இஸ்லாமிய ஏகத்துவக் கோட்பாடு

கோட்பாடுகளும் அவற்றின் அவசியமும், அகீதாவின் சரியான அடிப்படைகளும் முன்னோரின் அணுகு முறையும், மனித வழிகேட்டின் ஆரம்பமும், பாதுகாப்புப் பெரும் வழிகளும். அதிகாரத்தில் ஏகத்தும், அல்குர்ஆன், ஸுன்னாவின் பார்வையில் றப்பு, வழி தவறிய சமூக சிந்தனையில் “றப்பின்” கருத்து, பிழையான கற்பனை வாதத்திற்குப் பதில், அல்லாஹ்வின் கட்டளைக்கு பிரபஞ்சம் அடிபணிதல், அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும் நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை, தெய்வீகத் தன்மையில் ஏகத்துவம் உறுதி பெறல்


இஸ்லாமிய ஏகத்துவக் கோட்பாடு


அஷ் ஷெய்க் ஸாலிஹ் இப்னு பெளஸான் அல் பெளஸான்
ஆசிரியர்

ஷெய்க் Y.N. இஸ்மாயில் இமாம்
மொழி பெயர்த்தோன்

ஜாசிம் இப்னு தஇயான் / முஹம்மத் அமீன்
மீளாய்வு செய்தவர்கள்
 
عقيدة التوحيد
وبيان مايضادها أو ينقصها من الشرك
الأكبر والأصغر والتعطيل والبدع
(باللغة التاميلية)


الشيخ صالح بن فوزان الفوزان
ترجمة:
الشيخ سيد اسماعيل امام بن يحي مولانا
مراجعة:
محمد أمين عبد المجيد و جاسم دعيان

 

 

i. ஆசிரியர் முன்னுரை
ii. முதலாம் பாடத்தின் உள்ளடக்கம்
1. நூல் அறிமுகம்
1.1 கோட்பாடுகளும் இஸ்லாம் மார்க்கத்தில் அதன் அவசியமும்
1.2 அகீதாவின் சரியான அடிப்படைகளும் இவ்விடயத்தில் முன்னோரின் அணுகு முறையும்
1.3 மனித வாழ்வில் வழிகேட்டின் ஆரம்பமும், அதிலிருந்து பாதுகாப்புப் பெரும் வழி முறைகளும்
2.இரண்டாம் அத்தியாயத்தின் உள்ளடக்கம்
2.1 அதிகாரத்தில் ஏகத்தும்
2.2 அல்குர்ஆன், ஸுன்னாவின் பார்வையில் றப்பு
2.3 வழி தவறிய சமூக சிந்தனையில் “றப்பின்” கருத்து
2.4 பிழையான கற்பனை வாதத்திற்குப் பதில்
2.5 அல்லாஹ்வின் கட்டளைக்கு  பிரபஞ்சம் அடிபணிதல்
2.6 அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும்  நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை
2.7 தெய்வீகத் தன்மையில் ஏகத்துவம் உறுதி பெறல்

 

 


 
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

 

முன்னுரை
    உலகத்தார் யாவரையும் பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் சொந்தம். மேலும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும், உண்மையாளரும், நம்பிகைக்குரியவருமான அல்லாஹ்வின் தூதரும் நமது நபியுமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார், மற்றும் தோழர்கள் மீதும் உண்டாவதாக.
    ஏகத்துவ ஞானம் பற்றிய இந்நூலை மிகுந்த கவணத்துடன் இலகுவான சொற்கள் மூலம், சுருக்கமாக எழுதியுள்ளேன். மேலும் இந்நூலில் அடங்கியிருக்கும் விடயங்கள் நமது மார்க்க மேதைகளான ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்), இப்னுல் கையிம் (ரஹ்), முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) என்போரினதும், மற்றும் அவர்களின் சீடர்களினதும் நூல்களில் இருந்து எடுத்துக் கொண்டவைகளாகும்.
      மனிதன் மேற் கொள்ளும் காரியம் சரியாகவும், அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும் இருப்பதற்கு இஸ்லாமிய அகீதா- கோட்பாடுகள் பற்றிய அறிவைக் கற்பதும், அதனைக் கற்றுக் கொடுப்பதும் மிகவும் அவசியம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக இஸ்லாமியக் கொள்கைக் கோட்பாடுகளை விட்டு விலகிச் செல்லும் நாஸ்திகம், சூபித்துவம், துறவரம், மற்றும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்குப் புறம்பான அநாச்சாரங்கள் என்பன மலிந்து போயுள்ள இந்நாளில் இஸ்லாமிய அகீதாவின் பால் கவணம் செலுத்துவது மிகவும் கட்டாயக் காரியமாகும். ஏனெனில் இஸ்லாத்தின் சரியான அகீதா எனும் ஆயுதம் ஏந்தாத முஸ்லிம் பிரஜையைப் பொருத்த மட்டில் இவை ஆபத்தானவை என்பதில் சந்தேக மில்லை. எனவே இஸ்லாமிய அகீதா-கோட்பாடுகளை அதன் அடிப்படை ஆதார நூல்களிலிருந்து பெற்று அதனை முஸ்லிம் சமூகத்திற்குக் கற்றுக் கொடுப்பது மிக மிக அவசியம் என்ற முறையில் இந்நூலை நான் முன் வைக்கின்றேன்..
وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه
(ஆசிரியர்)

 

 

 

 

 

 

 

முதலாம் பாடம் –
அகீதா  ஓரு ஆய்வு
நூல் அறிமுகம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோ னுமாகி அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
    கண்ணியத்திற்குரிய அஷ்ஷைக் ஸாலிஹ் பின் பௌஸான் அல் பௌஸான் அவர்கள் எழுதிய عقيدة التوحيد எனும் நூலே இஸ்லாமிய ஏக இறை கோட்பாடு என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த இஸ்லாமிய ஏக இறை கொள்கையானது ஏனைய ஏக இறை கொள்கையில் இருந்து எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதையும், இஸ்லாமிய ஏக இறை கொள்கையின் யதார்த்தம் என்னவென்பதையும் தெளிவு படுத்துகிறது. இதனை வாசகர் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஷெய்க் அவர்கள் விடயங்களை அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆதாரங்களுடன் ஆறு பாடங்களில் உள்ளடக்கி யிருக்கிறார். மேலும் ஒவ்வாரு பாடத்தையும் பல பிரிவுகளாகப் பிரித்து அவற்றுக்குத் தனித்தனி தலைப்புக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இது விடயத்தை இலகுவாக புரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தருகின்றது. எனவே இதன் மூலம் பயன் கிட்ட அல்லாஹ் அருள் புரிவானாக.
(மொழி பெயர்த்தோன்)

முதலாம் பிரிவு
கோட்பாடுகளும் இஸ்லாம் மார்க்கத்தில் அதன் அவசியமும்
*அகீதா என்பதன் சொல்லின் கருத்து,   
    அகீதா எனும் சொல் “அக்து” என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.  இணைத்தல்,  கட்டுதல்  என்பதே  இதன்  பொருள்..
عَقَدْتُ عَلَيْهِ الْقَلْبَ   என்றால் என் மனதை அதனுடன் இணைத்துக் கொண்டேன். என்பதாகும். மேலும் அகீதா என்பது மனிதன் கடைப்பிடித்தொழுகும் பண்பையும் கொள்கையையும் குறிக்கும். இதன்படி நல்லொழுக்கமும் நற் கொள்கையும் உள்ள ஒருவனைப் பற்றிக் குறிப்பிடும் போது لَهُ عَقِيْدَةٌ حَسَنَةٌ  அவன் ஒரு நல்ல கொள்கைவாதி என்பர். மேலும் அகீதா என்பது உள்ளத்தின் செயலாகும். எனவே ஒரு பொருளின் மீது மனதுக்கிருக்கும் நம்பிக்கையையும், பற்றையும் அது குறிக்கும்.
*ஷரீஆவின் பார்வையில் அகீதா,
அல்லாஹ்வின் மீதும், அவனின் மலக்குகள், வேதங்கள், தூதர்கள், இறுதி நாள், நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் நியதிப்படியே நிகழ்கின்றன என்று நம்பிகை கொள்வதாகும். இவை ஈமானின்- நம்பிக்கையின் அடிப்படைகள் எனப்படும்.  
ஷரீஆவை, கோட்பாடு சார்ந்தவை என்றும், கிரியை சார்தவை என்றும் இரண்டு பகுதிகளாக வகைப் படுத்தலாம்  
ஷரீஆ கோட்பாடுகள்,
இதற்கு செயல் வடிவமில்லை. இதற்கு உதாரணமாக   அனைத்தையும் பரிபாலிப்பவன் அல்லாஹ்தான் என்று விசுவாசம் கொள்வதையும், அவனுக்கு அடிபணிதல் கடமை என்று ஏற்றுக் கொள்வதையும், மற்றும்  முன் குறிப்பிட்ட ஈமானின் ஏனைய அடிப்படைகளின் மீது விசுவாசம் கொள்வதையும் குறிப்பிடலாம். இவை ஷரீஆவின் அடிப்படைகள் எனப்படும்
ஷரீஆவின் கிரியைகள்,
இவற்றுக்கு  செயல் வடிவம் உண்டு, எனவே இவை செயல் வடிவங்களுடன் தொடர்புடையவை. இதற்கு தொழுகை, ஸகாத்து, நோன்பு போன்று ஏனைய கிரியைகளையும் அதன் சட்டங்களையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். இவை ஷரீஆவின் கிளைகள் எனப்படும். ஏனெனில் இஸ்லாமிய கோட்பாடுகள் சீராக இருக்குமிடத்தே, அமல்கள், கிரியைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக அமையும்.
எனவே சரியான கோட்பாடுதான் மார்க்கதின் அத்திவாரமாகும். அதன் மீதே மார்க்கம் நிறுவப்பட்டுள்ளது. அது சரியாக இருக்குமிடத்தே கிரியைகளும் சரியானவையாக அமையப் பெறும். அவை தவறாக இருக்கும் பட்சத்தில் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதனையே அல்லாஹ்வின் வாக்கு இப்படி இயம்புகின்றது.
فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ﴿١١٠الكهف﴾
   “எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது  (அவனையே) வணங்கி வருவாராக. (18/110)
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ﴿٦٥﴾
“மேலும் நீங்கள் இணை வைத்தால் உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் என்று உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொரு வருக்கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது. (39/65)
فَاعْبُدِ اللَّـهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ ﴿٢الزمر﴾
    “முற்றிலும் அல்லாஹ’வுக்கு வழிப்பட்டு பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வாருங்கள்.” (39/2)
أَلَا لِلَّـهِ الدِّينُ الْخَالِصُ ۚ(الزمر3)
    “பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (39/3)
இத் திரு வசனங்கள் கிரியைகள் யாவும், இணை வைக்கும் காரியங்களை விட்டும் நீங்கி, அல்லாஹ் ஒருவனுக்கே என்ற தூய எண்ணத்தில் மேற் கொள்ளப்பட்டாலன்றி அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையே தெளிவு படுத்துகின்றன. இது போன்று இன்னும் ஏராளமான வசனங்கள் இதனை வழியுறுத்துகின்றன. எனவே தான் அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் முதலில்  அகீதாவை சீர் படுத்தும் விடயத்தில் கவணம் செலுத்தினர். ஆகையால் அல்லாஹ் ஒருவனை மாத்திரம் வணங்கி அவனைத் தவிர்ந்த அனைத்து வழிபாடுகளையும் ஒதுக்கி விடும்படி தங்களின் சமூகத்தினருக்கு அவர்கள் முதலில் அழைப்பு விடுத்தனர். இதனையே அல்லாஹ்வின் திருவசனம் இவ்வாறு எடுத்துரைக்கின்றது.
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّـهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ (النحل/36)
“ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பி வைத்தோம். அவர்கள் அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்,” என்றனர்.” (16/36)
    மேலும் ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்தாரை நோக்கி முதலில் கூறியது,
اعْبُدُوا اللَّـهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُ  (الأعراف/59)
“நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை.” (7/59) என்றுதான். இதனையே தங்களின் சமூகத்தினரிடம் நூஹ், ஹூது, ஸாலிஹ், ஷுஐப் மற்றும் ஏனைய நபிமார்கள் யாவரும் கூறினர்.
மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு  நுபுவ்வத் கிடைத்த பின்னர், அவர்கள் மக்காவில் இருந்த பதின்மூன்று ஆண்டுகளிலும் மக்களை ஏகத்துவத்தின் பால் அழைத்து அவர்களின் அகீதா கோட்பாட்டை சீர்திருத்தும் காரியத்திலேயே ஈடுபட்டிருந்தார்கள். ஏனெனில் இதுவே மார்க்கத்தின் அடிப்படை. இதன் மீதே இஸ்லாம் மாரக்கத்தின் சகல கருமங்களும் நிருவப்பட்டுள்ளன என்பதால்தான். எனவே தான் எல்லா காலங்களிலும் தோன்றிய சீர்திருத்தவாதிகள் நபிமார்களினதும், ரஸுல்மார்களினதும் இந்த வழி முறையைப் பின் தொடர்ந்தனர். எனவே இதன்படி அவர்கள் தங்களின் பிரச்சாரத்தை ஏக இறை கொள்கையிலிருந்து, அதாவது அகீதா கோட்பாடுகளை சீர்திருத்தும் காரியத்திலிருந்து ஆரம்பம் செய்தனர். அதன் பின்னரே மார்க்கத்தின் ஏனைய விடயங்களின் பால் அவர்கள் கவணம் செலுத்தினர்.  
            

 

 

இரண்டாம் பிரிவு
அகீதாவின் சரியான அடிப்படைகளும்
இவ்விடயத்தில் முன்னோரின் அணுகு முறையும்
ஒரு விடயம் இன்னொரு விடயத்தில் தஙகியிருப்பதைتَوْفِيْقِيَّةْ , என்பர். இதன்படி இஸ்லாமிய அகீதா கோட்பாடுகள் யாவும் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரத்துடன் இணைகப்பட்டிருப்பதன் காரணமாக. இதனை تَوْفِيْقِيَّةْ என்பர். எனவே மார்க்கத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வின் புறத்திலிருந்து உறுதி செய்யப்படாத எந்தவொரு கோட்பாடும் இஸ்லாமிய அகீதாவாக ஆகாது. ஆகையால் இவ்விடயத்தில் மனித ஆய்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் இடமில்லை. எனவே அதன் அடிப்படைகள் அல்குர்ஆனுடனும், ஸுன்னாவுடனும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அல்லாஹ்வைப் பற்றியும், அவனிடம் கட்டாயம் இருக்க வேண்டியது எது? இருக்கக் கூடதவை எது? என்பதையும் நன்கு அறிந்தவன் அவனே. இதனை அவனை விடவும் மிகவும் அறிந்த எவரும் இல்லை. மேலும் அவனையடுத்து இதனை நன்கு அறிந்தவர் ரஸுல் (ஸல்) அவர்களே. எனவே அவர்களை விடவும் இதனை நன்கு அறிந்வர் எவரும் இல்லை. எனவேதான் சான்றோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களும், அவர்களைப் பின் தொடர்ந்தவர்களும் அகீதாவைத் தெரிந்து கொள்வதற்கான வழியை அல்குர்ஆனுடனும், ஸுன்னாவுடனும் மட்டுப்படுத்திக் கொண்டனர்.

எனவே அல்லாஹ்வின் விவகாரத்தில் அல்குர்ஆனும் ஸுன்னாவும் எதனை உறுதி செய்கின்றதோ அதன் மீது அவர்கள் விசுவாசம் கொண்டனர். அதனைத் தங்களின் கொள்கையாக ஏற்று அதன் படி செயலாற்றினர். மேலும் அல்குர்ஆனும், ஸுன்னாவும் உறுதி படுத்தாத அனைத்தையும் அவர்கள் நிராகரித்தனர். அவை எதனையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவேதான் அகீதா விடயத்தில் இவர்கள் மத்தியில் முரண்பாடுகள் தோன்றவில்லை. எனவே அகீதா பற்றிய அவர்களின் கொள்கை ஒன்றாகவும், அவர்களின் ஜமாஅத்து ஒன்றாகவும் விளங்கியது. ஏனெனில் யாரெல்லாம் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் வழி முறையையும் கடைப்பிடித்து வருகின்றார்களோ அவர்களின் வாக்கு ஒருமித்த வாக்காகவும், அவர்களின் கொள்கை சரியானதாகவும், அவர்களின் வழி ஒரே வழியாகவும் இருக்கும் என்பதற்கு அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். இதனை அல்லாஹ்வின் வாக்குகள் உறுதி செய்கின்றன.
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّـهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ (آل عمران/103)
“மேலும் நீங்கள் அவைரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் எனும்) கயிற்பை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்திட வேண்டாம்.”(3/103)
فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ ﴿/طه/١٢٣﴾  
  “நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்னுடைய நேர்வழியைப் பினபற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார். நஷ்டமடையவும் மாட்டார்.” (20/123)
என்று சரியான அகீதாவை ஏற்று நடப்போரின் ஒருமித்த நிலையை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
எனவேதான் இவர்கள் ஈடேற்றம் பெற்ற கூட்டத்தினர் என்று அழைக்கப் படுகின்றனர். ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள், தங்களின் உம்மத்தினர் எழுபத்து மூன்று கூட்டதினராகப் பிரிந்து விடுவார்கள், இவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர மற்றவர்கள் யாவரும் நரகத்தில் இருப்பார்கள். என்று கூறிய போது, அந்தவொரு கூட்டத்தினர் யார்? என்று வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள். “எந்தக் கூட்டத்தினர் நானும் எனது தோழர்களும் இருக்கும் கொள்கையில் இருப்பார்களோ அந்தக் கூட்டமே அது.” என்று அவர்களைப் பற்றி ரஸூல் (ஸல்) அவர்கள் சாட்சி பகர்ந்தார்கள்.
எனவே சிலர்  அல்குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் புறம்பாக கிரேக்க தத்துவ ஞானிகளின் இறைக் கோட்பாட்டுத் தத்துவம் மற்றும் அவர்களின் தர்க்க சாஸ்திர விதிகளின் பிரகாரம்   தங்களின் அகீதா கொள்கையை நிறுவிக் கொண்ட போதுதான், இஸ்லாமிய அகீதா- கோட்பாடு விடயத்தில் தவறுகளும் பிளவுகளும் ஏற்பட்டன. அதனை அடுத்து கருத்து முரண்பாடுகளும், சமூகப் பிரிவுகளும் தோன்றி இஸ்லாமிய சமூகம் சின்னா பின்னமடைந்தது. இதிலிருந்து நபியவர்களிகளின் அந்த வாக்கின் உண்மை நிலை தெளிவாகின்றது.

 மூன்றாம் பிரிவு
மனித வாழ்வில் வழிகேட்டின் ஆரம்பமும்,
அதிலிருந்து பாதுகாப்புப் பெரும் வழி முறைகளும்
    
பயன் தரும் செயல்களுக்கு வழிகோழுவது சரியான அகீதாவே. எனவே அதனை விட்டும் விலகியிருப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும். ஆகையால் சரியான அகீதாவைப் பெறாதவன் சந்தேகங்களுக்கும், கற்பனைகளுக்கும் இரையாவது திண்ணம். சில வேளை அவை யாவும் அவனிடம் வந்து குவிந்துவிடும். அப்போது அவன் தன் வாழ்க்கையை மகிழ்ச்சிகர மானதாக ஆக்கிக் கொள்ளத் தேவையான சரியான பார்வையையும் சிந்தனையையும் இழந்து விடுவான். ஈற்றில் அவனுக்குத் தன் வாழ்க்கையே நெருக்கடிகள் நிறைந்ததாக ஆகிவிடும். அதன் பின் அவன் சரியான அகீதா கிடைக்கப் பெறாத அதிகமான மக்களைப் போன்று தற்கொலை மூலமேனும் தன் பிரச்சினை களிலிருந்து விடுதலை பெற முயலுவான்.
 சரியான அகீதா கோட்பாட்டினைப் பெறாத ஒரு சமூகம் காட்டு மிராண்டி சமூகமாகும். எனவே, இறை நிராகரிப்பிலிருக்கும் “காபிரான” சமூகங்களிடம் இருப்பது போன்று, அந்த சமூகத்திடம் அழிவின் பால் இட்டுச் செல்லும் பொருளாதார வளங்கள் அதிகமாக இருந்த போதிலும், அதனிடம் சரியான அகீதா கோட்பாடு இல்லாததன் காரணமாக அது மகிழ்ச்சியான வாழ்கைக்குத் தேவையான வளங்களை இழந்து விடும். ஏனெனில் இந்தப் பொருளாதார வளங்களில் இருந்து சரியான பயனைப் பெறுவதற்கு சரியான வழிகாட்டலும் அறிவுருத்தலும் அவசியம். அப்படியான வழிகாட்டல் இஸ்லாத்தின் சரியான அகீதா கோட்பாட்டையன்றி வேறு எதுவும் இல்லை. இது பற்றிய அல்லாஹ்வின் சில வாக்குகளைக் கவணிப்போம்.
يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا (51 /المؤمنون)
“என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமான வைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள்.” (23/51) என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும்
وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا ۖ يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ ۖ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ ﴿١٠﴾ أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ ۖ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿١١﴾ وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ ۖ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ ۖ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ ﴿١٢﴾ يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَاتٍ ۚ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا ۚ وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ ﴿١٣السبأ﴾
“மெய்யாகவே நாம் தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! “நீங்கள் அவருடன் துதி செய்யுங்கள்” மேலும் நீங்கள் வளையங்களை ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யுங்கள் என்று, அவருக்கு இரும்பையும் மெதுவாக்கித் தந்தோம். மேலும் நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாக இருக்கின்றேன்.”
“அன்றி ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம்.அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. அன்றி செம்பை ஊற்றுப் போல் நாம் அவருக்கு ஓடச் செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவர்களில் எவன் நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம்.”
“அவை அவர் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், .தண்ணீர் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், (கரும்புப் பாலை காய்ச்சும் பாத்திரங்களையும்) அசைக்க முடியாத பெரிய சமயல் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. தாவூதின் சந்ததிகளே! நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருங்கள். எனினும் என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் சொற்பமாகவே இருக்கின்றார்கள்.” என்று அல்லாஹ் கூறுகின்றான். (34/10,11,12.13)
எனவே அகீதா கோட்பாட்டின் பலம், பொருளாதார பலத்தின் மூலம் சிதரிப் போகாமல் இருப்பது அவசியம். அவ்வாறன்றி தவறான கொள்கைகளின் பக்கம் சாய்ந்து அது சிதரி விடுமாயின், சரியான அகீதாவைக் கொண்டிராத, பொருளாதார பலம் பொருந்திய காபிரான நாடுகளில் காண்பது போன்று பொருளாதார பலமானது அழிவுக்கும், வீழ்ச்சிக்கும் உரிய காரணியாக மாறி விடும்.
சரியான அகீதாவை விட்டும் விலகிச் செல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்திருப்பது அவசியம். அவையாவன:
•    சரியான அகீதாவைக் கற்காமலும், கற்பிக்காமலும் அதனைப் புறக்கனித்தல், அல்லது அதன் மீது போதிய கவணம் செலுத்தாமை. இதன் காரணமாக அடுத்து வரும் பரம்பரையினர் அகீதா என்றால் என்னவென்று  அறியும் வாய்ப்பை இழந்து விடுவர்.. எனவே இவ்வாறான சூழலில் மக்கள் உண்மையை தவறாகவும், தவறை உண்மையாகவும் கருதுவார்கள். இது பற்றி உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் கூறும் போது  மெளடீகத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாத மக்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தோன்றும் போது, அதன் சங்கிலி வளையல்கள் துண்டு துண்டாக உடைந்து போகும்” என்றார்கள்.
•    பெற்றோரும் மூதாதையினரும் செய்து வந்த காரியம் பிழையாக இருந்த போதிலும் அதனைப் பிடிவாதமாகக் கடைப் பிடித்தல். மேலும் தங்களுக்கு எதிரானவர்களிடம் சரியான கருத்தொன்று இருந்த போதிலும் அதனைப் புறக்கனித்தல். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّـهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ ﴿١٧٠البقرة﴾
“மேலும் அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் “அவ்வாறன்று, எவற்றின் மீது எங்களின் மூதாதைகள் இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்” எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருரந்தாலுமா?” (2/170)
*எவ்வாறு ஸுன்னாவுக்கு எதிரான “ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇறா, ஸூபிய்யா” போன்ற பிரிவினர் தங்களின் முன்னைய வழி தவறிய இமாம்களைப் பின்பற்றி, சரியான அகீதா கொள்கையை விட்டுப் பிரிந்து வழிதவறிப் போனார்களோ அது போல அகீதா விடயத்தில் மக்கள் முன் வைக்கும் கருத்துக்களை, சரியான  ஆதாரம் எதுவுமில்லாது, அவை சரியானவையா என்று சீர்தூக்கிப் பார்க்காமல் குருட்டுத் தனமாக அவற்றைப் பின்பற்றுதல்..
*நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தினரையும், மற்றும் அதிகமான நகர வாழ் கப்று வணங்கிகளையும் போன்று, அவ்லியாக்கள் மற்றும் ஸாலிஹீன்கள் விடயத்தில் எல்லை மீறல், மேலும் அல்லாஹ்வையன்றி வேறு எவராலும் செய்ய இயலாத பயன் தரும் காரியம் எதனையும் செய்யவும், தீமையைத் தடுத்து நிறுத்தவும் கூடிய ஆற்றல் அவர்களிடமும் உண்டென்று நம்பி அவர்களை அவர்களின் தரத்திற்கும் மேலாக உயர்த்துதல், இன்னும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவும் என அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் அந்த சான்றோர்களை இடைத் தரகர்களாக ஆக்கிக் கொண்டு, அல்லாஹ்வுக்குப் பதிலாக அவர்களை வழிப்படுதல், அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று காணிக்கைகளைச் சமர்ப்பித்தல், பிராணிகளை அறுத்துப் பழியிடுதல், அங்கு துஆ பிரார்த்தனையில் ஈடுபடுதல், அவர்களிடம் பாதுகாப்பும்  உதவியும் தேடி மன்றாடுதல், போன்ற காரியங்கள்.
இத்தகைய கருமங்களைச் நூஹ் (அலை) அவர்களின் சமூகம், கைவிட விரும்பவில்லை. எனவே
இக்காரியங்களை விட்டு விட வேண்டாம் என்று அவர்கள் தங்களின் சகாக்களை வேண்டிக் கொண்டனர். அவர்களின் இந்நிலைப்பாட்டை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது
وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا ﴿٢٣نوح﴾     
“அவர்கள் நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்’ ‘ஸுவாஉ’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ ஆகியவைகளையும் விட்டு விடாதீர்கள்” என்று கூறினர். (71/23)  
எனவே இது போன்றுதான் கப்று வணங்கிகளின் நிலையும் இருக்கின்து.
•    உலகிலிருக்கும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும், அவனின் அல்குர்ஆன் வாக்குகளையும் பற்றி மக்கள் சிந்திக்க மறந்து போனமை, மேலும் பொருளாதார நாகரிக வளங்களை மேன்மைப் படுத்தி, இவையாவும் வெறும் மனித பலத்தின் சாதனை என்றும் அவர்கள் நினைத்தனர். இதன் காரணமாக அவர்கள் அல்லாஹ்வை மறந்து இவை யாவும் மனித முயற்சியால் மாத்திரம் ஏற்பட்ட சாதனைகள் என்று அந்த மனிதர்களைப் பாராட்டவும் அவர்களை கெளரவிக்கவும் முற்பட்டனர். இவ்வாறுதான் முன்னர் காரூனும் நினைத்தான். எனவே அவனுடை யவும், அவனைப் போன்றோருடை யவும் இந்த நிலைப்பட்டைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,
قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَىٰ عِلْمٍ عِندِي (القصص/78)
“இதை எல்லாம் என்னுடைய சொந்த அறிவினால்தான் நான் அடைந்தேன்” என்று (காரூன்) கூறினான்” (28/78)
மேலும் மனிதனின் துயரங்களை அல்லாஹ் நீக்கி அவனுக்கு அருட் கொடைகளை  வழங்குகின்றபோது அவன்,
هَـٰذَا لِي (فصلت/50)
“இது எனக்கு வரவேண்டி இருந்ததே” (41/50) என்றும்
إِنَّمَا أُوتِيتُهُ عَلَىٰ عِلْمٍ (الزمر/49)
“நான் இதனை அடைந்ததெல்லாம் என்னுடைய அறிவினால்தான்”(39/49) என்றும் கூறுகின்றான், என அவர்களின் நிலையை பற்றி இத்திருவசனங்கள் எடுத்துரைக்கின்றன.
ஆனால் இச்சந்தர்ப்பதில் மனிதன் அல்லாஹ் இவ்வுலகில் ஏற்படுத்தி வைத்துள்ள அவனின் நிஃமத்துக்களையும் அதன் உயரிய சிறப்புக்களையும் பயன்பாடுகளையும்  பார்க்கவோ அது பற்றிச் சிந்திக்கவோ இல்லை. மேலும் அல்லாஹ்தான் மனிதனைப் படைத்து இவற்றை வெளிக் கொண்டு வரும் ஆற்றலை அவனுக்கு வழங்கினான் என்பதையும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. இது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,
وَاللَّـهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ ﴿٩٦/الصافات﴾
“உங்களையும் நீங்கள் சித்தரித்தவைகளையும் அல்லாஹ்தான் படைத்தான்.” (37/96)
أَوَلَمْ يَنظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا خَلَقَ اللَّـهُ مِن شَيْءٍ (الأعراف/185)
“வானங்களையும், பூமியினுடைய ஆட்சியையும், அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்ளையும் அவர்கள் பார்க்கவில்லையா? (7/185)
اللَّـهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ ۖ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ ﴿٣٢﴾
“அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான். அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக கனி வர்க்கங்களையும் வெளிப்படுத்துகின்றான். தன் கட்டளையைக் கொண்டு கப்பலை உங்கள் இஷ்டப்படி கடலில் செல்ல வைக்கிறான். ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்.(14/,32)
 وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ ﴿٣٣﴾
“மேலும் நகர்ந்து கொண்டிருக்கும் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு வசதியாக அமைத்தான். இன்னும் இரவையும் பகலையும் உங்களுக்கு வசதியாக அமைத்தான்” (14/33)
وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّـهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ (ابراهيم/32,33,34)
“இன்னும் நீங்கள் கேட்டவைகளை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே அல்லாஹ் வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதனை உங்களால் எண்ண முடியாது. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகின்றவனாகவும், மிக நன்றிகெட்டவனாகவும் இருக்கிறான்.(14/34)
•    பிள்ளை செல்ல வேண்டி திசையை சீரமைத்துத் தரும் விடயத்தில் பெற்றோரின் பங்களிப்பு மிகப் பாரியது, எனினும் இல்லங்களில் அதற்கான நல்ல வழிகாட்டல் எதுவும் காணப்பட வில்லை. எனவேதான் “எல்லா குழந்தையும் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே பிறக்கிறது. எனினும் அதன் பெற்றோர்களே அதனை யூதனாக அல்லது கிரிஸ்தவனாக, அல்லது நெருப்பு வணங்கியாக மாற்றுகின்றனர்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
•    பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளிலுள்ள கல்வி, தகவல் ஊடகங்கள் அவற்றின் உண்மையான கடமைகளைச் செய்ய முடியாதவாறு தடுக்கப் பட்டுள்ளன. ஆகையால் அங்கு பாடத் திட்டங்களில் மார்க்க விடயங்களுக்குப் பெரிய அளவில் இடம் கொடுக்கப்படவில்லை. அல்லது அவ்விடயத்தில் முற்றாகக் கவணம் செலுத்தப்பட வில்லை, இதற்கு மாறாக தெலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை போன்ற விளம்பர ஊடகங்கள் அநேகமாக அழிவின் பக்கமும், மற்றும் சரியான வழிகளுக்குப் பதிலாக பிழையான வழிகளின் பக்கமும்  திசை திருப்பும் சாதனங்களாக மாறியுள்ளன. அல்லது நல்ல பண்பாடுகளையும், சரியான அகீதாவையும் விதைக்கும்படியான விடயங்களின் பக்கமும், தவறான கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் சக்திகளை எதிர்க்கக் கூடிய விடயங்களின் பக்கமும் கவணம் செலுத்தாது வெறும் பொருளாதார மற்றும் ஆடம்பர விடயங்களின் பக்கம் அவை நாட்டம் கொண்டுள்ளன., இதனால் நாஸ்திக சக்திகளை எதிர்க்க முடியாத பலமற்ற பரம்பரை தோன்றியுள்ளது. இது அந்த சக்திகளை எதிர்க்க முடியாமல் அவற்றின் முன்னால் நிர்க்கதியாக நிற்கிறது.
வழிகேடுகளை விட்டும் பாதுகாப்புப் பெறும் வழிகள்
•    சரியான அகீதா கொள்கைப் பற்றி  அறிந்து கொள்ளும் பொருட்டு அல்லாஹ்வின் வேதத்தின் பாலும் அவனின் தூதரின் வழியின் பாலும் திரும்புதல். ஏனெனில் முன்னைய சான்றோர் இவையிரண்டின் மூலமே தங்களின் அகீதாவை அடைந்து கொண்டனர். எனவே இந்த உம்மத்தின் ஆரம்ப கால சந்ததியினரை எதன் மூலம் சீர்திருத்த முடிந்ததோ அதன் மூலம்தான் இந்த உம்மத்தின் இறுதி கால சந்ததியினரையும் சீர்திருத்த முடியும். அத்துடன் தீமையைப் பற்றி அறிந்து கொள்ளாதவன் அதில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டு என்றபடியால் வழி தவறிய கொள்கை வாதிகளின் கொள்கையை மறுத்துரைக்கவும் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் அவர்களின் தவறான கொள்கையையும், அவர்களின் ஆட்சேபணைகளை யும் பற்றி அறிந்து கொள்வதும் அவசியம்,
•    முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதா கொள்கையைக் கற்றுக் கொடுக்கும் விடயத்தில் விசேட கவணம் செலுத்துதல் வேண்டும். அவ்வமயம் அதனை பல கட்டங்களில் கற்றுக் கொடுப்பதும், அதற்காக பாட திட்டத்தில் அதிகப் படியான அதிக நேரம் ஒதுக்குவதும் அவசியம். மேலும் இதன் பரீட்சை விடயத்தில் அதிக கவணம் செலுத்துவதும் அவசியம்.
•    முன்னோர்களின் சரியான புத்தகங்களை போதித்தல் வேண்டும். அத்துடன் ஸூபிஸ, அநாச்சார, ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇரிய்யா, மற்றும் மாதுரீதிய்யா போன்ற வழிதவறிய கூட்டத்தினரின் புத்தகங்களை ஓரம் கட்டிவிட வேண்டும். எனினும் வேண்டுமானால் அவர்களின் நூல்களில் இருக்கும் தவறான கருத்துக்களுக்குப் பதிலளிக்கவும், அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் என்ற  நோக்கில் அதனைக் கற்றுக் கொடுக்கலாம்.
•    ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதாவைக் மக்களுக்குப் போதிக்கவும், வழிதவறிய கூட்டத்தவரின் வழிகேடுகளை மறுக்கவும் சீர்திருத்தவாதிகளான பிரச்சாரகர்களை ஏற்பாடு செயதல் வேண்டும்..
______________________________________

 

இரண்டாம் பாடம்
தெளஹீதின் கருத்தும் அதன் வகைகளும்
தெளஹீத்:
சிருஷ்டித்தல், அதிகாரம் மற்றும் வணக்க வழிபாடுகள் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம், எனவே வழிபாடுகள் எதுவும் அவனல்லாத வேறு எதற்கும்  மேற்கொள்ளாது அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய  அழகிய திருநாமங்களையும் பண்புகளையும் அவனுக்கு நிலைப்படுத்தி சகல வித குறைபாடுகளை விட்டும் அவனைத் தூய்மையானவன் என்று கூறுவதே தெளஹீத் – ஏகத்துவம்  எனப்படும். இந்த வரைவிளக்கத்தின் பிரகாரம் இது மூன்று வகைத் தெளஹீதையும் உள்வாங்கிக் கொள்ளும். அவை   வருமாறு:

 1توحيد الربوبية
அதிகாரத்தில் ஏகத்தும்
இதில் பின் வரும் விடயங்கள் உள்ளடங்கும்:
பகுதி ஒன்று: அதிகாரத்தில் ஏகத்துவம் என்றால் என்ன? அதன் இயற்கை யாது? அதனை முஷ்ரிகீன்களும் ஏற்றுக் கொள்ளுதல்.
பகுதி இரண்டு: அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ள “றப்பு” எனும் சொல்லின் விளக்கம். “றுபூபிய்யத்” எனும் அதிகார விடயத்தில் வழிதவறிய சமூகங்களின் மனப்பாங்கும், அதற்குப் பதிலும்.
பகுதி மூன்று: அல்லாஹ’வின் கட்டளைக்கு பிரபஞ்சத்திலுள்ள யாவும் அடி பணிதல்.
பகுதி நான்கு; அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும்  நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை;
பகுதி ஐந்து: தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு அதிகார விடயத்தில் ஏகத்துவத்தை  உறுதிப் படுத்துவது அவசியம். அது பற்றிய விளக்கம்..

பகுதி - 1
அல்லாஹ்வுக்குக்  கட்டுப்படுதலும், அவனுக்கு அடிபணிதலும்.
பகுதி நான்கு:  படைத்தல், உணவளித்தல் மற்றும் ஏனைய விவகாரங்களில் அல்லாஹ்வின் ஏகத்துவத்தைத் தெளிவுபடுத்தும் விடயத்தில் அல்குர்ஆனின் அணுகு முறை.
அதிகாரத்தில் ஏகத்துவம் என்றால் என்ன? அதனை முஷ்ரிகீன்களும் ஏற்றுக்கொள்ளுதல்
பொதுவாக சிருஷ்டிகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனே பரிபாலித்தும் அதன் மீது அதிகாரம் செலுத்தியும் வருகின்றான் என்றும் அல்லாஹ் ஒருவனையே வழிப்படல் வேண்டும் என்றும் நம்புவதே ஏகத்துவம், அத்துடன் அல்லாஹவுக்குரிய திரு நாமங்களையும் மற்றும் பண்புகளையும் அவனுக்கு உறுதி செய்தல் வேண்டும் என்ற விடயமும் ஏகத்துவத்தில் அடங்கும்.. எனவே தெளஹீத் என்பது மூன்று வகைப்படும்.. அவையாவன:
    பரிபாலன, அதிகார விடயத்தில் ஏகத்துவம், கடவுள் தன்மையில் ஏகத்துவம், அல்லாஹ்வின் திரு நாமங்கள், பண்புகள் விடயத்தில் ஏகத்துவம் என்பவைகளாகும். இந்த வகைகளுக்கிடையே இருக்கும் வித்தியாசங்களைப் பற்றித் துள்ளியமாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு இவை ஒவ்வொன்றின் கருத்துக்களைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்.
    توحيد الربوبية பரிபாலனத்தில், அதிகாரத்தில் ஏகத்துவம்:
    அல்லாஹ் தன்னுடைய செயல் அனைத்திலும் ஏகன் என்று நம்புவதே பரிபாலனத்தில், அதிகாரத்தில் ஏகத்துவம் எனப்படும். இதில் ஒன்றுதான் எல்லா சிருஷ்டிகளையும் அல்லாஹ் ஒருவனே தனியாகப் படைத்தான் என்று நம்புவது. ஏனெனில் அதன் அதிகாரம் அவனிடமே இருக்கின்றது. இதனையே,
اللَّـهُ خَالِقُ كُلِّ شَيْءٍ ۖ (الزمر/62)
“அல்லாஹ்தான் எல்லா பொருள்களையும் படைத்தவன்.(39/62) என்ற அல்லாஹ்வின் வாக்கு தெளிவு படுத்துகிறது..
    மேலும் எல்லா உயிரினங்களுக்கும், மனித குலத்துக்கும், ஏனைய மற்றெல்லா படைப்புக்களுக்கும் உணவளிக்கும் அதிகாரம் அந்த அல்லாஹ் ஒரிவனிடமே உண்டு.. இதனை,
وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّـهِ رِزْقُهَا  (هود/6)
“உணவளிக்க அல்லாஹ் பொருப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை.(11/6) எனும் அல்லாஹ்வின் வாக்கு  உருதி செய்கின்றது.
மேலும் சகல ஆட்சியினதும் அதிபதியும், உலகின் சகல விவகாரங்களையும் நிர்வகிப்பவனும் அவனே. எனவே அவன்  விரும்பியவர்களிடம் ஆட்சிப் பொருப்பை ஒப்படைப்பனாகவும். இன்னும் அவன் விரும்பியவரிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிக் கொள்கின்றவனாகவம் இருக்கிறான். அவ்வாறே அவன்  விரும்பியவர்ளை கண்ணியப் படுத்துகின்றவனாகவும், இழிவு படுத்துகின்றவனாகவும் இருக்கின்றான். மேலும் சர்வ பொருட்களின் மீதும் வல்லமையுள்ளவனும் அவனே. இரவையும் பகலையும் செயற் படுத்து கிறவனும் அவனே. மேலும் உயிர் கொடுப்பவனும், மரணிக்கச் செய்பனும் அவனே. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.:
قُلِ اللَّـهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٢٦﴾ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ ۖ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ۖ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ آل عمران٢٧﴾
    “நீங்கள் கூறுங்கள். “எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிட மிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பிய வர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பிய வர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3/26)
    "நீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து    உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றி வழங்கு கின்றாய்.(3/27)
    மேலும் சிருஷ்டிக்கும் விடயத்திலும், உணவளிக்கும் விடயத்திலும் எவ்வாறு யாரும் தனக்கு இணையாகவும் துணையாகவும் இருக்க முடியாதோ, அது போன்று ஆட்சி அதிகாரத்திலும் யாரும் தனக்கு  இணையாகவோ, உதவியாகவோ இருப்பதையும் அல்லாஹ் மறுக்கின்றான்,
إِنَّ رَبَّكُمُ اللَّـهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّـهُ رَبُّ الْعَالَمِينَ ﴿٥٤الأعراف﴾
    நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது வெகு தீவிரமாகவே அதனைப் பின்தொடர்கிறது. மேலும் அவனின் கட்டளைக்கு உட்பட்ட சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். படைப்பினங்களும் அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன். (7/54)
    அனைத்தின் மீது அதிகாரமும், அதனை பரிபாலிக்கும் வல்லமையும் அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு என்ற உன்மையை ஏற்றுக் கொள்ளும் இயற்கை சுபாவம் கொண்டவையாகவே சகல சிருஷ்டிகளையும் அல்லாஹ் படைத்திருக்கின்றான். எனவே வழிபாட்டு விடயத்தில் அல்லாஹ்வுக்கு இணையை மேற்கொண்டு வரும் முஷ்ரிகீன்களும் கூட பரிபாலிக்கும் விடயத்தில் அல்லாஹ்தான் ஏகன் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். எனவே இவ்விடயத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
قُلْ مَن رَّبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ﴿٨٦﴾
    “ஏழு வானங்களின் இரட்’சகனும், மகத்தான அர்ஷுக்கு இரட்சனும் யார்? என்று கேட்பீராக.”
سَيَقُولُونَ لِلَّـهِ ۚ قُلْ أَفَلَا تَتَّقُونَ ﴿٨٧﴾
    “அ(தற்க)வர்கள் “யாவும் அல்லாஹ்வுக்குரியனவே” என்று கூறுவார்கள்.” (அவ்வாறாயின்) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா?” என்று நீல் கூறுவீராக.”
قُلْ مَن بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿٨٨﴾
    “எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? அவனே பாதுகாக்கிறான். (அவனிடமிருந்து) யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. நீங்கள் அறிந்திருந்தால், அவன் யார் என்று கேட்பீராக.”
سَيَقُولُونَ لِلَّـهِ ۚ قُلْ فَأَنَّىٰ ْتُسحَرُونَ ﴿٨٩المؤمنون﴾
 (المؤمنون\(86,87,88,89
     “அதற்கவர்கள் “அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்) நீங்கள் எங்கிருந்து சூனியமாக்கப் படுகிறீர்கள்?” என்று கேட்பீராக” (23 - 86,87,88,89)
    மனித வர்க்கத்தில் குறிப்பிடத்தக்க எந்தவொரு சாராரும் இந்த ஏகத்துவத்திற்கு எதிரானவர்களல்ல. மாறாக இயற்கையில் அனைவரின் உள்ளமும் இதனை ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே இருக்கின்றன. அல்லாஹ்வின் தூதர்கள் இது பற்றி முஷ்ரிகீன்களிடம் கேட்ட சந்தர்ப்பங்களில் கூட அவர்கள் அதனை மறுக்கவில்லை.  எனினும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்கள் கொண்டு வந்த தூதின் மீதே அவிசுவாசம் கொண்டார்கள். அப்பொழுது அவர்களிடம் இறைத் தூதர்கள்,
قَالَتْ رُسُلُهُمْ أَفِي اللَّـهِ شَكٌّ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ (إبراهيم\10)
     “வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்?” என்று அவர்களின் தூதர்கள் கூறினர்” (14/10)
    அப்பொழுது அவர்கள் அதனை மறுக்கவில்லை. மாறாக அந்தத் தூதர்கள் மனிதர்களாக இருப்பதையே அவர்கள் ஆட்சேபித்தனர், என்பதை அல்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
    பகிரங்கமாக அல்லாஹ்வைப் புறக்கனித்து வந்தோரில் பிரபல்யமான ஒருவன்தான் பிர்அவ்ன். எனினும் அவன் அந்தரங்கத்தில் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டிருந்தான். இது மூஸா (அலை), அவனிடம் கூறிய வாசகத்திலிருந்து துலாம்பரமாகிறது. இதனை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது.  
قَالَ لَقَدْ عَلِمْتَ مَا أَنزَلَ هَـٰؤُلَاءِ إِلَّا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ بَصَائِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَا فِرْعَوْنُ مَثْبُورًا ﴿١٠٢﴾ الإسراء
“வானங்களையும் புமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கி வைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். பிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு காலம் பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்” என்று (மூஸா) கூறினார்.(17/102)
    மேலும் பிர்அவ்னைப் பற்றியும் அவனின் கூட்டத்தினர் பற்றியும் அல்லாஹ் குறிப்பிடும் போது,
 وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا ۚ (النمل 14)
“அவர்களுடைய உள்ளங்கள் அவைகளை உறுதிகொண்ட போதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவைகளை அவர்கள் மறுத்தார்கள்.(27/14)
அவ்வாறே இந்நாளில் அல்லாஹ்வை ஏற்க மறுத்து வருகின்ற கம்யூனிஸ வாதிகள் தங்களின் அகங்காரத்தின் காரணமாகவே அவனின் இருப்பதை  மறுத்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் தங்களின் உள்ளங்களில் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளனர். ஏனெனில் எந்தவொரு பொருளும் அதனை உண்டு பண்ணிய ஒருவன் இல்லாமலும், எந்தவொரு சிருஷ்டியும் அதனை சிருஷ்டித்த ஒருவன் இல்லாமலும்,  எந்தவொரு அடையாளமும் அதனை அடையாளப் படுத்திய ஒருவன் இல்லாமலும் உருப்பெற முடியாது.  எனவே இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கேள்வி எழுப்புகிறான்.,
أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ ﴿٣٥﴾ أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ ﴿٣٦ الطور﴾
    “அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத் தாமே படைத்துக் கொண்டனரா?” (52/35)
“அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? ஆனால் (இவைகளை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான், என்பதை) இவர்கள் நம்புவதில்லை.” (52/36)
நீங்கள் எல்லா உலகையும் பாருங்கள். அதன் மேலும் கீழும், மற்றும் அதன் எல்லா பகுதியையும் பற்றி சிந்தியுங்கள், அப்பொழுது அவற்றைப் படைத்த, உருவாக்கிய, அதன் உரிமையாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கு இவை யாவும் சாட்சியாக இருப்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். எனவே இவற்றை எல்லாம் உற்பத்தி செய்தவனை மறுப்பதானது விஞ்ஞானத்தை மறுப்பதற்குச் சமமாகும். எனினும் இன்று கம்யூனிஸவாதிகள் இறைவன் இல்லை என்று தம்பட்டம் அடிப்பதெல்லாம் அவர்களின் அகங்காரத்தினதும், மற்றும் அவர்கள் பகுத்தறிவின் சரியான முடிவுகளையும் சிந்தனைகளையும் சுருட்டி மறைத்து வைத்துக் கொண்டதினதும் விளைவே. எனவே எவர் இந்த நிலையில் இருக்கின்றாரோ அவர் தன் புத்தியைப் பயன்படுத்தத் தவறியவர், என்பதுடன் அந்த வேடிக்கையின் பால் மக்களை அழைக்கின்றவரும் ஆவார். இதனை ஒரு கவிஞர் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றார்.

فَوَا عَجَباً كَيْفَ يُعْصَى الإلَ ه أمْ كَيْفَ يَجْحَدُهُ الجَاحِدَ
وَفِي  كُلِّ  شَئٍ    لَهُ    آيَةٌ     تَدُلُّ   عَلَى   انَّهُ   واحِدٌ
மாறு செய்திடலாமோ இறைவனுக்கு?
மறுத்திடலாமோ அவன் இருப்பை?
பொருள் யாவும் கூறுகிறதே
அவன் ஒருவன். என்று

இரண்டாம் பகுதி
அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் வரும் “றப்பு” எனும்                              சொல்லின் விளக்கமும். “றுபூபிய்யத்”--  அதிகாரம், பரிபாலித்தல் விடயத்தில் வழிதவறிய சமூகங்களின் மனப்பாங்கும், அகற்கு பதிலும்
1-அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் வரும் “றப்பு” எனும் சொல்லின் விளக்கம்
      “றப்ப” என்பதன் தொழிற் பெயரே “றப்புன்” என்பது. அதன் கருத்து ஒரு பொருளைக் கட்டம் கட்டமாக வளர்த்தல் என்பதாகும். “றப்புன்” என்ற சொல் தொழிற் பெயராக இருப்பினும் அதனை வளர்த்தல் என்று கூறாமல் வளர்ப்பவன் எனும் பொருளிலேயே அது பயன் படுகிறது. எனினும் الرَّبُّ என்று பொதுவாகக் கூறும் போது அதன் மூலம் படைப்புக்கள் அனைத்தையும் சீரமைக்கும் பொருப்பினை ஏற்றுக் கொண்டுள்ள அலாஹ்வையல்லாது வேறு எவரும் கருதப்பட மாட்டாது.  உதாரனமாக رَبِّ الْعًلَمًيْنَ “சர்வலோக இரட்சகன்,” (1/2). மேலும்
رَبُّكُمْ وَرَبُّ ءَابَائِكُمُ الأَوَّلًيْنَ “உங்களுடையவும், உங்கள் மூதாதைகளினதும் இறைவன்” (26/26) எனும் வாசகத்தில் “றப்பு” எனும் சொல் அல்லாஹ்வையே குறித்து நிற்பதைக் குறிப்பிடலாம்.
    எனவே இச்சொல்லை வேரொரு சொல்லுடன் இணைத்துக் கூறுமிடத்து, அது எந்த சொல்லுடன் இணைக்கப்படுகின்றதோ அப்பொழுது அது அதனுடன் வரையருத்த பொருளைத் தரும் உதாரணமாக رَبُّ الدّار, رَبُّ الْفَرَس என்பது போல. இங்கு றப்பு என்பது அதன் உரிமையாளனைக் குறிக்கின்றது. எனவே இதன்படி இந்த வாசகங்கள் வீட்டின் உரிமையாளன், ஒட்டகத்தின் உரிமையாளன் எனும் பொருளைத் தரும். இவ்வாறுதான் பின் வரும் இறை வசனங்களில் வந்துள்ள “றப்பு” எனும் சொல்லும் அல்லாஹ் என்பதைக் குறிக்காமல் வேறு நபர்களை குறித்துக் காட்டுவதைக் காணலாம். யூஸுப் (அலை) சிறையில் இருக்கும் போது தன் சிறைச்சாலைத் தோழனிடம் கூறிய செய்தியை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
اُذْكُرْنِي عِندَ رَبِّكَ فَأَنسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ  (يوسف\42)
    “நீ உன் எஜமானிடம் என்னைப் பற்றிக் கூறுவாயாக என்று சொன்னார். எனினும் இவன் தன் எஜமானிடம் கூற இருந்ததை ஷைத்தான் மறக்கடித்து விட்டான்.” (12/42)
قَالَ ارْجِعْ إِلَىٰ رَبِّكَ(يوسف\50)
    “நீங்கள் உங்கள் எஜமானிடம் திரும்பிச் செல்லுங்கள், என்றார் (யூஸுப்) (12/50)
أَمَّا أَحَدُكُمَا فَيَسْقِي رَبَّهُ خَمْرًا ۖ(يوسف\41)
    “உங்களில் ஒருவன் தன் தன் எஜமானனுக்கு திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான்.”(12/41) (என்று யூஸுப் கூறினார்.)
    மேலும் காணாமல் போன ஒட்டகத்தை யாரேனும் கண்டெடுத்துக் கொள்ளாமா? என்று ரஸூல் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது நபியவர்கள்,  
حَتَّى يَجِدَهَا رَبُّهَا (الحديث)
    “அதனை அதன் உரிமையாளன் கண்டு கொள்ளும் வரை விட்டு வையுங்கள்” என்றார்கள்.
    இங்கு அல்குர்ஆனில் குறிப்பிட்ட்டுள்ள யூஸுப் (அலை), அவர்களுக்கும், அவர்களின் தோழனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலிலும் மற்றும் ஹதீஸிலும் வந்துள்ள “றப்பு” எனும் வாசகம் அல்லாஹ்வைக் குறிப்பிட வில்லை. அது வேரொரு எஜமானனையும், உரிமையாளனையுமே குறித்து நிற்கிறது, என்பது விளங்குகிறது..
    எனவே பொதுவாக الرَّبُّ என்று சொல்லும் போதும், இன்னும் அதனை العالمين, الناس எனும் சொல்லுடன் இனைத்து, رب العالمين , رب الناس என்று கூறும் போது அது அல்லாஹ் என்ற பொருளையல்லாது வேறு பொருளைத் தராது. மேலும் “றப்பு” எனும் செல்லை இதர சொல்லுடன் இணைத்து உதாரணமாக ربُّ الدَّار,  رب الْمَنْزِل, رب الإِبْل என்று சொல்லும் போது அது அல்லாஹ் என்ற கருத்தைத் தராது வீட்டின் எஜமான், இல்லத்தின் எஜமான், ஒட்டகத்தின் எஜமான் எனும் கருத்தை குறித்து நிற்கிறது, என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
    மேலும் رب العالمين சர்வலோக இறைவன் என்றால் அதன் விரிந்த கருத்து உலகத்தாரை சிருஷ்டிப்பவன், அவர்களின் உரிமையாளன், அவர் களைச் சீர்திருத்தி தன்னுடைய சௌபாக்கியங்களைக் கொண்டும், மற்றும் தன்னுடைய தூதர்களையும், வேதங்களையும் அவர்களின் பால் அனுப்பி அவர்களை பரிபாலிப்பவன், அவர்களின் செயல்களுக்குத் தகுந்த  கூலி கொடுப்பவன் என்பதாகும். மேலும் “றுபூபிய்யத்” அதிகாரம், பரிபாலித்தல் எனும் போது அது தன் அடியார்களுக்கு அல்லாஹ் விடுக்கும் ஏவல் விலக்கலையும், நல்லோரின் நற்செயலுக்கு வழங்கும் நற்கூலியையும் மற்றும் தீயோரின் தீய செயலுக்கு வழங்கும் தண்டனையும் உள் வாங்கியதாகும். இதுதான் “றுபூபிய்யத்” என்பதன் சரியான கருத்து என இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
 வழி தவறிய சமூக சிந்தனையில் “றப்பின்” கருத்து
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ اللَّـهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّـهِ ۚ(الروم\30)
“நேரான மார்க்கத்தை நோக்கி நீங்கள் உங்களுடைய முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புங்கள். (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அல்லாஹ் படைத்ததை மாற்றி விட முடியாது” (30/30)
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا بَلَىٰ ۛ شَهِدْنَا ۛ(الأعراف\172)
“உங்களுடைய இறைவன் ஆதமின் சந்ததியினர் அவர்களின் முதுகுகளில் இருக்கும் போது அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாக வைத்து, நான் உங்களின் இறைவனாக இல்லையா? என்று கேட்டதற்கு, அவர்கள் “ஏன் இல்லை அதற்கு நாம் சாட்சியம் கூறுகிறோம்” என்று கூறினர்” (7/172)
    இந்த திரு வசனங்களில் குறிப்பிட்டுள்ளது போன்று இயற்கையில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் சுபாவமும் சிருஷ்டி கர்த்தாவான இறைவனை அறிந்து கொள்ளும் சபாவமும் உடையவனாகவே சிருஷ்டிகளை அல்லாஹ் படைத்திருக்கின்றான்..என்பது தெளிவு.
    எனவே அல்லாஹ்வின்      அதிகார, பரிபாலனப் பண்பை ஏற்றுக் கொள்வதும், அவனின் பால் மாத்திரம் கவணம் செலுத்த வேண்டு மென்பதும் இயற்கை நியதியாகும். மேலும் அவனுக்கு இணை வைக்கும் காரியமோ தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வாகும். எனவே “எல்லா குழந்தையும் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே பிறக்கிறது. எனினும் அதன் பெற்றோர்களே அதனை யூதனாக அல்லது கிரிஸ்தவனாக, அல்லது நெருப்பு வணங்கியாக மாற்றுகின்றனர்” எனும் நபி மொழி இங்கு குறிப்பிடத் தக்கதாகும். எனவே எப்பொழுது அடியானும் அவனின் சுபாவமும் இணையை விட்டும் விலகி விடுமோ, அப்பொழுது அவன் ஏகத்துவத்தின் பால் திரும்பி விடுவான்.  மேலும் ரஸூல்மார்கள் கொண்டு வந்த தூதையும், அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியவைகளையும், உலகில் ஏகத்துவத்தை உறுதி படுத்தும் அத்தாட்சிகளையும் அவன் ஏற்றுக் கொள்வான். எனினும் வழி தவறிய பரிபாலனமும், தீய நாஸ்திகக் கொள்கையுமாகிய இரண்டு காரியங்களும்தான் குழந்தையின் திசையை மாற்றி விடுகின்றன. அதனால்தான் பிள்ளைகள் பெற்றோரின் வழிகேடான மற்றும் தவறான கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.
    ஒரு ஹதீஸ் குத்ஸீயில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான், “நான் என் அடியார்களைத் தூய்மையான வர்களாகப் படைத்தேன், எனினும் அவர்களை ஷைத்தான் திருப்பி விட்டான்”. அதாவது அவர்களை அவன் சிலை வணக்கத்தின் பாலும், மேலும் அல்லாஹ்வைத் தவிர்த்து  அவைகளைத் தங்களின் கடவுள்களாக எடுத்துக் கொள்வதின் பக்கமும் திருப்பிவிட்டான். அதன் காரணமாக அவர்கள் வழிகேட்டிலும், பிரிவினையிலும், முரண்பாடுகளிலும் மாட்டிக் கொண்டனர். மேலும்
فَذَٰلِكُمُ اللَّـهُ رَبُّكُمُ الْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ ۖ  (يونس\32)
    “அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்களது உண்மையான இறைவன். எனவே உண்மைக்குப் பின்னர் வழிகேட்டைத் தவிர வேறு என்னதான் இருக்க முடியும்?” (10/32) என்று அல்லாஹ் குறிப்பிடுவது போன்று, அவர்கள் உண்மையான றப்பை - இறைவனை கைவிட்டதன் காரணமாக அவர்கள் தாங்கள் விரும்பியதை எல்லாம் தங்களின் கடவுளாக ஆக்கிக் கொண்டனர். இதனால் அவர்கள் தவறான பல தெய்வக் கொள்கையின் சோதனைக்கு இலக்காகினர். மேலும் வழிகேட்டுக்கு எல்லையுமில்லை, முடிவும் இல்லை. எனவே யாரெல்லாம் உண்மையான றப்பை - இறைவனைப் புறக்கணிக்கின்றரோ அவர்களை வழிகேடு பிடித்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.  இதனை அடுத்து வரும் அல்லாஹ்வின் வாக்கு தெளிவு படுத்துகிறது:
أَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّـهُ الْوَاحِدُ الْقَهَّارُ ﴿٣٩﴾ مَا تَعْبُدُونَ مِن دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّـهُ بِهَا مِن سُلْطَانٍ (يوسف\39(40,
“வெவ்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற அல்லாஹ் ஒருவனே நன்றா?” (12/ 39,40).
“அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை அனைத்தும் நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களேயன்றி வேரில்லை. அல்லாஹ் இதற்கு யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை.” (12/39,40) என்று யூஸுப் (அலை) அவர்கள் தங்களின் சிறைத் தோழர்களிடம் கூறிய செய்தியை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது
மேலும் பரிபாலன, அதிகார விடயத்தில் இணையை நிறுவும் போது ஒரே வகையான பண்பும் செயற் திறனும் கொண்ட பல சிருஷ்டி கர்த்தாக்கள் இருக்கின்றனர் என்று முஷ்ரிகீன்கள் கூறவில்லை. எனவேதான் சில முஷ்ரிகீன்கள் தங்களின் கடவுள்கள் இவ்வுலகில் சில காரியங்களை நடாத்தி வைக்கும் ஆதிக்கத்தைப் பெற்றுள்ளனர் என்று கூறுகின்றனர். இதன் மூலம் இந்தக் கடவுள்களை அவர்கள் வணங்கும்படி செய்து அவர்களுடன் ஷைத்தான் விளையாடுகின்றான். இவ்வாறு ஒவ்வொரு சமூகத்துடனும் அவரவரின் அறிவுக்கேற்றபடி அவர்களுடன் ஷைத்தான் விளையாடி வருகிறான். நூஹ் நபியின் கூட்டத்தினர் போன்று சில கூட்டத்தினரை, அவர்களின் இறந்து போன மூதாதையினரின் உருவங்களைத் தீட்டச் செய்து அவற்றை கண்ணியப்படுத்துதல் என்ற போர்வையில் அவன் அவர்களை வணங்கச் செய்கின்றான். இன்னும் சில கூட்டத்தினர் நட்சத்திரங்கள் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை, என்று நினைத்துக் கொண்டு அவற்றை சிலைகளாக வடித்து அவற்றுக்கென இல்லங்களையும், கோவில்களையும் அமைத்து அவற்றை வணங்கி வருகின்றனர்.
மேலும் நட்சத்திரத்தை பூஜித்து வரும் முஷ்ரிகீன்கள் ஒரே வகையான நட்சத்திரத்தை வணங்குவதில்லை. அதிலும் எத்தனையோ வகை. சிலர் சூரியனை என்றால் இன்னும் சிலர் சந்திரனை வழிபடுகின்றனர். வேறு சிலர் இவ்விரண்டுமல்லாத வேறு நட்சத்திரங்களை வழிப்படுகின்றனர். இவைகளுக்கென தனித்தனி கோயில்களையும் நிறுவிக் கொள்கின்றனர். இதுவல்லாமல் இன்னும் சிலர் நெருப்பை வணங்கி வருகின்றனர், இவர்கள்தான் மஜூஸிகள். மேலும் இந்தியாவில் நிகழுவது போன்று சிலர் பசுவை வணங்குகின்றனர். மேலும் சிலர் மலக்குகளையும், மரங்களையும், கற்களையும் வணங்கி வருகின்றனர். இன்னும் சிலரோ கல்லறைகளையும், சமாதிகளையும் வழிபட்டு வருகின்றனர். இப்படி யெல்லாம் இவர்கள் செய்யக் காரணம் அவைகளிடம் பரிபாலிக்கும்படியான, காப்பாற்றும் படியான ஏதோ சில விசேட அதிகாரங்கள் இருக்கின்ற என்று அவர்கள் நினைக்கின்ற படியால்தான்.
மேலும் அவர்களில் சிலர் இந்த விக்கிரகங்கள் யாவும் மறைவான சில பொருள்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்று நம்புகின்றனர்.  இது பற்றி இப்னுல்கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது, “உண்மையில் மறைவான கடவுளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அடிப்படையிலேயே விக்கிரகம் நிர்மாணிக்கப் படுகிறது. எனவே சிலை வணங்கிகள் அந்த மறைவான கடவுளுக்குப் பதிலாக அதன் பிரதிநிதியாக தங்களின் கரத்தால் அதன் தோற்றத்தில் சிலைகளை வடித்து அவற்றை வணங்குகின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளர்கள்.  
மேலும் கப்ருகளில் சமாதியுற்றிருக்கும் பிரேதங்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்கின்றன என்றும், அல்லாஹ்விடம் தங்களின் தேவையை நிறைவேற்றித் தரும் இடைத் தரகர்களாக அவை இருக்கின்றன என்றும் முற்கால மற்றும் நவீன கால கப்ரு வணங்கிகள் நினைக்கின்றனர். அல்லாஹ்வின் திரு வசனம் இதனைத் தெளிவு படுத்துகிறது:
مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّـهِ زُلْفَىٰ     (الزمر/3)
“அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை” (39/3) என்கின்றனர்
وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّـهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَـٰؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّـهِ ۚ (يونس/18)
“தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை அவர்கள் வணங்குவதுடன் “இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை” என்றும் கூறுகின்றனர்” (10/18)
மேலும் சில அரபு முஷ்ரிகீன்களும், கிரிஸ்தவர்களும் தங்களின் தெய்வங்களை அல்லாஹ்வின் பிள்ளைகள் என்று நினைத்தனர். இன்னும் சில  அரபு முஷ்ரிகீன்கள் மலக்குகளை அல்லாஹ்வின் புத்திரிகள் என்ற நினைப்பில அவர்களை வணங்கினர். அவ்வாறே சில கிரிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ்வின் குமாரன் என்ற எண்ணத்தில் அவரை வணங்க ஆரம்பித்தனர்.
      

பிழையான  கற்பனை வாதத்துக்கு பதில்
    பிழையான இந்த எல்லா கற்பனை வாதத்திற்கும் பின் வருமாறு அல்லாஹ் பதிலளிக்கின்றான்.:
أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ ﴿١٩﴾ وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ ﴿٢٠\النجم﴾
“லாத், உஜ்ஜாக்களை நீங்கள் கவனித்தீர்களா?” (53/19)
மற்றொரு மூன்றாவது, மனாத்தைப் பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா?” (53/20)
    இத்திரு வசனங்களுக்கு இமாம் அல்குர்துபீ அவர்கள் விளக்கம் தரும் போது “நீங்கள் இந்த தெய்வங்களைக் கவனித்தீர்களா? ஏனெனில் இவற்றை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொள்கிறீர்களே! அப்படியாயின் இவற்றின் மூலம் ஏதேனும் நன்மையோ தீமையோ ஏற்படுவதையோ, அவற்றை நபியவர்களும் அவர்களின் தேழர்களும் இடித்துத் தள்ளிய சந்தர்ப்பத்தில் அவைகளால் தம்மை காப்பாற்றிக் கொள்ள முடிந்ததா? என்பதையோ நீங்கள் கவனித்தீர்களா?” என்பதே இதன் கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ ﴿٦٩﴾ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ ﴿٧٠﴾ قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ ﴿٧١﴾ قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ ﴿٧٢﴾ أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ ﴿٧٣﴾ قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ ﴿الشعراء٧٤﴾
“இன்னும் அவர்களுக்கு இப்ராஹீமுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள்.
அவர் தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டதற்கு,
அவர்கள் “நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம். அவற்றை தெடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்.” என்றார்கள்.
அதற்கு அவர் “அவைகளை நீங்கள் அழைத்தால் அவை உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா?
அல்லது உங்களுக்கு ஏதும் நன்மையோ தீமையோ செய்கின்றனவா?” என்று கேட்டார்.
அதற்கவர்கள் “இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே செய்துக்கொண்டிருக்க நாங்கள் கண்டோம்” என்றார்கள்” (26-69 முதல் 74)
    இதிலிருந்து இந்த சிலைகள் கேட்கவும் மாட்டாது, அவை எந்த வொரு நன்மையையும் தீமையையும் ஏற்படுத்தவும் மாட்டாது என்பதும், அவர்கள் இவற்றை வழிப்பட்டு வந்ததெல்லாம் அவர்களின் பெற்றோர்களைப் பின்பற்றியேயாகும் என்பதும் தெளிவாகின்றது. ஆனால் வெறுமனே பெற்றோர்களைப் பின்பற்றுதல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத, பிழையான ஆதாரமாகும்.
மேலும் நட்சத்திர வழிபாட்டையும் சூரிய சந்திர வழிபாட்டையும் அல்லாஹ்வின் இந்த வாக்குகள் மறுத்துரைக்கின்றான்:
 وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ (الأعراف\54)
“அவனது கட்டளைக்கு உட்பட்ட சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் அவனே படைத்தான்” (7/54)
وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ۚ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّـهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ ﴿٣٧ فصلت ﴾
“இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனின் அத்தாட்சிகளாக இருக்கின்றன. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவைகளைப் படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்.(41/37)
மேலும் மலக்குகளையும், ஈஸா (அலை) அவர்களையும் வணங்குபவர்களுக்கு அல்லாஹ் பதில் தரும் போது இவ்வாறு கூறுகிறான்:
         مَا اتَّخَذَ اللَّـهُ مِن وَلَدٍ(المؤمنون\91)
    ‘அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொளவில்லை” (23/91)
            أَنَّىٰ يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُ صَاحِبَةٌ ۖ(الأنعام\101)
    “அவனுக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? அவனுக்கு மனைவியே கிடையாதே!” (6/101)
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤\الإخلاص﴾  
“அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை” (112/3)

மூன்றாம் பகுதி
அல்லாஹ்வின் கட்டளைக்கு பிரபஞ்சம் அடிபனிதல்
    பிரபஞ்சத்திலுள்ள வானங்கள், பூமி, கோள்கள், நட்சத்திரங்ள், ஊர்வணங்கள், மரங்கள், சகதி, தரை, கடல், மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் உட்பட அனைத்துப் படைப்பினங்களும் அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கின்றன. அவனின் ஆக்கல் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன. இதனை அல்லாஹ்வின் வேத வாக்குகள் உறுதி செய்கின்றன. அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
وَلَهُ أَسْلَمَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا  (آل عمران\83)
“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன. (3/83)
بَل لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ كُلٌّ لَّهُ قَانِتُونَ ﴿ البقرة ١١٦﴾
“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குக் கீழ்படிந்து நடக்கின்றன. (2/116)
وَلِلَّـهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِن دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ﴿٤٩النحل﴾
“வானங்களிலும், பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன. மலக்குகளும் அவ்வாறே. அவர்கள் பெருமையடிப்பதில்லை. (16/49)
أَلَمْ تَرَ أَنَّ اللَّـهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ ۖ (الحج\18)
“வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்ளும், மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீங்கள் காணவில்லையா?” (22/18)
وَلِلَّـهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُم بِالْغُدُوِّ وَالْآصَالِ ۩ ﴿الرعد١٥﴾
“வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மேலும் காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வழிப்பட்டே தீரும். (13/15)
    சர்வ உலகும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப் பட்டவைகளே. அவனின் அதிகாரத்திற்குக் கீழ்படிந்தவை. அவனின் நாட்டத்திற்கும், கட்டளைக்கும் இசைவாகவே இயங்குகின்றன. எனவே அவை எதுவும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாது அவையவைகளின் கடமைகளைக் கவணமாக நிறைவேற்றி அதன் மூலம்  நல்ல பெறுபேறுகளைத் தருகின்றன. இன்னும் தம்மைப் படைத்த சிருஷ்டி கர்த்தா எவ்வித குறையும், இயலாமையும் அற்றவன் என்று அவனைத் தூய்மைப் படுத்துகின்றன. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
  تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَـٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ(الإسراء\44)
“ஏழு வானங்களும், பூமியும் இவ்வற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும் அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை.” (17?44)
     பேசுகின்ற, பேசாத, உயிருள்ள, உயிரில்லாத என்ற பாகுபாடின்றி சிருஷ்டிகள் எல்லாமே அல்லாஹ்வுக்கு வழிப்படுகின்றன. அவனின் ஆக்கல் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன. மேலும் அல்லாஹ் சகல குறைகளை விட்டும் தூய்மையாவன் என்று அவை தங்களின் நாவாலும், செயலாலும் தூய்மைப் படுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே அறிவுள்ளவன் இந்த சிருஷ்டிகளைப் பற்றிச் சிந்திக்கின்ற போதெல்லாம் அவற்றை அல்லாஹ்தான் படைத்தான். என்பதையும், அவை அவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவை என்பதையும், உலக விவகாரங்களை அவை தாமாகவே ஒழுங்கு படுத்திக் கொள்ளவில்லை, மாறாக எல்லா காரியங்களையும் அல்லாஹ்தான் ஒழுங்கு படுத்தி அவற்றை இயங்கச் செய்கின்றான். எனவே அவனின் கட்டளைக்கு மாறு செய்யாது அவனின் கட்டளைப்படி அவை இயங்குகின்றன என்பதையும் அறிந்து கொள்வான். எனவே எல்லா சிருஷ்டிகளும் இயல்பாகவே அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றன என்பது தெளிவு.
    “சிருஷ்டிகள் யாவும் அல்லாஹ்வுக்கு அடிபணிகிண்றன, அவனுக்கு வழிபடும்படி அவை நிர்பந்திக்கப்பட்டுள்ளன என்றால்! அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன,” என்று இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவையாவன:
•    தங்களின் தேவைகள் அவனிடமே இருக்கின்றன, என்பதை அவைகள் அறிந்து வைத்திருப்பதால்.
•    அவைகளின் மீது செல்வாக்கு செலுத்தும் அல்லாஹ்வின் வல்லமைக்கும், அவனின் நாட்டத்திற்கும் அவைகள் கட்டுப்படவும், அடிபணியவும் வேண்டியிருப்பதால்
•    நெருக்கடிகள் ஏற்படும் போது அவனிடம் அவைகள் கையேந்த வேண்டி யிருப்பதால்.
எனவே ஒரு முஃமின் தன் சுய விருப்பத்துடன் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவான். அவ்வாறே அல்லாஹ்வின் விதியின் படி அவனுக்கு ஏற்படும் தொல்லைகளையும் கஷ்டங்களையும் அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம் பொறுமையுடனும் விருப்பத்துடனும் அதனை அவன் ஏற்றுக் கொள்வான். இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளைய விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும் சுபாவமுடையவனாகவே ஒரு முஃமின் இருக்கின்றான். மேலும் ஒரு காபிரைப் பொருத்த மட்டில் அவன் அல்லாஹ்வின் ஆக்கல் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டவனாவான். மேலும் உலகின் மற்றப் பொருள்கள் யாவும் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்கின்றன என்றால், அவை அவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுள்ளன. மேலும் அவை தம் நிலைக்குத் தக்கவாறு அல்லாஹ்வுக்குப் பொருத்தமான முறையில் ஸுஜூது செய்கின்றன என்பதாகும். அவ்வாறே அல்லாஹ்வுக்கு முன்னால் அவை அடிபணிகின்றன, தஸ்பீஹாத்துக்கள் செய்கின்றன, என்பது அதன் சிலேடைப் பொருளில் அல்லாமல் அதன் உண்மையான பொருளின் பிரகாரம் அவைகளின் நிலைமைக்குத் தக்கவாறு அவை உன்மையாகவே இக்கருமங்களைச் செய்து வருகின்றன என்பது,  கவணத்தில் கொள்ளத் தக்கதாகும். மேலும்
أَفَغَيْرَ دِينِ اللَّـهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ ﴿٨٣ آل عمران﴾
“அல்லாஹ்வுடைய மார்க்கமல்லாததையா இவர்கள் விரும்புகின்றனர்? வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்துமே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன. மேலும் அவை அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்.” (3/83)
இந்த திருவசனத்திற்கு ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் விளக்கம் தரும் போது  “சகல சிருஷ்டிகளும் அவை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவை அனைத்தும் அல்லாஹ்வின் முழுமையான அடிமைகள். அவை அவனின் ஒழுங்குபடுத்தலுக்கு இசைவாக வழிநடாத்தப்படுகின்றன. ஆகையால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவை அல்லாஹ்வின் நியதிக்கு அடிபணிந்தவையே. மேலும் எந்த வொரு சிருஷ்டியும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கும், நியதிக்கும், தீர்ப்புக்கும் அப்பால் செல்ல முடியாது. அவனின் உதவியின்றி எது வொன்றும் அசையவும் முடியாது எதனையும் செய்யும் சக்தியும் அதனிடம் இல்லை. மேலும் சர்வலோகத்தினரின் இரட்சகனும், அதன் உரிமையாளனும் அவனே. எனவே, தான் விரும்பியபடி அவற்றை நடாத்தக் கூடியவனும் அவனே. அவை அனைத்தையும் படைத்தவனும் அவனே. அவற்றை அவனே வடிவமைத்தான். அவனல்லாத அனைத்தும் பரிபாலிக்கப்படுகின்ற வைகளாகவும், சிருஷ்டிக்கப்பட்டவைகளாகவும், உருவாக்கப்பட்ட வைகளாகவும், தேவையுடையனவாகவும், அடிமைப் படுத்த பட்ட வைகளாகவும், அடக்கி ஒடுக்கப்பட்டவை களாகவும் இருக்கின்றன. ஆனால் அல்லாஹ்வோ தூய்மையானவன். அவன் ஒருவன், அடக்கி ஆளுபவன், சிருஷ்டிப்பவன், உருவாக்குபவன், வடிவமைபவன். என்ற படியால்  “படைப்புக்கள் யாவும் அவை விரும்பியோ, விரும்பாமலோ அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிகின்றன, என்பதை இத்திரு வசனத்தின் மூலம் அல்லாஹ்  எடுத்துக் காட்டியிருக்கிறான்.” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


நான்காம் பிரிவு
அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும்  நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை;
    அல்லாஹ்வின் இருப்பும் அவன் ஒருவனே என்பதும் உறுதியானதே. எனினும் இதன் மீது சந்தேகம் கொண்டுள்ள மனிதனின் பகுத்தறிவும், பிரதிவாதிகளும் திருப்தி அடையும் படியான ஆதாரங்களை அல்குர்ஆன் முன் வைத்துள்ளது. அவ்வாதாரங்களை அல்குர்ஆன் முன்வைக்கும் போது  இயற்கை நிகழ்வுகளை எடுத்துக் காட்டி, சீரான பகுத்தறிவு வாதத்தைக் கையாண்டுள்ளது.  இது அல் குர்ஆனின் ஒரு சிறந்த அணுகு முறையாகும். அத்தகைய அத்தாட்சிகளில் சில வருமாறு:
•    காரண கர்த்தா இல்லாமல்  காரியம் நிகழாது.
   இது தர்க்க சாஸ்திரத்தில் வரும் ஒரு விதி. இது இயற்கையாகவே யாவரும் அறிந்த ஒருவிடயம். இதனை ஒரு சிறுவன் கூட அறியாமல் இருக்க மாட்டான், எனவேதான் அவனை யாரேனும் அடித்து விட்டால் அடித்தவனை அவன் காணாத போதும் “என்னை அடித்தவன் யார்?” என்று கேட்பான். அப்போது உன்னை எவரும் அடிக்கவில்லை என்று கூறினால், அடிக்கின்ற ஒருவன் இல்லாமல் அடி விழ இயலுமா? என்பதை ஏற்றுக் கொள்ள அவன் அறிவு மறுக்கிறது. ஆனால் அவனிடம் இன்னார்தான் உன்னை அடித்தான் என்று கூறினாலோ அன்னவனை அடிக்கும் வரையில் அவன் அழுது கொண்டிருப்பான். இந்த தத்துவத்தையே அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ ﴿ الطور٣٥(
“அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா?” (52/35)
சகலரும் அறிந்த இந்த வாதத்தை எவரும் மறுக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்து முகமாக அல்லாஹ்,  أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் உண்டாகி விட்டனரா? அதாவது அவர்கள் தங்களை சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தா ஒருவனும் இல்லாமல் உண்டாகிக் கொண்டார்களா? அல்லது  அவர்கள் தம்மைத் தாமாகவே படைத்துக் கொண்டார்களா? என்று கேள்வி எழுப்புகின்றான், ஏனெனில் இந்த இரண்டு விடயங்களும் அசாத்தியமானவை. அப்படியாயின் அவர்களைப் படைத்த ஒருவன் இருக்கின்றான், அவன் அல்லாஹ் ஒருவனே என்பதும்,  அவனையன்றி வேறு எந்தவொரு சிருஷ்டி கர்த்தாவும் இல்லை என்பதுவும் இந்த வினாவின் மூலம் நிரூபனமாகிறது. மேலும்
هَـٰذَا خَلْقُ اللَّـهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِن دُونِهِ ۚ (11    لقمان)
“இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவைக ளாகும். அவனையன்றி அவைகள் எதனைப் படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்.” (31/11)
أَمْ جَعَلُوا لِلَّـهِ شُرَكَاءَ خَلَقُوا كَخَلْقِهِ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ اللَّـهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ﴿١٦الرعد﴾
“அல்லது அவர்கள் இனணயாக்கிக் கொண்டிருப்பவைகள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதனையும் படைத்து இருக்கின்றவா? அவ்வாறாயின் எல்லா சிருஷ்டிகளும் ஒரே மாதிரியாக ஆகிவிடுமே, (அப்போது ஒவ்வொன்றையும் படைத்தவன் யார் என்று அறிய வாய்ப்பில்லாது போய்விடும். அவ்வாறும் இல்லையே! ஆகவே) நீங்கள் கூறுங்கள் ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! அவனே அனைத்தையும் அடக்கி ஆளுகிறான்”(13/16)
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّـهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ ۖ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ۚ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ ﴿٧٣الحج﴾
“அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்த போதிலும் ஒரு ஈயைக் கூட படைக்க முடியாது. ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்ட போதிலும் அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (ஏனெனில்)) தேடுபனும் தேட்டப்படுகின்றவனும் பலவீனமானவர்களே” (22/73)
  أَفَمَن يَخْلُقُ كَمَن لَّا يَخْلُقُ ۗ أَفَلَا تَذَكَّرُونَ ﴿١٧النحل﴾
“எவன் படைக்கின்றானோ அவன் படைக்க முடியாதவனைப் போலாவானா! நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (16/17)
وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّـهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ ﴿٢٠النحل﴾
“எவற்றை அவர்கள் அழைக்கின்றார்களோ அவைகளால் யாதொன்றையும் படைக்க முடியாது. அவைகளுமோ படைக்கப் பட்டவைகளாக இருக்கின்றன” (16/20)
    என்று இவ்வாறு திரும்பத் திரும்ப அல்லாஹ் சவால் விட்ட போதிலும் அந்த தெய்வங்கள் எதையேனும் சிருஷ்டித்திருக்கின்றன என்று எவரும் வாதிட வில்லை. மேலும் அதனை அவர்கள் நிரூபிப்பது என்பது ஒரு பக்கமிருக்க வெறுமனே வாதிடவும் கூட அவர்களால் முடிய வில்லை. ஆகையால் எல்லாவற்றையும் படைத்தவன் பரிசுத்தமான அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணை ஒன்றுமில்லை என்பது உறுதியாகி விட்டது.
•     உலக விவகாரம் யாவும் ஒழுங்காகவும் நுணுக்கமாகவும் அமையப் பெற்றிருத்தல்.
இது எல்லா விவகாரங்களையும் ஒழுங்கு படுத்தி நிர்வகிக்கும் இறைவன் ஒருவனே. அவனுக்கு இணை எதுவுமில்லை, அவனை யாரும் எதிர்த்திட முடியாது என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரமாகும். அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
 مَا اتَّخَذَ اللَّـهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَـٰهٍ ۚ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَـٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ سُبْحَانَ اللَّـهِ عَمَّا يَصِفُونَ ﴿ المؤمنون٩١﴾
“அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனும் இல்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இவைனும் தான் படைத்தவைகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர்” (23/91)    எனவே உண்மை இறைவன் படைக்கின்ற வனாகவும், நினைத்ததை செய்கின்றவனாகவும் இருப்பது அவசியம். ஏனெனில் அவனுடைய ஆட்சியில் அவனுடன் கூட்டாக இன்னொருவன் இருப்பானாகில் அவனும் படைக்கின்றவனாகவும், நினைத்ததை செய்கின்றனாகவுமே இருப்பான். அச்சமயம் பரஸ்பரம் ஒவ்வொரு இறைவனும் தன் அதிகாரத்தில் மற்றொரு இறைவன் கூட்டாளியாக இருப்பதை விரும்ப மாட்டான். எனவே இயலுமாயின் அவன் தன் கூட்டாளியை அடக்கி ஆட்சி அதிகாரத்தையும் கடவுள் தன்மையையும் தனக்கு மாத்திரம் உரியதாக ஆக்கிக் கொள்வான். ஆனால் இது சாத்தியமில்லாத போது உலகிலுள்ள மன்னர்கள் தனித்தனி ஆட்சிகளை நிறுவிக் கொண்டிருப்பது போன்று அந்த கடவுள்களும் தங்களின் அதிகாரத்தையும், சிருஷ்டிகளையும் எடுத்துக் கொண்டு தங்களின் தனி ஆட்சியை அமைத்துக் கொள்வர்.. அப்பொழுது பிரிவினை ஏற்படும். அத்துடன் மூன்று காரியங்களில் ஏதாகிலும் ஒன்று நிகழும். அவையாவன:
•    ஒருவன் மற்றவனை அடக்கி அவனுக்கு ஆட்சி அதிகாரம் எதனையும் கொடுக்காமல் அதிகாரம் அனைத்தையும் தனக்கு சொந்த மாக ஆக்கிக் கொள்ளல்.
•    பரஸ்பரம் ஒவ்வொருவரும் ஆட்சியை பங்கு போட்டுத் தனி ஆட்சி ஆட்சி அமைத்துக் கொள்வர். அப்பொழுது பிரிவினை உண்டாகி விடும்.
•    இரண்டு ஆட்சியும் ஒருவனின் அதிகாரத்தின் கீழ் வருதல், அப்பொழுது அவன் தான் நினைத்ததை எல்லாம் செய்யும் உண்மை இறைவனாக இருக்க, மற்றவன் அவனுக்கு அடிமையாகி விடுவான்.
  இதுதான் நிதர்சனம். ஏனெனில் உலக விவகாரங்களை ஒழுங்கமைத்து நிர்வகிக்கக் கூடிய ஆட்சியாளன் ஒருவனாகவும் அவனை எதிர்க்க எவனும் இல்லாமலும் இருந்து அவன் அதன் நிகரில்லாத தனிப் பெரும் உரிமையாளனாக இருந்தால் உலகில் எந்த வொரு பிரிவினையும், இடைஞ்சலும் ஏற்படமாட்டாது.
•    சிருஷ்டிகள் தம் கடமையை நிறைவேற்ற அவைகளுக்கு வாய்ப்பளித்தல்  
 இவ்வுலகில் வாழும் எந்தவொரு சிருஷ்டியும் தன் கடமையை நிறைவேற்ற முடியாதவாறு அவை கடும் கஷ்டங்களுக்கு உட்படுத்தவும், தடுக்கப்படவும் இல்லை. மூஸா (அலை) அவர்களிடம் பிர்அவ்ன் விசாரனை செய்த போது மூஸா (அலை) அவர் முன் வைத்த ஆதாரங்களிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம். இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
قَالَ فَمَن رَّبُّكُمَا يَا مُوسَىٰ ﴿٤٩﴾ قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَىٰ كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَىٰ ﴿٥٠طه﴾
“அவன் மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?” என்றான் அதற்கு மூஸா “எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவைகளைப் பயன்படுத்தும்) வழியையும் அறிவித்தானோ அவன்தான்  எங்கள் இறைவன்” என்றார்” (20/49,50)
அதாவது நமது இறைவனோ எல்லா சிருற்டிகளையும் படைத்து அவைகளுக்கு பருத்த, சிறிய, நடுத்தரமான உடலையும், அவற்றுக்குத் தேவையான பண்புகளையும் கொடுத்து அவற்றைப்  பொருத்தமான வடிவில் உண்டாக்கியவன். பின்னர் ஒவ்வொரு சிருஷ்டியையும் என்ன நோக்கத்திற்காக அவன் படைத்தானோ அதன் வழியையும் அவற்றுக்குக் காட்டித் தந்தான், அல்லாஹ்வின் இந்த வழிகாட்டலோ அத்தாட்சிகள் மூலமும், ‘இல்ஹாம்’ எனும் உள்ளுணர்வு மூலமும் வழங்கப்பட்டதாகும். பூரணமான இந்த வழிகாட்டல், எல்லா சிருஷ்டிகளுக்கும் பொதுவானது. எனவே இது எல்லா சிருஷ்டிகளிடமும் இருக்கின்ற படியால் படைப்பின் மூலம் கிடைக்க வேண்டிய பயனை அவை அடைந்து கொள்வும், அதன் தீமைகளைத் தடுத்துக் கொள்ளவும் அவை முயலுகின்றன. இத்தகைய வழிகாட்டலை விலங்குகளுக்கும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான். அதன் மூலம் அவை தமக்குப் பயனுள்ளதை எடுத்து தீங்கு விளைவிப்பதைத் தவிர்த்து தம் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றன. அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:  
الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ ۖ (سجدة\7)
“அவனே ஒவ்வொரு பொருளையும் அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான்” சூரா ஸஜதா 7
    எனவே எல்லா படைப்புக்களையும் படைத்து அவற்றுக்கு மிக்க நல்ல தோற்றத்தையும் கொடுத்து அவை தம் நலன்களை அடைந்து கொள்ள ஏற்ற வழியையும் எவன் வழங்கினானோ அவன்தான் நிஜமான இறைவன். அவன்தான் அல்லாஹ். உலகில் எல்லா சிருஷ்டிகளுக்கும் தேவையான அனைத்தையும் அவன் தான் வழங்கினான். மேலும் அவற்றிலிருந்து பயன் பெறும் வழியையும் அவற்றுக்குக் காண்பித்தான். மேலும் ஒவ்வொரு இணத்திற்கும் பொருத்தமான கோலத்தையும், தோற்றத்தையும் அவனே அளித்தான் என்பதில் என்ன சந்தேகம்! இன்னும் ஆண், பெண் இரு பாலாருக்கும் பொருத்தமான வடிவங்களை வழங்கியவனும் அவனேதான். மேலும் ஒவ்வொரு உருப்பிலிருந்தும் உரிய பயனை அடையும் பொருட்டு அவற்றுக்கு பொருத்தமான வடிவத்தையும் அவனே கொடுத்தான். இவை அனைத்திலும் அவன்தான் சகலருக்குமான மிக மேலான இறைவன், அவனையன்றி வணக்கத்திற்குத் தகுதியான ஒன்றும் இல்லை என்பதற்குப் பலமான அத்தாட்சிகள் இருக்கின்றன. ஆகையால் அத்தகைய இறைவனை நிராகரிப்பது மிகப் பிரமாண்டமான படைப்புகளின் இருப்பை நிராகரிப்பதைப் போலாகும். அப்படியானால் அது அகங்காரத்தினதும், மகா பொய்யினதும் விளைவே..   ஒரு கவிஞன் இவ்வாறு கூறுகின்றார்:
وَفِيْ كُلِّ شَيْئٍ لَهُ آيَةُ    تَدُلُّ عَلَى أنَّهُ الْوَاحِدُ
பொருள் யாவும் கூறுகிறதே. அவன்  ஒருவன். என்று

 மேலும் அதிகாரம் மற்றும் பரிபாலன விடயத்திலும் அல்லாஹ் ஏகனே. இவ்விடயத்திலும் அவனுக்கு இணை எதுவமில்லை என்று இவ்விடயத்தில் ஏகத்துவத்தை உறுதி செய்ய வேண்டியதன் நோக்கம் யாதெனில் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன், அவனையன்றி வேறு எதுவும் வணக்கத்திற்குத் தகுதி பெறாது, என்பதை உறுதி படுத்துவதற்காகத்தான். இதுவே توحيد الألوهية தெய்வீகத் தன்மையில் ஏகத்துவம் எனப்படுகிறது. எனவே توحيد الربوبية அதிகார, பரிபாலன விடயத்தில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒருவன் توحيد الألوهية தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது சரியான முறையில் அதனைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் அவனை முஸ்லிம் என்றோ, ஏகத்துவ வாதி என்றோ  கூற முடியாது. மாறாக அவன் ஒரு காபிர், இறை நிராகரிப்பாலன் என்று கருதப்படுவான். இன்ஷா அல்லாஹ் இது பற்றி அடுத்து வரும் அத்தியாயத்தில் பேசுவோம்.


ஐந்தாம் பிரிவு
தெய்வீகத் தன்மையில் ஏகத்துவம் உறுதி படுத்துவதற்கு
பரிபாலன விடயத்தில் ஏகத்துவம் நிலை பெறுவது அவசியம்
அதாவது அல்லாஹ்வின் கைவசமே சர்வ உலகின் அதிகாரமும் உண்டென நம்பும் ஒருவன் படைக்கிறவனும், உணவளிப்பவனும், உலகை நிர்வகிப்பவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு எதுவும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வான். அத்துடன் சகல இபாதாக்களும் - வழிபாடுகளும் அவனுக்கேயல்லாது வேறு எவருக்கும் பொருந்தாது என்பதையும் அவன் உறுதி படுத்துவான்.  இதுவே     توحيد الألوهية தெய்வீகத் தன்மையில் ஏகத்துவமாகும். மேலும் அரபு மொழியில் إله எனும் சொல்லின் பொருள் வணக்கத்திற்குறிய என்பதாகும். இதன்படி الألوهية என்பது “இபாதா” வணக்கம் எனும் பொருளைத் தரும். ஆகையால் அல்லாஹ்வையன்றி வேறு எவரும் அழைக்கப்படலாகாது, அவனிடமன்றி வேறு எவரிடமும் அபயம் தேடலாகாது, அவனிடமன்றி வேறு எவர் மீதும் “தவக்கல்” நம்பிக்கை வைத்தலாகாது. மேலும் அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை வைத்தல் போன்ற ஏனைய சகல வழிபாடுகளும் அவனுக்கே அல்லாது வேறு எவருக்காவும் நிறைவேறப்படலாகாது. எனவே توحيد الربوبية அதிகார விடயத்தில் ஏகத்துவத்தை உறுதிப்படுத்துவதானது توحيد الألوهية தெய்வீகத் தன்மையில் ஏகத்துவம் அவசியம் என்பதை உணர்த்த தக்கதாகும். எனவேதான் அல்லாஹ் தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை ஏற்க மறுப்போரின் நிலை பிழை என்பதை, அவர்கள் அதிகார விடயத்தில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டி நிரூபிக்கின்றான்.. உதாரணமாக அல்லாஹ்வின் இந்த வாக்கைக் கவணியுங்கள்:
يَاأَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿٢١﴾ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّـهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ ﴿٢٢البقرة﴾   
“மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்.”
அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து அதனைக் கொண்டு புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்” (2 - 21,22)
இவ்வசனத்தில் தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் படி, அதாவது அல்லாஹ் ஒருவனையே வணங்கும் படி அல்லாஹ் உத்தரவிடுகின்றான். மேலும் முற்கால, பிற்கால எல்லா மனிதர்களையும், வானம் பூமியையும் அவையிரண்டுக்கும் இடையே இருப்பவைகளையும் படைத்தவன், காற்றை வசப்படுத்தித் தந்தவன், மழையைப் பொழிவித்தவன், பயிர்களை முளைக்கச் செய்தவன், மனிதர்களின் ஆகாரமாகிய கனிகளை வெளிப்படுத்தியவன், அல்லாஹ் ஒருவனாகவே இருக்கின்ற படியாலும், இதனை எல்லாம் அவனல்லமால் வேறு எவராலும் செய்ய இயலாது என்ற படியாலும் அவனுக்கு எவரையும் இணையாக்கக் கூடாது, அது பொருத்தமற்ற செயல் என்று அல்லாஹ் வாதிடுகிறான். எனவே توحيد الألوهية  தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற இயற்கையான அத்தாட்சியாகவும், வழியாகவும் توحيد الربوبية  அதிகார விடயத்திலான ஏகத்துவம் விளங்குகிறது.  . ஏனெனில் மனிதனுக்கு தன்னைப் படைத்தவனுடனும், தனக்கு நன்மை தீமை ஏற்படுத்தக்கூடிய காரணத்துடனுமே முதலில் தொடர்பு ஏற்படுகிறது. அதன் பின்னரே அவன் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தும் படியான, அவனைத் திருப்திப்படுத்தும் படியான தனக்கும் அவனுக்கும் இடையிலான தொடர்பை பலப்படுத்தக் கொள்ளும் படியான வழிகளின் பால் அவன் கவணம் செலுத்துவான். எனவே توحيد الربوبية  அதிகார விடயத்தில் ஏகத்துவம்,  توحيد الألوهية  தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற வாசலாக இருக்கின்ற படியால் தான் அல்லாஹ் இதனை முன்னிறுத்தி முஷ்ரிகீன்களுடன் வாதிடுகிறான். மேலும் இதே அடிப்படையில் அவர்களுடன் வாதிடும்படி தன் தூதருக்கும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
قُل لِّمَنِ الْأَرْضُ وَمَن فِيهَا إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿٨٤﴾ سَيَقُولُونَ لِلَّـهِ ۚ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ ﴿٨٥﴾ قُلْ مَن رَّبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ﴿٨٦﴾ سَيَقُولُونَ لِلَّـهِ ۚ قُلْ أَفَلَا تَتَّقُونَ ﴿٨٧﴾ قُلْ مَن بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿٨٨﴾ سَيَقُولُونَ لِلَّـهِ ۚ قُلْ فَأَنَّىٰ تُسْحَرُونَ ﴿٨٩المؤمنون﴾
“நீங்கள் அவர்களிடம் பூமியும் அதிலுள்ளவை களும் யாருக்குரியன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்” என்று சொல்லுங்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்குரியனவே” என்று கூறுவார்கள். “நீங்கள் நல்லுணர்ச்சி பெறமாட்டீர்களா? என்று நீங்கள் கேளுங்கள். அன்றி “ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?” என்று கேளுங்கள். அதற்கவர்கள் “அல்லாஹ்வுக்குரியனவே” என்று கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா?” என்று கேளுங்கள். அன்றி “எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? அவனே பாதுகாக்கின்றான். அவனிடமிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. நீங்கள் அறிந்திருந்தால், அப்பேற்பட்ட அவன் யார் என்று கேளுங்கள்.” அதற்கவர்கள் “அல்லாஹ்வுக்குரியது தான்” என்று கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?” என்று சொல்லுங்ள்” (23 - 84 முதல் 89 வரை)
ذَٰلِكُمُ اللَّـهُ رَبُّكُمْ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ ﴿الأنعام١٠٢﴾
“இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற் குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன், ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள்” (6/102)
எனவே அதிகார விடயத்தில் ஏகனாக இருக்கின்ற அல்லாஹ்தான்  வணக்கதிற்குரிய ஒருவனாகவும் இருக்க முடியும் என்று அல்லாஹ் உறுதிபட கூறுகின்றான். .மேலும் சிருஷ்டிகளை அல்லாஹ் படைத்ததன் நோக்கமும்  توحيد الألوهية  தெய்வீகத் தன்மையில் அதாவது வணக்க வழிபாடுகளில் ஏகத்துவத்தை நிலை பெறச் செய்வதற்காகத்தான் . அல்லாஹ்வின் வாக்கு இவ்வாறு கூறுகிறது:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ﴿٥٦الذاريات﴾
“ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்கேயன்றி நான் படைக்கவில்லை” (51/56)
இவ்வசனத்தில் வந்துள்ள يَعْبُدُونِ எனும் சொல்லின் கருத்தாவது வழிபாடுகளில் என்னை - அதாவது அல்லாஹ்வை ஏகனாக்க வேண்டும் என்பதாகும். எனவே தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை உறுதி படுத்தி அதனை நிலை நிறுத்தாது, வெறும் அதிகார விடயத்தில் மாத்திரம் ஏகத்துவத்தை உறுதி படுத்துவதன் மூலம் ஒரு அடியான் ஏகத்துவ வாதியாக ஆகிவிடமாட்டான். அவ்வாறில்லையெனில் அதிகார ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டிருந்த முஷ்ரிகீன்களும் ஏகத்துவ வாதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பர். ஆனால் அப்படியில்லை. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தில் உள்வாங்கப் படவில்லை. மேலும் அவர்கள் அல்லாஹ் தான் படைக்கின்றவன், உணவளிப்பவன், உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செய்கின்றவன் என ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் நபியவர்கள் அந்த முஷ்ரிக்குகளுடன் யுத்தம் செய்தார்கள், ஏனெனில் அவர்கள் توحيد الألوهية  தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை நிராகரித்தார்கள் என்பதற்காகத்தான். அந்த முஷ்ரிக்குகளின் நிலையை அல்லாஹ்வின் வாக்கு தெளிவு படுத்துகிறது.
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّـهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ ﴿الزخرف٨٧﴾
“இவர்களைப் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம்  கேட்பீராயின் அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின் இவர்கள் எங்கு விரண்டோடுகிறார்கள்?”(43/87)
 وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ ﴿٩الزخرف﴾
“வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்கும் பட்சத்தில், மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன்தான் அவைகளைப் படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.(43/9)
 قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ اللَّـهُ ۚ (يونس\31)
“நீங்கள் “வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிக்கும், பார்வைக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிரள்ளவற்றிலிருந்து இறந்த வற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? எல்லா காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்?” என்று கேளுங்கள்! அதற்கவர்கள் “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள்”(10/31)
இத்தகைய வசனங்கள் அலகுர்ஆனில் நிறைய இருக்கின்றன. எனவே அல்லாஹ்வின் இருப்பை அல்லது எல்லாம் படைத்த அல்லாஹ்தான் உலகத்தை நிர்வகிக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்வது தான் ஏகத்துவம் என்று  யாரேனும் வாதிட்டு அதனுடன் ஏகத்துவத்தைச் சுறுக்கிக் கொள்வானாகில் அவன் நபிமார்கள் எந்த ஏகத்துவத்தின் பால் அழைப்பு விடுத்து வந்தார்களோ அந்த ஏகத்துவத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவனாவான். மேலும் அதன் வழியின் ஊடாக இலக்கை சென்றடையாமல் வழியில் நின்று கொண்டவன் ஒருவனைப் போனறவனே.
மேலும் தெய்வீகத் தன்மையின் சிறப்பம்சம் யாதெனில்: சகல அம்சத்திலும் பரிபூரணத்துவம் இருத்தல் வேண்டும். எவ்வகையிலும் குறை எதுவும் இருக்கக்கூடாது என்பதாகும். அப்படிப்பட்ட நிலையில் இருப்பவனே எல்லா வழிபாட்டுக்கும், வணக்கத்துக்கும் தகுதியானவன். எனவே அவன் ஒருவனையே வழிபடல் வேண்டும், அவனையன்றி வேறு எவரையும் வழிப்படக்கடாது. மேலும் பகுத்தறிவின்படியும், மார்க்கத்தின் படியும், இயற்கை நியதியின் படியம் கவணிக்குமிடத்து கண்ணியப்படுத்தவும், அஞ்சி நடக்கவும், பிராத்திக்கவும், நன்மையை எதிர்பார்க்கவும், பாவ மண்ணிப்புக் கோரவும், நம்பிக்கை கொள்ளவும், அபயம் தேடவும், மிகுந்த அன்புடன் பணிவு கொள்ளவும், தகுதியானவன் அல்லாஹ் ஒருவனேயன்றி வேறு எதுவும் இதற்கு தகுதி பெறாது  என்பது தெளிவு.

(தொடரும்)

------------------------------------------------------------------