இஸ்லாமிய பிரச்சாரப் பாதையில் இருக்கும் சில தடைகள்

இஸ்லாமிய அழைப்பில் ஏற்படும் தடைகள்.
1 மனோஇச்சை. 2. சத்தியத்தை ஏற்க மறுத்து அகம்பாவம் கொள்ளல். 3. பொய்யர்களின் வளர்ச்சியும், சத்திய சீலர்களின் வீழ்ச்சியும் 4. அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் தீய நண்பர்கள். 5. உற்சாகம் குன்றுவதும், அவர்களின் ஊக்கம் குறைவதும் 6. மக்கள் உலக விடயங்களுக்கு தீவிர கவனம் செழுத்துதல்.

இஸ்லாமிய பிரச்சாரப் பாதையில் இருக்கும்

 

சில தடைகள்
] Tamil – தமிழ் –[تاميلي 

ஆயிழ் இப்னு அப்துல்லாஹ் அல் கரணி
தமிழில்
அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Su-dan.


2014 - 1435
 
 
عقبات
في طريق الدعوة
 « باللغة التاميلية »

 تأليف:
 عائض بن عبد الله القرني



ترجمة
عبد الستار بن عبد الرشيد خان




2014 - 1435
 

நூலாசிரியர் பற்றிய அறிமுகம்
இவர்களது இயற்பெயர் அல் ஷைய்க்; ஆயிழ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆயிழ் என்பதாகும். இவர் சஊதி அரேபியாவில் உள்ள அஸீர் மாகாணத்தின் வடக்காக அமையப் பெற்றிருக்கும் பல்கர்ன் மாவட்டத்தின் ஆலு ஷுரைஹ் கிராமத்தில் கி.பி31/12/1959 ல் பல்கர்ன் எனும் கோத்திரதில் பிறந்தார், பின்னர்இவர் “ஆயிழ் அல்கரனி” என சுருக்கமாக அழைக்கப்பட்டார். இவர் ஓர் இஸ்லாமிய அழைப்புப் பணியாளர், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நடு நிலைப் போக்கை கடைபிடித்தவர். இவர் தனது முதன் நிலைக் கல்வியை ஆல் ஸுலைமான் பாடசாலையிலும், இடை நிலைக் கல்வியை ரியாத் நகரில் உள்ள அல் மஃஹதுல் இல்மியிலும், உயர் நிலைக் கல்வியை அப்ஹா நகரில் உள்ள அல் மஃஹதுல் இல்மியிலும் முடித்துக் கொண்டார். பிறகு அப்ஹா பல்கலைக் கழகத்தில் தனது இளமானிப் பட்டத்தையும் பிறகு முறையே முதுமானி, கலாநிதிப் பட்டங்களையும் பெற்றுக் கொண்டார். பிறகு அப்ஹா நகரில் உள்ள அபூ பக்கர் அஸ்ஸித்தீக் ஜும்ஆப் பள்ளிவாசலில் இமாமாகவும், கதீபாகவும் சேவையாற்றினார். இவருக்கு சுமார் 800 (ஓடியோ) ஒலிப் பிரசங்கங் களும், 50 (வீடியோ) காணொலிப் பிரங்கங்களும் உள்ளன, அல்குர்ஆன் விளக்கம், ஹதீஸ், இஸ்லாமிய மதச்சட்டம், இலக்கியம், நபிகளாரது வாழ்க்கை வரலாறு போன்ற துறைகளிலும் எழுதியுள்ள பண்ணூல் ஆசிரியரு மாவார், இவரது “நீ கவலைப்படாதே” எனும் அரபுப் புத்தகம் அரேபியர்களுக்கு மத்தியில் மிகச் செல்வாக்குப் பெற்றதால் அதில் சுமார் இரண்டு மில்லியன் பிரதிகள் அச்சிட்டு வெளியடப் பட்டதுடன் வேறு பல மொழிகளுக்கும் மொழி பெயர்க்கப் பட்டது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
   
நன்றி; விக்கிபீடியா












முன்னுரை
அனைத்துப் படைப்புகளையும் நன்கறிந்தவனும், அவர்களை பார்த்துக் கொண்டிருப்பவனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உண்டாவதாக, மேலும் வானத்தில் நட்சத்திரங் களை ஏற்படுத்தி,அதில் விளக்கையும், ஒளிசிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.
படிப்பினை பெற விரும்புபவனுக்கும், நன்றி செலுத்த விரும்புபவனுக்கும் இரவையும், பகலையும் ஒன்றன் பின் ஒன்றாக அவனே ஏற்படுத்தினான். அல் புர்கான் 61,62.
வணக்கத்துக்குறிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் திருத் தூதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன், அவர் (தமக்கு அருளப்பட்ட) தூதை (மக்களுக்கு) எத்தி வைத்தார், அமானிதங்களையும் ஒப்படைத்தார், அல்லாஹ்வுக்காக மக்களுக்கு உபதேசம் செய்தார், தாம் மரணிக்கும் வரைக்கும் அல்லாஹ்வின் பாதையில் முயற்சித்தார், அவர்கள் மீதும் அவர்களது கிழையார்கள் தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வானாக.
மௌட்டீகத்திலிருந்து மக்களை காப்பாற்றி அவர்களை இறை நம்பிக்கை எனும் பிரகாசத்துக்கு, நேர்வழிப்படுத்த தோன்றிய இஸ்லாமிய சன்மார்கத்துக்கு முன்னால் நிறையவே தடைகள் காணப்படுவது இயல்பு தான். இத்தடைகள் (அனைத்தும்) இஸ்லாமிய பிரச்சாரப் பாதையில் சற்று செல்வாக்குச் செலுத்தினாலும் இப்பூலோ கத்தையே நிறப்பியிருக்கும் இஸ்லாம் எனும் பிரகாசத்தை (முற்றாக) அனைத்து விட முடியாது என்பதே யதார்த்தம்.











இஸ்லாமியப் பிரச்சாரத்தை எதிர்நோக்கும் சில தடைகள்
•    பிரச்சாரம் செய்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாவை?
•    (இஸ்லாமிய) அழைப்பை ஏற்பவர்களின் கண்களை மூடியிருக்கும் திரைகள் எவை?
•     மக்களுக்கு பிரச்சாரம் செய்பவர்களும், அவர்களை வழிநடத்துகிறவர்களும், அவர் களுக்கு உபதேசம் செய்பவர்களும், விழிப்புணர்வு ஊட்டுபவர்களும் எதிர்நோக்கும் கஷ்டங்கள் யாவை?
இச்சிறு நூல் பதில்அளிக்கவிருக்கும் வினாக்கள் இவைகள் தான். (இதை எழுதி முடிக்க) அல்லாஹ்வே உதவியளிப்பவன், நோரன பாதையைக் காட்டுபவனும் அவனே. ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டல் இல்லாது போனால் மனிதனின் (இஜ்திஹாத் எனும்) முயற்சியும் கூட பிழைத்துப் போகும்.
முதலாவது தடை: (இஸ்லாமிய) அழைப்பை ஏற்பவரை அல்லாஹ்வின் பாதையிலிருந்து தடுக்கும் மனோஇச்சை.
இரண்டாவது தடை: அழைப்பை ஏற்பவர் சத்தியத்தை ஏற்க மறுத்து அகம்பாவம் கொள்ளல்.
மூன்றாவது தடை: எண்ணிக்கையில் பொய்யர்களின் வளர்ச்சியும், சத்திய சீலர்களின் வீழ்ச்சியும்.
நான்காவது தடை: தூதர்களினதும், நபிமார் களினதும் பகைவர்களாகிய அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் தீய நண்பர்கள்.
ஐந்தாவது தடை: அழைப்பாளிகளின் உற்சாகம் குன்றுவதும், அவர்களின் ஊக்கம் குறைவதும்.
ஆறாவது தடை: மார்க்கத்தை விட மக்கள் உலக விடயங்களுக்கு தீவிர கவனம் செழுத்துதல்.
பிரச்சாரப் பணியாளர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.
உலகிலே மிக்க மகத்தான பிச்சாரப் பணியாள ருடன் சில நிமிடங்களைக் கழிப்பது அவசியமாகும். அவர் ஓரு மகத்தான சீர்திருத்த வாதி, அவர் மூலம் அல்லாஹ் மனித இனத்துகே நேர்வழி காட்டினான், மனித இனத்தின் சிந்தனைக்கே பிரகாசமூட்டி சிலை வணக்கத்தின் கட்டமைப்பையே அதிரச் செய்தான். நேர்வழி பெற்ற வரும் கருணைக்குரியவரும், ஏழு வானங்களுக்கும் மேலிருந்து அல்லாஹ்;
“தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்!”அல் மாஇதா 67.
என்று கூறப்பட்டவருடன் சில நிமிடங்களைக் கழிப்போம். அவர்கள் மார்க்கத்தை பூரணமாகவே எத்திவைத்தார்கள், ஆம் பூரணமாகவே நேரான வழிக்கு அழைப்பும் விடுத்தார்கள், பூரணமாகவே மார்க்கத்துக்காக உழைத்தார்கள், பகல் போன்ற மிகத் தெளிவான ஆதாரத்திலே எங்களை விட்டுச் சென்றார்கள். நன்மையான  விடயங்களாயினும் சரியே, அல்லது தீமையான விடயங்களாயினும் சரியே அவைகள் அனைத்தையும் எங்களுக்கு காட்டித் தந்தார்கள். மக்களுக்கு உபதேசித்தார்கள், அவர்களுக்கு அழைப்பும் விடுத்தார்கள், (அவர் களுடன் மார்க்கவிடயத்தில்) முயற்சித்தார் கள், மேலும் உறையாடினார்கள், (மார்க்கத்) தீர்ப்பும் வழங்கினார்கள், அவர்களுடைய இரத்தத்தையும் கண்ணீரையும் (பொண்ணான) நோரத்தையும் கூட (மார்க்கத்துக்காக)செலவிட்டார்கள்.
ஒரு கவிஞர் கூறுகிறார்;
நீர்! விரல்களை ஒத்த சீர்திருத்தவாதிகள் அனைவ ரும் ஒன்றாகத் திரண்ட கரமாவீர், இல்லை அதற்கும் மேலான ஒரு கொடை வள்ளலாவீர்.
அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்பட்ட (அ)வர்களிடமிருந்து உங்களுக்கு  ஏதும் அற்புதம் வேண்டுமா? மரணித்தும் (புகழ்ந்துறைக்கப்பட்டு) உயிருடன் இருக்கும் ஒரு மக்கள் கூட்டம் அவர்களுக்கிருப்பதே போதுமானது.
ஆம் ஒரு அனாதையாகவே அவர்கள் வளர்ந்தார்கள், மனிதர்கள் எல்லோருக்கும் தாய் தந்தை என இருவர் உண்டு, ஒவ்வொரு தாயும் தந்தையும் தனது குழந்தையுடன் கொஞ்சுவார்கள், ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ ஒரு அனாதை யாவார்கள்.   
ஒரு கவிஞர் கூறுகிறார்;
நீர் ஒர் அனாதை தான், ஆனால் உம்மில் (கடல் போல்) ஒரு அற்புதம் இருக்கிறது, பல லட்சம் வம்பர்கள் அதன் கரையிலே மண்டியிடுவர்.
வாழ்க்கையுடன் போராடுவதற்கே அவர்கள் அனாதையாக வளர்ந்தார்கள், ஆகவே தாய்ப் பாசத்தையும் தந்தையின் அரவனைப்பையுமஅறிய வில்லை, சில காலம் அவர்களுடைய சித்தப்பா விடமும், இன்னும் சில காலம் அவர்களுடைய பாட்டனிடமும், வேறு சில காலம் அவர்களுடைய உறவினர்களிடமுமே வளர்ந்தார்கள். அறியாமைக் காலத்தில் மோசடி செய்யாத அவர்கள் இஸ்லாம் வந்த பிறகு மட்டும் மோசடி செய்வார்களா? தன் ஆயுலில் ஒரு முறை கூட பொய்யுறைக்காத அவர்கள் இறைச் செய்தி கிடைத்த பிறகு மட்டும் பொய்யுறைப்பார்களா?
அல்லாஹ் கூறுகின்றான்;
நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை!
உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை.
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.
அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.அன்னஜ்ம் 1-4.
(இஸ்லாம் மார்க்கத்துக்கு மக்களை) அழைப்பதற்காக (வெறும்) ஒரு விரிவுரையை நிகழ்த்திய மனிதா! முஹம்மத் (ஸல்) அவர்களோ ஆயிரக்கணக்கில் நிகழ்த்தி யிருக்கிறார்கள், (இஸ்லாமிய) அழைப்புச் சபை ஒன்றில் கண்ணீர் வடித்த மனிதா முஹம்மத் (ஸல்) அவர்களோ அல்லாஹ்வின் பாதையில் நிகழ்ந்த ஒவ்வொரு யுத்த கலத்திலும் கண்ணீர் வடித்துள்ளார்கள், ஹுனைன் யுத்த கலத்தில் அவர்களுடைய கை விரலில் இருந்து இரத்தம் சொட்டச் சொட்டக் பின்வருமாறு கூறினார்கள்;
ஒரு விரலில் இருந்து தான் இரத்தம் சொட்டுகிறது
ஆனால் அதுவும் அல்லாஹ்வின் பாதையில் அல்லவா?!
(இன்றைய) அழைப்புப் பணியாளர்கள் மாட மாளிகைகளில் குடியிருக்க அவர்களோ மண் குடிசையில் அல்லவா குடியிருந்தார்கள், இன்று அவர்கள் குளிரூட்டப்பட்ட (வீடு போன்ற) வைகளில் குடியிருக்க, ஆடம்பர வாகனங்களில் சுற்றித் திரிய, (அன்று) அவர்களோ கடுமையான சூட்டில் கழுதையின் மேல் அல்லவா அமர்ந்தார்கள்.
 ஒரு கவிஞர் கூறுவதைப் போன்று;
தூன்கள் சகிதம் ஒய்யாரமான  மாளிகைகள் உமக்குத் தேவையில்லை!
தடிகளிலான கூடாரமோ அல்லது மண் வீடோ உமக்குப் போதுமானதே.

தமக்கு நாற்பது வயதடைந்ததும் (மக்களை) அல்லாஹ்வின் பால் அழைத்தார்கள், அவர் களுடைய கூட்டத்தினரே அதிலும் அந்னியவர்க ளுக்கு முன் தம் உறவினர்களே அவர்களை (மக்காவிலிருந்து) வெளியேற்றினார்கள். பிறகு அவர்கள் தாயிப் வாசிகளிடம் செல்ல அவர்களும் இவர்களை விரட்ட அவர்கள் எங்கே செல்வார்கள்? ஏக இறைவனிடம் மாத்திரம் தான் செல்வார்கள்.
தன் கண் முன்னே தோழர்கள் கொல்லப் படுவதைக் கண்ணுற்று அழுதார்கள், பிறகு முன்னரை விட பலசாலியாக மாறினார்கள், அவர்களுடைய பெண் மக்கள் அடிக்கப்பட்டும் பலம் குன்றவில்லை. பிறகும் முன்னரை விட பலசாலியாக மாறினார்கள், அல் குர்ஆனை மனனமிட்ட எழுபது பேர் வெட்டிக் கொலை செய்யப் பட்டதை செவியுற்றதும் தமது சிறப்பான தாடி முழுவதும் நணையும் வரை அழுது விட்டுக் கூறினார்கள்;
“எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனேசிறந்த பொறுப்பாளன்”  ஆல இம்ரான் 173.

ஒரு முறை நபியவர்கள் மதீனாவில் இருக்கும் போது அபூ ஸூப்யான் (மதீனாவை) நோக்கி வருவதாகவும், இறைமறுப்பாளர்கள் யூதர்களுட னும் நயவஞ்சகர்களுடனும் (கூட்டுச் சேர்ந்து) இருப்பதாகவும் அவர்களுக்கு செய்திகள் வந்தன. உடனே வாளை எடுத்து எழுந்து நின்ற அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்;
“எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே சிறந்த பொறுப்பாளன்” ஆல இம்ரான் 173.

பிரிதொரு முறை அவர்களுக்கு முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்து கொண்டிருந்தன, (இறைமறுப்பாளர்கள்) அவர்களை கவிஞன் என்றார்கள் ஆனாலும் அவர்கள் தளரவில்லை, சூனியகாரன் என்றார்கள் அவர்களோ தளர வில்லை, சோதிடன் என்றார்கள் அவர்களோ தளர வில்லை, பைத்தியக்காரன் என்றார்கள் அவர்களோ தளரவில்லை இறுதியில் அவர்களுக்கே வெற்றி கிட்டியது.
(நபி) அவர்களுடைய பிரச்சாரத்தை அல்லாஹ் பல்வேறு வியக்கத்தக்க முறைகளில் விபரிக்கிறான், அவர்களை நளினமானவர் என விபரிக்கிறான் அல்லாஹ் கூறுகின்றான்;
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந் தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார் கள். ஆல இம்ரான் 159.
மேலும் அவர்களை உண்மையாளர் எனவும், நம்பிக்கைக்குரியவர் எனவும் விபரிக்கிறான், அவர்களிடமிருந்து பைத்தியத்தை மறுக்குமுகமாக அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்;
(முஹம்மதே!) உமது இறைவனின் அருட் கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. அல்கலம் 2.
அவர்களுடைய நடத்தை ஒழுக்கம் ஆகியவை களை அல்லாஹ் அல்குர்ஆனில் எங்களுக்கு பின்வருமாறு கற்றுத்தருகிறான்;
(நபியே) நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர் .அல்கலம் 4.
சன்மார்க்க பிரச்சாரப் பணியாளர்களே! கல்வி கற்கும் மாணவர்களே!...
கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் சன்மாரக்கப் பிரச்சாரம் சென்றடைந்த பின்னரே மரணித்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களே உங்களுக்குச் சிறந்த முன்மாதிரி. அவர்கள் தனது மரணத்தருவாயில் பின்வருமாறு கூறினார்கள்; எனது உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, ஒரு யூதனோ அல்லது கிரிஸ்தவனோ என்னைப் பற்றி கேள்விப்பட்டு பின்னர் என்னை விசுவாசம் கொள்ளாது மரணித்தால் நரகத்தையே சென்றடைவான்.
(முஹம்மத் (ஸல்)) அவர்களுக்கு எதிராக அரேபியர்கள் வாள் ஏந்தினார்கள், அவரும் அவர்களுக்கெதிராக வாள் ஏந்தினார், அவர்கள் அவருடன் யுத்தம் தொடுத்தார்கள் நபியவர்களும் அவர்களுடன் யுத்தம் தொடுத்தார், அவர்கள் அவரை ஒதுக்கினார்கள் அவரும் அவர்களை ஒதுக்கினார், பின்னரே அல்லாஹ் அவனுடைய மார்க்கத்துக்கு வெற்றியளித்தான், மேலும் அவனுடைய கலிமாவை உயர்த்தினான். மக்கா வெற்றி தினத்தில் (நபி (ஸல்)) அவர்கள் “வணக்கத்துக் குரிய நாயன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்” எனும் கொடி வான் பறக்க புனித மக்கா நகருக்குள் நுழைந்தார்கள்.
ஒரு கவிஞர் கூறுகின்றார்;
முஸ்லிம்களாகிய எங்களுக்கு சோபனம் உண்டாகட்டும். காரணம் இடித்துத் தகர்க்க முடியாத அல்லாஹ்வின் பராமரிப்பு எனும் தூன் எங்களுக்குண்டு.
அல்லாஹ்வுக்கு வழிப்படுமாறு எங்களை அழைப்பு விடுத்த அழைப்பாளியை அவன் “தூதர்களில் சங்கை மிக்கவர்” என அழைத்த மறுகணமே நாம் (உலகில் தோன்றிய) அனைத்து சமூகங்களிலும் சங்கை மிக்கவரானோம்.



முதலாவது தடை: அழைப்பை ஏற்பவர் மனோஇச்சைக்கு இரையாகுதல்.
மனோ இச்சைக்கு இரையாவதே பிரச்சாரப் பாதையில் காணப்படும் முதலாவது தடையாகும். மனோஇச்சை அல்லாஹ்வையன்றி வழிபடப்படும் தெய்வமாகும், கனிசமான மனிதர்கள் இதன் மூலமே வழிகெட்டுப் போனார்கள், மனோ இச்சைக்கு இறையாவதன் மூலமே ஒரு மனிதன் வழிகெட்டவனாகவோ, அல்லது துர்ப்பாக்கிய வானாகவோ, அயோக்கினுடன் நட்பு வைக்கவோ, இசைப் பிரியனாகவோ, ஆபாசப் படங்களுடன் தொடர்பு வைக்கவோ, பாவகாரியங்களில் மூழ்கவோ, (மார்க்கத்திலிருந்து) பின் வாங்கவோ துணை போகிறான் பிறகு பள்ளிவாசல் என்பதோ, குர்ஆன் என்பதோ, நேர்வழி என்பதோ, சுவனத்தின் பாதை எது என்பதோ புரியாது தவிக்கிறான். எனவே தான் அல்லாஹ்  பின்வருமாறு கூறுகின்றான்;
மனோஇச்சையைப் பின்பற்றாதீர்! அது அல்லாஹ் வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடும்.ஸாத் 26.
மனோஇச்சையில் மனிதன் மதி மயங்கி விடுகிறான், எனவே அல்லாஹ் எங்களை அதிலிருந்து பாதுகாப்பானாக.
ஒரு கவிஞர் கூறுகின்றார்;
புத்திக் கூர்மையின் விபரீதம் யாதெனில் மனோ இச்சை அதை வென்று விடுவது தான், எவருடைய மதியை மனோ இச்சை வென்று விடுகிறதோ அவர் நரகத்தில் விழுந்துவிடுவார். – அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக-.
அல்லாஹ் கூறுகின்றான்;
இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. அல் கஹ்ப் 28.
இத்திருவசனம் இறக்கப்பட்ட காரணத்தை அல் குர்ஆன் விளக்கவுரை அறிஞர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்;
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் சில இறை மறுப்பளர்கள் வந்தார்கள், அவர்களில் சிலை வணங்குபவர்களும், மதுபானம் அருந்துபவர்களும், விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களும், அகம்பாவம் கொண்டவர்களும், பட்டாடை தங்காபரணம் போன்ற வைகளை அணிபவர்களும் அடங்குவர், அவர்கள் அனைவரும் நபியவர்களிடம் “முஹம்மதே!” நீங்கள் எங்களை (இஸ்லாம் மார்க்கத்துக்கு) அழைக்க விரும்பினால் இதோ இந்த யாசிப்போரையும், ஏழைகளையும், அடிமை களையும் இங்கிருந்து வெளியேற்றுங்கள் ஏனெனில் நாம் உயர் குலத்தைச் சேர்ந்தவர்கள், இவர்களுடன் எங்களுக்கு இங்கே அமர்ந்திருக்க முடியாது என்றார்கள், (அவர்களுக்கும் இஸ்லாத்தை எத்திவைக்க விரும்பிய) நபி (ஸல்) அவர்கள்  பிலால், இப்னு மஸ்ஊத், ஸல்மான் போன்றோரை அவையிலிருந்து வெளியேற்ற முற்பட்டார்கள் உடனே அல்லாஹ் பின் வரும் வசனத்தை இறக்கினான்;     
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! கஹ்ப் 28.
ஒரு அறிஞர் இத்திருவசனத்துக்கு பின்வருமாறு அடிக்குறிப்பெழுதுகின்றார்; ஏழைகளைகளுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக, யாசிப் போருடன் அமர்ந்திருபீராக. ஏனெனில் அவர்களே உண்மையாளர்கள் நன்மையும், உதவியும் அவர்க ளிடத்திலேயே உள்ளன. அவர்களே உண்மையாக இஸ்லாத்தை ஏற்றவர்கள், இலஞ்சம் கோரியோ தர்மம் பெற்றோ அவர்கள் இஸ்லாத்தை ஏற்க வில்லை, நாளைய (இஸ்லாமிய) பிரச்சாரம் அவர்கள் கையிலே தங்கியுள்ளது.
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. கஹ்ப் 28.
பிறகு நபியவர்கள் “நான் உங்களுடனேயே இருக்கிறேன்” எனக் கூறிவிட்டு அவர்களுடனே அமர்ந்தார்கள்.
மேலும் ஒரு சரியான செய்தியில் நபி (ஸல்) அவர்கள் (இஸ்லாத்துக்காக) மக்காவில் உள்ள மிகப்பெரும் செல்வந்தர்களின் நட்பைப் பெற விரும்பினார்கள், அப்பொழுது அவர்களுடன் இருந்த இப்னு உம்மி மக்தூம் (ரலி)அவர்கள் நபி யவர்களிடம் (மார்கத்தைப் பற்றி) ஒரு வினாத் தொடுக்க முன்வந்தார். இப்னு மக்தூம் (ரலி) ஒரு முஸ்லிமாவார் அவருடைய இதயத்தை அல்லாஹ் (இறைவிசுவாசத்தால்) பிரகாசமூட்டி யுள்ளான் ஆனாலும் அவர் ஒரு குருடர், அல்குர்ஆனில் இறைவன் அவரை குருடர் எனக் கூறியுள்ள போதிலும் அல் ரஃத் எனும் அத்தியாயத்தில் பின்வருமாறு கூறுகின்றான்;
உமது இறைவனிடமிருந்து அருளப்பட்டது உண்மையே என்று அறிந்திருப்பவர், குருடரைப் போல் ஆவாரா? அறிவுடையோர் தாம் படிப்பினை பெறுவார்கள். அல் ரஃத் 19.
உண்மையில் குருடன் யார்?
எவருக்கு தெளிவான விளக்கமில்லையோ அவரே உண்மையில் குருடராவார். அதாவது எவருடைய இதயம் குருடாக (தெளிவற்று) இருக்குமோ, மேலும் எவர் சத்தியத்தின் பாதையை அறிய வில்லையோ, பள்ளி வாசலுக்குச் செல்ல வில்லையோ, அல் குர்ஆனை மனனமிட வில்லையோ, (இஸ்லாமிய) பிரச்சாரத்துடனும் (அல்லாஹ்வின்)ஞாபகத்துடனும் இணைந்து வாழ முற்படவில்லையோ அவரே  உண்மையான குருடராவார்.
குருடர் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வினாத் தொடுக்க முன்வந்ததும் அவர்களை நபியவர்கள் அமருமாறு பணிந்தார்கள். அவ்வேலையில் தான் மக்கத்துத் தலைவர்களும் நபிகளாரிடம் வந்தார்கள், தமக்கருகில் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் இருக்க, (இஸ்லாத்தில் நுழைய வேண்டுமென) இவர்களை ஆவலுடன் எதிர் கொண்டார்கள் நபியவர்கள், அப்பொழுது தான் ஏக இறைவனிடமிருந்து நபியவர்களைக் கண்டிக்கும் வசனங்கள் இறங்கின.
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அபஸ 1.
ஆம்! எதற்காக அவர்கள் அலட்சியம் செய்தார்கள்,அவர் ஒரு ஏழை, யாசிப்பவர் என்பதற்காவே அலட்சியம் செய்தார்கள் அவருக்கும் இதயம் இருப்பதை நீர் அறிய வில்லையா? இமாம் ஸைய்யத் குதுப் அவர்கள் தனது “அல் குர்ஆனின் நிழல்களில்” எனும் விளக்க நூலில் இக்குருடர் பிற்காலத்தில் “வானத்திலிருந்து வரும் பிரகாசத்தை எதிர் கொள்ளும் கோபுரங்களில் ஒரு கோபுரமாக மாறலாம்” என்பதை நீர் அறியவில்லையா? ஆம் அவர் பிற்காலத்தில் நேரடியாகவே, உயிருடன் இருக்கும் போதே வானத்திலிருந்து வரும் பிரகாசத்தை எதிர் கொள்ளும் ஒரு கோபுரமாக மாறினார், இக்குருடர் காதிஸிய்யா யுத்தகலத்துக்கு சமூகமளித்தார், என்னை யுத்தம் புரிய அழைத்துச் செல்லுங்கள் என மன்றாடினார், “உமக்கு யுத்தம் புரிய கடமை இல்லையே” என அவரிடம் எடுத்து,றைக்கப்,பட்டது அதற்கவர்கள் “வணக்கத்துக் குரிய நாயன் அல்லாஹ்வைத்,தவிர வேறு யாரும் இல்லை” பின்வரும் அல்லாஹ்வின் வசனத்தை செவிசாய்த்த பிறகும் இங்கே (வெட்டியாக) இருப்பதா எனக் கேட்டார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்; (படைபலம்) குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள் செல்வங்களாலும், உயிர் களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங் கள்! நீங்கள் அறிந்தால் இது உங்களுக்குச் சிறந்தது. அத்தவ்பா 41.
பிறகு அவர் (யுத்த கலத்துக்கு) அழைத்துச் செல்லப்பட்டார், யுத்தக் கொடியைச் ஏந்திய குருடர் அவ்விடத்திலே அல்லாஹ்வின் பாதை யில் ஷஹீதாக்கப் பட்டார்கள். (நபிகளாரின் அவைக்கு வந்த) அத்தலைவர்களோ பத்ர் யுத்தத்தில் கொல்லப்பட்டு ஜஹன்னம் எனும் கொடிய நரக நெருப்பை சென்றடைந்தார்கள், நபி (ஸல்) அவர்கள் அத்தலைவர்களை ஏக இறைவனுக்குக் காணிக்கை யாகவும் நன்கொடை யாகவும் வழங்கினார்கள். ஆம் (ஈமானின்) பிரகாசத்தையும் நேர்வழியையும் பின்பற்றாத அவர்களின் தலைகளை வெட்டிக் கொன்று குவித்தார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! தாஹா 14.
இஃது அல்லாஹ் அவனைப் பற்றி வழங்கும் அறிமுகமாகும்.
நான் பல முறை கூறியிருக்கிறேன், மேலும் பல முறை கூறுவேன் அதாவது (அரபு) இலக்கணக் கலையில் “அல் கிதாப்” எனும் நூலாசிரியர் இமாம் சீபவைஹி அவர்கள் மரணித்த பிறகு அவர்களைக் கனவில் கண்ட ஒருவர் அவர்களிடம் அல்லாஹ் உங்களை என்ன செய்தான்? எனக் கேட்டார் அதற்கு இமாம் அவர்கள் (அல்லாஹ்) எனது குற்றங்களை மண்ணித்து விட்டான் எனக் கூறினார்கள். அதற்கு அவர் எதனால் அவ்வாறு செய்தான் எனக் கேட்டார் அதற்கு இமாமவர்கள் “அல்கிதாப்” எனும் எனது (அரபு) இலக்கணப் புத்தகத்தில் “அல்லாஹ்” எனும் பதம் அறியப்பட்ட அனைத்திலும் முதன்மை யானதும், அறிமுகப் படுத்த அவசியம் அற்றது மாகும். என எழுதியுள்ளேன் (அதனால் எனது குற்றங்களை மண்ணித்து விட்டான்) என்று கூறினார்கள்.
எனவே தான் (இமாம்) சீபவைஹி அவர்கள் தனிப்பட்ட ரீதியில் அல்லாஹ்வை அறிமுகப் படுத்த வெற்கித்தார்கள். ஆம் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளே அவனுடைய ஏகத்துவத்துக்குப் பறைசாட்டுகின்றன.
ஒரு கவிஞர் கூறுகின்றார்;
எல்லாப் பொருட்களிலும் அவனுடைய ஏகத்துவத்தைப் பறைசாட்டும் ஒரு அத்தாட்சி (மறைந்து) உள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்; (மறுமை நாள்) அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றிய வன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!. தாஹா 16.
(ஒருவனுடைய) மனோ இச்சைக்கு (அவனுடைய) மனைவி துணை நின்று அல்லாஹ்வின் பாதையில் இருந்து (அவனை) தடுக்கலாம், சில சமயம் ஒரு இசையோ, அல்லது நாடகமோ, புகைத்தலோ, விளையாட்டோ, சுகமான பாவச் செயலோ மனோ இச்சைக்குத் துணை போகலாம், இவை (அனைத்துமே) உன்னை அல்லாஹ்வின் பாதையில் இருந்து தடுப்பவைகள்தாம். 
அல்லாஹ் கூறுகின்றான்; தமது இறைவனிட மிருந்து (கிடைத்த) தெளிவான மார்க்கத்தில் இருப்பவர், தனது மனோஇச்சைகளைப் பின்பற்றி தனது தீயசெயல் அழகானதாகக் காட்டப் பட்டவனைப் போன்றவரா?. முஹம்மத்14.
எனவே மனோ இச்சைக்கு இரையாகிய பெருந் தொகையான மனிதர்கள் அல்லாஹ்வின் பாதையி லிருந்து தடுக்கப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ் அவனுடைய தூதரை மனோ இச்சைக்கு அடிபணியாதவர் என தூய்மைப்படுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
அவர் மனோஇச்சைப்படி பேசுவதில்லை.
அ(வர் பேசுவ)து அறிவிக்கப் படும் செய்தியைத் தவிர வேறில்லை. அன்னஜ்ம் 3,4.

(நபி (ஸல்)) அவர்கள் மனோ இச்சையை அறியவும் மாட்டார்கள், அதற்கும் அவர்களுக்கும்  இடையே எத்தகைய தொடர்பும் கிடையாது, மாறாக அவர்கள் அல் குர்ஆன் நபிவழி ஆகிய இரண்டுடன் மாத்திரமே கட்டுப் படுத்தப் பட்டுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்; தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்ட வனைப் பார்த்தீரா? அல் ஜாஸியா 23.
(ஆம் அத்தகையவன்) மனோ இச்சையை அவனுடைய கடவுளாக்கிக் கொள்கிறான், (பிறகு) மனோ இச்சைக்குக் கட்டுப்படுகிறான், அது அவனை நோக்கி “நீ தொழுகையை நிறைவேற்றத் தேவையில்லை (படுக்கை) விரிப்பின் பக்கம் வா!” என அழைக்கும் உடனே அவன் அதற்குக் கட்டுப் படுவான், மேலும் குர்ஆனை ஓதத் தேவை இல்லை இசையின் பக்கம் வா!” என அவனை அழைக்கும் அதற்கும் அவன் கட்டுப்படுவான், நல்லவர்களுடன் நட்பு வைக்காதே இதோ இத்தீயவர்களுடன் நட்பு வை!” எனக் கூறும் அதற்கும் அவன் கட்டுப்படுவான், தஸ்பீஹ் செய்யத் தேவை இல்லை இசை கேட்கலாம் வா! எனக் கூறும் அதற்கும் அவன் கட்டுப்படுவான்.
ஒரு கவிஞர் கூறுகின்றார்;
ஒருவனுடைய செயல்கள் அனைத்துமே தீமை களாகி சுய நிலை அறியாது போனால், எப்போது தான் அவனுடை புத்தி அவனுக்கு நேரான வழியைக்காட்டும்?
(மனோ இச்சைக்கு இறையானவனே!) உன்னுடைய நோய்க்கு கவணயீனமே காரணம் என்பதை அறியாவிடின் நீ எப்போது தான் நேர்வழி பெறப்போகிறாய்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மூன்று விடயங்கள் மனிதனை அழிக்கக் கூடியவை; கஞ்சத் தனத்துக்கு கீழ்ப்படிதல், மனோ இச்சைக்கு இரையாதல், தற்பெருமை கொள்ளல். நூல் தப்ரானி
மனோ இச்சைக்கு இறையாவதென்றால்; உன்னுடைய மதி உன்னை அழைத்துச் செல்லும் இடங்களிலெல்லாம் நீ தோழ்வியை தழுவுவதே யாகும், அதாவது மனோ இச்சைக்கு உன் மதி மயங்கி பிறகு அதன் வலையில் நீ சிக்கித் தவிப்பதாகும். அல்லாஹ்விடமே அதிலிருந்து பாதுகாவல் தேடுகிறோம்.
(இஸ்லாமிய) அழைப்புப் பணியாளர்கள் எதிர் நோக்கும் மிகப்பெரும் தடை, அழைப்பை ஏற்ப வர்கள் மனோ இச்சைக்கு இரையாவது தான். ஒரு மனிதனுக்கு நீர் பாவமண்ணிப்புக் கோருவீராக எனக் கோர,  அவர் அதை (மனப் பூர்வமாக) ஏற்றுக் கொள்வார் எனினும் அவருடைய மனோ இச்சை அவரை அதிலிருந்து தடுத்துக் கொண்டே இருக்கும். அவ்வாரே மக்களுக்கு பள்ளிவாசலுக்கு செல்லுமாறு அழைப்பு விடுக்க அவர்களுடை மனோ இச்சை அவர்களை தடுத்துக் கொண்டே இருக்கும், மனோ இச்சைக்கு இறையாவதின் அனைத்து விளைவுகளும் இவ்வாறு தான் காணப்படும்.   
மனோ இச்சைக்கு இறையான சிலரின் சம்பவங்கள்
அபூ ஜஹ்ல்;
நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசுவது, அபூ ஜஹ்லுக்குத் தெரியாத சமாச்சாரம் என நினைக் கின்றீர்களா? இல்லவே இல்லை அவன் அதை நன்றாகவே அறிந்து வைத்திருந்தான், அபூ ஜஹ்ல் கூறுகின்றான்; முஹம்மத் உண்மை பேசுபவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் எனினும் ஹாஷிம் குடும்பத்தினர் (சிகாயா) யாத்ரீகர் களுக்குக் குடிநீர் வழங்கவும் ஈச்ச மதுபானம் வழங்கவும் பொறுப்பு அவர்களிடமே உள்ளது என்றனர். அதற்கு நாங்கள் (ராயாஃ) ஈட்டியில் கொடியை ஏந்தி, படையுடன் செல்லும் பொறுப்பு எங்களிடமேயுள்ளது என்றோம். பின்னரும் அவர்கள் (ஹிஜாபா) கஃபா ஆலயத்தைப் பராமரிக்கவும் அதன் சாவிகளின் பாதுகாவல் பொறுப்பும் அவர்களிடமே உள்ளது என்றனர், இவ்வாறு (ஏட்டிக்கு போட்டியாக) எதிர்த்துக் கொண்டோம். இறுதியில் அவர்கள் நபித்துவம் எங்களிடமே உள்ளது என்றார்கள், பிறகு என்னால் எதுவும் கூற முயவில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்; (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்க ளையே மறுக்கின்றனர்.அல் அன்ஆம் 33.
எதேச்சாதிகரமாக செயலாற்றிய (அபூ ஜஹ்ல்) கூட (நபி) அவர்களை பகற் சூரியனைப் போல் (சந்தேகத்துக் கிடமின்றி) உண்மை பேசுபவர் என்பதை அறிந்து வைத்திருந்தான்.
ஆஸ் இப்னு வாஇல்
இவன் குரைஷ்களில் ஒரு தலைவனாக இருந்தான், ஆம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இறையச்சமின்றி (உண்மையான) தலைமைத் துவம் கிடையாது. உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரலி) கூறுகின்றார்கள்; இஸ்லாம் மார்க்கம் தோன்றியதுமே அது அனைத்து நயவஞ்சர் களையும் வாயடைத்துவிட்டது, (அசத்திய) பேச்சாளர்கள் அனைவரையும் பொய்யாக்கியது, (சத்திய) பேச்சாளர்கள் அனைவரையும் பேச வைத்தது. அனைத்து உயிரிணங்களுமே “வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என கூறின. இதுவே இறைமறுப்பாளர்களைத் தலை குனிய வைத்தது.
அபீசீனிய நாட்டிலிருந்து “பிலால்“ (ரலி) அதான் உறைத்துக் கொண்டு வந்தார், பாரசீகப் பூமியிலிருந்து ஸல்மான் (ரலி) “இறைவா உனக்கு அடிபனிந்து விட்டேன்“ என முழங்கிக் கொண்டு வந்தார், “உரோம“ பூமியிலிருந்து ஸுஹைப் (ரலி) இஹ்ராம் அணிந்து கொண்டு வந்தார் இதைக் கண்ணுற்ற அபூ ஜஹ்ல், உமையா, ஆஸ் பின் வாஇல் போன்றோர் (சற்றும்) திரும்பிப் பார்க்காமலேயே ஓடி விட்டார்கள், பின்னர் அவர்கள் நரகத்தில் முகம் குப்புற தள்ளப் பட்டார்கள்.
ஒரு முறை “ஆஸ் பின் வாஇல்” மிகவுமே மக்கிய நிலையில் இருந்த சில எலும்புகளை எடுத்து வந்தான், ஏனெனில் அறியாமை காலத்துப் பிரச்சினையே மறுமை வாழ்க்கையை மறுப்ப தாகத்தான் இருந்தது, அவர்களுடைய மூளை கழுதைகளின் மூளைக்கு ஒத்திருந்தமையால் அவ்விடயத்தை மாத்திரம் அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. பிறகு அவ்வெலும்புகளை இறைத்தூதர் (ஸல்) அவர் களுக்கு முன்னால் சிறு துண்டுகளாக ஆக்கி அவனுடைய வாயினால் ஊதிவிட்டு முஹம்மதே! உமதிறைவன் இவ்வெலும்புகளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பான் என நீர் நம்புகின்றீரா எனக் கேட்டான், அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆம் அவைகளை(யும் உன்னையும்) உயிர்ப் பிப்பான் பிறகு உன்னை நரகத்தில் தள்ளி வடுவான் எனக் கூறினார்கள். இங்கு கூறப்பட்ட (அல்லாஹ்வின்) பதில் இரண்டு விதமாக அமைந்துள்ளதையும், அது அவனுக்கும் அவனைப் போன்றவர்களுக்கும் பொதுவானது எனவும் அறிய முடிகிறது. அல்லாஹ் கூறுகின்றான்;
(நபியே) அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்றுகேட்கிறான்.
“முதல்தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்”என்றுகூறுவீராக! யாசீன் 78,79.

லைலா மஜ்னூன்
(இமாம்) “தஹபி” போன்ற வாழ்கைச் சரிதை ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்; “மஜ்னூன்” என்பருக்கு “லைலா” என்பவளின் காதல் தலைக் கேறியது, இவ்வாறு தான் சில மனிதர்கள் தமது ஆயுலில் ஓரிரண்டு வருடங்களை இசையுடனோ அல்லது ஒரு பெண்ணுடனோ, மதுபானக் கிண்ணத்துடனோ (வீணாகக்) கழித்து விடுவார்கள். இதனால் அவனுக்குப் பைத்தியம் பிடித்தது, அதை அவன் இரண்டு கவிதை அடிகளில் பின்வருமாறு கூறினான்;
இறைவா! நான் செய்த குற்றங்களுக்காக உன்னிடத்தில் பாவமண்ணிப்புக் கோறுகின்றேன். ஏனெனில் (என்னுடைய) பாவங்கள் அதிகரித்து விட்டன.
ஆயினும் “லைலா”வை காதலித்த, அல்லது அவளை தரிசிக்க முடியாது போன சமாச்சாரங் களுக்காக மட்டும் உன்னிடம் பாவ மண்ணிப்புக் கோர மறுக்கிறேன்.
இத்தகைய துரோகத்திலிருந்து அல்லாஹ்விடமே நாம் பாதுகாவால் தேடுகிறோம்,  ஏனெனில் அவனுடைய காதல் தலைக் கேறியிருந்த காரணத்தால் பாவமண்ணிப் கோர மறுத்தான். இறைவா! எங்களை சூழ்ச்சிக் குள்ளாக்காதே! நாங்கள் எங்களுடைய அனைத்துப் பாவங்களுக்கும் உன்னிடத்தில் பாவமண்ணிப்புக் கோருகின்றோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் “கியாமுல் லைல்” தொழுகையில் அழுத வண்ணமே பின் வருமாறு பிரார்த்திப்பார்கள்; “இறைவா! என் பாவம்- அது ஒவ்வொன்றையும், அதில் சிறியது பெரியது, அதில் முதலாவதானது கடைசியானது, அதில் பகிரங்கமானது மறைவானது, ஆகியவற்றை எனக்குப் பொருத் தருள்வாயாக”. என பிரார்த்தித்தார்கள். 
(பார்த்தீர்களா) இது எவ்வளவு அழகான பிரார்தனை, “லைலா”வை காதலித்த, அல்லது அவளை தரிசிக்க முடியாது போன சமாச்சாரங் களுக்காக மட்டும் உன்னிடம் பாவமண்ணிப்புக் கோர மறுக்கிறேன்” எனும் கூற்று  பிரார்த்தனையைப் போல் இருக்கிறதா? (இல்லவே இல்லை) எனவே தான் நாம் உனக்குக் கூறுவதெல்லாம், உனது காதல் தலைக்கேறி விட்டது, உன்னுடைய ஷைத்தான் உன்னை மிஞ்சி விட்டான், நீ அல்லாஹ்வின் பாதையி லிருந்து விலகி விட்டாய், உனக்கு நேர்வழி தெரிந்திருந்தால் (ஒருபோதும்) இப்படிப் புலம்பி யிருக்க மாட்டாய்.
குடி போதையுடன் தன்னுடைய மரண அவஸ்தை வேளையில் மனோ இச்சை தலைக்கேறிய வேறு ஒரு மனிதனின் கதையை கேளுங்கள். அப்போது அவனுடைய மரண அவஸ்தை நேரம் நெறுங்கியது, உண்மையில் அது வாக்குறுதி யளிக்கப்பட்ட தினம், ஒரு மனிதன் தனது மனைவி, பிள்ளைகள், சுற்றத்தார் அனைவரையும் மறந்து போகும் நேரம், அவ்வேளையில் என்ன கூறினான் என்பது உங்களுக்குத் தெரியுமா!? ஆம் அவனுடைய புத்திரர்களுக்கும், வாரிசுகளுக்கும் பின் வருமாறு கட்டளையிடுகின்றான்; நான் மரணித்தால் என்னை ஒரு திராட்சைப்பழக் கொடியின் கீழ் அடக்கம் செய்யுங்கள் உலகத்தில் திராட்சை மதுசாரத்துடன் வாழ்ந்த  என்னுடைய எலும்புகளுக்கு அதன் வேர்களாவது நீர் புகட்டட்டும். என்று புலம்பினான்.
ஆகவே தான் மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்; இறைவா! எங்களை சூழ்ச்சிக்குள்ளாக்காதே!, எங்களை (தூய கலிமா வில்) ஸ்திரப்படுத்துவாயாக, (மரணத் தருவாயில்) எங்களுக்கு நல்ல முடிவைத் தருவாயாக.
இவை போன்ற ஆதாரங்கள் நிறையவே உள்ளன, “அல் முக்னி” எனும் புத்தகத்தின் (சட்டக்கலை) நூலாசிரியரும் ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த இஸ்லாமியச் சட்ட வல்லுனரும் கூட இவ் விடயத்தில் எங்களுடன் இணைந்து கொள்கி றார்கள், அவர்கள் கூறுகிறார்கள்; உண்மையிலே மனோ இச்சை என்பது (மனிதனுக்கு) தீங்கிழைக்கக் கூடியதும், அவனை வழிகெடுக்கக் கூடியதும் சன்மார்க்கச் சட்டதிட்டங்களுக்கு முரண் பட்டதுமாகும். பிறகு (இத்தகைய பிழையை கவிதை வடிவில் உள்ள) ஒரு உதாரணத்தைக் கூறி விளக்குகின்றார்கள்,
சிலர் கூறுகின்றார்கள்;
என் இறைவா! என் இறைவா! அவளுடைய காதலை எனக்குக் கைகூடச் செய்வாயாக.
அத்துடன் இப்பிரார்த்தனைக்கு ஆமீன் கூறிய வருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
எவர்களுடைய மனோ இச்சை தங்களுடைய தலைக்கேறி, (சபிக்கப்பட்ட) ஷைத்தானே அவர்க ளுக்கு மேல் ஏறியவர்கள் வரிசையில் அடுத்து வருபவன் “அல் கரவி” என்றழைக்கப்படும் குற்றவாளிக் கவிஞன் ஆவான், (மக்கள்) அவனை டமஸ்கஸ் நகரில் தங்களுடைய தோள்களுக்கு மேல் உயர்த்தி வரவேற்றனர், அவனுடைய புகழை துதி பாடினர், விமானத்திலுருந்து அவனை கீழ் இறக்கியதுமே அவன் மக்கள் திரளை நோக்கி முகமன் கூறினான் அப்பொழுது அவன் ஏக இறைவனை மறந்த நிலையிலும் மனோ இச்சை தன்னுடைய தலைக்கேறிய நிலையிலும் பின்வருமாறு பாடினான்;
எங்களுக்கிடையில் நட்பை ஏற்படுத்தி, பிறகு “ஜஹன்னம்” எனும் நரகத்துக்கு அழைக்கும் இறைமறுப்புக்கு நல்வரவு உண்டாகட்டும்.
இதற்கு அல் ஷேக் அப்துல் ரஹ்மான் அத் தவ்ஸிரி அவர்கள் அவனை எழுநூறு கவிதைகளால் இழிவுபடுத்தி மறுத்துறைத்தார்கள் அதில் அவர்கள் அவனுடைய ஷைத்தானும், மனோ இச்சையும்  அவனுடைய தலைக் கேறியதாக தெளிவு படுத்தியுள்ளார்கள்.
இரண்டாவது தடை: அழைப்பை ஏற்பவர் அகம்பாவம் கொள்ளல்.
அழைப்புப் பணியாளர்களும், மார்க்கக் கல்வி கற்கும் மாணவர்களும், சீர்திருத்த வாதிகளும் எதிர்நோக்கும் பாரிய  தடை யாதெனில் அழைப்பை ஏற்பவர் அகம்பாவம் கொள்வதாகும்,  அதாவது (ஒருவர்) அவருடைய பதவியை கொண்டோ, பணத்தைக் கொண்டோ, பிள்ளைகளின் எண்ணிக்கையை கொண்டோ அகம்பாவம் கொள்வார், சில சமயம் அகம்பாவம் கொள்பவர் தெருவில் வசிப்பவராகவும் அதன் அருகில் தூங்குபவராகவும் இருப்பார், அகம்பாவம் கொள்வதற்கு அவரிடத்தில் எதுவுமே இருக்காது அப்பொழுதும் கூட அவர் அகம்பாவம் கொள்வார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ் மூன்று மனிதர்களை பார்க்கவும் மாட்டான் அவர்களுடைய செயல்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உள்ளது, அகம்பாவம் கொள்ளும் ஏழை, விபச்சாரத்தில் ஈடுபடும் முதியவன், பொய் பேசும் அரசன். நூல் புகாரி.
(இந்நபி மொழிக்கு விளக்கமளித்த) இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இம்மூவருக்கும் அக்குற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் மிகக் குறைவாக இருந்த நிலையிலும் அவர்கள் அதனைச் (வேண்டு மென்றே) செய்தார்கள்.
ஒரு செல்வந்தன் தன்னிடம் பல மில்லியன் பணமும், வங்கிகளும், மாளிகைகளும், தோட்டங் களும் இருப்பதற்காக அகம்பாவம் கொண்டு இசை கேட்க முற்படலாம், ஆயினும் (ஒரு வேளை உணவுக்கு) ரொட்டித் துண்டைக் கூட பெற்றுக் கொள்ளாது தெருவோரத்தில் இளைப்பாறும் இந்த ஏழை, அகம்பாவம் கொள்வதில் என்ன தான் நியாயம் இருக்கிறது?
யூதர்களை இஸ்லாம் மார்க்கத்தில் நுழைய விடாது தடுத்த ஓரே விஷயமும் அகம்பாவம் தான். காரணம் அவர்களில் இருந்து மட்டுமே நபி மார்கள் அனுப்பப்டுவார்கள் என அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள், பிறகு (வெகு விரைவில்) அரேபியர்களிருந்து ஒருவர் நபியாக அனுப்பப்பட இருப்பதாகவும், அவருடைய பெயர் அஹ்மத் (அலை) என்றும் தவ்ராத் வேதம் வாயிலாக அறிந்து கொண்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்; அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்த போது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது அவர்களிடம் வந்த போது,  அதை (ஏற்க) மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது. அல் பகரா 89.
சரியான அறிவிப்பாளர் வாயிலாக திர்மிதி (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஒரு செய்தியில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் கூறினார்; நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தார்கள், அவர்களைத் தரிசிக்கக் கூட்டம் நிறைந்திருந்தது. நான் முண்டியடித்துக் கொண்டு எப்படியோ முன்னேறி திருநபியை நெருங்கி விட்டேன்.
நபியவர்கள் மக்களுக்கு உபதேசம் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள் எளிமையான அறிவுரை, எளிதில் பின்பற்றத் தக்க அறிவுரை. அதில் அவர்கள்: "மக்களே! ஒருவருக்கொருவர் 'ஸலாம்' (சாந்தி) பகிர்ந்து கொள்ளுங்கள். பசித்திருப்ப வர்களுக்கு உணவளியுங்கள். மற்றவர்கள் உறங்கும் இரவு நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். நீங்கள்  நிச்சயமாகச் சுவர்க்கம் புகுவீர்கள்"
(அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) அவர்கள் கூறுகின்றார்கள் பிறகு நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன், இறைத்தூதர் அவர்களே ஒரு நபியைத் தவிர வேறு எவருமே அறிந்து வைத்திருக்க முடியாத மூன்று விடயங்களை நான் உங்களிடம் கேட்கிறேன் என்றேன் அதற்க வர்கள் கேட்பீராக, என்றார்கள் உடனே நான்
1.    இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
2.    சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
3.    குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?"
என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,
1.    "இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்.
2.    சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.
3.    குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஒரு ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது" என்று பதிலளித்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), "தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்கள். பிறகு, "இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்" என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்; அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்தும் வேதம் அல்லாஹ் விடமிருந்து அவர்களுக்கு வந்த போது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது அவர்களிடம் வந்த போது,  அதை (ஏற்க) மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது.அல் பகரா 89.
உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர் (ஸல்) (யூதர்களிடம்), "உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகன் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்" என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத் தூதர் (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!" என்று கூறினார்கள்.
உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்" என்று கூறினார்கள். உடனே யூதர்கள், "இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்" என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி,திர்மிதி)
ஸஹீஹ் முஸ்லிமில் இருக்கும் வேறு ஒரு செய்தியில் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக்கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வலக்கையால்உண்பீராக!'' என்று சொன்னார்கள். அவர், "என்னால் முடியாது'' என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "உம்மால் முடியாமலே போகட்டும்!'' என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது. காரணம் நபியவர்கள் அவனுக்கு எதிராக துஆச் செய்தார்கள்.
தாயிப் நகர வாசிகளுக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள் அப்போது மூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள்; அவர்களில் ஒருவன்; “தூதராக அனுப்ப உம்மைத் தவிர வேறு ஒருவரும் இறைவனுக்கு கிடைக்க வில்லையா?” என்றான். அவர்களில் அடுத்தவன் “அல்லாஹ் உம்மை தூதராக அனுப்பியிருப்பின் நான் கஃபாவின் போர்வையைத் திருடுவேன் என்றான், மூன்றாமவன் “நீர் உண்மையில் ஒரு தூதராக இருப்பின் (நான்) உறையாடுவதற்கு தகுதியற்றவன் நீர் ஒரு பொய்யனாக இருப்பின் நான் பெய்யர்களுடன் பேசுவதில்லை” என்றான். அம்மூவரும் நபி (ஸல்) அவர்களுடன் உறையாடுவதற்கு மறுத்த ஒரே காரணம் அகம்பாவமேயாகும். அழைப்பை ஏற்காது அகம்பாவம் கொள்பவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்;
நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்று வோம்? அப்படிச் செய்தால் வழிகேட்டிலும், சிரமத் திலும் நாம் ஆகிவிடுவோம்.அல்கமர் 24. 

சிலர் கொள்ளும் அகம்பாவம் அவர்களை சுவனத்தில் நுளைய விடவுமில்லை,அவர்களுக்கு ஈருலகத்தின் மகிழ்ச்சியை  அடைய விடவு மில்லை.
ஒரு முறை இப்னு ஹுபைரா எனும் அமைச்சருக்கு அருகால் ஹஸனுல் பஸரி அவர்கள் நடந்து சென்றார்கள், பட்டாடை அணிந்து வாகனத் தொடரணியுடன் இருந்த  அவ்வமைச்சருக்காக மக்கள் எல்லோரும் எழுந்து நின்றார்கள். தாபியீன்களில் அறிஞராகிய ஹஸனுல் பஸரி அவர்கள் மட்டும் எழுந்திருக்க வில்லை. இதைக் கண்ட அமைச்சர் (ஹஸனுல் பஸரி) அவர்களை நோக்கி “என்னை உமக்குத் தெறியாதா?” எனக் கேட்டார் அதற்கவர்கள் ஆம் தெரியுமே என்றார்கள், அவ்வாரயின் நீர் ஏன் எழுந்திருக்கவில்லை எனக்கேட்டார், உடனே அவர்கள் உம்மைத் தெறிந்து வைத்திருந்த காரணத்தால் தான் நான் எழுந்திருக்க வில்லை என்றார், அதற்கு அமைச்சர் நான் யார்? எனக் கேட்டார், அதற்கவர்கள் “உமது ஆரம்பம் ஒரு இந்திரியத் துளி, (வயிற்றில்) நீர் அழுக்கை சுமந்து திரிகின்றீர், ஈற்றில் நீர் அழுக்கடைந்த பிணமாவீர்” என்றார்கள் உடனே அவ்வமைச்சர் வெட்கித்துத் தலை குணிந்து அவ்விடத்திலிருந்து விலகிச் சென்று விட்டார். 
இவ்வுலக வாழ்க்கையில் உண்மையான கண்ணியம் இறையச்சம் உடையவர்களுக்கும், நேர்மையாக நடப்பவர்களுக்குமே உரியது, அல்லாஹ்வைத் தவிர பெரியன் எவனும் இல்லை
அல்லாஹ் கூறுகின்றான்; பெருமை என்னுடைய மேலாடையாகவும், மகத்துவம் எனது அங்கியாக வும் உள்ளன, இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுவானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன். நூல் முஸ்லிம்.
அகம்பாவம் கொள்பவர்களைப் பற்றி ஒரு கவிஞர் கூறுகின்றார்;
அகம்பாவத்தின் கருமையால் நரகத்துக்கு பலவந்தமாக இழுத்து வரப் பட்டவர்களைப் போல் அவர்களுடைய முகங்கள் கடுகடுத்துக் கெண்டிருக்கும்.
அல்லாஹ் அவர்களை அலட்சியப்படுத்தியதால் அவர்களின் தோற்றம் அவலட்சனமாகியது, துர்ப்பாக்கியவான்களாகிய தீயவர்களுக்கு ஏற்பட்ட கேடே!
அவர்கள், (இருளில்) நடந்து செல்லும் உன்னை தற்செயலாக சந்தித்து பிரகாசத்தை வழங்கும் கூட்டத்தினரைப் போன்றவர்கள் அல்லர்.
இருளில் செல்பவர்கள் நட்சத்திரங்களின் உதவி யுடன் நடந்து செல்வதைப் போல், அவர்களில் எவரையாவது சந்திக்க நேர்ந்தால் அவனை அவர்களுடைய தலைவன் என்றே நீ கூறுவாய்.
அல்லாஹ் கூறுகின்றான்;“ஷுஐபே! நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரிய வில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை நாங்கள் கருதுகிறோம்”என்றனர். ஹூத் 91.
நபி ஷுஅய்ப் (அலை) அவர்களின் மக்கள் அவர்களை பின்பற்ற மறுத்த அடிப்படை விவகாரம் அவர்கள் பலவீனராக இருந்ததேயாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;“ஷுஐபே! நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரியவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை நாங்கள் கருதுகிறோம். உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம். நீர் எங்களை மிகைப்பவராக இல்லை”என்றனர்.ஹூத் 91.
இத்திருவசனத்துக்கு விளக்கம் அளித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்; நபி ஷுஅய்ப் (அலை) அவர்கள் குருடராக இருந்தார்கள், ஆகவே மக்கள் அவர்களைப் பார்த்து “நீர் ஒரு ஏழையாகவும் குருடராகவும் இருக்கின்றீர்” எனக் கூறி அவர்களைப் பின்பற்ற மறுத்தார்கள். மேலும் அவர்கள் “உம்மைத் தவிர வேறு யாரையாவது அல்லாஹ் ஏன் நபியாக அனுப்பவில்லை” என்றும் அவர்களிடம் கேட்டார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்; நன்றி செலுத்துவோரை அல்லாஹ் நன்கறிந்தவன் அல்லவா?” அல் அன்ஆம் 53.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;“தனது தூதை எங்கே வைப்பது?(யாரிடம் கொடுப்பது)’என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். அல் அன்ஆம் 124.
ஆம், எவர் நல்ல விவகாரங்களுக்கு மிகப் பொறுத்தமானவர் என்பதை அல்லாஹ் நன்கறிந்த வனாவே இருக்கின்றான். ஆகவே தான் (பிரச்சாரக் களத்தில்) சில குடும்பத்தினர் வேறு சில குடும்பத் தினர்களுக்கு செவிசாய்ப்பதில்லை “அவன் சமூகத்தில் என்னை விடத் தாழ்ந்தவன், அவன் ஒரு ஏழை, அவனுக்கு எத்தகைய அந்தஸ்தும் கிடையாது எனக் கூறி ஒருவருடைய (இஸ்லாமிய) அழைப்பை தட்டிக் கழிப்பதை அவதானிக்கிறோம். ஏ மனிதா!!!  (இஸ்லாமிய அழைப்புப்) பணி சகலருக்கும் பொதுவானது என்பதை நீ அறியவில்லையா? உண்மையில் அவர்களுடைய அகம்பாவமே அல்லாஹ்வின் பாதையிலிருந்து அவர்களை தடுத்து நிறுத்தியது.   
“ஆமிர் இப்னு துபைல்” இவன் ஒரு அரேபியத் தலைவனாவான், இவனுக்கு இவனுடைய கோத்தி ரத்திலே ஆயிரம் போராளிகள் இருந்தார்கள், இவன் ஒரு அழைப்பு விடுத்தால் போதும் ஆயிரம் வாலேந்திய போராளிகள் அவ்விடத்திலே ஒன்று கூடி விடுவார்கள், ஒரு முறை நபி (ஸல்) அவர்களை பின்வருமாறு மிரட்டினான்; “ஒன்றில் நீர் என்னிடம் வந்து பூமியின் அரைப்பகுதியை ஒப்படைக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்த மதீனா நகரில் ஆயிம் இளம் வாழிபர்களையும், குதிரைகளையும் உமக்கெதிராக திரட்டி விடுவேன்”. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எனது இறைவன் நாடியதைக் கொண்டு உம்மைப் போதுமாக்கி வைப்பான்” எனக் கூறினார்கள். 
இதோ அந்த ஆமிர் (இஸ்லாமிய) அழைப்பையும் மறுத்து, அல்லாஹ்வின்  பாதையையும் உதாசீனம் செய்தான், இதற்கும் மேலாக நபி (ஸல்) அவர்களைப் படுகொலை செய்ய உறுதி பூண்டான், எனினும் நபியவர்களுக்கு அல்லாஹ் வின்  விஷேட பாதுகாப்பு இருந்தமையால் அவர்களின் (மேலதிக) பாதுகாப்பிற்கு பன்மடங்கு கேடயங்களோ, பாதுகாப்பான கோட்டை கொத்தலங்களோ தேவைப்படவில்லை. 
தன் இலட்சியத்தில் வெறியாக இருந்த ஆமிர், அர்பத் இப்னு கைஸ் எனும்  ஒரு நாட்டுப்புற அரபியிடம் அர்பதே! “நீ அழியாச் சிறப்பை அடைய விரும்பவில்லையா? எனக் கேட்டான். அதற்கு அர்பத் “அதை எவ்வாறு அடைவது”?  எனக் கேட்டான். இதைக்கேட்ட ஆமிர் முஹம்மதைக் கொன்று விட்டால் நாமும், அனைத்து அரேபியர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் அல்லவா? என கூறினான். அதற்கு அர்பத் உடன்படவே அவனை நோக்கி ஆமிர் பின்வறுமாறு கூறினான். “நான் கதைத்துக் கொண்டே முஹம்மதை மதீனாவுக்கு வெளியே அழைத்து வருகிறேன், இத்தருனத்தை பயன்படுத்தி முஹம்மதை நீ கொலை செய்து விடு” எனப்பணிந்தான்.
அல்லாஹ்வே அவனது தூதரைப் பாதுகாப்பான் என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருக்க வில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்; தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லை யானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்ன வராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர் களிடமிருந்து காப்பாற்றுவான். அல் மாஇதா 67.
இதன் பிறகு மதீனா நகரைச் சென்றடைந்த ஆமிர் நபி (ஸல்) அவர்களிடம் “முஹம்மதே நானும் எனது நண்பரும் உம்முடன் பேச விரும்புகிறோம்” எனக் கூறினான். அதை ஏற்ற நபி (ஸல்) அவர்கள் தாம் அணிந்திருந்த  ஆடையோடு நிராயுத பாணியாகவே பாலைவனத்தில் ஓர் இடத்துக்கு வெளியேறிச் சென்றார்கள், ஆமிர் பேச்சுக் கொடுத்தான். அர்பத், நபி (ஸல்) அவர்களைக் கொள்வதற்குப் பின்புறமாகச் சென்றான் ஒரு சாண் அளவு அவன் வாளை உருவுவதற்குள் அல்லாஹ் அவனது கையை தடுத்து விட்டான். அவனால் அடுத்து வாளை உருவ முடியவில்லை அல்லாஹ் தனது நபியவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். பிற்பகல் வேலையில் ஆமிர் அர்பிதிடம் என்னோடு நீ வர வேண்டாம், பேசவும் வேண்டாம், நீயோ அரேபியர்களுக்கே ஒரு கோழை மனிதன், எனக் கூறி ஏன் முஹம்மதைக் கொலை செய்யவில்லை?  எனக் கேட்டான். அதற்கு அர்பித் “நான் அவர்களைக் கொல்ல வாளை உருவியதும் தோன்றிய பிரகாசத்தில் உனது உருவத்தையே கண்டேன், உன்னை எவ்வாறு கொலை செய்வது? எனக் கேட்டான். அவர்கள் இருவரும் திரும்பிச் சென்றதும் இவ்விருவரின் சதித்திட்டத்தையும் தெரிந்த நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் எதிராக தூஆச் செய்தார்கள்.
பிறகு ஆமிர் சலூலிய்யாப் பெண்ணுடன் இரவைக் கழித்தான், அவனது கழுத்தில் ஒரு கொப்புளத்தை அல்லாஹ் ஏற்படுத்தினான், அதுவே அவனது மரணத்துக்குக் காரணமானது. “ஒட்டகக் கொப்பளமா? சலூலிய்யா வீட்டில் மரணமா? என ஓலமிட்டவனாக, வேண்டாம் வேண்டாம், என்னை இங்கிருந்து கிளப்புங்கள், எனது குதிரையைக் கொண்டு வாருங்கள்” என்றான் மதீனாவிலிருந்து தனது ஊருக்கு குதிரையில் சென்று கொண்டிருக்கும் போதே செத்து வீழ்ந்தான்.
அவனுடைய நண்பன் அர்பத் செல்லும் வழியில் ஓர் இடியை அல்லாஹ் ஏவினான் அது அர்பதையும் அவனது ஒட்டகத்தையும் எரித்து நாசமாக்கியது.
ஒரு கவிஞர் கூறுகின்றார்;
உம்மு அம்ரை அவனுடைய ஒட்டகம் ஏற்றிச் சென்றது.
அவனோ அல்லது அவனுடைய குதிரையோ மீண்டும் வரவே இல்லை.
இவ்வாறுதான் அகம்பாவம் கொண்டு (இஸ்லாமிய) அழைப்பை உதாசீனம் செய்து விட்டுச் சென்றவர்களுடைய கதைகள், ஆனால் அல்லாஹ்வின் புனித மாரக்கம் மட்டும் (இறுதிவரை) பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சம்பவத்தை மாத்திரம் கூறி இப்பகுதியை முடித்துக் கொள்கிறேன்.
பத்ருப் போர் முடிந்து விட்ட சில நாட்கள் கழித்து கஃபாவில் உட்கார்ந்து கொண்டிருந்த ஸப்வான் இப்னு உமையா மற்றும் உமைர் இப்னு வஹ்ப் ஆகிய இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த பொழுது இந்தப் போரில் குறைஷிகள் தோற்று விட்டது குறித்து தங்களுக்குள் இருவரும் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இறைவன் மீது சத்தியமாக நம்மவர்கள் அனைவரையும் நாம் இழந்து விட்டதன் பின் இந்த வாழ்க்கையில் என்ன தான் இருக்கின்றது..! என்று ஸப்வான் சலிப்புடன் கூறிக் கொண்டார்.
உமைர் கூறினார் “நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு மட்டும் கடன் பளு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் எனது குடும்பத்திற்குரிய தேவையை நிறைவேற்றும் நிலையும் இல்லாதி ருந்தால் நான் மதீனாவிற்குச் சென்று அந்த முஹம்மதின் கழுத்தைக் கொய்து வந்து விடுவேன் என்று உறுமினார்.
ஸப்வான் கூறினார் உமக்கு இவ்வளவு உயர்ந்த நோக்கமொன்று இருக்குமென்றால் அது பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். உமது கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பை நான் ஏற்கின்றேன். உமது குடும்பத்திற்குத் தேவையான வாழ்க்கை வசதி களையும் நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் நான் அவர்களை என் குடும்பத்தவர்கள் போலக் காப்பாற்றுவேன் என்று கூறினார்.
இருவருக்குமிடையே இந்த ரகசிய ஒப்பந்தம் நிறைவேறிய பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் உமைர் மதீனாவை நோக்கிப் பயணப்படலானார். நன்கு தீட்டப்பட்ட, விஷம் தோய்க்கப்பட்ட வாளொன்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்.
ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் பள்ளியில் அமர்ந்து கொண்டிருந் தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் தனது தோழர்களுடன் அந்த பத்ருப் போர் குறித்தும் அதில் இறைவன் புரிந்த பேரருள் குறித்தும் பேசிக் கொண்டிருந்த பொழுது மதீனாவின் பள்ளி வாசலின் கதவருகே உமைரின் நிழல் அசைவை உமர் (ரலி) அவர்கள் கண்டு விட்டார்கள். உமைர் தனது இடையில் வாளொன்றைச் சொறுகி வைத்திருப்ப தையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.
உமைரைப் பார்த்த மாத்திரத்திலேயே 'அல்லாஹ்வின் எதிரியாகிய இந்த உமைர் பின் வஹ்ப் என்ற நாய் இங்கெதற்காக வந்திருக் கின்றது இறைவன் மீது சத்தியமாக! இவன் ஏதாவது கெடுதல் புரியும் எண்ணத்துடன் தான் வந்திருக்க வேண்டும்" என்று எண்ணிக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களே! அல்லாஹ்வின் எதிரியாகிய உமைர் பின் வஹ்ப் வாளுடன் இங்கு வந்திருக்கின்றான் என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, உமரே! அவரை உள்ளே வர விடும் என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் நேரே உமைரிடம் சென்று அவரது கழுத்தில் இறுக்கமான துணி ஒன்றைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொண்டவர்களாக தனது தோழர்களை அழைத்து “தோழர்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண் போல அமர்ந்து கொள்ளுங்கள் இவனை நாம் நம்ப முடியாது இவன் மிகப் பெரும் விஷமியாவான்” என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் உமைரை அழைத்து வரும் நிலையைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
உமரே! முதலில் அவரை விடுங்கள் அவர் முன்னே வரட்டும். என்று கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்த உமைர் அந்தக் கால வழக்கப்படி காலை வணக்கம் கூறினார்.
அல்லாஹ் இதனை விடச் சிறந்த வாழ்த்தும் முறையை எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக் கின்றான் உமைரே! அது தான் ''ஸலாம்" சொர்க்க வாசிகளினுடைய வாழ்த்துப் பொக்கிஷம் என்றார்கள்.
உமைர் கூறினார்..!
நான் எனது மகனை விடுதலை செய்து அழைத்துப் போகவே இங்கு வந்திருக்கின்றேன்!
அப்படியானால் உமது கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த வாள் எதற்கு? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமைரைப் பார்த்துக் கேட்டார்கள்.
இறைவன் இந்த வாளினை நாசமாக்கட்டும்..! இந்த வாளினைக் கொண்டு எங்களுக்கு என்ன தான் நல்லது நடந்திருக்கின்றது? என்று உமைர் எரிச்சலுடன் கூறினார்.
நீர் இங்கு வந்ததன் காரணமென்ன? மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமைரிடம் கேள்வி ஒன்றை தொடுத்தார்கள்.
எனது மகனுக்குரிய பணயத் தொகையைச் செலுத்தி விட்டு அவனை மீட்டுச் செல்வதற்கா கவே வந்தேன் என்று கூறினார்.
உமைரே..!
நீரும் அபூசுஃயானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அர்த்தமென்ன? அவர் உனது கடன்களையும் உமது குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லையா? உமது வாளைத் தீட்டி அதன் மீது விஷத்தையும் தோய்த்து எடுத்து வரவில்லையா?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமைரைப் பார்த்து கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டிருந் தார்கள் தான் நன்றாகத் தீட்டி விஷத்தைத் தோய்த்து எடுத்து வந்த வாளின் கூர்மையை விட, அதன் விஷத்தை விட, அதிகமான கூர்மையையும் கடுமையையும் கொண்டிருந்தது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகள் அதனைத் தாங்கவியலாத உமைர் போதும்.. போதும்.. நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் இருவருக்குள் மட்டும் பேசிக் கொண்ட ரகசியங்கள் இதனை இறைவன் மட்டுமே அறிந்தவன். நிச்சயமாக..! நீங்கள் இறைவனது தூதர் தான் என்று முழங்கிய உமைர் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்பதாகவே திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.
(வரலாற்றில்) இவ்வாறு நபியவர்களின் அற்புதங்களைக் கண்டு இறைவிசுவாசம் கொண்ட வர்களும் உள்ளனர், அவைகளை ஏற்காது உதாசீனம் செய்தவர்களும் உள்ளனர். அதிலும் (நபியவர்களின் பிரச்சாரத்தை) ஏற்காது அகம்பாவம் கொள்வது மாபெறும் குற்றமாகும். ஆகவே தான் அகப்பாவம் கொண்டவர்களைவிட பணிவுள்ளவர்களே பெரும்பாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.



மூன்றாவது தடை: எண்ணிக்கையில் பொய்யர்களின் வளர்ச்சியும், சத்திய சீலர்களின் வீழ்ச்சியும்.
ஒரு கவிஞர் கூறுகின்றார்;
என்னை குறைந்த எண்ணிக்கையுடையவன் எனவும், என் அயலவரை கூடிய எண்ணிக்கை யுடையவர் எனவும் திட்டுகின்றான்.
ஆனால் கூடிய எண்ணிக்கை உடைவர்களின் அயலவர் குறைந்த தொகையினாயிற்றே!

அல்லாஹ் கூறுகின்றான்;
 وَلَوْأَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيث  ) [المائدة:100].
தீயவர்களின் அதிகரிப்பு உம்மை வியப்பில் ஆழ்த்திய போதிலும், நல்லவர்கள் குறைந்த தொகையினராகவே இருப்பார்கள்.அல் மாஇதா 100.
இப்னு தைமியா எனும் அறிஞர் கூறுகின்றார்; உலகில் வாழும் சணத்தொகையுடன் ஒப்பிடுகை யில் முஸ்லிம்களின் விகிதாசாரமும், முஸ்லிம் களுக்கிடையே அஹ்லுஸ் ஸுன்னாக்களின் விகிதாசாரமும்மிகக் குறைவானதே. ஆகவே தான் அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்;
 وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ   [الأنعام:116].
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள்.அல் அன்ஆம் 116.
உமர் (ரலி) அவர்கள் ஒரு முறை கடைத்தெருவுக்குச் சென்றார்கள் அப்போது ஒரு மனிதர் “இறைவா என்னை குறைந்த தொகையி னரைக் கொண்ட உன் அடியார்களுடன் சேர்த்து விடுவாயாக” என பிரார்த்திப்பதை செவிமடுத்தார் கள், உடனே உமர் (ரலி) அவர்கள் அவனுடைய இரு புஞங்களையும் பிடித்தவர்களாக, இது என்ன பிரார்த்தனை? எனக் கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர்;
அல்லாஹ் தனது திருமறையில்;
 وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ  [سبأ:13]
“மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே”ஸபஃ13.
எனக் கூறவில்லையா? என்னையும் அவர்களில் ஒருவனாக சேர்த்துவிடும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன் என்றார். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “உமரே! எல்லா மனிதர்களும் உம்மை விட மார்க்க அறிவுள்ளவர்கள்” என தமக்குள்ளே கூறிக் கொண்டார்கள். ஆகவே நாம் கூறுகின்றோம் “எப்போதும் குறைந்த எண்ணிக்கையிரடமே நன்மைகள் தங்கியுள்ளன. அழைப்புப் பணியாளர்களும் மார்க்கக் கல்வியைப் பயிலும் மாணவர்களும் அறிய வேண்டிய மிகப்பெரிய இரண்டு விடயங்கள் இங்கே உள்ளன.
முதலாவது விடயம்;
சத்திய சீலர்களின் எண்ணிக்கை  ஒரு போதும் பொய்யர்களை விட அதிகரிக்கவே முடியாது, நாடக அரங்குகளிலும், இசை விழாக்களிலும் பல்லாயிரக் கணக்கானோர் குழுமியிருப்பார்கள், அரிதான சந்தர்ப்பங்களில் ஒரு மார்க்க விரிவுரைக்கு ஐந்து அல்லது ஆறு ஆயிரம் பேர் கூடுவார்கள், இதற்கு மாற்றமாக ஒரு  இசை விழாவில் அறுபதாயிரம் பேர் கூடுவார்கள், இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ் ஏற்படுத்தய வழிமுறையாக இது இருக்கலாம்.
இரண்டாவது விடயம்;
அழைப்புப் பணியாளர்கள் பொய்யர்களின்  அதிகரிப்பைக் கண்டு (சலிப்புற்று) “மக்கள் கெட்டு விட்ட காரணத்தால் அவர்களை அழைப்பதில் எந்தப் பயனுமில்லை” என (சாட்டுப் போக்குகள்) கூறி ஒரு போதும் தங்களுடைய பணியிலிருந்து பின்வாங்கக் கூடாது, ஒருவர் கூட விடைய ளிக்காது போனாலும் அவர்களை (சத்தியத்தின் பால்) அழைப்பது கடமையாகும், அதற்கான கூலியை அல்லாஹ் தருவான். அல்லாஹ் கூறுகின்றான்;
 إِنْ عَلَيْكَ إِلَّا الْبَلاغُ  [الشورى:48]
எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை. அஷ்ஷூரா 48.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
 ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ   [النحل:125]
உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!அன்னஹ்ல் 125.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
 وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ   [الأنعام:107].
அவர்களுக்கு நீர் பொறுப்பாளரும் அல்லர்அல் அன்ஆம் 107.
“பொய்யர்கள் கணிசமானவர்கள்” எனும் புத்தகத்தில் வந்துள்ள ஒரு செய்தியில் உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் “அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழையுங்கள் அதற்கான கூலி அவனிடமே உள்ளது” தற்காலத்து இறைமறுப்பா ளர்களிடம் (இதற்காக) பல்வேறு உபகரணங்கள் உள்ளன. ஆயுதங்கள், ஏமாற்றுச் சாதணங்கள், நாசகார ஆயுதங்கள் என பலதரப்பட்ட வழிமுறை களைக் அவர்கள் கையாள்கின்றனர், அவ்வாராயின் உண்மையார்களின் உபகரணங்கள் யாவை? (வெறும்) மிம்பர் மேடைகளையும், சொற்பொழிவுகளையும், கல்வியூட்டும் பாடங்களையும், விரிவுரைகளையும் தவிர வேறில்லை, ஆனால் இவைகளுக்கீடாக உலக அரங்கில் (இறை மறுப்பாளர்களிடம்) இருக்கும் உபகரணங்ளோ மிக மிக பிரமாண்டமானவை. ஆகவே தான் உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்; என் இறைவா! இறைமறுப்பாள னின் வளிமைக்கு முன்னால் இறைவிசுவாசி சக்தியற்றிருப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (ஆம் இவ்வுலகில்) இறைமறுப்பாளன் வளிமையும் விவேகமும் உள்ளவனாகவும், (எதிரில்) இறைவிசுவாசி சக்தி யற்று சோம்பேறியாக இருப்பதையும் நாம் காண்கிறோம். புதுக்கவிதை புணையும் கவிஞர்கள் எவ்வாரெல்லாம் பல கலைகளைப் படைக்கி றார்கள் என்று அவதானித்தீர்களா?அவர்களின் கவர்ச்சியான முகவரிகளைப் பார்த்தீர்களா? மக்களை வழிகெடுப்பதற்காகவும் அவர்களை மயக்குவதற்காகவும் கவிஞர்கள் உபயோகிக்கும் யுக்திகளையும், அழகிய வசண நடைகளையும் வார்த்தை ஜாலங்களையும் பார்தீர்களா? நிலைமை இவ்வாரிருக்க சில மார்கப் பிரச்சாரப் பணியாளர் களோ தங்களுடைய சொற்பொழிவை யும் கவிதைகளையும் சற்றும் தெளிவின்றி மக்களுக்கு சமர்ப்பிப்பதையும் வன்மையான தொணியில் உறையாற்றுவதையும் காண்கிறோம், ஆனால் இறக்கமுள்ள முன்முறுவலையும், வியக்கத்தக்க பேச்சையும், செரிவான இலக்கியத்தையும், (மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவசீகரப் பேச்சையுமேமக்கள் விரும்புகிறார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
 قُلْ لا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ   [المائدة:100]
(நபியே) “கெட்டதும், நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே.அல் மாஇதா 100.
உண்மையில் பொய்யர்களின் அதிகரிப்பே அழைப்புப் பணியாளர்கள் எதிர் நோக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும். ஆகவே  தான் சில மார்க்க அறிஞர்கள் கூறினார்கள்; “உலகத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைந்தவர் களாகும், அதிலும் முஸ்லிம்களிடையே அஹ்லுஸ் ஸுன்னாக்கள் குறைந்தவர்களாகும்”. நீயும் உனது தோழர்களும் எண்ணிக்கையில் குறைந்திருப்பதை நினைத்து கவலை ப்பட வேண்டியதில்லை, காரணம் எப்போதும் நல்ல வர்கள் குறைந்தவர்களாகவே இருப்பார்கள்.
ஒரு கவிஞர் கூறுகின்றார்;
"நீர் மனிதர்களில் ஒருவர் தாம்” என மக்கள் நினைத்தாலும் குற்றமில்லை.
“மிஸ்க்” எனும் கஸ்தூரி கூட மானுடைய உதிரத்தில் ஒரு பகுதி தான்.

சில தாபிஈன்கள் கூறினார்கள்; இறைத் தூதர்க ளுக்குத் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்களுடயதும் அவர்களைப் பின்பற்றிய தூய தோழர்கள் தாபிஈன்களுடையதும் வழியைப் பின்பற்றுங்கள், (வழிதவரி) நாசமடைந்தவர்களின் அதிகரிப்பைக் கண்டு ஏமாற்றமடைய வேண்டாம். ஏனெனில் நல்வழியைப் பின்பற்றுபவர் ஒரு தனி நபராக் கூட இருக்கலாம், சிறிய கூட்டமாகவும்  இருக்கலாம்.

சில மனிதர்கள் “அதோ அவர்களைப் பாருங்கள்! அவர்களில் எவருமே நேர்வழியைப் பின்பற்ற வில்லையே! எல்லோரும் இப்படித்தான் செய்கிறார்களே! நானும் அவர்களோடு சேர்ந்து விடுகிறேன் என்று சாக்குப் போக்கு கூறுவதை அவதானிக்கிறோம்.

திர்மிதியில் பதிவாகியுள்ள ஒரு செய்தியில் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்;
உங்களில் எவரும் “அவர்கள் அவ்வாறு இருப்பின் நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்று கூற வேண்டாம், அதாவது மக்கள் நல்ல வழியைப் பின்பற்றினால் நானும் அவ்வழியைப் பின்பற்று வேன், அவர்கள் தீமை செய்தால் நானும் தீமை செய்வேன், என்று கூற வேண்டாம், மாறாக  உங்களை நீங்கள் ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள், அவர்கள் நல்ல வழியைப் பின்பற்றினால் நீங்களும் நல்ல வழியை பின்பற்றுங்கள், அவர்கள் தீங்கிழைத்தால் நீங்களும்பதிலுக்கு தீங்கிழைக்க வேண்டாம்.
  
நான்காவது தடை: தீய நண்பர்கள்.

அழைப்புப் பணியாளர்கள் எதிர்நோக்கும் நான்காவது தடை நோய்பிடித்த தீய நண்பர் களாகும், இவர்கள் அழைப்புப் பணியாளர்களின் முயற்சிகளையும் பாலாக்கி, (மக்களின்) இதயங்களையும் மாசுபடுத்தி, அவர்களின் கவணத்தையும் திசை திருப்பி, பிரச்சாரப் பாதையில் ஒரு தடைக்கல்லாக இருப்பார்கள்.
இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; நபி (ஸல்) அவர்கள் அபூ தாலிப் அவர்களுக்கு முன்வைத்த அழைப்புக்கு எதிராக தீய நண்பர்களைத் தவிர வேறு எவரும் இருந்தார்களா? இல்லவே இல்லை.
முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ள ஒரு செய்தியில், மரண அவஸ்தையில் இருந்த அபூ தாலிபை (இஸ்லாத்தின்பால்) அழைப்பதற்காகநபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள், ஆனால் அவருடன் இருந்த தீய நண்பர்களே அவ்வழைப்பை ஏற்க அவருக்குத் தடையாக இருந்தார்கள். என வந்துள்ளது.
முஸ்லிம் சகோதரா! அப்பொழுது அவருடன் இருந்தவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா? அபூ ஜஹ்ல் அவருடைய தலைக்கு நேராக அமர்ந்திருந்தான், வேறு சில அறிவிப்புகளில் அவருடைய தலைக்கு நேராக அப்துல்லாஹ் இப்னு உமையாவும், கால்களுக்குப் பக்கத்தில் அபூ ஜஹ்லும் அமர்ந்திருந்தனர், அவர்கள் மரண அவஸ்தையில் கூட அவரைப் பிரிந்து இருக்க வில்லை, தூரத்தில் இருந்த நபியவர்கள் அப்துல்லாஹ் இப்னு உமையா அவ்விடத்திலி ருந்து எழுந்தால் தனக்கு அங்கு அமர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டும் என ஆசைப் பட்டார்கள், உடனே அப்துல்லாஹ் எழுந்து செல்ல மறுகனமே அபூ ஜஹ்ல் அவ்விடத்தில் அமர்ந்து கொண்டான், ஒரு அவையில் நடந்து கொள்ளும் முறையைப் பாருங்கள் அதிலும் தீமைக்கு அழைக்க இவ்வளவு பேராவலா? பிறகு தூரத்தி லிருந்த நபியவர்கள் என் அருமை சிற்றப்பாவே! “வணக்குத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்ற கலிமாவை மட்டும் கூறுங்கள், மறுமை நாளில் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன் என்றார்கள், உடனே அபூ தாலிப் கலிமாவை மொழிவதற்காக தன்னுடைய நாவை அசைத்தார் இதை இடைமரித்த அபூ ஜஹ்ல்  அபூதாலிபை நோக்கி; நீ அப்துல் முத்தலிபுடைய மார்க்கத்தை விட நினைக்கிறாயா? எனக் கேட்டான் அதற்கு அவர் இல்லை எனக் கூறியதுமே (உயிர் பிரிந்து) நரகத்தை சென்றடைந்தார்.
பார்த்தீரா ஒரு தீய நண்பனை? இறைவன் மீது ஆணையாக அது ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும். ஆகவே தான் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள்  தீய நண்பர்களை பின்வருமாறு வகைப்படுத்தி னார்கள்.
முதல் பிரிவினர்; மார்க்க அறிவைத் தேடும் மாணவர்கள். இவர்கள் காற்றைப் போன்று எல்லா நோரங்களிலும் உன்னுடன் இருக்க வேண்டிய வர்கள், இவர்களை நீ அல்லாஹ்வுக்காக நோசிப்பாய், இவர்களின் பேச்சையும் நேசிப்பாய், அல்லாஹ்வை ஞாபகப்படுத்தவும், இறைத்தூதை நேசிக்கவும், சுவனத்துக்குச் செல்லவும், பாவ மண்ணிப்புக் கோரவும் உன்னை அழைப்பவர்கள் இவர்களேயாவர்.
இரண்டாம் பிரிவினர்; (உட்கொள்ளும்) உணவைப் போன்று இடையிடையே தேவைப்படுபவர்கள்.      
மூன்றாம் பிரிவினர்; மருந்தைப் போன்று அரிதாகவே தேவைப்படுபவர்கள். துணி துவைப் பவர்கள், நூல் நிலையப் பொறுப்பாளர்கள், போன்றோரை இதற்கு உதாரணமாக்க கூறலாம். 
நான்காம் பிரிவினர்; தீராத நோயையும், நச்சுப் பதார்த்தத்தையும் போன்றவர்கள், “பித்அத்” புது வழிக்காரர்களையும், இறைமறுப்பாளர்களையும் இதற்கு உதாரணமாக கூறலாம்.   
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் தீய நண்பர்கள் யார்? என கேட்கப்பட்டது அதற்கு புதுவழிக்காரர்கள் தான் அவர்கள் என விடை பகர்ந்தார்கள். பிறர்மீது சுமையாக இருக்கும் தீய நண்பர்கள் பலதரப்பட்டவர்கள் (என்பதை இங்கு நாம் விளங்கிக் கொள்கிறோம்).
அஃமஷ் எனும் அறிஞர் ஒரு தீய நண்பரைக் கண்டால்;
 رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ   [الدخان:12].
“இறைவா! நாங்கள் விசுவாசிகளாக இருக்கிறோம் (ஆதாலால்) எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாகஅத்துகான் 12.
எனப் பிரார்த்திப்பார்களாம். மேலும் அவர் களுடைய சுவாரஸ்யமான ஒரு (கவிதை) செய்தியில் பின் வருமாறு கூறினார்கள்;
உன் இடப்பக்கமாகஒரு தீய நண்பன் தொழுகை நிறைவேற்றினால், நீ ஒரு முறை ஸலாம் கொடுத்தால் போதுமானதே!

இமாம் ஷாபீஈ (ரஹ்) கூறினார்கள்; எப்போதாவது எனது அவைக்கு ஒரு தீய நண்பன் சமூகமளித்தால் இந்தப் பூமியே அவன் பக்கம் சரிந்து விடுவது போல் உணர்வேன். இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் தனது “மதாரிஜுஸ் ஸாலிகீன்” எனும் புத்தகத்தில் தீய நண்பர்களைப் பற்றிக் கூறும் போது, ஒரு தீய நண்பர் இப்னு தைமியா (ரஹ்) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அப்போது இமாமவர்கள் வெகு நேரமாகப் பொறுமை காத்துவிட்டு பிறகு என்னை நோக்கி “இத்தகையவர்களுடன் அமர்ந்திருப்பது கடும் காயச்சலை கூட ஏற்படுத்திவிடும்” எனக் கூறினார்கள்.

உண்மையில் தீய நண்பர்கள் அல்லாஹ் காட்டிய வழிமுறைக்கு புறம்பாக நடப்பார்கள், மேலும்  அவர்கள் அழைப்புப் பணியாளருக்கும் அழைப்பை ஏற்பவர்களுக்கும் இடையில் முட்டுக்கட்டையாக இருப்பார்கள்.

ஒரு கவிஞர் கூறுகின்றார்;
ஆயிரம் கொத்தர்கள் நிர்மானித்த (கட்டிடத்த)தை உடைக்க எவரும் முன்வருவதில்லை,
ஆனால்  ஒரு கொத்தன் நிர்மானித்த (கட்டிடத்) தை ஆயிரம் விஷமிகள் (சேர்ந்து) உடைத்தால் எப்படியிருக்கும்!?
சில ஆசிரியர்களும் மாணவர்களும் (கட்டிட மொன்றை) நிர்மானிக்க எண்ணி ஒரு கல்லை கையில் எடுத்த மறுகணமே அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கி எடுக்க பல விஷமிகள் முயற்சிப்பதாக முறையிடுகின்றனர். ஒரு மாத காலத்துக்குள் நிர்மானிக்கப்பட்ட கட்டிடம் ஒரே மணித்தியாளத்தில் தகர்த்தெறியப்படுகிறது. இவ்வாறு தான் நீர் ஒரு உபதேசத்தையோ அல்லது மார்க்க உரையையோ நிகழ்த்த முயற்சித்தால் உமக்குப் பின் ஆயிரக்கணக்கான இசைகளும், நாடகங்களும், தொடர் நாடகங்களும், பாவச் செயல்களும், மானக்கேடான விடயங்களும், ஏமாற்று வித்தைகளும், கவணக்கலைப்பு செயற் பாடுகளும் அறிவீனங்களும் முட்டுக் கட்டையாக இருப்பதை நீ பார்ப்பாய். இந்நிலையில் (மனித) இதயங்களில் விசுவாசத்தைக் கட்டியெழுப்புவது எவ்வாறு சாத்தியமாகும்?!
அல்லாஹ் கூறுகின்றான்:
 الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ   [الزخرف:67]
உற்ற நண்பர்களாக இருந்தோரில் (இறைவனை) அஞ்சி, (நமது வசனங்களையும் நம்பி முஸ்லிம்களாக) இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள்.அஸ்ஸுக்ருப் 67.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு இறை விசுவாசியைத் தவிர வேறு எவருடனும் நீ நட்புவைக்க வேண்டாம், இறைபக்தியுள்ள ஒருவரைத் தவிர வேறு எவரும் உனது உணவை உட்கொள்ள வேண்டாம்.
அரேபியர்களில் ஒருவர் கூறுகின்றார்; சில மனிதர்கள் வேறு   சிலரை விருந்தினராக உபசரித்தார்கள், அப்போது அவர்கள் தங்களிடம் வந்த விருந்தினர்களை நோக்கி “நீங்கள் (இங்கிருப் பவர்களுடன்) இரண்டரக் கலந்து விட்டால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வீர்கள்” என்றார்கள். இதைக் கேட்டதும் (திடீரென)அங்கு ஒரு அமைதி நிலவியது, இந்நிலையைக் அவதானித்த உபசரிப்பாளர்கள் பின் வருமாறு பாடினார்கள்;
பெலிகன் எனும் பெயரில் வானத்தில் சில பறவைகள் பறக்கின்றன,
உண்மையில் அவைகள் தம் இனத்தை (மட்டுமே) சேர்ந்து வாழ்பவை.
(இவ்வாறு தான்) ஒரு தீயவன் தீயவனையும், பெரும் பாவம் செய்பவன் அவனைப் போன்ற வனையும், குற்றவாளிகள் குற்றவாளி களையுமே நேசிப்பார்கள். ஆனால் இறையச்ச முடையவர்கள் இறையச்சமுடைய வர்களை மட்டுமே நேசிப்பார்கள்.

இப்னுல் முபாரக் என்பவரைப் பற்றி சரிதை ஆசிரியர்களால் எடுத்தெழுதப்பட்ட ஒரு சரியான செய்தியில்; “நான் பாவிகளைவிடத் தீயவனாக இருந்த போதிலும், நல்ல மனிதர்களையே  நேசிக்கிறேன்”என்று கூறினார். 

இதே கருத்தை இமாம் ஷாபிஈ அவர்கள் கவிதை வடிவில் பின்வருமாறு கூறினார்கள்;- இது அழகான கவிதையென்பதால் பல முறை கூறியிருக்கிறேன்-

நான் ஒரு தீயவனாக இருந்தும் நல்ல மனிதர்களையே விரும்புகிறேன், ஏனெனில் அவர்களுடைய மன்றாட்டமாவது எனக்குக் கிட்டு மல்லவா!

பாவச் செயல்களையே வியாபாரப் பொருட் களாக்கிக் கொண்டவர்களை நான் ஒத்திருந்த போதிலும் அவர்களை நான் வெருக்கிறேன்.

அறியாமைக் காலத்தவர்களுடன் அமர்ந்திருந்த சிலர் அல்லாஹ்வின் நேரான வழியை பின்பற்றா மைக்குக் காரணம் அவர்கள் தீய நண்பர்களுடன் அமர்ந்திருந்ததே என அல் குர்ஆன் இரண்டு இடங்களில் எங்களுக்கு தெளிவு படுத்திக் காட்டுகிறது.

அல்லாஹ் கூறுகின்றான்;

 وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ * اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ * أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلالَةَ بِالْهُدَى فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ   [البقرة:14-16]

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே” எனக் கூறுகின்றனர்.
அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான்.
அவர்களோ, நேர் வழியை விற்று வழிகேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர்.அல் பகரா 14-16.

அழைப்பாளியே! முஃமினான மனிதனே! நீ ஒருவரை (இஸ்லாத்தின் பக்கம்) அழைத்தும் அவரிடத்தில் எவ்வித மாற்றத்தையும் காணாது தொடர்ந்தும்அவர் பாவத்தில் மூழ்கியிருப்பதை அவதாணித்தால்,அவருக்குப் பின்னால்அவரை வழிகெடுக்க ஒரு தீய நண்பன் எனும் ஷைத்தான் இருக்கிறான் என்பதை நீ உறுதி செய்து கொள். அவனே உன்னுடைய அழைப்பு முயற்சியை பாழாக்கி விடுகிறான். நீ விடியற் காலையில் நிர்மாணித்ததை பிற்பகலிலே அவன் தகர்த்தெறிந்து விடுவான்.

தீய நண்பர்பளைப் பற்றி அல்லாஹ் பிரிதோர் இடத்தில் கூறும் போது;

 وَإِذَا خَلا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ   [البقرة:76]

அவர்களில் ஒருவர் மற்றவருடன் தனியாக இருக்கும் போது “அல்லாஹ் உங்களுக்கு அருளியதை அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கூறுவதால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதிடுவார்களே? விளங்க மாட்டீர்களா?” என்று கேட்கின்றனர்.அல் பகரா 76.

இங்குஅவர்களிடையே அவர்களுக்கு சில தீய நண்பர்கள்உள்ளனர் என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது கவணிக்கத்தக்கது.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

 الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ   [التوبة:67]

நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள்.அத்தவ்பா 67.

(தீய நண்பர்களாகிய) அவர்கள் இணைபிரியாத பல பகுதிகளைக் கொண்டவர்கள் என்றும், அவர்களில் ஒருவர் உங்களுடன் அமர்ந்து விட்டால் ஏனையவர்கள் அவரை எப்படியாவது  (நேர்வழியில் இருந்து) தடுத்து தம் பக்கம் ஈர்த்துக் கொள்வார்கள் என்றும் இங்கிருந்து நாம் விளங்கிக் கொள்கிறோம்.

மிகப்பெரும் ஹதீஸ் கலை அறிஞர்களில் ஒருவரான இப்னுல் முபாரக் என்பவரை நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக நேசிக்கிறேன், அதற்கான கூலியையும் அல்லாஹ்விடத்தில் கேட்கிறேன், உண்மையில் அவர் அல்லாஹ்வின் பாதையில் முயற்சித்தவர், ஒரு துறவி, மார்க்க அறிஞர், வணக்கசாலி, இரவில் நின்று வணங்குபவர், அல்லாஹ்வைப் பயப்படக் கூடியவர், இதற்கும் மேல் அவர் ஒரு அழகான கவிஞர், அவருடைய கவிதைகள் இதயத்தின் ஆழத்திலிருந்து பிறப்பதால் அவைகளை நான் நேசிக்கிறேன்,  அவர்களின் வாழ்க்கை சரிதையை “தஸ்கிரதுல் ஹுப்பால்” எனும் நூலில் இமாம் “தஹபி” அவர்கள் குறிப்பிடும் போது(இப்னுல் முபாரக்) அவர்கள் தீய நண்பர்களைப் பற்றி இரண்டு இடங்களில் தெளிவு படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

கவிதை;
ஒரு நல்ல நண்பனைத் தேடுபவர்“முஸ்இர் இப்னு கிதாமின்” அவைக்கு சமூகமளிக்கவும், கண்ணிய மும், அமைதியும் நிலவும் அந்த அவையில் (எப்போதும்) நல்ல மனிதர்களும் உயரடுக்கு கூட்டத்தினர்களுமே அமர்ந்திருப்பார்கள்.

அதாவது (இப்னுல் முபாரக்) அவர்கள் கூறினார்கள்; நீ ஒரு நல்ல நண்பனை தேடினால் பஸ்ராவில் உள்ள பள்ளி வாசலுக்கு சென்று இரண்டு ஸஹீஹான கிரந்தங்களில் ஏராளமான நபிமொழிகளை அறிவித்துள்ள “முஸ்இர் இப்னு கிதாம்” என்வரைத் தேடி அமர்ந்து கொள், அல்லாஹ்வின் பயத்தால் அழுத அவர்களுடைய நிறம் மாறி வலது புறக் கண் கூட குருடாகி விட்டது, அவரைப் பற்றி அறிவித்துள்ள சிலர் அவர் அல்லஹ்வின் அச்சத்தால் நாட்பது வருடங்கள் வானத்தை அண்ணாந்து பார்க்கவில்லை என்றும், தலையைக் கவிழ்த்த வாரே இருந்ததாகவும் கூறியுள்ளார்கள், நீங்கள் ஏன் சிறிப்பதில்லை என வினவப் பட்டதற்கு, “நான் எவ்வாறு சிரிப்பது! இன்னும் நான் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தைக் கடக்கவு மில்லை, சுவனத்துக்கோ அல்லது “ஸகர்”எனும் நரகத்துக்கோ செல்லுமாறு பணிக்கப்படவு மில்லை” என்றும் கூறினார்களாம். ஒரு நாள் அவர் வெண்ணிற ஆடையணிந்து கிப்லாவை முன்னோக்கி அமர்ந்தவராக வுலூச் செய்து கொண்டிருந்தார்கள் அவருடைய வாயிலிருந்தும் ஆடையிலிந்தும் நறுமணம் வீசிக் கொண்டி ருந்தது, அவர் கிப்லாவை முன்னோக்கி நபி மொழிகளை அறிவிக்க ஆரம்பித்தால் அவரைப் புடைசூழ வானவர்கள் இருப்பது போல் காட்சியளிப்பார்கள், தொடர்ந்தும் நபிமொழிகளை அறிவிக்க அறிவிக்க அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தோடிக் கொண்டிருக்கும். அவர்கள் சுவனத்தின் பால் அழைத்துச் செல்லும் ஒரு ஆன்மீக அமர்வுக்கு தம் மாணவர்களை அழைத்து “உங்களில் எவராவது ஒரு நல்ல நண்பனைத் தேடினால் “முஸ்இர் இப்னு கிதாம்” என்பவரின் அவைக்குச் செல்லுங்கள்” எனக் கூறுவார்கள், ஆம் அவரைப் பற்றி விசாரித்து அவர் இருக்கும் பள்ளிக்குச் சென்று அவருடைய அவையின் இறுதியில் அல்லாஹ் அவரை நோக்கி “நீங்கள் என்னை திருப்தியுரச் செய்ததால், நான் உங்களை திருப்தி கொண்டுவிட்டேன்”எனக் கூறுவதற்காக அவருடன் அமர்ந்திருங்கள் என்று கூறுவார்கள்.

இதோ இந்த “அம்ர் இப்னு ஹுபைர்” என்பவன் ஆடை கிழிந்த ஒரு துறவி ஆனால் அவன் (பித்அத்) புதுவழிக்காரன், நாம் எந்த ஒரு துறவியையோ, (அல்லாஹ்வுக்காக) அழுது புலம்புவரையோ, இறவில் நின்று வணங்குப வரையோ, நோன்பாளியையோ, பிரச்சாரப் பணியா ளரையோ, வீர மரணம் அடைபவரையோ, நபி வழிக்குத் திரும்பாத வரை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆம், “அம்ர் இப்னு ஹுபைர்” என்பவன் துறவரத்தாலும், அல்லாஹ்வின் அச்சத்தாலும் பிறரை வியக்க வைத்தாலும் கூட, அவன் ஒரு புதிவழிக்காரன் அத்துடன் (மனிதனின் தெரிவுச் சுதந்திரத்தை மறுத்து) அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படி மட்டுமே நடக்கும் என வாதிடுபவன், ஒரு முறை அவன் கலீபா அபூ ஜஃபர் அல் மன்ஸூரிடம் சென்றதும் கலீபா அவர்கள் (அவரைச் சூழ இருந்தவர்களை நோக்கி) “அம்ர் இப்னு ஹுபைரைத் தவிர இங்குள்ள அனைவரும் உலக இலாபத்தை நோக்கமாக கொண்டுள்ளவர்கள் ஆனால் அவர் மட்டும் அல்லாஹ்வின் முகத்தைத் தேடுபவர்” எனக் கூறினார்.

இமாம் “தஹபி” அவர்கள் கூறினார்கள்; (கலீபா)அவர்கள் அனுடைய வெளிததோற்றத்தை வைத்தே அவ்வாறு புகழ்ந்தார்கள், உண்மையில் இமாம் தஹபி அவர்களும்  ஏனைய அறிஞர்களும் அவனுடைய சுயரூபத்தை அறிந்து வைத்திருந்தார்கள். அவனைப் பற்றி இப்னுல் முபாரக் அவர்கள் குறிப்பிடுகையில்;

கவிதை
மார்க்க அறிவைத் தேடும் மாணவனே! “ஹம்மாத் இப்னு ஸைது” என்பவரிடம் சென்று மார்க்கத்தையும் விளக்கத்தையும் பெற்று எழுதி வைத்துக் கொள்.   
அம்ர் இப்னு ஹுபைர் என்பவனின் அடிச்சுவட்டிலிருந்து வந்த புதுவழிகளை கைவிடு.

இது ஒரு அழகான கவிதை அல்லவா! ஹம்மாத் இப்னு ஸைய்த் என்பவர் இமாம் புஹாரி அவர்களுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரும், இமாம் மாலிக் அவர்களுடைய நண்பருமாவார், எனவே உனக்குப் பயணளித்து, கல்வி ஊட்டும் நல்ல நண்பனிடம் நீ செல்வாய். ஏனெனில் தீய நண்பர்கள் இறைத்தூதர்களினதும், நபிமார்களி னதும் பகைவர்களாவார்கள். அவர்கள் எங்கள் வாலிபர்களைக் கவர்ந்து அல்லாஹ்வின் பாதையில் இருந்து அவர்களைத் தடுத்தார்கள். அவர்களை இரண்டு வகையிராக பிரிக்கலாம்;

ஒரு பிரிவினர்; இறைமறுப்பாளர்கள், அல்லது பாவங்கள் செய்து தொழுகை போன்றவைகளை விட்டு (மார்கத்தை) முற்றாக புறக்கனித்தவர்கள்.

மற்றைய பிரிவினர்; தொழுபவர்கள், ஆனால் (மார்க்கத்தில்) ஆகுமானவைகளிலும், முட்டால் தனமான செயல்பாடுகளிலும் நேரங்களை வீணடித்து, மார்க்க அறிவையும் கற்காது பயனுள்ள அவைகளுக்கும் சமூகமளிக்காதவர்கள். இத்தகையவர்கள் தம் ஆயுளில் இருந்து பயன் அடையாது வீண் விழையாட்டுகளில் ஈடுபட்டத னால் நல்ல மனிதர்களுடைய கண்களிலிருந்து தூரமாகி விட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்; சில மனிதர்கள் மார்க்க விவகாரங்களிலோ, உலக விவகாரங் களிலோ எத்தகைய தொடர்பும் இல்லாத காரணத்தினால் என்னிடத்தில் அவர்களுடைய அந்தஸ்தை இழந்து விடக் காண்கிறேன்.

ஆம் சிலர் தெருக்களிலும் வீதியோரங்களிலும் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்பதை நீ காண்பாய்,  அவர்கள் வணக்க வழிபாடுகளிலோ, சம்பாத்தியத்துடன் தொடர்பான விடயங்களிளோ, பிரச்சாரப் பணியிலோ, மார்க்கப் பணிகளிலோ, ஈடுபடுவதில்லை அத்தகையவர்களை நாம் தவிர்ந்து நடப்பதற்கு முன் அவர்களுக்கு உபதேசிப்பது கடமையாகும்.

  
ஐந்தாவது தடை: அழைப்பாளிகளின் உற்சாகம் குன்றுவதும், அவர்களின் ஊக்கம் குறைவதும்.
மார்கக் கல்வியைப் பயிலும் அனைத்து மாணவர்களும் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்தால் நிலைமை கட்டாயம் சீராகி விடும். ஆனால் நடப்பது என்ன? மார்க்க் கல்வியைப் படிக்கும் மாணவர்களும், அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் நிறையவே இருக்கிறார்கள், ஆனால் அழைப்புப் பணியாளர்களோ மிகக் குறைவான தொகையினராகும். இவர்களும் கூட அலட்சியப் போக்கை கடைபிடித்தால் எப்படியிருக்கும்!?
(பேரறிஞர்) முஹம்மத் இக்பால் அவர்கள் மார்கப் பணியாளர்களை நோக்கி பின் வருமாறு கூறுகின்றார்;
கவிதை
(அழைப்பாளனே!) மக்கள் உம்மை அறியா விட்டாலும் சரி, நீர் பரந்து விரிந்த இப்புவியில் இருக்கும் முத்துக்களாலும், மாணிக்க கற்களி னாலும் ஆன புதையலாவீர்.
உமது பேச்சை செவிசாய்க்கா விட்டலும், பல தலைமுறைகளின் அவை உமது உரத்த சப்தத்தின் பால் தேவையுடையவர்கள்.
அதாவது அழைப்புப் பணியாளனே! இப்புவியே குழப்பம் நிறைந்து மாசடைந்துள்ளதால், மக்களுக்கு மத்தியில் சென்று உறை நிகழ்த்து, அவர்களுக்கு உபதேசம் செய் (என அறிஞர் இக்பால் அழைப்பு விடுக்கிறார்).

பிரச்சாரப் பணியாளர்களை இறைவன் அல் குர்ஆனில் இரண்டு விதமாக நோக்குகின்றான்.
ஒன்று ; நேர்மறையாக நோக்குதல்;
அழைப்புப் பணியாளர்களை அல்லாஹ் புகழ்ந்து ரைத்துள்ளதுடன், (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யு மாறு அவர்களுக்கு ஆர்வமும் ஊட்டியுள்ளான், (பிறருக்கு மார்க்கத்தை) கற்றுக் கொடுக்காது (மார்க்கக் கல்வியை) மறைப்பவனை அவன் வெறுத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
 ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ   [النحل:125]
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! அன்னஹ்ல் 125.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;   
 وَمَنْ أَحْسَنُ قَوْلاً مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحاً وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ   [فصلت:33]
அல்லாஹ்வைநோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?புஸ்ஸிலத் 33.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
 قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ   [يوسف:108]

“இதுவே எனது பாதை. நானும், என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம். அல்லாஹ் தூயவன். நான் இணை கற்பிப்பவன் அல்லன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! யூஸுப் 108.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
 يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ  [المائدة:67]
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்!அல் மாயிதா 67.
இவையனைத்தும் நேர்மறை விடயங்களாகும் ஏனெனில் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைப்பீராக, பேசுவீராக, உறையாற்றுவீராக, தீய ஊசலாட்டத்தை அகற்றுவீராக என்றெல்லாம் இங்கு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
இரண்டு; எதிர்மறையாக நோக்குதல்;
அல்லாஹ் கூறுகின்றான்;

 إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ * إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ   [البقرة:159-160]

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்று களையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதி யுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்த வற்றை) தெளிவு படுத்தி யோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடை யோன். அல் பகரா159,160.

 நபி (ஸல்) அவர்கள்; கூறினார்கள்: ''தான் அறிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கப்படும் போது அதை மறைப்பவர் மறுமை நாளில் நரக நெருப்பினாலான கடிவாளம் அணிவிக்கப்படுவார்.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி)
காலம் தாழ்த்தாமல் மக்களுக்கு சொல்லிக் கொடுத்து உபதேசம் செய்யாத கல்வியில் என்னதான் பயன் இருக்கப்போகிறத?
பொய்யர்களைப் பொருத்தமட்டில் இரவு பகலாக அவர்கள் பாட்டுக்கள் பாடியும், நடணமாடியும், மோலங்கள் தட்டியும், (புத்தாக்கங்ளைப்) படைத்தும் மக்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால் உண்மையாளர்களோ மிகவும் சொற்பமானவர் களாகவும், பிரச்சாரப் பணியில் அவர்களின் உற்சாகம் குறைந்து அசுர பாதாளத்தில் இருப்பதையும் நாம் காண்கிறோம், இந்நிலையை அல்லாஹ்விடமே முறையிடுவோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; எவர் என்னி டத்திலிருந்து செவிசாய்த்த  ஒரு செய்தியை, மனனமிட்டு பிறகு அதை செவிசாயத்த பிரகாரமே (மக்களுக்கு) போதித்தால் அவருடைய முகத்தை அல்லாஹ் (மறுமை நாளில்) பிரகாசமாக்கு வானாக. (வெறும்) பேச்சை செவிசாய்த்தவரை விட (அதை மக்களுக்கு) போதித்தவர் அதிக விளக்க முடையவராகலாம்.
இந்நபிமொழியின் விளக்க நூலான “அல் மிஸ்குத் திபத்தி” யின் நூலாசிரியர் அஹ்மத் அல் கிமாரி என்பவர், இப்னு ஹிப்பான் தனது நூலில் “என்னிடத்திலிருந்து செவிசாய்த்த செய்தியை பிறருக்கு போதித்தவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக” என அறிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் ஒரு ஸஹீஹான அறிவிப்பில் வந்துள்ள செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; உங்களால் ஒரு மனிதர் நேர்வழி பெறுவது சிவப்பு ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்ததாகும்.
நிறைவான இரக்க சிந்தையும், இறையச்சமும் கொண்ட ஹாரிஸ் இப்னு முஸ்லிம் எனும் நபித்தோழர் கூறுகின்றார்; ஒரு முறை சில நபித் தோழர்களுடன் ஒரு யுத்தத்துக்குச் சென்றி ருந்தேன், அப்போது அவர்கள் விடியக் காலையில் அல்லது மாலையில் சில கிராம வாசிகளை தாக்கி அவர்களுடைய பொருட்களை கொள்ளைய டிக்க எண்ணியிருந்தார்கள். ஆகவே முன்கூட்டியே ஒரு இரவு வேளையில் அக்கிராமத்திலிருக்கும் இறைமறுப்பாளர்களை ஒன்று திரட்டி“சில நபித் தோழர்கள்  உங்ளைத் தாக்க முற்பட்டால் “வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய இறைத்தூருமாவார் என சாட்சி கூறுங்கள்” என்றும், இக்கலிமாவை உங்களுக்கு கற்றுத் தந்தவர் யார்? எனக் கேட்டால், ஹாரிஸ் என்றும் கூறுங்கள் எனக் கூறினேன். இதையறிந்த நபித்தோழர்கள் அடிப்படையில் இறைமறுப்பாளர்களக இருந்த கிராமவாசிகளிடமிருந்து கொள்ளை யடிப்பதை நீர் தடுத்து விட்டீர் என ஆதங்கப் பட்டனர். பிறகு அவர்கள் திரும்பி வந்ததும் ஹாரிஸை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறை யிட்டனர், ஹாரிஸ் கூறினார் நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள் அப்போது அவர்களுடைய முகம் பெளர்ணமி நிலவைப் போல் காட்சியளித்தது, என்னை அழைத்து எனது கரங்களைப் பிடித்து ஆசீர்வாதித்து என்னைப் புகழ்ந்தார்கள், பிறகு என்னை நோக்கி; ஹாரிஸே! ஸுப்ஹு, மஃரிப் ஆகிய தொழுகைகளுக்குப் பின் நீர் ஓத வேண்டிய சில வார்த்தைகளை உமக்கு நான் கற்றுத் தரட்டுமா? அவ்வாறு செய்தால் அல்லாஹ் நாடினால் அன்றி உம்மை நரகம் தீண்டாது எனக் கேட்டார்கள், அதற்கு நான் ஆம் (கற்றுத்தாருங்கள்) இறைத்தூதரே எனக் கூறினேன். பிறகு நபியவர்கள்; தினசரி ஸுப்ஹு மஃரிப் ஆகிய தொழுகைகளுக்குப் பின்இறைவா! என்னை நீ நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக என ஏழு முறை கூறுவீராக எனக் கூறினார்கள்.
பிரச்சாரப் பணியாளர்களின் ஊக்கம் குறைவது வியக்கத்தக்க ஒரு விடயமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
 وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَناً قَلِيلاً فَبِئْسَ مَا يَشْتَرُونَ   [آل عمران:187]
‘வேதம் கொடுக்கப்பட்டோரிடம் ‘அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது’ என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது.”ஆலு இம்ரான் 187.
அழைப்பு பணியில் ஈடுபட விரும்பும் இளம் அழைப்பாளர்களுக்கு மூன்று விமர்சனங்கள் தொடுக்கப்படுகின்றன.
ஒன்று;(அழைப்பாளியே!) நீ பொறுத்திரு உன் வாலிபத்தில் அழைப்புப் பணியில் ஈடுபடுவது உனக்கு அவசியமில்லையே!!!
(ஆம் எதுவரை) உனக்கு எழுபது வயதாகி மரணிக்கும்  வரை பொறுத்திரு(ப்பதா?) தன் வாலிபத்தை அழைப்புப் பணிக்கு சாதகமாக்கிக் கொள்ளாதவர் முதுமையில் அதற்கு உதவாக் கரையாகி விடுகிறார்.
அபூ முஸ்லிம் அல் குராஸானி என்பவர் கூறுகின்றார்; “ஒருவர் எதையாவது சாதிக்க விரும்பினால் தன் வாலிபத்தில் அதைச் செய்து கொள்ளட்டும்”. (எமது வரலாற்றில்) பிரச்சாரப் பணியாளர்களும், அறிவு படைத்த நபித் தோழர்களும் வாலிபர்களாகத் தானே இருந்திருக் கிறார்கள்? (இஸ்லாமிய) பிரச்சாரப் பணியும் வாலிபத்துக்குச் சொந்தமானதன்றோ? ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம் நீடிக்கும்? அவனுடைய பார்வைகள் மங்கி, செவிப்புளனும் விடைபெற்று செல்லும் தள்ளாடும் வயதினில் பொல்லூன்றியவாறு பிரச்சாரப் பணியை தொடர்வதா? இல்லை இன்றே இப்பொழுதே பிரச்சாரப் பணியை தொடருங்கள் நாளைக்கு என தள்ளிப் போடாதீர்கள்.
இரண்டு; இந்த விமர்சணத்தை பல அவைகளில் கூட நீர் செவியேற்றிருக்கலாம். அதாவது வாலிபத்தை அடையாத இளையவர்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபடுவது கடமையில்லையே? ஆம் இளைஞர்கள் மார்க்கத்தீர்ப்புகள் வழங்க நாம் அனுமதிக்க மாட்டோம், ஆனால் பிச்சாரப் பணியைப் பொருத்தவரை “என்னைப் பற்றி ஒரு வசனம் தெரிந்தாலும் அதை பிறருக்கு எத்தி வைய்யுங்கள்” என்று (நபிகளார் கூறியது போல்) கூறுகின்றேன். (பாடசாலையில்) முன்னிலை கல்வி கற்கும் ஒரு மாணவன் எந்த மார்க்கத் தீர்ப்புக்களையும் வழங்காமல்  அவன் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? இடைநிலை, உயர்தரம் போன்றவைகளில் கற்கும் மாணவர்களும், தாம் அறிந்ததை பிறருக்கு கற்றுக் கொடுப்பது அவசியமாகும். இதுவே நபியவர்களின் மகத்தான அழைப்பும் ஆகும்.
மூன்று;நித்தம் அழைப்புப் பணியில் ஈடுபடுவதால் மார்க்கக் கல்வியை கற்பதற்கு இடைஞ்சல் ஏற்படுவதாக சிலர் விமர்சிக்கின்றனர். அதாவது அழைப்புப் பணியில் ஈடுபடுவது கல்வி அடைவு மட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடுமாம், இல்லை, இல்லை (உன்மை) அவ்வாரில்லை, மாறாக அ(ழைப்ப)வருடைய கல்வி அடைவு மட்டம் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்றே நான் கூறுவேன், கொடுத்தார்க்குக் குறைவு இல்லை என்பதே யதார்த்தம். எவர் அழைப்புப் பணியில் ஈடுபட வில்லையோ அவரே அறிவு மட்டத்தில் குறைந்தவர். காரணம் அவர் கற்றவைகளை மறந்து விடுகிறார். எனவே (அழைப்புப் பணியாளனே) நீ, உரை நிகழ்த்து, பிரசங்கம் செய், உபதேசி, (மக்களை) வழி நடத்து, (அவ்வாறு செய்தால்) உன்னால் கனிசமான உரைகளையும், அல் குர்ஆன் வசனங்களையும், நபி மொழி களையும் மனனமிடலாம், அல்லாஹ் மார்க்கத் தில் தெளிவான விளக்கத்தையும், அவனுடைய அனுகூலத்தையும் உனக்கு அதிகப்படுத்துவான், ஏனெனில் கல்வியும் பணமும் தண்ணீரைப் போன்றவை.
கவிதை;
கல்வி தண்ணீரைப் போன்றது, அதைச் சூழ அணை கட்டப்பட்டால் மாசடைந்து விடும்.
அன்றி அது திறந்து விடப்பட்டால் (அதிலிருந்து) சலசலவென சுவையான நீ அருவிகள் வடிந்தோடும்.
தண்ணீரின் மூலம் பல உயிர்களும், இலட்சி யங்களும் உயிர்பெறுவது போல், கல்வியின் மூலம் பலர் (இதங்கள்) உயிர் பெறுகின்றனர்,
இறைவன் உமக்களித்த செல்வத்தை நீர் வாரி வழங்குவீர், காரணம் உன் அறிவு இரவலாக வழங்கப்பட்டதும், உன் ஆயுல் விரைவாக கழிந்து விடக்கூடியதும் ஆகும்.

(அழைப்பாளியே!) நாளுக்கு நாள் உன் பணியைத் தொடரத் தொடர உன் அறிவு மட்டம் உயர்ந்து கொண்டே செல்லும் இன்ஷா அல்லாஹ்.

அழைப்புப் பணியாளன் ஒரே விடயத்தை பல முறை மீட்டிக் கூறுவது பற்றிய விளக்கம்.

அழைப்புப் பணியார்கள் அவர்களது நீண்ட உரைகளில் ஓரே விடயத்தை மீட்டிக் கூறுகின் றார்களே என சிலர் விமர்சிக்கின்றார்கள். நான் கூறுவது என்னவென்றால், நல்லதைத் தானே அவர்கள் மீட்டிக் கூறுகின்றார்கள்? அல் குர்ஆனிலும் பல விடயங்கள் மீட்டிக் கூறப் பட்டுள்ளதே!? ஸூரதுல் பாதிஹாவிலிருந்து ஸூரதுன் நாஸ் வரைக்கும் ஓதி முடித்து விட்டு மீண்டும் ஸூரதுல் பாதிஹாவை ஓதி (அல்குர்ஆனை திரும்பவும் ஓத) ஆரம்பிக்கிறோம் அல்லவா? ஏன் ஏகத்துவக் கொள்கை மீட்டிக் கூற படவில்லையா!? நபி மூஸா (அலை) அவர்களின் சம்பவம் (மாத்திரம்) இருபத்து மூன்று இடங்களில் பல வித்தியாசமான முறைகளில் மீட்டிக் கூறப்பட்டுள்ளதே.

கவிதை
அழகிய வதனத்துடையவரே அறிவை மீட்டிக் கூறி அதை ஆராய்சி செய்து பாரீர் ஏனெனில் மீட்டிக் கூறப்பட்டது இனிமையானதே.
திரும்பத் திரும்ப மீட்டுவதாய் (சிலர் குறை) கூறுகின்றார்கள், உயர்வான அறிவு ஆண்மாக்களை விட சிறந்தது என்றே நான் கூறுகின்றேன்.
முஹம்மதின் நாமத்தை உச்சரித்தால் மக்கள் அதை வரவேற்கின்றார்கள்.

மீட்டிக் கூறுவதிலோ, ஒரே சொல்லை முப்பது, நாட்பது தடவைகள் பல இடங்களில் கூறுவதிலோ எவ்வித தவறுமில்லை. காரணம் அதன் மூலம் அல்லாஹ் மனப்பதிவை அதிகரித்து பயனடையச் செய்வான். ஆகவே தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒரே நபிமொழியை பல அவைகளில் கூறும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.
இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் ஒரு மனிதனிடத்தில் எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார், அதற்கு அவர் நான் இன்னும் உங்களுடைய நிலைக்கு வரவில்லையே என்றார். இதை செவியுற்ற இமாம் அவர்கள், ஷைத்தான் உம்மை மிஞ்சிவிட விரும்புகிறான் எனக் கூறினார்கள்.

(மனிதா) ஷைத்தான் உன்னிடத்தில் வந்து “பிரசங்கம் நிகழ்த்தாதே, உரையாற்றாதே, தொழுகை நடாத்தாதே அதனால் உனக்கு முகஸ்துதி ஏற்பட்டு விடும் என்றெல்லாம் (அறிவுரை) கூறுவான், (அவனை நம்பி) பிரச்சாரப் பணியை கைவிடுவதே உச்சகட்ட முகஸ்துதி தான், தஃவா களத்தில் முகஸ்துதியையும், பிரபல்யத்தையும் பயந்து (அதை கைவிட்டு) விடுபவர், மக்களில் மிகவும் பிரபல்யமானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவார், பிறகு முறையே அபூ பக்கர், உமர், உஸமான், அலி, (ரலி) போன்றவர்களாவார்கள், ஏன் வல்ல அல்லாஹ் கூட அவனுடன் இருக்கிறான் (என்ற உண்மையை தெறிந்து கொள்ளட்டும்.)


ஆறாவது தடை: மார்க்கத்தை விட உலக விடயங்களுக்கு மக்கள் தீவிர கவனம் செழுத்துதல்.
பெரும்பாலான மனிதர்கள் உலக விடயங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதையும், மார்க்க விவகாரங் களை தள்ளிப் போடுவதையுமே பார்க்கிறோம், சிலர் தமது தேவைகளுக்கும்,வேலைகளுக்கும், உழைப்பிற்கும், உடமைகளுக்கும் முன்னுரிமை வழங்கி விட்டு இறுதி நேரத்தில் தொழுகையின் பக்கமும், மார்க்கத்தை விளங்குவதற்கும், ஏன் நேரம் எஞ்சிருந்தால் மட்டும் திருக் குர்ஆனை ஓதுவதற்கும் காத்திருக்கின்றனர். அல்குர்ஆன் ஓதுவதை அவகளுடைய நிகழ்ச்சி நிரலின் இறுதிக்கே தள்ளிப்போடுறார்கள், கடைத் தெருவுக்கும், வைத்தியசாலைக்கும், உறவினர் களைத் தரிசிக்கவும், உள்ளாசம் பெறுவதற்கும், உறங்குவதற்கும், அவர்களுக்கு நிறைய நேரங்கள் எஞ்சியிருக்கும், ஆனால் குர்ஆனை ஓதுவதற்கு மட்டும் அவர்களுக்கு நேரம் இல்லை. அத்தகையோர் மார்கத்தின் விளிம்பில் இருப்ப வர்கள், ஆனால் அவர்கள் உலக விவகாரங்களில் ஈடுபடுவதைப் பொருத்தமட்டில்.
அல்லாஹ் கூறுகின்றான்;
 أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلاً   [الفرقان:44]
அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள்.அல் புர்கான் 44.
ஒரு ஹதீஸில் “நிச்சயமாக இந்த உலகத்தை அல்லாஹ் விரும்பியவர்களுக்கும், விரும்பாதவர் களுக்கும் கொடுக்கிறான், ஆனால் மார்க்கத்தை, தான் நேசிப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கிறான். என வந்துள்ளது.
எனவே உமக்கு மார்க்க (விளக்க)ம் கிடைத்து விட்டால் அல்லாஹ் உம்மை நேசிக்கிறான் என்றே அர்த்தம் கொள்ளல் வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
 لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ   [المدثر:37].
உங்களில்எவன் (அதனளவில்) முந்திச் செல்ல வோ அல்லது (அதைவிட்டும்) விலகிக் கொள்ளவோ விரும்புகின்றானோ அவன் அவ்வாறு செய்யவும்.அல் முத்தஸ்ஸிர் 37.
கவிதை
நான் உங்களில் அதிகம் செல்வமுடையவன் (என்னிடமுள்ள) அனைத்தையும் எடுத்துச் செல்லுங்கள், ஆனால் என்னை மட்டும் சுதந்திரம் பெற்ற தனி மனிதனாக விட்டு விடுங்கள்.
அப்படியே என்னை சூரையாடப்பட்ட ஒருவனாக நீங்கள் நினைத்தாலும் குற்றமில்லை.
ஷைபானி என்பவர் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதை நான் இப்னு தைமியாவின் வாழ்க்கை வரலாற்றில் வேறு ஒருவருடைய நூலிலும் வாசித்திருக்கிறேன். ஒரு முறை இப்னு தைமியா (ரஹ்) அவர்கள்செல்ஜக்கியர்களைச் சேர்ந்த இப்னு குத்ரூபா எனும் முஸ்லிம் ஸுல்தானுக்கு சில அறிவுறை களை வழங்குவதற்காக அவர் தொழுது கொண்டிருக்கையில் அவரிடம் சென்றார். அவரைக் கண்டதுமே சுல்தான் ஆரவாரத்துடன் வரவேற்றார். பிறகு அவரை நோக்கி நீங்கள் ஒரு அறிஞர், துறவி, முஜாஹிதும் கூட ஆகவே உங்களுடைய வீட்டில் வைத்தே உங்களை தரிசிக்க நான் ஆவலாக இருந்தேன் என்றார். இதைக் கேட்ட இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் “இப்னு குத்ரூபாவே உமது அசிங்கத்திலிருந்து எம்மை அகற்றி விடுவீர், நபி மூஸா (அலை) அவர்கள் கூட ஒரு நளைக்கு பல முறை பிர்அவ்னிடம் சென்றார்கள்“ என்றார், அதற்கவர் இப்னு தைமியாவே நீர் எமது ஆட்சியில் ஒரு கண் வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம். என்றார். உடனே இமாமவர்கள் உமது ஆட்சியிலா!!! வணக்கத்துக்குறிய ஏக இறைவன் மீது ஆணையாக உமது ஆட்சி  என்னிடத்தில் ஒரு நாணயத்துக்கு கூட ஈடாகாது, இந்த வானங்கள் பூமியின் பரப்பளவை போன்ற சுவனத்தையே நான் விரும்புகிறேன் என்றார்.
இவ்வாறு தான் சிலர் தமது சகல காரியங்களிலும் உலக (இலாப)த்துகே முன்னுரிமை வழங்குவர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; பொற்காசின் அடிமையும், வெள்ளிக்காசின் அடிமையும், கருப்புத் துணியின் அடிமையும், துர்ப்பாக்கிய வானாவான், அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான். செல்வம் வழங்கப்படா விட்டால் கோபமடைவான். அவன் துர்ப்பாக்கிய வானாகட்டும், அவன் மீண்டும் மீண்டும் சறுக்கி விழட்டும். அவனுக்கு முள் தைய்த்து விட்டால் அதை எடுக்க அளில்லாமல் தவிக்கட்டும். இறை வழியில் (போர் புரிய) தன் குதிரையின் கடிவாளத்தை கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரண்டு கால்களும் புழுதியடையச் செய்கின்ற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும்.  நூல் புகாரி
இவ்வாரே நானும் கூறுகின்றேன்; “வாகனங்க ளுக்கு அடிமையானவன் துர்ப்பாக்கிய வானாவான்” சிலரை நாம் பார்க்கிறோம் அவர்கள் (எப்பொழுதும்) வாகனங்களைக் சுத்தம் செய்து, மனமும் பூசி அவைகளை திருத்துவதிலே நேரத்தைக் கழிப்பார்கள், ஒன்றில் அவைகளின் டயர்களை திருத்துமிடத்தில் இருப்பார்கள், அல்லது எரிபொருள் நிறப்பிக் கொண்டிருப்பார்கள், அல்லது (இது தொடர்பாக) எவரையும் தரிக்கச் சென்றிருப்பார், இவை (வெரும்) வாகனங்கள் தான், (அவ்வாறு பராமரிப்பதற்கு)கழுதைகளோ கோவேறு கழுதைகளோ இவைகளை ஈனறெடுக்க வில்லை (என்பதை மறந்து விடுகிறார்கள்).
கவிதை
தன் உடம்பை இழைப்பாற்றுவதற்காக அழைந்து திரிந்து களைப்படைந்தவனே! மேலும் எவ்வளவு அழைந்து திரியப் போகிராய்.
(அறிந்து கொள்) இலாபமே இல்லாத ஒரு விவகாரத்துக்காக நீ களைப்படைந்து விட்டாய்.
ஆண்மாவின் பக்கம் முன்னேறி அதன் சிறப்புக்களை நிறைவடையச் செய்ய முயல்வீர்.
(வெறும்) உடம்பைக் கொண்டு அல்ல, ஆண்மாவைக் கொண்டே நீ மனிதனாகத் திகழ்கிறாய்.

சில மனிதர்கள் கட்டிடங்களுக்கு அடிமையாகி உள்ளனர், அவர்கள்  நாளைக்கு ஒரு குடியிருப்பு வீதம் கட்டுகிறார்கள் பிறகு அதைத் திருத்துவதும் அதிலுள்ள பூங்காக்களை விரிவு படுத்து வதும்,அதன் மண்டபங்கள் (அமைய வேண்டிய இடங்களை) பற்றி சிந்திப்பதுமே அவர்களுடை வேளையாக உள்ளது, இதற்கு முன் பல குடியிருப்புகள் உடைக்கப்பட்டு (திருத்தப்பட்டு) ள்ளன, இவர்களுடைய இதையங்கள் பாலடைந்த வீட்டை ஒத்திருக்கிறது அங்கு குர்ஆனுக்கோ, நபி வழிக்கோ, பிரகசத்துக்கோ, நேர்வழிக்கோ இடமே இல்லை, ஆனால் அவர்கள் கட்டிய வீடுகளிலுள்ள சோபாக்களையும், நுழைவாயில்களையும் வெளி யேறும் வழிகளையும், பண்ணைகளைச் சுற்றி யுள்ள பூங்காக்களையும் பார்த்தால் பிரமித்துப் போவீர்கள்.
கவிதை
பருத்துப் பெறுத்திருக்கும் அவர்களுக்கு எவ்விதக் குறைபாடும் இல்லை ஆனால், கோவேறு கழுதை போன்ற இராட்சத உடல்களுக்குள் சிட்டுக் குருவிகளின் மூலையே உள்ளது. 

அல்லாஹ் கூறுகின்றான்;
 وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ   [المنافقون:4]
நீர் அவர்களைக் காணும் போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர்.அல் முனாபிகூன் 4.
நான் இதற்கு முன்னரும் கூறியிருக்கிறேன் கலீபா ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் தனது மாளிகையை அழகு படுத்தி யிருந்த வேளையில் துரவிக் கவிஞரான அபுல் அதாஹியா என்பவர் ஒரு முறை கலீபாவை தரிசிக்கச் மாலிகைக்குச் சென்றார். அவரைக் கண்டதும் கலீபா அவர்கள் மாளிகை எப்படிக் காட்சி யளிக்கின்றது? எனக் கேட்டார். இதை கேட்டதும் அபுல் அதாஹியா கலீபா அவர்களே மாளிகை அழகாகக் காட்சி யளித்தாலும் அதில் ஒரு குறை மட்டும் உள்ளது  (ஒரு நாளைக்கு) அதன் உரிமையாளர் மரணிப்பார், மாளிகையும் அழிந்துவிடும் என்றார், உடனே கலீபா அவர்கள் எமது மாளிகை பற்றி நீர் ஒரு கவிதை இயற்றவில்லையே என்றார், அதற்கவர் இயற்றியிருக்கிறேனே எனக் கூறி விட்டு;
கவிதை
வான் முட்டும் மாளிகைகளின் நிழல்களுக்கு கீழ் உன் இஷ்டம் போல் நிம்மதியாக வாழ்ந்திடு.
இதைக் கேட்ட கலீபா மேலும் பாடுவீர் என்றார். உடனே கவிஞர்;
காலையிலும் மாலையிலும் உன் விருப்பம் போல் அனைத்தும் உனக்கு வழங்கப்படும்.
கலீபா மேலும் பாடுவீர் என்றார். உடனே கவிஞர்;
(ஆனால்) மரண அவஸ்தையில் ஆத்மாக்கள் அவதிப்படும் நேரத்தில் நீ வெறும் ஏமாற்றத்தில் இருந்ததை உறுதிசெய்து கொள்வாய்.

இஸ்லாமிய வரலாற்றில் பதிவாகியுள்ள இரு நகரங்களான தூஸ் அல்லது தர்தூஸ் ஆகிய நகரொன்றில் மரண அவஸ்தையில் இருந்த கலீபா மஃமூன், தன்னுடைய படையினருக்கு (அரண்மனைக்கு வெளியே) அணிவகுதிருக்குமாறு கட்டளையிட்டார், பிறகு நாவன்மையால் எவரையும் கவரக் கூடியவரும் புதுவழிக்காரரு மான கலீபா அவர்கள் தன்னை வெளியே எடுத்துச் செல்லுமாறு பணிந்தார், படைத் தளபதி களும், அமைச்சர்களும், இளவரசர்களும் வெளியில் காத்திருக்க, தனது  தலையை வானத்தின் பால் உயர்த்தி “அழியாத ஆட்சியில் (வீற்று) இருப்பவனே!, ஆட்சியை இழந்தவனுக்கு அருள்பாளிப்பாயாக”என்று அழுது புலம்பினார்.

கவிதை
பலசாலிகள் காவலிருக்க மலைச் சிகரங்களில் அவர்கள் இரவைக் கழித்தார்கள். (இறுதியில்) அச்சிகரங்கள் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
அரண்மனைகளில் மரியாதையாக இருந்த பிறகு அவர்கள் புதைகுழிகளுக்கே சென்று விட்டார்கள். எவ்வளவு மோசமான புதைகுழி?!!

உலகத்தையோ, மனிதனின் மேலதிக தேவை களையோ பெற்றுக் கொள்வது ஒரு சுலபமான விடயம். நேரத்தை பாதுகாப்பதிலும், மார்க்க அறிவைத் தேடுவதிலும், அல்லாஹ்வை அஞ்சுவ திலும், அசட்டையாக இருக்கும் பெரும்பாலன மனிதர்களைப் பார்தீர்களா?, அவர்கள் ஒரு  ஆடை அணிவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்! அதற்காக பல மணி நேரங்களைக் கழித்து விடுகிறார்கள், சிகை அழங்காரத்துக்கு ஒரு மணி நேரம், கண்ணாடிக்கு முன்னால் ஒரு மணி நேரம், ஆடை அணிந்து முடிய ஒரு மணி நேரம், “குத்ரா”  தலைப் போர்வையை ஸ்திரிக் செய்வதற்கு ஒரு மணி நேரம், மணம் பூசிக் கொள்ள ஒரு மணி நேரம், அவனுடைய பகல் முழுவதும் அவ்வாறே கழிந்து விடுகிறது. மனிதா உனது ஆத்மாவுக்கு என்ன செய்தாய், அதற்கு என்ன வழங்கினாய்? 

உமர் (ரலி) அவர்கள் கிழிந்த போர்வையை அணிந்து கொண்டு சென்றார்கள்  ஆனாலும் உமர் உமர் தான் (மாற்றமில்லை), ஆட்சி பீடத்திலி ருக்கும் ஓரோம பாரஸீக மண்ணர்கள் (கூட) அவர்களைப் பார்த்து நடுங்கினார்கள். அபூ பக்கர் (ரலி) அவர்கள் தங்களுடைய பாதணியை தாமாகவே தைய்த்துக் கொண்டார்கள், இதற்கும் மேலாக  உலகத்தாருக்கே இறைத்தூதராக அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் சென்றார்கள் அவர்கள் தாம் அணிந்திருக்கும் ஆடைகளைஅவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை.மாறாக அவர்களுடைய ஆத்மாக்களைப் பராமரித்தார்கள்.

ஆனால் நாமோ எங்களுடைய இதயங்களைத் தகர்த்து விட்டு வீடுகளைப் பராமரித்துக் கொண்டிருக்கிறோம், ஆத்மாக்களை  அசிங்கப் படுத்திக் கொண்டு  ஆடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய நிலைமை களை அல்லாஹ்விடமே முறையிட வேண்டி யுள்ளது. ஒரு மனிதனுடைய நன்மைகளும் பாவங்களாக மாரி (மெய்) மறந்திருந்தால் அவனுடைய இதயம் எப்போது அவனை நல்வழிப்படுத்தும்? (மனிதா!) நீ எப்போது நேர்வழி பெறப் போகிறாய், எப்போது அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாய்? 
 
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு "ஹவாஸின்" குலத்தாரின் செல்வத்தை (போரின்றி வெற்றிப் பரிசாக) அளித்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) சில குறைஷியருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானர்கள். அப்போது அன்சாரிகளில் சிலர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக் கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டு விடுகின்றார்களே!" என்று (கவலையுடன்) சொன்னார்கள். அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப் பட்ட தோலாலான ஒரு கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்கள் ஒன்று கூடியதும் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்க, அன்சாரிகளிலிருந்த விவரமானவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் கருத்துடைய (தலை)வர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர் தாம் "அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷி களின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, நம்மை விட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!" என்று பேசிக்கொண்டனர்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக இஸ்லாத்தில் அசையாத நம்பிக்கையையும் ஒட்டுறவையும் ஏற்படுத்தி) அவர்களது உள்ளங்க ளுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலகச்செல்வங்களை எடுத்துக்கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத் தூதரையே கொண்டுசெல்வதை விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்" என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டு செல்வதையே) விரும்பு கிறோம்" என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "விரைவில் (உங்களை விடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள்.ஆகவே,அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமை யாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப் பரிசான "அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்" என்று சொன்னார்கள். அதற்கு அன்சாரிகள், "நாங்கள் மொறுமையாக இருப்போம்" என்று சொன்னார்கள். நூல் புகாரி

(ஆகவே நான் கூறுகின்றேன்) உலக (இலாப)த்தை பெற்றுக் கொள்வது மிகவும் சுலமான விடயம், ஆனால் மார்க்கத்தை விளங்கிக்கொள்வது (அவ்வாறு சுலபமன்று)! சிலர் உலக விவகாரங்க ளில் ஈடுபடுகின்ற காரணத்தால் பல விரிவுரைக ளையும், மார்க்கப் பாடங்களையும், அழைப்புப் பணியையும், மார்க்கத்தை விளங்குவதையும், ஏன் குர்ஆன் நபி வழி ஆகியவைகளையும் கூட ஒதுக்கி விடுகிறார்கள்.  மற்றும் சிலர் திறமை யாக வாகனம் செலுத்துவார்கள் ஆனால் அவர்களுக்கு ஸுரதுல் பாதிஹா மனனமிருக்காது, ஸுஜூதுஸ் ஸஹ்வு என்றால் என்னவென்று அறிந்து வைத்திருக்க மாட்டார்கள். வேறு சிலர் பல குடியிருப்புக்களை நிர்மாணிப்பார்கள், குடைவு களை ஏற்படுத்தி பாலங்கள் கட்டுவார்கள், இயந்திரவியலில் தனித்துவம் பெற்றிருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு பிரச்சாரப் பணியைப் பற்றியோ, இறைத்தூதைப் பற்றியோ, நபி வழியைப் பற்றியோ எதுவும் தெறிந்திருக்காது. இது ஒரு பெரிய குறைபாடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்;
 قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ   [يونس:58].

“அல்லாஹ்வின் அருளிலும், அன்பிலுமே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். அவர்கள் திரட்டுவதை விட இது சிறந்தது” என்று கூறுவீராக! யூனுஸ் 58.

இம்மை மறுமை பற்றிய நான்கு ஸஹீஹான ஹதீஸ்களை இங்கு அறியத் தருகிறேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இந்த உலகம் அல்லாஹ்விடத்தில் ஒரு கொசுவின் இறக்கைக்கு நிகராக இருக்குமாயின், அதிலுள்ள எந்த இறை மறுப்பாளனுக்கும் ஒரு லீட்டர் தண்ணீர் கூட புகட்டியிருக்க மாட்டான்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
سُبْحَانَ اللهِ،وَالْحَمْدُلِلَّهِ،وَلاَإِلَهَ إِلاَّ اللهُ،وَاللهُ أَكْبَرُ

என்று நான் கூறுவது சூரியன் உதயமாகும் இவ்வுலகத்தை விட எனக்கு மிகவும் பிரியமானதாகும் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)


سُبْحَانَ اللهِالْعَظِيْم ِوَبِحَمْدِهِ

என்று கூறினால் சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் என் மீது அதிகமாக உள்ளன. ஆகவே நான் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளக் கூடிய ஒரு விஷயத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள் என வேண்டினார். அதற்கு ரஸுல் (ஸல்) அவர்கள், உமது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வின் திக்ரிலே திளைத்திருக்கட்டும் எனப் பகர்ந்தார்கள். நூல் திர்மிதி அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் பிஷ்ர் (ரலி).
இவை தான் அழைப்புப்பணியும், அழைப்பாளர் களும், எதிர் நோக்கும் தடைகளாகும், இந்த மார்க்கத்தை அனைத்து மக்களுக்கும் பரப்பு வதற்கும், வெற்றி பெறச் செய்யவும், அல்லாஹ் எங்களுக்கும், அழைப்பாளர்களுக்கும் உதவி புரிவானாக.