ஏகத்துவக் கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்”

கலிமாவின் சிறப்பு, பொருள், விதிமுறைகள் மற்றும் அதனை செல்லத்தகாததாக்கும் காரியங்கள் பற்றிய விளக்கம்

ஏகத்துவக் கலிமா
“லா இலாஹ இல்லல்லாஹ்”
>தமிழ்-Tamil تاميلي ->


        
நூலாசிரியர்
 அப்துர் ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல் பத்ர்

முஹம்மத் மக்தூம் (இஹ்ஸானி)
மொழிபெயர்த்தவர்
முஹம்மத் அமீன்
மீயாய்வு செய்தவர்
 
كلمة التوحيد" لاإله إلا الله"  فضائلها و مدلولها وشروطها ونواقضها

        

اسم المؤلف
الشيخ عبد الرزاق بن عبد المحسن البدر


ترجمة:
 محمد مخدوم عبد الجبار
مراجعة:محمد أمين

 
كلمة التوحيد" لاإله إلا الله"
فضائلها ومدلولها وشروطها ونواقضها
ஏகத்துவக் கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்”
அதன் சிறப்பு, பொருள், விதிமுறைகள் மற்றும் அதனை செல்லத்தகாததாக்கும் காரியங்களும்
ஆசிரியர்
அப்துர் ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல் பத்ர்
தமிழாக்கம்
முஹம்மத் மக்தூம் (இஹ்ஸானி)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்

முன்னுரை
அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப் படுத்தும் (நாயனான) அல்லாஹ் வுக்கே அனைத்து புகழும் சொந்தம். வணங்கி, வழிப்படத் தகுதி வாய்ந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும், தூதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ் அன்னார் மீது என்றென்றும் சலவாத்தும் சலாமும் சொல்லி அருள் வானாக.
இந்த சிறிய நூல் அனைவரும் பலன் பெரும் வகையில் கலிமாக்களில் மிகவும் சிறந்ததும், மேன்மையும், மகத்துவமும் மிக்கதும், மிகவும் பயனுள்ளதுமான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவின் சிறப்புக்கள், பொருள், விதிமுறைகள் மற்றும் அதனை செல்லத் தகாததாக்கும் காரியங்களை பொதிந்துள்ளது.
இது “பிக்ஹுல் அத்இய்யாஹ்” என்ற எனது நூலில் இருந்து எடுத்து தனியாக எழுதப் பட்டுள்ளது. அனைவருக்கும் பலன் கிட்டும் வகையில் இதனை இவ்வாறு தனியாக எழுதுமாறு சிலர் என்னிடத்தில் வலியுறுத்தியதை அடுத்தே இவ்வாறு செய்தேன்.
இறைவன் இந்த நூலின் மூலம் அவனது அனுகூலத்தை அதிகப் படுத்துவானாக, அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு ஹிதாயத்தின் வாசலாகவும் அதனை அமைத்திடுவானாக, மேலும் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், சித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்கள் போன்றோருக்கு அவன் காட்டிய நேரிய வழியை எமக்கும் காட்டுவானாக, இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன். அல்லாஹ் எமது நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் அனைவரின் மீதும் சலவாத்தும், சலாமும் சொல்லி அருள்வானாக.
அப்துர் ரஸ்ஸாக் அப்துல் முஹ்சின் அல் பத்ர்
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ கலிமாவின் சிறப்புக்கள்
இந்த சங்கை மிக்க கலிமாவுக்கு மேன்மையான சிறப்புக்களும், உயர்ந்த நன்மைகளும், பெரும் வெகுமதிகளும் இருக்கின்றன. அவற்றை யாராலும் கணக்கிட முடியாது. அது ஏனைய அனைத்து கலிமாக்களை விடவும் மிகவும் சிறந்ததும், மேன்மையும், மகத்துவமும் மிக்கதும், மிகவும் பயனுள்ளதுமாகும். இதற்காகவே படைப்பினங்கள் அனைத்தும் படைக்கப் பட்டன. நபிமார்கள் அனுப்பப் பட்டனர். வேதங்கள் இறக்கப் பட்டன. இதன் காரணமாகவே மனிதர்கள் முஃமின்கள், காபிர்கள் என இரு பிரிவாக பிரிந்தனர். மேலும் இதன் மூலமே பாக்கியசாலிகள் சுவர்க்கம் செல்கின்றனர். துர்பாக்கிய சாலிகள் நரகம் செல்கின்றனர். இந்த கலிமா அறுந்து விடாத கெட்டியான கயிறு ஆகும். மேலும் இறை அச்சத்தின் கலிமாவுமாகும். அது மார்கத்தின் உயர்ந்த தூண் ஆகும். மேலும் ஈமானின் கிளைகளில் மிகவும் முக்கியமானதாகும். அது சுவர்கத்தை கொண்டு வெற்றி பெறவும், நரக விடுதலை பெறவும் காரணமாக அமைகிறது. மேலும் இந்த கலிமா சாட்சி பிரகடனமாகவும் விளங்குகிறது. பாக்கியமிக்க வீட்டின் திறவுகோலாகவும் விளங்குகிறது. இந்த கலிமா மார்கத்தின் முதன்மை மிக்கதும், அடிப்படை யானதும், உயர்வானதுமாகும்.  மார்க்கத்தில் அதற்குரிய சிறப்பும், அந்தஸ்தும் வர்ணனையாளர்கள் வர்ணிப்பதை விட மேன்மை யானதாகும். நாம் தெரிந்து வைத்திருப்பதை விட மிகவும் உயர்ந்ததாகும்.
شَهِدَ اللَّهُ أَنَّهُ لا إِلَهَ إِلا هُوَ وَالْمَلائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لا إِلَهَ إِلا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (سورة آل عمران 18)
“(நபியே!) அல்லாஹ் சாட்சி கூறுகிறான். “நிச்சயமாக அவன்- அவனை தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை. (அவ்வாறே) மலக்குகளும் வேத ஞானம்பெற்ற) கல்விமான்களும் (சாட்சி கூறுகின்றனர்) நீதத்தை நிலை நிறுத்தியவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவனைத் தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை; (அவனே யாவரையும்) மிகைத்தவன், தீர்க்க அறிவுடயோன்.” (அல் குர்ஆன் , 3 : 18)
அல் குர்ஆனில் அல்லாஹ் இந்த கலிமாவை அவனது தூதர்களின் அழைப்பு பணி மற்றும் தூதுவத்தின் அடிப்படையாகவும், சாராம்சமாகவும் அமைத்து இருப்பது அதன் சிறப்பை மேலும் உணர்த்துகிறது.
وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ ﴿٢٥﴾
(நபியே! உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும் “நிச்சயமாக (வணக்கத்துக் குரிய நாயன் என்னை தவிர வேறு எவருமில்லை. எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.” என்று நாம் தஹீ அறிவிக்காமல் இல்லை. அல் குர்ஆன் 21;25.
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّـهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ فَمِنْهُم مَّنْ هَدَى اللَّـهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ ۚ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ ﴿٣٦﴾
ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், திட்டமாக ஒரு தூதரை அனுப்பி யிருக்கிறோம்.  (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். எனவே அவர்களில் அல்லாஹ் நேர்வழி செலுத்தியோரும் இருக்கிறார்கள். இன்னும் எவர் மீது வழிகேடு விதியாக்கப் பட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப் திரிந்து, (அத்தூதர்களை) பொய்யாக்கியவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (அல் குர்ஆன் 16 : 36)
يُنَزِّلُ الْمَلَائِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَىٰ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ أَنْ أَنذِرُوا أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا أَنَا فَاتَّقُونِ ﴿٢﴾
அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து) “நிச்சயமாக (வணக்கத்திற் குரிய) நாயன், என்னைத் தவிர வேறு யாருமில்லை, ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற கட்டளையினால் வஹியை கொண்டு (மலக்குகளை) இறக்கி வைக்கிறான். (அல் குர்ஆன் 16 : 2)
இந்த சூராவில் தனது அருட் கொடிகளை எடுத்துக் கூறும் இறைவன் ஏகத்துத்தின் பால் வழி காட்டியமையை முதன்மை படுத்தி கூறியுள்ளான். இது இந்த கலிமாவில் அந்தஸ்தை எமக்கு மேலும் உணர்த்துகிறது.
اَلَمْ تَرَوْا اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَاَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهٗ ظَاهِرَةً وَّبَاطِنَةً ‌ؕ وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّلَا هُدًى وَّلَا كِتٰبٍ مُّنِيْرٍ‏
மனிதர்களே! வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும், அவன் தன் அருட் கொடைகளை (அவற்றின்) வெளிப்படையான  வற்றையும், மறைவானவற்றையும் உங்கள் மீது நிறைவாக்கி இருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (அல் குர்ஆன் 31 : 20)
என்ற இறை வசனத்தில் சொல்லப் பட்டுள்ள அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு  முஜாஹித் (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என விளக்கம் எழுதி உள்ளார்கள்.
 “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை அறிமுகப் படுத்தி உள்ளமை அல்லாஹ் தனது அடியார்களுக்கு வழங்கியுள்ள அருட் கொடைகளில் மிகவும் உயரிய அருட்கொடை ஆகும். இது தவிர வேறு பெரிய அருட்கொடையொன்று  இல்லை என சுப்யான் அஸ் சவ்ரி (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இறைவன் இந்த கலிமாவை தனது அருள் மறையில் பின் வருமாறு வர்ணித்து உள்ளமை அதன் சிறப்பை எமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

•    நல்வாக்கியம்
اَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِى السَّمَآءِۙ‏     تُؤْتِىْۤ اُكُلَهَا كُلَّ حِيْنٍۢ بِاِذْنِ رَبِّهَا‌ؕ وَيَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏

நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறியுள்ளான் என்பதை (நபியே!)  நீர் பார்க்கவில்லையா? அது நல்ல மரத்தைப் போன்றது. அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்தும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கிறது.

அது தன்னுடைய இரட்சகனின் அனுமதி கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.மேலும் மக்களுக்கு - அவர்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான். (அல் குர்ஆன் 14 : 24, 25)

•    உறுதியான சொல்
  يُثَبِّتُ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ ۚ وَيُضِلُّ اللّٰهُ الظّٰلِمِيْنَ‌ ۙ وَيَفْعَلُ اللّٰهُ مَا يَشَآءُ‏
ஈமான் கொண்டுள்ளார்களே, அத்தகையோரை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக்காரர்களை (அவர்களின் பாவத்தின் காரணமாக, அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் நாடியதை செய்கின்றான்.  (அல் குர்ஆன் 14 : 27)

•    உடன்படிக்கை
   لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا‌ ۘ‏

அர்ரஹ்மானிடம் உறுதி மொழி பெற்றவர்களை தவிர, எவரும் ஷபாஅத்திற்கு - மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள். (அல் குர்ஆன் 19 : 87)

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள உடன் படிக்கை என்பது  “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை கொண்டு சாட்சி பிரகடனம் செய்து கொள்வதோடு அனைத்து வல்லமையும், சக்தியும் இறைவனுக்கே உரியது என முழுமையாக நம்புவது என இப்னு அப்பாஸ் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

•    அறுந்து விடாத கெட்டியான கயிறு

 قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ‌ۚ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْۢ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى

வழிகேட்டிலிருந்து நேர்வழி திட்டமாக தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின்  மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார். (அல் குர்ஆன் 2 : 256)

 وَمَنْ يُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَى اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى‌ؕ
எவர் – அவர் நன்மை செய்தவராக இருக்கும் நிலையில் (தனது காரியத்தை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் பக்கம் முகத்தை திருப்புகிறாரோ), அவர் நிச்சயமாக மிக மிக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டார். சகல காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது. (அல் குர்ஆன் 31 : 22)

•    நிலையான வாக்கு
وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِىْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَۙ‏ اِلَّا الَّذِىْ فَطَرَنِىْ فَاِنَّهٗ سَيَهْدِيْنِ‏ وَ جَعَلَهَا كَلِمَةًۢ بَاقِيَةً فِىْ عَقِبِهٖ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
 மேலும் நபியே! இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை  விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்; “எவன் என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). ஆகவே நிச்சயமாக அவனே எனக்கு நேர்வழி காட்டுவான்” (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக). இன்னும், தம் சந்ததியில் நிலைத்திருக்கம் வாக்காக ஆக்கி விட்டார். அக்கூற்றின் பக்கம் அவர்கள் திரும்புவ தற்காகவே  (அவலவறுசெய்தார்) அல் குர்ஆன் 43 : 26 , 27 , 28)
•    தக்வாவுடைய வாக்கியம்
  اِذْ جَعَلَ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ قُلُوْبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَـاهِلِيَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلٰى رَسُوْلِهٖ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰى وَ كَانُوْۤا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا‌ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏

நிராகரித்தோர் தங்களுடைய இதயங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட  வேண்டு மென்ற) வைராக்கியத்தை – அறியாமை காலத்து  மூடத்தனமான வைராக்கியத்தை - உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், விசுவாசம் கொண்டோர் மீதும் தன் அமைதியை இறக்கி வைத்தான். அவர்களுக்கு பயபக்தியூட்டும் தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான். அவர்கள் அதற்கு மிகவும் தகுதியுடையவர்களா கவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள். அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்த வனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 48:26)

•    இறுதியாக பேசப் படும் நேர்மையான சொல்
يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا‏
ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து - இன்னும் சரியானதை கூறியிருந்தாரோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேச மாட்டார்கள். அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார். (அல் குர்ஆன் 78 : 38)

இந்த ஆயத்திற்கு விளக்கம் எழுதியுள்ள இப்னு அப்பாஸ் (ரழி யல்லாஹு அன்ஹு)  “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை கொண்டு சாட்சி பிரகடனம் செய்து கொள்வதன் மூலம் இறைவன் அனுமதி வழங்கியவர்கள் என குறிப்பிட்டுள்ளார்கள்.

நேர்மையான வார்த்தை என்பது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமா ஆகும் என இக்ரிமா (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

•    உண்மையான அழைப்பு
لَهُ دَعْوَةُ الْحَقِّ ۖ وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَيْءٍ إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهِ ۚ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ  ‏

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டு மென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளிக் குடிக்கம் வரையில்) அது வாயை அடைந்து விடாது - மேலும் காஃபிர்களின் பிரார்த்தனை (இத்தகைய) வழி கேட்டில் அல்லாது வேறில்லை.  (அல் குர்ஆன் 13 : 14)
•    உண்மையான இணைப்பு
முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடிய உண்மையான இணைப்புப் பாலமாகவும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமா விளங்குகிறது. அதற்காகவே ஒன்றிணைகின்ற னர். அதற்காவே எதிரிகளை எதிர்த்து போராடு கின்றனர். அதற்காகவே நேசிக்கின்றனர். மேலும் அதற்காகவே வெறுக்கின்றனர். அதன் காரணமாகவே முஸ்லிம் சமூகம் அதன் சில பகுதிகள் வேறு சில பகுதிகளை உறுதிப் படுத்தும் ஒரே உடம்பைப் போன்றும், ஒரே கட்டிடத்தை போன்றும் மாறியது.
அல்லாமா முஹம்மத் அல் அமீன் அஷ் ஷன்கீதி அவர்கள் தங்களது “அள் வா உள் பயான்” (أضواء البيان) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள் :

முடிவில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ இணைப்பு பிளவு பட்டவர்களை ஒன்றிணைத்தது. கருத்து முரண்பாடு கொண்டவர்களை ஒன்றுமைப் படுத்தியது.

முஸ்லிம் சமூகம் முழுவதையும் ஒரு பகுதி மற்ற பகுதியை பலப் படுத்தும் ஒரே உடம்பைப் போன்றும், ஒரே கட்டிடத்தைப் போன்றும் ஆக்கியுள்ள இந்த உணமையான ஏகத்துவத்தின் இணைப்பானது, அல்லாஹ்வின் அர்ஷை சுமந்துள்ள வானவர்கள், மற்றும் அதனை சூழ உள்ள வானவர்களின் உள்ளங்களில் இறக்க சிந்தையை ஏற்படுத்தி, எத்தனை வேறு பாடுகள் மற்றும் பாகுபாடுகள் இருந்த போதிலும் மனிதர்கள் யாவருக்காகவும் துஆ செய்யத் தூண்டியமையை நீர் அவதானிக்கவில்லையா?

இறைவன் தனது அருள் மறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான் ,
الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ ، رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ ، وَقِهِمُ السَّيِّئَاتِ ۚ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ ۚ وَذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்க ளுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே நீ ரஹ்மத்தாலும் ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்  எனவே பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின் பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
 “எங்கள் இறைவனே நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் (ஈமான் கொண்டு நற்செயல் புரிந்து) யார் நல்லவராகி விட்டாரோ அவர்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக நிச்சயமாக நீ தான்  (யாவரையும்) . மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
“இன்னும், அவர்களை (சகல) தீமைகளிலிருந்து காப்பாயாக. அ ந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்  .  (40 : 7 , 8 , 9)
அர்ஷை சுமந்து கொண்டிருக்கும் வானவர்கள், அதைச் சுற்றியுள்ள வானவர்கள் மற்றும் உலகில் படைக்கப் பட்டுள்ள மனிதர்கள் இடையே மேற்கண்டவாறு சிறந்த பிரார்த்தனை ஒன்றை செய்யும் அளவுக்கு இணைப்பை ஏற்படுத்தியது இறை விசுவாசமேயாகும் எனவும் அல்லாமா முஹம்மத் அல் அமீன் அஷ் ஷன்கீதி அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.
ஆக மொத்தத்தில் உலக மனிதர்களில் ஒருவரை மற்றவருடன் இணைக்கக் கூடியதும், வானுலகத்தில் வசிக்கும் மலக்குமார்களையும் இணைக்கக் கூடிய இணைப்புப் பாலமாக “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ கலிமா விளங்குகிறது என கூறி அல்லாமா அஷ் ஷன்கீதி இது தொடர்ப்பில் அவரின் கருத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். “அள் வா உள் பயான்” 3 : 447 , 448
1.    நன்மைகளில் மிகச் சிறந்தது
‏   مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ خَيْرٌ مِنْهَا وَهُمْ مِنْ فَزَعٍ يَوْمَئِذٍ آمِنُونَ

 (அந் நாளில்)  எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ அவருக்கு அதைவிட மேலானது உண்டு மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள் . (27 : 89)
இந்த இறை வசனத்தில் கூறப்பட்டுள்ள “அல் ஹஸனாஹ்” நன்மை என்பது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், அபூ ஹுரைராஹ் (ரழி யல்லாஹு அன்ஹும்) உள்ளிட்ட பல சஹாபாக்கள் வாயிலாக அறிவிக்கப் பட்டுள்ள செய்திகள் உறுதிப் படுத்துகின்றன.
மேட்குறிப்பிடப் பட்டுள்ள இறை வசனத்திற்கு விளக்கம் எழுதியுள்ள இக்ரிமா (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள், “அல் ஹஸனாஹ்” நன்மை என்பது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதாகும்,  மறுமையில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவுடன் வருகின்றவர்களுக்கு அதை விட சிறந்தது கிடைக்கும், ஏனெனில் உலகில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை விட வேறொரு சிறந்த நன்மை கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
“முஸ்னத்” உள்ளிட்ட சில நூல்களில் பின்வருமாறு வந்துள்ளது ,
அபூ தர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள் : நான் இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்களிடம் “என்னை சுவர்கத்தின் பால் நெருக்கமாக்கக் கூடியதும், நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடியதுமான ஒரு அமலை எனக்கு கற்றுத் தாருங்கள் என கேட்டேன்”, அதற்கு அவர்கள், “நீர் ஒரு பாவத்தை செய்து விட்டால், அதற்கு பதிலாக ஒரு நன்மையை செய்திடுவீராக, ஏனெனில் ஒரு நன்மை இறைவனிடத்தில் அதே போன்ற பத்து மடங்கு நன்மையை பெற்றுத் தரும்” என பதில் அளித்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதும் நன்மைகளில் உள்ளதா என வினவினேன், அதற்கு அவர்கள் “ஆம், அது நன்மையான காரியங்களில் மிகவும் சிறந்தது” என பதில் அளித்தார்கள். (அல் முஸ்னத் 169 / 5 , அத் துஆ இலக்கம் : 1498)