லுஉ லுஉ வல் மர்ஜான் – 2 21 முதல் 70 வரை

ஈமானின் கிளைகள், நபி (ஸல்) அவர்களை நேசிப்பது, அண்டை வீட்டாரையும் விருந்தினரையும் கண்ணியப்படுத்துவது, தற்கொலை போன்ற தலைப்புகள் அடங்கியுள்ளன.

லுஉ  லுஉ  வல் மர்ஜான்
21 முதல் 70 வரை
] Tamil – தமிழ் –[ تاميلي 


இமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஒன்றிணைந்து அறிவித்த ஹதீஸ்கள்

தொகுத்தளித்தவர்
அஷ்ஷெய்க் முஹம்மத் புவாத் அப்துல் பாகீய்
 தமிழில் M.S.M.இம்தியாஸ் யூசுப்








2015 - 1436
 
 
اللؤلؤ والمرجان - 2
 فيما اتفق عليه الشيخان
« باللغة التاميلية »







محمد إمتياز يوسف








2015 - 1436
 
 
PART 02
ஈமானின் (இறை நம்பிக்கையின்) கிளைகள்
    .21 حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الإِيمانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً وَالْحَياءُ شُعْبَةٌ مِنَ الإِيمانِ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 3 باب أمور الإيمان
ஈமான் அறுபது சொச்சக் கிளைகளைக் கொண்டது. மேலும் வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)
  22 - حديث ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلى رَجُلٍ مِنَ الأَنْصارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ في الْحَياءِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَعْهُ فَإِنَّ الْحَياءَ مِنَ الإِيمانِ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 16 باب الحياء من الإيمان
தனது சகோதரனுக்கு வெட்கம் குறித்து உபசேம் செய்துக் கொண்டிருந்த அன்சாரித் தோழர் ஒருவரை கடந்து நபி (ஸல்) சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடு நிச்சயமாக வெட்கம் ஈமானின் உள்ளதாகும் என அந்த அன்சார் தோழருக்கு கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
   23 - حديث عِمَرانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْحَياءُ لا يَأتي إِلاّ بِخَيْرٍ
أخرجه البخاري في: 78 كتاب الأدب: 77 باب الحياء
வெட்கம் நன்மையைத் தவிர வேறு எதனையும் கொண்டு வராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்றான் (ரலி)
இஸ்லாத்தில் மிகச் சிறந்த காரியம்.
  24 - حديث عبْد اللهِ بْنِ عَمْرٍو أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الإِسْلامِ خَيْرٌ قَالَ: تُطْعِمُ الطَّعامَ وَتَقْرَأُ السَّلامَ عَلى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 6 باب إطعام الطعام من الإسلام
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது எனக் கேட்டார். உணவளிப்பதும் நீ அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி)
 25 – حديث أَبي مُوسَى رضي الله عنه قَالَ: قَالُوا يا رَسُولَ اللهِ أَيُّ الإِسْلامِ أَفْضَلُ قَالَ: مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسانِهِ وَيَدِهِ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 5 باب أي الإسلام أفضل
அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது? (நபித் தோழர்கள் )கேட்டார்கள். எவரது கரத்தினாலும் நாவினாலும் முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரது செயலே சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.    அறிவிப்பவர:அபூமூஸா(ரலி)
ஈமானின் சுவையைக் கண்டவர்
  26 - حديث أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاوَةَ الإِيمانِ، أَنْ يَكُونَ اللهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمّا سِواهُما، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لا يُحِبُّهُ إِلاّ للهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ في الْكُفْرِ كَما يَكْرَهُ أَنْ يُقْذَفَ في النَّارِ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 9 باب حلاوة الإيمان
எவரிடத்தில் மூன்று பண்புகள் இருக்கின்ற னவோ அவர் ஈமானின் சுவையைக் கண்டவர் ஆவார் (அவை).
1.அல்லாஹ்வும் அவனது தூரும் மற்ற அனைத் தையும் விட நேசத்திற்குரியவர்கள் எடுத்துக் கொள்வது. 
2.அல்லாஹ்வுக்காகவே ஒருவரை நேசிப்பது.
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்பின் பால் மீள்வதை வெறுப்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்:அனஸ்(ரலி)
பிள்ளை, பெற்றோர் மற்றும் மனிதர்கள் அனைவரையும் விட இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கடமை
27 - حديث أَنَس قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ والِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعينَ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 8 باب حب الرسول صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من الإيمان
தனது தந்தை தனது பிள்ளை  மற்றும் மனிதர்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவராக ஆகும் வரை உங்களில் எவரும் இறை விசுவாசியாக மாட்டீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர:அனஸ்(ரலி)
தனக்கு விரும்பும் நல்லவை தனது சகோதரனுக்கும் விரும்புவது ஈமானின் பண்பாகும்
  28 - حديث أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتّى يُحِبَّ َلأخيهِ ما يُحِبُّ لِنَفْسِهِ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 7 باب من الإيمان أن يحب لأخيه ما يحب لنفسه
தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாத வரை உங்களில் எவரும் இறை விசுவாசியாக மாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)    
அண்டை வீட்டார்,  விருந்தினர் ஆகியோரை கண்ணியப் படுத்துவதும் நல்ல வார்த்தை கூறுவது அல்லது மௌனமாக இருப்பது ஈமானின் உள்ள பண்பாகும்.
   29 - حديث أَبي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ كانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلا يُؤْذِ جارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلُ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
أخرجه البخاري في: 78 كتاب الأدب: 31 باب من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره
எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் தனது அண்டை வீட்டாரை துன்புறுத்தக் கூடாது. எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப் படுத்தட்டும். எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது மெளனமாக இருக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)
  30 - حديث أَبي شُرَيْحٍ الْعَدَوِيّ قَالَ: سَمِعَتْ أُذُنَايَ وَأَبْصَرَتْ عَيْنَايَ حِينَ تَكَلَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جائِزَتُهُ، قَالَ: وَما جاِئِزَتُهُ يا رَسُولَ اللهِ قالَ: يَوْمٌ وَلَيْلَةٌ، وَالضِّيافَةُ َثلاثَةُ أَيَّامٍ فَما كانَ َوراءَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ َعلَيْهِ، وَمَنْ كانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
أخرجه البخاري في: 78 كتاب الأدب: 31 باب من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره
எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் தனது அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் தனது விருந்தாளியையும் அவருடைய  கொடையை யும்  கண்ணியப் படுத்தட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே விருந்தாளிக்குரிய கொடை  என்றால் என்ன என நபித்தோழர்கள் கேட்டார்கள். விருந்தாளிக் குரிய கொடை என்பது அவருக்குரிய  ஒரு பகல் ஒரு இரவு உபசரிப்பும் மூன்று நாட்கள் விருந்தோம்பல் பண்ணுவதுமாகும். அதற்கு மேல் அவரை உபசரிப்பது உபசரிப்பவருக் குரிய தர்மமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் எனது இரு காதுகளால் கேட்டேன் இரு கண்களால் பார்த்தேன்
அறிவிப்பவர்:அபூஷூரை அல்அதவி(ரலி) 
இறை நம்பிக்கையாளர்களின் ஏற்றத்தாழ்வும் ஈமானில்  யமன் வாசிகளின் உறுதியும்.
  31 - حديثُ عُقْبَةَ بْنِ عَمْرٍو أَبي مَسْعودٍ قَالَ: أَشارَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ فَقالَ: الإِيمانُ يَمانٍ هَهنا، أَلا إِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ في الْفَدَّادِينَ عِنْدَ أُصولِ أَذْنابِ الإِبْلِ حَيْثُ يَطْلُعُ قَرْنا الشَّيْطانِ في رَبيعَةَ وَمُضَرَ
أخرجه البخاري في: 59 كتاب بدء الخلق: 15 باب خير مال المسلم غنم يتبع بها شعف الجبال
யமனை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டி ஈமான் அங்கிருக்கும் யமன் வாசிகளைச் சார்ந்ததாகும் அறிந்து கொள்ளுங்கள். கல் மனமும் கடின சுபாவமும் ஒட்டங்களின் வால்களை பிடித்து உயர்ந்த குரலில் அதட்டியவாறு  ஓட்டிச் செல்லும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பாளர்களிடம் காணப்படும். ஷைத்தானின் இரு கொம்பும் ரபீஆ மற்றும் முளர் கோத்திரத்தாரிடம் உதயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பத் இப்னு அம்ரு அபீமூஸா(ரலி)
  32 -  حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَتاكُمْ أَهْلُ الْيَمَنِ، أَضْعَف قُلوبًا، وَأَرَقُّ أَفْئِدَةً، الْفِقْهُ يَمانٍ وَالْحِكْمَةُ يَمانِيَةٌ
أخرجه البخاري في: 64 كتاب المغازي: 74 باب قدوم الأشعريين وأهل اليمن
யமன் நாட்டை சார்ந்தவர்கள் உங்களிடம் வந்துள்ளார்கள். அவர்கள் இளகிய உள்ளமும் மென்மையான நெஞ்சமும் உடையவர்கள், மார்க்க விளக்கம் யமன் நாட்டை சார்ந்தது, மார்க்க ஞானம் யமன் நாட்டை சார்ந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி)
33 - حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رَأْسُ الْكُفْرِ نَحْوَ الْمَشْرِقِ، وَالْفَخْرُ وَالْخُيَلاءُ في أَهْلِ الْخَيْلِ وَالإِبِلِ وَالْفَدَّادينَ أَهْلِ الْوَبَرِ، وَالسَّكينَةُ في أَهْلِ الْغَنَمِ
أخرجه البخاري في: 59 كتاب بدء الخلق: 15 باب خير مال المسلم غنم يتبع بها شعف الجبال
(குப்ரு) இறை மறுப்பின் தலைமைபீடம் கிழக்கு திசையிலுள்ளதாகும். பெறுமையும் அகம்பாவ மும் குதிரை மற்றும் ஒட்டக உரிமையாளர் களிடமும்  பாலைவண ஒட்டக மேய்ப்பாளர் களிடமும் காணப்படுகிறது. ஆடுகளின் உரிமையாளர்களிடம் அமைதி காணப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர: அபூஹூரைரா(ரலி)
 34 - حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْفَخْر وَالْخُيَلاءُ في الْفَدَّادينَ أَهْلِ الْوَبَرِ، وَالسَّكينَةُ في أَهْلِ الْغَنَمِ، وَالإِيمانُ يَمانٍ، وَالْحِكْمَةُ يَمانِيَةٌ
أخرجه البخاري في: 61 كتاب المناقب: 1 باب قول الله تعالى: (يأيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوباً وقبائل لتعارفوا)
பெறுமையும் அகம்பாவமும் பாலைவன ஒட்டகங்களின் உரிமையாளர்களான நாடோடி களிடம் காணப்படும். அமைதி ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)
மாரக்கம் என்பது நலம் நாடுவது
  35 -  حديث جَريرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ بايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلى السَّمْعِ وَالطَّاعَةِ، فَلَقَّنَني فِيما اسْتَطَعْتُ، وَالنُّصْحِ لِكلِّ مُسْلِمٍ
أخرجه البخاري في: 93 كتاب الأحكام: 43 باب كيف يبايع الإمام الناس
செவியேற்று அதற்குத் கீழ்ப்படிந்து நடப்பேன் என்று  நான் நபி (ஸல்) அவர்களிடம்  உறுதி மொழி வழங்கினேன்.  அப்போது ‘என்னால் இயன்ற விஷயங்களில்’ என்றும் ‘முஸ்லிம் களில் ஒவ்வொருவருக்கும் நன்மையே நாடுவேன்’ என்றும் சேர்த்துச் சொல்லும்படி என்னிடம் நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள். ஆறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)
பாவங்களால் இறை நம்பிக்கை குறை வடைதல் பாவத்தில் ஈடுபடும் போது இறைநம்பிக்கை  அவனை விட்டும் நீங்குதல்
  36 - حديثُ أَبي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لا يَزْنِي الزَّانِي حِينَ يَزْني وَهُوَ مُؤْمِنٌ، وَلا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ، وَلا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ
وزَادَ في رِوايَةٍ وَلا يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَبْصارَهُمْ فِيها حِينَ يَنْتَهِبُها وَهُوَ مُؤْمِنٌ
أخرجه البخاري في: 74 كتاب الأشربة: 1 باب قول الله تعالى: (إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان)
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரியமாட்டான்  மேலும், (மது அருந்துகிறவர்) மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் மது அருந்த மாட்டான். திருடுகிறவன்  திருடும் பொழுது இறை நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருட மாட்டான் .
மற்றொரு அறிவிப்பில்மக்களின் மதிப்பு மிக்க செல்வத்தை  அவர்கள்  பார்த்துக் கொண்டிருக்க கொள்ளையடிக்கும் போது இறை நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் கொள்ளையடிக்க மாட்டான்  என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நயவஞ்சகனின் பண்புகள்
 37 – حديث عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَرْبَعٌ مَنْ كنَّ فِيهِ كَانَ مُنافِقًا خَالِصًا، وَمَنْ كانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفاقِ حَتّى يَدَعَهَا: إِذا اؤْتُمِنَ خَانَ، وَإِذا حَدَّثَ كَذَبَ، وَإِذا عاهَدَ غَدَرَ، وَإِذا خَاصَمَ فَجَرَ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 24 باب علامة المنافق
எவரிடத்தில் நான்கு பண்புகள் உள்ளனவோ அவர் தெளிவான நயவஞ்சகராவார். அந் நான்கில் ஒன்றேனும் இருந்தால் அதனை விட்டு விடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பை கொண்டவராவார். (அப்பண்புகளா வன) நம்பினால் மோசடி செய்வான். பேசினால் பொய்யுரைப்பான். வாக்களித்தால் மாறு செய்வான். வழக்காடினால் நேர்மை தவறுவான்; என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி)
 38 - حديث أَبي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: آيَةَ الْمُنافِق ثَلاثٌ: إِذا حَدَّثَ كَذَب، وَإِذا وَعَد أَخْلَفَ، وَإِذا اؤْتُمِنَ خَانَ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 24 باب علامة المنافق
நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். (அவை) அவன் பேசினால் பொய்யுரைப்பான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பினால் மோசடி செய்வான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
 39 - حديثُ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَيُّما رَجُلٍ قالَ َلأخيهِ يا كافِرُ فَقَدْ باءَ بِها أَحَدَهُما
أخرجه البخاري في: 78 كتاب الأدب: 73 باب من كفر أخاه بغير تأويل
எந்த முஸ்லிம் மனிதராவது தனது சகோதரனைப் பார்த்து காபிர் (நிராகரிப் பாளரே!) என்று கூறினால் நிச்சயமாக அவர்களில் ஒருவர் அச்சொல்லுக்குரியவராகத் திரும்புவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)

தனது தந்தை என்று தெரிந்து கொண்டே  அவரை வெறுத்து (வேறொருவரை தந்தை என்று கூறி) விடுகின்றவரின் நிலை
40 -    حديث أَبي ذَرٍّ رضي الله عنه أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبيهِ وَهُوَ يَعْلَمُهُ إِلاَّ كَفَرَ، وَمَنِ ادَّعى قَوْمًا لَيْسَ لَهُ فِيهِمْ نَسَبٌ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
أخرجه البخاري في: 61 كتاب المناقب: 5 باب حدثنا أبو معم
எவர் தனது தந்தையை தந்தை என்று அறிந்த நிலையில் வேறொருவரை  அவர் தாம் தந்தை  என்று வாதிடுகிறாரோ அவர் நிராகரித்தவரா வார். (நன்றி கெட்டவராவார்) எவர் தனது பரம்பரை இல்லாத ஒரு கூட்டத்தாரை தனது பரம்பரை என வாதிடுகிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட் டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.     அறிவிப்பவர்: அபூதர்(ரலி)
  41 – حديثُ أَبي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لا تَرْغَبُوا عَنْ آبائِكِمْ فَمَنْ رَغِبَ عَنْ أَبيهِ فَهُوَ كُفْرٌ
أخرجه البخاري في: 85 كتاب الفرائض: 29 باب من ادعى إلى غير أبيه
உங்கள் தந்தையரை வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறொருவரை தந்தை என அழைத்து) விடுகிறாரோ அவர் நிராகரிப்பை (நன்றி கெட்டதனத்தை) செய்த வராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  42 - حديثُ سَعْدِ بْنِ أَبي وَقَّاصٍ وَأَبي بَكْرَةَ قَالَ سَعْدٌ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنِ ادَّعى إِلى غَيْرِ أَبيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرامٌ فَذُكِرَ َلأبي بَكْرَةَ فَقَالَ: وَأَنا سَمِعَتْهُ أُذُنايَ وَوَعاهُ قَلْبي مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أخرجه البخاري في: 85 كتاب الفرائض: 29 باب من ادعى إلى غير أبيه
தம் தந்தையல்லாத ஒருவரை தனது தந்தை யல்ல என்று அறிந்து கொண்ட நிலையில் அவரை தம் தந்தை என எவர் கூறுகிறாரோ அவருக்கு சுவனம் தடுக்கப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனை நபி(ஸல்) அவர்கள் எனது காதுகளாலும் கேட்டேன் என் உள்ளம் மனனம் செய்து கொண்டது என அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிமை கொல்வது பாவமாகும் அவனுடன் போரிடுவது இறைநிராகரிப்பாகும்.
   43 -    حديثُ عَبْدِ اللهِ بْنِ مَسْعودٍ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سِبَابُ الْمُسْلِم فُسُوقٌ وَقِتالُهُ كُفْرٌ
أخرجه البخاري في: كتاب الإيمان: 36 باب خوف المؤمن من أن يحبط عمله وهو لا يشعر
முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது  இறை நிராகரிப்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
எனக்குப்பின்  ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிக் கொண்டு நிராகரிப்பாளராக ஆகிவிடாதீர்கள்.
44 -   حديثُ جَريرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ في حَجَّةِ الْوَداعِ: اسْتَنْصِتِ النَّاسَ، فَقالَ: لا تَرْجِعُوا بَعْدي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقابَ بَعْضٍ
أخرجه البخاري في: 3 كتاب العلم: 43 باب الإنصات للعلماء
நபி(ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது மக்களுக்கு உபதேசித்துக் கொண்டி ருக்கும் போது மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள் எனக் கூறி விட்டு  எனக்குப் பின் உங்களில்  ஒருவர் மற்றவரின் கழுத்துக்களை வெட்டிக் கொண்டு நிராகரிப்பாளராக ஆகி                                                                                        விடாதீர்கள் என கூறினார்கள்.   ஆறிவிப்பவர்: ஜரீர்(ரலி)

45 -  حديثُ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَيْلَكُمْ أَوْ وَيْحَكُمْ، لا تَرْجِعُوا بَعْدي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقابَ بَعْضٍ
أخرجه البخاري في: 78 كتاب الأدب: 95 باب ما جاء في قول الرجل ويلك
உங்களுக்கு கேடுதான் அல்லது உங்களுக்கு நாசம் தான்  எனக்குப் பின் உங்களில் சிலர் சிலருடைய கழுத்துக்களை வெட்டி நிராகரிப்பா ளராக ஆகி விடாதீர்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
இந்த நட்சத்திரத்தால் மழை பெழிந்தது எனக் கூறுவது நிராகரிப்பாகும்.
  46 - حديث زَيْدِ بْنِ خالِدٍ الْجُهَنِيِّ قَالَ: صَلّى لَنا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاةَ الصُّبْحِ بالحُدَيْبِيَةِ عَلى إِثْرِ سَماءٍ كانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمّا انْصَرَفَ أَقْبَلَ عَلى النَّاسِ فَقالَ: هَلْ تَدْرُونَ مَاذا قَالَ رَبُّكُمْ قَالوا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: أَصْبَحَ مِنْ عِبادي مُؤْمِنٌ بِيَ وَكافِرٌ، فَأَمّا مَنْ قَالَ مُطِرْنا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِيَ وَكافِرٌ بِالْكَوْكَبِ وَأَمّا مَنْ قَالَ مُطِرْنا بِنَوْءِ كَذا وَكَذا فَذَلِكَ كافِرٌ بِيَ وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ
أخرجه البخاري في: 10 كتاب الأذان: 156 باب يستقبل الإمام الناس إذا سلّم
நபி(ஸல்) அவர்கள் 'ஹுதைபிய்யா' எனும் இடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பொழிந்தி ருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே  நன்கு அறிந்தவர்கள்’ என்று கூறினர்.
என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார் கள் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட் கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர் களாவர். இன்ன இன்ன  நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்த வர்களாவர் என்று இறைவன் கூறினான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர: ஸைத் பின் காலித் அல்ஜூஹைனிய்(ரலி)
 அன்சாரிகளை நேசிப்பது ஈமானில் உள்ளதாகும் என்பதற்கான ஆதாரம்
47 –  حديث أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: آيَةُ الإيمانِ حُبُّ الأَنْصارِ، وَآيَةُ النِّفاقِ بُغْضُ الأَنْصارِ
أخرجه البخاري في: كتاب الإيمان: 10 باب علامة الإيمان حب الأنصار
அன்சாரிகளை நேசிப்பது ஈமானின் அடையாள மாகும். அன்சாரிகளை கோபிப்பது நயவஞ்சகத் தின் அடையாளமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர: அனஸ்(ரலி)
48 -   حديث الْبَراء قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الأَنْصارُ لا يُحِبُّهُمْ إِلاَّ مُؤْمِنٌ، وَلا يُبْغِضُهُمْ إِلاّ مُنافِقٌ، فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللهُ، وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللهُ
أخرجه البخاري في: 63 كتاب مناقب الأنصار: 4 باب حب الأنصار
அன்சாரிகளை இறை விசுவாசியைத் தவிர எவரும் நேசிக்கமாட்டார். நயவஞ்சகனைத் தவிர எவரும் அவர்களை கோபிக்கமாட்டான். எவர் அன்சாரிகளை நேசிக்கின்றாரோ  அவரை அல்லாஹ் நேசிப்பான். எவர் அவர்களை கோபிக்கின்றாரோ அவரை அல்லாஹ்வும் கோபிப்பான்
வணக்க வழிபாடுகள் குறைவதால் ஈமானும் குறைவடைதல்.
49 - حديث أَبي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في أَضْحًى أَوْ فِطْرٍ إِلى المُصَلَّى فَمَرَّ عَلى النِّساءِ فَقَالَ: يا مَعْشَرَ النِّساءِ تَصَدَّقْنَ فَإِنّي أُريتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقُلْنَ: وَبِمَ يا رَسُولَ اللهِ قَالَ: تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشيرَ، ما رَأَيْتُ مِنْ ناقِصاتٍ عَقْلٍ وَدينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحازِمِ مِنْ إِحْداكُنَّ قُلْنِ: وَما نُقْصانُ دِينِنا وَعَقْلِنا يا رَسُولَ اللهِ قَالَ: أَلَيْسَ شَهادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهادَةِ الرَّجُلِ قُلْنِ: بَلَى، قَالَ: فَذَلِكَ مِنْ نُقْصانِ عَقْلِها، أَلَيْسَ إِذا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ قُلْنَ: بَلى، قَالَ: فَذَلِكَ مِنْ نُقْصانِ دِينِها
أخرجه البخاري في: كتاب الحيض: 6 باب ترك الحائض الصوم
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று அல்லது நோன்புப் பெரு நாள்  அன்று  தொழும் திடலுக்கு புறப்பட்டுச் செல்லும் போது பெண்களை கடந்து சென்றார்கள். அப்போது பெண்களே தர்மங்கள் செய்யுங்கள். நரக வாசிக ளில் அதிகமாக நீங்கள் இருப்பது எனக்குக் காட்டப்பட்டது எனக் கூறினார்கள். அப்போது அப் பெண்கள்  அல்லாஹ்வின் தூதரே  (அதற்கு) என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அதிகம் சாபமிடுகிறீர்கள். கணவரிடம் நன்றிக் கெட்டத் தனமாக நடக்கின்றீர்கள். அறிவிலும் மார்கத்தி லும் குறைப்பாடுள்ளவர்களாகவும் இருக்கிறீர் கள். அறிவில் சிறந்தோரைக் கூட வீழ்த்தக் கூடிய வராகவும் (இருக்கக்கூடிய) உங்களைப் போன்ற எவரையும் நான் காணவில்லை எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே  எங்களது மார்க்கத்தில் குறைவும் எங்களது அறிவில் குறைவும் என்றால் என்ன என்று கேட்டார்கள். ஒரு பெண்ணின்  சாட்சி ஒரு ஆணின் சாட்சியின் பாதியாக கருதப்படவில்லையா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அவர்கள் ஆம் எனக் கூறினார்கள். அது தான் உங்கள் அறிவு குறைவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விடுவதில்லையா என நபி(ஸல்) அவர்கள் அவர்கள் அம் எனக் கூறினார்கள். அது தான் அவர்களின் மார்கத்தில் குறைவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி(ரலி)

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதே அமல் களில் மிகச் சிறந்ததாகும்.
  50 -  حديث أَبي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ: إِيمانٌ بِاللهِ وَرَسُولِهِ قِيلَ: ثُمَّ ماذا قَالَ: الْجِهادُ في سَبيلِ اللهِ قِيلَ: ثُمَّ ماذا قَالَ: حَجٌّ مَبْرورٌ
أخرجه البخاري في: 2 كتاب الإيمان: 18 باب من قال إن الإيمان هو العم
செயலில் (அமலில்) மிகச் சிறந்தது எது என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு எது என கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு எது என கேட்கப்பட்து. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹூரைரா(ரலி)
 51 -  حديث أَبي ذَرٍّ رضي الله عنه، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ: إِيمانٌ بِاللهِ وَجِهادٌ في سَبيلِهِ قُلْتُ: فَأَيُّ الرِّقابِ أَفْضَلُ قَالَ: أَغْلاها ثَمَنًا وَأَنْفَسُها عِنْدَ أَهْلِهَا قُلْتُ: فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ: تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ َلأخْرَقَ قَالَ: فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ: تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ فَإِنَّها صَدَقَةٌ تَصَدَّقُ بِها عَلى نَفْسِكَ
أخرجه البخاري في: 49 كتاب العتق: 2 باب أي الرقاب أفضل
அமலில் செயலில் மிகச் சிறந்தது எது என நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அல்லாஹ் வை நம்பிக்கைக் கொண்டு அவனது பாதையில் போர் புரிவதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த அடிமையை விடுதலை செய்வது மிகச் சிறந்தது எனக் கேட்டேன். தன் எஜமானனிடம் விலையில் உயர்ந்ததும் மதிப்பு மிக்கதுமான அடிமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் .அத்தகைய அடிமையை விடுதலை செய்ய  என்னால் இயல வில்லை யென்றால் என்ன செய்வது என்று கேட்டேன் தொழில் செய்கின்றவனுக்கு நீ உதவி செய் அல்லது வேலை இல்லாதவனுக்கு வேலை கொடு  என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதை செய்ய என்னால் இயலாது விட்டால் என்ன செய்வது  எனக் கேட்டேன். மக்களை தீமையை விட்டும் தடுத்து விடு அது நீ உனக்கு செய்து கொண்டு தர்மமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி)
  52 –  حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلى اللهِ قَالَ: الصَّلاةُ عَلى وَقْتِها قَالَ: ثُمَّ أَيّ قَالَ: ثُمَّ بِرُّ الْوالِدَيْنِ قَالَ: ثُمَّ أَيّ قَالَ: الْجِهادُ في سَبيلِ اللهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي
أخرجه البخاري في: 9 كتاب مواقيت الصلاة: 5 باب فضل الصلاة لوقته
அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது என நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு எது எனக் கேட்டேன். பெற்றோருக்கு நன்மை புரிவது எனக் கூறினார்கள். பிறகு எது எனக் கேட்டேன் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது எனக் கூறினார்கள் நான் நபி(ஸல்) அவர்கள் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் இன்னும் கூறியிருப்பார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
லாஇலாஹ இல்லல்லாஹூ என்று கலிமா சொன்ன பிறகும் நிராகரிப் பாளரை கொல்வது
ஹராம்
62 - حديث أُسامَةَ بْنِ زَيْدٍ رضي الله عنهما قَالَ: بَعَثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلى الْحُرَقَةِ فَصَبَّحْنَا الْقَوْمَ فَهَزَمْنَاهُمْ، وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الأَنْصارِ رَجُلاً مِنْهُمْ، فَلَمّا غَشِينَاهُ قَالَ لاَ إِلهَ إِلاَّ اللهُ، فَكَفَّ الأَنْصارِيُّ عَنْهُ، وَطَعَنْتُهُ بِرُمْحي حَتّى قَتَلْتُهُ؛ فَلَمّا قَدِمْنَا، بَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقالَ: يا أُسامَةُ أَقَتَلْتَهُ بَعْدَما قَالَ لا إِلهَ إِلاَّ اللهُ، قُلْتُ كَانَ مُتَعَوِّذًا؛ فَما زَالَ يُكَرِّرُها حَتّى تَمَنَّيْتُ أَنّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذَلِكَ الْيَوْمِ
أخرجه البخاري في: 64 كتاب المغازي: 45 باب بعث النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أسامة بن زيد إلى الحرقات من جهينة
நபி(ஸல்) அவர்கள் எங்களை (ஜூஹைனா கூட்டத்தைச் சார்ந்த) உரகாஹ் எனும் கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாம் அக் கூட்டத்தாரிடம் காலை நேரத்தில் சென்ற டைந்தோம். (நடந்த போரில்) அவர்களை தோற்க டித்தோம். அப்போது நானும்  அன்சாரி தோழர் ஒருவரும் உரகாஹ்  கூட்டத்தைச் சார்ந்த ஒருவரிடம் போய் சேர்ந்தோம். நாங்கள் அவரை சுற்றி வளைத்த போது அவர் லாஇலாஹ இல்லல்லாஹூ என்று கலிமா சொன்னார். அன்சாரித் தோழர் அவரை வெட்டாமல் ஒதுங்கிக் கொண்டார். நானோ அவரை என் ஈட்டியால் குத்தி கொன்று விட்டேன். நாங்கள் நபிகளார் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்த போது இச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டி விட்டது. (என்னைப் பாரத்து) உஸாமா! லாஇலாஹ இல்லல்லாஹூ என கூறிய பின்பும் அவரை நீ கொலை செய்தீரா என நபி(ஸல்) திருப்பி திருப்பி கேட்டார்கள்.  எந்தளவுக்கென் றால் இந்த நாளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்கு பின் ஏற்று) இருந்தால் நன்றாயிருக்குமே என நான் எண்ணும் அளவு நபி(ஸல்) அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்
அறிவிப்பவர்:உஸாமா பின் ஸைத்(ரலி)
எங்களுக்கெதிராக எவர் ஆயுதம்  ஏந்து கிறாரோ அவர் எங்களைச் சார்ந்தவரல்ல

63 - حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ حَمَلَ عَلَيْنا السِّلاَحَ فَلَيْسَ مِنّا
أخرجه البخاري في: 92 كتاب الفتن: 7 باب قول النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من حمل علينا السلاح فليس منا
 நமக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மை சார்ந்தவரல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி)
64 - حديث أَبي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاحَ فَلَيْسَ مِنّا
أخرجه البخاري في: 92 كتاب الفتن: 7 باب قول النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من حمل علينا السلاح فليس منا
 நமக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மை சார்ந்தவரல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி)
கன்னங்களில்  அறைந்து கொள்வது சட்டைகளை கிழித்துக் கொள்வது ஜாஹிலியா கால கோஷம் எழுப்புவது ஹராம்
65 - حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعودٍ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ مِنّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعا بِدَعْوى الْجاهِلِيَّةِ
أخرجه البخاري في: 23 كتاب الجنائز 39 باب ليس منا من ضرب الخدو
எவர் கன்னங்களில் அறைந்து கொண்டு சட்டைகளை கிழித்துக் கொண்டு ஜாஹிலியா கால கோஷம் எழுப்புகின்றாரோ அவர் எங்களைச் சார்ந்தவரல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
66 - حديث أَبي مُوسَى رضي الله عنه وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا شَديدًا فَغُشِي عَلَيْهِ وَرَأْسُهُ في حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْها شَيْئًا؛ فَلَمَّا أَفاقَ قَالَ أَنا بَرِيءٌ مِمَّنْ بَرئَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِئَ مِنَ الصَّالِقَةِ وَالْحالِقَةِ وَالشَّاقَّةِ
أخرجه البخاري في: 23 كتاب الجنائز: 38 باب ما ينهى من الحلق عند المصيبة
அபூ மூஸா (ரலி) அவர்கள் கடுமையான வேதனையில் மயக்கமுற்று விட்டார்கள். மயக்க முறும் போது அவரது தலை அவரது குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின்  மடியில் இருந்தது. (அப்போது அக்குடும்பத்து பெண் ஓலமிட்டு அழுதார்) அதனை கூடாது என்று தடுத்து நிறுத்த அவரால் முடியவில்லை மயக்கம் தெளிந்ததும்  அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் யாரை விட்டும்  நீங்கிக் கொண்டார் களோ நானும் அவர்களை விட்டும் நீங்கி விட்டேன். நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் (துன்பத்தின் போது) ஓலமிட்டு அழும் பெண், தலையை மழித்துக் கொள்ளும் பெண், ஆடையை கிழித்துக் கொள்ளும் பெண் ஆகியோரை விட்டும் நீங்கிக் கொண்டார்கள் என அபூ மூஸா(ரலி) கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூதர் பின் அபூமூஸா(ரலி)
கோள் சொல்வது தடைசெய்யப் பட்டுள்ளது என்ற கடுமையான எச்சரிக்கை 
 67 - حديث حُذَيْفَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ
أخرجه البخاري في: 78 كتاب الأدب: 50 باب ما يكره من النميمة
கோள் சொல்கிறவர் சுவனம் நுழைய மாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் அறிவிப்பவர்: உதைபா(ரலி)
கீழங்கியை  கரண்டைகாலுக்குக் கீழ் தொங்க விடுவது, கொடுத்த நன் கொடையை சொல்லிக் காட்டுவது, பொய் சத்தியம் செய்து பொருளை விற்பது தடுக்கப்பட்டுள்ளதுடன் இம் மூன்று காரியங்களை செய்பவர்க ளுடன் அல்லாஹ் பேசமாட்டான் மறுமையில் பார்க்கவும் மாட்டான். அவர்களை தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனை உண்டு என்ற  எச்சரிக்கை
68- حديث أَبي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاثَةٌ لا يَنْظُرُ اللهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيامَةِ وَلا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذابٌ أَليمٌ: رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ بِالطَّريقِ فَمَنَعَهُ مِنِ ابْنِ السَّبيلِ؛ وَرَجُلٌ بايَعَ إِمامَهُ لا يُبايِعُهُ إِلاّ لِدُنْيا، فَإِنْ أَعْطاهُ مِنْها رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ؛ وَرَجُلٌ أَقامَ سِلْعَتَهُ بَعْدَ الْعَصْرِ فَقالَ وَاللهِ الَّذي لا إِلهَ غَيْرُهُ لَقَدْ أَعْطَيْتُ بِها كَذا وَكَذا، فَصَدَّقَهُ رَجُلٌ ثُمَّ قَرَأَ هذِهِ الآيَةَ (إِنَّ الَّذينَ يَشْتَرونَ بِعَهْدِ اللهِ وَأَيْمانِهِمْ ثَمَنًا قَليلاً)
أخرجه البخاري في: 42 كتاب المساقاة: 5 باب إثم من منع ابن السبيل من الماء
  நாளை மறுமையில் அல்லாஹ் மூன்று பேரை பார்க்க மாட்டான் அவர்களை தூய்மைப் படுத்தவும் மாட்டான்  அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனையை  வழங்கு வான். ஒருவர், பாதையில் தேவைக்கு அதிகமாக  தண்ணீரை வைத்திருந்தும் அதனை வழிப் போக்கனுக்கு வழங்காமல் தடுத்தவர். இரண்டாமவர், ஆட்சித் தலைவரிடம் உலக லாபங்களுக்கு அன்றி வேறெதற்கும் உறுதிப் பிரமாணம் வழங்காதவர். அவருக்கு கொடுத் தால் பொருந்திக் கொள்கிறவர். கொடுக்கா விட்டால் கோபப்படுகிறவர் மூன்றாமவர் அஸர் தொழுகைக்குப் பிறகு தனது வியபார பொருளை  எடுத்து வைத்து  ‘எவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறெவனும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது  சத்தியமாக! நான் இந்தப் பொருளை (கொள்முதல் செய்யும் போது அதிக) விலைக்கு வாங்கினேன்  என்று (பொய்) கூறி, அதை (வாடிக்கையாளர்) ஒருவர் உண்மையென நம்பும்படி செய்தவர்.
இதைக் கூறிவிட்டு, யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப் பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார் களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான். அவர்களைப் (பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு. என்னும் இந்த வசனத்தை (03:77) ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
தற்கொலை செய்து கொள்வது கூடாது என  வன்மையான கண்டிப்பு. ஏதேனும் ஒன்றினால் தற்கொலை செய்து கொள்கின்றவர் அதன்மூலமே (நரகில்) தண்டிக்கப்படுவார். முற்றிலும் அடி பணிந்த முஸ்லிம் சுவனம் நுழைவார்.
69 - حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ في نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيها أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ في يَدِهِ يَتَحَسَّاهُ في نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فيها أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَديدَةٍ فَحَدِيدَتُهُ في يَدِهِ يَجَأُ بِها في بَطْنِهِ في نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيها أَبَدًا
أخرجه البخاري في: 76 كتاب الطب: 56 باب شرب السم والدواء به وبما يخاف منه
யார் மலையின் மீதிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகிலும்    என்றென்றும் நிரந்தரமாக  மேலிருந்து குதித்து (வேதனைக்கு ஆளாகிக்) கொண்டு இருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகிலும் தனது கையில் விஷயத்தை வைத்து என்றென்றும் நிரந்தரமாக அருந்திக் கொண்டு இருப்பார். யார் ஒரு ஆயுதத்தால் தற்கொலை செய்துகொல்கிறாரோ அவர் நரகிலும் என்றன்றும் நிரந்தரமாக தனது ஆயுதத்தால் வயிற்றை கிழித்துக் கொண்டு  இருப்பார்.அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி)
70 - حديث ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، وَكانَ مِنْ أَصْحابِ الشَّجَرَةِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ حَلَفَ عَلى مِلَّةٍ غَيْرِ الإِسْلامِ فَهُوَ كَما قَالَ، وَلَيْسَ عَلى ابْنِ آدَمَ نَذْرٌ فِيما لا يَمْلِكُ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ في الدُّنْيا عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيامَةِ، وَمَنْ لَعَنَ مُؤْمِنًا فَهُوَ كَقَتْلِهِ، وَمَنْ قَذَفَ مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ
_أخرجه البخاري في: 78 كتاب الأدب: 44 باب ما ينهى من السباب واللعن
எவர் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்று இருப்பார். தனக்கு சொந்தமில்லாத ஒன்றின் மீது நேர்ச்சை செய்வது ஆதமின் மகனுக்கு கூடாது. எவர் எந்தப் பொருளைக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாரோ அதைக் கொண்டே மறுமையில் வேதனை செய்யப் படுவார். எவர் ஒரு முஃமினை சபிக்கின்றாரோ அவர் அந்த முஃமினை கொலை செய்தவர் போலாவார். எவர் ஒரு முஃமினை நிராகரிப்பளார் என்று அவதூறு கூறுகிறாரோ அவர் அந்த முஃமினை கொலை செய்தவர் போலாவார். என நபி(ஸல்) அவர்கள்.
அறிவிப்பவர்: பைஅதுல் ரிழ்வான் எனும் (மரத்தடியில்) உறுதி பிரமானத்தில் கலந்து கொண்ட ஸாபித் இப்னு லஹ்ஹாக்(ரலி)


உங்கள் கருத்துக்களை அறிவிக்க;
[email protected]