துஆவின் ஒழுங்குகளும் விதி முறைகளும்

துஆ ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டும். அதன் சிறப்புகள், ஒழுங்கு முறைகள், ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள், நேரங்கள், இடங்கள் என்பது பற்றிய விளக்கம்.

اسم الكتاب: آداب وشروط الدعاء


تأليف: أحمد مبارك محمد مخدوم
نبذة مختصرة: كتاب باللغة التاميلية يتحدث عن آداب وشروط الدعاء وفيه :
1. الدعاء عبادة
2. ينبغي أن يكون الدعاء من الله فقط
3. فضائل الدعاء
4. شروط الدعاء وآدبه للقبول
5. أوقات مهمة لقبول الدعاء

துஆவின் ஒழுங்குகளும் விதி முறைகளும்


 
] Tamil – தமிழ் –[ تاميلي 
மௌலவி எம்.எம்.ஏ.முபாரக் கபூரி B.A. (மதனி)
(முன்னால் அதிபர், கபூரிய்யா அரபிக் கல்லூரி மஹரகம)
பொதுச்செயளாலர், அகில இலங்கை ஜாமியத்துல் உலமா






2014 - 1436
 
 
آداب وشروط الدعاء
« باللغة التاميلية »






الشيخ أحمد مبارك محمد مخدوم









2014 - 1436
 
 
துஆ
வின்
ஒழுங்குகளும் விதி முறைகளும்

மௌலவி எம்.எம்.ஏ.முபாரக் கபூரி. (மதனி)
(முன்னால் அதிபர், கபூரிய்யா அரபிக் கல்லூரி மஹரகம)
பொதுச்செயளாலர், அகில இலங்கை ஜாமியத்துல் உலமா







பொருளடக்கம்
1.    முன்னுரை
2.    துஆ ஒரு வணக்கம்
3.    துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப் படுவதில்லை?
4.    வசீலாதேடுவதின் சட்டங்கள்
5.    துஆக்கள் அங்கீகரிக்கப் படும் சந்தர்ப்பங்கள்
6.    இவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப் படுகின்றன
7.    தனக்கு கேடாக துஆ கேட்கக் கூடாது
8.    திக்ரும் துஆவும்
9.    துஆ கேட்பதன் ஒழுங்கு
10. தொழுகையும் அதன் பின்னுள்ள துஆக்களும்
11. மஃஸூராத்துக்களை ஓதுவோம்
12. தொழுகையின் பின் கூட்டு துஆ
13. கூட்டு துஆவுக்கு காட்டப்படும் ஆதாரங்கள்
14. ஜம்மியத்துல் உலமாக்களின் தீர்ப்புகள்

முன்னுரை
உலகைப் படைத்துப போசிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவுக்கே சரவ புகழும் உரித்துடையது. ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
இந்த நூலை தொகுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் என்னை தூண்டிக் கொண்டே இருந்தன. தெரிந்ததை சொல்லிக் கொடுக்காத குற்றத்திற்கு ஆளாவேனோ என்றொரு பயம். தெளிவில்லாமல் மக்கள்  பிரச்சினைப் படும் போது எல்லோருட னும் சேர்ந்து மௌனியாக இருந்த குற்றம் ஏற்படும் என்ற அச்சம் மறுபுறம். இது ஒரு சில்லறைப் பிரச்சினை தானே என்று சொல்லி ஒதுங்கிய குற்ற உணர்வு ஆட்கொள்ளுமோ என்ற மன உளைச்சல். இவையனைத்தும் தான் துஆ - ஒழுங்குகளும் விதிமுறைகளும் எனும் இந்நூலை தொகுக்க என்னை தூண்டின.
என் முன்னே நிழலாடிய பர்ளுத் தொழுகையின் பின்னால் இமாம் துஆ ஓத மஃமூம்கள் ஆமீன் சொல்வது என்ற பிரச்சினையே இந் நூலின் மூலக் கருவாகும். பிரச்சினை எங்கோ இருக்க வேறெங்கோ  அது திசை திருப்பப் பட்டுள்ளதை காண்கிறோம். ‘தொழுகைக்கு பிறகு இமாம்  துஆ ஓத மஃமூம்கள் ஆமீன் சொல்லும் நடைமுறை ஸுன்னத்தான முறை தானா?  இமாம்கள்  ஸுன்னத் என்று கூறினார்களா?’  என்பதே பிரச்சினை. அதுவன்றி பர்ளான தொழுகைக்கு பின்னால் ஒவ்வொருவரும் தனியாக துஆவில் ஈடுபடுவதை மறுப்பதோ, அறவே கூடாது என்று கூறுவதோ நோக்கமல்ல.
இது பற்றி தனியே எழுதுவதை விடவும், துஆவோடு சம்பந்தப் பட்ட சகல விடயங்களையும் தொகுப்பதே எனது தூய எண்ணமாகும். எனவே “தூஆ - ஒழுங்குகளும் விதி முறைகளும்” என இத்தொகுப்புக்கு பெயரிட்டேன். இவ் விடயமாக எத்தனையோ நூல்கள், ஹதீஸ் கிரந்தங்களை அதன் விரிவுரை களை மேற்படி  விடயமாக வழங்கப் பட்ட தீர்ப்புகளை, கடந்த கால, நவீன கால அறிஞர்களது கருத்துக்கள் என்பவற்றை பார்வையிட அல்லாஹ் எனக்கு அருள் புரிந்தான். அல்ஹம்து லில்லாஹ்.
அவனது பேரருளின் காரணமாகவே இத்தொகுப்பை வெளியிட முடிந்தது. ஏற்கெனவே பல நூல்களை எழுத எனக்கு நல்லருள் புரிந்த அல்லாஹ் இதனையும் தொகுத்தெழுத வாய்ப்ப ளித்தமைக்காக பல்லாயிரம் விடுத்தம் அவனை போற்றுகின்றேன். அல்ஹம்து லில்லாஹ்.
இதனை சமூகத்துக்கு சமர்ப்பிப்பதன் மூலம் துஆ சம்பந்தமான ஒரு தெளிவு  பிறக்க வேண்டுமென விரும்புகின்றேன். சரியானதை தெளிவாக தெரிந்து கொள்ள அல்லாஹ் அருள் புரிய வேண்டு மென துஆ கேட்கின்றேன். சமூகச் சீர் குழைவுக்கும் ஒற்றுமை யீனத்திற்கும் வழிவகுக்கும் ஒன்றாக இது அமையாதிருக்க வேண்டுமென ஆசிக்கின்றேன். பயனுள்ள ஒரு அறிவை விட்டுச் சென்றவனாக என்னை அங்கீகரிக்க வேண்டுகின்றேன். செய்யும் அமலை தெளிவுடன் செய்வோம். தெரியாததை கேட்டு தெரிவோம். சமுதாய ஒற்றுமையை கருத்திற் கொண்டு பாடுபடுவோம்.  பின்வரும் அல் குர்ஆனின் வசனங்கள் எமது உள்ளத்தில் பதிந்திருக்கட்டுமாக!
وَالعَصرِ إِنَّ الإِنسٰنَ لَفى خُسرٍ إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ
وَتَواصَوا بِالحَقِّ وَتَوَاصَوْا بِٱلصَّبْرِ
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் (தன்  ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நட்டத்தி (ன் வழியி)ல் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளை செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களை) சகித்துப் கொள்ளுமாறும், ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும் வந்தார்களோ அவர்களை தவிர ( இவர்கள் நஷ்டமடையவில்லை)  சூரா அல் அஸ்ர்.
சரியானதை சரியென ஏற்று விளங்கி அதன் படி நடக்கவும் பிழையானதை பிழையென ஏற்று அதனை விட்டு விலகிச் செல்லவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மெல்லோருக்கும் நல்லருள்  புரிவானாக.
யா அல்லாஹ்! தூய எண்ணத்தோடு உனக்காக எழுதிய ஒன்றாகவே இதை நீ அங்கீரித்து  எனக்கு மென்மேலும் நல்லறிவை தந்தருள்வாயாக. இதன் மூலம் எனக்கு தெரிந்ததை மக்களுக்கு சொல்லி விட்டவர்களில் ஒருராக என்னை பொருந்திக் கொள்வாயாக.
மௌலவி அஹ்மத் முபாரக்,
109, பைபர் கராடன்,
ஞானவிமல வீதி,    
தெமடகொடை,
கொழும்பு  09
26-12-2008.
 


துஆ ஒரு வணக்கம்
    சகல ஜீவராசிகளையும் படைத்த அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரே அற்ற அன்புடை யோன். எல்லோருக்கும் வாரி வழங்கும் தயாளன். அவனது அருள் வானம் பூமிகளுள் விசாலித்துள்ளன. அவனிடம் கேட்டவன் பெற்றுக் கொள்கிறான். கேட்காதவனோடு அவன் கோபித்துக் கொள்கிறான்.
عَنْ أَبِي ھُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يَدْعُ اللهَ غَضِبَ عَلَيْهِ رواه الترمذي
அல்லாஹ்விடம் கேட்காதவனின் மீது அல்லாஹ் கோபிக் கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுறைறா (றழி) ஆதாரம் அத் திர்மிதி
    அல்லாஹ்வின் கோபம் ஏற்படுவது துஆ என்ற வணக்கத்தை விடுவதனாலாகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قال رَسُوْلُ الله صَلَّ اللهُ عَليْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ وَقَرَأ وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِلَى قَوْلِهِ دَاخِرِينَ" رواه النسا وابن ماجه و أحمد والترمذي
துஆ என்பதுவே வணக்கமாகும். என்னிடமே பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு விடையளிக் கிறேன். என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அந்நுஃமானிப்னு பஷீர் (ரழி) ஆதாரம் : அந்நஸாஈ, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், திர்மிதீ
إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
“யார் என்னைப் பிரார்த்திக்காது பெருமையடிக் கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.” (40:60)   
துஆக் கேட்காதவன் பெருமை கொண்டவன் ஆவான், அவன் நரகையே அடைவான். எனவே அவனை மாத்திரம் வணங்குவது போலவே அவனிடமே உதவியும் தேட வேண்டும். அல்லாஹ் விடம் ஒருவன் கேட்பதை பெரும் பேறாக எண்ண வேண்டும்.
துஆவை விடவும் அல்லாஹ்விடம் கண்ணியமான ஒன்றில்லை. என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரழி) ஆதாரம் : திர்மிதீ
ஒருவன் தன் பிரார்த்தனை (துஆ) மூலம் வந்துற்ற, வரவுள்ள அனைத்திற்கும் விடிவைக் காண்கிறான். அதனாலன்றோ அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகின்றான்.
أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ
கஷ்டத்தில் சிக்கித் துடி துடிப்போர் அபயமிட் டழைத்தால் (அவர்களுக்குப்) பதில் கூறி, அவர்களு டைய கஷ்டங்களை நீக்குபவன் யார்? (27:63)
    நிச்சயமாக அல்லாஹ் அன்றி வேறெவனும் இல்லை. இதற்கு, மேலும் தெளிவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய கூற்றும் அமைந்துள்ளது.
عَنْ ابْنِ عُمَر َرضي الله عنهما قَالَ قَالَ رَسُولُاللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "إِنَّ الدُّعَاءَ يَنْفَعُ مِمَّا نَزَلَ وَمِمَّا لَمْيَنْزِل ْفَعَلَيْكُمْ عِبَادَ اللهِ بِالدُّعَاءِ"  -رواه الترمذي
நிச்சயமாக துஆ (உங்களுக்கேற்பட்ட) இதுவரை ஏற்படாத விடயங்களுக்கும் பயனளிக்க வல்லது. எனவே அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் பிரார்த்தனையை (துஆவைக்) கைக்கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), ஆதாரம்: அத்திர்மிதீ
அல்லாஹ் தன் அடியார் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். ஒரு தாய் தன் குழந்தை மீது காட்டும் இரக்கத்தை விட தன் அடியார் மீது அவன் இரக்கம் கொண்டவன். அவனது அன்புக்கு அளவேயில்லை. அடியார் புரியும் குற்றச் செயல்களுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் புவியில் ஒன்றுமே எஞ்சியிராது.
وَلَويُؤاخِذُ اللهُ النّاسَ بِما كَسَبوا ماتَرَكَ عَلىٰ ظَهرِ ھا مِن دابَّةٍ وَلٰكِن يُؤَخِّرُھُم إِلىٰ أَجَلٍ مُسَمًّى
 “மனிதர்கள் தேடிக்கொண்ட (தீ) வினைக்காக (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் யாதொரு (மனித) ஜீவனையும் விட்டுவைக்க மாட்டான்.” (35:45) என அல்லாஹ் கூறியுள்ளான். எனவே அத்தகைய மாபெரும் அருளாளனிடம் கேட்கும் போது அவன் எனக்கு விடையளிப்பான் என்ற விசுவாசத்துடன் கேட்பதே முறையாகும்.
عَنْ أَبِي ھُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ:  أَنَّ رَسُول الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:" لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ: اللَّهُمَّ اغْفِرْلِي إِنْشِئْتَ٬ اللَّهُمَّ ارْحَمْنِي إِنْشِئْتَ٬ لِيَعْزِمِ المَسْأَلَةَ٬ فَإِنَّهُ لاَ مُكْرِ هَ لَهُ " رواه ال بخاري
உங்களில் எவரும் துஆக் கேட்டால் “யாஅல்லாஹ்! உனக்கு விருப்பமாயின் என்னை மன்னிப்பாயாக, உனக்கு விருப்பமாயின் எனக்கு அருள்புரிவாயாக என்று கேட்கவேண்டாம். கேட்பதை உறுதியோடு கேட்கட்டும். நிச்சயமாக அவன் நாடியதைச் செய்கிறவன். அவனை நிர்ப்பந்திப்பவர் எவரும் இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)
அல்லாஹ்விடம் கேட்டுப் பெற விரும்புகின்றவன் பூரண வேட்கையோடு மனமுருகி தன் மனதை அவன் பால் ஒருமுகப் படுத்திய நிலையில் கேட்க வேண்டும். மனமுருகி கேட்கப்படும் துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. அல்குர்ஆனில் 21வது அத்தியாயத்தில் நபிமார்கள் சிலரது வரலாறு கூறப்படுகிறுது. அவ்வத்தியாயத்தின் 87-90 வரையுள்ள வசனங்களில் நபி யுனுஸ், ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கிருந்த தேவை பற்றியும் அதற்காக அவர்கள் பிரார்த்தித்தது பற்றியும் கூறிவிட்டு இறுதியாகப் பின்வருமாறு கூறப்படுகிறது.
إِنَّهُم كانوا يُسٰرِعونَ فِى الخَيرٰتِ وَيَدعونَنا رَغَبًا وَرَھَبًا وَكانوا لَناخٰشِعينَ
“நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மையான காரியங்களை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம்முடைய அருளை) விரும்பியும் (நம் தண்டனைக்குப்) பயந்தும்  நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந் தார்கள். இவர்கள் யாவரும் மிக்க உள்ளச்சமுடைய வர்களாக இருந்தார்கள்.” (21:90)
أُدْعُوْا رَبَّكُم تَضَرُّعًا وَخُفيَةً
“(விசுவாசிகளே) உங்கள் இறைவனிடம் தாழ்மை யாகவும்,  அடக்கமாகவும் பிரார்த்தனை (துஆ) செய்யுங்கள்.” (7:55) துஆவிலே ஈடுபடும் ஒருவன் மிகவும் அடக்கமாக தாழ்ந்த குரலில் கேட்க வேண்டும். சப்தமிட்டும், சிரமப்பட்டும் துஆ  இறைஞ்சலா காது என்பது றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது போதனையாகும். ஒரு சமயம் நாட்டுப்புற அரபிகள் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எம் இறைவன் எமக்கு சமீபமாக இருக்கிறானா? அப்படியானால் நாம் அவனை சப்தம் தாழ்த்தி அழைக்கலாம். அப்படி இன்றி தூரமாக இருப்பின் சப்தமிட்டுக் கூவி அழைக்கலாம்” என்றார்கள். அப்போது அல்லாஹ்:
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
 “என் அடியார் என்னைப் பற்றி உம்மிடம் (நான் நெருக்கமாக இருக்கிறேனா அல்லது தூர இருக்கிறேனா என்று) கேட்டால் நிச்சயமாக நான் மிகவும் அண்மையில் இருக்கின்றேன். என்னிடம் பிரார்த்திப்பவனுக்கு விடையளிக்கிறேன். எனவே எனது கட்டளைக்கு அவர்கள் விடையளிக்கட்டும். மேலும் அவர்கள் நேர்வழி பெறும் பொருட்டு என்னை விசுவாசம் கொள்ளட்டும்” (2;186) என்று கூறுங்கள் எனும் வசனத்தை இறக்கியருளினான்.
அல்லாஹ்வின் பால் தன்னை நிலை நிறுத்திக் கேட்கப்படும் துஆவே அங்கீகரிக்கப்படுகின்றது.
عَنْ أَبِي ھُرَيْرَةَ٬ قَالَ: قَالَ رَسُول ُالله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: "ادْعُوا اللهو َأَنْتُمْ مُوقِنُونَ بِال إِجَابَةِ٬ وَاعْلَمُوا أَنَّ الله لاَيَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لاَهٍ" رواه الترمذي
 “அங்கீகரிக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையோடு நீங்கள் துஆ (பிரார்த்தனை) செய்யுங்கள். நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பராமுகமாக தன்னை மறந்த  நிலையில் இருந்து கேட்பவனின் துஆவுக்கு விடையளிப்பதில்லை.” (அறிவிப்பவர்: அபு ஹுறைறா (ரழியல்லாஹு அன்ஹு) (ஆதாரம் : அத்திர்மிதி)
தனது துஆவுக்கு விடையளிப்பவன் அல்லாஹ்தான் என்ற நம்பிக்கையோடு கையேந்துபவன் தன்னை முற்றிலும் அல்லாஹ் வின்பால் முன்னோக்கியே கையேந்துவான். தன் மனதை ஒருமுகப்படுத்தி தனது பிரச்சினையை, தன் தேவையைத் தானாகக் கேட்டுப் பெறுவதை விட பெரும் பாக்கியம் வேறு கிடையாது.
عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله صلى عليهو سلم: "مَن فُتِحَ لَهُ منكم بَابُ الدُّعَاءِ٬ فُتِحَتْ لَهُ أبوابُ الرَّحمَةِ٬ وَماسُئِلَ الله شَيأ أحبَّ إِلَيهِ من أَنْيُسألَ العافية"
رواه الترمذي
  “உங்களில் எவருக்கு பிரார்த்தனையின் வாயில் திறக்கப்பட்டால் அல்லாஹ்வின் அருள்களின் வாயில் திறக்கப்பட்டதாகும். அல்லாஹ்விடம் நற்சுகத்தை கேட்பதை விட விருப்பத்துக் குரிய தாக வேண்டப்படுவதற்கு வேறொன்றுமில்லை” என்று இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தெரிவிக்கும் ஹதீஸ் திர்மிதியின் பதிவாகும்.
عَنْ أَبِي مُوسَى ال أَشْعَرِيِّ رَضِيَ الله عَنْهُ٬ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ الله صَلَّى الله َلَيْهِ وَسَلَّمَ ٬فَكُنَّا إِذَا أَشْرَفْنَاعَلَى وَادٍ٬ ھَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا ٬فَقَال َالنَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: "يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُواعَلَى أَنْفُسِكُمْ فإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا ٬إِنَّهُ مَعَكُمْ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ ٬تَبَارَك َاسْمُهُ وَتَعَالَ ىجَدُّهُ" رواه البخاري
அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒரு பிரயாணம் சென்றுக் கொண்டிருந் தோம். எங்கேனும் ஒரு பள்ளத்தாக்கை நாம் நெருங்கினால் கூறும் தஹ்லீலினதும், தக்பீரினதும் சப்தம் உயர்ந்து விடும். அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “மெதுவாக கூறுங்கள் நீங்கள் அழைப்பது செவிடனையோ உங்களை விட்டும் மறைந்திருக்கும் ஒருவனையோ அல்ல. நீங்கள் பிரார்த்திப்பதெல்லாம் செவியுறுவோனும், பார்ப்பவனுமாகிய ஒருவனையேயாகும். நீங்கள் எங்கிருந்த போதும் அவன் உங்களுடனே இருக்கிறான் அவனது நாமம் மேலோங்கி விட்டது.” என்று அவர்களுக்கு கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரீ
அடியாரின் துஆவை (பிரார்த்தனையை) எதிர்பார்த்து நிற்கும் அல்லாஹ் அதற்கு விடையளிப்பதாகவும் வாக்களித்திருக்கிறான். மனிதர்கள் நிறைவேற்றும் தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, முதலியன யாவும் துஆக்களை உள்ளடக்கியே இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றும் ஒரு அடியான், தான் அல்லாஹ்வின் அடியான் என்பதையும், தன் தேவைகளை நிறைவேற்றும் சர்வ சக்தன் அவன் மாத்திரமே என்றும் கூறுகிறான். அந்த வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் கூட்டி  விடுவ தில்லை. எனவே தான் மாபெரும் தயாளனான அவன் தன்னிடம் கையேந்தியவரை வெறுமனே விட்டு விட விரும்புவதில்லை.
عَنْ سَلْمَانَ الفَارِسِيِّ ٬عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ٬ قَالَ:" إِنَّ الله حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّھُمَا صِفْرًا خَائِبَتَيْنِ". رواه البيهقي والترمذي
    “நிச்சயமாக அல்லாஹ் மிகவும் நாணமுடைய தயாளனாவான். தன்னிடம் கையுயர்த்தி கேட்கும்அடியாரின் கரங்களை வெற்றுக் கைகளாகத் திருப்பி விட அவன் வெட்கப் படுகிறான்.“ என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள. அறிவிப்பவர் ஸல்மான் அல் பாரிஸ் (ரழி) அன்ஹு.  ஆதாரம் திர்மிதி 2556, பைஹகி 1488.
    எனவே அல்லாஹ் தனது பிரார்த்தனைக்கு விடையளிப்பான் என்ற உறுதியான நம்பிக்கை யோடு கேட்போருக்கு அவன் இல்லையென்ப தில்லை. எந்நேரமும் அவனது உதவி எமக்கு தேவை. நாம் எல்லா நிலைமைகளிலும் துஆ கேட்க வேண்டும். கஷ்ட நேரத்தில் மாத்திரம் அதனை நீக்க பிரார்த்திக்காமல், கஷ்டமில்லாத நன்னிலையிலும் அவனை பிரார்த்திக்க வேண்டும். இதுவே உண்மை விசுவாசிக்கு அடையாளமாகும்.
عَنْ أَبِي ھُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُول ُالله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ سَرَّهُ أَنْ يَسْتَجِيبَ الله لَهُ عِنْدَ الشَّدَائِدِ وَالكَرْبِ فَلْيُكْثِرِ الدُّعَاءَ فِي الرَّخَاءِ" رواه الترمذي

 “கஷ்ட நேரத்தில் அல்லாஹ் தன் பிரார்த்தனைக்கு விடையளிக்க வேண்டும் என விரும்புகின்றவன் தான் நன்னிலையில்  இருக்கும் போதும் அதிக மதிகம் துஆக் கேட்கவும்” என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவா;: அபூ ஹுறைறா ரலியல்லாஹு அன்ஹு    ஆதாரம்: திர்மிதி
எனவே, எமது தேவைகளை பெற்றுத்தர வல்லவன் ஏக இறைவனாம் அல்லாஹ் தான் என்று நம்பும் நாங்கள்,   அவனிடமே கேட்க வேண்டும். சகல சந்தர்ப்பங்களிலும் அவனிடம் சரணடைந்து கேட்பது தான், அவனை மாத்திரமே வணங்கு கிறோம், அவனிடம் மாத்திரமே உதவி வேண்டுகிறோம் என்ற ஈமானுக்கு எடுத்துக் காட்டாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு ஓதினார்கள்:
"اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ٬و َلاَمُعْطِيَ لِمَا مَنَعْتَ ٬وَلاَ يَنْفَعُ ذَاالجَدِّ مِنْكَال جَدُّ"رواه البخاري
 “இறைவா! நீ தந்ததை தடுப்பாரில்லை, தடுத்ததை தருவாரு மில்லை. மேலும் வசதியுடைய செல்வந்தனுடைய எந்த வசதி, செல்வம் என்பன உன் தண்டனையிலிருந்து காத்துக் கொள்ள எப்பயனும் தராது.” அறிவிப்பாளர்; முஈரத் இப்னு ஷுஉபா ஆதாரம் : புகாரி
இந்த துஆவின் பொருள் விளங்கி எப்போதும் துஆக் கேட்போம். தொழுது முடிந்த பிறகு அதனை முறையோடு விஷேடமாக ஓதி வருவோம். அப்போதே அது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப் படும்.
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِنلَّمْ تَغْفِرْلَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَالْخَاسِرِینَ
 “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்"- 7:23
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَالَ اطَاقَةَ لَنَا بِهِ وَاعْفُعَنَّا وَاغْفِرْلَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْ كَافِرِينَ
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப் பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித் தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" - 2: 286
رَبِّ أَوْزِ عْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَا لَّتِي أَنْ عَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْن ِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
 “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும் எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உன் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” - 27:19

துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?
துஆக் கேட்பது  தேட்டங்களை அடைந்து கொள்வதற்காகும். எந்த ஒரு தேவையையும் அதனை அடைந்து கொள்ள அவசியமான வற்றோடு முயற்சிக்க வேண்டும். அதற்குத் தடையாக உள்ள எதுவும் இல்லாதிருக்க வேண்டும். இம்மை, மறுமை நலன்களுக் கான பயனுள்ள ஒரு வழி துஆவாகும். அதில் ஈடுபடுபவரது உறுதி, நம்பிக்கை அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட  தடையேதும் இல்லாமை முதலியவற்றோடு காரியம் கைகூடுகிறது. துஆக்கள் அங்கீகரிக்கப்பட, பின்வரும் காரணங்கள் தடையாக அமைகின்றன.
அ. அவசரப்படுதல்
عَنْ أَبِي ھُرَيْرَة رضي الله عنه أَنَّ رَسُولَ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُسْتَجَابُ لأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ ٬ يَقُولُ: دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي "رواه البخاري و مسلم
 “எவ்வளவோ பிரார்த்தித்தும் எனக்கு விடையளிக்கப் பட வில்லையே என்று கூறி உங்களில் எவரும் அவசரம் காட்டாத வரை அவருடைய துஆவுக்கு விடையளிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி – 6340, ஸஹீஹ் முஸ்லிம் - 2735) அவசரப்படுவது ஆபத்தையே தேடித்தரும். அது சகல காரியங்களிலும் ஏற்படும். அவசரமின்மையும், அடக்கமும் நற்பயனைத் தரும். இதற்கு இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு உதாரணம் கூறினார்கள்: “துஆக் கேட்டு அதற்கு சீக்கிரம் விடையை எதிர்பார்ப் பவன் வித்தொன்றை நாட்டியவன் போல. அவன் அதற்கு நீர் பாய்ச்சிக்கொண்டே இருந்து விட்டு சீக்கிரம் அந்த விதை முளைத்து, காய்த்து, கனித்து பலனளிக்கவில்லை என்று நீர் பாய்ச்சுவதையும் அக்கன்றை வளர்த்தெடுப்பதையும் விட்டு விட்டான். அவ்வாறே துஆக்கேட்டும் அதற்கு விடை காண வில்லையே என்பதற்காக துஆக் கேட்பதை விட்டவனின் நிலையும்” என்றார்கள். அல் ஜவாபுல் காபீ - பக்கம்: 12)
ஆ. பாவ காரியத்திற்கு அல்லது இரத்த உறவைத் துண்டிக்கக் கேட்டல்
பாவச் செயல்களை மனிதன் தவிர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய செயல்களுக்கு அல்லாஹ்வின் துணை கிடைக்காது. அது போல் உறவினரைச் சேர்த்து வாழ்வது கடமையாகும். உறவை முறித்து வாழ்வது பாவமாகும். அவ்வாறு நடப்பவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரப்பட்டவனாவான். எனவே தான் இவ்விரண்டு பாவத்திற்கும் அல்லாஹ் உதவி செய்வதில்லை.
عَنْ أَبِي ھُرَيْرَةَ مرفوعاً بلفظ: "لاَ يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ ٬ مَا لَمْ يَدْعُ
بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ ٬ مَا لَمْ يَسْتَعْجِلْ" قِيلَ: يَا رَسُولَ الله ! مَا الإِسْتِعْجَالُ؟ قَالَ: يَقُولُ: "قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ ٬ فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي ٬ فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ" رواه مسلم
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினர்கள்: “பாவம் செய்யவும், இரத்த உறவை முறிக்கவும், அவசரப் படாமலும் இருக்கும் வரை அடியானின் துஆவுக்கு விடையளிக்க பட்டுக் கொண்டேயிருக்கும் என்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவசரப் படுவது என்றால் என்ன?” எனக் கேட்கப்பட்டபோது, நான் பிரார்த்தித்தேன், பிரார்த்தித்தேன், எனக்கு விடையளிக்கப் படக் காணவில்லையே என்று கூறி கவலையுற்று துஆக் கேட்பதையும் விட்டு விடுவான்.” என்றார்கள்.
அத்தகைய செயல்களுக்கு அல்லாஹ்வின் துணை கிடைக்காது. அது போல் உறவினரைச் சோர்த்து வாழ்வது கடமையாகும். உறவை முறித்து வாழ்வது பாவமாகும். அவ்வாறு நடப்பவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரப்பட்டவனாவான். எனவே தான் இவ்விரண்டு பாவத்திற்கும் அல்லாஹ் உதவி செய்வதில்லை.

இ. ஹராமான உணவை உட்கொண்டிருத்தல்
عَنْ أَبِي ھُرَيْرَةَ ٬ قَالَ: قَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ ٬ إِنَّ الله  طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ الله  أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ ٬ فَقَالَ : " يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ" ٬ وَقَالَ: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} قَالَ: وَذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَهُ إِلَى السَّمَاءِ يَا رَبِّ ٬ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ ٬ وَمَشْرَبُهُ حَرَامٌ ٬ وَمَلْبَسُهُ حَرَامٌ ٬ وَغُذِّيَ بِالحَرَامِ ٬ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ رواه مسلم
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “நிச்சயமாக அல்வாஹுத் தஆலா பரிசுத்தமானவன். பரிசுத்த மானவற்றை மாத்திரமே அவன் ஏற்றுக் கொள்கின்றான், மேலும் அல்லாஹ் தனது தூதர்களுக்கு ஏவியவற்றைக் கொண்டே நல்லடி யார்களுக்கும் ஏவினான்.” மேலும் அவன் கூறினான்: “அல்லாஹ்வின் தூதர்களே! பூமியில் உள்ள நல்லவற்றிலிருந்து புசியுங்கள். மேலும் நல்லமல்கள் செய்யுங்கள். நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.” (அல் முஃமினூன்: 51)
அறிவிப்பவர்; அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம் : முஸ்லிம்.
“விசுவாசம் கொண்டோரே! நாம் உங்களுக்கு அருளியுள்ள நல்ல வற்றிலிருந்து புசியுங்கள்” 2:172  இந்த வசனங்களைக் கூறிய அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீண்ட பயணமொன்றை மேற்கொண்டு பிரார்த்திக் கும் ஒருவரைப் பற்றி பின்வருமாறு கூறினார்கள்: “பரட்டைத் தலையோடு, புழுதி படிந்த நிலையில், வானத்தை நோக்கிக் கையேந்தி என் இறைவா! என் இறைவா! என்று கூவி அழைக்கிறான். (ஆனால்) அவன் உட்கொண்ட ஆகாரம் ஹராமானது, அருந்திய பானம் ஹராமானது, அணிந்துள்ள ஆடை ஹராமானது. ஹராத்தைக் கொண்டே அவன் உடம்பு வளர்க்கப் பட்டுள்ளது. (இவ்வாறு முற்றிலும் ஹராமே தோய்ந்த) இவனுக்கு எப்படி விடையளிக்கப்படலாம்?” என்று கூறினார்கள்.
அறிவிப்பவா; அபூ ஹுரைறா ரலியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.
இந்த ஹதீஸ் மிக முக்கிய நான்கு விடயங்களை உள்ளடக்கி யுள்ளது.
1. நீண்ட பயணம்: பிரயாணியின் துஆ அங்கீகரிக்கப் படுகின்றது.
2. பணிதலோடு கேட்பது: பிராத்திக்கும் போது தாழ்மையோடும் பணிதலோடும் வேண்டுவது.
3. கையுயர்த்தி கேட்பது: தன்னிடம் கையேந்துபவனை அல்லாஹ் நஷ்டமுறச் செய்வதில்லை.
4. மடக்கி மடக்கிக் கேட்பது: மடக்கி, மடக்கி, கெஞ்சிக் கேட்பது ரஹ்மத்தின் வாயிலைத் திறக்கும்.
எனவே துஆக்களில் நாம் அவசரம் கொள்ளாமலும் பாவ காரியத்தைக் கேட்காமலும், உறவை முறிக்கக் கேட்காமலும் இருப்பதோடு எமது உணவு, பானம், உடை  யாவும் ஹலாலான தாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் எமது துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. வஸீலாத் தேடுவதன் சட்டம்
அல்லாஹ்வுக்கென்று தான் நிறைவேற்றிய கருமங்களை முன்னிறுத்திக் கேட்பது வஸீலா எனப்படுகிறது. அல்லாஹ்வின் திருப்தியை அடைந்து கொள்வதற்காக அல்லாஹ்வும் ரஸூலும் காட்டிய முறையில் அமைந்த அமல்களையே ஒருவன் வஸீலாவாக வைத்துக் கொள்ளவேண்டும்.
يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اتَّقُوا اللَّهَ وَابتَغوا إِلَيهِ الوَسيلَةَ وَجٰهِدوا فى سَبيلِهِ لَعَلَّكُم تُفلِحونَ
“விசுவாசம் கொண்டோரே! நீங்கள் ஜெயம் பெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சி நடவுங்கள். மேலும் (உங்கள் அமல்கள் மூலம்) அவனிடம் சென்றடையும் வழியைத் தேடுங்கள்.” (5:35)
இந்த வசனம் மிகவும் தெளிவாக “அல்லாஹ்விடம் சென்றடைய அவன் அமைத்துத் தந்த வழியன்றி வேறில்லை” என்பதைக் கூறுகிறது. அல்குர்ஆன் 3:16 வசனம் பின்வருமாறு கூறுகிறது.
رَبَّنا إِنَّنا ءامَنّا فَاغفِر لَنا ذُنوبَنا وَقِنا عَذابَ النّارِ
அல்லாஹ்வை அஞ்சி நடந்த அம்மக்கள்) “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் உன்னை விசுவாசித்தோம். எனவே எமது பாவங்களை மன்னித்து நரக தண்டணையில் இருந்து எம்மை காப்பாற்றுவாயாக” என்று பிரார்த்திப்பார்கள். மேலும் அதே அத்தியாயத்தின் 193 வது வசனம் இப்படிக் கூறுகிறது.
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا
فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
 “எங்கள் இறைவனே! உங்கள் இறைவனை விசுவாசியுங்கள் என்று (எங்களை) விசுவாசத்தின் பால் அழைத்தவரின் அழைப்பை நிச்சயமாக நாம் செவியுற்று விசுவாசமும் கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னித்து எங்கள் பாவங்களில் இருந்து எங்களை விடுவித்து நல்லோருடன் எம்மை மரணிக்கச் செய்வாயாக” என்றும் கூறி பிரார்த்திப்பார்கள்.
இது முஃமீன்களின் பிரார்த்தனை. பாவ மன்னிப்பும், நரக விடுதலையும் வேண்டும் அதற்காக அவர்கள், தாம் விசுவாசம் கொண்டதாகவும் அதன் காரணமாக மன்னிப்பளிக் கும் படியும் கேட்கின்றார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம் ஒருவர் தான் புரிந்த நற்காரியத்தை முன்னிறுத்திக் கேட்க வேண்டும், வஸீலாத் தேட வேண்டும் என்பதை விளங்க முடிகிறது. ஸஹீஹுல் புகாரி 2333, ஸஹீஹ் முஸ்லிம் 2743 இலக்கம் கொண்ட ஹதீஸ், குகையொன்றில் சிக்குண்ட மூன்று நபர்களை பற்றி குறிப்பிடுகிறது. அக்குகையில் இருந்து வெளிவர அவர்கள் ஒவ்வொருவரும் தாம் செய்த நற்கருமங்களை முன்னிருத்தி துஆக் கேட்டார்கள் எனப் பார்க்கிறோம். இந்த வரலாற்றை நாம் ரமழான் இரவுகளில் வானொலியில் கேட்டு வருகிறோம்.
எனவே வஸீலா என்பது அல்லாஹ்வுக்கென ஒருவன் செய்த காரியத்தை முன்னிறுத்திக் கேட்பதையே குறிக்கிறது என விளங்குகிறது. அதேபோல் அல்லாஹ்வின் திருநாமங்களை முன்வைத்துக் கேட்குமாறும் நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம்.
قُلِ ادعُوا اللَّهَ أَوِ ادعُوا الرَّحمٰنَ أَيًّا ما تَدعوا فَلَهُ الأَسماءُالحُسنىٰ
 “நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள், அல்லது றஹ்மான் என்று அழையுங்கள் (இவ்விரண்டில்) நீங்கள் என்ன கூறி அழைத்தாலும் அவனுக்கு அழகிய (இன்னும் பல) திருநாமங்கள் உண்டு. (அவைகளைக் கொண்டே அழையுங்கள்).”(17:10)
வஸீலா தேடுவதன் மற்றுமொறு முறைதான் வாழ்ந்து கொண்டி ருக்கும் ஒரு நல்ல மனிதரிடம் தனக்காக பிரார்திக்குமாறு வேண்டுவதாகும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ٬ فَبَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي يَوْمِ جُمُعَةٍ قَامَ أَعْرَابِيٌّ ٬ فَقَالَ يَا رَسُولَ الله  : ھَلَكَ المَالُ وَجَاعَ العِيَالُ٬ فَادْعُ الله  لَنَا ٬ فَرَفَعَ يَدَيْهِ وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً ٬ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ ٬ مَا وَضَعَهَا حَتَّى ثَارَ السَّحَابُ أَمْثَالَ الجِبَالِ ٬ ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ المَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ٬ فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ ٬ وَمِنَ الغَدِ وَبَعْدَ الغَدِ ٬ وَالَّذِي يَلِيهِ ٬ حَتَّى الجُمُعَةِ الأُخْرَى ٬ وَقَامَ ذَلِكَ الأَعْرَابِيُّ - أَوْ قَالَ: غَيْرُهُ - فَقَالَ: يَا رَسُولَ الله ٬ تَهَدَّمَ البِنَاءُ وَغَرِقَ المَالُ ٬ فَادْعُ الله لَنَا ٬ فَرَفَعَ يَدَيْهِ فَقَالَ: "اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا" فَمَا يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّحَابِ إِلَّا انْفَرَجَتْ ٬ وَصَارَتِ المَدِينَةُ مِثْلَ الجَوْبَةِ ٬ وَسَالَ الوَادِي قَنَاةُ شَهْرًا ٬ وَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلَّا حَدَّثَ بِالْجَوْدِ رواه البخاري و مسلم
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஒரு தடவை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “குத்பா” பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கு வந்த நாட்டுப்புற அரபி  ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. குழந்தை குட்டிகள் பசியில் வாடுகின்றனர். (வரட்சி கூடிவிட்டது) எனவே நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் எனக் கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கரங்கள் இரண்டையும் உயர்த்தி துஆக் கேட்டார்கள். அப்போது வானத்தில் எந்த மழை மேகமும் காணப்படவில்லை. என் ஆத்மா  யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நபி  ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கையை கீழே விடு முன் மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. மிம்பரில் இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறங்கி வரு முன் மழை கொட்டியது. அம்மழை நீர் அன்னாரின் தாடி வழியாக வடிவதைக் கண்ணுற்றேன். அன்றைய தினமும் அதற்கு அடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அடுத்த ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. மறு ஜும்ஆவில் அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. செல்வங்கள் நீரில் மூழ்கின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களை நோக்கி இதை அனுப்புவாயாக. எங்களுக்கு கேடு தருவதாக இம்மழையை ஆக்கி விடாதே என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. இம்மழையால் “கனாத்” எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் இம் மழையைப் பற்றிப் பேசாமல் இருந்ததில்லை” என அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்” இது ஸஹீஹுல் புகாரி (2333), ஸஹீஹ் முஸ்லிம் (2743) ஆகிய கிரந்தங்களில் பதியப்பட்ட வரலாற்றுச் சம்பவமாகும்.
இந்நிகழ்ச்சியை அறிவித்த அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் ஒரு சம்பவத்தையும் அறிவிக்கின்றார்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ الله عَنْهُ - أَنَّ عُمَرَ كَانَ إِذَا قَحَطُوا يَسْتَسْقِى بِالعَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ ٬ وَقَالَ: "اللَّهُمَّ إِنَّا كُنَّا نَسْتَسْقِى إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا ٬ وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا" ٬ قَالَ: فَيُسْقَوْنَ رواه البخاري
அதாவது உமர் (ரலி) அவர்களது காலத்தில் வரட்சி ஏற்பட்டால்  அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிறுத்தி துஆக் கேட்பார்கள்.  ‘இறைவா! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருக்கையில் நாம் அன்னாரை முன்னிறுத்தி மழை கேட்போம். மழை பொழிவித்தாய். (அன்னாரின் வபாத்தின் பின் இப்போது) அன்னாருடைய சிறிய தகப்பனை முன்னிறுத்தி மழை கேட்கின்றோம். மழை பொழிவிப்பாயாக’ என்று கேட்பார்கள். மழையும் பொழிந்துவிடும்.”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் ஆதாரம் :ஸஹீஹுல் புகாரி 1010
இந்த வரலாற்றுச் சம்பவங்கள் வஸீலாவின் சரியான முறைகளை விளக்குகின்றன. ஸஹாபாக்கள் தீனை சரியாகப் புரிந்து செயற் பட்டவர்கள். அவர்கள் கஷ்ட நஷ்டத்தின் போது கபுரடி சென்று அடக்கப்பட்டவரை முன்னிறுத்தி அவர் பொருட்டால் கேட்க வில்லை. அது அனுமதிக்கப்படவில்லை என்பதை அவர்கள் விளங்கியிருந்ததே காரணமாகும். எனவேதான் ரஸூலுல்லாஹ் வின் வபாத்தின் பின் அன்னாருடைய கபுரடி செல்லாது உயிரோடு இருந்த அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு பிரார்தித்தார்கள், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
துஆ ஒரு வணக்கம் என்பதை புரிந்து கொண்ட உத்தமத் தோழர் கள் அதனை பிழையான வழியில் செய்ய முயற்சிக்க வில்லை. மாற்றுக் கருத்துக்கள் கூறாது வலிந்து விளக்கம் சொல்லாது நேரடியாக தாம் விளங்கியபடி செய்தார்கள். அம்மக்கள் இந்த உம்மத்தில் வந்த சிறந்தோராவார்.
தூங்குவதற்கு முன் ஓத வேண்டியவை
ஒவ்வொரு இரவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இரண்டு உள்ளங் கைகளையும் விரித்து வைத்து அதில் ஊதுவார்கள். மேலும் குல் ஹுவல்லாஹு அஹத், குல்அவுது பிரப்பில் பலக், குல்அவுது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதுவார்கள். பிறகு உடம்பின் எந்த எந்தப் பகுதிகளில் தடவ முடியுமோ அந்தப் பகுதிகளில் கைகளால் தடவுவார்கள். தலை, முகம், போன்ற உடலின் முன் பகுதிகளிலிருந்து தடவுதலை ஆரம்பம் செய்வார்கள். இது போல 3 தடவை செய்வார்கள்.
நீ படுக்கைக்கு செல்லும் போது ஆயதுல் குர்ஸீ (அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யும்) முழுவதையும் ஓதுவாயானால் காலை வரையில் அல்லாஹ்வின் சார்பில் ஒரு பாதுகாவலர் உனக்கு ஏற்படுத்தப்படடிருப்பார். மேலும் ஷைத்தான் உன் அருகில் கூட வரமாட்டான். ஒருவர் அல் பகரா அத்தியாயத்தின் இறுதி 2 வசனங்களை இரவில் ஓதுவாராயின் அதுவே அவருக்கு போதுமானதாகும். ஆதாரம் : ஸஹீஹுல் புஹாரி
آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آَمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ (285) لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (286)
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள்
தன் துஆக்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட வேண்டும், நாடியது கைகூட வேண்டும் என்றே மனிதன் விரும்புகின்றான். அதற்கு மிகப் பொருத்தமான நேரங்களை தெரிந்து வைத்து துஆ இறைஞ்சுவதன் மூலம் மனிதன் நிம்மதி பெற முடியும். அவ் வாறான நேரங்களை ரஸூலுல்லாஹ் அவர்கள் அறியத் தராமலும் விடவில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் துஆக் கேட்பதை ஒரு வணக்கமாக அமைத்துத் தந்து அவனது பேரருளை தன்னிடமே கேட்குமாறும், கேட்டால் தருவதாகவும் வாக்களித்துள்ளான். மேலும் அதற்குப் பொருத்த மான நேரங்களையும், காலங்களையும் வகுத்து அதனையும் அறிவித்துள்ளான். அந்நேரங்களைத் தெரிந்து பயன்படுத்தி கொள்பவனே புத்திமான். அந்நேரங்களாவன;
அ. இரவின் பிந்திய நேரம்;
தன்னுடைய துஆக்களுக்குரிய சிறப்பான நேரங்களில் ஒன்றாக ஸஹர் நேரம் இருக்கின்றது. இதுவே இரவின் மூன்று பகுதிகளில் கடைசிப்பகுதி எனக் கூறப்பட்டுள்ளது. இந்நேரத்தில் உண்மை விசுவாசிகள் தம் பிழை பொறுத்தலுக்காக துஆக் கேட்பர். என அல்லாஹ் போற்றுகிறான்.
وَالمُستَغفِرينَ بِالأَسحارِ
“(அந்த முஃமின்கள்) ஸஹர் நேரங்களில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருகின்றவர்களாய் உள்ளார்கள்.” (3:17) என்று கூறுகின்றான்.
كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ، وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ.
“அவர்கள் விடியற்காலையில் (எழுந்து இறைவனை வணங்கி தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.” (51:17,18) இந்த வசனத்தின் விளக்கமாக ஸஹீஹுல் புகாரி 1145, 6321, 7494 ஸஹீஹ் முஸ்லிம் 758 இலக்கம் கொண்ட ஹதீஸ்கள் அமைந்துள்ளன.
عَنْ أَبِي ھُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ: أَنَّ رَسُولَ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي ٬ فَأَسْتَجِيبَ لَهُ وَمَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ ٬ وَمَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ " رواه مسلم
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “எங்கள் இறைவன் தினமும் இரவின் மூன்றாவது பகுதி எஞ்சி யிருக்கையில் அடிவானத்துக்கு இறங்கி என்னிடம் பிரார்த்திப் பவர் யாரும் உண்டா? அவனுக்கு நான் விடையளிக்கிறேன். என்னிடம் தன் தேவையை கேட்கிறவன் யாரும் உண்டா? அவனுக்குக் கொடுக்கிறேன். என்னிடம் பிழை பொறுக்கத் தேடுபவன் யாரும் உண்டா? அவனை மன்னிக்கி றேன்.” என்று அழைப்பு விடுக்கிறான்.
இந்த ஹதீஸின் மூலம் மிகவும் சிறப்பான ஒரு நேரத்தை அல்லாஹ் சொல்லித் தந்திருக்கின்றான். அதிகமான மக்கள் இந்த நேரத்தில் நித்திரையில் ஆழ்ந்திருப்பார்கள். அல்லாஹ் தன் கண்ணியத்துக் கும் வல்லமைக்கும் ஏற்ப தினமும் அடிவானத்துக்கு இறங்குகிறான் என நம்புவதே நம் கடமை. அதற்கு வலிந்து பொருள் கற்பிப்பது, அல்லாஹ்வின் ஸிபத்துக்களை கருத்தற்ற ஒன்றாகப் பேசிய குற்றத்திலே எம்மை சேர்த்துவிடும். அவ்வாறு அடி வானத்திற்கு இறங்கும் அல்லாஹ் துஆ, இஸ்திஃபார் என்பவற்றில் ஈடுபடவே எம்மை அழைக்கிறான்.
ஆ. ஜும்ஆ நாள்
துஆக்கள் அங்கீகரிக்கப் படும் நேரங்களில் ஒன்று வெள்ளிக் கிழமையில் உள்ளது. அந்நேரம் பற்றி சுமார் 40 அபிப்பிராயங்கள் கூறப்பட்டுள்ளன.
عَنْ أَبِي ھُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ ٬ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: "فِي يَوْمِ الجُمُعَةِ سَاعَةٌ ٬ لاَ يُوَافِقُهَاعَبْدٌ مُسْلِمٌ ٬ وَھُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ الله خَيْرًا إِلاَّ أَعْطَاهُ" وَقَالَ بِيَدِهِ ٬ قُلْنَا: يُقَلِّلُهَا٬ يُزَھِّدُھَا " رواه البخاري و مسلم
 “வெள்ளிக்கிழமை நாளன்று ஒரு நேரமுள்ளது. அந்நேரத்தில் எந்தவொரு முஸ்லிமான அடியானும் நின்று வணங்கி அல்லாஹ்விடம் கேட்டால், அல்லாஹ் கொடுக்காமலிருப்ப தில்லை என்று கூறிய ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நேரத்தை குறுகிய நேரம் எனக்காட்டி கையால் சாடை செய்தார்கள்.” அறிவிப்பவர்; அபூ ஹுரைறா ரலியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி – 935, ஸஹீஹ் முஸ்லிம் - 852
இந்த ஹதீஸுக்கு மிகவும் பொருத்தமான இன்னும் இரண்டு ஹதீஸ்கள் பின்வருமாறு:
1.இரண்டு குத்பாக்களுக்கிடைப்பட்ட நேரம்
عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ٬ قَالَ: قَالَ لِي عَبْدُ الله بْنُ عُمَرَ: أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ ٬ سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "ھِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ” رواه مسلم
அபு மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் ஜும்மாவுடைய நாளிலுள்ள நேரம் பற்றி றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமது தகப்பனார் ஏதும் கூறினார்களா? எனக் கேட்டார்கள். அதற்கவர் “ஆம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டேன், அந்த நேரம் இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை நிறைவேற்றி முடிவடைவதற்குமிடையிலாகும்” என்று இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பதிலளித்தார்கள்.  ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் - 853
2.வெள்ளிக்கிழமை அஸரிலிருந்து மக்ரிப் வரை.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهَا خَيْرًا إِلَّا أَعْطَاهُ الله إِيَّاهُ وَهِيَ بَعْدَ الْعَصْرِ" رواه أحمد
நிச்சயமாக வெள்ளிக்கிழயைன்று ஒரு நேரமுள்ளது. அந்நேரத்துக்குச் சரியாக ஒரு முஸ்லிம் அல்லாஹ் விடம் கேட்டால் அதனை அல்லாஹ் கொடுக்காமல் விடுவதில்லை. அது அஸர் நேரத்தின் பின்னாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்.                                                                                                                                                                                                                                                                               
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக வெள்ளிக்கிழமையில் ஒரு நேரமுள்ளது. அந்நேரம் ஒரு முஃமினான அடியான் தொழுது தனது தேவையொன்றை கேட்டால் அதனை அல்லாஹ் நிறைவேற்றாது விடுவதில்லை என்று தௌராத்திலே காண்கிறது என்றேன் என அப்துல்லாஹிப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். மேற்கண்டவாறு நான் கூறிய போது அது ஒரு குறுகிய நேரம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதரே உண்மை கூறிவிட்டீர்கள். கொஞ்சம் நேரமாகிய அது எது? என கேட்டேன். அதற்கு அந்நேரம் வெள்ளிக்கிழமை பகற்பொழுதின் பிந்திய நேரமா கும். அது தொழுகைக்குரிய நேரமல்லவே என கூறினேன். ஆம். நிச்சயமாக ஒரு முஃமினான அடியான் தொழுது விட்டு அடுத்த நேரத் தொழுகையை எதிர் பார்த்து அமர்ந்திருப்பது, தொழுகையிலிருப்பதற்கு சமமே என்றார்கள். முஸ்னத் அஹ்மத் ( 5 /451 ) இப்னு மாஜா 1139. இந்த ஹதீஸ்கள் முலம்  வெள்ளிக்கிழமை துஆக்கள் அங்கீகரிக்கப்படும் குறுகிய நேரம் இதுவென தெரிந்து கொள்வோர் நேரம் தவறமாட்டார்கள்.
இ. சுஜுது செய்யும் போது.
மனிதன் நிறைவேற்றும் அமல்களில் சிறப்பானதும் தொழுகையில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரியதுமான சந்தர்ப்பம் ஸுஜுதாகும். ஸுஜுது செய்ய மறுத்ததனால் சைத்தான் சபிக்கப் பட்டு தூக்கியெறியப்பட்டான். ஸுஜுதின் போது நாம் அதிகம் துஆவில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
عن ابن عباس رضي الله عنهما قال قال رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلاَ وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا ٬ فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ ٬ وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ ٬ فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ. رواه مسلم
“அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ருகூவிலும் சுஜுதிலும் குர்ஆன் ஓதுவது எனக்குத் தடுக்கப்பட்டுள்ளது. ருகூவிலே நீங்கள் வல்ல நாயனை கண்ணியப்படுத்தி தஸ்பீஹ் செய்யுங்கள் சுஜுதிலே நீங்கள் அதிகமாக துஆக் கேட்க முயற்சி எடுங்கள். உங்கள் துஆவுக்கு விடையளிக்கப்பட அது மிகவும் பொருத்தமான இடமாகும்.”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் -479
ஈ. அத்தஹியாத்தின் இறுதியில்
தொழும்போது அத்தஹியாத்தில் கூறப்படும் ஸலாதுல் இப்றாஹீ மியாவை அடுத்து தொழுபவர் தனக்கு விருப்பமானதைக் கேட்கலாம். கப்ரின் வேதனை, நரக தண்டனை, தஜ்ஜாலின் குழப்பம் முதலிய யாவற்றிலிருந்தும் பாதுகாப்புக் கேட்கலாம். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறே செய்து வந்துள்ளார்கள்.
عَنْ أَبِي ھُرَيْرَةَ رَضِيَ اللهَُّ عَنْهُ ٬ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّىا للهَُّ
مِنْ للهِ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُّدِ الْآخِرِ ٬ فَلْيَتَعَوَّذْ بِا
أَرْبَعٍ: مِنْ عَذَابِ جَهَنَّمَ ٬ وَمِنْ عَذَابِ الْقَبْرِ ٬ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا
وَالْمَمَاتِ ٬ وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ " رواه مسلم
உங்களில் எவரும் தொழுகையின் கடைசி அத்தஹியாத்தை ஓதி முடித்தால் நான்கு விடயங்களில் இருந்து  அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடுங்கள். நரக தண்டனையில் இருந்தும், கப்ரின் வேதனையில் இருந்தும், வாழ்வில் ஏற்படும் சோதனையில் இருந்தும், மஸீஹுத் தஜ்ஜால் எனப்படும் குழப்பக்காரனின் குழப்பத்திலிருந்தும் (பாதுகாவல் தேடுங்கள்) அறிவிப்பவர்: அபு ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்
உ. நோன்பு திறக்கும் நேரம்
ஒரு சிறப்பான அமலை நிறைவு செய்து கொள்ளும் நேரமே நோன்பு திறக்கும் நேரம். அந்நேரத்தில் துஆக்கள் அங்கீகரிக்கப் படுகின்றன. இது குறித்து அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்.
عَنِ أَنَسِ رَضِيَ اللهَُّ عَنْهُ ٬ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثُ دَعَوَاتٍ لاَ تُرد: دَعْوَةُ الْوَالِدِ وَدَعْوَةُ الصَّائِمِ وَدَعْوَةُ الْمُسَافِرِ"  رواه البيهقي وابن حبان
மூன்று துஆக்கள் மறுக்கப்படுவதில்லை அவை தகப்பனின் துஆ, நோன்பாளியின் துஆ, பிரயாணியின் துஆ (என்பனவாகும்). அறிவிப்பவர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம்: ஸுனன் அல் பைஹகீ 3/345, அஹ்மத், இப்னு ஹிப்பான்
    ஊ.1 ஹஜ் கடமை நிறைவேற்றப்படும் இடங்கள்:
அறபா, மஷ்அருல் ஹராம், ஸபா, மர்வா, ஜம்ரதுல் ஊலா, வுஸ்தா, அகபா ஆகிய ஆறு இடங்கள் உள்ளன. அவ்விடங்களில் எல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிப்லாவை நோக்கி நின்று துஆக் கேட்டார்கள்.
    ஊ.2 அறபாவில் தங்கியிருக்கும் போது
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்று அரபா நாளன்று கேட்கப்படுவதாகும். அந்நாளில் அடியாரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து, நரக விடுதலையும் வழங்குகிறான் என்று பொருள்பட பல ஹதீஸ்கள் பதிவாகி யுள்ளன.
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ" رواه الترمذي
துஆக்களில் சிறந்தது அரபா நாளில் கேட்கப்படும்
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
 வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை.  அவன தனித்தவன், அவனுக்கு இணையில்லை. ஆட்சி அவனுக்குரியது. சகல புகழும் அவனுக்குரியது. சகலவற்றின் மீதும் அவன் ஆற்றலுடையவன். என்ற துஆவாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ர் ஷுஐப் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அத்திர்மிதி 3585
ஊ.3 முஸ்தலிபாவில் உள்ள மஷ்அருள் ஹராம் என்ற இடம்
عن جَابر رضي الله عَنهُ في حديث طويل: ثُمَّ رَكِبَ الْقَصْوَاءَ ٬ حَتَّى أَتَى الْمَشْعَرَ الْحَرَامَ ٬ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ ٬ فَدَعَاهُ وَكَبَّرَهُ وَھَلَّلَهُ وَوَحَّدَهُ ٬ فَلَمْ يَزَلْ وَاقِفًا حَتَّى أَسْفَرَ جِدًّا رواه مسلم
ஸஹீஹ் முஸ்லிமின் (2/891) ஹதீஸ் இது பற்றி குறிப்பிடுகையில் மஸ்அருள் ஹராமை வந்தடைந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிப்லாவை நோக்கி துஆக் கேட்டு தக்பீர், தஹ்லீல், தௌஹீத் வார்த்தைகளைச் சொன்னார்கள். விடியும் வரை காத்திருந்து சூரியன் உதிக்க சற்றுமுன் மினா நோக்கிப் புறப்பட்டார்கள்.
ஊ.4 ஸபா மர்வா : இது ஹஜ் உம்றா செய்வோர் ஸஈ எனும் தொங்கோட்டம் ஓடும் இடமாகும்.
عن جَابر رضي الله عَنهُ في حديث طويل: أَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ بِهِ فَبَدَأَ بِالصَّفَا فَرَقِيَ عَلَيْهِ حَتَّى رَأَى الْبَيْتَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَوَحَّدَ اللَّهَ وَكَبَّرَهُ وَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ ثُمَّ دَعَا بَيْنَ ذَلِكَ قَالَ مِثْلَ هَذَا ثَلَاثَ مَرَّاتٍ رواه مسلم
 “அந்த மலைக் குன்றுகளில் ஏறி லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாசரீகலஹ் லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷெய்இன் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு அன்ஜச வஅதஹு, வநஸர அப்தஹூ வஹசமல் அஹ்சாப வஹ்தஹூ என்ற கலிமா தௌஹீதை மும்மூன்று முறை சொல்லி துஆக் கேட்டார்கள்.” என்று ஹதீஸ்களில் பதிவாகி யுள்ளது. (ஆதாரம் :ஸஹீஹ் முஸ்லிம் - 4/888)
    ஊ.5 ஹஜ்ஜிலே கல் எறியும் ஜமராத்து எனப்படும் இடங்களில் கேட்கப்படும் துஆவும் அங்கீகரிக்கப்படும்.
عَنِ ابْنِ عُمَرَ رَضيَ الله عَنهُما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَمَى الْجَمْرَةَ الَّتِي تَلِي مَسْجِدَ مِنًى يَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ ثُمَّ تَقَدَّمَ أَمَامَهَا فَوَقَفَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو وَكَانَ يُطِيلُ الْوُقُوفَ رواه البخاري
அங்குள்ள 1ம் 2ம் 3ம் ஜம்ராக்களில் கல்லெரிந்த றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு முறையும் தக்பீர் கூறினார்கள். அதன் பின் அவர்கள் கிப்லாவை நோக்கி நின்று நீண்ட நேரம் துஆக் கேட்டார்கள். ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி -1751
    ஊ.6 ஹஜ் கடமை நிறைவேற்றப்படும் இடங்கள் :
அறபா, மஷ்அருல் ஹராம், ஸபா, மர்வா, ஜம்ரதுல் ஊலா, வுஸ்தா, அகபா ஆகிய ஆறு இடங்கள் உள்ளன. அவ்விடங்களில் எல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிப்லாவை நோக்கி நின்று துஆக் கேட்டார்கள்.
    ஊ.7 லைலதுல் கத்ர் இரவு
ரமழான் இறுதிப்பகுதியின் ஒற்றையிரவுகளில் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்ளலாம். அந்த இரவுகளில் லைலதுல் கத்ர் (எனும் மகத்துவம் மிக்க இரவை) அடைந்து கொள்ள முயற்சி எடுக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். லைலதுல் கத்ர் இரவை நான் அறிந்து கொண்டால் நான் என்ன ஓத வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்:
عن عائشة رضي الله عنها قَالَتْ قُلْتُ يَا رَسُولَ الله   أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَىُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا قَال: " قُولِي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي رواه الترمذي وابن ماجه
இறைவா! நீ மன்னிப்பதை விரும்புகின்றாய், என்னை மன்னித்த ருள்வாயாக! என்று கூறு எனப் பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ஆதாரம்: அத்திர்மிதீ 3513,  இப்னு மாஜா 3850
    ஊ.8. பர்ளு தொழுகைக்குப் பின்
தவறாமல் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையே பர்ளான தொழுகைகள். தொழுகையை முடித்து தொடர்ந்து வரும் ஓதல்கள், அவ்ராது, திக்ர் என்பவற்றை அடுத்து ஒரு அடியான் துஆவில் ஈடுபடுவது அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய செயலாகும்.
عَنْ أَبِي أُمَامَةَ ٬ قَالَ قِيلَ يَا رَسُولَ الله   أَىُّ الدُّعَاءِ أَسْمَعُ قَالَ " جَوْفَ اللَّيْلِ الآخِرِ وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَات
அபூ உமாமா அப்பாஸீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவி க்கின்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! மிகவும்  செவியேற்கப் படும் துஆ எது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “பிந்திய இரவில், பர்ளான தொழுகைகளுக்கு பின்னால் கேட்கப்படுவதாகும்” என்று பதில் கூறினார்கள்.
எனவேதான் பர்ளான தொழுகைகளுக்குப் பின்னால் துஆ ஓதவதில் மக்கள் கவனம் கூடுதலாக உள்ளது. இந்நூல்  எழுதப்பட காரணமும் இதுவே. இத்தலைப்போடு தொடர்புடைய விடயங்கள் “தொழுகைக்குப்பின் கூட்டு துஆ” என்ற தலைப்பில் கண்டு கொள்ளலாம்.
ஊ.9. பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம்
பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம் இந்நேரத்தில் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப் படும். இந்நேரம் அநேக பேருக்கு கிடைக்கிறது. அதனை பயன்படுத்திக்கொள்ள பழக வேண்டும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ" رواه احمد والترمذي
அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கின்றார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் கேட்கப்படும் துஆ தட்டி விடப்படுவதில்லை எனவே (அந்நேரத்தில்) துஆக் கேளுங்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் 3-119, 115, அத்திர்மிதீ-212)
6. இவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப் படுகின்றன.
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பங்களை அல்லாஹ் அமைத்து வைத்திருப்பதைப் போலவே சிலருடைய துஆக்களையும் அவன் அங்கீகரிக்கின் றான். அவையாவன :
அ. தகப்பன் தன் பிள்ளைக்காக கேட்கும் துஆ
عَنِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثُ دَعَوَاتٍ لاَ تُرَدُّ: دَعْوَةُ الْوَالِدِ وَدَعْوَةُ الصَّائِمِ وَدَعْوَةُ الْمُسَافِرِ" رواه البيهقي وابن حبان
மூன்று துஆக்கள் மறுக்கப்படுவதில்லை. அவை தகப்பனின் துஆ, நோன்பாளியின் துஆ, பிரயாணியின் துஆ ஆகியனவே. ஆறிவிப்பவர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம் : பைஹகீ -3/345 அஹ்மத், இப்னு ஹிப்பான்
    இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூட
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ
இறைவா! என்னையும் எனது சந்ததியினரையும் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக ஆக்குவா யாக (14:40) என்று துஆக் கேட்டார்கள்
ஆ. தகப்பனுக்காக பிள்ளை கேட்கும் துஆ
ஒரு மனிதன் வபாத்தான பின் அவனுக்கு பயன் தரும் கருமங்களில் ஒன்று அவனது பிள்ளை கேட்கும் துஆவாகும். இவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.
عَنْ أَبِي ھُرَيْرَةَ رَضيَ الله أَنَّ رَسُولَ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا مَاتَ ابْنُ آدَمَ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ ٬ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ ٬ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ رواه مسلم
ஒரு மனிதன் மரணித்தால் மூன்று விடயங்களைத் தவிர அவனது சகல காரியங்களும் தொடர்பற்று விடுகின்றன. நிலையான தர்மம் அல்லது பயனுள்ள கல்வி அல்லது அம்மனிதனுக்காகப் பிரார்த்திக்கும் நல்ல பிள்ளை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபு ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் -1631
عَنْ أَبِي ھُرَيْرَةَ رضي الله عنه قَالَ: " تُرْفَعُ لِلْمَيِّتِ بَعْدَ مَوْتِهِ دَرَجَتُهُ. فَيَقُولُ: أَيْ رَبِّ! أَيُّ شَيْءٍ ھَذِهِ؟ فيقال: "ولدك استغفر لك" رواه البخاري في الأدب المفرد
காலமான ஒருவருக்கு அவரது மரணத்தின் பின்பு அவரது அந்தஸ்து (தரஜா) உயர்த்தப்படும். (இதைக் காணும் அம்மனிதன்) இறைவா! இது என்ன எனக் கேட்பான். ‘உன்னுடைய பிள்ளை உனக்குப் பிழை பொறுக்கத் தேடியது’ என்று பதில் கூறப்படும். அறிவிப்பவர் :அபு ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம் :அல் அதபுல் முப்ரத்
இ. ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்காகக் கேட்கும் துஆ
தன் சகோதர முஸ்லிமுக்காக பிரார்த்திக்கும் அடியானின் துஆவை அல்லாஹ் அங்கீகரிக் கின்றான்.
عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: “ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ ٬ إِلَّا قَالَ الْمَلَكُ: وَلَكَ بِمِثْلٍ " رواه مسلم
எவரேனும் ஒரு முஸ்லிமான அடியான் தன் சகோதரன் மறைவாக இருக்கையில் அவனுக்காக துஆக் கேட்டால் அவனோடுள்ள மலக்கு ‘உனக்கு (நீ கேட்கும்) அது போன்றது கிடைக்கட்டுமாக’ என்ற சொல்லாமல் விடமாட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர்தா ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் -2732
ஈ. அநியாயம் செய்யப்பட்டவனின் துஆ
عَنْ أَبِي ھُرَيْرَةَ رضي الله تعالى عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ دَعْوَةُ الْمَظْلُومِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْوَالِدِ عَلى وَلدِهِ” رواه ابو داود وابن ماجه و الترمذي
மூன்று (பிரிவினரின்) துஆக்களுக்கு விடையளிக்கப்படும். அநியாயம் செய்யப் பட்டவனின் துஆ, பிரயாணியின் துஆ, தகப்பன் மகனுக்காக கேட்கும் துஆ என்பனவாகும். அறிவிப்பவர்: அபு ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம்: ஸுனன் அபீதாவுத் -1536, இப்னுமாஜா - 3862, திர்மிதி 1905
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قال: أَنَّ رَسُولَ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذ بن جبل إلى اليمن فقالَ اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ ٬ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللهِ حِجَابٌ رواه مسلم
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு தூதனுப்பிய சமயத்தில், அநியாயம் இழைக்கப்பட்டவனின் துஆவைப் பயந்துக் கொள்வீராக. அத்தகைய வனின் துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்த திரையும் இல்லை” என்று வழியனுப்பி னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் -2448
உ. ஹஜ் செய்வோரும் உம்றா செய்வோரும் கேட்கும் துஆ
عَنْ ابْنِ عُمَرَ عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ وَفْدُ اللَّهِ دَعَاهُمْ فَأَجَابُوهُ وَسَأَلُوهُ فَأَعْطَاهُمْ" رواه ابن ماجه
 “அல்லாஹ்வின் பாதையில் போராடும் போராளிகளும், ஹஜ்ஜுக்குச் செல்வோரும்,  உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினராவர். அல்லாஹ் அவர்களை அழைத்தான் அதற்கு அவர்கள் விடையளித்தனர். மேலும் அவர்கள் அவனிடம் கேட்டனர், அல்லாஹ்வும் அதற்கு விடை யளித்தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆதாரம் : இப்னு மாஜா -2893
ஊ. ஜிஹாதில் ஈடுபடுவோர் கேட்கும் துஆ
عَنْ سَهْلِ ابْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ :ثِنْتَانِ لاَ تُرَدَّانِ ٬ أَوْ قَلَّمَا تُرَدَّانِ الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ ٬ وَعِنْدَ الْبَأْسِ حِينَ يُلْحِمُ بَعْضُهُمْ بَعْضًا رواه ابو داود والحاكم
ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இரண்டு துஆக்கள் மறுக்கப்படுவதில்லை.
அவை பாங்கு சொல்லப்படும் போது கேட்கப்படும் துஆ, யுத்த நேரத்தில் பட்டாளங்கள் மோதிக்கொள்ளும் போது கேட்கப்படும் துஆ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் ஆதாரம் : ஸுனன் அபூ தாவுத் – 3540, அல் முஸ்தத்ரக் – 1/381
இன்னல்களின் போது தனக்குக் கேடாக துஆ கேட்கலாகாது
    மனிதன் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். கிடைத்தவற்றிற்கு நன்றி செலுத்தி வாழ்வது ஒரு முஸ்லிமின் பண்பாகும். சோதனைகளை சகித்து கொதித்தெழாது பொறுமை கொள்வது முஃமினின் அருங்குணமாகும். அதன் மூலம் அவன் சுவனத்திற் குரியவனாகிறான்.
وَلَنَبلُوَنَّكُم بِشَىءٍ مِنَ الخَوفِ وَالجوعِ وَنَقصٍ مِنَ الأَموٰلِ وَالأَنفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرينَ الَّذينَ إِذا أَصٰبَتهُم مُصيبَةٌ قالوا إِنّا لِلَّهِ وَإِنّا إِلَيهِ رٰجِعونَ
 “விசுவாசிகளே! ஓரளவு பயத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் நஷ்டத்தினாலும் நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம். (நபியே! இச்சோதனை களால் ஏற்படும் கஷ்டங்களை) சகித்துக் கொண்டிருப் போருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக. சோதனைக்குள்ளாகும் அவர்கள் தங்களுக்கு எத்தகைய கஷ்டம் ஏற்பட்ட போதிலும் “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்” எனக் கூறுகின்றார்கள்” (2:155, 156) என்று முஃமின்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
எனவே பொறுமையைக் கடைப்பிடித்து வாழாமல், ஏற்படும் இன்னல்களின் போது தனக்குப் பாதகமாக - கேடாக நாம் துஆக் கேட்கலாகாது. அவசரப்பட்டு கேட்பதானது கேடான விளைவைத் தரும் என்பதை நாம் விளங்க வேண்டும். நல்ல முறையில் சிந்தித்து தன் தேவையைக் கேட்க வேண்டும். தனக்குப் பாதகம் எனக் கண்டால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும். மாறாக, அவசரப்பட்டு தனக்குப் பாதகமாக துஆ செய்து கொள்வது தடுக்கப்பட்டதாகும். மனிதன்  அவசரப் படுபவன் எனக் குர்ஆன் கூறுகிறது.
وَيَدعُ الإِنسٰنُ بِالشَّرِّ دُعاءَهُ بِالخَيرِ وَكانَ الإِنسٰنُ عَجولًا
“நன்மையைக் கோரி மனிதன் பிரார்த்திப்பதை போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கூறியும்  பிரார்த்திக் கின்றான். (ஏனென்றால்) மனிதன் (இயற்கையாகவே பொறுமை இழந்த) அவசரக்காரனாக இருக்கின்றான்.” (17:11)
عَن جَابِر سِرْنَا مَعَ رَسُولِ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ بَطْنِ بُوَاطٍ ٬ وَھُوَ يَطْلُبُ الْمَجْدِيَّ بْنَ عَمْرٍو الْجُهَنِيَّ ٬ وَكَانَ النَّاضِحُ يَعْتَقِبُهُ مِنَّا الْخَمْسَةُ وَالسِّتَّةُ وَالسَّبْعَةُ ٬ فَدَارَتْ عُقْبَةُ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ عَلَى نَاضِحٍ لَهُ ٬ فَأَنَاخَهُ فَرَكِبَهُ ٬ ثُمَّ بَعَثَهُ فَتَلَدَّنَ عَلَيْهِ بَعْضَ التَّلَدُّنِ ٬ فَقَالَ لَهُ: شَأْ ٬ لَعَنَكَ الله ٬ فَقَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ ھَذَا اللَّاعِنُ بَعِيرَهُ؟ قَالَ: أَنَا ٬ يَا رَسُولَ الله قَالَ: انْزِلْ عَنْهُ ٬ فَلاَ تَصْحَبْنَا بِمَلْعُونٍ ٬ لاَ تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ ٬ وَ لاَ تَدْعُوا عَلَى أَوْلاَدِكُمْ ٬ وَ لاَ تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ ٬ لاَ تُوَافِقُوا مِنَ الله سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ ٬ فَيَسْتَجِيبُ لَكُمْ. رواه مسلم
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : “பத்ன் புவாத்” என்ற யுத்தத்தில் கலந்து கொள்ள நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சென்றோம்.
அல் மஜ்தீ இப்னு அம்ர் அல் ஜுஹனி என்பவரை நபி ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம் அவர்கள் தேடிக் கொண்டிருந் தார்கள். தண்ணீர் எடுத்து வரும் ஒட்டகத்தை எம்மில் 5, 6, 7 பேர் பின் தொடர்ந்தோம். அன்ஸாரிகளைச் சேர்ந்த உக்பாவின் தவணை வந்தது. அந்த ஒட்டகத்தை குனியச் செய்து ஏறி (அவ்வொட்டகத்தை) கிளப்பி விட்டார். பிரயாணத்தை ஆரம்பித்த அது சற்று தாமதித்து நின்றது. (உக்பா ஆத்திரம் கொண்டு) உன்னை அல்லாஹ் சபிப்பானாக என்று கூறினார்.
அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் ஒட்டகத்தை சபித்தவர் யார்? எனக்கேட்டார்கள். அல்லாஹ் வின் தூதரே! நான்தான் என்றார்கள் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதனை இறங்குமாறு கூறி சபிக்கப்பட்ட ஒன்றை சேர்த்துக் கொண்டு நீ எம்மோடு வரவேண்டாம் என்று கூறினார்கள். பின்னர் உங்களுக்குப் பாதகமாக துஆக் கேட்க வேண்டாம், மேலும் உங்கள் பிள்ளை களுக்குப் பாதகமாக துஆக் கேட்க வேண்டாம், மேலும் உங்கள் செல்வங்களுக்கு பாதகமாகவும் துஆக் கேட்க வேண்டாம். (சில வேளை) உங்களால் கேட்கப்படுவது அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படும் ஒரு நேரத்துக்குள்ளாகலாம். (அங்கீகரிக்கப் படலாம்) என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம் : முஸ்லிம்
ஏற்கனவே கூறப்பட்ட ஹதீஸ்களிலும் இவ்வாறு சாபமான முறையில் பிரார்த்தனையில் ஈடுபடலாகாது என்பது விளங்கக் கிடைக்கின்றது. எனவே எமது மனைவி மக்களுக்கு நல்வாழ்வு கிட்டவும் அல்லாஹ் எமக்கு அருளியவை அழிவுறாமல் இருக்கவும் பிரார்த்திப்போமாக. அவர்களிடம் நாம் காணும் செயல்களுக்காக ஆத்திரப்பட்டு சபிக்காமல் அன்போடு திருத்தி நல்வாழ்வுக்காக துஆக் கேட்போமாக!
இஸ்திகாரா துஆ
اللّهُمَّ إِنِّي أَسْتَخيرُكَ بِعِلْمِك ٬ وَأسْتَقْدِرُكَ بِقُدْرَتِك ٬ وَأَسْألُكَ مِنْ فَضْلِكَ العَظيم ٬ فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِر ٬ وَتَعْلَمُ وَلا أَعْلَم ٬ وَأَنْتَ عَلاّمُ الغُيوب ٬ اللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ ھذا الأمْرَ- وَيُسَمِّي حاجَتَه - خَيْرٌ لي في ديني وَمَعاشي وَعاقِبَةِ أَمْري ٬ فَاقْدُرْهُ لي وَيَسِّرْهُ لي ثمَّ بارِكْ لي فيه ٬ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ ھذا الأمْرَ شَرٌ لي في ديني وَمَعاشي وَعاقِبَةِ أَمْري ٬ فَاصْرِفْهُ عني وَاصْرِفْني عَنْهُ وَاقْدُرْ لي الخَيْرَ حَيْثُ كانَ ثُمَّ أَرْضِني بِه
பொருள்: யா அல்லாஹ் நான் உன்னிடம் – உனது ஞானத்தைக் கொண்டு நன்மையைக் யாசிக்கின் றேன். மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கின்றேன். மேலும் உன்னிட மிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கின் றேன். ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன். என்னிடம் எந்த ஆற்றலு மில்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதுவும் அறியேன் மேலும் நீ மறைவானவை அனைத்தும் அறிந்தவன்யா அல்லாஹ். இந்தப் பணி (தனது பணியின் பெயர் குறிப்பிடுக)  எனக்கும் எனது தீனுக்கும் எனது வாழ்க்கைக்கும் எனது  விவகாரத்தின் முடிவிற்கும் (இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம்). - எனது உடனடியான அல்லது தாமதமான விவகாரத்திற்கும் நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எளிதாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி (தனது பணியின் பெயர் குறிப்பிடுக) எனக்கு இது எனது தீனுக்கும் எனது வாழ்க்கைக்கும் எனது விவகாரத்தின் முடிவுக்கும் (இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். - எனது உடனடியான அல்லது தாமதமான விவகாரத்திற்கும் தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! இதனை விட்டும் என்னையும் தீருப்பிவிடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே ! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தி தருவாயாக நூல் : புகாரி பாகம் 7 பக்கம் 162





திக்ரும் துஆவும்
திக்ர் என்பது அல்லாஹ்வை நினைவு படுத்துதலை குறிக்கின்றது. அல்லாஹ்வுக்கென்றுள்ள திரு நாமங்களையும் (பண்பு) ஸிபாத்துக்களையும் கொண்டு அவனைப் போற்றி புகழ்ந்து தூய்மை படுத்துவதையே இது குறிக்கின்றது. ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூறி அல்லாஹ்வை ஏகத்துவப் படுத்துவதும் அவனால் அருளப் பட்டவற்றுக்காக ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறி அவனுக்கே அனைத்து புகழையும் உரித்தாக்குவதும் ஆச்சரியமான ஒன்றை கண்டு அல்லது அடைந்து “மாஷா அல்லாஹ்” என்று அல்லாஹ்வுக்கு பொருந்தாதவற்றை விட்டும் தூய்மைப்படுத்த ஸுப்ஹானல்லாஹ் என்று கூறுவதும் எல்லாமே “திக்ர்” எனும் சொல்லுக்குள் அடங்குகின்றன.
முஃமின்கள் எப்போதும் அல்லாஹ்வை அனைத்து சந்தர்ப்பங்களிலும் நினைந்து பார்க்க கடமைப் படுகின்றனர்.
 يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اذكُرُوا اللَّهَ ذِكرًا كَثيرًا وَسَبِّحوهُ بُكرَة وَأَصيلًا
விசுவாசிகளே! நீங்கள் அதிகமாக அல்லாஹ்வை நினைவுபடுத்தி (ஸ்தோத்திரம்) செய்துவாருங்கள். மேலும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள். (33:41-42)
(அறிவுடைய இத்தகையோர் தங்கள்) நிலையிலும் இருப்பிலும் தங்கள் படுக்கையிலும் அல்லாஹ்வை நினைத்து, வானங்கள் பூமியின் படைப்பைப் பற்றி சிந்தித்து “எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காக படைக்கவில்லை. நீ மிகத் தூய்மை யானவன். (நரக) நெருப்பின் வேதனையில் இருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக (என்று பிரார்த்திப்பார்கள்) (3/191). எனவே இறை தியானம் என்பது ஒவ்வொருவனிடமிருந்தும் வரவேண்டிய ஒன்றாகும். அது இல்லாதவன் செத்த பிணமாகும்.
عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِي رَضِيَ اللهُّ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّهُ ٬ مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ" رواه البخاري
“தன் இறைவனை தியானிப்பவனுக்கும், தியானிக்காதவனுக்கும் உதாரணம் உயிரோடு வாழ்பவனுக்கும், மரணித்த ஒருவனுக்கும் உள்ள உதாரணமாகும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர், அபு மூஸா அல்அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: புகாரி
عَنْ أَبِي ھُرَيْرَةَ٬عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ٬ ثَقِيلَتَانِ فِي المِيزَانِ٬ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، سُبْحَانَ اللهِّ وَبِحَمْدِهِ٬ سُبْحَانَ اللهِّ العَظِيمِ” رواه البخاري و مسلم
இரண்டு வார்த்தைகள் உள்ளன. அவ்விரண்டும் நாவுக்கு மிக இலேசானதும் அது மீஸானில் பாரமானதுமாகும். அருளாளனான அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரியதாகும்: “ஸுப்ஹா னல்லாஹி வபிஹம்திஹீ, ஸுப்ஹானல்லாஹில் அழீம்” என்று அல்லாஹ்வின் தூதா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவா; அபூ ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.
عن ابي ھريرة رضي الله عنه قال رسول الله صلي الله عليه وسلم أكثروا من قول لا اله الّا الله رواه أحمد
“லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற வார்த்தையை அதிகமதிகம் கூறுங்கள். அறிவிப்பவர்,அபூ ஹுறைரா ரலியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்
அல்குர்ஆன் வசனங்களும் நூற்றுக் கணக்கான ஹதீஸ்களும் இறைதியானம் எனும் திக்ரின் சிறப்பை எடுத்துக் கூ றுகின்றன. அவை  இன்று பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. திக்ர் என்பது ஒரு தனி வணக்கமாகும். அதற்கென்றுள்ள வரையறையைப் பேணியே அது செய்யப்பட வேண்டும். அவ்வாறே “துஆ” என்ற வணக்கமும் நடைபெற வேண்டும். ஒரு அடியான் தன் தேவையை அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடுவதை குறிக்கின்றது. அவனையே வணங்கும் அடியான் அவனிடமே உதவி கேட்க வேண்டும். அவனின்றி வேறு எவரும் சக்தி பெற மாட்டார் என்று நம்புவதோடு அல்லாஹ்விடம் எதையேனும் பெற்றுக் கொள்ள இடைத்தரகர் எவரும் அவசியமில்லை என்றும் நம்பி வாழ வேண்டும். அதனை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு வரையறைகள் உண்டு. அவை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சமயா சந்தர்ப்பங்களுக்குரிய சகல துஆக்களும் ஹதீஸ் கிரந்தங்ககளில் பதியப்பட்டுள்ளன. இன்று அவையும் மொழிபெயர்க்கப்பட்டு பல மொழிகளிலும் கிடைக்கின்றன.
‘அல்மஃஸூராத்’ என்றும் ‘அல்குர்ஆன் பிரார்த்தனைகள்’ என்றும் இன்னும் பலவும் உள்ளன. அவற்றில் “ஹிஸ்னுல் முஸ்லிம்” என்ற கையடக்க துஆத் தொகுப்பு ஆதாரங்களோடு தொகுக்கப் பட்டுள்ளது. மக்கள் விரும்பி பயன்படுத்தும் ஒன்றாக உள்ளது.
அல்குஆன், அல் ஹதீஸ் என்பவற்றில் வந்துள்ள துஆக்கள் எந்தக்  குறைவோ, திரிவோ, பிழையோ இல்லாதவையாகும். அதிலே இடைச்செருகல் செய்ய முடியாது - செய்யவும் கூடாது. அதில் வந்ததை அப்படியே ஓதவேண்டும். எனவேதான் “மஃஸூராத்களை” ஓதிவருமாறு அறிஞர்கள் கூறுகின்றனர். அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள யாவும் அல்லாஹ்வினால் அறிவிக்கப் பட்டவையே. ஏனெனில் அல்லாஹ்
وَما يَنطِقُ عَنِ الهَوىٰ إِن ھُوَ إِلّا وَحىٌ يوحىٰ
“அவர் தன் இஷ்டப்படி (எதனையும்) கூறுவதில்லை இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதே யன்றி வேறன்று” (53:3, 4) எனக் கூறியுள்ளான். துஆக்களை ஸஹாபாக்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுப் பாடமிட்டார்கள் என வரலாறு கூறுகிறது.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِّ رَضِيَ اللهُّ عَنْهُمَا٬ قَالَ: كَانَ رَسُولُ اللهِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا٬ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ القُرْآنِ رواه البخاري
குர்ஆனிலுள்ள சூராக்களை கற்றுத் தந்தது போல், அனைத்து விடயங்களிலும் அதன் நலவை நாடி இஸ்திகாரா செய்வதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு கற்றுத் தந்தார்கள். அறிவிப்பவர்; ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 1162
எம்மில் எவரும் தனக்கென ஒரு துஆவை தயாரித்து ஓதலாம். ஆனால் அதன் வார்த்தைகளில் பொதிந்துள்ள கருத்துக்களை விடவும், அல்லாஹ்வும், ரஸூலும் தந்த வார்த்தைகளில் பொதிந்துள்ளவை ஆழ்ந்த கருத்துடையதாக இருக்கும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
عَنْ أَنَسٍ٬ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ٬ عَادَ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ٬ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ھَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ؟ قَالَ: نَعَمْ ٬ كُنْتُ أَقُولُ: اللهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ٬ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا٬ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سُبْحَانَ اللهِ لاَ تُطِيقُهُ – أَوْ لَا تَسْتَطِيعُهُ - أَفَلَا قُلْتَ: اللهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً٬ وَقِنَا عَذَابَ النَّارِ " قَالَ: فَدَعَا اللهَ لَهُ٬ فَشَفَاهُ. رواه مسلم
நோயுற்றிருந்த ஒரு மனிதரை நோய் வினவுவதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றார்கள். அவர் மிகவும் நலிவடைந்து மெலிந்து  காணப்பட்டார். அம் மனிதனைப் பார்த்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: நீர் ஏதும் துஆக் கேட்டீரா? அல்லது எதையேனும் வேண்டுகிறாயா? எனக் கேட்டார்கள். ஆம்! நான் “இறைவா! என்னை நீ மறுமையில் தண்டிக்க இருப்பதை இவ்வுலகிலே தந்துவிடுவாயாக என்று கேட்டேன் என்றார்,” அதைக் கேட்ட ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஸுப்ஹானல்லாஹ்! உம்மால் அதை சகிக்கமுடியாது. அல்லது நீ அதற்கு சக்திபெறமாட்டாய். ஏன் நீர்
اللهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً ٬ وَقِنَا عَذَابَ النَّارِ
இறைவா! இவ்வுலகில் நலவையும், மறுவுலகில் நலவையும் தந்து நரக தண்டனையிலிருந்து காப்பாற்றுவாயாக” என்று ஓதலாகாதா? என்று கேட்டார்கள். அம்மனிதனும் அவ்வாறே கேட்டார். சுகம் பெற்றார்” அறிவிப்பர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 2688
மஃஸூராவாக வந்துள்ள திக்ருகள், துஆக்கள் மாற்றம் பெறாமல் அப்படியே இருக்கவேண்டும் என ஸஹாபாக்கள் விரும்பினர்.
عَنْ نَافِعٍ٬ أَنَّ رَجُلًا عَطَسَ إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ٬ فَقَالَ: الحَمْدُ لِلَّهِ ٬ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللهِّ قَالَ ابْنُ عُمَرَ: وَلَيْسَ ھَكَذَا عَلَّمَنَاِ رَسُولُ اللهِّ صَلَّى اللهُّ عَلَيْهِ وَسَلَّمَ٬ عَلَّمَنَا أَنْ نَقُولَ: الحَمْدُّ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ رواه الترمذي
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு முன்னிலையில் ஒரு மனிதருக்கு தும்மல் ஏற்பட்டது. அம்மனிதர் அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் என்றார். உடனே இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அம்மனிதரிடம், அல்லாஹ்வின் தூதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கற்றுத் தரவில்லையே! அன்னார் சொன்னார்கள், தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் அலா குல்லி ஹால் என சொல்லவேண்டும் என்று தான் கற்றுத் தந்தார்கள்.
அறிவிப்பவா; இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா. ஆதாரம்: திர்மிதி: 2738
அதோடு இணைத்து நபி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லவில்லை என்றார்கள். எனவே மஃஸூராத்துக்களை பாடமிட்டு ஓதி வருவோமாக! அதன் மூலம் எமது தேவைகளையும் அடைந்து கொள்வோமாக!
துஆக்கேட்பதன் ஒழுங்கு
துஆக் கேட்பதன் மூலம் ஒருவன் தன் தேவையை அடைந்துக் கொள்கிறான். தனக்கு விருப்பமில்லாத ஒன்றைத் தடுத்துக் கொள்கின்றான். தனக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொள்வதற் காக பிரார்த்தனையிலீடுபடுகிறான். அது இவ்வுலக வாழ்கையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இல்லாதிருக்கலாம்.
இவ்வுலக வாழ்வோடு சம்பந்தப்பட்ட ஒன்றைக் கேட்டு அது கிடைக்கப் பெற்றால் அவனடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். சில வேளை நாம் கேட்கும் துஆக்கள் மூலம் தீர்வு காணாத போது கவலைப்படுகின்றோம். துஆவில் ஈடுபடுபவன் ஒரு போதும் நஷ்டப்படுவதில்லை என்பதை நாம் நம்பவேண்டும். துஆக்கள் அங்கீகரிக்கப்பட தடையேதும் இல்லாத போது நல்ல முடிவை நாம் எதிர்பார்க்கமுடியும்.
عَنْ أَبِي سَعِيدٍ٬ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ٬ وَلَا قَطِيعَةُ رَحِمٍ٬ إِلاَّ أَعْطَاهُ اللهُّ بِهَا إِحْدَى ثَلَاثٍ: إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ٬ وَإِمَّا أَنْ يَدَّخِرَھَا لَهُ فِي الْآخِرَةِ٬ وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا " قَالُوا: إِذًا نُكْثِرُ٬ قَالَ: اللهُ أَكْثَرُ رواه أحمد
ஒரு முஸ்லிம் பாவநோக்கில்லாமலும், இரத்த உறவை துண்டிக்க நாடாமலும் துஆக் கேட்டால் அவனுக்கு மூன்றிலொன்றை அல்லாஹ் வழங்கு கிறான். அவனது பிரார்த்தனைக்கு அவசரமாகவே விடையளிக்கிறான். அல்லது அதற்குப் பதிலாக மறுமையில் ஏதும் வழங்க (அப்பிரார்த்தனையில் ) கேட்பதை சேமித்து வைக்கிறான். அப்படியு மின்றேல் அவனுக்கு ஏற்படவுள்ள தீங்குகள் எதையேனும் தடுத்துவிடுகிறான்” என்று கூறியதும், தோழாகள் அப்படியாயின் நாம் அதிமதிகம் கேட்கலாம் என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (கேளுங்கள்) அல்லாஹ்வும் அதிகமதிகம் கொடுப்பவன் தான் என்றர்கள்.
அறிவிப்பவா;அபூ ஸஈத் அல்குத்ரி. ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் – 3/210
عَنْ أَبِي ھُرَيْرَةَ مَرفُوعاً بلفظ : «لاَ يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ٬ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ٬ مَا لَمْ يَسْتَعْجِلْ» قِيلَ: يَا رَسُولَ اللهِ مَا الِاسْتِعْجَالُ؟ قَالَ: يَقُولُ: "قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ٬ فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي٬ فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ" رواه مسلم
அபூ ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: பாவ காரியம் செய்யவும், இரத்த உறவை முறிக்கவும் அவசரப் படாமலும் இருக்கும் வரை அடியானின் துஆவுக்கு விடையளிக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அவசரப்படுவது என்றால் என்ன? எனக் கேட்டபோது நான் பிரார்த்தித்தேன், பிரார்த்தித்தேன் எனக்கு விடையளிக்கப்பட வில்லையே என்று கூறி கவலையுற்று, துஆக் கேட்பதையும் விட்டு விடுவான் என்றர்கள்.
அறிவிப்பவர் அபூ ஹுரைறா ரலியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: முஸ்லிம்.
துஆக் கேட்பவர் பின்வரும் ஒழுங்குகளைக் கடைபிடிக்க வேண்டும்.
1. துஆவின் போது இரு கரங்களையும் அல்லாஹ்வின் பால் உயர்த்திக் கேட்டல்;
2. அல்லாஹ்வைப் போற்றி, புகழ்ந்து அவனது அடியாரும் தூதருமான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் சொல்லி ஆரம்பித்தல்.
3. தனது தேட்டத்தை அடைந்து கொள்ளக் கேட்பதற்கு முன் தவ்பா, இஸ்திக்பார் செய்தல்.
4. அல்லாஹ்வின் நாமங்களைக் கொண்டும் அவனது ஸிபாத்துக்கள் எனப்படும் பண்புகளைக் கொண்டும் அல்லாஹ்வை வேண்டுதல்.
5. அல்லாஹ்வின் அச்சமும், எதிர்பார்ப்பும் கலந்த முறையில் கெஞ்சிக்கேட்டல்.
6. தன் துஆவுக்கு முன் தான தர்மம் செய்தல்.
7. அல்லாஹ்விடம் திரும்பத் திரும்ப துஆக் கேட்டல்.
8. மனதை சம்பூரணமாக அல்லாஹ் பால் ஒருமுகப் படுத்திக் கேட்டல்.
9. அல்லாஹ்வின் முன்னிலையில் அடங்கி ஒடுங்கி கவலைப் பட்டுப் பிரார்த்தித்தல்.
10. துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரங்களைத் தெரிந்து கேட்டல்.
11. கிப்லாவை நோக்கிக் கேட்டல்.
12. சுத்தமான நிலையில் இறைஞ்சுதல்.
13. பொருட் செறிவு கொண்ட மஃஸூராத்துக்களை ஓதிக் கேட்டல்.
துஆ இறைஞ்சும் முறை
ஒவ்வொன்றுக்கும் ஒரு முறை உண்டு. முறை பேணப்பட்டால் காரியம் சாத்தியமாகும். முறை பேணப்படாத போது அது குறையாகவே இருக்கும். தன் தேவையைக் கேட்பவன் அதனை நிறைவு செய்பவனிடம் கெஞ்சிக் கேட்டுப் பெற வேண்டும். ஏதேனும் தருபவனை, என்ன வார்த்தை கூறியேனும் மன்றாடும் மனிதன் சர்வலோக அதிபதியாகிய அல்லாஹ்விடம் எப்படிக் கேட்க வேண்டும்!
ஒவ்வொரு தொழுகையிலும் நாம் ஓதும் சூறா பாத்திஹா துஆக் கேட்கும் முறையைக் கற்றுத் தருகின்றது. நேர்வழி எனும் ஹிதாயத்தை தந்தருளுமாறு கேட்கும் அடியான் முதலில் அல்லாஹ்வையே போற்றவேண்டும் என்பதை அந்த சூறா கற்றுத்தருகின்றது. இதோ சூறா பாத்திஹா:
الْحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ
சர்வலோகத்தைப் படைத்துப் போசிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்து.
اَلرَّحمٰنِ الرَّحيمِ
(அவன்) அளவற்ற அருளானன். நிகரற்ற அன்புடையோன்.
مٰلِكِ يَومِ الدّينِ
தீர்ப்பு நாளின் அதிபதி
إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ
இறைவா! உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
اھدِنَا الصِّرٰطَ المُستَقيمَ
நீ எங்களை நேரான வழியில் நடாத்துவாயாக.
صِرٰاطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغْضُوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ
எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் உன் கோபத்துக்குள்ளானவர்களதும், வழி தவறியவர்களினதும் வழி அல்ல.
ஸஹீஹ் முஸ்லிம்: 395 பதிவாகியுள்ள ஹதீஸில் ஸூறா  பாத்திஹாவின் சிறப்புப் பற்றி கூறப் பட்டுள்ளது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " قَالَ اللَّهُ تَعَالَى:-  قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ الْعَبْدُ: {الْحَمْدُ لِلَّهِ رَبِس الْعَالَمِينَ} قَالَ اللَّهُ تَعَالَى: حَمِدَنِي عَبْدِي وَإِذَا قَالَ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} قَالَ اللَّهُ تَعَالَى: أَثْنَى عَلَيَّ عَبْدِي وَإِذَا قَالَ: {مَالِكِ يَوْمِ الدِّينِ} قَالَ: مَجَّدَنِي عَبْدِي وَقَالَ مَرَّةً: فَوَّضَ إِلَيَّ عَبْدِي فَإِذَا قَالَ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} قَالَ: هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ: {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} قَالَ: هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ" رواه مسلم
 “தொழுகையை நான் இரண்டாகப் பிரித்துள்ளேன். என் அடியானுக்கு அவன் கேட்டதுண்டு. என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று அவ்வடியான் கூறினால், எனது அடியான் என்னைப் போற்றினான் என்று அல்லாஹ் கூறுவான். அர்ரஹ்மானிர் ரஹீம் என்று கூறியதும் எனது அடியான் என் மீது புகழ் கூறினான் என்பான். மாலிகி யவ்மித்தீன் என்றதும் என் அடியான் என்னை கண்ணியப்படுத்தினான் மேலும் என் மீது அவன் கருமங்களை சாட்டினான் என்பான். இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் என்றதும், இதுவே எனக்கும் எனதும் அடியாருக்கும் இடையே உள்ளது. என் அடியாருக்கு அவன் கேட்டதுண்டு என்பான். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம். ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன் என்றதும் இது என் அடியானுக்குரியது. என் அடியானுக்கு அவன் கேட்டதுண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவா; அபூ ஹுரைறா ரழியல்லாஹு அன்ஹு. ஆதாரம்; முஸ்லிம் ; 395
எனவே துஆவில் ஈடுபடுபவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து கேட்க வேண்டும் என்பது விளங்கப்படுகின்றது. இது பற்றிய மேலதிக விளக்கம் ஒன்று பின்வருமாறு
عَن فَضَالَةَ ابْنَ عُبَيْدٍ يَقُولُ: سَمِعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلاً يَدْعُو فِي صَلاَتِهِ لَمْ يَحْمَدِ اللهَ ولَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " عَجِلَ ھَذَا " ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ وَلِغَيْرِهِ: " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ اللهِ وَالثَّنَاءِ عَلَيْهِ ٬ ثُمَّ لْيُصَلِّ عَلَى النَّبِيِّ ٬ ثُمَّ لْيَدْعُ بَعْدُ بِمَا شَاءَ" رواه ابو داود و الترمذي وأحمد
ஒரு மனிதர் தொழுகையின் பின் துஆ கேட்க ஆம்பித்தார். அல்லாஹ்வை புகழவுமில்லை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லவுல்லை. இதைக் கேட்ட நபியவர்கள் இம்மனிதர் அவசரப்பட்டுவிட்டார் என்று கூறிவிட்டு அவரையும், மற்றவர்களையும் அழைத்து உங்களில் எவரும் துஆக் கேட்பதானால் ஆரம்பத்தில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகிய என் மீது ஸலவாத்தும் சொல்லிய பின் விரும்பியதை கேளுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்; பழாலா பின் உபைத் ரலியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் – 6/17, திர்மிதி – 3477, அபூ தாவுத் - 1489
عَنْ سَلْمَانَ الفَارِسِيِّ٬ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُّ عَلَيْهِ وَسَلَّمَ ٬ قَالَ: "إِنَّ اللهَّ حَييٌّ كَرِيمٌ يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّھُمَا صِفْرًا خَائِبَتَيْنِ" رواه ابو داود والترمذي
“நிச்சயமாக உங்கள் இறைவன் வெட்கப்படும் தயாளன். தன்னிடம் கையுயர்த்திக் கேட்கும் அடியானை வெறுங்கையுடன் திருப்ப வெட்கப் படுகிறான்”.  அறிவிப்பவா ஸல்மான் அல் பாரிஸி ரலியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: அபூ தாவுத் - 1488, திர்மிதி - 3556
இவையல்லாத வேறும் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை யெல்லாம் கூறுவதற்குரிய இடம் இதுவல்ல. பொதுவாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக் கேட்கும் போது கையுயர்த்திக் கேட்டார்கள் என்றே காண்கிறோம். மூன்று விதமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைகளை உயர்த்தியுள்ளார்கள்.
முதலாவது: தோற்புயத்துக்குச் சமமாக கையிரண்டையும் சேர்த்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்க துஆ ஓதுவது. வித்ருடைய குனூத்திலும், மழைத் தேடித் தொழும் குத்பாவிலும் இவ்வாறு ஓதப்படுகின்றது. மேலும், ஹஜ்ஜின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபா, மஷ்அருள் ஹராம், கல்லெறியும் இடம், ஸபா, மர்வா ஆகிய இடங்களில்  கையுயர்த்தி துஆ ஓதினார்கள்.
இரண்டாவது: இஸ்திஃபார் செய்யும் போது வலக் கையின் சுட்டு விரலை உயர்த்துவது. குத்பாவில் துஆ ஓதும் போதும் அத்தஹிய்யாத்து ஓதும் போதும் ஏனைய நேரங்களில் லாஇலாஹ இல்லல்லாஹ் போன்றன ஓதும் போதும் முழுக் கையையுமன்றி ஒரு விரலை மாத்திரம் உயர்த்திக் கேட்பது.
மூன்றாவது: அல்லாஹ்விடம் மன்றாடும் போது கையிரண்டையும் வான் நோக்கி உயர்த்திக் கேட்பது. அப்போது மிகவும் கவலைப் பட்டு திரும்பத் திரும்பக் கேட்பது. இது யுத்த நேரங்கள், பயங்கரமான வேளைகளில், எதிரிகளோடு போரிடும் போது, வரட்சி, பட்டினி போன்ற சந்தர்ப்பங்களில் மேற் சொன்னவாரே கெஞ்சி, மன்றாடி, மடக்கி துஆ ஓதப்படும்.
இவ்வாறு துஆக் கேட்கும் போது தன் தேவையையும், இயலாமையையும் சொல்லி இறைஞ்சினால் அல்லாஹ் அதனை அங்கீகரிக்கின் றான். அவன் மிகவும் சமீபமாக இருந்து அடியாருக்கு விடையளிப்பவனாக இருக்கிறான்.
மேலே கூறப்பட்ட யாவும் துஆ ஓதும் போது கையுயர்த்தும் முறைகளையும், சந்தர்ப்பங்களையும் தெளிவுபடுத்துகின்றன. துஆவின் போது கைகளை உயர்த்துவது அவசியமில்லை என்ற கூற்று ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முறன்பட்ட ஒரு கருத்தாகும் என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
اَلَّلهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ – مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَرَسُوْلُكَ محمدٌ صلى الله عليه وسلم وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتعَاذَكَ مِنْهُ عَبْدُكَ ورسولك محمدٌ صلى الله عليه وسلم
இறைவா! உனது அடியாரும் தூதருமாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னிடம் கேட்ட சகல நல்லவற்றையும் நானும் கேட்கிறேன். மேலும் உனது அடியாரும் தூதருமாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னிட ம் பாதுகாப்பு தேடிய சகலவற்றிலிருந்தும் நானும் பாதுகாவல் தேடுகின்றேன்.
தொழுகையும் அதன் பின் உள்ள ஓதல்களும்
தொழுகை ஒரு முஸ்லிமையும் காபிரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. தொழுகைக்காக நிற்கும் ஒருவன் அல்லாஹ்வுடன் சம்பாஷிக்கின்றான். தக்பீர் கட்டியது முதல், தொழுகையை  முடித்துக் கொள்ளும் வரை அவன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து ஒவ்வொரு இடங்களிலும் ஓதவேண்டிய துஆக்களையும் ஓதுகிறான். இவ்வாறு தொழுது முடிப்பவன் பின் வரும் ஓதல்களையும் ஓதிக் கொள்வது ஸுன்னத்தாகும்:
 أَسْتَغْفِرُ اللهَ “ மூன்று விடுத்தம்
“اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ ٬ تَبَارَكْتَ يا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ" لاَ إِلَهَ إِلَّا اللهُّ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ٬ لَهُ المُلْكُ ٬ وَلَهُ الحَمْدُ ٬ وَھُوَ عَلَى” كُلِّ شَيْءٍ قَدِيرٌ ٬ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ٬ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ٬“وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ ٬ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ ٬ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا ٬ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ،
 لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ٬ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَھُوَ عَلَى٬ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ٬ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِالله ٬ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ٬ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ ٬ لَا إِلَهَ إِلَّا اللهُ وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ. 
இவைகள் தொழுகையின் பிறகு ஓதப் பட வேண்டியவையாகும். அதுவன்றி நடைமுறையில் உள்ள அமைப்பில் ஒருவர் துஆ ஓத, மற்றவர் ஆமீன் என்று சொல்வது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமோ, அன்னாரது தோழர்களிடமோ காணப்படாத ஒரு நூதன பழக்கமாகும்.
ஏனெனில் அவர்கள் தொழுகைக்குப் பின் ஓதிய ஓதல்கள், ஓதுமாறு சொல்லிக் கொடுத்தவைகள் எதிலும், தற்போது நடைமுறையிலுள்ளவற்றுக்கு எந்தவொரு ஆதாரத்தையும் காணமுடியவில்லை. ஹதீஸ் கலை மேதைகள் எவரும் தொழுகைக்குப் பின் கூட்டாக அமர்ந்து ஒருவர் ஓத மஃமூம்கள் ஆமீன் சொல்லுவதற்கு ஆதாரமாக எந்தவொரு ஹதீஸையும் அறிவிக்க வில்லை. அதனையெல்லாம் தலைப்பிட்டுக் கூறவு மில்லை. “பர்ளுத் தொழுகையின் பின் திக்ருகள்” என்றும் “ஓதப்பட வேண்டியவைகள்” என்றும் தலைப்பிட்டு அவ்வோதல்களைத் சிலர் திரட்டித் தந்துள்ளனர். பர்ளான தொழுகைக்குப் பின்னால் கேட்கப்படும் துஆ அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்படுவதாக வந்துள்ள ஹதீஸ்கள் கூட்டாக துஆக் கேட்பதைக் குறிக்கவில்லை என்பதை அந்த ஹதீஸ்களை ஊன்றிக் கவனித்தால் புரிந்து கொள்ளமுடியும்.
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரங்களில் ஒன்று, பர்ளான தொழுகைக்குப் பின் கேட்கப்படுவதாகும்.
عَنْ أَبِي أُمَامَةَ رَضي الله عنهُ قَالَ: قِيلَ لِرَسُولِ اللهِّ صَلى لله عليهِ وَسَلم: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: "جَوْفَ اللَّيْلِ الآخِرِ ٬ وَدُبُرَ الصَّلَوَاتِ المَكْتُوبَاتِ” رواه الترمذي
“அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வால் மிகவும் செவிமடுக்கப் படும் துஆ எது? என்று கேட்கப்பட்ட போது நடுநிசியிலும், பர்ளான தொழுகைக்குப் பின்னும் கேட்கப்படும் துஆ என பதிலளித்தார்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அறிவிப்பவர் : அபு உமாமா ரலியல்லாஹு அன்ஹு ஆதாரம் : திர்மிதி -3499
இந்த ஹதீஸின் அடிப்படையிலே பர்ளான தொழுகைக்குப் பின் துஆ கேட்பது மிகவும் வேண்டத்தக்கது, விருப்பத்துக்குரியது எனக் கூறப்பட்டுள்ளது.
அது எப்படி அமைய வேண்டும்? இமாம் ஓத மஃமூம் ஆமீன் சொல்வதா? மஃமூம்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இமாம் என்ன செய்ய வேண்டும்? என்ற பல கேள்விகள் உள்ளன. அவற்றுக்கான பதில்களையும் பார்ப்போம். “இன்ஷாஅல்லாஹ்”.
இஸ்லாத்தை ஏற்ற புதியவர்களுக்கு தொழுகை பற்றியும் அதன் பின்னால் ஓதப்பட வேண்டியவை பற்றியும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கற்றுக் கொடுத்தர்கள்:
عَن أَبي مَالِكٍ الْأَشْجَعِيِّ ٬ عَنْ أَبِيهِ ٬ قَالَ: كَانَ الرَّجُلُ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ ٬ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدْعُوَ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: "اللهُمَّ اغْفِرْ لِي٬ وَارْحَمْنِي ٬ وَاھْدِنِي ٬ وَعَافِنِي وَارْزُقْنِي”
அபூ மாலிக் அல் அஸ்ஜஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் தந்தையைத் தொட்டும் அறிவிக்கிறார்கள். யாரேனும் ஒரு மனிதர் இஸ்லாத்தை ஏற்றால் அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையைக் கற்றுக் கொடுப்பார்கள். அதன் பின்
اللهُمَّ اغْفِرْ لِي ٬ وَارْحَمْنِي ٬ وَاھْدِنِي ٬ وَعَافِنِي وَارْزُقْنِي” رواه مسلم
என்ற துஆவை ஓதும் படி ஏவுவார்கள்.  ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.
தொழுது முடிந்ததும் சிலர் அதன் பின் ஓதப்பட வேண்டிய ஓதல்கள் எதையுமே ஓதாமல் எழுந்துச் சென்று விடுகின்றனர். எந்தவொரு அத்தியாவசியத் தேவையுமின்றி அவ்வாறு எழுந்து செல்வது ஸுன்னத்திற்கு மாற்றமாகும்.
அதே நேரத்தில் அந்த ஓதல்களோடு நிறுத்திக் கொண்டு செல்வோரை ஏசி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதும் ஸுன்னத்திற்கு மாற்றமே. எனவே உத்தமத் தோழர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நபி வழியை முதல் முதலில் விளங்கிய சிறப்புக்குரியவர்கள் உத்தம ஸஹாபாக்களே. அவர்களது செயல்கள் நபிவழியை - ஸுன்னாவை ஒட்டியதாகவே இருந்தன.
பிரயாண துஆ
اللهُ أكبَر ٬ اللهُ أكبَر ٬ اللهُ أكبَر ٬ سُبْحانَ الَّذي سَخَّرَ لَنا ھذا وَما كُنّا لَهُ مُقْرِنين ٬ وَإِنّا إِلى رَبِّنا لَمُنْقَلِبون ٬ اللّهُمَّ إِنّا نَسْأَلُكَ في سَفَرِنا ھذا البِرَّ وَالتَّقْوى ٬ وَمِنَ الْعَمَلِ ما تَرْضى ٬ اللّهُمَّ ھَوِّنْ عَلَينا سَفَرَنا ھذا وَاطْوِ عَنّا بُعْدَه ٬ اللّهُمَّ أَنْتَ الصّاحِبُ في السَّفَر ٬ وَالْخَليفَةُ في الأھلِ ٬ اللّهُمَّ إِنّي أَعوذُبِكَ مِنْ وَعْثاءِ السَّفَر ٬ وَكَآبَةِ الْمَنْظَر ٬ وَسوءِ الْمُنْقَلَبِ في المالِ وَالأَھْل.

தொழுது முடிந்த பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் செய்தவை:
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பங்க ளில் ஒன்றாக பர்ளான தொழுகைக்குப்பின் கேட்கப்படும் துஆ அமைந்துள்ளது. தொழுது முடிந்ததும் ஓதவேண்டிய ஒதல்கள் பற்றி ஏற்கனவே கூறினோம். உத்தமத் தோழர்களுக்கு நபி ஸல்லல்லாஹு   அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்குப்பின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்டிக் கொடுத்தார்கள்.
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ٬ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ يَوْمًا ٬ ثُمَّ قَالَ: " يَا مُعَاذُ إِنِّي لَأُحِبُّكَ ". فَقَالَ لَهُ مُعَاذٌ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ وَأَنَا أُحِبُّكَ. قَالَ: " أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ أَنْ تَقُولَ: اللهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ " رواه ابو داود وأحمد والبخاري في الأدب المفرد
முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கரங்களை பிடித்துக்கொண்டு முஆதே நான் உங்கள் மீது அன்பு வைக்கிறேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே நானும் உங்களை அன்பு வைக்கிறேன் என்று கூறினேன். அப்பொழுது றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “(முஆதே) ஒவ்வொரு தொழுகையின் பின்பும் ‘இறைவா! உன்னை (எப்போதும்) நினைக்கவும், உனக்கு நன்றி செலுத்தவும், உனக்கென்று செய்யும் கிரியைகளை நல்ல முறையில் செய்யவும் அருள்புரிவாயாக’ என்று ஓதுவதை விட்டுவிடாதே” என்று உபதேசம் செய்தார்கள்.
அறிவிப்பவர் முஆத் ரலியல்லாஹு அன்ஹு.
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் - (5/244), அபூ தாவுத் - (1522) இமாம் புஹாரியின் அல் அதபுல் முப்ரத் (693)
كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ ھَؤُلاَءِ الكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ المُعَلِّمُ الغِلْمَانَ الكِتَابَةَ وَيَقُولُ: إِنَّ رَسُولَ اللهِّ صَلَّى للهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلاَةِ: "اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ ٬ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أرْذَلِ العُمُرِ٬ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا ٬ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ" رواه البخاري
ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறுவர்களுக்கு எழுதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் போன்று பின்வரும் வசனங்களை தம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்த தோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்த பின் அந்த துஆவை ஓதி காவல் தேடினார்கள் என்று கூறுவார்கள். “யாஅல்லாஹ்!  கோழைத் தனத்தில் இருந்து உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். மேலும் வயோதிபத்தின் இயலாமையில் இருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். இன்னும் உலக வாழ்க்கையிலும் கப்று வேதனையில் ஏற்படும் சோதனையில் இருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.”
அறிவிப்பவர்: ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி. ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற் குறித்த துஆவை ஓதி வந்ததோடு தம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தார்கள்.
عَنِ الْبَرَاءِ ٬ قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ٬ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ ٬ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ ٬ قَالَ: فَسَمِعْتُهُ يَقُولُ: "رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ” رواه مسلم
நாம் தொழுகைக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் நின்றால் அன்னாரின் வலப்புறமாக நிற்கவே விரும்புவோம். (தொழுகை முடிந்த பின்) எம்மை நோக்கி அமர்ந்து ‘என் இறைவா! உன் அடியாரை விசாரனைக்காக எழுப்பும் நாளில் உனது தண்டனையில் இருந்து என்னைக் காத்தருள் வாயாக’ என்று அவர்கள் சொல்வதை கேட்டேன் என்று உத்தமத் தோழர் பராஃ இப்னு ஆஸிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்: அல் பராஃ இப்னு ஆஸிப் ஆதாரம்: ஸஹீஹுல் முஸ்லிம்
இந்த ஹதீஸ் மூலம் தொழுகையை நடாத்தி முடிந்த இமாம் மஃமூம்களை நோக்கி இருப்பதே ஸுன்னத்தான முறை என்று தெளிவாகிறது.
 عَنْ أمِّ سَلَمَةَ ٬ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: فِي دُبُرالْفَجْرِ: " اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا ٬ وَعَمَلاً مُتَقَبَّلاً ٬ وَرِزْقًا طَيِّبًا  “رواه أحمد وابن ماجه
ஸுப்ஹுத் தொழுது விட்டால் “இறைவா! நிச்சயமாக நான் எனக்குப் பயன் உள்ள அறிவையும், அங்கீகரிக்கப்பட்ட அமலையும், விசாலமான அருளையும் உன்னிடம் கேட்கிறேன்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதி வந்தார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா ஆதாரம் : முஸ்னத் அஹ்மத் -(6/294), இப்னு மாஜா -(925)
عن عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُّ عَنْهُ ٬ قَالَ: كَانَ رَسُولُ اللهِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ مِنَ الصَّلَاةِ ٬ قَالَ: "اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَالْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ” رواه ابو داود وأحمد
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் தொழுகையை முடித்துக்கொண்டால் “இறைவா! நான் முன் செய்த பாவத்தையும், பின் செய்த பாவத்தையும், மறைத்துச் செய்த பாவத்தையும், பகிரங்கமாக செய்த பாவத்தையும், எல்லை மீறிச் செய்த பாவத்தையும், என்னால் நிகழ்ந்த, நீ (அதனை) அறிந்து வைத்திருக்கின்றாயே அந்தப் பாவத்தையும் மன்னித்தருள்வாயாக. நீயே எதையும் முற்படுத்துபவனும் பிற்படுத்துபவனுமாய் இருக்கின்றாய். நீயன்றி வணக்கத்துக்கு யாருமில்லை” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அலி இப்னு அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு ஆதாரம் : அபூ தாவுத், முஸ்னத் அஹ்மத்
عَنْ نَافِعٍ ٬ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا ٬ عَنْ أَبِي أَيُّوبَ الأنصاري قَالَ: مَا صَلَّيْتُ وَرَاءَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلاَّ سَمِعْتُهُ حِينَ يَنْصَرِفُ مِنْ صَلاَتِهِ يَقُولُ: "اللهُمَّ اغْفِرْ لِي خَطَاياي وعمدى٬ اَللَّهُمَّ وَاھْدِنِي لِصَالِحِ الْأَعْمَالِ٬ وَالْأخْلاَقِ٬ إِنَّهُ لاَ يَهْدِي لِصَالِحِهَا إِلاَّ أَنْتَ وَلاَ يَصْرِفُ سَيئهَا إِلاَّ أَنْتَ” رواه الطبراني
உங்கள் நபிக்குப் பின் நான் தொழுத போதெல்லாம் அவர் தன் தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பும் போது இந்த துஆவை கேட்காமல் இருக்கவில்லை “இறைவா! எனது சிறு பாவங்களை யும், வேண்டுமென்றே செய்தவற்றையும் மன்னித்த ருள்வாயாக, நற்காரியங்கள், நற்பண்புகள் என்பவற்றுக்கு எனக்கு நேர்வழி காட்டுவாயாக. நிச்சயமாக நீயன்றி வேறெவரும் நல்லவற்றின் பால் வழிகாட்டவும் மாட்டார்கள். அதுபோல் அதன் கெடுதியில் இருந்தும் தடுக்கவும் நீயன்றி வேறெவரும் இல்லை.”
அறிவிப்பவர் :அபூ அய்யுப் அல்அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹுஆதாரம் :அத்தபரானி 4/125)
عَنْ مُسْلِمِ بْنِ الْحَارِثِ التَّمِيمِيِّ عَنْ رَسُولِ اللهِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ٬ أَنَّهُ أَسَرَّ إِلَيْهِ فَقَالَ: " إِذَا انْصَرَفْتَ مِنْ صَلاَةِ الْمَغْرِبِ فَقُلْ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ ٬ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ ثُمَّ مِتَّ فِي لَيْلَتِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا ٬ وَإِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَقُلْ كَذَلِكَ ٬ فَإِنَّكَ إِنْ مِتَّ فِي يَوْمِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا " رواه أحمد وابو داود
முஸ்லிம் அத் தமீமி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னிடம் நெருங்கி ஒரு விடயத்தை இரகசியமாக சொன்னார்கள் என்று அறிவிக்கின் றார்கள். அதாவது நீ மக்ரிப் தொழுகையை முடித்து விட்டால் இறைவா! என்னை நீ மன்னித்தருள் வாயாக என்று ஏழுவிடுத்தம் ஓதிவா. நீ அவ்வாறு ஓதிவந்து அவ்விரவில் மரணித்தாலும் உனக்கு நரகில் இருந்து பாதுகாப்பு உண்டு.
ஸுப்ஹு தொழுதுவிட்டு நீ அப்படி ஓதினாலும் உனக்கு அவ்வாறே பாதுகாப்பு விதியாக்கப்படும். நீ அன்று பகல் மரணித்தாலும் உனக்கு நரகில் இருந்து பாதுகாப்பு எழுதப்படும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஸ்லிம் இப்னு அல் ஹாரீஸ் அத்தமீமி. ஆதாரம் : அபூ தாவுத் – 5049, அஹ்மத் – 4/234
عَنْ عَائشَة قَالَتْ: صَلى رَسُولُ لله صلى لله عليهِ وَسَلَّم الضُّحَى ثُمَّ قَال اَللهُمَّ اغْفِرْ لِي وتُبْ عَلَيَّ إِنَّكَ التَّوَّابُ الْغَفُور رواه النسائي
“ளுஹா தொழுகையை முடித்துக்கொண்ட அல்லாஹ் வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவா! நீ என்னை மன்னித்தருளுவாயாக, நிச்சயமாக நீ மன்னிப்ப ளிப்பவன் என்று கூறினார்கள்”.
அறிவிப்பவர்; : ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. ஆதாரம் : அன்நஸஈ - 9935
عَنْ جَابِرَ ابْنَ سَمُرَةَ ٬ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ بِإِصْبَعِهِ وَھُوَ فِي الصَّلاَةِ ٬ فَلَمَّا سَلَّمَ سَمِعْتُهُ يَقُولُ: "اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ ٬ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ”
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்து விட்டால் கீழே உள்ள துஆவை ஓதக் கேட்டேன்.
 “இறைவா! நிச்சயமாக நான் அறிந்தும் அறியாதது மான சகல நலவுகளிலிருந்தும் உன்னிடம் கேட்கி றேன். மேலும் நான் அறிந்தும் அறியாததுமான கெடுதிகளில் இருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பவர் - ஜாபிர் இப்னு ஸமுறஹ் ரழியல்லாஹு அன்ஹு  ஆதாரம்: அத்தபரானி - 655
عَن أَنس بن مالك قال كان مقامي بين كتفي رسول الله صلى الله عليه وسلم فكان إذا سلم قال: اَللهُمَّ اجْعَلْ خَيْرَ عُمري آخِرَه اللهُمَّ اجْعَلْ خَواتِيم عَملي رِضوانك اَللهُمَّ اجْعَلْ خَيْرَ أَيَّامِي يَوم أَلْقَاكَ رواه الطبراني
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோற் புயங்களுக்கிடையில் இருக்கை யில் கீழே உள்ள துஆவை ஓதினார்கள்.
اَللهُمَّ اجْعَلْ خَيْرَ عُمري آخِرَه اللهُمَّ اجْعَلْ خَواتِيم عَملي رِضوانك اَللهُمَّ اجْعَلْ خَيْرَ أَيَّامِي يَوم أَلْقَاكَ رواه الطبراني
இறைவா! எனது வாழ்வின் இறுதிப்பகுதியை நல்லதாக ஆக்குவாயாக மேலும் எனது கருமங்களின் இறுதியை உன் திருப்திக்குரியதாக ஆக்குவாயாக. எனது நாட்களில் நல்லதாக உன்னை சந்திக்கும் நாளை அமைத்து வைப்பாயாக என்று ஓதுவார்கள்
அறிவிப்பவர், அனஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆதாரம்: அத்தபரானி - 4669
عن أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُّ عَنْهُ: أَنَّهُ قَالَ لِرَسُولِ اللهِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي ٬ قَالَ: " قُلْ: اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا٬ وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ٬ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ٬ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ "رواه البخاري
அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலே கூறப்பட்ட துஆவை எனது தொழுகையில் சேர்த்து ஓதுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குக்  கற்றுத் தந்தார்கள். இறைவா! நான் அதிகமாக எனக்கு அநியாயம் இழைத்துக் கொண்டேன். பாவங்களை மன்னிப்பவன் நீயன்றி வேறெவரும் இல்லை எனவே உன்னில் இருந்து எனக்கு மன்னிப்பை அருள்வாயாக. மேலும் எனக்கு அருள்புரிவாயாக நிச்சயமாக நீ மன்னித்துக் கிருபை செய்பவன்.
அறிவிப்பவர்: ஆபூபக்கா ரலியல்லாஹு அன்ஹு ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி - 834
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا بِدُعَاءٍ كَثِيرٍ لَا نَحْفَظُهُ، ثُمَّ قَالَ: " سَأُنَبِّئُكُمْ بِشَيْءٍ يَجْمَعُ ذَلِكَ كُلَّهُ تَقُولُونَ: اللهُمَّ إِنَّا نَسْأَلُكَ بِمَا سَأَلَكَ نَبِيُّكَ مُحَمَّدٌ عَبْدُكَ وَرَسُولُكَ، وَنَسْتَعِيذُكَ بِمَا اسْتَعَاذَ بِهِ نَبِيُّكَ مُحَمَّدٌ عَبْدُكَ وَرَسُولُكَ، أَنْتَ الْمُسْتَعَانُ، وَعَلَيْكَ الْبَلَاغُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ " رواه الطبراني
அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவார்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமான துஆக்களை ஓதி வருவார்கள். அவற்றில் எதனையும் நாம் மனனம் செய்து கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அதிகமான துஆக்களை ஓதுகின்றீர்கள். அதில் எதனையும் நாம் பாடமிட்டுக் கொள்ளவில்லையே! என்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “(நான் ஓதிய) அவை அனைத்தையும் உள்ளடக்கும் ஓன்றை உமக்கு அறியத் தரட்டுமா?” என்று கேட்டுவிட்டு மேலே கூறப்பட்ட துஆவை ஓதுமாறு கூறினார்கள். (அதன் பொருள்) “இறைவா! உனது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னிடம் கேட்டவற்றை நானும் கேட்கிறேன். மேலும் உனது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதுகாவல் தேடிய அனைத்தில் இருந்தும் நானும் காவல் தேடுகிறேன். நீயே உதவி வேண்டப்படுபவன். உன் மீது எத்தி வைத்தலும் உண்டு. அல்லாஹ்வை கொண்டேயன்றி எந்த நற்காரியம் புரியும் சக்தியோ தீயகருமங்களில் இருந்து திரும்பவோ முடியாது.
அறிவிப்பவா;: அபூ உமாமா ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம்: அத்தபரானி
இவை சில துஆக்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவைகள் ஒவ்வொன்றும் அன்னாரால் ஓதப்பட்டதும் ஓதுமரறு ஏவப்பட்டது மாகும்.  தற்போது நடைமுறையில் உள்ளவாறு தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதுவிட்டு இமாம் ஓதுவதும் மஃமூம்கள் ஆமீன் சொல்வதுமாக எந்த ஒரு ஹதீஸிலும் காணக்கிடைக்கவில்லை. இவற்றிலும் இதுபோன்று கூறப்பட்ட துஆக்களில் நான், எனக்கு, என்னை என்று தனிமையை தொனிக்கும் சொற்களே வந்துள்ளன. அவையெல்லாம் தொழுகைக்குப் பின் தனித்து ஓதப்பட்டதையே காட்டுகிறது. அரபுக்கல்லூரிகளில் பாடபோதனை நூலாக உள்ள உம்ததுஸ் ஸாலிக் என்ற நூலில் கூட
 وَيُنْدَبُ ذِكْرُ اللهِ تَعالى والدُّعاء سِرًّا عَقِبَ الصَّلاَةِ
தொழுகையின் பின் திக்ர், துஆ என்பவற்றை சப்தமிடாமல் ஓதுவது ஸுன்னத்து, என்று கூறப் பட்டுள்ளது. (உம்ததுஸ் ஸாலிக் - பக் 55)
பிரபல்யம் ஆனால் ஆதாரபூர்வமல்ல
சில துஆக்கள் பிரபல்யமாக உள்ளன. அவை ளஈப் (பலவீனமானவை) அல்லது மௌழூஊ (புனைந்து கூறப்பட் டவை.)
உதாரணமாக:
روى العباس ابن أبي بكر اليماني أنه قال من قال حين يسمع المؤذن أشهد أن محمدا رسول الله يقول مرحبا بحبيبي وقرة عينى محمد بن عبد لله صلى لله عليه وسلم ثم يقبل إبهاميه ويجعلهما على عينه لم يرمد أبدا.
1. பாங்குச் சத்தம் கேட்டு அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று கூறப்படும் போது மர்ஹபன் பிஹபீபி வகுர்ரத்து அய்னீ முகம்மதிப்னி அப்தில்லாஹ் எனக் கூறி இரண்டு பெரு விரல்களையும் முத்தமிட்டு இரு கண்களிலும் வைப்பவனுக்கு ஒரு போதும் கண் நோய் பிடிக்காது என்ற  செய்தி இட்டுக்கட்டப் பட்டது என கஷ்புல் கபாஃ -(2/270) பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
2. தொழுகை முடிந்ததும் சிலர் தம் வலக்கரத்தை தலையில் வைத்து
بِسْمِ اللهِ الذي لا إله غيره الرحمن الرحيم ٬ اللهم أذھب عني الهم والحزن
என்று ஓதப்படும் துஆ தபரானியில் கூறப்பட்டுள்ளது. இது பலயீனமான ஹதீஸ்களை சார்ந்ததாகும். (அல்முஃஜமுல் அவ்ஸத்-
2499)
3. அத்தஹியாத்தில் இரண்டு பெருவிரலையும் அசைத்துக் கொண்டு ஓதுவது:- ஒரு மனிதர் இரண்டு பெருவிரலையம் அசைத்த வண்ணம் அத்தஹியாத் தில் இருக்கும் போது பக்கத்தால் சென்ற நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப்படுத்து எனக் கூறி ஒரு சுட்டு விரலை அசைக்குமாறு பணித்தார்கள்.
(ஆதாரம் : அத்திர்மிதி- 3552)
4. ஸஜ்தா திலாவத் (குர்ஆன் ஓதும் போது வரும் ஸுஜுது) செய்து விட்டு கையுயர்த்திக் கேட்பது எந்த ஒரு அடிப்படையிலும் இல்லாததாகும்.
حَسْبِيَ اللهُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَیْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیمِ
''எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழி படுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை. அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி"
மஃசூராத்துக்களை ஓதுவோம்.
அரபு மொழி சொல் வளம் கொண்டது. கருத்துச் செறிவு கொண்டது. அத்தகைய ஒரு மொழியில் குர்ஆன் இறக்கியருளப் பட்டதனால் தான் அது இறுதிவரை நிலைத்து நிற்கப் போகிறது. அல்குர்ஆன் அருளப்பட்ட நபியின் மொழியும் அரபு மொழியே. அன்னார் மொழிந்தவை வேத வெளிப்பாடன்றி தன் சுயவிருப்பத்தில் கூறிய ஒன்றல்ல. அவ்விரண்டுமே ஷரீஅத்தின் அடிப்படை யாகும். அன்னாரது வார்த்தைகளும் பொருட்செறிவு நிறைந்ததேயாகும். எனவே தான் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள துஆக்களை ஓதி வருமாறு வலியுறுத்தப் பட்டுள்ளோம். அதனையே “அல் மஃஸூராத்” எனப்படுகிறது. கருத்துப் பிழையோ பொருட் சிதைவோ இல்லாத அந்த துஆக்களின் உட் கருத்துக்களை அரபு மொழி தெரிந்தோராலேயே சுவைக்க முடியும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சகலதும் பொதிந்த துஆக்களையே விரும்பினார் கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. ஆதாரம்: அபூ தாவுத் - 1422
عَنْ أَبِي ھُرَيْرَةَ رَضِيَ اللهُّ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِّ صَلَّى للهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بُعِثْتُ بِجَوَامِعِ الكَلِمِ رواه البخاري و مسلم
“கருத்துச் செறிந்த சொல் வளம் கொண்ட வார்த்தைகளோடு நான் தூதனுப்பப் பட்டுள்ளேன்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைறா ரலியல்லாஹு அன்ஹு.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி – 7013, முஸ்லிம் - 523
எனவே அத்தகைய துஆக்கள் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறுகின்றன. அவை அவனால் அறிவிக்கப்பட்டவை. எவ்வளவு மொழி வளம் உள்ளவரும் அந்த மஃஸூராத்துக்கு நிகரான ஒன்றை ஆக்கமுடியாது. அத்தகைய அரபு மொழி பாண்டித்தியம் பெற்ற எத்தனையோ தோழர்கள் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் பல துஆக்களை கேட்டறிந்து கொண்டார்கள் என்பதை பார்க்கி றோம். (தொழுகை முடிந்த பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ற தலைப்பை பார்க்க) மஃஸூராத்தை ஓதிப் பழகுவதே பாதுகாப்பானது. குர்ஆனிலோ, ஹதீஸிலோ வந்துள்ள யாவும் வஹி மூலம் பெறப்பட்டதாகும்.
وَما يَنطِقُ عَنِ الهَوىٰ إِن ھُوَ إِلّا وَحىٌ يوحىٰ
“அவர் தன் இஷ்டப்படி (எதனையும்) கூறுவதில்லை. இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதே அன்றி வேறில்லை.” என்று குர்ஆன் கூறுகிறது. (53:3,4) எனவே தான் அல்குர்ஆன் அல்ஹதீஸ் என்பவற்றில் வந்துள்ள துஆக்களை கருத்தோடு விளங்கி ஓத வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளோம்.
சிலர் துஆக்களை இறைஞ்சுவதாகக் கூறி அடுக்கு மொழிகளுக்கும், வசன நடைகளுக்கும், அழகிய குரலுக்கும்  முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவ்வாக்கியங்களை அமைத்துக் கொள்வதில் எடுக்கப்படும் கவனம் உள்ளத்தை ஓருமைப் படுத்துவதில் காணப்படுவதில்லை. ஆதலால் அது தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். ஹதீஸ்களில் வந்துள்ள அடுக்கு வார்த்தைகள் மேற்படி அடுக்கு மொழி வார்த்தைகளாக கருதப் படுவதில்லை. அது அப்படி அடுக்க மொழியாக ஓத வேண்டும் என ஓதப்பட்டதல்ல. வஹி மூலம் வெளிப்பட்டதே என இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் (பத்ஹுல் பாரீ 11:139) கூறியுள்ளார்கள்.
துஆக்கேட்கும் நால்வர்.
1. தனக்காக, தன்னுடைய ஈருல நலனுக்காக கேட்பவர்.  உதாரணம்:
اَللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى ٬ وَالْعَفَافَ وَالْغِنَى
இறைவா!   நேர்வழியையும், பயபக்தியையும், பத்தினித் தன்மையையும், செல்வத்தையும் உன்னிடம் கேட்கின்றேன்.
اَللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ
இறைவா!  நேர்வழியையும் அதிலே உறுதியான  நிலைப் பாட்டையும் உன்னிடம் கேட்கின்றேன்.
2. மற்றவர்கள்  நேர்வழி பெற, பிழை பொறுக்கப் பிரார்த்திப்பவர். உதாரணம்:
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கேட்டார்கள்.
اَللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ رواه البخاري و مسلم
இறைவா! இவருக்கு பொருள், பிள்ளை செல்வங் களை அதிகரிக்கச் செய்து நீ கொடுத்தவற்றில் நல்லபிவிருத்தி செய்வாயாக.
ஸஹீஹுல் புகாரி – 6378, ஸஹீஹ் முஸ்லிம் - 2480
اَللهُمَّ عَلِّمْ مُعَاوِيَةَ الْكِتَابَ وَالْحِسَابَ وَقِهِ الْعَذَابَ رواه أحمد
இறைவா! முஆவியாவுக்கு வேதத்தையும், கணக்கையும் கற்றுக் கொடுத்து நரக நெருப்பிலி ருந்து காப்பாற்றுவாயாக.
(முஸ்னத் அஹ்மத் - 4:127)
3. தனக்கும், மற்றவர்களுக்கும் கேட்பவர்.
முதலில் தனக்கும் அடுத்து மற்றவர்களுக்கும் கேட்பவர். அல் குர்ஆனில் இத்தகைய பிரார்த்தனை களை அதிகம் காணலாம். உதாரணம்:
ஏற்கனவே கூறப்பட் சூரா நூஹ் – 28, சூரா முஹம்மத் -19, சூரா இப்றாஹீம் - 41 என்பவற்றை பார்க்கவும்.
4. தனக்கும் பிறருக்கும் பன்மை வார்த்தை கொண்டு பிரார்த்தித்தல்.
உதாரணம்: குனூத்திலோ, மழைத் தேடி ஓதும் போது, வெள்ளிக் கிழமை கதீப் தன் துஆவிலோ ஓதப்படும் துஆக்கள்.
குறிப்பு: எமக்கு ஏதேனும் நல்வினை செய்தவருக்கு நாம்  جَزَاكَ للهُ خَيْرًا என்று சொல்வதும் ஒரு பிரார்த்தனையாகும்.
وَمَنْ أَتَى إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ فَإِنْ لَمْ تَجِدُوا مَا تُكَافِئُوهُ فَادْعُوا لَهُ حَتَّى تَعْلَمُوا أَنْ قَدْ كَافَأْتُمُوهُ رواه أحمد
உங்களில் எவருக்கேனும் நற்காரியம் ஒன்று செய்யப்பட்டால் அதற்கு பிரதியுபகாரம் செய்யுங்கள். அவ்வாறு பிரதியுபகாரம் செய்ய ஒன்றும் கிடைக்க வில்லையாயின் நீங்கள் அவருக்கு பிரதி உபகாரம் செய்ததாக திருப்தி கொள்ளும் வரை துஆக் கேளுங்கள். அறிவிப்பவர். இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா. ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்.
مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ: جَزَاكَ اللهُّ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ رواه الترمذي
எவருக்கு நல்வினை ஒன்று செய்யப்பட்டால் அதனை  செய்தவருக்கு. جَزَاكَ اللهُ உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி தருவானாக என்று கூறுவது அவனை மிக உயர்வாக போற்றியதாக ஆகிவிடும். அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு. ஆதாரம் - திர்மிதி - 2035
பெற்றோருக்கும் முஃமீன்களுக்கும் பிழை பொறுக்கத் தேடுவோம்.
ஒரு முஸ்லிம் தனக்காக அல்லாஹ்விடம் கேட்பது போலவே தன் பெற்றோருக்கும், முஸ்லிமான, முஃமீனான தன் சகோதர சகோதரிகளுக்காகவும் துஆக் கேட்க வேண்டும். அழகிய முன்மாதிரியை நபிமார் வரலாற்றில் படிக்கிறோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.
رَبِّ اغفِر لى وَلِوٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيتِىَ مُؤمِنًا وَلِلمُؤمِنينَ وَالمُؤمِنٰتِ وَلا تَزِدِ الظّٰلِمينَ إِلّا تَبارًا
என் இறைவா எனக்கும் என்னுடைய தாய் தந்தையருக்கும் விசுவாசம் கொண்டவனாக என் வீட்டில் நுழைந்தவனுக்கும் (வீட்டில் நுழையாத மற்ற) விசுவாசம் கொண்ட ஆண்களுக்கும் விசுவாசம் கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள்புரிவாயாக. (71:28)
நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வருமாறு கேட்டார்கள்.
رَبَّنَا اغفِر لى وَلِوٰلِدَىَّ وَلِلمُؤمِنينَ يَومَ يَقومُ الحِسابُ
எங்கள் இறைவா! எனக்கும், என் தாய் தந்தையருக்கும், மற்ற விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக. (14:41)
மற்றைய முஃமின்களுக்காக நாம் துஆக் கேட்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அந்தக் கட்டளையை அவன் தன் தூதருக்கிட்டான்.
فَاعلَم أَنَّهُ لا إِلٰهَ إِلَّا اللَّهُ وَاستَغفِر لِذَنبِكَ وَلِلمُؤمِنينَ وَالمُؤمِنٰتِ
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறொரு நாயன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்து கொண்டு, விசுவாசங் கொண்ட ஆண்களுக்காகவும், விசுவாசங் கொண்ட பெண்களுக்காகவும், உமக்காகவும் பாவ மன்னிப்பைக் கோருவீராக. (47:19)
உண்மை விசுவாசிகள் தமக்கு முன் சென்றோருக்காக பிரார்த்திக்கும் உயர் குணமுடை யோராவர். முன்னையவர்களைத் திட்டித் தீர்க்காது, அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடும் அருங் குணமுடையோராவர் என தனது நல்லடியார்கள் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
رَبَّنَا اغفِر لَنا وَلِإِخوٰنِنَا الَّذينَ سَبَقونا بِالإيمٰنِ وَلا تَجعَل فى قُلوبِنا غِلًّا لِلَّذينَ ءامَنوا رَبَّنا إِنَّكَ رَءوفٌ رَحيمٌ
(இவர்கள்) எங்கள் இறைவனே! எங்களையும் எங்களுக்கு முன் விசுவாசங் கொண்ட எங்கள் சகோதரர்களையும் நீ மன்னித்தருள். விசுவாசங் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இருதயங் களில் குரோதங்களை உண்டு பண்ணாதே எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மிக்க கிருபையுடை யோனும் இரக்கமுடையோனுமாக இருக்கிறாய் என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். (59:10)
எனவே ஒவ்வொருவரும் இதர  முஸ்லிம்களுக்காக துஆக் கேட்க கடமைப்படுகிறார்கள். நாம் கேட்கும் துஆவுக்கான பிரதியாக எம்மோடிருக்கும் மலக்கின் பிரார்த்தனை எமக்கு அமைகிறது. நாம் கேட்கும் போது உமக்கும் அது போன்றது கிடைக்கட்டும் என்று அம்மலக்கு கூறுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த வரிசையில் முதலில் நிற்பது எமது பெற்றோராவர், அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும் என்பது ,ஒருவனது மரணத்தின் பின் வந்தடைபவற்றில் நன்னடத்தையுள்ள பிள்ளையின் துஆ என்பதும் நாமறிந்ததே. பெற்றோருக்காக நாம் இவ்வாறு கேட்க வேண்டுமென அல்லாஹ் போதிக்கிறான்.
رَبِّ ارحَمهُما كَما رَبَّيانى صَغيرًا
“இறைவா! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் போசித்த பிரகாரமே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக.” என்று பிரார்த்திப்பீராக.(17:24).
அல் குர்ஆன் கற்றுத்தரும் இந்த துஆவையாவது பாடமிட்டு ஓதி நம் பெற்றௌர்களுக்காக துஆக் கேட்க வேண்டும். எம்மில் அதிகம் பேரும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். மேற்கண்ட அடிப்படைகளில் தான் ஜும்ஆ நாளன்றும் குத்பாவிலே முஃமீன்களுக்காக துஆக் கேட்கப்படுகிறது.
காபிராக உள்ள பெற்றோருக்கு நேர்வழி கிடைக்க துஆக் கேட்க வேண்டும்.
عَنْ أَبِي ھُرَيْرَةَ ٬ قَالَ: كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الْإِسْلَامِ وَھِيَ مُشْرِكَةٌ ٬ فَدَعَوْتُهَا يَوْمًا فَأَسْمَعَتْنِي فِي رَسُولِ للهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَكْرَهُ ٬ فَأَتَيْتُ رَسُولَ للهِ صَلَّى للهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي ٬ قُلْتُ يَا رَسُولَ الله إِنِّي كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الْإِسْلَامِ فَتَأْبَى عَلَيَّ٬ فَدَعَوْتُهَا الْيَوْمَ فَأَسْمَعَتْنِي فِيكَ مَا أَكْرَهُ ٬ فَادْعُ اللهَ أَنْ يَهْدِيَ أُمَّ أَبِي ھُرَيْرَةَ   فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: اللهُمَّ اھْدِ أُمَّ أَبِي ھُرَيْرَةَ فَخَرَجْتُ مُسْتَبْشِرًا بِدَعْوَةِ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ٬ فَلَمَّا جِئْتُ فَصِرْتُ إِلَى الْبَابِ ٬ فَإِذَا ھُوَ مُجَافٌ ٬ فَسَمِعَتْ أُمِّي خَشْفَ قَدَمَيَّ ٬ فَقَالَتْ: مَكَانَكَ يَا أَبَا ھُرَيْرَةَ وَسَمِعْتُ خَضْخَضَةَ الْمَاءِ ٬ قَالَ: فَاغْتَسَلَتْ وَلَبِسَتْ دِرْعَهَا وَعَجِلَتْ عَنْ خِمَارِھَا ٬ فَفَتَحَتِ الْبَابَ ٬ ثُمَّ قَالَتْ: يَا أَبَا ھُرَيْرَةَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا الله ٬ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ٬ قَالَ فَرَجَعْتُ إِلَى رَسُولِ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ ٬ فَأَتَيْتُهُ وَأَنَا أَبْكِي مِنَ الْفَرَحِ ٬ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ الله أَبْشِرْ قَدِ اسْتَجَابَ اللهُ دَعْوَتَكَ وَھَدَى أُمَّ أَبِي ھُرَيْرَةَ٬ فَحَمِدَ الله وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ خَيْرًا ٬ قَالَ قُلْتُ: يَا رَسُولَ الله ادْعُ الله أَنْ يُحَبِّبَنِي أَنَا وَأُمِّي إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ ٬ وَيُحَبِّبَهُمْ إِلَيْنَا ٬ قَالَ: فَقَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: "اللهُمَّ حَبِّبْ عُبَيْدَكَ ھَذَا - يَعْنِي أَبَا ھُرَيْرَةَ - وَأُمَّهُ إِلَى عِبَادِكَ الْمُؤْمِنِينَ٬ وَحَبِّبْ إِلَيْهِمِ الْمُؤْمِنِينَ" فَمَا خُلِقَ مُؤْمِنٌ يَسْمَعُ بِي وَلَا يَرَانِي إِلاَّ أَحَبَّنِي.
அபூஹுறைறா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது தாய் இணை வைத்தவளாக இருக்கும் போது இஸ்லாத்தை ஏற்குமாறு நான் அவரை அழைத்தேன். பதிலாக நான் விரும்பாத ஒன்றைக் கூறி அவள் றஸூலுல்லாஹ் மீது வசைபாடினாள். அது கேட்ட நான் அழுத வண்ணம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தை ஏற்குமாறு என் தாயை அழைத்தேன். முடியாது என்று மறுத்தாள். இன்று அழைத்த போது நான் விரும்பாத சில வார்த்தைகளை தங்கள் மீது கூறினாள். என் தாய் நேர்வழிப் பெறப் பிரார்த்தியுங்கள். எனக் கேட்டேன். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவா! அபூ ஹுறைறாவின் தாய்க்கு நேர்வழி காட்டுவாயாக என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் நபியுடைய பிரார்த்தனையை நற்சோபனம் பெற்றவனாக வீட்டு வாசலை சென்றடைந்தேன். என் காலடியோசை கேட்ட தாயார் அபூஹுறைறாவே அப்படியே நில் என்றாள். தண்ணீர் விழும் சத்தத்தை கேட்டேன் என் தாயார் குளித்து விட்டு அவளின் போர்வையை அணிந்து கொண்டு முக்காடிட்டுக்கொண்டு கதவைத் திறந்தாள். பின் அபூ “ஹுறைறாவே! அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு” என்று கூறினாள். சந்தோசமே லீட்டால் அழுது கொண்டு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மீண்டேன்.
அல்லாஹ்வின் தூதரே நற்செய்தி கேளுங்கள் உங்கள் துஆவை அல்லாஹ் அங்கீகரித்து என் தாய்க்கு நேர்வழி தந்தான் என்று கூறினேன். உடனே றஸூலுல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து நல்லது என்றார்கள். மீண்டும் நான் அல்லாஹ்வின் தூதரே என்னையும் என் தாயையும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமீன்களுக்கு அன்புக்குரியவர்களாக ஆக்க அல்லாஹ்விடம் கேளுங்கள் என்றேன். உடனே யாஅல்லாஹ் உனது இந்த சிற்றடியான் அபூஹுறைறாவையும் அவரது தாயாரையும் உனது அடியார்களான முஃமின் களுக்கு விருப்பத்துக்குரிவர்களாக ஆக்குவாயாக என்று துஆக்கேட்டார்கள். அன்றிலிருந்து எந்த ஒரு முஃமீனும் என்னை காணாத போதும் என்னை கேள்விப்படும் போதும் அன்பு காட்டாமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூஹுறைறா ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்
நம் முன்னோருக்காக துஆக் கேட்கும் மற்றுமொரு முறைதான் அவர்களின் பெயர் குறிப்பிடப்படும் இடங்களில் அவர்களது அந்தஸ்துக்கேற்ப அடைப்புக் குறிக்குள் பிரார்த்தனை வார்த்தை ஒன்றை குறிப்பிடுவது அமைந்துள்ளது. மலக்குகள், நபிமார் நாமங்கள் வரும் போது அலைஹிஸ்ஸலாம் என்றும் றஸூலுல்லாஹ்வின் பெயர் வரும் போதும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் ஸஹாபாக்கள் பெயர் வரும் போது ரலியல்லாஹு அன்ஹு என்றும் தாபிஈன்கள் இமாம்கள் நம்முன்னோர் உலமாக்கள் கூறப்படும் போது ரஹிமஹுல்லாஹ் என்றும் கூறப்பட வேண்டும் என்ற ஒழுங்கு பற்றி இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமுக்கு எமுதிய அணிந்துறையில் குறிப்பிடு கிறார்கள். இந்த ஒழுக்கங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும். இதுவே இஸ்லாம் நமக்கருளிய கலாச்சாரமாகும். ஒழுக்க மான்புமாகும்.
قال الإمام النووي رحمه الله في مقدمة شرح صحيح مسلم يستحب لكاتب الحديث إذا مر بذكر الله عزوجل أن يكتب "عزوجل” أو" تعالى" أو "سبحانه وتعالى" أو "جل ذكره" أو "تبارك اسمه "أو "جلت قدرته" أو ما أشبه ذلك.وكذلك يكتب عند ذكرالنبي صلى الله عليه وسلم "صلى الله عليه وسلم" بكاملهما لا رامزا إليهما ولا مقتصرا على أحدھما وكذلك يقول فى الصحابي "رضي الله عنه "فان كان صحابيا ابن صحابي قال" رضي الله عنهما".وكذلك يترضى ويترحم على سائر العلماء والأخيار ويكتب كل ھذا وإن لم يكن مكتوبا فى الأصل الذي ينقل منه.فإن ھذا ليس رواية وإنما ھو دعاء. وينبغي للقارئ أن يقرأ كل ما ذكرناه وإن لم يكن مذكورا فى الأصل الذي يقرأ منه ولايسأم من تكرر ذلك ومن أغفل ھذا حرم خيرا عظيما وفوت فضلا جسيما. مقدمة شرح صحيح مسلم ص ۳١
رَبَّنَا اغفِر لَنا وَلِإِخوٰنِنَا الَّذینَ سَبَقونا بِالإیمٰنِ وَلا تَجعَل فى قُلوبِنا غِلًّا لِلَّذینَ ءامَنوا رَبَّنا إِنَّكَ رَءوفٌ رَحیمٌ
_ 'எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும், மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதி ருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்.”
தொழுகைக்குப் பின் கூட்டுத் துஆவும் அதற்குக் கூறப்படும் நியாயங்களும்
 துஆக்கள் அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பங்களாக நடுநிசியும், பர்ளான தொழுகையும் இருப்பதனால் நாம் அந்நேரங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகளை முன்வைத்து கேட்பதற்குரிய இச்சந்தர்ப்பங்கள் தவறி விடப்படலாகாது. அரபு மொழியில் தான் கேட்க வேண்டும் என்பதில்லை தனக்குத் தெரிந்த மொழியில் கேட்கலாம்.நபி (ஸல்) அவர்கள் தம் தோழருக்கு துஆக்களை கற்றுக் கொடுத்தார்கள். ஹதீஸ் கிரந்தங்களில் உள்ள எல்லா துஆக்களும் றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஸஹாபாக்கள் பாடமிட்டுக் கொண்டவையாகும். தொழுகை முடிந்த பின் மஃமூம்களை எதிர் கொண்டு அமர்ந்திருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சப்தமிட்டு ஓதுவதை ஸஹாபாக்கள் பாடமிட்டுக் கொண்டார்கள். வஹி இறங்கும் போதெல்லாம் ஸஹாபக்கள் அனைத்தை யும் பாடமிட்டுக் கொண்டனர். இப்போது அவை அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. தனக்கு தேவை யானதை தேடிப் பிரார்த்திப்பவனே புத்திமான். இது இவ்வாறிருக்க தற்போதுள்ள நடைமுறைக்கு சில நியாயங்கள் கூறப்படுகின்றன. அவையாவன.
1. மஃமூம்கள் கற்றுக்கொள்வதற்காக.
கற்றுக் கொடுப்பது நல்லது தான், அதன் மூலம் அறியாமை நீங்கலாம். தெரியாததை தெரிந்து கொண்ட பின் வேறொன்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். தொழுகையின் பின் ஓதப்படும் துஆ மூலம் மஃமூம்களுக்கு கற்றுக் கொடுக்கப்படு கின்றது என்று கூறப்படுகின்றது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. துஆ ஓதும் ஒழுங்குகளை கற்றுக் கொள்வதா? அல்லது ஓதப்படும் துஆவை கற்றுக் கொள்ளவதா? இரண்டுமே நடைபெறுவதில்லை. இமாமாக நிற்பவர் அவரவர் விரும்பியபடி ஓதுகின்றனர். ஒவ்வொருவரும் தம் வயதை கணக்குப் பார்த்து எத்தனை துஆக்களை பாடமாக்கி உள்ளோம், என்று கேட்டுப் பார்த்தால் தெரியும். கற்றுக் கொடுத்தல் என்பது நடந்துள்ளதா? என்பது புரியும். இன்று நடைமுறையில் உள்ள அமைப்பில் ஒவ்வொரு இமாமும் ஒவ்வொரு விதமாக ஓதுவதைப் பார்க்கிறோம். நாடப்படுவது கைகூடுகிறதா என்று சிந்திப்போமாக.
2. ஷாபிஈ மத்ஹபில் ஆதாரம் உள்ளது.
இது ஒரு புதிய விடயமல்ல. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சப்தமிட்டு ஓதியதைத்தான் ஸஹாபாக்கள் பாடமிட்டு அறிவித்துமுள்ளார்கள்.
ஆனால் நம்மிடம் காணப் படும் நடைமுறைக்கு எந்த ஆதாரத்தை யும் காணமுடியவில்லை.
இதனைக் கூட நாம் மக்களுக்கு விளக்காமல் இருப்பதனால் உண்மையான சட்டம் மறைக்கப் படுகிறது இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
اتَّفَقَ الشَّافِعِيُّ وَالْأَصْحَابُ وَغَيْرُھُمْ رَحِمَهُمْ اللهُّ عَلَى أَنَّهُ يُسْتَحَبُّ ذِكْرُ اللهِّ تَعَالَى بَعْدَ السَّلاَمِ وَيُسْتَحَبُّ ذَلِكَ لِلْإِمَامِ وَالْمَأْمُومِ وَالْمُنْفَرِدِ وَالرَّجُلِ وَالْمَرْأَةِ وَالْمُسَافِرِ وَغَيْرِهِ وَيُسْتَحَبُّ أَنْ يَدْعُوَ أَيْضًا بَعْدَ السَّلاَمِ بِالِاتِّفَاقِ
“இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும், தோழர்களும், தொழுது ஸலாம் சொன்ன பின்பு அல்லாஹ்வை திக்ர் செய்வதில் ஈடுபடுவது விரும்பத்தக்கது. அது இமாம், மஃமூம், தனித்துத் தொழுதவர், ஆண், பெண், பிரயாணி, ஏனையோர் ஆகியோருக்கு விரும்பத்தக்க ஒன்றாகும் அவ்வாறே துஆ ஓதுவதும்  விரும்பத் தக்கது” என ஏகோபித்துள்ளனர். (அல் மஜ்மூஃ  3/483)
இந்த இடத்தில் எங்கேனும் இமாம் ஓத, மஃமூம் ஆமீன் சொல்வது என்பது கூறப் படவே இல்லை. மேலும் அந்நூலில் 487 ஆம் பக்கத்தில் ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த இமாம்கள் கூறினர்.
قَالَ أَصْحَابُنَا إنَّ الذِّكْرَ وَالدُّعَاءَ بَعْدَ الصَّلَاةِ يُسْتَحَبُّ أَنْ يُسَرَّ بِهِمَا إلَّا أَنْ يَكُونَ إمَامًا يُرِيدُ تَعْلِيمَ النَّاسِ فَيَجْهَرَ لِيَتَعَلَّمُوا فَإِذَا تَعَلَّمُوا وَكَانُوا عَالِمِينَ أَسَرَّهُ
தொழுகையின் பின் திக்ர், துஆ போன்றவற்றில் ஈடுபடுவதும் அதனை மெதுவாகச் சொல்வதுமே விரும்பத்தக்கது. மஃமூம்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இமாம் சப்தமிட்டு சொல்வார். மஃமூம்கள் கற்றுக் கொண்டால் மெதுவாகவே ஓதவேண்டும் என்று கூறினார்கள்.
3. சமூகத்தில் குழப்பம் ஏற்படலாம்.
இந்தக் காரணத்தை யாரும் ஏற்கமாட்டார்கள். சமூகம் இன்று விழிப்போடு இருக்கிறது. உலமாக்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று மக்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
இந்நிலையில் மேற்சொன்ன காரணத்தை வைத்து நாம் ஒதுங்கிக் கொண்டால், மறுமையில் அவர்கள் உலமாக்களை காட்டிக் கொடுத்து இப்படிச் சொல்ல மாட்டார்கள்.
رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلاَ رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا
“எங்கள் இறைவனே நிச்சயமாக எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை தப்பான வழியில் செலுத்திவிட்டார்கள். ஆகவே எங்கள் இறைவனே நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை கொடுத்து அவர்கள் மீது மாபெரிய சாபத்தை இடுவாயாக.” என்றும் (33; 67, 68) கூறுவார்கள்
மேற்கூறியது போன்ற எத்தனையோ நியாயங்கள் கூறப்படுகின்றன. அவைகளுக்கு பதில் கூறும் நோக்கம் அடியேனுக்கில்லை, நிதானமாக சிந்திக்கவே அழைக்கிறேன்.
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّیَّاتِنَا قُرَّةَ أَعْیُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِینَ إمَامًا
''எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியாரிடமும் இருந்து எங்களுக்குக் கண் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தி யுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!” 25:40
பொதுவாக கூட்டு துஆவுக்கு காட்டப்படும் ஆதாரங்கள்.
தொழுகைக்குப் பின் ஓதப்பட வேண்டியவை தெளிவாகவே வந்துள்ளன. இருந்தும் தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதப்பட வேண்டும் என சிலர் அடம்பிடிப்பதோடு சில ஆதாரங்களை முன் வைப்பதுண்டு. முன் வைக்கப் படும் ஹதீஸ்கள் ஸஹீஹ் என கூறப்பட்டி ருப்பினும் அது தொழுகைக்குப் பின்னால் நடைமுறையில் உள்ள அமைப்பில் துஆ ஓதுவதற்கு ஆதாரமாக கொள்ளலாமா என்று சிந்திப்பதே ஏற்புடையது.
عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ الْفِهْرِيِّ وَكَانَ مُسْتَجَابًا قَالَ لِلنَّاسِ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "لاَ يَجْتَمِعُ مَلَأٌ فَيَدْعُو بَعْضُهُمْ وَيُؤَمِّنُ سَائِرُھُمْ إِلاَّ أَجَابَهُمُ اللهُ" أخرجه الطبراني
‘முஸ்லிம் கூட்டத்தவர் ஒன்று கூடி ஒரு சிலர் துஆக் கேட்க மற்றவர்கள் ஆமீன் சொன்னால், அவர்களது பிரார்த்தனைக்கு அல்லாஹ் விடையளிக்காமல் இருப்பதில்லை’ என்று துஆக்கள் அங்கீகரிக்கப் படும் என்ற கருத்துடையவர்களில் ஒருவராக இருந்த ஹபீப் இப்னு மஸ்லமா அல்பிஹ்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அறிவிப்பவர்: ஹபீப் இப்னு மஸ்லமா அல் பிஹ்ரி ரலியல்லாஹு அன்ஹு. ஆதாரம்: அத்தபரானி.
இந்த ஹதீஸ் தெளிவாகவே உள்ளது. தொழுகைக்குப் பின் ஓதுவது பற்றி எந்தத் தகவலும் இதில் இல்லை.  பொதுவாக, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஓதப்படுவதையே குறிக்கிறது. இந்த ஹதீஸ் தொழுகைக்குப் பின் ஓதப்படும் கூட்டு துஆவுக்கு ஆதாரமாக கொள்ளப்படலாம் என்றிருந்தால் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொழுகைக்குப் பிறகு நடைமுறையில் உள்ள கூட்டு துஆவின் அமைப்பே மக் ரூஹ் என்று கூறியிருக்க மாட்டார்கள். (அல்புரூக் - 4:300). அதுவன்றி தொழுகைக்குப் பின்னால் ஓதப்படு வதற்கு வந்துள்ள ஓதல்களில் பன்மைக் கருத்தில்லாமல் வந்துள்ள வசனங்களைக் கொண்டு ஓதல்களை திக்ர், துஆ என்பனவற்றை வைத்து கூட்டு துஆவுக்கு ஆதாரம் தரமுடியாதுள்ளது.
தொழுகைக்குப்பின் என்பதில் கூட அது பர்ளான தொழுகைக்குப் பின்னா? அல்லது ஸுன்னத்தான தொழுகைக்குப் பின்னா? என்று அபிப்பிராயப்படு வோரும் உள்ளனர். பர்ளான தொழுகைக்குப் பின் கேட்கப்படும் துஆக்கள் அங்கீகரிக்கப் படுகின்றன என்ற வசனம் கூட்டு துஆவைத் தான் குறிக்கிறது என்று கூறுப்படுவதும் உண்டு. ஆனால் அது உறுதியான வார்த்தையாக காணப்பட வில்லை என இமாம்கள் கூறியுள்ளனர்.
1. துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள் பிந்திய இரவும் பர்ளான தொழுகையின் பின்னு மாகும். இது பற்றி வந்த ஹதீஸ் ஏற்கனவே கூறப்பட்டது. அவ்விரண்டு நேரங்களிலும் ஏன் நாம் ஒன்றை (அதாவது பர்ளான தொழுகை) குறித்து கூட்டு துஆவுக்கு மட்டும் ஆதாரம் எடுக்கிறோம். நடுநிசி (யில் தொழப்படும்) தொழுகைக்கு ஆதாரம் காட்டவில்லை. ஏனென்று நன்கு சிந்திக்க வேண்டும். பிழையை கைவிட மனமில்லை என்பதால் தவறான விளக்கம் கூறப்பட்டுள்ளது.
عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللهِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:" ثَلاَثٌ لاَ يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَفْعَلَهُنَّ: لاَ يَؤُمُّ رَجُلٌ قَوْمًا فَيَخُصُّ نَفْسَهُ بِالدُّعَاءِ دُونَهُمْ ٬ فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ رواه ابو داود و الترمذي
“ஓரு அடியான் ஒரு கூட்டத்தவருக்கு தொழுகை நடாத்தி கேட்கும் துஆவில் தன்னை மாத்திரம் சொந்தப்படுத்திக் கொள்வானாயின் அவன் அம்மக்களுக்கு மோசடி செய்தவனாவான்” என்று தவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: தவ்பான் ரழியல்லாஹு அன்ஹு.ஆதாரம்: அபூ தாவுத், திர்மிதி.
அதிகமான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ள இதனைக் கூட்டு துஆவுக்கு ஆதாரம் காட்டப் படுகிறது. இது விபரமின்மையை காட்டுகிறது. தொழுகை நடாத்தும் ஒருவர் குனூத் நாஸிலா ஓதும் போதும், மழை வேண்டித் தொழும் போதும், ஜும்ஆவிலும், அதில் பங்குபற்றுவோரையும் சேர்த்து பன்மையாக ஓத வேண்டும் என்பதையே குறிக்கின்றது. அதுவன்றி பர்ளான தொழுகைக்கு பின் ஓதப்படும் சம்பிரதாய பூர்வமானதைக் குறிக்க வில்லை. இமாமுக்கும் மஃமூக்கும் உரிய தொடர்பு ஸலாம் கொடுப்பதோடு முடிந்து விடுகிறது. அப்படியிருக்க அவர் சொந்தமாக கேட்பது எப்படி மோசடி என்று சொல்லப் பட்டிருக்கலாம். எனவே தொழுகையினுள் ஓதப்படும் துஆவையே குறிப்பதாக விளங்க முடியும்.
3. குர்ஆனில் கூட பன்மை  வார்த்தையோடுள்ள துஆக்கள் வந்துள்ளமை கூட்டு துஆவுக்கு ஆதாரம் என்று கூறப்படுகின்றது. குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள துஆக்கள் மஃஸூராத்துகள். அது பற்றி முன்னர் விளக்கப்பட்டது. அவற்றை நாம் எந்த மாற்றமுமில்லாமல் ஓத வேண்டும். ஸுஜுதில் ஓதப்படலாம், அல்லது மற்ற நேரங்களிலும் ஓதப்படலாம். அதில் கூறப்பட்ட வசனங்கள் பன்மையாக வந்துள்ளதால் தொழுகைக்கு பின் ஓதப்படும் சம்பிரதாய துஆ அமைப்புக்கு ஆதாரமாக கொள்ளப் படலாகாது.
4. திர்மிதீ எனும் ஹதீஸ் கிரந்தத்தில் பதிவாகியுள்ள 3502 வது ஹதீஸின் சுருக்கம் பின்வருமாறு. அல்லாஹ்வின் தூதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த ஒரு சபையிலிருந்து எழும்பும் போதும் தன் தோழர்களுக்காக பின்வரும் துஆவை ஓதாமலிருந்தது மிகக் குறைவாகும்.
اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلاَ تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ ھَمِّنَا وَلاَ مَبْلَغَ عِلْمِنَا وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا
இந்த ஹதீஸ் கூட தொழுகைக்கு பின் ஓத வேண்டிய கூட்டு துஆவிற்கு ஆதாரமென்று கூறப்பட முடியாது. தொழுகை நடைபெற்ற இடத்தை சபையாக விளக்கம் கொடுத்ததன் விளைவாகவே இன்று சில ஊர்களில் துஆ ஓதி முடித்த பின்பு ஸலவாத்துச் சொல்லி அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் சொல்லி முடிக்கின்றார்கள்.
துஆவிலே பிரச்சினைப்பட்டு தெளிவின்றி இருக்கும் நாம் அதற்கு மேலால் சொல்லும் வேறும் ஓதல்கள் எல்லாம் நபி வழியல்லவே? ஸலவாத்து சொல்வதை யாரும் தடுக்க மாட்டார்கள். இது அதற்குரிய இடமல்ல என்பதையே நாம் விளங்க வேண்டும்.
பிழையாகப் புரியப்பட்ட அறிஞர்களின் கூற்றுகள்.
கலாநிதி அஷ் ஷேக் ஸாலிஹ் அல் பவ்ஸான் அவர்கள் சவுதி அரேபியாவிலுள்ள அறிஞர்களில் பிரபல்யமிக்க ஒருவர். அந் நூலாசிரியர். அன்னார் தொழுகைக்குப் பின் துஆக் கேட்பது பற்றி வழங்கிய தீர்ப்பொன்று பிழையாக விளங்கப்பட்டு அச்சிட்டு விநியோகிக்கப்பட்டிருந்தது. அன்னார் அத்தஃவா எனும் அரபு சஞ்சிகையின் 1325 ஷஃபான்(23-09-2004) இதழில் எழுதியுள்ளார்.
இதுவே, “பித்அத் என்பது ஷரீஅத்தில் எவ்வித அடிப்படையுமின்றி வணக்கமொன்றை ஏற்படுத்து வ கும். உதாரணமாக நபி (ஸல்) அவர்களது பிறப்பை முன்னிட்டு மீலாதுன் நபி கொண்டாடுதல், மிஃராஜ், ஹிஜ்ரத் முதலியன வற்றை கொண்டாடுதல் அல்லது ஷரீஅத்தில் எந்த முக்கியத்துவமும் பெறாத நேரமொன்றை இபாதத்துக்காக குறிப்பாக்கிக் கொள்ளுதல். ரஜப், ஷஃபான் மாத இரவுகளில் ஏதும் விஷேட திக்ருகள், துஆக்கள் என்பன ஓதுதல் போன்றன வாகும். மேலும் ஷரீஅத்திலில்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்துதல். உதாரணமாக கூட்டு துஆ ஓதுவது, கூட்டு திக்ர் செய்வது போன்ற பித்அத்துக்கள் அல்லாஹ்வின் தீனிலிருந்தும், அல்லாஹ்விட மிருந்தும் எம்மை தூரப்படுத்தும். இம்மை, மறுமைத் தண்டனைகளை வரவழைக்கும். ஏனெனில் அது சைத்தானின் தீனை (வழியைச்) சேர்ந்தது. ரஹ்மானின் தீனைச் சேர்ந்ததல்ல.
இவ்வாறு தெளிவாக கூறியுள்ளதை சிலர் பிழையாக விளங்கி யுள்ளதை அவதானிக்க முடிந்தது. கூட்டு துஆ ஓத வேண்டும் என்போரது கூற்றுக்கு இமாம் சாதிபீ அவர்களின் மறுப்பு அன்னாரின் அல் இஃதிஸாம் 1ம் பாகம் (240, 245, 258, 268 ம் பக்கம் 485 பக்கங்களில்) மிகவும் அழகாகவும் தெளிவாகவும் குறிப்பிடுகிறார்கள். விரிவஞ்சி விடுத்தோம், உலமாக்கள் இவற்றை எடுத்துரைப்பதன் மூலம் எத்தனையோ குளறுபடி களிலிருந்து எம்மைக் காத்துக் கொள்ளமுடியும். துஆக்களில் சிறந்தது மஃஸூராத்துக்கள் என்று பார்த்தோம். அவை எப்போது கை விடப் பட்டனவோ அன்று முதல் தான் பொதுமக்கள் ஒரு துஆவும் பாடமில்லாத வர்களாக ஆகினர். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் உரிய துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். நூற்றுக்கணக்கான அவை இன்று தொகுப்புக்க ளாகவும் வந்துள்ளன. படுக்கைக்கு செல்லும் போது, அதிலிருந்து எழும்பும் போது, வீட்டை விட்டு வெளியேறும் போது, வண்டியில் ஏறும் போது, இறங்கும் போது, மணம் புரியும் போது, வாகனம் வாங்கும் போது, மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது, ஆச்சரியங்கள் ஏற்படும் போது, மரணச் செய்தி கிடைக்கும் போது, நோய் வினவச் செல்லும் போது, மரண வீட்டில் ஆறுதல் சொல்லும் போது, ஜனாஸா தொழும் போது, மையித்தை கப்ரிலே அடக்கும் போது, பிரயாணியை வழியனுப்பும் போது, அவரை வரவேற்கும் போது, விருந்துண்ட இடத்தில் என இப்படி இன்ன பல விடயங்களுக்காக வெல்லாம் துஆக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தராமல் விடவில்லை.
அப்படி இருக்கையில் ஒரு சுருக்கு வழியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொன்னால் போதும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டதனால் ஸுன்னத் தான ஓதல்கள் விடுபட்டுப் போயின. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது கடமை யாகும் அதை யாரும் நிராகரிக்க முடியாது. அன்னாரது பெயர் கூறப்படும் போதெல்லாம் அன்னார் மீது ஸலவாத் சொல்வது மாத்திரமின்றி வெள்ளிக்கிழமைகளிலும் ஏனைய நாட்களிலும் அன்னார் மீது அதிகமதிகம் ஸலவாத்துச் சொல்ல வேண்டும். ஸலவாத்துச் சொல்வோர் மறுமையில் அன்னாரோடு இருப்பர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் சரியானதை சொல்லிக் கொடுத்து பாடமிடச் செய்யாமையால், வேறெவரோ ஓத வேண்டும் என்ற நிலை உருவாகியிருப்பது தான். உதாரணமாக;
1. ஜனாஸாவை சுமந்து வந்து தொழுமிடத்தில் வைத்து விட்டு இரண்டாம் தக்பீருக்குப் பின் அல்லாஹும்மஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத் என்றாலும் போதும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. சம்பூர்ணமான ஸலவாத்து வலியுறுத்தப்படுவதில்லை.
மூன்றாம் தக்பீருக்குப் பின் அல்லாஹும்மஃ பிர்லஹு வர்ஹம்ஹு என்றால் போதும் எனப்படுகின்றது. இதன் மூலம் அங்கு ஓதப்பட வேண்டிய துஆ வலியுறுத்தப் படுவதில்லை. சில வேளை அப்படியொன்று இருப்பதாகக் கூட மக்கள் அறியாது விடுகின்றார்கள். தொழுகை முடிந்த பின் பெரியதொரு துஆ ஓதப்படுகின்றது. ஜனாஸாவுக் குரிய துஆ அத்தொழுகையில் ஓதப்பட வேண்டும் என்பது தெரியாதுள்ளது.
3. மரண வீட்டில் ஆறுதல் வார்த்தையாக ஓதப்பட வேண்டிய துஆ நினைவுபடுத்தப் படுவதில்லை. ஸலவாத்துச் சொன்னால் போதும் என்று சொல்லிக்  கொடுக்கப்படுகின்றது.
4. பிரயாணம் செய்பவரை என்ன கூறி வழியனுப்ப வேண்டும் என்று சொல்லிக் கொடுக்காமல் கைபிடித்து ஸலவாத்தைச் சொன்னால் போதும் என்று வழிகாட்டப்படுகின்றது.
5. சாப்பிட்ட பின் அல்லது விருந்துண்ட பின் என்ன ஓத வேண்டும் எனத் தெரியாமல் வேறொருவர் ஓத வேண்டும் என எதிர் பார்க்கின்றோம்.
இப்படியாக எத்தனையோ உதாரணங்களைப் பார்க்கலாம்.
உரிய துஆக்களைப் பாடமிட்டுக் கொள்ளாதவர்கள் வேறெவரேனும் ஓத வேண்டும் என எதிர் பார்க்கின்றனர். தன் தேவையை விரும்பிய மொழியில் கேட்கலாம் என்ற விபரம் தெரியாத காரணத்தால் மேலும் சிரமப்படுகின்றனர். அல்லாஹ்வின் உதவியால் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்பு மூலம் எதிர்காலத்தில் அதிகமான துஆக்கள் பாடமிட்டவர்களைக் காணலாம் என்றொரு ஆவல் உள்ளது. இன்ஷா அல்லாஹ்.
رَبَّنَا مَا خَلَقْتَ ھَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
'எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மை யானவன் (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”
'எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய். மேலும் அக்கிரமக்காரர்க ளுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”
'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்.
'எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆத்மாக்க)ளைச் சான்றோர்க ளு(டைய ஆத்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”
“எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல” (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்). 3:191-194
அகில இலங்கை உலமா சபை வழங்கிய தீர்ப்பு
சுமார் எட்டு வருடங்களுக்கு முன் தொழுகைக்கு பின் நடைமுறையில் உள்ள கூட்டு துஆ சம்பந்தமாக நாட்டின் பல பாகங்களிலும் பிரச்சினைகள் தோன்றின. பொலிஸ் நிலையங்கள் வரை பிரச்சினை சென்றுவிட்டது. விசாரணைக் காக சென்ற சகோதரர்கள் மத்தியில் விரும்பத்தகாத வார்த்தைப் பிரயோகங்கள் கூட நடந்த செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தன. தொழுகையின் பின் கூட்டு துஆவில் ஈடுபடாத வர்களோடு மற்றவர்கள் சண்டை சச்சரவில் ஈடுபடுவதும் விசேடமாக பொதுமக்கள் மத்தியில் இந்தச் சண்டை நீடித்ததும், உலமாக்கள் சிலர் மௌனியாகவும், மற்றும் சிலர் பொது மக்களோடு சேர்ந்து நிற்பதும் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனிடையே புத்தளத்தில் தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதுவது சம்பந்தமாக எழுந்த பிரச்சினை பொலிஸ் வரை சென்று அங்கிருந்து இதற்குரிய தீர்ப்பு கேட்டு கடிதம் ஒன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு வந்தது. புத்தளக் கிளை உலமாசபைத் தலைவர் நேரடியாக மேற்படி விடயமாக தீர்ப்பை பெற்றுச் செல்ல கொழும்புக்கு வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜம்இய்யத்துல் உலமா 10.02.2001ல் கூடிய பத்வா குழுவின் விஷேட கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானம் செய்யப்பட்டு அதன் பிரதி புத்தளப் பொலிஸ் நிலையத்திற்கும், அகில இலங்கை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய தீர்ப்பு ஜம்இய்யத்துல் உலமா கிளைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததன் பின்னர் மூன்று விடுத்தம் இஸ்திஃபார் செய்வதோடு தஸ்பீஹ், தஹ்மீத், தக்பீர் ஆகியவைகளையும் ஓதி வேறு சில துஆக்களையும் ஒதி வந்துள்ளார்கள். ஸஹாபாக்க ளும் இதனை பாடம் செய்து தம் தொழுகையின் பின்னர் அவ்வாறே செய்து வந்தனர்.
ஒவ்வொரு முஸ்லிமும் தொழுது முடித்த பின்னர் அவற்றை ஓதி வர வேண்டும் என்பதே முறையாகும். பொதுவாகவே துஆக்கள் ஓதுகின்ற போது குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள மஃஸூராத் துஆக்களையே ஓத வேண்டும், என்பதில் எந்த இமாம்களும் கருத்து முரண்படவில்லை. றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலோ ஸஹாபாக்கள், தாபிஈன்கள், இமாம்கள் காலத்திலோ தொழுகைக்கு பின்னால் தற்பொழுது நடைமுறையில் உள்ளது போன்ற வழமை இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் காணப்பட வில்லை. இவ்வழமை ஊருக்கு ஊர் வேறுபட்ட தாகவும் அமைப்பு முறையில் வித்தியாசமானதாக வும் இருப்பதில் இருந்து இது ஸுன்னத்தான வழிமுறையின் மூலம் ஸ்தாபிதமான ஒன்றல்ல என்பது தெளிவாகிறது. ஆகவே தொழுகைக்குப் பின்னால் மேலே கூறிய வண்ணம் மஃஸூராத்துக் களை ஓதி வரவும் தமக்கு தேவையானவற்றை தாமே துஆக் கேட்டுக் கொள்ளவும் ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து கொள்வது கடமையாகும். தொழுகைக்குப் பின்னால் துஆக்கள் அங்கீகரிக்கப் படுகின்றன என்ற ஹதீஸின் அடிப்படையில் நாம் தொழுகைக்குப் பின் துஆக் கேட்கும் விடயத்தில் கவனயீனமாக நடந்து கொள்ளக்கூடாது. அதே நேரம் அந்த துஆ கூட்டாகத்தான் ஓதப்பட வேண்டு மென்று அடம்பிடிப்பதோ, அல்லது வீணான சர்ச்சைகளிலும் மோதல்களிலும் ஈடுபடுவதோ தொழுகையை நிறைவேற்றும் முஸ்லிம்களுக்குத் தகாத ஒன்றாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத ஒன்றைச் செய்வதற்காக இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவது எம்மைப் பாவத்தில் சேர்த்து விடும். ஆதலால் நிர்வாகிகளும், உலமாக்களும், படித்தவர்களும் உண்மை நிலையை அறிந்து பாமரர்களை வழிநடாத்துவது தற்போதுள்ள அவசர அவசியத் தேவையாகும். இதன்படி நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அருள்புரிவானாக. அல்லாஹ்வே யாவற்றையும் மிக அறிந்தவன்.
இந்தத் தீர்ப்பு அனுப்பப்பட்டபோது பிரச்சினை பட்ட மக்கள் தெளிவு பெற்றனர். பொலிஸாரும் சமாதானம் செய்து வைத்தனர். இடையிடையே மேற்படி விடயம் சம்பந்தமாக எவரும் கேட்டாலும் ஜம்இய்யா மேற்படி தீர்பின் பிரதி ஒன்றைக் கொடுத்து வந்தது.
குறித்த தீர்ப்பு பற்றி அது உண்மையானதா? என்று கேட்டு உலமா சபையிடம் (02-10-2005ல்) கேட்கப் பட்ட போது எழுதிய பதில், தொழுகைக்குப் பின்னால் கூட்டுதுஆ பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னைய தீர்ப்பை உறுதிப்படுத்தி எழுதிய பதில் கடிதத்தில் தொழுகைக்குப் பின்னால் கூட்டு துஆ பற்றிய பத்வா 2001-02-10 அன்று அகில இலங்கை ஜமஇய்யத் துல் உலமாவினால் வெளியிடப்பட்ட பத்வா தான் என்பதை உறுதிப்படுத்துவதோடு தொழுகைக்குப் பின் கூட்டு துஆ பற்றிய இன்னும் விரிவான பத்வா ஒன்று “இன்ஷா அல்லாஹ்” கூடிய விரைவில் அகில இலங்கை ஜமஇய்யத்துல் உலமாவினால் வெளியிடப்படவுள்ளது என்றும் எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும் 10-02-2001ல் வெளியிடப்பட்ட தீர்ப்பில் திருப்தி கொள்ளாத உலமா சபை உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்தும் மேற்படி தீர்ப்பின் பிரதிகள் விநியோகிக்கப் படாதிருக்க முயற்சி செய்தனர். ஒற்றுமையாக இருக்கும் நாம் இந்தத் தீர்ப்பை அனுப்பி வைப்பதன் மூலம் சமூகத்தில் பிளவு ஏற்படலாம் என்று கூறினர். இந்த வார்த்தைகளுக்குப் பயந்த சபையினர் தீர்ப்பின் பிரதியை அனுப்பத் தேவையில்லை. மற்றுமொரு விரிவான தீர்ப்பை எழுதலாம் என்று முடிவெடுத்து நீண்ட நாட்களின் பின் சபைக்கு வந்தாலும் அது வெளியிடப்படவில்லை. அரபுக் கல்லூரிகளி லிருந்து எதிர்பார்க்கப்பட்ட உடன்பாட்டுக் கடிதம் வந்து சேரவில்லை.
தொழுகைக்குப் பிறகு சம்பிரதாயப் பூர்வமான கூட்டு துஆவுக்கு தான் தனிப்பட்ட முறையில் உட்பட வில்லை என்பதைப் பகிரங்கமாகக் கூறிய உலமா சபைத் தலைவர் ஒரு முறை கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளியில் ஜும்ஆத் தொழுகை நடாத்திவிட்டு கூட்டு துஆ ஓதாமல் எழும்பிச் சென்றதையும் எடுத்துக் கூறினார். உலமாக்கள் மக்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு ஏற்கனவே IIRO நிறுவனம் அச்சிட்டு வெளியிட்ட தொழுகை முடிந்ததும் ஓதப்படும் திக்ருகள் என்ற துஆ அட்டவனையை வெளியிட ஆவன செய்வதாகவும் கூறினார். அதனையும் செய்து முடித்தார்.  جَزاه الله خَيرا
ஆனால் உலமாக்கள் மக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விளக்கம் கொடுத்துப் பழக்கும் வரை காரியம் கை கூடாது என்பது விளங்குகிறது. சிலர் மக்களது திருப்தியை நாடுகின்றனர் மற்றும் சிலர் பழக்கத்தை விடத் தயாரில்லை எப்படியோ மக்களுக்கு இழுத்தடிக்கப்படுகிறது.
இதனைக் கூறுவதன் மூலம் உலமாக்களை குறை கூறுவது நோக்கமல்ல. உண்மை நிலையைத் தெளிவுபடுத்துவதும் பொது மக்கள் ஒத்துழைப்பு மூலமே எந்த சன்மார்க்கத் தீர்ப்பையும் அமுல் நடாத்த முடியுமென்பதை எடுத்துக் கூறுவதுமே நோக்கமாகும்.
அல்லாஹ்வின் அடியார்களே !
தொழுகைக்குப் பின் கூட்டு துஆ என்றொரு பிரச்சினையை வைத்து சண்டையிட்டுக் கொள்ளவேண்டாம். பிரச்சினைப்பட வேண்டாம். இந்த நூலில் எனக்கு கிடைத்த சகல தகவல்களையும் விளக்கங்களையும் கூறியுள்ளேன். கூட்டு துஆ பற்றிய பிரச்சினை எந்த இயக்கச் சிந்தனையுமல்ல. உலமாக்கள் உண்மை கூற வேண்டும் என்ற தேவை மக்களிடம் வந்துள்ள இந்நேரம் உண்மைகளை விளங்க வேண்டும். சில வேளை இந்நூலுக்கு விமர்சனங்களும், சவால்களும், வெளிவரலாம். நான் இதனை யாருக்காகவும் யாருடைய வேண்டுகோளுக் கிணங்கவும் எழுத வில்லை. அல்லாஹ்வே சகலதையும் நன்கறிந்தவன்.
إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِالله عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
என்னால் இயன்ற மட்டும் (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்ப வில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கின்றேன். அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன். (11-88)
மன்றாட்டம்
யா அல்லாஹ்! உனது சன்மார்க்கத்தில் தெளிவு தருவாயாக, எமது தொழுகைகளையும் அதனைத் தொடர்ந்து நாம் கேட்கும் துஆக்களையும் அங்கீகரித்தருள்வாயாக, கூட்டு துஆ என்ற ஒரு விஷயத்தில் மக்கள் பிளவுபட்டிருக்கின்றனர். விஷயம் விளங்கியவர்கள் அடங்கியொதுங்கி யுள்ளனர் சிலர் இதனை சில்லறைப் பிரச்சினையாக கூறி சன்மார்க்கத்தை  தெளிவு படுத்தாது பயந்து போயுள்ளனர். இன்னும் சிலர் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் இதை விடப் பெரியன உள்ளனவே அதைப் பார்க்கலாமே என்கின்றனர்.
இந்நிலையில் என்ன செய்வதெனத் தடுமாறு கின்றேன்.
எனது வயதும் கழிந்து கொண்டிருக்கின்றது. குறித்த பிரச்சினை பற்றிய விபரத்தை நான் சொல்லா திருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டுமே என்று தான் இதனை எழுதி முடித்தேன். நீ அங்கீகரிக்க வேண்டுமென்று பணிந்து மன்றாடு கின்றேன். மார்க்கத்தை மறைத்த குற்றவாளியாக என்னை கருதிவிடாது உன் அருளால் என்னை சூழ்ந்தருள்வாயாக.” ஏதேனும் ஒன்று பற்றி கேட்கப்பட்டு அதனைச் சொல்லிக் கொடுக்காது மறைக்கும் அறிஞனுக்கு மறுமையில் நெருப்பினாலான கடிவாளமிடப்படும்” என்ற உனது நபியின் வார்த்தை என்னை எப்போதுமே எச்சரிக்கிறது.
இறைவா! உன் திருப்தி ஒன்றையே நாடுகின்றேன். மக்கள் எவரதும் திருப்திக்காக இதை எழுதவில்லை. என்னை அங்கீகரித் தருள்வாயாக!
الله أعلم
و صلى الله على نبينا محمد واله وصحبه أجمعين والحمد لله رب العلمين.
وقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ يَوْمًا إِنَّ مِنْ وَرَائِكُمْ فِتَنًا يَكْثُرُ فِيهَا الْمَالُ وَيُفْتَحُ فِيهَا الْقُرْآنُ حَتَّى يَأْخُذَهُ الْمُؤْمِنُ وَالْمُنَافِقُ وَالرَّجُلُ وَالْمَرْأَةُ وَالصَّغِيرُ وَالْكَبِيرُ وَالْعَبْدُ وَالْحُرُّ فَيُوشِكُ قَائِلٌ أَنْ يَقُولَ مَا لِلنَّاسِ لاَ يَتَّبِعُونِي وَقَدْ قَرَأْتُ الْقُرْآنَ مَا ھُمْ بِمُتَّبِعِيَّ حَتَّى أَبْتَدِعَ لَهُمْ غَيْرَهُ فَإِيَّاكُمْ وَمَا ابْتُدِعَ فَإِنَّ مَا ابْتُدِعَ ضَلاَلَةٌ ابو داود - ٤٦١١
மு ஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  “உங்களுக்கு பின்னால் மாபெரிய சோதனைகள் ஏற்பட்டு அப்போது செல்வம் கொழிக்கலாம். குர்ஆனை முஃமினும், முனாபிக்கும், ஆண்களும், பெண்களும், சிறியவர்களும், பெரியவர்களும், சுதந்திரப் புருஷனும், அடிமையும் பயன் படுத்திக் கொள்ளும் அளவு திறந்து கொடுக்கப்படும். மனிதருக்கு என்ன ஏற்பட்டுள்ளது! நான் சொல்வதைக்கேட்டு பின்பற்று கிறார்கள் இல்லையே!
நான் குர்ஆனை ஓதிக் காட்டினேன், வேறேதும் ஒன்று ஏற்படுத்தித் தரும் வரை, அதைக் கூடப் பின்பற்றுகிறார்கள் இல்லையே! நூதனமாக ஏற்படுத்தப்பட்டதை உங்களுக்கு எச்சரிக்கின் றேன். நூதனமாக தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் வழிகேடே!”