறே செய்யாதவர்கள் என்பது பொருளல்ல. அவர்களுக்கு தவறு ஏற்படலாம். எனினும் அவர்களுக்கேற்படும் தவறு மற்றவர்களால் நிகழும் தவறோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இதனை ஸஹாபாக்களுடையவும் ஏனையோருடையவும் வரலாறை அறிந்தோர் புரிந்துக் கொள்வர்.
மேலும், அவர்களால் நிகழ்ந்ததாகக் கூறப்படும் தவறுகள், பாவங்கள் என்பன கூட்டிக் குறைத்து அல்லது ஆதாரமின்றிக் கூறப்பட்டவையாகும். அவற்றில் அதிகமானவை தள்ளிப் போட வேண்டியதாகும் என இமாம் அபூநுஐம் அவர்கள் ஸியரு அஃலாமின் நுப்லா (10ஃ93)ல் குறிப்பிடுகிறார்கள். அல்லது அவை சரியெனக் கொள்ளப்பட்டாலும் அதனை நல்லவிதமாகப் பார்க்க இடமுண்டு. அவ்வாறு நல்லதொரு வகையில் சுமத்துவதே பொருத்தமாகும்.
எந்தவொரு முஸ்லிமும் மற்றொரு முஸ்லி மின் சொந்த விடயங்களில் நல்லெண்ணம் கொண்டு பார்க்க வேண்டுமென்று இருக்கும் போது முஃமின்களின் தலைவர்களான உத்தமத் தோழர்கள் விடயமாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமெனப் பாருங்கள்.
இவ்விடயமாக உள்ள பலவீனமான நிலை யாதெனில் அந்த ஸஹாபாக்கள் மத்தியில் நிகழ்ந்தவை வலிந்துரை காரணமாக அன்றேல் மறதி, கவனயீனம் காரணமாக அதுவுமின்றேல் அவர்களது “இஜ்திஹாத்” எனும் முடிவு பெற முயன்றதன் காரணமாக நிகழ்ந்ததெனக் கொள்வதாகும். அவ்வாறு முயன்றவர் ஒனறு அல்லது இரண்டு கூலியைப் பெற்றுக் கொள்வார்.
எது எவ்வாறாயினும் ஸஹாபாக்கள் மூலம் நிகழ்ந்த குற்றங்கள் எனப்படுபவை ஐந்து விடயங்களில் உள்ளடங்கலாம்.
1.    தவறிலிருந்து அவர்கள் பிழை பொறுக்கத் தேடுதல், பாவத்துக்காக தவ்பா செய்வதில் தீவிரம் காட்டுபவர்கள் ஸஹாபாக்கள் தான் என்பது எவருக்கும் மறைவான ஒன்றல்ல. “நிச்சயமாக தன் பாவத்திலிருந்து பிழை பொறுக்கத் தேடுபவன் குற்றமிழைக்காதவன் போலாவான்” (2;1419) என்ற ஹதீஸ் அறியப்பட்டதாகும்.
2.    செய்த பாவத்தை விட நன்மைகள் கூடிய கருமங்களை செய்திருப்பார்கள். நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். ஸஹாபாக்களது நன்மையோ மகத்தானது. அதற்கான கூலியும் பெரியது, மகத்தானது. இது பற்றி முன்னர் விபரமாகக் கூறப்பட்டது.
3.    இஸ்லாத்தை முதலில் ஏற்றுக் கொண்டோர் என்பதற்காக அவர்கள் மன்னிக்கப் படலாம். பத்ரிலே பங்கு கொண்டோர் விடயமாக கூறிய செய்தி (ஸஹீஹுல் புகாரி 3007யில்) பதிவாகியுள்ளது. அல்லாஹ் “பத்ர்” வாசிகளைப் பார்த்து “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்” என்று கூறினான்.
4.    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்தின் காரணமாக மன்னிக்கப்படக் கூடும். ஓரிறைக் கொள்கையோடு அல்லாஹ்வுக்கு யாதொன்றை யும் இணை கற்பிக்காதவர் தனது ஷபாஅத்தை அடைந்துக் கொள்வார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதன்படி ஓரிறைக் கொள்கையாளர்களுக்கே இந்த வெகுமதி என்றால் ஓரிறைக் கொள்கையாளர்களின் தலைவர்களான ஸஹாபாக்களுக்கு எப்படி இருக்குமெனப் பாருங்கள்.
5.    உத்தமத் தோழர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலேற்பட்ட சோதனைகள் காரணமாக அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். சோதனைகள் பாவங்களுக்கு குற்றப் பரிகாரமாகும் என்பது ஷரீஅத் கூறும் பொது நியதியாகும்.
நிச்சயமாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் அடிப்படை நோக்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களைப் பொறுத்தவரை தம் உள்ளம் தெளிந்தவர்கள். அந்தத் தோழரைப் பொறுத்து நாவடக்கிக் கொண்டிருப்பர் ஸஹாபாக்களது குற்றம் குறைகள் பற்றி முஸ்லிமின் நாவும் மனமும் ஓய்ந்திருக்க வேண்டும் என்பதே. அவர்களைக் குறை காண்பதோ குற்றம் கூறுவதோ இந்த நேரான வழியிலிருந்து பிரழ்வதே அன்றி வேறில்லை என்பதுவே அஹ்லுஸ் ஸ}ஷுன்னாவின் அடிப்படை.
சுப்யான் இப்னு உயைனா றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “அல்லாஹ்வின் தோழர்கள் விடயமாக ஒரு வார்த்தையேனும் கூறியவன் மனோஇச்சைக் காரன் ஆவான். (ஷரஹுஸ் ஸஷுன்னா-75)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். “உத்தமத் தோழர்களில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு காரியத்தை வைத்து அவர்களில் எவரை யேனும் குறை கண்டால் அல்லது அவர்கள் மீது கோபம் கொண்டால் அல்லது அவர்களது குற்றங்குறைகள் பற்றிப் பேசினால் அவன் ஒரு “பித்அத்” வாதி. எதுவரையெனில் அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்துக்காக துஆச் செய்து அந்தத் தோழர்கள் விடயமாக இவனது உள்ளம் தெளிவாகும் வரை அவன் நூதன பித்அத் காரனேயாவான்.
(ஷர்ஹ் உஸூலு அகீதத்தி அஹ்லிஸ் ஸஷுன்னா 1ஃ69)
8.    எட்டாவது அம்சம்    -    உத்தமத் தோழர்கள் மத்தியில் நிகழ்ந்த விடயங்களைப் பற்றி அமைதி காத்தலும் அவ்விடயங்களில் ஆழமாக செல்லாதிருப்பதும்
உத்தமத் தோழர்கள் மத்தியில் சில சமயங்களில் இருந்த பிரச்சினைகளை, யுத்தம். கருத்து முரண்பாடு, பகைமை போன்றவற்றில் ஒரு முஸ்லிம் அவற்றை புறக்கணித்து அவ்விடயங்களில் மூழ்காமால் இருப்பது கடமையாகும். இமாம் இப்னு ரஸ்லான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு ஒரு கவிதையில் கூறியுள்ளது போன்று நாம் நடந்து கொள்ள வேண்டும்.
“ தோழர் மத்தியில் நிகழ்ந்தன பார்த்து வாய் மூடி இருப்போம்
அவர்களுக்குரிய இஜ்திஹாதின் (முயற்சி) கூலி உண்டன நிறுவுவோம்”
அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத் அனைவருடைய எல்லாக் கிரந்தங்களிளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்கள் மத்தியில் நிகழ்ந்த விடயங்கள் பற்றி ஆழ்ந்து கவனிப்பதை ஏகோபித்து தடுத்துள்ளனர்.  மேலும், அவையனைத்தும் அவர்களுடைய முயற்சியின் பிரகாரம் நடந்தன என்றும் ஒன்றோ இரண்டோ கூலிகள் அதற்கு உண்டு என்றும் நம்புவதோடு மேற்கூறப்பட்ட படி அவ்விடயங்களிலிருந்து தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
நழ்மு அல் ஜவ்ஹரதுல் ஃபரீதா பீ தஹ்கீகில் அகீதா என்ற பாடல் தொகுப்பின் 239வது பாடல் பின்வருமாறு கூறுகிறது.
“தோழர் மத்தியில் நிகழ்ந்த பிரச்சினைகளில் வாய் மூடி இருப்பதே கடமையாகும். அவர்கள் ஒவ்வொருவரும் முயற்சி (முஜ்தஹித்) செய்தவர்களே. பின்வரும் சில விடயங்கள் இவ்விடயங்களில் நமக்கு வழிகாட்டுகின்றன.
1)    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கு வழிப்படல். அன்னார் கூறினார்கள்: “எனது தோழர்கள் பற்றி கூறப்பட்டால் வாய் மூடி இருங்கள். (தபரானி 1427)
2)    அவர்கள் மத்தியில் நிகழ்ந்த விடயமாக பேசப்படுவது அறிவு ரீதியாகவோ அமல் ரீதியாகவோ எந்தவொரு பயனையும் எதிர்பார்க்கப்பட முடியாது. ஒரு முஸ்லிமின் இஸ்லாமிய நல்லொழுக்கங்களைச் சேர்ந்தது தான் அவனுக்குத் தேவையில்லாவற்றை விட்டு விடுவது. (முஸ்னத் அஹ்மத் 1737) மேலும், ஸஹாபாக்கள் மத்தியில் நிகழ்ந்த யுத்தமும் பிரச்சினைகளும் அவர்களின் இஜ்திஹாதின் வெளிப்பாடாகும். அவர்களின் ஒவ்வொரு சாராரும் தன் கருத்தை சத்தியம் எனக் கண்டு அதற்கென முயன்றனர். அது வஞ்சகத்தால் அல்லது தரக் குறைவால் நிகழ்ந்ததல்ல. எவ்வாறெனில் ஒரு நீதவான் ஒருவரை ஒழுக்க நெறிப்படுத்துவதற்காக தண்டிப்பதற்கு ஒத்ததாகும். அவர்கள் பற்றி அந்நிகழ்வுகளின் பின்; அவர்களுயை உள்ளத்திலிருந்து பகைமைகள் நீங்கியதாக எண்ணுவதுமாகும். அவர்களுக்குப் பின்னால் வந்தோருக்கு அவர்கள் விடயமாக என்ன இருக்கும். அவர்களிலே குறையுமில்லை. வெறுப்புமில்லை. உமர் இப்னு அப்துல் அஸீஸ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எவ்வளவு அழகான வார்த்தை கூறினார்கள் என்று பாருங்கள்.
“மேற்குறித்த உத்தம ஸஹாபாக்களின் இரத்தங்களை அல்லாஹ் பரிசுத்தப் படுத்தினான். என் நாவை அவர்கள் விடயமாக பேசி அழுக்குப் படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை”.    (ஹில்யத்துல் அவ்லியா 9ஃ114)
3)    அவர்கள் விடயமாக குறை பேசுவதானது எந்த புகழையும் தேடித் தராத இறுதி முடிவின் பக்கமே கொண்டு சேர்க்கும். அதனால் நிலைத்து நின்ற பாதங்கள் சருகி விடும். அந்த ஸஹாபாக்களில் எவரைப் பற்றியேனும் உள்ளத்திலே பகைமை ஏற்பட்டுவிடும். இது மிகவும் பெரிய ஆபத்தாகும். அதை விடவும் பெரிய ஆபத்துண்டா? நுழைவாயில்களை அடைக்க வேண்டும் என்பது ஷரீஅத்தின் அடிப்படை ஒன்றாகும். இமாம் அல்பர்பஹாரி அவர்கள் தம் ஷர்ஹுஸ் ஸஷுன்னா என்ற நூலில் (பக்கம் 112,113) பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். “அந்த ஸஹாபாக்களின் எந்தவொரு சருகலையும் சண்டைகளையும் பற்றி உன் அறிவுக்கு எட்டாததை எடுத்துப் பேசாதே. அவற்றை எடுத்துக் கூறுவோனுக்கு செவி தாழ்த்தியும் விடாதே. நிச்சயமாக அவற்றை நீ செவியுற்றால் உன் உள்ளம் சாந்தி பெறாது.
அத்துர்ரத்துல் முழிய்யா என்ற நூலில் பின்வரும் கவிதை காணப்படுகிறது.:
“எவரது சிறப்புக்களையும் குறைக்கும் வண்ணம் உள்ள விடயங்களில் மூழ்கி விடாதே, அவர்கள் மத்தியில் நடந்ததை நீர் அறிந்தால் அது அவர்களின் முயற்சியின் வெளிப்பாடாக தோன்றியது. அவர்கள் நிம்மதியும் கண்டனர் என்று அறிவர். அவர்கள் பால் யாருக்கு வெறுப்பு இருக்கின்றதோ அவர்களை அல்லாஹ் கேவலப்படுத்துவனாக”.
4)    நிச்சயமாக பொய்யர்களும், நயவஞ்சகர் களும், நூதனங்களை செய்வோரும் இவ்விடயமாக அதிகமாக ஊடுருவல் செய்துள்ளார்கள். எனவே, அதிகமான பலவீனர்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டுவோர் மூலம் அறிவிக்கப்பட்டவற்றை எவ்வாறு சரியென தீர்ப்பு வழங்க முடியும்?
ஸஹாபாக்கள் மத்தியில் நிகழ்ந்த பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறும் மூலங்களான வரலாற்று நூல்கள் இவ்வாறு நிறைந்து கிடக்கும் போது -  இவை பெரும்பாலும் கண்ட நின்றவைகளெல்லாம் உள்ளடக்கியே காணப்படும். மேலும் மனிதர்கள் நம்பி ஏற்கும் அனைத்தையும் சேர்த்து சொல்லப்படுவது வழக்கமாகி விட்டது. எனவே மனோ இச்சை கொண்ட சிலருக்கு ஆசையாக உள்ள இத்தகைய விடயங்களில் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்? மேலும், இந்தத் தோழர்களின் சிறப்புக்கும் அநதஸ்துக்கும் ஏற்ற விதமாக சொல்வதற்கு கிடைப்பன மிகவும் சொற்பமாகும். இமாம் இப்னு தகீக் அல் ஈத் அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர்கள் மத்தியில் நிகழ்ந்ததாக அறிவிக்கப்படுவனவும் அவர்கள் முரண்பட்டவைகள் என்றும் கூறப்பட்டவை அசத்தியமானது பொய்யுமாகும். அதன் பால் நாம் கவனிக்க வேண்டியதில்லை. சரியென உள்ளவைகளை அழகாக வலிந்து கூறுவோம். ஏனெனில் அவர்கள் மீது அல்லாஹ் புகழ்ந்தது சகலரையும் முந்தியதாகும். மேலும் பின்னோரால் கூறப்பட்டது வலிந்துரைக்க இடம்பாடான தாகும். சந்தேகத்தோடும் ஐயத்தோடும் கூறப் பட்டது அறியப்பட்;டதையும் திட்டப்படுத்தப் பட்டதையும் அழித்து விடாது.
5)    உண்மையின் மீது நிலைத்திருப்பதானது அதிலுள்ள எந்த கஷ்டத்தையும் சிரமத்தையும் தரமாட்டாது. ஏனெனில் அவர்களது காலங்கள் பிரச்சினைகளும் யுத்தங்களும் நிகழ்ந்த காலமாக இருந்தது. இத்தகைய நிலைமைகளில் அனைத்தும் இரண்டறக் கலந்து விடுகின்றன. எனவே இவ்வாறான விடயங்களை புறந்தள்ளி விடுவதே சாலச் சிறந்தது. மேலும் யார் தன் மார்க்கத்தில் நிம்மதி பெற விரும்புகிறாரோ அவர் இத்தகைய பாவகரமான காரியத்தில் மூழ்குவதை விட்டும் ஒதுங்கிக் கொள்வாராக. அந்தத் தோழர்கள் மீதுள்ள அன்பால் தன் உள்ளத்தை நிரப்பிக் கொள்வாராக. அவர்கள் மூலம் நிகழ்ந்தவற்றிற்கு நியாயம் கூறி அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளுமாறு கூறட்டுமாக.
9.    ஒன்பதாவது அம்சம்    -    உத்தமத் தோழர்களை வெறுத்தோரை வெறுப்பதும் அவதூறுகளை மறுப்பதும் அவர்கள் விடயமாக அளவு மீறுவோரை தடுப்பதும்
இது அவர்கள் மீதுள்ள அன்பினதும் அவர்கள் பால் செலுத்தும் கடப்பாட்டின் உண்மையையும் எடுத்துக் கூறும் ஒரு பிரிவாகும்.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தாரையும் தோழர்களையும் எந்த குற்றங் குறையும் தீண்டாது தடுப்போம், மேலும் அவர்கள் மீது அன்பு செலுத்துவதை கடமை என நம்புவோம்”. (நழ்முல் ஜவ்ஹரா - 43)
இமாம் தஹாவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “அந்தத் தோழர்கள் மீது கோபங் கொள்வோரையும் அவர்களைப் பற்றி நன்மைக்கு மாறாக பேசுவோரையும் நாம் கோபங் கொள்வோம்”.
இமாம் தபரானி றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள்:
“ஈமானின் உறுதிமிக்க பிடிகயிர் யாதெனில், அல்லாஹ்வுக்காக நேசித்தலும் அல்லாஹ் வுக்காக பகைமை கொள்வதுமாகும்”. (அல் முஃஜமுஸ் ஸகீர் 624)
10.    பத்தாவது அம்சம்    -    அவர்களை பின்தொடர்வதும் அவர்கள் வழியில் நேர்வழி தேடுவதும்
அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினரின் அடிப்படை பின்வரும் அத்திவாரத்தில் நிலைத்து நிற்கிறது. அதாவது ஸஹாபாக்க ளுடைய அறிவை பின்பற்றி வரும் காலம் வரை அவர்களின் அறிவின் சிறப்பு இருந்து வரும். மேலும் அவர்களின் அமல்களின் சிறப்பு ஸஹாபாக்களின் அமல்களை பின்பற்றி வரும் காலமெல்லாம் இருந்து வரும். மேலும், அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் உத்தம ஸஹாபாக்கள் தான் அனைத்து சிறப்புகளிலும் உயர்வுகளிலும் மேம்பட்டவர்கள் என்று நம்புகின்றனர். இதனை பின்வரும் பாடல் எடுத்துக் கூறுகிறது.
“அந்தத் தோழர்களை உன்னுடைய தீனிலே பின்தொடர்வது கட்டாயமாகும். எனவே அவர்களை தொடர்வாயாக. மேலும் அல்குர்ஆன் வசனங்களையும் சூராக்களையும் (அவர்கள் விடயமாக) பின்பற்றுவாயாக.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக சுன்னாவின் அடிப்படைகளை சேர்ந்தது தான் உத்தம ஸஹாபாக்கள் வழியை கடைப்பிடிப்பதும் அவர்களை பின் தொடர்வதும்”. அவ்வாறே கலீபா; உமர் பின் அப்துல் அஸீஸ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “இந்தத் தோழர்கள் தமக்கென திருப்தி கண்டதை உனக்கென திருப்தி கொள்வாயாக நிச்சயமாக அவர்கள் அறிவோடு நிலைத்து நின்றனர். கூரிய பார்வையோடு அடங்கி நின்றனர்”.
மேலும்இ அல்லாஹு தஆலா உத்தம ஸஹாபாக்களை பின்பற்றுவோரை பின்வரு மாறு போற்றியுள்ளான்.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿١٠٠﴾
மேலும்,முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளில் (ஈமான் கொள்வதில்;) முதலாமவர்களாக முந்திக் கொண்டோரையும், அவர்களை நற் செயல்களில் பின்பற்றியோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.  அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவன் அவர்களுக்குச் சுவனச் சோலைகளைத் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (சூரா தவ்பா 100)
وَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ
(யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக. (சூரா லுக்மான் 15)
நபிமார்களுக்குப் பின் இவ்வாறு வர்ணிக்கப்படுவோரில் உத்தமத் தோழர்களே சிரேஷ்டமானவர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். சூரா தவ்பா 119
இமாம் ழஹ்ஹாக் அவர்கள் இந்த வசனம் உத்தமத் தோழர்களான அபூபக்ர் உமர் அவர்களிருவரது தோழர்கள் என்ற கருத்தையே தருகிறது. (இப்னு கஸீர் 7ஃ314)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நரகிலிருந்தும் அழிவிலிருந்தும் தப்பியோரைப் பற்றி கேட்கப்பட்ட பொழுது
 ما أنا عليه وأصحابي
நானும் எனது தோழர்களும் எவ்வழியில் இருக்கின்றோமோ அவ்வழியைத் தொடர் வோரே என்று கூறினார்கள்.
மேலும், ஹுதைபா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: “அல்குர்ஆனை ஓதும் ஜனங்களே! அல்லாஹ்வைப் பயந்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு முன் சென்றோரின் வழியைக் கடைப்பிடியுங்கள். என் ஆத்மா யார் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக சொல்கிறேன். நீங்கள் உங்களுக்கு முன் சென்ற அவர்களை பின்பற்றுவீர்களாயின் நிச்சயமாக நீங்கள் எவ்வளவோ தூரம் முந்தி விடுவீர்கள். அதனை விட்டுவிட்டு வலதும் இடதுமாக சென்று விட்டால் மிகத் தொலைவில் வழிகெட்டு விடுவீர்கள். (ஜாமிஉ பயானில் இல்மி வபழ்லிஹி 2ஃ947).
எனவேஇ ஸஹாபாக்கள் வழித் தொடர்வதே நேர்வழியும் பாதுகாப்பும் என்பதை இது அறிவிக்கின்றது.
இறுதியாக, இமாம் இப்னு கஸீர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய அழகிய வார்த்தை ஒன்றை கூறி முடிக்கிறேன். அவர்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தைக் கூறினார்கள்.
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَيْرًا مَّا سَبَقُوْنَاۤ اِلَيْهِ‌ ؕ وَاِذْ لَمْ يَهْتَدُوْا بِهٖ فَسَيَقُوْلُوْنَ هٰذَاۤ اِفْكٌ قَدِيْمٌ‏
நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பற்றி: “இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால் இவர்கள் எங்களை விட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது “இது பண்டைக்காலக் கட்டுக் கதை” எனக் கூறுவார்கள். (சூரா அல் அஹ்காப் 11)
என்ற ஆயத்திற்கு பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள். அதாவது,
“அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினர் ஸஹாபாக்கள் மூலம் நிரூபனமாகாத சகல சொல். செயல் என்பவற்றை பித்அத் (நூதனம்) என்று கூறுகின்றார்கள். ஏனெனில் நல்லவையாக இருந்தால் அந்தத் தோழர்கள் அவற்றை செய்ய முந்தி இருப்பர். எந்தவொரு நற்காரியத்தையும் அவர்கள் முந்திக் கொண்டு சென்று செய்தார்களேயன்றி அதனை அவர்கள் விட்டுவிடவில்லை.
மேலே கூறிய அனைத்தும் நிரப்பமான பத்து அம்சங்களாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உம்மத்தவர்கள் மீது உத்தம ஸஹாபாக்கள் பால் நிறைவேற்ற வேண்டிய கடமைப் பாடுகளை உள்ளடக்கி இருக்கிறது. அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தினரின் நம்பிக்கையை சுருக்கி கூறப்பட்டுள்ளது.
அத்தோழர்களின் நேர்மைக்காக அவர்கள் மீது அளவற்ற அன்பு கொள்வாயாக. அவர்களின் சிறப்பை கூறுவாயாக. அவர்களது நலவை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் திருப்தியை அவர்கள் பால் எடுத்தோதுவீராக. அவர்களது பகைவர்களை பகைப்பீராக என்று கூறுவீராக. அவர்களுக்கு சுவனலோகம் உண்டென சான்று பகர்வீராக. அவர்கள் மத்தியில் நிகழ்ந்த விடயங்களிலே ஒருபோதும் மூழ்கிவிடாதே. அவர்கள் எல்லோரையும் பின் தொடர்வீராக.
அல்லாஹ்வே சகலதையும் அறிந்தவன். அல்லாஹ் தனது அடியாரும் ரசூலும் நபியும் ஆகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் தோழர்கள், கிளையார்கள் மீதும் அவர்களை பின்பற்றியவர் அனைவர்; மீதும் தனது சாந்தியையும் சமாதானத்தையும் சொரிந்தருள் வானாக.  ஆமீன்

 
Contents

الصفحة    العنوان    م
1        1
        2
        3
        4
        5
        6
        7
        8
        9
        10
        11
        12
        13
        14
        15