ஈமானின் அடிப்படைகள்

லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்

اسم المادة: أصول الإيمان


تأليف: محمد أسامة بن نور الحمزة


الناشر: المكتب التعاوني للدعوة وتوعية الجاليات بالربوة


نبذة مختصرة: رسالة مختصرة مُترجمة إلى اللغة التاميلية تحتوي على المباحث التالية: • الدين الإسلامي • أركان الإسلام • أسس العقيدة الإسلامية • الإيمان بالله تعالى • الإيمان بالملائكة • الإيمان بالكتب • الإيمان بالرسل • الإيمان باليوم الآخر • الإيمان بالقدر • أهداف العقيدة الإسلامية.


ஈமானின் அடிப்படைகள்

 

أصول الإيمان


< தமிழ் >
تاميلية
        
N.H.M.உஸாமா

اسم المؤلف محمد أسامة بن نور الحمزة



Translator's name:

Reviser's name: மௌலவி முஹம்மத் அமீன்
ترجمة:
مراجعة:محمد أمين

 

 ஈமானின் அடிப்படைகள்e


ஈமானின் அடிப்படைகள்
) Tamil –தமிழ் – ( التاميلي

N.H.M.உஸாமா
أصول الإيمان
محمد أسامة بن نور الحمزة

 

 

 

 

 

 

 


ஈமானின் அடிப்படைகள்
1.    அல்லாஹ்வை ஈமான் கொள்ளல்.
2.    மலக்குகளை ஈமான் கொள்ளல்.
3.    வேதங்களை ஈமான் கொள்ளல்.
4.    தூதர்களை ஈமான் கொள்ளல்.
5.    இறுதி நாளை ஈமான் கொள்ளல்.
6.    விதியை ஈமான் கொள்ளல்.

1)    அல்லாஹ்வை ஈமான் கொள்ளல்.
அல்லாஹ்வை ஈமான் கொள்ளல் – நம்புவது என்றால் நிச்சயமாக அல்லாஹ் தான் வணக்கத்திற்குத்தகுதியான, உண்மையான இறைவன் என நம்புவதாகும். ஏனெனில் அவன் தான் அடியார்களைப் படைத்தவன், அவர்களுக்கு உபகாரம் செய்பவன், அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குபவன், அவர்களின் இரகசியங்களையும் பரகசியங் களையும் அறிபவன், அவர்களில் கட்டுப்பட்டு நடப்பவர் களுக்குக் கூலி வழங்கவும், மாறு செய்பவர்களுக்குத் தண்டனை வழங்கவும் சக்தியுள்ளவன். இந்த வணக்கத்திற் காகத்தான் அல்லாஹ் மனிதர்களையும் ஜின்களையும் படைத்தான். இந்த வணக்கத்தைச் செய்யுமாறே அவர்களை ஏவவும் செய்தான். அல்லாஹ் கூறுகிறான்:                                            
قال الله تعالى: وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ ٥٦ مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ٥٧ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ٥٨
ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற் காகவே அன்றி வேறெதற்காகவும் நான் படைக்கவில்லை. நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டு மென்றும் நான் நாடவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும் பெரும் ஆற்றலுடையவனாகவும் வலிமை மிக்கவனாகவும் இருக்கிறான். (51:56-58)

2)    மலக்குகளை ஈமான் கொள்ளல்.
இவர்களைப் பொதுவாகவும் குறிப்பாகவும் ஈமான் கொள்ள வேண்டும். எவ்வாறெனில் ஒரு முஸ்லிம் “அல்லாஹ்வுக்கு மலக்குகள் இருக்கின்றார்கள், அவன் தன்னை வணங்குவ தற்காகவே அவர்களைப் படைத்துள்ளான். அவர்களில் அர்ஷைச் சுமக்கும் பொறுப்புக் கொடுக்கப் பட்டவர்கள், சுவர்க்க, நரக பாதுகாவலர்கள், அடியார்களின் செயல் களைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் எனப் பல வகையினர் இருக்கின்றனர்” என நம்ப வேண்டும்.   மேலும் குறிப்பாக ஜிப்ரீல், மீகாயீல், நரகப் பாதுகாவலர் மாலிக், சூர் ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கு இஸ்ராபீல் போன்ற, அல்லாஹ்வும் அவனது தூதரும் பெயர் குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றவர்களையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறினார்கள்: வானவர்கள் ஒளியாலும் ஜின்கள் நெருப்பின் ஜுவாலையிலிருந்தும் ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டு விட்ட மண்ணாலும் படைக்கப்பட்டுள்ளார்கள். (முஸ்லிம்)

3)    வேதங்களை ஈமான் கொள்ளல்.
அல்லாஹ் தனது உண்மையை விளக்குவதற்காகவும் தன் பால் மக்களை அழைப்பதற்காகவும் தனது நபிமார்கள், ரசூல்மார்கள் மீது வேதங்களை இறக்கி வைத்துள்ளான் எனப் பொதுவாக நம்புவது அவசியமாகும். குறிப்பாக தவ்ராத், இன்ஜீல், ஸபூர், குர்ஆன் போன்ற அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுச் சொன்னவற்றையும் நம்ப வேண்டும். திருக்குர்ஆன் தான் இவற்றில் மிகச் சிறந்ததும் இறுதியானதுமாகும். இது முந்திய வேதங்களை விட உயர்வானதும் அவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது.                 
மேலும் இது எத்தகையதென்றால், இதையும் ஆதாரப்பூர்வமான நபிவழியையுமே பின்பற்றுவதோடு எல்லாப் பிரச்சனைகளுக்குமுரிய தீர்வை இவை இரண்டிலிருந்தும் எடுத்துக் கொள்வது அனைத்து சமுதாயத்தினர் மீதும் கடமையாகும். ஏனெனில் அல்லாஹ் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஜின், மனித சமுதாயம் அனைத்திற்கும் தூதராக அனுப்பி அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவ தற்காக இந்தக் குர்ஆனையும் அவர்களுக்கு இறக்கி வைத்துள்ளான். இத்திருக்குர்ஆனை அல்லாஹ் இதயங்களிலுள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடியதா கவும் யாவற்றையும் மிகத் தெளிவாக விவரிக்கக் கூடியதாகவும் நேர்வழி காட்டக் கூடியதாகவும் அகிலத்தார்களுக்கு ஓர் அருட் கொடையாகவும் ஆக்கியுள்ளான். அல்லாஹ்  கூறுகிறான்:                                  
قال الله تعالى: وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ مُبَارَكٞ فَٱتَّبِعُوهُ وَٱتَّقُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ١٥٥
இது நாம் இறக்கி வைத்த அருள்மிக்க வேதமாகும். எனவே நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். மேலும் நீங்கள் (அவனை) அஞ்சுங்கள் (அவனால்) கிருபை செய்யப்படுவீர்கள். (6:155)

4)    தூதர்களை ஈமான் கொள்ளல்.
தூதர்களைப் பொதுவாகவும் குறிப்பாகவும் நம்புவது அவசியமாகும். நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களுக்குச் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறவும் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யவும் சத்தியத்தின்பால் அவர்களை அழைப்பதற்காகவும் தூதர்களை அனுப்பி வைத்தான். யார் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ அவர் நற்பாக்கியம் பெற்று வெற்றி அடைந்துவிட்டார். இறைத்தூதர்களில் நமது நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவரும் மிகச் சிறந்தவருமாவார்கள்.  அல்லாஹ்   கூறுகிறான்:
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ ۚ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
திண்ணமாக நாம் ஒவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ்வை வணங்குங்கள் ஷைத்தான்களை விட்டும் விலகுங்கள் என (போதிக்குமாறு) ஒரு தூதரை அனுப்பி வைத்தோம். (16:36)
அவர்களில் அல்லாஹ்வும் அவன் தூதரும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றவர்களை நாம் குறிப்பாக நம்ப வேண்டும். உதாரணமாக நூஹ் அலைஹிஸ்ஸலாம், ஹூத் அலைஹிஸ்ஸலாம், ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் பலர்.

5)    இறுதி நாளை ஈமான் கொள்ளல்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன, மரணத்திற்குப் பின்னர் ஏற்படுகின்ற அனைத்து விஷயங்களையும் நம்புவது இதில் அடங்கும். உதாரணமாக மண்ணறையின் சோதனை, அதன் வேதனை, அங்கு கிடைக்கின்ற பாக்கியம், மறுமை நாளில் ஏற்படுகின்ற அமளிகள், துன்பங்கள், தராசு, கேள்வி கணக்கு, நற்கூலி, தண்டனை போன்றனவும் மேலும் அங்கு மக்களுக்கு மத்தியில் வினைப் பட்டியலும் திறந்து காட்டப்படும். அப்போது தனது வினைப்பட்டியலை வலக்கரத்தால் வாங்குவோரும், தனது வினைப்பட்டியலை இடக்கரத்தால் அல்லது தனது முதுகுக்குப் பின்னால் வாங்குவோரும் இருப்பார்கள்;    
இன்னும் நமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர்த் தடாகத்தை நம்புவதும், சுவர்க்கம், நரகம், மூமின்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது, அவர்களிடம் அல்லாஹ் பேசுவது ஆகியவற்றையும் மற்றும் இது சம்பந்தமாக குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபி மொழியிலும் வந்துள்ள யாவற்றையும் நம்புவதும் இதில் அடங்கும். எனவே இவையனைத்தையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கிய முறைப்படி நம்புவது கடமையாகும்.

6)    விதியை ஈமான் கொள்ளல்.
இது நான்கு விடயங்களை உள்ளடக்கியிருகின்றது.
1.    அறிதல் :
நிச்சயமாக அல்லாஹ் இதுவரை நடந்தவற்றையும்  இனி நடக்கவிருக்கின்றவற்றையும் அறிந்துள்ளான். இன்னும் தனது அடியார்களின் நிலைமைகள் அனைத்தையும் அவன் அறிந்துள்ளான். இதில் எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல.
அல்லாஹ் கூறுகிறான்:
قال الله تعالى"وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم"
நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (9:115)
2.    (நிர்ணயங்களை) எழுதுதல் :
அவன் நிர்ணயித்துள்ள எல்லாவற்றையும் அவன் எழுதிவைத்துள்ளான்.  அல்லாஹ் கூறுகிறான் :
قال الله تعالى: إِنَّا نَحۡنُ نُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَنَكۡتُبُ مَا قَدَّمُواْ
وَءَاثَٰرَهُمۡۚ وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ فِيٓ إِمَامٖ مُّبِينٖ ١٢
நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம். (36:12)
3.    நாடுதல் :
செல்லுபடியாகின்ற அவனது நாட்டத்தை நம்புவது. அல்லாஹ் நாடியது நடக்கும்; அவன் நாடாதது நடக்காது.                                                  அல்லாஹ் கூறுகிறான் :
قال الله تعالى: قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَقَدۡ بَلَغَنِيَ ٱلۡكِبَرُ وَٱمۡرَأَتِي عَاقِرٞۖ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفۡعَلُ مَا يَشَآءُ ٤٠
அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைச் செய்வான். (3:40)
4.    படைத்தல் :
அனைத்துப் பொருட்களையும் அவனே படைத்துள்ளான். அவனையன்றி வேறு படைப்பாளன் யாருமில்லை. அவனைத் தவிர வேறு பரிபாலிப்பவன் எவனுமில்லை.                                                            அல்லாஹ் கூறுகிறான் :   
قال الله تعالى: ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ فَٱعۡبُدُوهُۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ ١٠٢
அவன் தான் உங்களைப் படைத்து பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அவனே. எனவே நீங்கள் அவனையே வணங்குங்கள். அவனே எல்லா வற்றிற்கும் பொறுப்பாளனாக இருக்கின்றான். (6:1௦2