அல்லாஹ்வின் நேசம் அதை உண்டாக்கும் காரணிகள்

(அல்லாஹ்வின்) நேசம் மகத்துவம் மிக்க ஒரு அந்தஸ்தாகும். அதை அடைவதற்காகவே ஸாலிஹான முன்னோர்கள் போட்டிபோட்டுக் கொண்டார்கள். நற்செயல்கள் புரிந்தார்கள், அனைத்தையும் துறந்து பாடுபட்டார்கள், (உயிர்) தியாகம் செய்தார்கள்.

الاسم : محبة الله والأسباب الجالبة لها


تأليف: القسم العلمي بمدار الوطن

نبذة مختصرة: كتاب مترجم إلى اللغة التاميلية يتحدث عن محبة الله والأسباب الجالبة لها.

அல்லாஹ்வின் நேசம்
அதை உண்டாக்கும் காரணிகள்
] Tamil – தமிழ் –[ تاميلي 

தயாரிப்பு
மதாருல் வதன் அச்சகத்தின் கல்விப் பிரிவு

தமிழில்
அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Su-dan.




2014 - 1435

 

 
 

محبة الله
والأسباب الجالبة لها
(  باللغة التاميلية)


الإعداد: القسم العلمي بمدار الوطن




ترجمة
عبد الستار بن عبد الرشيد خان




2014 - 1435
 
 



محبة الله
والأسباب الجالبة لها
إعداد: القسم العلمي بمدار الوطن


அல்லாஹ்வின் நேசம்
அதை உண்டாக்கும் காரணிகள்
தயாரிப்பு
மதாருல் வதன் அச்சகத்தின் கல்விப் பிரிவு

தமிழாக்கம்
மௌலவி: அப்துல் சத்தார் மதனி  M.A in (Edu) Sudan.
 


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அழகிய முறையில் திட்டமிட்டு செயலாற்றும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியன. (ஸலாத் எனும்) கருணையும், (ஸலாம் எனும்) ஈடேற்றமும், நரகத்தை விட்டும் அச்சமூட்டவும், சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறவும் வந்துதித்த எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
நேசம் எனும் பண்பு மனிதர்களைப் படைத்த அல்லாஹ்வின் பண்புகளைச் சேர்ந்தது. ஆகவே அல்லாஹ் அவனுடைய மகத்துவத்துக்கும் உயர்த் திக்கும் ஏற்றவாறு அவனுடைய விசுவாசிகளை நேசிக்கிறான். அவ்வாறே அவனுடைய (விசுவாசி களான) நல்லடியார்களும் தங்களுடைய குழந்தை கள், செல்வம் போன்றவைகளை விடவும், ஏன் தங்களை விடவும் அல்லாஹ்வை நேசிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ْ 

“நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.” அல் மாஇதா 54.
மேலே கூறப்பட்ட வசனத்திலிருந்து நேசம் எனும் பண்பு இரு தரப்புகளுக்கிடையில் பரஸ்பரம் பரிமாறப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்கிறோம்.

அல்லாஹ் கூறுகின்றான்;

وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ ۖ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّهِ

“அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர் களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.” அல் பகரா 165.
 (அல்லாஹ்வின்) நேசம் மகத்துவம் மிக்க ஒரு அந்தஸ்தாகும். அதை அடைவதற்காகவே ஸாலிஹான முன்னோர்கள் போட்டிபோட்டுக் கொண்டார்கள். நற்செயல்கள் புரிந்தார்கள், அனைத்தையும் துறந்து பாடுபட்டார்கள், (உயிர்) தியாகம் செய்தார்கள். ‘கூதுல் குலூப்’ எனும் புத்தகத்தில் வந்துள்ள ஒரு செய்தியில் (அல்லாஹ் வின் நேசத்துடன் கூடிய) வாழ்க்கையை இழந்தவன் அனைத்தையும் இழந்த, மரணித்தவர் களைச் சேர்ந்தவன் என்றும் அப்பிரகாசத்தை பெறாதவன்  இருண்ட சமுத்திரத்தில் தத்தளிப்பவ னுக்குச் சமம் என்றும், அதை இழந்தவனுடைய இதயத்தில் எல்லா விதமான ஆபத்துகளும் நோய்களும் குடிகொள்ளும் எனவும், அவ்வின்பத்தை சுவைக்காதவனின் ஆயுள், சோகமும் கவலைகளும் நிறைந்ததாகவே காணப்படும் என்றும் வந்துள்ளது.
அல்லாஹ்வை நேசிப்பதின் சட்டம்.
ஒவ்வொரு அடியானும் அல்லாஹ்வை நேசிப்பது கடமை. அகப்பார்வை இழந்து தம் இதயங்கள் இருளடைந்தவர்களைத் தவிர வேறு எவரும் இவ்விடயத்தில் கருத்து முரண் படவில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்;
قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِين

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக! அத்தவ்பா 24.
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விட,  ஏனையவர்களை நேசிப்பவர்களை அல்லாஹ் இங்கு கடுமையாக எச்சரித்திருக்கிறான். (மார்க்கத் தில்) கடமையாக்கப் பட்ட ஒரு விடயத்துக்கே இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உமர்(றழி) அவர்கள், அண்ணலாரின் சமூகத்தில் ஒரு தடவை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எனது உயிரைத் தவிர உண்டான அனைத்து விடயங்களை விட தாங்களே எனக்கு அதிகம் பிரிய முள்ளவர்களாக இருக்கின்றீர்கள்!”
“தனது உயிரை விட என்னை அதிகமாக நேசிக்காத வரை ஒருவர், பூரணமான விசுவாசியாகமாட்டார்” என்று அண்ணலார் அதற்கு பதிலாகக் கூறினார்கள். உடனே, உமர் (றழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே. தாங்கள் என்னுயிரை விட இப்பொழுது அதிகப் பிரியமுள்ளவராக இருக்கிறீர்கள்! என்றார்கள். “ஓ உமரே! இப்பொழுது தான்” என்று அண்ண லார் கூறினார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.
அல் ஹாபில் இப்னு ரஜப் (ரஹ்) கூறினார்; அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிப்பது அல்லாஹ்வை நேசிப்பதுடன் தொடர்பு பட்டது. காரணம் அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவதற்காக முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றுமாறும், அவர்களை நேசிக்குமாறும் அல்லாஹ் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளான் எமது உயிரையும், பிள்ளைகளையும், பெற்றோர் களையும், ஏன் அனைத்து படைப்புகளையும் விட முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிக்காதவருடைய விசுவாசம் பூரணமடைவதில்லை. அவ்வாராயின் அல்லாஹ்வை நேசிப்பதின் அவசியத்தை கூறத்தான் வேண்டுமா?
அல்லாஹ்வை நேசிப்பது இறைவிசுவாசத்தின் அடையாளம்.
மற்ற வைகள்  அனைத்தையும் விட, அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பது இறை விசுவாசத்தின் ஒரு அங்கம் என்றும், அதுவே இறை விசுவாசத்தின் இனிமை குடிகொண்ட இதயத்துக்கு அடையாளம் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறிப்பிட்டுள்ளார்கள்.
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை)
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது.
2. ஒருவர் மற்றவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறை மறுப்புக்கு மாறுவதை வெறுப்பது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்- நூல் ஸஹீஹுல் புகாரி
பின்வறும் அல்லாஹ்வின் திருவசனமும் இக்கருத்தையே உறுதிப்படுத்துகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ ۖ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ
“நம்பிக்கை கொண்டோரே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடா தீர்கள்!” அல் மும்தஹினா 10.
முஃமினான பெண்களின் இறை விசுவாசத்தை அறிந்து கொள்வதற்காக அவர்களை சோதித்துப் பார்க்குமாறு அல்லாஹ் இங்கு கட்டளை யிட் டுள்ளான். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் குறித்த பெண்கள், அல்லாஹ்வுடையதும் அவனுடைய தூதரின் நேசத்துக்காகவும் (ஹிஜ்ரத்) வெளியாகிச் சென்றார்கள் என சத்தியம் செய்யச் செய்து, அவர்களுடைய இறைவிசுவாசத்தை உறுதி செய்து கொள்வார்கள்.   
 கேள்வி
அன்பின் சகோதரா!
அல்லாஹ்வை நேசிப்பது இன்றியமையாத ஒரு கடமையாகவும், இறைவிசுவாசத்தின் ஒரு அங்கமா கவும், அடையாளமாகவும் இருப்பதால், இந்த வணக்கத்துடன் நாம் எந்த அளவு தொடர்பு பட்டிருக்கிறோம்?.
அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோமா?
அல்லாஹ் எங்களை நேசிக்கிறானா?
இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறினார்கள்; “அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோம்” என அதிகமான மனிதர்கள் கூறிக் கொள்வதால், தங்களின் வாதங்களை உண்மைப் படுத்தும் சான்றுகளை முன் வைக்குமாறு அவர்களிடம் வேண்டப் பட்டது. காரணம் மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாக தீர்ப்பு) வழங்கப் பட்டால் கவலை யில்லாதவரும் கவலையுடையவரின் வலியை பற்றி முறையிடத் துணிந்து விடுவார்.
 அல்லாஹ் கூறுகின்றான்;
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ 
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான்.” ஆல இம்ரான் 31.
(இப்பரீட்சையில்) சொல், செயல், குண இயல்பு போன்றவைகளில் நண்பனை பின்பற்றாத அனைத்து படைப்பினங்களும் (தோல்வியைத் தழுவி) பின் வாங்கியவர்களாவர். ஆகவே இத்திருவசனம் “நேசத்தின் வசனம்” என  அழைக்கப்படுகிறது.
அபூ ஸுலைமான் அத்தாரானி கூறினார்; ‘அல்லாஹ் வை நேசிப்பதாக பலர்  (பொய்) கூறிக் கொண்டி ருந்த போது, அவர்களை பரீட்சிக்கும் முகமாக அல்லாஹ் இத்திருவசனத்தை அருளினான்.’
முன்னோர்கள் கூறினார்கள்; ‘சிலர் அல்லாஹ்வை நேசிப்பதாக கூறிக்கொண்டிருந்ததால் இத்திரு வசனத்தை அல்லாஹ் அருளினான். அதில் வரும் “என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான்” என்பது நேசிப்பதையும், அவ்வாறு நேசிப்பவர்களுக்கு கிடைக்கும் பயன்களையும் சுட்டிக் காட்டுகிறது. எனவே அல்லாஹ்வை நேசிப்ப வருக்கு அடையாளம் இறைத் தூதரைப் பின்பற்று வதாகும், அதற்காக அவருக்கு கிடைக்கும் வெகுமதி  அவரை அல்லாஹ் நேசிப்பதாகும். எனவே (நபியை) பின்பற்றாதவர் அல்லாஹ்வை நேசிக்க மாட்டார், அல்லாஹ்வும் அவரை நேசிக்க மாட்டான்.’
•      அன்பின் சகோதரா! நாம் நபி வழியைப் பின் பற்றுகின்றோமா?
•      நற்குணம், வியாபாரம், வணக்க வழிபாடு போன்ற வைகளில் நபி வழியை பின் பற்றுகின்றோமா?
•      ஹஜ், நோன்பு, ஸகாத், தொழுகை போன்றவை களில் நபி வழியை பின்பற்றுகின்றோமா?
•      அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதிலும், அவன் மீது நம்பிக்கை வைப்பதிலும், அவனிடம் உதவி தேடுவதிலும், குர் ஆனை ஓதுதல், பிரார்த்தித்தல், திக்ர் செய்தல் போன்றவைகளிலும் நபி வழியை பின் பற்றுகிறோமா?
•      (முஸ்லிம்) சகோதர்களுடன் நட்பு வைப்பதிலும், அண்டை வீட்டாருக்கு உபகாரம் புரிவதிலும், பெற்றோருக்கு வழிப்படுவதிலும், விருந்தினரை உபசரிப்பதிலும், உறவினர்களை சேர்ந்து நடப்ப திலும், நோயாளிகளை சேமம் விசாரிப்பதிலும், ஜனாஸாக்களை தொடர்ந்து செல்வதிலும், இயலாதவர்களுக்கு உபகாரம் புரிவதிலும், மிஸ்கீன்கள், புகராக்கள், அனாதைகள் போன்றோ ரின் தேவைகளை நிறைவு செய்வதிலும் நபி வழியை பின் பற்றுகிறோமா?
•      நபியவர்களின் பணிவு, ஒழுக்கம், கிருபை, நளினம், இறக்கம், கொடை, புன்முறுவல், மன்னிப்பு, நற்குணம் போன்றவைகளில் அவர்களின் வழியை பின்பற்றுகிறோமா?
•      நபியவர்களின் சக்தி, வீரம், அரசியல், யுத்த, சமாதான காலங்களில் அவர்களுடைய அணுகுமுறை, உடன் படிக்கை, படையணிகளை தயார் செய்தல், வழியனுப்புதல், அல்லாஹ்வின் எதிரிகளை எதிர் கொள்ளல் போன்றவைகளில் அவர்களின் வழி முறையைப் பின்பற்றுகிறோமா?
அன்பின் சகோதரா! ஒருவன் தன்னுடைய இதயத்தில் (அல்லாஹ்வின்) நேசம் எனும் மரத்தை நட்டி, அதற்கு உளத்தூய்மை, நபிவழியை பின்பற்றுதல் எனும் நீரை பாய்ச்சினால், அல்லாஹ்வின் அனுமதிக் கேட்ப எப்போதும் அது பழங் கொடுத்துக் கொண்டே இருக்கும், அம்மரத்தின் வேர்கள் இதயத்தின்  ஆழத்தில் பதிந்திருக்கும், அதன் கிளை கள் ஸித்ரதுல் முன்தஹாவுடன் முட்டிக் கொண்டி ருக்க, நேசிப்பவனின் முயற்சிகள் எத்தகைய தங்கு தடைகளும் இன்றி குறித்த நண்பனிடம் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ
தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். பாதிர் 10.
(இறை)நேசர்களின் பண்புகள்
(அல்லாஹ்வை) நேசிப்பவர்களின் பண்புகளை அல்லாஹ் அல்குர்ஆனில் பின் வருமாறு கூறி யுள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.”  அல் மாஇதா 54.
நேசிப்பவர்களுக்குரிய நான்கு அடையாளங்களை அல்லாஹ் இங்கு குறிப்பிட்டுள்ளான்.
ஒன்று; "அவர்கள்  நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாக இருப்பார்கள்". அதாவது முஃமின்களுடன் மிக கருணையுள்ளவர்களாக இருப்பார்கள். (Atha) அதா (ரஹ்) கூறினார்கள் முஃமின்களுடன், ஒரு தந்தை தனது தனயனுடன் கொண்டிருக்கும் பாசத்துடனும், இறை மறுப்பாளர்களுடன் ஒரு சிங்கம் தனது வேட்டைப் பிராணியுடன்  நடந்து கொள்ளும் முறையிலும் பழகுவார்கள். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களும் முஃமீன்களுடன் நளினம், இரக்கம், கிருபை உடையவர்களாக பழகினார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ
“(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.”    ஆலு இம்ரான் 159.
இரண்டு; அவர்கள் (ஏக இறைவனை மறுப்போரிடம் தலை நிமிர்ந்து இருப்பார்கள்). இப்னு கஸீர் (ரஹ்) கூறினார்கள்; இவை தான் ஒரு பூரணமான இறை விசுவாசியின் பண்புகளாகும். அதாவது ஒரு இறைவிசுவாசி தன் சகோதரர்கள், நேசர்கள் போன்றோருடன் மிகப் பணிவாகவும், எதிரிகளுடன் தலை நிமிர்ந்தவனாகவும் இருப்பான்.

அல்லாஹ் கூறுகின்றான்;
مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ ۚ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ
“முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.”  அல் பத்ஹ் 29.

இறைத்தூதரின் பண்புகளை விபரிக்கும் புத்தகங்களில் கூட “அவர்கள் சிரிக்கக்கூடியவர்கள்”, “போர் புரியக் கூடியவர்கள்” என்றும் கூறப்பட்டுள்ளது அதாவது நபியவர்கள் அவர்களுடைய நேசர்களுடன் சிரிப்பவர் களாகவும், எதிரிகளுடன் போர் புரியக் கூடியவர் களாகவும் இருந்தார்கள்.

மூன்று; அல்லாஹ்வுடன் கொண்டிருக்கும் நேசத்தை நிச்சயிக்கு முகமாக, தம் ஆன்மாக்களாலும், பொருட் களாலும், உறுப்புக்களாலும் அவர்கள் அல்லாஹ் வின் பாதையில் அறப்போர் புரிவார்கள்.

நான்கு; “பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள்” இதுவே உண்மை சினேகிதனின் அடையாளமாகும். காரணம் பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அஞ்சுபவன் ஒரு போதும் உண்மை சினேகிதனாக இருக்க மாட்டான்.  

சுபசோபனமும் எச்சரிக்கையும்
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, “நான் இன்ன மனிதரை நேசிக்கிறேன். நீரும் நேசிப்பீராக” என்று கூறுகின்றான். ஆகவே, ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில், “அல்லாஹ் இன்ன மனிதரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார் கள். பிறகு பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
அவ்வாறே, அல்லாஹ் ஓர் அடியார் மீது  கோபம்  கொள்ளும் போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, “நான் இன்ன மனிதர் மீது  கோபம் கொண்டுள்ளேன். நீரும் அவர் மீது  கோபம் கொள்வீராக” என்று கூறுகின்றான். ஆகவே,  ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவர் மீது  கோபம் கொள்கிறார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள், விண்ணகத்தாரிடையே, “அல்லாஹ் இன்ன மனிதர் மீது கோபம் கொண்டுள்ளான். ஆகவே,  நீங்களும் அவர்மீது கோபம் கொள்ளுங்கள்” என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவர் மீது  கோபம் கொள்வார்கள். பிறகு பூமியில் அவர் மீது  கோபம்  ஏற்படுத்தப் படுகிறது.’ இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் ஸஹீஹ் முஸ்லிம்.
அன்பின் சகோதரா! நீயும் அல்லாஹ்வை நேசிப்பவர்களில் ஒருவனாக இருக்க விரும்பினால், அல்குர்ஆனில் அவன் நேசிப்பதாக பிரஸ்தாபித் துள்ள வர்களில் ஒருவனாக இருக்க முயற்சி செய். இதோ அவர்களின் விபரம். 
1-    நன்மை செய்பவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
“நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.” அல்பகரா 195.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
“அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்கு வார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.” ஆலு இம்ரான் 134.
2-    திருந்திக் கொள்பவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ
“திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்பு கிறான்.”  அல் பகரா 222.
3-    தூய்மையானவர்கள். 
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
“திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்பு கிறான் எனக் கூறுவீராக! “அல் பகரா 222.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
“அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ள னர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.”  அத்தவ்பா 108.
4-    (இறைவனை) அஞ்சுபவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِ وَاتَّقَىٰ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
“அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்பு கிறான்.” ஆலு இம்ரான் 76.
5-    சகித்துக் கொள்பவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا ۗ وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
“அவர்கள் தளர்ந்து விடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்து விடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.” ஆலு இம்ரான் 146.
6-    (அல்லாஹ்வை) சார்ந்திருப்பவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِۚ
“(முஹம்மதே நீர்) உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக!” ஆலு இம்ரான் 159.
7-    நீதி செலுத்துபவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِنْ حَكَمْتَ فَاحْكُم بَيْنَهُم بِالْقِسْطِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
“அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.” அல்மாயிதா 42.
8-    உண்மையான போராளிகள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانٌ مَّرْصُوصٌ
“உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான்.” அஸ்ஸப் 4.
அல்லாஹ்வின் பகைவர்கள்
அன்புக்குரிய சகோதரா! அல்லாஹ் தன் திருமறையில் இனம் காட்டித் தந்துள்ள அவன் விரும்பாத நண்பர்களிடமிருந்து நீ விலகி இருப்பது கட்டாயமாகும், அவர்களின் விபரம் வருமாறு;
1-    இறைமறுப்பாளர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக! ஆலு இம்ரான் 32.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
“அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.” அல் பகரா 276.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
“நம்பிக்கை கொண்டோரை விட்டும் (துரோகத் தை) அல்லாஹ் தடுத்து நிறுத்துகிறான். துரோகம் செய்வோரையும், நன்றி கெட்டவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.” அல் ஹஜ் 38.
2-    வரம்பு மீருவோர்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
“உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” அல் பகரா 190.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
“உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசிய மாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.” அல் அஃராப் 55.
3-    குழப்பம் விளைவிப்போர்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا ۚ وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
“அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.” அல் மாஇதா 64.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
“பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.” அல் கஸஸ் 77.
4-    அநீதி இழைப்போர்.
அல்லாஹ் கூறுகின்றான்;
فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
“மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.” அஷ்ஷூரா 40.
5-    கர்வம் கொண்டு பெருமையடிப்போர்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
“பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” அன்னிஸா 36.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
“பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.” லுக்மான் 18.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
لَا جَرَمَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
“அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்து வதையும் அல்லாஹ் அறிவான் என்பதில் சந்தேகம் இல்லை. பெருமையடிப்போரை அவன் விரும்ப மாட்டான்.” அன்னஹ்ல் 23.
6-    மோசடி செய்வோர்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِمَّا تَخَافَنَّ مِن قَوْمٍ خِيَانَةً فَانبِذْ إِلَيْهِمْ عَلَىٰ سَوَاءٍ ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ
“ஒரு சமுதாயத்தவர் மோசடி செய்வார்கள் என்று நீர் அஞ்சினால் அவர்களிடம் (செய்த உடன் படிக்கையை) நீரும் சமமாக முறிப்பீராக! மோசடி செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.” அல் அன்பால் 58.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنفُسَهُمْ ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمًا
“தமக்குத் தாமே துரோகம் செய்வோருக்காக நீர் வாதிடாதீர்! துரோகம் செய்யும் பாவியை அல்லாஹ் விரும்ப மாட்டான்.” அன்னிஸா 107.
7-    தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவோர்.
அல்லாஹ் கூறுகின்றான்;
لَّا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ
“அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கி றான்.” அன்னிஸா 148.
8-    வீண் விரயம் செய்வோர்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
“உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.” அல் அஃராப் 31.
9-    மமதை கொள்வோர்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
“மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டு வீராக!”  அல் கஸஸ் 76.
நேசத்தின் படித்தரங்கள்
இமாம் இப்னு ரஜப் (ரஹ்) கூறினார்கள்; அல்லாஹ்வை நேசிப்பது இரண்டு படித்தரங்களைக் கொண்டது.
முதலாம் படித்தரம்; கண்டிப்பான நேசம் எனப்படும். அதாவது அல்லாஹ் அவனுக்கு அவசியப் படுத்திய வைகளை நேசித்து, அவனுக்கு தடுத்தவைகளை வெறுப்பதுடன் கூடிய அல்லாஹ்வின் நேசம் இது கட்டாயமாகும். மேலும் அல்லாஹ்வின் ஏவல் களையும் விளக்கல்களையும் (மக்களுக்கு) போதித்த அவனுடைய தூதரை நேசிப்பதும் கட்டயமாகும், அவர்களை தம் குடும்பத்தினர் ஆத்மாக்கள் போன்றவர்களை விட நேசித்து, மார்க்கத்தில் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வைகளை திருப்தியுடன் ஏற்றுக் கொள்வதும், ஏனைய நபிமார்கள், தூதர்கள், அவர்களைப் பின்பற்றியவர்கள் அனைவரையும் நேசிப்பதும் கட்டாயமாகும். அத்துடன் இறை மறுப்பாளர் களையும், தீயவர்களையும் பொதுவாகவும், மொத்தமாகவும் வெறுப்பது கட்டாயமாகும்.  
கடமையான இறைவிசுவாசத்தின் அளவை பூர்த்தி செய்ய (விரும்புவருக்கு) இது அடிப்படையாகிறது. ஆகவே இவற்றில் தோற்றுவிக்கப்படும் பாதிப்புகள் கடமையான இறைவிசுவாசத்தின் பூரணத்துவத்தை சீர்குழைக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا
“(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.” அன்னிஸா 65. 
கண்டிப்பான இறை நேசத்தை நிறைவு செய்ய (விரும்புபவர்) கடமையானவைகளை எடுத்து நடப்ப தும்,  விளக்கப்பட்டவைகளை தவிர்ந்து நடப்பதும் கட்டாயமாகும். அவற்றில் குறைவு செய்பவர் நிறைவான இறை நேசத்தில் குறைவை ஏற்பத்துகிறார். 
ஹஸன் இப்னு ஆதம் கூறினார்; “நீ அல்லாஹ்வை நேசித்தால் அல்லாஹ் உன்னை நேசிப்பான். அல்லாஹ்வுக்கு வழிப்படுவதை  நீ நேசிக்கும் வரை அவனை உன்னால் நேசிக்க முடியாது.”
துன்னூன் என்பவரிடம் நான் எப்போது அல்லாஹ்வை நேசித்தவனாவேன்? என வினவப் பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் வெறுக்கக் கூடியவைகள், கற்றாலையை விட  கசப்பாக உன்னிடத்தில் மாறி விட்ட பிறகு என்றார்கள்.
பிஷ்ர் இப்னு அஸ்ஸிர்ரீ கூறினார்; உன் நண்பனுக்கு வெறுப்பூட்டக் கூடியவைகளை நீ நேசிப்பது நட்பின் அடையாளமன்று.
அபூ யஃகூப் அன்னஹர்ஜூரி கூறினார்; அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்காது அவனுடைய நட்பை வாதிடுபவர்கள் பொய்யர்கள். மேலும் அவனை பயப்படாமல் நட்பை வாதிடுபவர்கள் ஏமாற்ற மடைந்தவர்கள்.  
   இரண்டாம் படித்தரம். (அல்லாஹ்வின் பக்கம்) முந்திக் கொண்டவர்களுக்கும், (அவனிடம்) நெருக்க மானவர்களுக்கும் உரிய படித்தரம். அதாவது ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பதுடன் அவன் விரும்பக்கூடிய நபிலான வணக்கங்களை எடுத்து நடப்பதும், அவன் வெறுக்கக்கூடிய மிகச் சிறிய விடயங்களைக் கூட வெறுத்து நடப்பதும். மனதுக்கு கஷ்டமான துயரங்களின் போது அவனுடைய விதியை ஏற்றுக் கொள்வதுமாகும்.
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹுத் தஆலா கூறுவதாக ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ”எனது நேசனை பகைத்துக் கொண்டவனுக்கு எதிராக நான் போர்ப் பிரகடனம் செய்வேன். எனது அடியானின் மீது நான் பர்ளாக்கிய கடமைகள் மூலம் என்னை அவன் நெருங்குவது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.
தொடர்ந்தும் எனது அடியான் மேலதிகமான வணக்க வழிபாடுகள் மூலம் நான் அவனை நேசிக்கும் வரை நெருங்கிக் கொண்டிருப்பான். நான் அவனை நேசித்து விட்டால் அவன் செவிமடுக்கின்ற செவிப்புலனாக நான் இருப்பேன். அவன் பார்க்கின்ற பார்வைப் புலனாக நான் இருப்பேன். அவன் பிடிக்கின்ற கையாக நான் இருப்பேன். அவன் நடந்து செல்லும் காலாக நான் இருப்பேன். அவன் என்னிடம் கேட்டால் அவனுக்கு நான் கொடுப்பேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் நிச்சயமாக அவனுக்கு பாதுகாப்பை வழங்குவேன்.” (ஸஹீஹுல் புகாரி)
ஆமிர் இப்னு கைஸ் கூறினார்; எனது துன்பங்களை இலகுபடுத்தக் கூடயவாறும், செயல்களை திருப்தி கொள்ளக் கூடியவாறும் அல்லாஹ்வை நான் நேசித்துள்ளேன், ஆகவே காலையிலும் மாலையிலும் எனக்கு நிகழ்பவைகளை பொருட் படுத்துவதில்லை.  
பிரார்த்தனையும், எதிர்பார்ப்பும்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் (ரலி) அறிவிக்கிறார்கள்; யா அல்லாஹ்! நல்ல வற்றை செய்வதையும், தீயவற்றை விடுவதையும், ஏழைகளை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன். பாவ மன்னிப்பை உன்னிடம் கேட்கிறேன். உனது அடியார் களைச் சோதிக்க நீ நாடினால் அச்சோதனையில் நான் சிக்காமல் என்னை மரணிக்கச் செய்வாயாக.
யா அல்லாஹ்! உனது நேசத்தையும், உன்னை நேசிப்போர் நேசத்தையும், உனது நேசத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் அனைத்து செயல்களையும் நேசிப்பதையும், உன்னிடம் கேட்கிறேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அவையே உண்மை. அவைகளை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். நூல் அஹ்மத், திர்மிதி ஷையிக் அல்பானி இதை ஸஹீஹ் எனக் கூறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் நேசத்தை உண்டாக்கும் காரணிகள்
அன்பின் சகோதரா! அல்லாஹ்வின் நேசத்தை உண்டாக்கும் காரணிகளை நீ சுறுக்கமாக விளங்கிக் கொள்ள ஆவலோடு இருப்பாய், அவற்றில் சிலதை நான் முன்னரே கூறியுள்ளேன்.
சுறுக்கமாக கூறுவதாயின் முஃமின்கள் அல்லாஹ்வை நேசிக்கும் முறை; அவர்கள் அல்லாஹ்வை பின்பற்றுவதும், அவனுடைய விலக்கள்களை தவிர்ந்து கொள்வதும், அவனுக்கு வழிப்படுவதை விரும்புவதும், அவனுடைய திருப்தியை வேண்டியிருப்பதுமாகும்.
அல்லாஹ் முஃமின்களை நேசிக்கும் முறை; அல்லாஹ் அவர்களை புகழ்வதும், அவர்களுக்கு நட்கூலி வழங்குவதும், அவர்களை மன்னிப்பதும், அருள் புரிவதும், அவர்களை பாவங்களிலிருந்து காப்பதும், தவ்பா, இஸ்திஃபார் போன்றவைகள் செய்ய அவர்களுக்கு அனுகூலம் புரிவதுமாகும்.
இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் நேசத்தை உண்டாக்கும் சில காரணிகளை பின்வருமாறு சுறுக்கமாக விளக்கி யுள்ளார்கள்;
1-    அல் குர்ஆனின் கருத்துக்களை விளங்கி, சிந்தித்து ஓதுதல்.
2-    (பர்லான) கடமையான வணக்கங்களுடன் (நபிலான) உபரி வணக்கங்களையும் செய்தல்.
3-    இதயத்தாலும், நாவாலும், செயலாலும், எப்பொழுதும் அல்லாஹ்வை (திக்ர் செய்து) ஞாபகப்படுத்திக் கொள்தல், காரணம் ஞாபக மூட்டலின் அளவைப் பொறுத்தே நேசத்தின் அளவும் மதிப்பிடப்படுகிறது. 
4-    மனோஇச்சை மிகைத்த இக்கட்டான நிலையிலும், ஏனையவர்களுக்குரிய நேசத்தை விட அல்லாஹ்வின் நேசத்தையே முன்னிலைப் படுத்தல்.
5-    அல்லாஹ்வை அவனுடைய திருநாமங்கள், பண்புகள், செயல்கள் சகிதம் விளங்கிக் கொள்ளுதல், அவ்வாறு அல்லாஹ்வை அறிந்தவர்  கண்டிப்பாக அவனை நேசிப்பார். 
6-    அல்லாஹ் செய்துள்ள நன்மைகள், உபகாரங்கள், அருட்கொடைகள், இன்னும் அவனுடைய மறைவான, பகிரங்கமான நிஃமத்துகள் போன்ற வைகளை அவதானிப்பதும் அவனுடைய நேசத்துக்கு வழிவகுக்கும்.
7-    இரவின் மூன்றில் இரு பகுதி கழிந்து, அல்லாஹ் முதல் வானுக்கு இறங்கும் வேலையில், அவனுடன் சம்பாஷிப்பதற்கும், அவனுடைய திருக்குர்ஆனை ஓதுவதற்கும், இதயத்தால் அவனை ஞாபகமூட்டு வதற்கும், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் ஈற்றில் அவனிடமே பாவமன்னிப்புக் கோறுவதற்கும் தனித்திருத்தல். 
8-    (அல்லாஹ்வின்) உண்மையான நேசர்களுடன் நட்பு வைத்தல், அவர்களுடைய நல்ல பேச்சுக்க ளுக்கு செவிசாய்த்தல், தனக்கு அல்லது பிறருக்கு நன்மைபயக்கும் விடயத்தில்  மாத்திரம் அவர் களுடன் பேசுதல்.
9-    அல்லாஹ்வுக்கும் தன் இதயத்துக்குமிடையில் திரையிடும் எக்காரியத்திலும் ஈடுபடாதிருத்தல்.
மேற்கூறப்பட்ட ஒன்பது வழிகளினூடகவே அல்லாஹ்வின் நேசர்கள் அவனுடைய அன்பைப் பெற்றார்கள். ஆகவே பின் வரும் இரண்டு விடயங்களை கடைபிடப்பதன் மூலமே அவற்றை முழுமையாக பெற முடியும்.
1-    இ(றைநேசத்)தை ஏற்க ஒருவருடைய ஆன்மா தயாராக இருத்தல்.
2-    உள்ளறிவால் இவற்றை விளங்கிக் கொள்ளல்.
எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் ஸலத்தும் ஸலாமும் சொல்வானாக ஆமீன்.     

உங்கள் கருத்துக்களை எமக்கு அறிவிக்கவும்.           

[email protected]