ஷிர்க்கின் தோற்றம்

ஒவ்வொரு சமூகத்தாரையும் வழிகெடுப்பதற்கு ஷைத்தான் மரித்த நல்லவர்களின் பெயர்களையே பயன்படுத்தியுள்ளான்.
ஷிர்க் நல்லோர் களின் பெயரால் அவர்களை வழிபடுவதன் மூலமாகவே உருவாக்கப் பட்டது.

اسم الكتاب: نشأة الشرك بالله


تأليف: محمد إمتياز يوسف

نبذة مختصرة: رسالة باللغة التاميلية يُوضِّح فيها الكاتب كيف نشأ الشرك من لدن إبليس، مرورًا بمراحل انتشاره، وانتهاءً بما آل إليه أمر المسلمين اليوم.



ஷிர்க்கின் தோற்றம்
(இணைவைப்பின் ஆரம்பம்)
PART-01

 

] Tamil – தமிழ் –[ تاميلي 


Mஇம்தியாஸ் யூசுப் ஸலபி



2014 - 1435
 
 

نشأة الشرك بالله
« باللغة التاميلية »



محمد إمتياز يوسف




2014 - 1435
 
 
ஷிர்க்கின் தோற்றம்
(இணைவைப்பின் ஆரம்பம்)
PART-01
M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி.
அல்லாஹுதஆலா வானம்,  பூமிகளையும் அவ்விரண்டுக்கு இடைப்பட்டவைகளையும் மனிதர் களுக்காகவும்  ஜின்களுக்காகவும் படைத்தான். மனிதர்களையும் ஜின்களையும் தன்னை வணங்கு வதற்காகப் படைத்தான். இந்த பூமியில் வாழ்வதற் கேற்ற வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தான். இவ்வினத்தாரிடமிருந்து  அல்லாஹ் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்று மட்டும் தான். இணை வைப்பில்லாமல் கலப்படமற்ற உள்ளத்துடன் வணக்கங்களை அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும்  என்பது தான் அந்த எதிர்பார்ப்பாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ  مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ  إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
“ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்க வில்லை. அவர்களிடத்தில் யாதொரு உணவையும் நான் நாடவில்லை. அன்றியும் அவர்கள் உணவளிக்க வேண்டுமென்றும் நான் விரும்ப வில்லை. நிச்சயமாக அல்லாஹ் உணவளிப்பவனும் பலமிக்கவனும் உறுதியானவனுமாவான்.” (51; 56, 57)
ஒவ்வொரு ஆன்மாவும் இயல்பிலே அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் அவனுக்கு எதையும் இணைவைக்காதவையாகவுமே படைக் கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்:
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ * أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِنْ بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ 
“உமது இரட்சகன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளிப்படுத்தி அவர்களையே சாட்சிகளாக்கி நான் உங்கள் இரட்சகன் இல்லலையா? என்று கேட்டதற்கு ஆம் நாம் சாட்சி கூறுகிறோம் (நீயே எங்கள் இரட்சகன்) என்று அவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள்.) நிச்சயமாக இது குறித்து நாம் கவனயீனமாக இருந்து விடமாட்டோம் என்று (அவர்கள்)மறுமையில் கூறாதிருக்கவே (இவ்வாறு செய்தோம்.)
அல்லது இதற்கு முன்னர் எமது மூதாதையர்களே இணை வைத்தனர். நாம் அவர்களுக்கு பின்னுள்ள சந்ததிகளாகவே இருந்தோம். அவ்வீணர்கள் செய்ததற்காக எங்களை நீ அழிக்கப் போகிறாயா என்று கூறாதிருக்கவுமே (இவ்வாறு செய்தோம்) அவர்கள் (நம்பால்) மீண்டு விடும் பொருட்டு வசனங்களைத் தெளிவுப்படுத்தினோம். (7;172, 173)
இந்த பூமியில் பிறப்பதற்கு முன்னதாகவே அல்லாஹ்வை மட்டும் வணங்குவது, அவனுக்கு எதனையும் இணையாக்கு வதில்லை என்று உறுதி மொழி கொடுத்து விட்டே இவ்வுலகில் ஒவ்வொரு வரும் பிறக்கின்றனர்.அதனை அல்லாஹ் இவ் வசனத்தில் மக்களுக்கு நினைவூட்டுகிறான். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் பின்வருமாறு குறிப்பிடு கிறார்கள்.
صحيح البخاري (2ஃ 100)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ، أَوْ يُنَصِّرَانِهِ، أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ البَهِيمَةِ تُنْتَجُ البَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கின் அங்கங்களை சேதப்படுத்துவது போல்) பெற்றோர் களே தம் குழந்தைகளை யூதர்களாகவோ, கிறிஸ்த வர்களாகவோ அல்லது அக்கினி ஆராதனைக் காரர்களாகவோ மாற்றுகின்றனர் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
ஏக இறைகொள்கையை போதிக்கும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் மனிதர்கள் பிறப்பது போல் அதில்  நிலைத்திருக்க வேண்டும். இந்த இயற்கைக்கு மாற்றமான கொள்கைகள் மற்றும்  வழிபாடுகள் நிச்சயம் வழிதவறானவையாக இருக்கும். எனவே அல்லாஹ் இக் கொள்கையை பற்றிப்பிடிக்குமாறும் இஸ்லாத்தில் வாழுமாறும் கட்டளை யிடுகிறான்.
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 
“ஆகவே, நீர் உமது முகத்தைத் தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலை நிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதனைப் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க (மாகிய இஸ்லா)த்தை (பற்றிப் பிடித்து நிலைத்திருப்பீராக!) அல்லாஹ்வின் படைத்தலில் எவ்வித மாற்றமும் இல்லை.(30;30)
எல்லா நபிமார்கள் மூலமாக நினைவூட்டப்பட்ட செய்தியைத் தான் அல்லாஹ் இறுதி நபி மூலமாகவும் இவ் வசனத்தில் நினைவூட்டுகிறான்.
ஒன்றே குலம் ஒருவனே  தெய்வம் என்ற கோட்பாட்டிற் கமைய மனித சமூகம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கிக் கொண்டிருந்தது. தவ்ஹீது எனும் ஏக இறை நம்பிக்கைக்கு எதிராக, அல்லாஹ்வுக்கு இணையாக (ஷிர்க்கை) ஏற்படுத்தும் மகா துரோகத்தை ஷைத்தான் எப்போது தோற்றுவித்தானோ அன்றே சமூகத்திற்குள் கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் தொடர ஆரம்பித்தன.
அல்லாஹ் கூறுகிறான்.
كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ
“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்.” (2 ; 213)
மனித இனத்தின் படைப்பும் வழிபாடும்  செயற் பாடும் தவ்ஹீத் எனும் ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்குவதாகவே இருந்தது என்பதை இவ்வசனமும் உறுதிப் படுத்துகிறது.
அல்லாஹ் ஒருவனுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ்வின் படைப்புக்களுக்கு செய்யுமாறு முதன் முதலாக ஷைத்தான் நூஹ் (அலை) அவர்களின் சமூகத்திலேயே ஏற்படுத்தி னான், அதற்கு முன் இணைவைப்பு என்பது இருந்ததில்லை.
‘ஆதம் (அலை)அவர்களுக்கும் நூஹ் (அலை) அவர்களுக்கும் இடைபட்ட காலத்தில் வாழ்ந்த எல்லோரும் இஸ்லாத்திலேயே இருந்தனர்.’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். இக்கூற்று மிகச்சரியானது என்று இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: இகாததுல் லஹ்பான் 2/102)
இதற்கு ஆதாரமாக உபையிப்னு கஃப் (ரலி) அவர்கள் மேலேயுள்ள (2;213) வசனங்களை ஓதிக் காட்டிய முறையைக் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் வழிகேடு  உடனேயே உருவாக்கப்படவில்லை. நல்லோர் களின் பெயரால் அவர்களை வழிபடுவதன் மூலமாகவே உருவாக்கப் பட்டது.
இது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) பின்வருமாறு கூறு கிறார்கள்;
நூஹ் நபியின் காலத்தில் வாழ்ந்த வத், சுவா, யஃகூஸ், யஊக், நஸ்ர் ஆகிய ஐந்து பேர்களும் நல்ல மனிதர் களாவர். அவர்கள் மரணித்தப் பின்  அந்த மனிதர்கள் இருந்த இடங்களில் சிலைகளை  நிறுவுங்கள் அவர்களின் பெயர்களையும் சூட்டுங் கள் என்று மக்களின் மனங்களில் எண்ணத்தை ஷைத்தான் உருவாக்கினான். அவர்களும் அப்படியே செய்தனர். ஆனாலும் அச்சிலைகள் அப்போது வணங்கப் படவில்லை. அம் மக்கள் இறந்து (அந்த சிலைகள் நிறுவப்பட்ட காரணங்கள் குறித்த) அறிவு மங்கிவிட்ட பின் அச்சிலைகள் மக்களால் வணங்கப்படலாயின என இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள். (நூல்:புகாரி)
நல்லவர்களின் பெயரால் உருவாக்கப்பட்ட  சிலைகள் நினைவுச் சின்னங்களாகவே நிறுவப் பட்டன. அதனை நிறுவியவர்கள் வணங்க வுமில்லை. வணங்கும் நோக்கத்தில் நிறுவவு மில்லை. அவர்களுக்குப் பின் வந்த மக்கள் அச்சிலை களை நிறுவப்பட்டதன் நோக்கத்தை மறந்து அவைகளை வணங்கப்படக் கூடியதாகவும் தெய்வங்களாகவும் எடுத்துக் கொள்ளலாயினர். இக் காரியத்தை ஷைத்தான் அம்மக்களுக்கு அலங்காரமாகக் காட்டினான். உண்மையில் ஷைத்தான் அந்த மக்களை சிலை வணக்கத்தின் பால் இட்டுச் சென்று இறை நிராகரிப்பை மேற் கொள்ளவே  நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தி னான். அவனுக்கு வழிபட்டதன் மூலம் ஷிர்க்  (அல்லாஹ் வுக்கு இணைவைத்தல்) எனும் கொடிய பாவம் தோற்றம் பெற்றது. மனித சமூகத்தை வழிகெடுக்கும் ஷைத்தனின் பணி இதன் மூலம் ஆரம்பமாயிற்று.
     ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து, அவருக்கு சுஜூது செய்யுமாறு கட்டளையிட்ட வேளையில் ஷைத்தானைத் தவிர மலக்குகள் சுஜூது செய்தனர். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து பெருமை பாராட் டியதன் காரணமாக ஷைத்தான் சபிக்கப்பட்டான், சுவனத் திலிருந்து துரத்தப்பட்டான். அவன் மனித சமூகத்தை வழிகெடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாத மக்களாக ஆக்குவதாக அந்நேரம் அல்லாஹ்விடம்  சபதமிட்டான். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ  ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ
 ''நீ என்னை வழி கெடுத்த காரணத்தால் (ஆதமுடைய சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
''பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், இடப் பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன். ஆதலால் நீ அவர்களில் பெரும் பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்” (என்றும் கூறினான்).
அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப் பட்டவனாகவும், விரட்டப் பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு.  அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்.” என்று கூறினான். (7:16 - 18)
ஷைத்தான் மக்களை வழிகெடுக்கும் ஒவ்வொரு வழிகளையும் அதிலிருந்து தப்பிக்கும் வழி காட்டல்களையும் அல்லாஹ் இறைத்தூதர்கள் மூலம் காட்டிக் கொடுத்தான். இறைவழி காட்டலை பின்பற்றுபவர்கள் சுவனத்திற்கும்  ஷைத்தானை வணங்கி வழிபடுபவர்களை நரகத்திற்கும் என்றும் அல்லாஹ் எச்சரிக்கை செய்தான். அல்குர்ஆனின் 7;172-174 வசனங்க ளுக்கு அமைய  ஆன்மாக்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இறைதூதர் மூலம் அல்லாஹ் வழிகாட்டினான். இதன் அடிப்படை யிலேயே நூஹ் நபியும் தம் சமூகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.  அவரது சமூகத்தில் இணை வைத்தல் தோற்றம் பெற்று நினைவுச் சின்னங்களுக்குரியவர்கள் கடவுள்களாக ஆக்கப் பட்டார்கள். அக்கடவுள்களை விட்டு விடக் கூடாது என அச்சமூகம் பிடிவாதமாக இருந்தது.
எனவே இறைகொள்கையை அந்த மக்களுக்கு நினைவூட்டு முகமாக நூஹ் நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான்.
 لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
7:59    “நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத் தாரிடம் அனுப்பி வைத்தோம், அவர் (தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ் வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” என்று கூறினார்.
قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِهِ إِنَّا لَنَرَاكَ فِي ضَلَالٍ مُبِينٍ
7:60அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ يَا قَوْمِ لَيْسَ بِي ضَلَالَةٌ وَلَكِنِّي رَسُولٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ
7:61    அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
أُبَلِّغُكُمْ رِسَالَاتِ رَبِّي وَأَنْصَحُ لَكُمْ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
7:62    “நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன். மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்” (என்று கூறினார்).
أَوَعَجِبْتُمْ أَنْ جَاءَكُمْ ذِكْرٌ مِنْ رَبِّكُمْ عَلَى رَجُلٍ مِنْكُمْ لِيُنْذِرَكُمْ وَلِتَتَّقُوا وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ
7:63    உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப் பட வேண்டு மென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா?
நூஹ் (அலை)  அவர்கள் ஒரு இறைகொள்கையின் பால் அம்மக்களுக்கு அழைப்பு விடுத்த போது நிராகரித்தனர். தாங்கள் நேர்வழியில் இருப்பதா கவும் நூஹ் நபி வழிகேட்டில் இருப்பதாகவும்  அம்மக்கள் வாதாட தொடங்கினர்.
கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்பதை புரிய வைப்பதற்காக நூஹ் நபி அல்லாஹ்வின் வல்லமைகள் ஆற்றல்கள் குறித்து எடுத்துக் கூறி இரவு பகலாக அம்மக்களை அணுகி பேசினார்கள் இரகசியமாகவும் பரகசியமாகவும் மக்களை நோக்கி உபதேசித்தார்கள். அல்லாஹ்வின் பாவமன்னிப் பின் பாலும், கருணையின் பாலும் விரையுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
நூஹ் நபியின் போதனைகள் ஒருசில நாட்களோ அல்லது ஒரு சில மாதங்களோ அல்லது ஒரு சில வருடங்களோ நடை பெற்றவில்லை. மாறாக  950 வருடங்கள் நீடித்தன. அந்த மக்கள் நேர்வழி அடைவதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் அல்லாஹ் காண்பித்தான். ஆனால் அம்மக்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் வழிதவறினார்கள். அது மட்டுமன்றி போதனை செய்து கொண்டிருந்த நூஹ் நபியை கேவலப்படுத்தி இம்சைக்குள்ளாக்கி,   பொய்யனாக்கி அவருக்கெதிராக சூழ்ச்சிகளையும் மேற் கொண்டார்கள். 
அல்லாஹ்விற்கு இணையாக உருவாக்கப்பட்ட கடவுள்  கொள்கையை அம் மக்கள் ஆரம்பித்த தற்காக உடனே தண்டித்து விடாமல் இறைத்தூர் நூஹ் (அலை) மூலம் நேர்வழியின் பால் மீளுமாறு அல்லாஹ் வழிகாட்டினான்.
நூஹ் நபியின் பிரச்சாரப் பணியின் முக்கியத்துவத்தையும் போதனையின் உள்ளடக் கங்களையும் சூரா நூஹ் எனும் பெயரில் தனியான ஒரு அத்தியாயத்தில் பின்வருமாறு அல்லாஹ் எடுத்து கூறுகிறான்.
إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ
71:1    .நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத் தாரிடம் “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என  அனுப்பினோம்.
قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ
71:2    “என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று கூறினார்.
أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ
71:3    “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். எனக்கும் வழிபடுங்கள்.“
يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنْتُمْ تَعْلَمُونَ
71:4    “(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான். மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்பட மாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்ட வர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا
71:5    பின்னர் அவர், “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا
71:6    “ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.
وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا
71:7    “அன்றியும், நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற் காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்த போதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர். மேலும், தங்களைத் தம் ஆடை களைக் கொண்டு மூடிக் கொண்டனர். அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும், பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جِهَارًا
71:8    “பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.
ثُمَّ إِنِّي أَعْلَنْتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا 
71:9    “அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன், இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
71:10 மேலும் “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள், நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்று கூறினேன்.
يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا
71:11    “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا
71:12     “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான், இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான், உங்களுக் காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்கு வான்.
مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا
71:13     “உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையை யும்) நீங்கள் உணராமலிருக் கின்றீர்கள்.
وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا
71:14     “நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.
أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا
71:15     ”ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காக எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்க வில்லையா?
وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا
71:16     “இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
وَاللَّهُ أَنْبَتَكُمْ مِنَ الْأَرْضِ نَبَاتًا
71:17 “அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.
ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا 
71:18     “பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொரு முறை உங்களை (அதிலிருந்து) வெளிப் படுத்துவான்.
وَاللَّهُ جَعَلَ لَكُمُ الْأَرْضَ بِسَاطًا
71:19     “அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
لِتَسْلُكُوا مِنْهَا سُبُلًا فِجَاجًا 
71:20    “அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதை களையும் அமைத்தான்.” (என்றும் போதித்தார்).
قَالَ نُوحٌ رَبِّ إِنَّهُمْ عَصَوْنِي وَاتَّبَعُوا مَنْ لَمْ يَزِدْهُ مَالُهُ وَوَلَدُهُ إِلَّا خَسَارًا
71:21    “நூஹ் கூறினார்: ‘என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறுசெய்கின்றனர். அன்றியும், எவர்களுக்கு அவரது பொருளும், அவரது மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்க வில்லையோ, அ(த்த கைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர். ‘
وَمَكَرُوا مَكْرًا كُبَّارًا
71:22     “மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.”
وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا
71:23     “மேலும் அவர்கள், ‘உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள், இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டு விடாதீர்கள்’ என்றும் சொல்கின்றனர்.
وَقَدْ أَضَلُّوا كَثِيرًا وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا ضَلَالًا 
71:24    “நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்து விட்டனர், ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.”
مِمَّا خَطِيئَاتِهِمْ أُغْرِقُوا فَأُدْخِلُوا نَارًا فَلَمْ يَجِدُوا لَهُمْ مِنْ دُونِ اللَّهِ أَنْصَارًا
71:25     “ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப் பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا
71:26     “அப்பால் நூஹ் கூறினார்: ‘என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.’
إِنَّكَ إِنْ تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا
71:27     “நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள். அன்றியும், பாவிகளை யும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக் கமாட்டார்கள். “
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا
71:28    “என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர் களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக் காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).
நூஹ் நபி தம் சமூகத்தாரிடையே மேற் கொண்ட அத்தனை சாத்வீக வழிகளும் தோல்வி கண்ட போது அம்மக்கள் தங்களது தவறான கொள்கையில் உறுதியாக இருந்த காரணத்தால்   அல்லாஹ்வினால் பெரும் பிரளயம் ஏற்படுத்தப் பட்டு அழிக்கப்பட்டார்கள்.
நூஹ் நபியின் சமூகம் 950 வருடங்கள் இறை மறுப்புக் கொள்கையிலிருந்து மீளாத போதே அழிக்கப்பட்டார்கள். ஷைத்தான் நல்லடியார்களின் பெயரால் உருவாக்கிய வழிபாடு இறுதியில் அம்மக்களை அழிவுக்கு இட்டுச் சென்றது.
ஷிர்க் எனும் கொடிய பாவத்தை மட்டும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் அதல்லாத ஏனைய பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான் ஷிர்க் செய்தவர்களும் தங்களது மரணத்திற்கு முன் மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரினால் அவர்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இல்லையேல் அவர்கள் நிரந்தர நரகவாதிகளாக இருப்பார்கள். (4;48, 116)
ஒவ்வொரு சமூகத்தாரையும் வழிகெடுப்பதற்கு ஷைத்தான் நல்லவர்களின் பெயர்களையே பயன்படுத்தியுள்ளான் என்பதை காணமுடிகிறது. அந்த சமூகங்களும் முன்சென்ற மக்கள் (முன்னோர்கள்) செய்த காரியங்களை வணக்க வழிபாடுகளை ஆதாரமாக எடுத்தார்களே தவிர இறைத்தூதர்கள் மூலம் காண்பிக்கப்படும் வழிகாட்டல்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முனையவில்லை.