முக்தஸர் அல் பிக்ஹில் இஸ்லாமி பிலவ்ஹில் குர்ஆனி வஸ்ஸூன்னா 2

1. சுத்தமும் அதன் சட்டங்களும்,
2. சுத்தம் இரு வகைப்படும்
3. நீரின் தன்மைகள், பாத்திரங்கள், மலசலம் கழித்தபின் சுத்தம் செய்யும் முறைகள் ஆகியன’

முக்தஸர் அல்பிக்ஹில் இஸ்லாமி பிலவ்ஹில் குர்ஆனி வஸ்ஸூன்னா  2



] Tamil – தமிழ் –[ تاميلي 
முஹம்மத் இப்னு இப்றாகீம் இப்னு அப்துல்லாஹ் அத்துவைஜிரி

M.S.M.இம்தியாஸ் யூசுப்



2014 - 1436
 
 
في ضوء الكتاب والسنة
(الطهارة)
« باللغة التاميلية »


محمد بن إبراهيم بن عبد الله التويجري




ترجمة :محمد إمتياز يوسف







2014- 1436
 
 
முக்தஸர் அல்பிக்ஹில் இஸ்லாமிய் பிலவ்ஹில் குர்ஆனி வஸ்ஸூன்னா
அரபு: அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு இப்றாகீம் இப்னு அப்துல்லாஹ் அத்துவைஜிரி
தமிழில் : M.S.M. இம்தியாஸ் யூசுப்

PART 02

அல்இபாதாத்
(வணக்க வழிபாடுகள்)




சுத்தமும் அதன் சட்டங்களும்.
சுத்தம் (தஹாரா): சுத்தம் என்பது உளரீதியாகவும் உடல் ரீதியாகவும்  அசுத்தங்களிலிருந்து தூய்மை அடைவதாகும்.

மார்க்க ரீதியாக சுத்தம் இருவகைப்படும்.
1.     வெளிப்படையான சுத்தம்: அதாவது நீர் மூலம் குளித்தல் அல்லது வுழு செய்தல் என்பதுடன், உடல்  மற்றும் ஆடைகளில் ஏற்படும்  அசுத்தங்களிலிருந்து சுத்தமாகி இருப்பதாகும்.
2.    உள்ரங்கமான சுத்தம்:  அதாவது  இணை வைப்பு, இறை நிராகரிப்பு,  பெருமை, தற்பெருமை, குரோதம், பொறாமை, நயவஞ்சகம், முகஸ்துதி போன்ற மோசமான பண்புகளிலிருந்து உள்ளத்தை  தூய்மைப் படுத்தி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல், இறை நம்பிக்கை,  உண்மை,  உளத்தூய்மை (இஃலாஸ்), மன உறுதி,  அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுதல் போன்ற அழகிய பண்புகள்  மூலம்  உள்ளத்தை நிரப்புவதாகும்
அதிகமாக பாவமன்னிப்பு கோரல் அதிகமாக அல்லாஹ்வை திக்ரு செய்தல் உலக மார்க்க விடயத்தில் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆய்வு செய்தல் போன்ற காரியங்கள் மூலம் உள்ளம்  பூர்ணமடையும்
அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்பது அசுத்தங்களில்  மிக மோசமான அசுத்தமாகும்.
அல்லாஹ்வுக்கு மிக மோசமான அழுக்கான நாற்றம் வீசக் கூடிதொன்றை இணை கற்பிப்பததனால் இணைவைப்பவர் அசுத்த மானவரா கிறார்.
ஒவ்வொரு இணைவைப்பாளரும் உடலாலும் உள்ளத்தாலும் அசுத்தமானவர். எனவே உடல் ரீதியான அசுத்தத்தை விட உள ரீதியான அசுத்தமே மிக மோசமானதாகும்.
இணைவைப்பாளர் வுழு செய்யவோ கடமை யான குளிப்பிலிருந்து சுத்தமடையவோ மலசலத்திலிருந்து தூய்மை பெறவோ  அசுத்தங்களைவிட்டும் தவிர்ந்து நடக்கவோ மாட்டார். செத்த பிராணி, இரத்தம், பன்றி இரைச்சி போன்றவைகளை  சாப்பிடக் கூடியவராகவும் இருப்பார்.
இவரது உடல், உளரீதியான அசுத்தங்களின் காரணமாகவே மஸ்ஜிதுல் ஹராமை நெருங்கக் கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡمُشۡرِكُونَ نَجَسٞ فَلَا يَقۡرَبُواْ ٱلۡمَسۡجِدَ ٱلۡحَرَامَ بَعۡدَ عَامِهِمۡ هَٰذَاۚ وَإِنۡ خِفۡتُمۡ عَيۡلَةٗ فَسَوۡفَ يُغۡنِيكُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦٓ إِن شَآءَۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ حَكِيمٞ  {التوبة:28}
நம்பிக்கையாளர்களே இணை வைப்பவர் களெல்லாம் அசுத்தமானவர்களே. எனவே இவ்வாண்டுக்குப் பின் மஸ்ஜிதுல் ஹராமை அவர்கள் நெருங்க வேண்டாம். இதன் மூலம் வறுமையை நீங்கள் அஞ்சுவீர்களேயானால் அல்லாஹ் நாடினால் தனது அருளிலிருந்து உங்களை செல்வந்தர்களாக்குவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன் ஞானமிக்கவன்.9:28
இணைவப்பைத் தவிர மற்ற எல்லா பாவங்களையும் மரணத்தின் பின் அல்லாஹ் மன்னிக்கின்றான்.
انَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدِ ٱفۡتَرَىٰٓ إِثۡمًا عَظِيمًا  {النساء:48}

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். அது தவிர ஏனையவற்றை தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான். எவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ நிச்சயமாக அவன் பெரும் பாவத்தையே இட்டுக் கட்டியவனா வான்.4:48
ஒரு அடியான் அல்லாஹ்வுடன் உரையாடும் முறை:
ஒரு அடியானின் இம்மை மறுமை வெற்றிக்கு உடல் ரீதியான சுத்தமும் உள்ளம் ரீதியான சுத்தமும் இன்றியமையாததாகும். 
உடலை நீரினால் சுத்தப்படுத்தி, உள்ளத்தை ஏக இறை கொள்கையினாலும்  இறை நம்பிக்கையாலும் சுத்தப்படுத்தும் போது  அவனது ஆத்மா தூய்மை பெறும். உள்ளம் அமைதியுறும். சுத்தமான இடம், சுத்தமான உடல், சுத்தமான ஆடை, சுத்தமான உள்ளம்   ஆகியவற்றின் மூலம்  அல்லாஹ்வுடன் உரையாட பூரண தகுதியுடன் தயாரான நிலையில் இருப்பான்.  இதுவே ஏக இரட்சகனான அல்லாஹ்வை மகிமைப் படுத்தும் அழகிய வணக்க முறையாகும்    இதனால் தான் சுத்தம் என்பது ஈமானின் பாதி என்றும் சுத்தம் உடையவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான் என்றும் கூறப்படுகிறது
அல்லாஹ் கூறுகிறான்
 إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلۡمُتَطَهِّرِينَ  {البقرة:222}
நிச்சயமாக அல்லாஹ் பாவமன்னிப்பு தேடு பவர்களை நேசிக்கின்றான். தூய்மையான வர்களையும் நேசிக்கின்றான்.)2:222(
عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ
 சுத்தம் என்பது ஈமானின் பாதியாகும். அல்ஹம்து லில்லாஹ் (அல்லாஹ்வுககே புகழனைத்தும்) என்று கூறுவது (மறுமையில் நன்மை தீமையை அளவிடும்) தராசை  நிரப்பும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஆறிவிப்வர்;: அபூமாலிக் அல் அஷ்ஹரி (ரலி) நூல்: முஸ்லிம்
உடல் மற்றும் ஆத்மாவின் ஆரோக்கியம்:
அல்லாஹ் ஒரு மனிதனை உடல் மற்றும் ஆத்மா வின் மூலம் படைத்துள்ளான்.
உடல் இரு வழிகளில் அசுத்தமடைகிறது. உட்பகுதியிலிருந்து வியர்வையும் வெளிப் பகுதியிலிருந்து புழுதியும் உடலை அசுத்த மாக்குகின்றது. எனவே அதன் ஆரோக்கியத் திற்கு தொடர்ந்து குளிக்க வேண்டும்.
ஆத்மா இருவழிகளில் பாதிப்புறுகிறது. பொறாமை, பெருமை போன்ற உளநோய்கள் மூலமாகவும் அனியாயம், விபச்சாரம் போன்ற வெளிப்படையான பாவங்கள் மூலமாகவும் பாதிப்படைகிறது. எனவே ஆத்மாவின் ஆரோக்கியத்திற்கு பாவமன்னிப்பை அதிகம் கோரவேண்டும். இவ்விரு வழிகளில் சுத்தமடைந்தவர் வெற்றியையும் ஈடேற்றத்தை யும் பெற்றுக் கொள்வார்.
சுத்தம் என்பது இஸ்லாத்தின் அழகிய பண்புகளி லொன்றாகும். மார்க்கம் கூறும் அடிப்படையில் சுத்தமான நீரை பயன் படுத்தியே   அசுத்தங்களை நீக்கிவிட வேண்டும். இதனை விளக்கப் படுத்துவதே  இப்பாடத்தின் நோக்கமாகும்.

நீரின் வகைகள்: நீர் இருவகைப்படும்.
1.     சுத்தமான நீர்:
எவ்வித மாற்றமுமின்றி இயற்கைத் தன்மையுடன் காணப்படும் நீராகும். உதாரணமாக மழை நீர், கடல் நீர், ஆற்று நீர், மற்றும் சுவை, உவர்ப்பு, சூடு, குளிர்  உள்ள ஊற்று நீர்.  இவையனைத்தும் சுத்தமானதும் சுத்தப்படுத்திக் கொள்வதற்கு ஆகுமானது மாகும்.
2.    அசுத்தமான நீர்:
அசுத்தத்தின் மூலம் நிறமோ சுவையோ வாசனையோ மாற்றமடைந்த நீராகும். அந்நீர் குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் சுத்தம் செய்ய லாகாது.
சுத்தத்தமும் அதன் சட்டங்களும்:
1.நீர் சுத்தமானதா, அசுத்தமானதா என்று ஒரு முஸ்லிம் சந்தேகிப்பானேயானால் அந்நீர் சுத்தம் என்பதே அடிப்படையாகும்.
2. சுத்தமானதா, அசுத்தமானதா என இரு வகையான நீர் காணப்பட்டு அங்கு வேறு நீர் இல்லாதபோது  எது சுத்தமான நீர் என கருதப் படுமோ அந்நீரையே வுழு செய்ய பயன்படுத்த வேண்டும்.
3. அசுத்தமான நீரில் காணப்படும் நிறமோ, சுவையோ, வாசனையோ தானாக மாறுமே யானால் அந் நீர் சுத்தமாகும். அல்லது இடம் மாறுவதன் மூலமாக மாறுமேயானால் அல்லது வேறு நீர் சேர்க்கப்பட்டு மாறுமேயானால் அந் நீர் சுத்தமாகும்.
4. நீரின் மூலம் சிறுதொடக்கு, பெரும் தொடக்கை சுத்தப்படுத்தலாம். நீரில்லாத சந்தர்ப்பத்தில் அல்லது நீரை பயன்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் அல்லது நீரை பயன் படுத்துவதின் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு  பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகும் சந்தர்ப்பத்தில் தயம்மும் செய்து கொள்ள முடியும்.
5.உடலிலோ ஆடையிலோ அல்லது ஒரு இடத்திலோ இருக்கும் அசுத்தத்தை நீரின் மூலம் அல்லது வேறு திரவப் பொருள் மூலம் அல்லது அவ்வசுத்தத்தை அகற்றக்கூடிய சுத்தமான தின்மப் பொருள் மூலம் சுத்தப்படுத்த முடியும்
6. சுத்தமான ஆடையா அசுத்தமான ஆடையா என சந்தேகம் ஏற்படுமாயின் அவ்விரு ஆடையைத் தவிர வேறு ஆடை அவ்விடத்தில் காணப்படாது  விட்டால்   எது சுத்தமான ஆடை என கருதப்படுகிறதோ  அந்த ஆடையை அணிந்து தொழ முடியும்.  அல்லாஹ் நாடினால் அத் தொழுகை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
7.சுத்தமான அனைத்து பாத்திரங்களையும் வுழு செய்ய அல்லது வேறு காரியங்களுக்கு பயன் படுத்த முடியும். பாத்திரம் திருடப்பட்டதாக  அல்லது தங்கம் வெள்ளியாக இருக்குமே யானால் அதனை பயன்படுத்துவது ஹராமாகும். இவற்றை மீறி ஒருவர் வுழு செய்ய அப்பாத்திரத்தை  பயன்படுத்திளால்  அந்த வுழு ஏற்றுக் கொள்ளப்படும் ஆனால் அவர் குற்றவாளியாவார்.
8. நிராகிரப்பாளர்களின் பாத்திரங்கள் மற்றும் ஆடைகளின் தன்மைகள் அறியப்படாத போது அவைகளைப் பயன்படுத்துவது ஆகுமான தாகும். காரணம் அடிப்படையில் அனைத்து பொருட்களும் சுத்தமானதாகும். அவைகளில் அசுத்தம் இருப்பதாக அறிந்தால் சுத்தமான நீரினால் கழுவியதன் பின்  விரும்பினால் பயன்படுத்த முடியும்.
9. பாதணியில் அல்லது காலுறையில் காணப்படும் அசுத்தத்தை நீரினால் அல்லது அசுத்தத்தின் தன்மை நீங்கும் வரை பூமியில் தேய்ப்பதனால் சுத்தமாக்க முடியும்.
தங்கம் வெள்ளி பாத்திரங்களை பயன் படுத்துவதன் சட்டம்
தங்கம் வெள்ளி பாத்திரங்களில் சாப்பிடுவது பருகுவது அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவது ஆண் பெண் இரு சாராருக்கும் ஹராமாகும். தங்கத்தை பெண்கள் அணிவதும் வெள்ளியை ஆண்கள் அணிவதும் ஆகுமான தாகும். ஆனால் தங்கத்தினால் பல் கட்டுதல் போன்ற அத்தியவசிய தேவை இருந்தால் அதனை பயன்படுத்துவதில் தவறில்லை.
1
عن خذيفة بن اليمان رضي الله عنه قال: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ 'لَا تَلْبَسُوا الْحَرِيرَ وَلَا الدِّيبَاجَ وَلَا تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ  وَالْفِضَّةِ وَلَا تَأْكُلُوا فِي صِحَافِهَا فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا وَلَنَا فِي الْآخِرَةِ'       متفق عليه
'சாதாரண பட்டாடையோ அலங்காரப் பட்டாடையோ அணியாதீர்கள். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில் அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கை யாளர்களான) நமக்கும் உரியனவாகும். என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஹூதைபதுல் யமானி (ரலி) நூல்: புகாரி முஸ்லிம்
عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي يَشْرَبُ فِي إِنَاءِ الْفِضَّةِ
إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّم   متفق عليه
வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்து கிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறு மிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.
இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி முஸ்லிம்)
அசுத்தங்களின் வகைகள்
வெளிப்படையான அசுத்தங்களிலிருந்து சுத்த மாக இருப்பதும் அவ்வசுத்தங்கள்  பட்ட இடங்களை அசுத்தத்தின் தன்மை நீங்கும் வரை கழுவதும் ஒரு முஸ்லிமின் மீது கடமையாகும் . அவ்வசுத்தங்கள் பின்வருமாறு:
மனிதனின் மலசலம்
உடலிலிருந்து வெளி வந்த இரத்தம்
 மாதவிடாய் மற்றும் மகப்பேற்று இரத்தம்
பாலுணர்வு இச்சை ஏற்படும் போது மர்ம உறுப்பிலிருந்து வெளிவரும் பிசுபிசுப்பான இளகிய நீர்.
இந்திரியம்
மீன், வெட்டுக்கிளி தவிர்ந்த செத்த பிராணி
பன்றி இறைச்சி
மாமிசம் சாப்பிடக் கூடாத கழுதை கோவேறு கழுதை போன்ற மிருகங்களின் மலசம் ஆகியவையாகும்.
மேலும் நாயின்  எச்சில்கள்  பட்டால் அதனை ஏழுமுறை நீரினால் கழுவி  அதில் ஒரு முறை மண் கலந்து சுத்தப்படுத்த வேண்டும்.
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ فَقَالَ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ الْبَوْلِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً فَشَقَّهَا نِصْفَيْنِ فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً قَالُوا يَا رَسُولَ اللَّهِ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ لَعَلَّهُ يُخَفِّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا متفق عليه
'நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை. மற்றொருவர் புறம் பேசித் திரிந்தார்” என்று கூறி ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் “இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என கேட்கப்பட்டபோது “அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்” என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி முஸ்லிம்
இது நபியவர்களுக்கென வழங்கப்பட்ட விஷேட சிறப்பம்சமாகும். (அன்னாருக்கு அறிவித்து கொடுக்கப் பட்டதனால் இச்செயலை இந்த மையத்திற்காக செய்தார்கள்.)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ متفق عليه
 'உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.’
அதில் முதன் முறை மண்ணீரால் சுத்தம் செய்யட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி முஸ்லிம்.


 சுத்தம் செய்வதும் கல் பிடித்தலும்
சுத்தம் செய்வது என்பது மனிதனுடைய இரு துவாரங்களினால் வெளியேறும் அசுத்தத்தை நீரினால் சுத்தப்படுத்து வதாகும்.
கல் பிடித்தல் என்பது இரு துவாரங்களினால் வெளியேறு வதை கல்லினால், அல்லது கடதாசி போன்ற வற்றினால் சுத்தப்படுத்துவதாகும்.
மலசல கூட்டத்திற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் சொல்ல வேண்டியதும் செய்யவேண்டியதும்:
    மலசல கூட்டத்திற்குள் நுழையும் போது இடது காலை முன்வைத்து பின்வரும் துஆவை ஓதுவது சுன்னத்தாகும்.
اللَّهُمَّ إِنِّي اَعُوْذُ بَكَ مِنَ الخُبُثِ والْخَبَائِثِ  متفق عليه
இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’
    மலசல கூட்டத்திற்குள்  இருந்து வெளி யேறும் போது  வலது காலை முன்வைத்து பின்வரும் துஆவை ஓதுவது சுன்னத்தாகும்.
غُفْرَانكَ
யாஅல்லாஹ்! உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றேன்.

2. சுத்தம் செய்வதும் கல்பிடித்தலும் அதன் சட்டங்களும்.
1.பள்ளிவாசலுக்குள் நுழையும்போதும் ஆடை அணியும் போதும் பாதணிகளை அணியும் போதும் மலசலகூடத்திலிருந்து வெளியேறும் போதும் வலதை முற்படுத்துவது சுன்னத்தாகும்.
மேலும் பள்ளிவாசலிலிருந்து வெளியேறும் போதும் ஆடையை கழையும் போதும் பாதணிகளை கழற்றும் போதும் மலசல கூடத்துக்குள் நுழையும் போதும் இடது காலை முற்படுத்துவது சுன்னத்தாகும்.
2.திறந்த வெளியில் அல்லது பாலை வனத்தில் மலசலம் கழிப்பவர் மனிதர்களின் பார்வைகளி லிருந்து தூரமாகி ஒரு மறைவை ஏற்படுத்த வேண்டும். அசுத்தம் படாமல் இருப்பதற்காக சிறுநீரை உறிஞ்சக்கூடிய இடத்தை தெரிவு செய்யவேண்டும்.
3. சிறு நீர் கழிக்கும் போது உட்கார்ந்து கழிப்பது சுன்னத்தாகும். அசுத்தம் தெறிக்காது,  யாரும் பார்க்கமாட்டார்கள் என்றிருந்தால் நின்ற நிலையில் சிறு நீர் கழிக்கவும் முடியும்.
4. ஆணும் பெண்ணும் தங்;களுடைய (அவ்ரத்தை) மறைக்கவேண்டிய உடல் அங்கங்களை மனிதர்களுக்கு காண்பிப்பது ஹராமாகும்.
5.குர்ஆனுடன் மலசலகூட்டத்திற்குள் செல்வது ஹராமாகும். அதனை யாராவது திருடி விடுவார்கள் என்று பயந்தால் கொண்டு செல்லலாம். அதனை பாதுகாக்கக்கூடிய எவரேனும் இருந்தால் அவரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லவேண்டும்.
6.குர்ஆன் பதியப்பட்ட  கையடக்க தொலைபேசி மடி கணணி நாடா போன்ற கருவிகளை மலசலகூட்டத்திற்குள் எடுத்துக் கொண்டு செல்லலாம். ஏனெனில் அது ஒரு மனிதனின் உடலின் உட்பகுதிக்கு ஒப்பானதாகும்.
7. அல்லாஹ்வின் பெயர் குறிப்பிடப்பட்டதை கொண்டு செல்வதில்  குற்றமில்லை. அனாலும் அதனை தவிர்ந்து கொள்வதே சிறந்தது.
8. ஒரு வெடிப்புக்குள் சிறு நீர் கழிப்பதும், வலக்கரத்தால் தனது அபத்தை தொடுவதும், சுத்தம் செய்வதும், வெட்ட வெளியில் மலசலம் கழிக்கும் முன்னர் ஆடைகளை உயர்த்திச் செல்வதும், வெறுக்கத் தக்கதாகும். மேலும் மலசலம் கழிக்கும் போது ஸலாமுக்கு பதிலளித்தலும் வெறுக்கத் தக்கதாகும். அதற்கான பதிலை அவன் சுத்தமடைந்த பின் சொல்லிக் கொள்ளமுடியும்.
9. பால்குடிக்கும் குழந்தையின் சிறுநீர் பட்ட இடத்தில் நீரை தெளிப்பதன் மூலம் அப்பகுதி சுத்தமாகி விடும். பால் குடிக்கும் பெண் குழந்தையின் சிறுநீர் பட்ட இடத்தில் நீரை ஊற்றி கழுவதன் மூலம் சுத்தப்படுத்த வேண்டும். உணவு உண்ணும் ஆண் பெண் குழந்தைகளின்  சிறுநீர் பட்ட இடத்தை நீரினால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவதிலும்  பின்னோக்குவதிலும்  உள்ள சட்டம் 
திறந்தவெளியிலோ  கட்டடங்களிலோ மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவதும் பின்னோக்குவதும் ஹராமாகும்.
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رضي الله عنه قال: قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَتَيْتُمْ الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بغَائِطٍ وَلاَ بَوْلٍ، وَلَا تَسْتَدْبِرُوهَا وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا قَالَ أَبُو أَيُّوبَ فَقَدِمْنَا الشَّامَ فَوَجَدْنَا مَرَاحِيضَ بُنِيَتْ قِبَلَ الْقِبْلَةِ فَنَنْحَرِفُ وَنَسْتَغْفِرُ اللَّهَ تَعَالَى
‘நீங்கள் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்பக்கமாகவோ பின்பக்கமோ ஆக்கி உட்காராதீர்கள். கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ முன்னோக்குங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபுல் அன்சாரி(ரலி) அறிவித்துவிட்டுத் தொடர்ந்து ‘நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்த போது அங்கே கிப்லாவுக்கு எதிரில் அமரும் விதத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். அதைவிட்டு நாங்கள் திரும்பி அமர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடினோம்' எனக் கூறினார். (நூல்:புகாரரி முஸ்லிம்
மலசலம் கழிப்பதற்கு தடை செய்யப்பட்ட இடங்கள்
பள்ளிவாசல், பாதை, பயன் தரும் நிழல், பழம் கொடுக்கும் மரம், நீரோடைகள், தோட்டங்கள், மக்கள் ஓய்வெடுக்கும் இடங்கள், வியாபார ஸ்தலங்கள் போன்ற இடங்களில் மலசலம் கழிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
கல்லினால் சுத்தம் செய்யும் முறை:
சுத்தமுள்ள மூன்று கற்கலினால் சுத்தம் செய்யவேண்டும். அம்மூன்று கற்களினாலும் சுத்தமடையாவிட்டால் மூன்று ஐந்து என்ற ஒற்றைப்படையான எண்ணிக்கையில் சுத்தம் செய்தல் வேண்டும்.
எலும்பு, உணவுக்கு எடுக்கப் படும் காய்ந்த விதைகள், மற்றும் மதிப்பளிக்கும் பொருள் ஆகியவற்றினால் சுத்தம் செய்வது தடுக்கப் பட்டுள்ளதாகும்.
மலசலத்தை நீர், கற்கள், கைகுட்டை, கடதாசி போன்றவற்றினால் சுத்தப்படுத்த முடியும். என்றாலும் நீரினால் சுத்தப்படுத்துவது மிக ஏற்றமானதாகும்.
ஆடையில் அசுத்தம் பட்ட இடத்தை நீரினால் கழுவது அவசியம். அவ்வசுத்தம் வெளிப் படையாக தென்படா விட்டால் ஆடை முழுவதையும் கழுவ வேண்டும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
உங்கள் கருத்துக்களை அறிவிக்க;
[email protected]