மரணத்தின் பின்?

புதைகுழி தான் மறு உலகின் தங்குமிடங்களில் முதலாவது தங்குமிடம். எனவே அது அவனின் நரகப் படுகுழியாகவோ, சுவர்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகவோதான் இருக்கும்.
மலக்குகள் வருவார்கள். உயிர் கைப்பற்றப்படவுள்ள மனிதன் நல்லவராக இருப்பின் மலக்குகள் அவனின் ஆத்மாவிடம், நல்ல உடலில் இருந்த நல்லாத்மாவே! வெளியேறுவாயாக. புகழுடன் வெளியேறுவாயாக. நீ மகிழ்ச்சியாக இரு. உணக்கு மகிழ்ச்சியும், நல் வாழ்வும் உண்டு. கோபம் எதுவுமின்றி பூரண திருப்தியுடன் எத்தனையோ பேர் உன் வருகையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர், என்று கூறுவர்.
மரணத்தின் பின் மறு வாழ்வு உண்டென்பதிலும், சுவர்க்கமும் நரகமும் உண்மை என்பதிலும் யாருக்குப் பூரண நம்பிக்கை இருக்கின்றதோ, அவரின் செயற்பாடுகள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டதாகவும், நீதிக்கும் நியாயத்துக்கும் உற்பட்டதாகவும் இருக்கும். ஷைத்தானுக்கும், மற்றும் அநீதிக்கும், அநியாயத்திற்கும் அவர் துணை போக மாட்டார்.

 

மரணத்தின் பின்…?

 


< සිංහල >
        
அப்துல்லாஹ் இப்னு இப்ராஹீம் அல் ரஊஜு




Y.M.S.இஸ்மாயில் இமாம்

Reviser's name
முஹம்மத் அமீன்
 
 ماذا بعد الموت
منتقى من كتاب التذكرة للقرطبي
        
عبد الله بن إبراهيم الرعوجي

دار القاسم للنشر- الرياض


ترجمة: سيد إسماعيل إمام ابن يحي مولانا
مراجعة:محمد أمين

 

 

 


                               
என்னுரை

அளவற்ற  அருளாளனும்  நிகரற்ற  அன்படையோனு மாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்லாஹ்வின் கருணையும், சாந்தியும் நமது தூதர், இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், அன்னாரின் கிளையார், தோழர்கள், மற்றும் நல்லடியார்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
மரணம் என்பது உண்மை, அதிலிருந்து யாரும் தப்ப முடியாது, அது நிதர்சனமானது. இதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஏனெனில் தினமும் மரணங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. மரண சடங்குகளில் பலரும் கலந்து கொள்கின்றனர். எனவே எல்லோரும் மரணத்தை உறுதியாக நம்புகின்றனர். ஆனால் இவ்வுலக வாழ்வுடன் மனித வாழ்வு முடிவுறுமா? அல்லது அதனையடுத்து மறு வாழ்வு தொடருமா? சுவர்க்கமும், நரகமும் உண்மைதானா? என்ற விடயத்தில்தான் மனிதன் விடை காண முடியாமல் தடுமாறுகின்றான். அதனால் இவ்விடயத்தில் பலருக்கு சந்தேகம். சர்வ உலக இறைவனாகிய அல்லாஹ்வை மறுக்கின்ற நாஸ்திகர், மரணத்தின் பின் மறு வாழ்வு உண்டென்பதை நம்புவதே இல்லை. ஆனால் சமய வாதிகளைப் பொருத்த வரை, அவர்கள் மரணத்தின் பின் என்ன நடை பெறப்போகின்றது என்ற விடயத்தில் பல கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அவர்களில் மரணத்தின் பின் மறு வாழ்வை மறுப்பவர்களும், மறு பிறப்புப் பற்றி நம்புபவர்களும் இருக்கின்றனர்.
ஆனால் அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாமிய மார்க்கம், மரணத்தின் பின்னுள்ள மறு வாழ்வு விடயத்தில் தெளிவான கருத்தைக் கொண்டுள்ளது.  இவ்வுலக வாழ்வு அழியக்கூடியது, அதனை அடுத்து வரும் மறு வாழ்வு தான் நிலையானது. மனிதன் தன் செயலுக்குத் தக்கபடி சுவனபதியையோ, நரக வேதனையையோ அடைவான். என்பதே இஸ்லாத்தின் கொள்கை. இதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே இவ்விடயத்தில் எல்லா முஸ்லிம்களும் உறுதியாக இருப்பது அவசியம். ஆனால் சகல முஸ்லிம் மக்களும் இவ்விடயத்தில் பூரண நம்பிக்கையுடன் இருக்கின்றனரா? என்பது கேள்விக் குறியே. ஏனெனில் இன்றைய முஸ்லிம்களின் பலரின் செயற்பாடுகள், அவர்கள் மறு வாழ்வின் மீது ஐயம் கொண்டவர்களோ என்ற எண்ணத் தோன்றுகின்றது.
ஏனெனில் மரணத்தின் பின் மறு வாழ்வு உண்டென்பதிலும், சுவர்க்கமும் நரகமும் உண்மை என்பதிலும் யாருக்குப் பூரண நம்பிக்கை இருக்கின்றதோ, அவரின் செயற்பாடுகள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டதா கவும், நீதிக்கும் நியாயத்துக்கும் உற்பட்டதாகவும் இருக்கும். ஷைத்தானுக்கும், மற்றும் அநீதிக்கும், அநியாயத்திற்கும் அவர் துணை போக மாட்டார். ஆகையால் ஒவ்வொரு முஸ்லிமும் மரணத்தின் பின்னுள்ள ஒவ்வொரு நிகழ்வு பற்றியும் அறிந்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் அவர்கள் மறு உலக வாழ்க்கைக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள முடியும். எனவேதான் இமாம்களும் அறிஞர்களும் மறு உலக வாழ்க்கை பற்றி புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதினர். இதன் அடிப்படையில் ஸபெயின் தேசத்தின் குர்துபா நகரில் பிறந்த தலை சிறந்த தப்ஸீர் ஆசிரியரும், அறிஞரும், இமாமும் ஆகிய ‘இமாம் அல் குர்துபீ’ என பிரசித்தி பெற்ற‘ அபூ அப்துல்லா முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு அபூ பக்ர் இப்னு கர்ஹ் என்பவர்,  اَلتذكرة  - ஞாபகப்படுத்தல் என்ற பெயரில் ஒரு நூலை எழுதினார். அதிலுள்ள முக்கிய விடயங்களை வடித்தெடுத்து, அப்துல்லா பின் இப்றாஹீம் அர் ராஊஜி என்பார் ماذا بعد الموت –மரணத்தின் பின் யாது? என்ற தலைப்பில் ஒரு குறும் புத்தகத்தை எழுதியுள்ளார் அதனையே அடியேன் மரணத்தின் பின்? என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளேன். இதன் மூலம் யாவரும் பயன் பெற அல்லாஹ் அருள் புரிவானாக.     
YMSI.இமாம் (ரஷாதீ—பெங்களூர்)
 07\08\2015
மரணத்தின் பின் ? பாகம் —1
முன்னுரை
            
 அளவற்ற  அருளாளனும்  நிகரற்ற  அன்புடையோனுமாகிய       அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
புகழ் யாவும் சர்வ உலக இரட்சகனான அல்லாஹ்வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் நமது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், அன்னாரின் கிளையார், தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ ﴿٢٦﴾ وَيَبْقَىٰ وَجْهُ رَ‌بِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَ‌امِ ﴿٢٧/الرحمن)
“அதிலுல்ல (உலகிலுல்ல) அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் மிக்க உங்களது இறைவனின் திரு முகம் மட்டும் நிலைத்திருக்கும்” (55\26,27) என்ற அல்லாஹ்வின் திரு வசனத்திற்கு ஒப்ப உலகிலுள்ள யாவும் அழிந்து விடும் என்பது உறுதிப் படுத்தப்பட்ட விடயமாகும். இதன்படி ஒவ்வொரு பரம்பரையும், நூற்றாண்டும் கழிய, அதனை தொடர்ந்து இன்னொரு பரம்பரையும் நூற்றாண்டும் தொடர்ந்து வருகின்றன. இதனை அல்லாஹ்வின் பின் வரும் வசனம் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது.
أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّنَ الْقُرُ‌ونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ ۖ أَفَلَا يَسْمَعُونَ ﴿٢٦/السجدة﴾
     “இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குப் போய் வந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு, அது நேரான வழியைக் காட்டவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?”( 32\26)
எனவே நித்திய ஜீவனான அல்லாஹ் இவ்வுலகிலுள்ள சகல மனிதனுக்கும் ஒரு முடிவை வைத்துள்ளான். அதனை மரணத்தின் மூலம் சம்பவிக்கும் படி அவன் ஏற்படுத்துயுள்ளான். எனவே மரணத்தின் மூலம் மறுமையின் பக்கம் மனிதன் மிகவும் வேகமாக  பயணம் கொண்டிருக்கின்றான். அதன் மூலம் அவன் தன் குடும்பத்தையும், செல்வத்தையும், பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து புதைகுழியின் பக்கமே நகர்ந்து செல்கிறான். அந்த புதைகுழி தான் மறு உலகின் தங்குமிடங்களில் முதலாவது தங்குமிடம். எனவே அது அவனின் நரகப் படுகுழியாகவோ, சுவர்கத்தின் பூங்காக்களில்  ஒரு பூங்காவாகவோதான் இருக்கும்.  
மரணத்தின் யதார்த்தம் யாது? உடலை விட்டும் ஆத்மா பிரிந்து விடுவதே மரணம் எனப்படுகிறது. மரணத்தின் பின்னர் அவன் புதைகுழியில் கிடத்தப் படுகிறான். அதன் பின் அவனின் உடல் அழிந்து விடுகிறது. ஆனால் ஆத்மா அப்படி அழிவதில்லை. அது அழியாத, என்றும் நிலைத்திருக்கும் ஒரு பொருளாகும். ஆகையால் அது சுவர்க்கத்தின் இன்பத்தையோ, அல்லது நரகத்தின் வேதனையையோ தான் அடைந்து கொள்ளும். அதனால்தான் மரணத்தை அதிகமாக நினைவு கூறும் படியாகத் தன் தோழர்ளை நபியவர்கள் தூண்டி வந்தார்கள். அவர்கள் தன் தோழர்களிடம்,
"أَكْثِرُوْا مِن ذِكْرِ هَاذِمَ اللذَاتِ اْلمَوْتَ  (الترمذي ,النسائي, إبن ماجة)
“இன்பங்கள் அனைத்தையும் அழித்து விடும்படியான மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்” என்று கூறினார்கள். (திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா)
மனிதன் அனுபவித்து வந்த சகல இன்பங்களும் மரணத்துடன் முடிந்து விடும். பல்வகை சுவையான உணவுகளை சுவைத்து வந்த அவனின் வாய் புழுக்களின் உரைவிடமாகிவிடும். மென்மையான படுக்கையில் புரண்டு வந்த அவனின் விலா, பூச்சுப் புழுக்களின் ஆகாரமாகிவிடும். இனிய காட்சிகளைப் பார்த்து வந்த அவனின் கண்கள், கன்னத்தின் மீது கண்ணீரை வடிக்கும். தன் மனைவியுடனும் நன்பர்களுடனும் ஒன்றாக இருந்து மகிழ்ந்திருந்த அவன் யாருடைய அரவணைப்பும் இன்றி  இருள் மயமான புதை குழியில் தனித்து விடுவான்.
இப்படியான இந்த மரணத்தை நினைவு கூறும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் மூன்று நல்ல பண்புகளை வழங்குவான். அவசரமாகப் பாவ மன்னிப்புக் கோரும் தன்மையையும், இறை வழிபாட்டில் சுருசுருப்பையும், உள்ளதைக் கொண்டு திருப்தி கொள்ளும் மன நிலையையும் அவனுக்கு அல்லாஹ் வழங்குவான். மேலும் மரணத்தை மறந்து வாழும் மனிதனை மூன்று விடயங்களைக் கொண்டு அவன் தண்டிப்பான். அவையாவன அவனுக்கு பாவமன்னிப்புக் கோரும் வாய்ப்பு பின் தள்ளப்படும். இறை வழிபாட்டில் அவனுக்கு சோம்பல் உண்டாகும், மேலும் உள்ளதைக் கொண்டு திருப்தி கொள்ளும் மனநிலை  அவனுக்கு இருக்காது. இவ்வாறு அவனை அல்லாஹ் தண்டிப்பான்.
ஒரு முறை ஒரு  அன்ஸாரி தோழர் நபியவர்களிடம்,
يارسول الله أي الْمُؤْمِنِيْنَ أفْضَلُ ؟ فَقَالَ أحْسَنُهُمْ خُلُقًا. قالَ فَأي الْمُؤْمِنِيْنَ أكْيَسُ ؟ قَالَ لِلْمَوْتِ ذِكْرًا  وَأحْسَنُهُمْ لِمَابَعْدَهُ إسْتِعْدَادًا, أولَئِك الأَكْيَاسُ (إبن ماجة)     
“அல்லாஹ்வின் தூதரே! முஃமின்களில் மிகவும் சிரேஷ்ட மானவர் யார்? என வினவினார். அதற்கு நபியவர்கள் “நற் பண்புடையவர்” எனறார்கள். மறுபடியும் அந்தத் தோழர் முஃமின்களில் மிகவும் புத்திசாலி யார் என்றார். அதற்கு நபியவர்கள் “மரணத்தை அதிகம் நிவைவு கூர்ந்து, அதன் பின்னுள்ள வாழ்க்கைக்காகத் தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்பவன்தான் அவர்களில் மிகச் சிறந்தவன், மிகவும் புத்திசாளி ” என்று நபியவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

 

மரணம்
அடியானை மரணம் பிடிக்கும் போது அவனுக்கு அதன் வேதனை அதிகரிக்கும். முற்கால, பிற்கால மக்கள் யாவரினதும் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் سكرات الموت என்ற மரண வேதனை விட்டு வைக்கவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் மரணம் வந்து கொண்டிருந்த வேளையில், அன்னவர்கள் தன் முன்னிருந்த தண்ணீர் பாத்திரத்தில் கையை விட்டு அதனைக் கொண்டு தன்னுடைய முகத்தில் தடவிக் கொண்டார்கள். அவ்வமயம், “لاإله الاالله வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்தை தவிர யாரும் இல்லை. நிச்சயமாக மரண வேதனை உண்டு” என்று கூறினார்கள்.(புகாரி) மேலும் நபியவர்களுக்கு ஏற்பட்ட மரண வேதனையை கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் “நான் ரஸூல்(ஸல்) அவர்களின் மரண வேதனையை  கண்டதன் பின், யாரேனும் ஒருவரின் உயிர் இலகுவாகப் பிரியும் போது அதற்காக நான் பொறாமைப் படுவதில்லை” என்று கூறினார்கள். (திர்மிதி)
உயிர் கைப்பற்றப்படும் போது அதனை மனிதனின் பார்வை தொடரும், என்பதை   நபியவர்களின் வாக்கு உறுதி செய்கின்றது. அபூ ஸலமா (ரழி) அவர்கள் வபாத்தான போது ரஸூல்(ஸல்) அவர்கள், அவரிடம் சென்றார்கள். அப்போது அவரின் கண் திறந்திருந்தது, அப்போது அவரின் கண்களை மூடிய நபியவர்கள் “உயிர் கைப்பற்றப்பட்டதும் அதனை பார்வை தொடரும்” என்று  கூறினார்கள். (முஸ்லிம்) மேலும் உயிர்களைக் கைப்பற்றும் பொறுப்பை சில மலக்குகளிடம் அல்லாஹ் ஒப்படைத்துள்ளான். இதனை பின் வரும் இறைவசனம் தெளிவு படுத்துகின்றது.
تَوَفَّتْهُ رُ‌سُلُنَا وَهُمْ لَا يُفَرِّ‌طُونَ ﴿الأنعام/٦١﴾
 “நமது தூதர்கள், அவரை இறக்கச் செய்கின்றனர். (அந்த விடயத்தில்) அவர்கள் தவறிழைப்பதில்லை”(6\61)
உயிரை கைபற்றும் மலக்குகளின் வருகையைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறுகின்றார்கள்.
 “மலக்குகள் வருவார்கள். உயிர் கைப்பற்றப்படவுள்ள மனிதன் நல்லவராக இருப்பின் மலக்குகள் அவனின் ஆத்மாவிடம், நல்ல உடலில் இருந்த நல்லாத்மாவே! வெளியேறுவாயாக. புகழுடன் வெளியேறுவாயாக. நீ மகிழ்ச்சியாக இரு. உணக்கு மகிழ்ச்சியும், நல் வாழ்வும் உண்டு. கோபம் எதுவுமின்றி பூரண திருப்தியுடன் எத்தனையோ பேர் உன் வருகையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர், என்று கூறுவர். இவ்வாறு குறித்த மனிதனின் ஆத்மா அவனிடமிருந்து பிரியும் வரை  கூறப்படும். பின்னர் அவ்வாத்மா வானத்தின் பால் கொண்டு செல்லபடும். அதனை வானத்தின் உள்ளே கொண்டு செல்ல வானத்தைத் திறக்குமாறு வேண்டப்படும். அப்போது, இவர் யார்? என விசாரிக்கப்படும். அப்போது “அவர் இன்னாருடைய மகன் இன்னார்” என்று மலக்குகள் கூறுவர். அப்போது நல்ல உடலில் இருந்த நல்லாத்மாவே! உன் வரவு நல் வரவாகுக. நீ புகழுடன் பிரவேசிப்பாயாக. நீ சந்தோசமாக இரு. உனக்கு மகிழ்ச்சியும் நல் வாழ்வும் உண்டு. கோபம் எதுவுமின்றி பூரண திருப்தியுடன் எத்தனையோ பேர் உன் வருகையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர், என்று  ஏழாம் வானத்திற்கு அவ்வாத்மா உயர்த்தப்படும் வரை அதனிடம் கூறப்படும்.
ஆனால் மனிதன், தீயவனாக இருந்தால் அவனிடம், மோசமான உடலில் இருந்த கெட்ட ஆத்மாவே! வெளியேறு.  உனக்காக பற்றி எரியும் நெருப்பும், இருண்ட நரகமும் ஆயத்தமாக இருக்கின்றன. இதுதான், உனது சுப செய்தியாகும். இவ்வாறு அவ்வாத்மா உடலை விட்டும் பிரியும் வரையில் அதனிடம் கூறப்படும். பின்னர் வானத்தின் பக்கம் அது உயர்த்தப்பட்டு, அதனை வானத்திற்குள் கொண்டு செல்ல வானத்தைத் திறக்குமாறு வேண்டப்படும். அப்போது இவன் யார்? என கேட்கப்படும். அதற்கு இன்னாரின் மகன் இன்னார் என்று கூறப்படும். அப்போது மோசமான உடலில் இருந்த கெட்ட ஆத்மாவே! உனக்கு எந்த வரவேற்பும் இங்கில்லை. நீ இங்கிருந்து இழிவோடு திரும்பி விடு. உனக்காக வானத்தின் கதவுகள் திறக்கப் படமாட்டாது, என்று கூறப்படும். எனவே அவ்வாத்மா மீண்டும் புதை குழிக்குத் திரும்பி விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(இப்னு மாஜா)
மேலும் மனிதனின் உயிர் பிரிந்த பின், மக்கள் தங்களின் தோள்களின் மீது  அவனின் பிரேதத்தை சுமந்து கெண்டு கப்றை நோக்கிச் செல்லும் வேளையில், அது ஸாலிஹான மனிதனின் பிரேதமாக இருப்பின் “என்னை எடுத்துக் கொண்டு முன்னேறுங்கள், என்னை எடுத்துக் கொண்டு முன்னேறுங்கள்” என்று அது பேசும். ஆனால் அது ஸாலிஹான மனிதனின் சடலமாக இல்லை யெனில் “இதற்கு ஏற்பட்ட கேடே! இதனை எங்கே கொண்டு செல்கின்றீறர்கள்?” என்று அது கூறும். மனிதர்களைத் தவிர ஏனைய எல்லா படைப்புக்களுக்கும் அதன் ஒலி கேட்கும்  என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஸஈத அல் குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)
மேலும் “ ஒரு பிரேதத்தை மூன்று பேர்கள் தொடர்ந்து செல்வர். அவர்களில் இருவர் திரும்பி வர, ஒருவர் அங்கு தங்கி விடுவார். இறந்தவனுடன்  அவனின் குடும்பமும், செல்வமும் அவன் செய்த கருமங்களும்  செல்லும். பின்னர் அவனின் குடும்பமும் செல்வமும் திரும்பி விடுவர். அவன் செய்த கருமங்கள் அவனுடன் தங்கி விடும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புகாரி)
மேலும் மரணத்தின் பின்னர் அடியான் பெரிய பயங்கரங்களை எதிர் நோக்க வேண்டியிருக்கிறது. என்பது ரஸூல் (ஸல்) அவர்களின் வாக்குகளின் மூலம் தெரிய வருகின்றது.
لاَتَمَنوا الْمَوْتَ فَإن هَوْلَ الْمَطْلَعِ شَدِيْدٌ (البخاري)
 “மரணத்தின் மீது ஆசை கொள்ளாதீர்கள். ஏனெனில் பயங்கரத்தின் ஆரம்ப இடமான அது மிகவும் கடுமையானது” என நபி (ஸல்) அவர்கள் உள்ளதை நவின்றார்கள். என்று ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புகாரி). மேலும் “பயங்கரம் ஆரம்பிக்கும் இடமான அந்த கப்றுக்குப்  பூமியில் உள்ளதைப் பிராயச் சித்தமாக கொடுக்க முடியு மென்றிருந்தால், நான் அதனைச்  செய்வேன்.” என்று உமர் இப்னுல்  கத்தாப் (ரழி) அவர்கள் கூறினர்கள். மேலும், அபூ தர்தா (ரழி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் “மூன்று பேர்கள் என்னை சிரிக்க வைத்தனர், இன்னும் மூன்று பேர்கள் என்னை அழ வைத்தனர். மரணம் ஒருவனைத் தேடிக் கொண்டிருக்க, உலகத்தின் மீது மோகம் கொண்டுள்ள ஒருவனும், தான் மறக்கடிக்கப்படாமல் இருக்க தன்னை மறந்து வாழும் இன்னொருவனும், அல்லாஹ்வை தான் திருப்திப் படுத்த முடிந்ததா?, அல்லது அவனை சினத்துக்குள்ளாக்க முடிந்ததா? என்பதை அறியாமல் வாய் நிறைய சிரிக்கும் மற்றுமொருவனும் என்னை சிரிக்க வைத்தனர். மேலும் அன்புக்குரிய நேசர் முஹம்மது(ஸல்) அவர்களினதும் அவர்களின் கட்சியினரினதும் பிரிவு, என்னை அழ வைத்தது. மேலும் மரணத்தின் போதுண்டாகும் பயங்கரம் என்னை கவலைக்குள்ளாக்கியது, மேலும் கிடைக்கப் போவது சுவனமா? அல்லது நரகமா? என்பது இன்னும் மறைவாக இருக்கும் நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் பகிரங்கமாக நின்று கொண்டிருப்பதும் எனக்கு கவலையைத் தருகின்றன.” என்று அபூ தர்தாஃ (ரழி) அவர்கள், கூறினார்கள்.
புதைகுழி
மனிதன் இறந்த பின்னர் புதைகுழியில் சடலம் வைக்கப்படும். இதுவே மறு உலகத்தின் ஆரம்ப நிலையாகும். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது,
"وَإن الْقَبْرَ أولُ مَنَازِلِ الأخِرةِ فإنْ نَجَا مِنْهُ أحَدٌ فَمَا بَعْدَهُ أيْسَرُ مِنْهُ وَإنْ لَمْ يَنْجَ مِنْه فَمَا بَعْدَهُ أشَد مِنْهُ (أخرجه إبن المبارك)     
“நிச்சயமாக மறு உலகின் தங்கு தலங்களில் முதலாவது, புதைகுழியாகும். எனவே யார் அதிலிருந்து ஈடேட்ற்றம் பெறுவாரோ அதன் பின்னால் உள்ள யாவும் மிகவும் இலகுவானவை. ஆனால் அதிலிருந்து ஈடேற்றம் பெறவில்லை எனில் அதன் பின்னால் உள்ள யாவும் மிகவும் கடினமானவை.” என்று நபியவர்கள் கூறினார்கள். ஒரு முறை புதைகுழி ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது, அதன் பக்கமாக  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழர்கள் சகிதம் நடந்து சென்றார்கள். அப்போது அந்த புதைகுழியின் ஓரத்தில் அமர்ந்த நபிகளார் அழுதார்கள். அது, அந்த பூமியையும் நனைத்துவிட்டது. பின்னர் “என்னுடைய சகோதரர்களே! இது போன்ற ஒன்றுக்காக தயாருங்கள்” என்று கூறினார்கள் (அஹ்மத்) மேலும் புதைகுழியை விட கஷ்டமான ஓர் இடத்தை நான் கண்டதில்லை” என்றும் புதைகுழி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகவோ அல்லது நரகத்தின் படுகுழிகளில் ஒரு படுகுழியாகவோதான் இருக்கும்” என்றும் நபியவர்கள்  கூறினார்கள்.(திர்மிதி)
பிரேதம் கப்றில் வைக்கப்பட்டதும் அதனை கப்று  நெறுக்கும், என்று நபியவர்கள் கூறினார்கள். ஸஃத் இப்னு முஆத் (ரழி) அவர்கள் ஷஹீதான போது, அவர்களின் ஜனாஸாவில் எழுபதாயிரம் மலக்குகள் கலந்து கொண்டனர். மேலும் அவர்களின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் அல்லாஹ்வின் ‘அர்ஷு’ குலுங்கியது. மேலும் வான் கதவுகள் திறக்கப்பட்டன. அந்த ஸஹாபியைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது, “ கப்று ஒரு தடவை அவரை நெறுக்கி விட்டு விலகிக் கொண்டது, என்றும் கப்றின் நெறுக்குதல்  நிஜம். எவர் அதிலிருந்து ஈடேற்றம் அடைந்தாரோ அவர் ஈடேற்றம் அடைந்தவர்தான், ஸஃது இப்னு முஆதும் அதிலிருந்து ஈடேற்றம் அடைந்த ஒருவர்தான்” என்று ரஸூல் (ஸல்)  அவர்கள்  கூறினார்கள். (நஸாஈ, இப்னு மாஜா)
மையத் அடக்கம் செய்யப்பட்டதன் பின் அங்கிருந்து அவரின் தோழர்கள் திரும்பிச் செல்லும் போது அவர்களின் பாதணிகளின் ஓசையை அது கேட்கும். பின்னர் அதனிடம் மலக்குகளை அல்லாஹ் அனுப்புவான். மேலும் அவர் ஸாலிஹான மனிதராக இருப்பின் அவரிடம் அழகிய வெண் முகத்தையுடைய மலக்குகளையும், அவர் நல்ல மனிதனாக இல்லாது போனால் அவரிடம் கருமை முக மலக்குகளையும் அல்லாஹ் அனுப்புவான். மேலும் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிப்பதாவது “மையித் கப்றுக்குள் ஆனதும், அவர் ஒரு நல்ல மனிதன் எனில் பயமும் பதட்டமும் இன்றி தன்னுடைய கப்றில் அவர் அமர்ந்து கொள்வார். பின்னர் நீங்கள் எந்த மார்க்கத்தில் இருந்தீர்கள்? என்று அவரிடம் கேட்கப்படும். அதற்கு அவர் நான் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது இருந்தேன், என்று கூறுவார். அபோது இந்த மனிதர் யாரென அவரிடம் கேட்கப்படும். அதற்கவர், இவர் அல்லாஹ் விடமிருந்து அத்தாட்சிகளை எம்மிடம் கொண்டு வந்த முஹம்மது (ஸல்) அவர்களாவார். அவரை நாங்கள் உண்மைப் படுத்தினோம், என்று கூறுவார். அப்போது அவரிடம் நீங்கள் அல்லாஹ்வைப் பார்த்திருக்கின்றீர்களா? என்று கேட்கப்படும். அதற்கு அவர் யாரும் அல்லாஹ்வைப் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, என்று கூறுவார். அப்போது கப்றில் அவருக்காக நரகத்தின் பக்கம் ஒரு பிளவு உண்டாக்கப்படும். அதனூடாக அவர் நரகத்தைக் காண்பார். பின்னர் அவரிடம் உம்மை எதிலிருந்து  அல்லாஹ்  காப்ப்பாற்றியிருக்கின்றான் என்பதைப் பார், என்று கூறப்படும். பின்னர் அவருக்காக சுவர்க்கதின் பக்கம் ஒரு  பிளவு உண்டாக்கப்படும். அப்போதவர்  சுவர்க்கத்தின்  அழகையும்,  அதிலிருப்பவைகளையும் காண்பார். அப்போது அவரிடம் இதுதான் உன்னுடைய இருப்பிடம், நீ உறுதியானவற்றின் மீது இருந்தாய், அதன் மீதே இறந்து போனாய், அல்லாஹ்வின் நாட்டத்தின் படி அதன் மீதே நீ எழுப்பப்படுவாய், என்று கூறப்படும்.
மேலும் கெட்ட மனிதன் பயத்துடனும் பீதியுடனும் தன்னுடைய கப்றில் எழுந்து அமர்ந்து கொள்வான். அப்பொழுது அவனிடம், நீ எந்த மார்க்கத்தில் இருந்தாய்? என கேட்டகப்படும். அதற்கு அவன், அதனை நான் அறிய மாட்டேன், என்பான். அப்போதவனிடம், இந்த மனிதர் யார் என கேட்கப்படும். அதற்கு அவன், ஐயவோ! மனிதர்கள் ஏதோ சொன்னார்கள், அதனையே நானும் சொன்னேன், என்பான். அப்பொழுது அவனுக்காக சுவர்க்கத்தின் பக்கம் ஒரு பிளவு  உண்டாக்கப்படும். அப்போதவன் சுவர்கத்தின் அழகையும், அதிலிருப்பவை களையும் காண்பான். அவ்வமயம் அவனிடம் உன்னை விட்டும் அல்லாஹ் திருப்பிக் கொண்ட இந்த இடத்தைப் பார், என்று கூறப்படும். பின்னர் அவனுக்காக நரகின் பக்கம் ஒரு பிளவு உண்டாக்கப்படும். அப்போதவன் அதனூடக, அங்கு ஒன்றோடென்று மோதிக் கொள்வதைக் காண்பான். அவ்வமயம் அவனிடம் இதுதான் உன்னுடைய தங்குமிடம். நீ சந்தேகத்தின் மீது இருந்தாய், அதன் மீதே மரணமடைந்தாய்,  அல்லாஹ்வின் நாட்டத்தின் படி அதன் மீதே நீ எழுப்படுவாய். என்று கூறப்படும்” என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இப்னு மாஜா)
பர்ராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “நாங்கள் அன்ஸாரி மனிதர் ஒருவரின் ஜனாஸாவின் போது ரஸூல் (ஸல்) அவர்களூடன், கப்று ஸ்தானம் வரை சென்றோம். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட பின் நபியவர்கள் அங்கு அமர்ந்தார்கள். அப்போது தலையில் பறவைகள் அமர்ந்திருக்க நாம் அசையாமல் இருப்பது போன்று அன்னாரைச் சூழ நாம் மிகவும் அமைதியாக  அமர்ந்து கொண்டோம். அவ்வமயம் நபியவர்கள் தன் கையிலிருந்த குச்சியால் நிலத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள் பின்னர் தன் தலையை உயர்த்திய அன்னார் “கப்ரின் வேதனையை விட்டும் பாதுகாவல் தேடுங்கள்” என்று இரண்டு மூன்று தடவை கூறினார்கள்.
பின்னர் நிச்சயமாக முஃமின் உலகை விட்டுப் பிரிந்து மறு உலகத்தின் பால் முன்னோக்கும் வேளையில், அவரிடம் வெண்மையான வதனமுள்ள மலக்குகள் வானத்திலிருந்து இறங்கி வருவார்கள். அவர்களின் முகம் சூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கும். தம்முடன் சுவர்க்கத்தின் கபனையும், வாசனைத் திரவத்தையும்  வைத்திருக்கும் அவர்கள், அந்த முஃமினின் பார்வை எட்டும் தூரம் வரையில் அமர்ந்து கொள்வார்கள். பின்னர் ‘மலக்குல் மௌத்’ வருவார். அவர். அந்த மனிதனின் தலைமாட்டில் அமர்ந்து கொள்வார். பின்னர் “நல்லாத்மாவே! அல்லாஹ்வின் பாவ மன்னிப்பின் பாலும் அவனின் திருப்பொருத்தத்தின் பாலும் புறப்படு” என்று கூறுவார். அப்போது அதிலிருந்து உலகத்திலிருக்கும் மிகவும் வாசமுள்ள கஸ்தூரி வாடை போன்று நறு மணம் வீசும். அதன் பின் அதனை எடுத்துக் கொண்டு மலக்குகளின் கூட்டத்தினரை தாண்டிச் செல்லும் போது, அவர்கள் யாவரும் நறு மணம் கமழும் இந்த றூஹ் ஏது? என்று கேட்பார்கள். அப்போது அதனை சுமந்து செல்லும் மலக்குகள் உலகில் அவரை மக்கள் அழைத்த அழகிய பெயரைக் கொண்டு, “இது இன்னாரின் மகன் இன்னார்” என்று கூறுவார்கள். இவ்வாறு உலக வானத்தின் எல்கைகு அந்த றூஹை எடுத்துச் சென்றவுடன், அவருக்காக வானத்தின் வாயலைத் திறக்கும்படி அவர்கள் கேட்டதுமே வானம் திறக்கப்படும்.
ஒவ்வொரு வானத்திலும் அவரைக் கண்டவர்கள், அவரைப் பற்றிய செய்தியை அடுத்தடுத்த வானங்களுக்கு பரப்பி விடுவர். இதன்படி ஏழாம் வானம் வரையிலும் அவரின் செய்தி சென்றடையும். அப்பொழுது அல்லாஹ் “எனது அடியானின் பட்டோலையை ‘இல்லிய்யூன்’ சுவர்க்கத்தின் பட்டியலில் எழுதி விடுங்கள்” என்று கூறுவான். பின்னர் அந்த உயிரை மீண்டும் பூமிக்கு திரும்மபக் கெண்டுச் செல்லுங்கள், ஏனெனில் அதிலிருந்துதான் அவர்களை நான் படைத்தேன். மேலும் அதிலேயே அவர்களை மீளச் செய்வேன். மீண்டும் அதிலிருந்தே இன்னொரு முறை அவர்களை வெளிப்படுத்துவேன்” என்று கூறுவான். எனவே அந்த றூஹ் மீண்டும் அதன் உடலின் மீது மீட்டப்படும். அப்போது  உடனடியாக இரண்டு மலக்குகள் அவனிடம் வந்து அவனை அமரச் செய்வார்கள். பின்னர் அவனிடம் அவர்கள் “உனது இறைவன் யார்? என்று கேட்பார்கள். அதற்கு அவர் “அல்லாஹ்தான் எனது இறைவன்” என்று கூறுவார். அதையடுத்து அவனிடம் “உமது மார்க்கம் எது? என்று அவர்கள் கேட்பர். அதற்கு அவர் “இஸ்லாம் தான் எனது மார்க்கம்” என்று கூறுவார். பின்னர் அவனிடம் “உங்கள் மத்தியில் அனுப்பப்பட்டிருந்த இந்த மனிதர் யார்? என்று அவர்கள் கேட்பர். அதற்கு அவர் “இவர் அல்லாஹ்வின்  தூதர்” என்பார். அப்போது அவனிடம் “அது உமக்கு எப்படித் தெரியும் என்று அவர்கள் கேட்பர்” அதற்கு அவர் “நான் அல்லாஹ்வின் வேத்தை ஓதி, அதன்மீது விசுவாசம் கெண்டேன். மேலும் அதனை உண்மைப் படுத்தினேன்” என்று கூறுவார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு அழைப்பாளி “என்னுடைய அடியான் உண்மை உரைத்தான். எனவே சுவர்க்கத்தின் விரிப்பை அவருக்கு விரியுங்கள், சுவர்க்கத்தின் ஆடயை அவருக்கு அணிவியுங்கள், மேலும் சுவர்க்கத்தின் ஒரு வாயலை அவருக்குத் திறந்து கொடுங்கள்” என்று கூறுவார். அப்பொழுது சுவர்க்கத்திலிருந்து காற்றும் நறு மணமும் அவனிடம்  வரும். பின்னர் அவரின் பார்வை எட்டும் தூரம் வரையில் அவருடைய கப்று விசாலமாக்கப்படும். அப்பொழுது அவரிடம் ஒர் அழகான மனிதன் வருவார். நறு மணம் கமழ அழகான ஆடை அணிந்திருக்கும் அவர், அவரிடம் “நீ மகிழ்வுடன் இரு. இதுதான் உனக்கு வாக்களிக்களிக்கப்பட்ட நாள்” என்று கூறுவார். அப்போதவர் அந்த மனிதனிடம் “நற் செய்தியைக் கொண்டு வரும் அழகிய முகத்தையுடைய நீங்கள் யார்?” என்பார். அதற்கு அவர் “நான்தான் உன்னுடைய நற் கருமங்கள், என்று கூறுவார். அப்போதவர் “என் இறைவனே! எனது குடும்மபத்தாருடனும், செல்வத்துடனும் நான் போய் சேர,  இப்போதே கியாமத் நாளை ஏற்படுத்தி விடு” என்று கூறுவார்.
மேலும் ஒரு காபிரான அடியான், இவ்வுலகை விட்டுப் பிரிந்து மறு உலகின் பக்கம் திரும்பும் போது, அவனிடம் வானத்திலிருந்து கருமையான முகத்தையுடைய மலக்குகள் வருவார்கள். அவர்களிடம் கனமான, சுரசுரப்பான ஆடைகளும் விரிப்புக்களும் இருக்கும். அவனின் கண் எட்டும் தூரம் வரையில் அவர்கள் அமர்ந்து கொள்வார்கள். பின்னர் ‘மலகுல் மௌத்’ விஜயம் செய்து அவனின் தலைமாட்டில் அமர்ந்து கொள்வார். கெட்ட ஆத்மாவே! அல்லாஹ்வின் கோபத்தின் பால் வெளிப்படு” என்று அவனிடம் அவர் கூறுவார். அப்பெழுது அவனின் உயிர் உடம்பின் எல்லா பாகங்களிலும் பிரிந்து சென்று விடும். அப்பொழுது ‘மலகுல் மௌத்’ ஈரமான கம்பளியில் மாட்டியுள்ள,  நுனி வளைந்த இரும்புக் கம்பியைக் பிடுங்குவது போன்று அவனின் உயிரை  பிடிங்கி யெடுப்பார். உடனடியாக   கண் மூடி திறப்பதற்கு முன்  அந்தக் கனமான பிடவையில் அந்த ஆத்மவ்வை, மலக்குகள் வைப்பர். அப்போது பூமியுள்ள மிகவும் துர்வாடையுள்ள பிணத்தின் துர்வாடைப் போன்று அதிலிருந்து வாடை வெளியாகும். அதனை அவர்கள், மலக்குகளின் கூட்டத்தினருக்கு அருகாமையால் எடுத்துச் செல்லும் போது “இந்த கெட்ட றூஹ் யாருடையது” என்று சகல மலக்குகளும் கேட்பர். அப்பொழுது உலகில் அவனை மக்கள் அழைத்த மிகவும் மோசமான பெயரைக் கொண்டு “இன்னானின் மகன் இன்னான்” என்று கூறுவார்கள். இவ்வாறு உலக வானின் எல்லையை அடைந்ததும், அதனை மேலே கொண்டு செல்ல வானத்தைத் திறக்கும் படி அனுமதி கோரப்படும். ஆனால் அவனுக்காக வானம் திறக்கப்பட மாட்டாது, என்று கூறிய நபியவர்கள், இந்த வசனத்தை ஓதினார்கள்.  
لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّىٰ يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ ۚ (الأعراف/40)
 “அவர்களுக்கு வானத்தின் வாயல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியை அடையவே மாட்டாரடகள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.(7\40)”
எனவே அவனின் பட்டோலையை பூமியின் அடியிலிருக்கும் ‘ஸிஜ்ஜீன்’  என்ற நரகத்தின் பட்டியலில் எழுதுங்கள், என்று  அல்லாஹ் கூறுவான்,  என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள், பின்னர்  இந்த வசனத்தையும்  ஓதினார்கள்.
        
 وَمَن يُشْرِ‌كْ بِاللَّـهِ فَكَأَنَّمَا خَرَّ‌ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ‌ أَوْ تَهْوِي بِهِ الرِّ‌يحُ فِي مَكَانٍ سَحِيقٍ ﴿الحج/٣١)                                              

 “எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் வானத்திலிருந்து விழுந்தவனைப் போலாவான்.அவனை பறகைள் இறாய்ந்து கொண்டு போய்விடும். அல்லது காற்று வெகு தூரத்திற்கு அடித்துக் கொண்டு சென்றுவிடும்(22\31)
பின்னர் நபிகளார் தன் உரையைத் தொடர்ந்தார்கள். இதனையடுத்து அந்த ஆத்மா  அதன் உடலின் பால் மீட்கப்படும். அப்பொழுது அவனிடம் இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் அவனை அமரச் செய்து அவனிடம் “உனது மார்க்கம் யாது?” என்று கேட்பர். அதற்கு “அவன் ஐயவோ! நான் அறியேன்” ன்று கூறுவான். பின்னர் “உங்களின் பால் அனுப்பப்பட்டிருந்த இந்த மனிதர் யார்?” என்று அவர்கள் கேட்பர். அதற்கு அவன் “ஐயவோ! நான் அறியேனே! என்பான். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல் “இவன் பொய் சொல்கிறான். ஆகையால் அவனுக்கு நரகத்து விரிப்பை விரியுங்கள், அவனுக்காக நரகத்தின் ஒரு வாயலைத் திறவுங்கள்” என்று அழைக்கும். அப்போது நரகத்திலிருந்து அதன் வெப்பமும், நச்சுக் காற்றும் அவனிடம் வரும். மேலும் அவனைக் கப்று நெறுக்கும். அப்பொழுது அவனின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று மாட்டிக் கெள்ளும். அப்பொழுது அவலட்சமான ஒரு மனிதன் அவனிடம் வருவார். அவர் அவனிடம் “இதுதான் உனக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உனக்குக் கேடாகவுள்ள இந்நாளையிட்டு நீ மகிழ்ச்சியாக இரு” என்று கூறுவார். அப்பொழுது அவன் அவரிடம், கெட்ட செய்தியைக் கொண்டு வரும்  அவலட்சமான முத்தையுடைய நீ யார்?” என்று கேட்பான். அதற்கு அவர் “நான்தான் உன்னுடைய மோசமான கிரியைகள்” என்று கூறுவார். அப்பொழுது அவன் “என் இறைவனே கியாமத்து நாளை ஏற்படுத்தி விடாதே” என்று கூறுவான். (அபூதாவூத்,அஹ்மத்)
இவ்வாறு கியாமம் தேன்றும் வரையில் தங்களின் புதைகுழி களில் வேதனை செய்யப்படும் சமூகத்தினரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கனவில்  பார்த்திருக்கின்றார்கள்.  நபி அவர்களின் அப்படியான ஒரு  கனவு பற்றி  அறிவிக்கும்  ஸம்ரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் இவ்வாறு   குறிப்பிடுகிறார்கள்,
“நபியவர்களுக்கு கனவில் ஒரு மனிதன் காட்டப்பட்டான். குப்புறக்  கிடத்தப்பட்டிருந்த அவனின் தலைப் பாகத்தில்  இன்னொருவர் கல்லொன்று வைத்துக் கொண்டிருந்தார். அவர் அந்தக் கல்லைக் கொண்டு அவனின் தலையில் அடித்தார். அவனுக்குத் தொல்லைக் கொடுத்த அக்கல், தொலைவில் போய் விழுந்தது. அவர் அந்தக் கல்லை மீண்டும் எடுத்து வரும் போது அவனின் தலை முன்னிருந்தது போல சரி செய்யப்பட்டருந்தது.  அவர் அதனைக் கொண்டு மீண்டும் அவனை அடித்தார். இப்படி கியாமம்  தேன்றும் வரையில் அவர் அவனை அடித்துக் கொண்டிருப்பார். இப்படித் தண்டிக்கப்படுபவன்  கடமையானத் தொழுகையைத் தொழாமல்  தூங்கி வந்தவனும், அல்குர்ஆனை நிராகரித்து  வந்தவனுமாவான்.  மேலும் நபியவர்களுக்கு இன்னொரு மனிதன் காட்டப்பட்டான்.  அவன் தன் பிடரியின் மீது சாத்தப்பட்டிருந்தான்.  அவனின் பக்கத்திலும்  ஒரு மனிதன்  இருந்தார். அவரிடம் கூரிய  இரும்புக் கம்பி இருந்தது. அவர் அதனைக் கொண்டு அவனின் வாயின் முகப்பின் உற் பாகத்திலிருந்து  அவனின் பிடரி வரையும், மேலும் அவனின் மூக்குத் துவாரத்திலிருந்து அவனின் பிடரி வரையிலும் கீறிக் கிழித்தார். இப்படி அவனின் வழது புரத்தைக் கிழித்த பின், அப்படியே  அவனின் இடது பாகத்திலும் கிழிக்கலானார். இதை முடித்துக் கொண்டு அவர் அவனின் வலது  பாகத்திற்கு தரும்பி வரும் போது, அந்தப்பகுதி மீண்டும் சரி செய்யப்பட்டிருக்கக் கண்டார். ஆகையால் முன்னர் செய்தது போன்று மீண்டும் அதனைக் கிழிக்க ஆரம்பித்தார். இப்படி கியாமம் தேன்றும் வரை அவர் இதனைச் செய்து கொண்டிருப்பார். இந்தத் தண்டனைக் குரியவர் உலகெங்கிலும் பொய் பேசித் திரிந்த மனிதன்.  மேலும் ஒரு அடுப்பின்  எதிரில்  பல ஆண்களும்  பெண்களும் நிர்வாண கோலத்தில் இருப்பதையும் நபிகளார் கண்டார்கள். அவர்கள் யாவரும் விபச்சாரிகள். அந்த அடுப்பின் அடியிலிருந்து கிளம்பி வந்த நெருப்புச் சுவாளை அவர்களை  அடிக்கடித் தாக்கியது. அப்போதெல்லாம் அவர்கள் ஓலமிட்டனர். மேலும் இரத்த ஆற்றில் நீந்தும் ஒரு மனிதனையும் நபியவர்கள்  கண்டார்கள்.  அதன் கரையில் இருந்த இன்னொரு மனிதனிடம் கற்கள் இருந்தன. அவர் அதிலிருந்து வெளியே வர முயன்று கொண்டிருந்த அந்த மனிதனின் வாயில்  இரத்தத்தைக்  கொட்டினார்.  கியாமம் நிறுவப்படும் வரையில் இப்படி தண்டிக்கப்படுபவன், வட்டி சாப்பிட்ட ஒருவனாவான். மேலும்  இன்னொரு விசித்திரமான கூட்டத்தினரையும் நபியவர்கள் கண்டார்கள். அவர்களின் பாதி முகம் மிகவும் அழகாக இருந்தது. அப்படியான அழகை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள். மேலும் அவர்களின் அடுத்த பாதி முகமும்,  மிகவும் அவலட்சனமாக இருந்தது. அப்படியான அவலட்சனத்தையும் நீங்கள்  பார்த்திருக்க மாட்டீர்கள். இவர்களை  பால் போன்ற தூய்மையான ஆற்றில் விடும்படி கட்டளை வந்தது  அதன்படி அவர்கள் அந்த ஆற்றில் இறங்கினர். அப்போது அவர்களின் பாவங்கள் அழிக்கப்பட்டன.  பின்னர்  அவர்களின் முகம் மிகவும் அழகிய முகங்களாக மாறின  நீங்கள் அப்படியான  அழகினை  இதுவரைப்  பார்த்திருக்க மாட்டீர்கள். நல்லமல்களையும் தீய அமல்களையும்  கலந்து மாறி மாறிச் செய்து வந்தவர்களே அவர்கள்.  அன்னவர்களின் பாவச்செயலை அல்லாஹ் மன்னித்து விட்டான் (புகாரி) மேலும் “சிறுநீர் கழிப்பு விடயத்தில் பேணிப்பில்லாத வர்களே கப்றில்  பெதுவாக வேதனைக்குள்ளாகின்றனர்” என்று நபியவர்கள் கூறினார்கள் என்றும், ”சிறு நீர் விடயத்தில் பேணிப்பில்லாத ஒரு வனும், கோள் பேசித் திரிந்த இன்னொருவனும் தங்களின் கப்றுகளில் வேதனைக்கு உற்படுத்தப் பட்டிருந்ததையும் நபியவர்கள் கண்டார்கள்” என்றும் ஸம்ரா இப்னு ஜுன்துப்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)
மேலும் கப்றின் சோதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்குரிய சில காரண  காரியங்கள் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “அல்லாஹ்வின் பாதையில் ஓர் இரவும் பகலும் தங்கியிருப்பது ஒரு மாத காலம் நோன்பு நோற்பதையும் அதன் இரவில் நின்று வணங்கு வதையும் விட மேலானது என்றும், அவர் அங்கு இறந்து போனால், அந்த காலங்களில் அவர் செய்து வந்த கருமங்களுக்குரிய நன்மை வழங்கப்படும், என்றும் அவருக்கு உணவளிக்கப்படும் என்றும் மேலும் கப்றின் சோதகைளிலிருந்து அவர் பாதுகாக்கப்படுவார் என்றும் நபியவர்கள் கூறினார்கள்” என ஸல்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புகாரி) மேலும் நபியவர்களிடம் ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! கப்றில் முஃமின்கள் யாவரும் சோதனைக்கு உள்ளாகின்ற போது, ‘ஷஹீத்’ இறைப் பாதையில் வீர மரணம் அடைந்வர் சோதனைக்கு ஆளாகாதிருப்பதேன்?” என்று வினவினார். அதற்கு நபியவர்கள் “அந்த ஷஹீதின் தலை மேல் வாள் வீச்சின் பிரகாசம் விழுந்ததொன்றே, கப்றின் சோதனைக்குப் போதமானது என்று கூறினார்கள். (நஸாஈ) மேலும் வயிற்றுக் கோளாரினால் கொள்ளப்பட்ட மனிதனுக்கு கப்றின் வேதனை இல்லை யென்று நபியவர்கள் சொன்னதில்லையா? என்று ஸல்மான் இப்னு ஸர்து, மற்றும் காலித் இப்னு உர்பதா எனும் இருவரில் ஒருவர் கேள்வி  எழுப்பினார்” என நஸாஈ யில் பதிவாகியுள்ளது. மேலும் ஜும்ஆவின் தினத்தில் இரவிலோ பகலிலோ இறந்து போகும் ஒரு முஸ்லிமை கப்றின் சோதனையிலிருந்து அல்லாஹ் பாதுகாக்காமல்  இருப்பதில்லை” என்று நபி (ஸல்)   அவ்கள் நவின்றார்கள், என  அப்துல்லாஹ் இப்னு  அம்ரு (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)
மேலும் கியாமத்து நாள் தோன்றும் வரையில் சுவர்க்க வாசிகள் அவர்களின் கப்றுகளில் இன்பத்தையும், நரக வாசிகள் அவர்களின் கப்றுகளில் வேதனையையும் அனுபவித்து வருவர் என்பது நிச்சயம்.. ஏனெனில் “நிச்சயமாக உங்களில் ஒருவர் இறந்து போனதும் அவர் தங்கவிருக்கும் இடம் எதுவென்று அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சுவர்க்கத்தைச் சேர்ந்தவர்  எனில் அவர் சுவர்க்கவாசி என்றும், அவர் நரகத்தைச் சேர்ந்வர் எனில் அவர் நரகவாசி எனவும் அறிவிக்கப்பட்டு, கியாமத்து நாளில் உன்னை  அல்லாஹ் எழுப்பும் வரையில் இதுதான் உனக்குரிய  இடம் எனவும், கூறப்படும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புகாரி)
ஸூர் ஊதல்
அல்லாஹ்   கியாமத்  நாளை ஏற்படுத்த  நாடும்  போது  இஸ்ராபீல் (அலை)அவர்களிடம் ஸூர் ஊதும்படி  உத்தரவிடுவான்.  அப்போதவர்  ஒரு  முறை  ஊது  குழலை  ஊதுவார்கள்  அப்பொழுது  அல்லாஹ்வின்  நாட்டத்திலுள்ள  பொருட்களைத் தவிர்ந்த  வானம் பூமியிலுள்ள  எல்லாம்  அழிந்து  விடும். அப்துல்லா இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “ஸூர்  ஊதப்பட்டதும்.  அதன் ஒலியை  நீண்ட,  வளைந்த  கழுத்துடைய  ஒரு  மனிதனையன்றி  வேறு  யாரும் கேட்க மாட்டார்கள். மேலும்  அதனை  முதலாவது  செவியுறும் அந்த மனிதன்,  அவ்வமயம்  தனது  ஒட்டகத்தின்  தடாகத்தை  புனர்  நிர்மாணம்  செய்து கொண்டிருப்பான். அவன்  அந்த ஸூரின்  ஒலியைக் கேட்டதுவும்  மூர்ச்சையுற்று  விழுவான். அதனைத் தொடர்ந்து  சகல மக்களும் மூர்ச்சையுற்று  விழுவர். பின்னர்  அல்லாஹ்  ஒரு  மழையை  அனுப்புவான். அது  சுக்கிலம்  போன்று  இருக்கும். அதன் மூலம் மனிதர்களின்  மேனி வளரும். பின்னர் மறுபடியும் ஸூர் ஊதப்படும். அப்பொழுது சகல மக்களும் எழுந்து அவதானிப்பார்கள். பின்னர், ஜனங்களே!  உங்களின்  இறைவனிடம்  விரையுங்கள், என்று  அவர்களிடம்  கூறப்படும். என்று கூறிய நபியவர்கள், இதனையே,
وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْئُولُونَ ﴿الصافا/ت٢٤)
 “அங்கு அவர்களை  நிறுத்தி வையுங்கள். நிச்சயமாக அவர்களைக் கேட்க வேண்டியிருக்கின்றது ”(37\24) என்று அல்லாஹ் கூறுகின்றான். என்றும், பின்னர்  நரகத்திற்குச்  செல்ல வேண்டிய வர்களை  வெளியே  கொண்டு வாருங்கள்  என்றும் கூறப்படும். அப்பொழுது   அவர்கள் எத்தனை  பேர்கள்  என  டேகப்படும்.  அதற்கு ஒவ்வொரு  ஆயிரம்  பேர்களிலிருந்தும்  தொல்லாயிரத்துத் தொண்ணூற்றி ஒன்பது பேர்கள்  என்று கூறப்படும்.  அந்த நாள்தான்,
          يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا ﴿المزمل\17﴾
“அந்நாளில்  சிறு குழந்தைகளையும்  நரைத்தவர்களாக ஆக்கி விடும்” (73\17) என்றும்,
يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ(القلم/42)
“கெண்டைக் காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்) (68\42) என்றும் அல்குர்ஆன்  குறிப்பிடும் நாள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு  உமர்  (ரழி) அவர்கள்  அறிவிக்கின்றார் கள். (முஸ்லிம்)
சகல மக்களும் அழிந்து போனதும், வானத்தை தன் வலது கரத்தால் அல்லாஹ் சுருட்டி எடுப்பான். இதனை ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. “கியாமத்து நாளில் அல்லாஹ் பூமியைக் கைப்பற்றுவான். மேலும் தன் வலது கரத்தால் வானத்தைச் சுருட்டுவான். பின்னர் “நானே அரசன். பூமியின் அரசர்கள் எல்லாம் எங்கே?” என்றும் சொல்வான்” என நபியவர்கள் கூறினார்கள், என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புகாரி)
     முதல் ஸூர் ஊதப்பட்டதும் மனிதர்கள் அழிவார்கள் அதன் பின், அவர்கள் கப்றுகளில் நாற்பது ஆண்டுகள் இருப்பார்கள். பின்னர் கப்றுகளிலிருந்து அவர்களை எழுப்புவதற்காக மறுபடியும் ஸுர் ஊதப்படும். இதனை அல்லாஹ்வின்  வசனம் இப்படி இயம்புகிறது.
ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَ‌ىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُ‌ونَ ﴿الزمر/٦٨﴾
“மறு முறை ஸுர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர் நேக்கி நிற்பார்கள்” (39\68)
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ‌ فَتَأْتُونَ أَفْوَاجًا ﴿١٨﴾
“ஸூர் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்”(78\18)
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ‌ فَلَا أَنسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ ﴿المؤمنون/١٠١﴾
“ஸூர் ஊதப்பட்டு விட்டால் அந்நாளில் அவர்களுக் கிடையில் பந்துத்துவம் இருக்காது.ஒருவரின் செய்தியை மற்றவர் விசாரிக்கவும் மாட்டார்” (23\101)
يَوْمَ يَخْرُ‌جُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَ‌اعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ ﴿المعارج/٤٣﴾
“அவர்கள் தங்களின் கொடிகளின் பக்கம் விரைந்து ஓடுவது போலவே சமாதிகளிலிருந்து வெகு தீவிரமாகச் செல்லும் நாளை நினைவூட்டுங்கள்”
மேலும் ஜனங்கள் தங்களின் கப்றுகளிலிருந்து வெளியேறும் நிகழ்வு, பூமியிலிருந்து பயிர்கள் வெளியேறுவது போன்று இருக்கும், இதனை  இவ்வாறு அல்லாஹ் தெளிவு படுத்துகின்றான்.
فَأَنزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَ‌جْنَا بِهِ مِن كُلِّ الثَّمَرَ‌اتِ ۚ كَذَٰلِكَ نُخْرِ‌جُ الْمَوْتَىٰ لَعَلَّكُمْ تَذَكَّرُ‌ونَ ﴿الأعراف/٥٧﴾
“பின்னர் நாம் அதனை (மேகங்களை)க் கொண்டு மழை பெய்யச் செய்கின்றோம். பின்னர் அதைக் கொண்டு எல்லா வகை கனிகளையும் வெளியாக்குகின்றோம். இவ்வாறே மரணித்தவர்களையும் வெளியாக்கு வோம். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக” (7\57)  
“அல்லாஹ்வின் தூதரே! சிருஷ்டிகளை எவ்வாறு மீண்டும் அல்லாஹ் உயிர்ப்பிக்கின்றான்? அவனின் சிருஷ்டிகளில் அதற்குரிய அடையாளம் யாது? எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் “வரட்சிக் காலத்தில் உமது சமூகத்தவரின் பள்ளத்தாக்குகளுக்குச் சென்றுள்ள நீர், பின்னர் அதுவல்லாத காலத்தில் அங்கு சென்ற போது அது செலிப்படைந்திருப்பதைக் நீர் காணவில்லையா?” என்று சொன்னார்கள். அதற்கு நான் “ஆம் என்றேன். அதற்கு நபியவர்கள் “ அதுதான் அல்லாஹ்வின் சிருஷ்டிகளில் இருக்கும் அத்தாட்சி” என்று கூறினார்கள், என        அபூ ரஸீன் அல் உகைலீ அவர்கள் அறிவிக்கின் றார்கள். (அபூ தாவூத், அல்பைஹகி)  
இறந்தோரை எழுப்புதல்
மனிதர்கள் எப்படி இறந்து போனார்களோ! அப்படியே அவர்களை  மீண்டும் அல்லாஹ்  எழுப்புவான். அவர்கள் இறக்கும் போது நல்ல  காரியம் செய்கின்றவர்களாக இருந்தால் அந்த நிலையிலும், அவர்கள் தீய காரியம் செய்கின்றவர்களாக இருந்தால் அந்த நிலையிலும் அவர்கள் எழுப்பப்படுவர்.
“என் உயிர் யாருடைய கையில் இருக்கின்றதோ, அவனின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் பாதையில் காயப்படுபவர்கள் யார் என்பதை அல்லாஹ்தான் அறிவான். அவனின் பாதையில் அவர்களல்லாத எவரும் காயப்பட மாட்டார்கள். எனவே அல்லாஹ்வின் பாதையில் காயப்பட்ட ஒருவர் கியாமத்து நாளில் தன்னுடைய காயத்திலிருந்து இரத்தம் வடிய வருவார். அதன் நிறம் இரத்த நிறமாகவும், அதன் வாசம் கஸ்தூரி வாடையாகவும் இருக்கும்” என நபியவர்கள் கூறினார்கள், என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்). மேலும் இஹ்ராம் உடை அணிந்த வாறு இறந்த  ஒருவரின் பக்கம் நபியவர்கள் சைகை செய்து “அவரைத் தண்ணீரும், இலந்தை இலையும் கொண்டு குளிப்பாட்டுங்கள். மேலும் அவர் உடுத்தியிருக்கும் அந்த ஆடையினையே அவருக்குக் கபனாக அணிவியுங்கள். மேலும் அவரின் தலையை மறைக்க வேண்டாம். ஏனெனில் கியாமத்து நாளில் தல்பியா கூறியவாறு அவர் எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள். என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)                   
“ஒரு முஸ்லிம் மரணிக்கும் போதும்,  கப்றில் இருக்கும் போதும். கப்றில் இருந்து வெளியேறும் போதும் “لاإله إلاالله என்ற கலிமா, அவனுக்குத் துணையாக இருக்கும். அவர்கள் தங்களின் கப்றுகளிலிருந்து வெளியே வருவதை நீங்கள் காண்பீர்களாயின் அவர்கள் தங்களின் தலையிலிருக்கும் புழுதியைத் தட்டிக் கொண்டு வருவதைத் காண்பீர்கள். அப்பொழுது கப்றில் இருந்து வெளியேறும் ஒருவர் لاإله إلاالله والحمد لله என்று கூறிய வாறு வெளியே வருவார். அவரின் முகம் வெண்மையாகப் பிரகாசமாக இருக்கும். இன்னொருவர், கைசேதமே அல்லாஹ்வின் விடயத்தில் நான் எல்லையை மீறி விட்டேனே! என்று கூறுவான். அவனின் முகம் கருப்பாக இருக்கும்” என்று என்னிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும், அலீ இப்னு ஹுஸைன் (ரழி) அவர்களும் அறிவிக்கின்றனர்,  என அபுல் காஸிம் என்பார் தன்னுடைய ‘தீபாஜ்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.    மேலும் “இறந்தவருக்காக ஒப்பாரி வைக்கும் பெண், கியாமத்து நாளில் தன்னுடைய கப்றில் இருந்து வெளியேறும் போது  புழுதி படிந்தவளாக, தலைவிரி கோலமாக இருப்பாள். மேலும் அல்லாஹ்வின் சாபம் பெற்ற சட்டை யொன்றும் நெருப்புக் கவசம் ஒன்றும் அவள் அணிந்திருப்பாள். அவள்   தன் கையைத் தலையில் வைத்துக் கொண்டு ‘நாசமே’ என்று கூறுவாள்.” என்று நபியவர்கள் கூறினார்கள், என இன்னொரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. (நஸாஈ).
மேலும் வட்டி சாப்பிடுபவன், ஷைத்தான் பீடித்தவன் போன்று எழுந்திருப்பான். இதனை அல்லாஹ்வின் இந்த வாக்கு உறுதிப் படுத்துகின்றது,
الَّذِينَ يَأْكُلُونَ الرِّ‌بَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ(2/275)
“வட்டி தின்பவர்கள் ஷைத்தான் பிடித்து பித்தம் கொண்டவர்கள் எழும்மபுவது போலன்றி எழும்ப மாட்டார்கள்”(2\275)    
                                  
ஒன்று கூட்டல்
சிருஷ்டிகள் யாவும் கப்றுகளிலிருந்து வெளியேறிய பின் விசாரனை நடைபெறும் இடத்தில் அவர்கள் ஒன்று கூட்டப்படுவர். அவர்கள் பலவாறு அங்கு வந்து ஒன்று சேருவார்கள். “கியாமத்துடைய நாளில் மனிதர்கள் மூன்று வகுப்புக்களாகப் பிரிந்து ஒன்று சேருவார்கள். ஒரு பிரிவினர் காலால் நடந்தும், இன்னொரு பிரிவினர் சவாரி மூலமும், மற்றொரு பிரிவினர் தலை குப்புறமாகவும்  வந்து ஒன்று கூடுவார்கள். என்று ரஸூல் ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் தலைகீழாக எப்படி நடப்பார்கள்? என்று   அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் “தங்களின் பாதத்தின் மீது எவர்களை நடக்க வைத்தானோ அவனால், அவர்களைத் தலை கீழாகவும் நடக்க வைக்க முடியும், மேலும் அவர்கள் தலை கீழாக நடக்கும் போது, முற்களையும் இடர் பாடுகளையும் விட்டும் தங்களின் முகங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ ஹுரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(திர்மிதி)
மேலும் சிருஷ்டிகள், வெள்ளி போன்று வெண்மையான ஒரு பூமியில்  ஒன்று கூட்டப்படுவர். என நபி மொழிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. “கியாமத்துடைய நாளில், யாருடைய அடையாள மும் இல்லாத, தூய்மையான வட்டமான வெண்மையான ஒரு பூமியில் மனிதர்கள் ஒன்று கூட்டப்படுவார்கள். என்று நபியவர்கள் கூறினார்கள், என ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்). மேலும் கியாமத்து நாளில்  என்றும் இல்லாதவாறு மிகவும் பட்டினியோடும், தாகத்தோடும், நிர்வாண கோலத்திலும். கடும் கஷ்டத்துடனும் மனிதர்கள் ஒன்று சேருவார்கள். எனினும் அல்லாஹ்வுக்காக உணவளித்தவனுக்கு அல்லாஹ் உணவளிப்பான். மேலும் அல்லாவுக்காக தண்ணீர் புகட்டிய வனுக்கு அல்லாஹ் தண்ணீர் புகட்டுவான். இன்னும் அல்லாஹ்வுக்காக ஆடை அணிவித்தவனுக்கு அல்லாஹ் ஆடை அணிவிப்பான். மேலும் அல்லாஹ்வுக்கென நற்கருமம் செய்தவனுக்கு அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கின்றாரோ அவருக்கு அங்கு  அல்லாஹ் நிம்மதியைத் தருவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று அபதுல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
கியாமத்துடைய நாளில் சிருஷ்டிகள் பேச முடியாதவாறு அவர்களின் வாய்கள் வடிகளால் அடைக்கப்பட்டிருக்கும். ஆகையால் அவர்களின் தொடைகளும், கைகளும் பேசும். என முஆவியா இப்னு ஹைதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ரஸூல்(ஸல்) அவர்கள் தன்னுடைய கரத்தை ஷாம் தேசத்தின் பக்கமாக சாடை செய்து “நீங்கள் சவாரியாகவும், கால் நடையாகவும், தலை கீழாகவும் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து  இங்கு வரையில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அப்போது உங்களின் வாய்கள் வடிகளால் அடைக்கப்பட்டிரக்கும். அங்கு எழுபது சமூகத்தினரைக் காண்பீர்கள். அவர்களில் நீங்களே அல்லாஹ்விடம் மிகவும் சிறந்தவர்களாகவும், கண்ணியம் மிக்க வர்களாகவும் இருப்பீர்கள். மேலும் உங்களில் ஒருவரிடமிருந்து முதலாவது பேசுவது அவருயை தொடையே” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னொரு அறிவிப்பில் அவனுடைய தொடையும் கையும்  பேசும் என குறிப்பிடப் பட்டுள்ளது. (புகாரி, முஸ்லிம்)               
மேலும் சிருஷ்டிகள் நிர்வாணமாக, வெற்றுக் காலுடன், கத்னா இல்லாது எழுப்பப்படுவர். என நபி மொழிகளில் பதிவாகியுள்ளன. “கியாமத்துடைய நாளில் மனிதர்கள் வெற்றுக் காலுடன், நிர்வாணமாக கத்னா இல்லாது எழுப்பப்படுவர். என்று ரஸுல் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன். அப்பொழுது அல்லாஹ்வின் தூதரே! ஆண்களும் பெண்களும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்வார்கள், அல்லவா? என்றேன். அதற்கு நபியவர்கள் “ ஆயிஷாவே! சிலர் சிலரின் பால் பார்ப்பதை விடவும் அன்று நிலமை மிகவும் கடினமாக இருக்கும், என நபியவர்கள் கூறினார்கள். என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்) மேலும் நபியவர்கள் “நீங்கள் வெற்றுக் காலுடன், நிர்வாணமாக, கத்னா இன்றி எழுப்பப்படுவீர்கள்” என்று  கூறினார்கள். அப்பொழுது ஒரு பெண் “நம்மில் சிலர் இன்னும் சிலரின் அவ்ரத்தைக் காண்பார்கள் அல்லவா? என்றார். அதற்கு நபியவர்கள் “ இன்னவளே! என விளித்து,
لِكُلِّ امْرِ‌ئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ﴿عبس/٣٧﴾
“அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டு விடும் (80\37) என்ற திரு வசனத்தை ஓதினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
யாரேனும் “கியாமத்து நாளைக் கண்ணால் பார்ப்பது போன்று காண விரும்மபினால், அவர்
 إذا الشمس كورت.إذا السماء انفطرت. إذا السماء انشقت
எனும் ஸூராக்களை ஓதிக் கொள்வாராக.”என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்) இந்த அத்தியாயங்களை சிந்தனையுடன் ஓதும் போது  கியாமத்து நாளின்  நிகழ்வைக் கற்பனையில் காணலாம்.  
إِذَا الشَّمْسُ كُوِّرَ‌تْ ﴿١﴾ وَإِذَا النُّجُومُ انكَدَرَ‌تْ ﴿٢﴾ وَإِذَا الْجِبَالُ سُيِّرَ‌تْ ﴿٣﴾ وَإِذَا الْعِشَارُ‌ عُطِّلَتْ ﴿٤﴾ وَإِذَا الْوُحُوشُ حُشِرَ‌تْ ﴿٥﴾ وَإِذَا الْبِحَارُ‌ سُجِّرَ‌تْ ﴿٦﴾ وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ ﴿٧﴾ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ ﴿٨﴾ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ ﴿٩﴾ وَإِذَا الصُّحُفُ نُشِرَ‌تْ ﴿١٠﴾ وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ ﴿١١﴾ وَإِذَا الْجَحِيمُ سُعِّرَ‌تْ ﴿١٢﴾ وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ ﴿١٣﴾ عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَ‌تْ ﴿التكوير/١٤﴾
“சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும் போது. நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது. மலைகள் அதனிடங்களில் இருந்து  அகற்றப்படும் போது. கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் தெறித்தலையும் போது. காட்டு மிருகங்கள் ஒன்று கூடும் போது. கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும் போது. அப்போது உயிர்கள் உடலுடன் சேர்க்கப்படும் போது. உயிருடன் புதைக்கபட்ட பெண் குழந்தைகளிடம்  கேட்கப்படும் போது. எந்த குற்றத்திற்காக நீங்கள் கொலை செய்யப்பட்டீர்கள்? என்று.  அப்போது ஏடுகள் விரிக்கப்படும் போது. வானம் அகற்றப்படும் போது. நரகம் எரிக்கப்படும் போது. சுவனபதி சமீபமாகக் கெண்டு வரப்படும் போது. ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.”(61\1-14)                    
إِذَا السَّمَاءُ انفَطَرَ‌تْ ﴿١﴾ وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَ‌تْ ﴿٢﴾ وَإِذَا الْبِحَارُ‌ فُجِّرَ‌تْ ﴿٣﴾ وَإِذَا الْقُبُورُ‌ بُعْثِرَ‌تْ ﴿٤﴾ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَ‌تْ ﴿الإنفطار\٥)
“வானம் வெடித்துவிடும் போது. நட்சத்திரங்கள் சிதறிவிடும் போது. கடல் பிளக்கப்படும் போது. சமாதிகள் திறக்கப்படும் போது. ஒவ்வொரு ஆத்மாவும் தான் முன்னர் செய்தவைகளையும் தான் விட்டு வந்தவைகளையும்  நன்கறிந்து கொள்ளும்.(82\1-5)
إِذَا السَّمَاءُ انشَقَّتْ ﴿١﴾ وَأَذِنَتْ لِرَ‌بِّهَا وَحُقَّتْ ﴿٢﴾ وَإِذَا الْأَرْ‌ضُ مُدَّتْ ﴿٣﴾ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴿٤﴾ وَأَذِنَتْ لِرَ‌بِّهَا وَحُقَّتْ ﴿٥﴾ يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَ‌بِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ ﴿الإنشقاق/٦)
“வானம் பிளந்து விடும் போது. அது தன் இறைவனுக்கு செவி சாய்த்து விடும் போது.மேலும் பூமி விரிக்கப்படும் போது. அப்போது அது தன்னிடம் உள்ளவைகளையெல்லாம் எறிந்து வெறுமனேயாகி விடும். மேலும் அது தனக்கு இடப்பட்டுள்ள கட்டளையின்படி தன்  இறைவனின் கட்டளைக்கு  செவி சாய்த்து விடும். மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரையில் கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கினறாய் பின்னர் நீ அவனை சந்திக்கின்றாய். (84\1-6)
கியாமத்து நாளின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில், அதனை பல பெயர்கள் கொண்டு அல்லாஹ் அழைக்கின்றான். அவற்றில் சில வருமாறு, يوم القيامة  இதன் பொருள் எழுந்து நிற்கும் நாள் என்பதாகும். அந்நாளில் மனிதர்கள் கப்றுகளிலிருந்து எழுந்து அல்லாஹ்வின் சமூகத்தில் வந்து நிற்கின்ற படியாலும், மலக்குகள் அணி அணியாக வருகின்ற படியாலும்,  அத்தினத்தை ‘யௌமுல் கியாமா’ என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.அதற்கு
 يوم الزلزلة- الراجفة- القارعة- الخروج- الحشر- العرض- الجمع- التفرق- الشخوص- التبيض والتسود-الفرار-الصدر- الفزع-التناد- الخافضة-الرافعة- الحساب-السؤال- الشهادة- الجدال- القصاص- التلاق- التغابن- عبوس- التقلب—
போன்று இன்னும் பல -பெயர்கள் இருக்கின்றன. அவற்றின் கருத்து முறையே வருமாறு, ‘அசைக்கப்படும் நாள், பூகம்பம் உண்டாகும் நாள், திடுக்கிடச் செய்யும் நாள், வெளியேறும் நாள், ஒன்று சேர்க்கும் நாள், காட்சிப்படுத்தும் நாள், ஒன்ரு திரலும் நாள், பிரிந்து போகும் நாள். தெளிவாகத் தெண்படும் நாள், முகங்கள் வெண்மையடையும் கருமையடையும் நாள், விரண்டோடும் நாள், அச்சத்தின் நாள், அழைக்கப்படும் நாள், தாழ்த்தும் நாள், உயர்த்தும் நாள், கேள்வி கேட்கும் நாள், விசாணை நாள், சாட்சியளிக்கும் நாள், தர்கிக்கும் நாள், பழிவாங்கும் நாள், சந்திக்கும் நாள், ஒதுங்கும் நாள், முகம் சுருங்கும் நாள், புரலும் நாள் என இவை பொருள்படும். இந்தப் பெயர்கள் யாவும் அந்நாளில் நிகழும் பல் வேறு சம்பவங்களைக் குறிக்கின்றன. இனி இவற்றை உணர்த்தும் சில திரு வசனங்களைக் கவணிப்போம்.
يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَ‌بِّ الْعَالَمِينَ﴿المطففين\٦)
“அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் நின்று கொண்டு  இருப்பார்கள்”(83\6)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَ‌بَّكُمْ ۚ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ﴿١﴾ يَوْمَ تَرَ‌وْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْ‌ضِعَةٍ عَمَّا أَرْ‌ضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَ‌ى النَّاسَ سُكَارَ‌ىٰ وَمَا هُم بِسُكَارَ‌ىٰ وَلَـٰكِنَّ عَذَابَ اللَّـهِ شَدِيدٌ ﴿الحج\٢﴾
“மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி, மிக்க கடுமையானது. அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணின் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் மனிதர்களை மதிமயங்கியவர்களாக நீங்கள் காண்பீர்கள். அவர்கள் (மதியிழக்கக் காரணம் போதையினாலன்று. அல்லாஹ்வின் வேதனை கடினமானது) (என்பதே)”(22\1-2)
 -يَوْمَ تَرْ‌جُفُ الرَّ‌اجِفَةُ ﴿٦﴾ تَتْبَعُهَا الرَّ‌ادِفَةُ ﴿النازعات٧﴾
“பலமாக அதிர்ச்சியுறும் நாளில். அதனைத் தொடர்ந்து  மேலும் அதிர்ச்சிகள் வரும் அந்நாளில்”(79\6-7)
  -يَوْمَ يَخْرُ‌جُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَ‌اعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ ﴿المعارج٤٣﴾
“அவர்களுக்கு அந்நாளை நிணைவூட்டுங்கள். அந்நாளில்  தங்களுடைய கொடிகளின் பக்கம் ஓடுவது போலவே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு வெகு தீவிரமாகச் செல்வார்கள்” (70\43) (அதாவது கூட்டம் கூட்டமாக வெளியே வருவார்கள்.)
 وَحَشَرْ‌نَاهُمْ فَلَمْ نُغَادِرْ‌ مِنْهُمْ أَحَدًا ﴿الكهف\٤٧﴾
“அந்நாளில் மனிதர்களில் ஒருவரையும் விட்டுவிடாது அனைவரையும் நாம் ஒன்று சேர்ப்போம்”(18\47)
 يَوْمَئِذٍ تُعْرَ‌ضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ ﴿الحاقة\١٨﴾

அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டு செல்லப்படுவீர்கள். உங்களுடைய மறைவான எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது (69\18)
 وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَتَفَرَّ‌قُونَ ﴿١٤﴾ فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَ‌وْضَةٍ يُحْبَرُ‌ونَ ﴿١٥)وَأَمَّا الَّذِينَ كَفَرُ‌وا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَ‌ةِ فَأُولَـٰئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُ‌ونَ ﴿الروم\١٦﴾
“விசாரணையின் அந்நாள் வரும் சமயத்தில் அவர்கள் வெவ்வேறாகப் பிரிந்துவிடுவார்கள். ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தி ருப்பார்கள். எவர்கள் நிராகரித்து என்னுடைய வசனங்களையும், மறுமை சந்திப்பையும் பொய்யாக்கு கின்றார்களோ அவர்கள் வேதனயில் சிக்கிக் கிடப்பார்கள்”(30\14-15-16)
يَوْمَئِذٍ يَصْدُرُ‌ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَ‌وْا أَعْمَالَهُمْ (الزلزلة\6)
“அந்நாளில் மனிதர்கள் தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவுகளாகப் பிரிந்து கூட்டம் கூட்டமாக வருவார்கள்.(99\6)
لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْأَكْبَرُ‌ (الأنبياء\103)
“பெரும் திடுக்கமும் அவர்களை  துக்கத்திற்குள்ளாக்காது”(21\103)
وَيَا قَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِ ﴿٣٢﴾ يَوْمَ تُوَلُّونَ مُدْبِرِ‌ينَ مَا لَكُم مِّنَ اللَّـهِ مِنْ عَاصِمٍ ۗ(غافراو المؤمن\32-33)
“என்னுடைய மக்களே! நீங்கள் அழைக்கப்படும் அந்நாளைப் பற்றி  நான் பயப்படுகின்றேன். நீங்கள் புறங்காட்டி ஓடும் அந்நாளில் அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவன் ஒருவனு மில்லை” (40\32-33)
மேலும் கியாமத்து நாள் ‘யௌமுல் ஹிஸாப்’ கேள்வி கணக்கு கேட்கும் நாள் எனவும் அழைக்கப்படுகின்றது. எனவே அந்நாளில் அல்லாஹ் மக்களின் செயல்களைப் பற்றி விசாரணை செய்து அவர்களின் செயலுக்குத் தக்கவாறு கூலி வழங்குவான். “உங்கள் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் பேசாமல் இருக்க மாட்டான். அப்பெழுது அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளன் எவரும் இருக்க மாட்டார்” என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும் “நீங்கள் யாவரும் கண்காணிப்பாளர்கள். உங்களின் கண்காணிப்புப் பற்றி  நீங்கள் யாவரும் விசாரிக்கப் படுவீர்கள்” என்றும் நபியவர்கள் கூறினார்கள். ஆகையால் அந்நாள், விசாரணை நாள் எனப்படுகின்றது. அதனையே பின் வரும் வசனம் உணர்த்துகின்றது.   
فَوَرَ‌بِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ ﴿٩٢﴾ عَمَّا كَانُوا يَعْمَلُونَ ﴿الحجر/٩٣﴾
“உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ,அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி நிச்சயமாக கேள்வி கணக்குக் கேட்போம்”(15\92-93)
மேலும் கியாமத்து நாளில் மூன்று சாராரிடமிருந்து சாட்சிகள் வெளி வரும். ரஸூல்மார்கள் தமது சமுதாயத்தின ருக்காக சாட்சி பகர்வார்கள் என்பதை உறுதி செய்யுமுகமாக முஹம்மது (ஸல்) அவர்களும், அன்னாரின் உம்மத்தினரும் நாளை மறுமை நாளில் சாட்சி பகர்வர், மேலும் நிகழ்ந்த காரியங்கள் பற்றி பூமியும், இரவும் மற்றும் பகலும் சாட்சி பகரும், மேலும் மனிதனின் உருப்புக்களும் சாட்சி பகரும்.  இதனையே அல்லாஹ் இப்படி கூறகின்றான்  
  يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْ‌جُلُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿النور/٢٤﴾
“அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவைகளைப் பற்றி சாட்சியம் கூறும்(24\24)
இவ்வாறு இறுதி நாளின் ஏனைய நாமங்களை, பின் வரும் வசனங்கள் துலாம்பரப் படுத்துவதைக் காணலாம். அவை வருமாறு.
يَوْمَ تَأْتِي كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَن نَّفْسِهَا (النحل/111)
ஒவ்வொரு ஆத்மாவும் தன்னைப் பற்றி பேசுவதற்காக வரும் அந்நாளை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்(16\111)
 وَأَنذِرْ‌هُمْ يَوْمَ الْحَسْرَ‌ةِ إِذْ قُضِيَ الْأَمْرُ‌(مريم/39)
“நியாயத் தீர்ப்பளிக்கடும் மிக்க துயரமான நாளைப் பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்(19\39)
 يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَن مَّوْلًى شَيْئًا(الدخان/41)
"அந்நாளில் ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான்(44\41)
 يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ‌ ﴿النور/٣٧﴾
“உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறி விடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் பயந்து கொண்டிருப்பார்கள்(24\37)
 إِنَّمَا يُؤَخِّرُ‌هُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ‌ ﴿إبراهيم/٤٢﴾
“அவர்களைத் தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருக்கக்கூடிய நாள் வரும் வரையில்தான்” (14\42)
  يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ ۚ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْ‌تُم بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُ‌ونَ ﴿١٠٦﴾ وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَ‌حْمَةِ اللَّـهِ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿ال عمران/١٠٧﴾
“அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகவும், சில மூகங்கள் கறுத்துமிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து இருக்கின்றனவோ “நீங்கள் நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்” (என்று கூறப்படும்).  எவர்களுடைய முகங்கள் வெண்மையாக இருக்கின்றனவோ ‘ நீங்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கி விடுங்கள்” (என்று கூறப்படும்) அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்”  (3\106-107
 وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَ‌ةٌ ﴿٣٨﴾ ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَ‌ةٌ ﴿٣٩﴾ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَ‌ةٌ ﴿٤٠﴾ تَرْ‌هَقُهَا قَتَرَ‌ةٌ ﴿٤١﴾ أُولَـٰئِكَ هُمُ الْكَفَرَ‌ةُ الْفَجَرَ‌ةُ ﴿عبس/٤٢﴾
“அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவைகளாகவும், சந்தோசத்தால் சிரித்துக் கொண்டும் இருக்கும், அந்நாளில் வேறு சில முகங்கள் மீது புழுதி படிந்து கிடக்கும், கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும். (அதாவது துக்கத்தால் அவர்களின் முகங்கள் இருளடைந்து கிடக்கும்.) இவர்கள்தாம் நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்” (80\38-39-40-41-42)  
 يَوْمَ يَفِرُّ‌ الْمَرْ‌ءُ مِنْ أَخِيهِ ﴿٣٤﴾ وَأُمِّهِ وَأَبِيهِ ﴿٣٥﴾ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ ﴿عبس/٣٦﴾
“அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் வெருண்டோடுவான் (80\34-35-36)
  يَوْمَئِذٍ يَتَّبِعُونَ الدَّاعِيَ لَا عِوَجَ لَهُ ۖ وَخَشَعَتِ الْأَصْوَاتُ لِلرَّ‌حْمَـٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًا ﴿طه/١٠٨﴾
"அந்நாளில் அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லா சப்தங்களும் தணிந்து விடும். காலடி சப்தத்தைத் தவிர நீங்கள் கேட்க மாட்டீர்கள் (20\108)
 وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَائِقٌ وَشَهِيدٌ ﴿٢١﴾ لَّقَدْ كُنتَ فِي غَفْلَةٍ مِّنْ هَـٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَاءَكَ فَبَصَرُ‌كَ الْيَوْمَ حَدِيدٌ ﴿ق/٢٢﴾
“ஒவ்வொரு ஆத்மாவையும், அதன் சாட்சியுடன் ஒருவர் ஓட்டிக் கொண்டு வருவார். அவனை நோக்கி “நிச்சயமாக நீ இதைப் பற்றி கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னை விட்டும் நாம் நீக்கிவிட்டோம். இன்றைய தினம் உன்னுடைய பார்வை கூர்மையாயிருக்கின்றது” (ஆகையால் இப்பொழுது இதனைப் பார் என்று அவனிடம் கூறப்படும்).  (50\21-22)

இறுதி நாளின் நிலை
அல் முஹாஸிபி அவர்கள் தன்னுயை ألتَوَهُم وَالأَهْوالْ  என்ற நூலில் இறுதி நாளின் நிலையைப் பற்றிக் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
“மனித சமூகத்தையும், ஜின் சமூகத்தையும் அல்லாஹ்  நிர்வாண கோளத்தில், இழிவான நிலையில் எழுப்புவான். மேலும் உலகில்  பெருமையுடன், அல்லாஹ்வின் அடியார் களின் மீது ஆதிக்கம்  செலுத்தி வந்த அரசர்களின் ஆட்சி அதிகாரங்களைப் பிடுங்கி அவர்களுக்கு சிறுமையையும், இழிவையும் ஏற்படுத்துவான். பின்னர் ஏனைய சிறுஷ்டிகளை விட்டும் தூரமாகி விலகி இருந்த விலங்குள் யாவும் மீண்டும் எழுப்பப்படும். அவை அந்நாளின் பயங்கரத்கை கண்டு தாழ்மையுடன் தலையைத் தொங்க விட்டவாறு,  மற்றப் படைப்பு களுக்குக்குப் பின்னால் வந்து நின்று கொள்ளும். அவ்வாறே குழப்பம் விழைவித்து வந்த ஷைத்தான்களும்  அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வின் முன் மிகவும் அடக்கத்துடன் வந்து நிற்கும். இவ்வாறு  உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் முன்னிலையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அது மாத்திரமின்றி அல்லாஹ்வைத் துதித்து அவனைப் பாராட்டும் பொருட்டு மலக்குகளும், பூமியின் இரண்டு ஓரங்களாலும் இறங்கி வருவார்கள். அவர்களின் பருத்த மேனியும், அதிக எண்ணிக்கையும்  மற்றும் அல்லாஹ்வின்  மீதுள்ள அச்சத்தின் கரணமாக அவர்கள் எழுப்பும் பயங்கர ஓசையுடன் அவர்கள்  வானத்திலிருந்து இறங்கி வரும் அந்தக் காட்சி  மனிதர்களுக்கும், சிருஷ்டிகளுக்கும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தும். மேலும் அவர்கள் பயங்கரமான மகத்துவமான அந்நாளில் தங்களின் தலைகளை தொங்கப் போட்டவர்களாக ஏனைய படைப்புக்களைச் சூழ வரிசையாக நின்று கொள்வார்கள். இவ்வாறு ஏழாம் வானம் வரையிலும் உள்ள  எல்லா மலக்குகளும் அணி அணியாக நிற்பார்கள். மேலும் ஒரு வானத்திலிருந்து  வந்த வானவர்களை விடவும் அடுத்தடுத்த வானத்திலிருந்து வரும் வானவர்களின் எண்ணிக்கையும் அவர்களின் பருமனும் ஓசையும்  இரட்டிப்பாக இருக்கும்.
ஏழு வானத்திலும் பூமியிலும் உள்ள யாவரும், ஒன்று கூட வேண்டிய இடத்தில் ஒன்று சேர்ந்த பின்  பத்தாண்டுகளின் வெப்பம், சூரியனுக்கு வழங்கப்படும். மேலும் அது சிருஷ்டிகளுக்கு ஒரு வில் அல்லது இரண்டு வில் அளவு தூரம்  பக்கதில் கொண்டு வரப்படும். அநாளில் ரஹ்மானின் ‘அர்ஷின்’ நிழலைத் தவிர வேறு நிழல் எதுவும் இருக்காது. அர்ஷின் நிழலுக்கும் சூரிய ஒளிக்கும் இடையில் இருப்பவர்களை சூரிய வெப்பம் உருக வைக்கும். அதனால் அவனின் கவலை அதிகரிக்கும்.  அப்பொழுது மக்களின் நெரிசல் அதிகரிக்கும். சிலர் சிலரைத் தடுத்துக் கொண்டிருப்பார்கள். பாதங்கள் பிண்ணிக் கொள்ளும். தாகத்தால் தொண்டைகள் வற்றி விடும். மக்கள் கூடியுள்ள அவ்விடத்தில் சூரிய வெப்பத்துடன் ஜனங்களின் நெரிசல் மூலமும், அவர்கள் விடும் மூச்சுக்களின் மூலம் உண்டாகும் வெப்பமும் சேர்ந்து உஷ்ணம் மேலும் அதிகரிக்கும். அதனால் உண்டாகும் வேர்வை நிழத்தில் வீழ்ந்து ஓடும். பின்னர் அவர்களின் பாதம் வரை அது உயரும். மேலும் மனிதர்களுக்கு அல்லாஹ் விடமிருந்து கிடைக்கப் பெறும் பாக்கியத்தினதும் துர்பாக்கியத்தினதும் நிலைக்கு ஏற்ப வேர்வையின் அளவு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும். இதன் படி  சிலரின் புயம்  வரையிலும், இன்னும் சிலரின் இடுப்பு வரையிலும் வேர்வை வெள்ளம் வந்தடையும். இன்னும் சிலருக்கு அவர்களின் வாய் வரையில் வேர்வை வெள்ளம் வந்து விடும். இதனால் அவர்கள் அந்த வேர்யில் மூழ்கி விடும் அளவுக்கு நிலைமை மேசமடைந்து விடும்.
“இறுதி நாளில் சூரியன் மனிதர்களுக்கு ஒரு மைல்  அளவு தூரம் பக்கத்தில் சமீபமாகக் கொண்டு வரப்படும். அப்பொழுது அவர்கள் செய்த கர்மங்களின் அளவுப் பிரகாரம் அவர்கள் வேர்வையில் மூழ்கி இருப்பார்கள். சிலரின் முட்டுக் கால் வரையிலும், இன்னும் சிலருக்கு அவர்களின் இடுப்பு வரையிலும் மற்றும் சிலருக்கு அவர்களின் வாய் வரையிலும் வேர்வை வெள்ளம் ஏறிவிடும்” என்று ரஸூல்(ஸல் அவர்கள் கூறுவதை நான் கேட்டேன், என்று மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், (முஸ்லிம்) மேலும் திர்மிதியின் அறிவிப்பில் ”சூரியன் அவர்களை உருகச் செய்திடும்” என்ற வார்த்தை மேலதிகமாக இடம் பெற்றுள்ளது. மேலும் “ இறுதி நாளில் பூமியில் வேர்வை எழுபது பாகம் வரை ஓடும் என்றும் அது சிலரின் வாய்கள் வரையுமோ, அல்லது அவர்களின் காதுகள் வரையுமோ  சென்றடையும்” என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(முஸ்லிம்)
நபிகளாரின் ஷபாஅத்
மக்கள் கேள்வி கணக்கை எதிர்பார்த்து பல ஆண்டுகள் காத்திருப்பார்கள்.குறைந்த பட்சம் அது நாற்பது முதல் முன்னூறு ஆண்டுகள் வரையிலான காலத்தைக் கொண்டிருக்கும். அதன் பின் முஹம்மது (ஸல்) அவர்களின் ‘ஷபாஅத்’தை சிபாரிசை அடுத்து விசாரணை ஆரம்பமாகும். ஒரு முறை நபியவர்களிடம் இறைச்சி எடுத்து வரப்பட்டது. அதில் இருந்த மிருகத்தின் முன் கால் நபியவர்களைக் கவர்ந்தது. அதையெடுத்துக்  அன்னார் கடித்தார்கள். பின்னர் “மறுமை நாளில் நான்தான் மக்கள் தலைவன், அது எவ்வாறு? என நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். பின்னர்,  ஆதிகாலத்து மற்றும் அந்திம காலத்து மக்களை எல்லாம் அல்லாஹ்  ஒரு உயர்ந்த பூமியில் ஒன்று கூட்டுவான்.அழைப்பாளனின் குரல் அவர்களுக்குக் கேட்கும் படியும் அவர்களின் பார்வை அவர்களின் மீது விழும் படியும் செய்வான். மேலும் சூரியன் அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும். அப்பொழுது மக்களிடம் கடும் கவலையும் துக்கமும் குடி கொண்டிருக்கும். அதனை அவர்களால் தாங்க முடியாது. அவ்வமயம் மக்கள் சிலர் சிலரிடம் “நீங்கள் இருக்கும் நிலையையும், உங்களுக்கு என்ன ஏற்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டாமா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் சிபாரிசு செய்யக்கூடிய ஒருவரைக் காண வேண்டாமா? என்பர். பின்னர் சிலர், சிலரிடம் “நீங்கள் ஆதமிடம் செல்லுங்கள்” என்பர். எனவே அவர்கள் ஆதமிடம் சென்று “ஆதமே! நீங்கள்தான் நமது தந்தை. உங்களை அல்லாஹ் தன் கையால் படைத்தான் மேலும் அவன் தன்னிடமிருந்து உங்களின் மீது ஆவியை ஊதினான். மேலும் உங்களுக்கு ஸுஜூது செய்யும் படி மலக்குகளுக்கு கட்டளையும் இட்டான். ஆகையால் நீங்கள் நமக்காக உங்களின் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் நமது நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? நமக்கு என்ன ஏற்பட்டுள்ளது என்பதை நீஙகள் கவனிக்க வில்லையா?” என்று கூறவர். அதற்கு ஆதம் “இன்று எனது இரட்சகன் மிகவும் கோபமாக இருக்கின்றான். இதற்கு முன் அவன் இப்படி கோபமாக இருந்த்தில்லை, இனிமேல் அப்படி கோபமாக இருக்கவும் மாட்டான். மேலும் அந்த மரத்தின் பால் என்னைச்செல்ல வேண்டாம் என, அவன் என்னைத் தடுத்திருந்தான். ஆனால் நான் அவனுக்கு மாறு செய்து விட்டேன். இச்சந்தர்ப்பத்தில் நான் என்னைப் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளதே! எனவே வேறு யாரிடமாவது செல்லுங்கள் .நூஹிடம் செல்லுங்கள் என்று கூறுவார்.”
எனவே அவர்கள் நூஹிடம் வருவர். பின்னர் அவர்கள் நூஹுவிடம் “நூஹே உலகுக்கு முதலில் வந்த இறைத் தூதர் தாங்களே! மேலும் உங்களை நன்றியுள்ள அடியான் என்று அல்லாஹ் குறிப்பிட்டான். எமது நிலையைத் தாங்கள் காண வில்லையா? நமக்கு என்ன நிகழ்ந்துள்ளது என்பதைத் தாங்கள் கவணிக்க வில்லையா? எனவே நமக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள்” என்று கூறுவர். அதற்கு அவர் “இன்று என் இரட்சகன் மிகவும் கோபமாக இருக்கின்றான். இதற்கு முன் அவன் இப்படிக் கோபமாக இருந்ததில்லை. இனிமேல் அப்படி கோபமாக இருக்கவும் மட்டான். அல்லாஹ் விடம் வேண்டுவதற்கான ஒரு வாய்ப்பு எனக்கிருந்தது. அதனை எனது சமூகத்திற்கு எதிராக நான் பயன் படுத்தி விட்டேன். இப்போது என்னை நான் காப்பாறிக் கொள்ள வேண்டியுள்ளது. ஆகையால் நீஙகள் இப்றாஹீமிடம் செல்லுங்கள்” என்று அவர் கூறுவார். எனவே அவர்கள் இப்றாஹீமிடம் வருவர்.
அவர்கள் இப்றாஹீமிடம் “ இப்றாஹீமே! நீங்கள் அல்லாஹ்வின் தூதரும் உலக மக்களில் அவனின் நண்பனும் ஆவீர்கள். நமது நிலையைத் தாங்கள் பார்க்க வில்லையா? நமக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதைத் தாங்கள் கவனிக்க வில்லையா? எனவே நமக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள்” என்று அவரிடம் கூறுவர். அதற்கு அவர் ”இன்று என் இரட்சகன் மிகவும் கோபமாக இருக்கின்றான். இதற்கு முன் அவன் இப்படி கோபமாக இருந்ததில்லை. இனிமேல் அப்படிக் கோபமாக இருக்கவும் மட்டான். என்று கூறிய அவர், முன்னர் தான் கூறிய பொய்களையும் நினைவு படுத்திக் கெண்டவராக, நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது, ஆகையால் நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள்.” என்று அவர்களிடம் கூறுவார்.
எனவே அவர்கள் மூஸாவிடம் செல்வர். பின்னர் அவர்கள் மூஸாவிடம் “மூஸாவே! தாங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள். உங்களுக்கு அவன் தன்னுடைய தூதை மாத்திரமின்றி உங்களுடன் அவன் பேசி ஏனைய மனிதர்களை விடவும் தங்களைச் சிறப்பித்தான். தாங்கள் நமது நிலையைப் பார்க்க வில்லையா? நமக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதைத் தாங்கள் காண விலையா? எனவே நமக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள்” என்று கூறுவர். அதற்கு மூஸா “இன்று என் இரட்சகன் மிகவும் கோபமாக இருக்கின்றான். இதற்கு முன் அவன் இப்படி கோபமாக இருக்கவில்லை. இனிமேல் அப்படி கோபமாக இருக்கவும் மாட்டான். மேலும் நானோ அனுமதியில்லாமல் ஒரு உயிரைக் கொலை செய்தும் இருக்கின்றேன். ஆகையால் நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கின்றது. எனவே! நீங்கள் ஈஸாவிடம் செல்லுங்கள்” என்று அவர்களிடம், அவர் கூறுவார். எனவே அவர்கள் ஈஸாவிடம் செல்வர்.
பின்னர் அவர்கள் ஈஸாவிடம் “ஈஸாவே! தாங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள். மேலும் நீங்கள் தொட்டில் பிள்ளையாக இருக்கும் போதே மனிதர்களுடன் பேசி இருக்கின்றீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்விடமிருந்து மர்யமின் பால் போடப்பட்ட அவனின் வாசகமும், அவனிடமிருந்து வந்த ஆவியும் ஆவீர்கள். நமது நிலையைத் தாங்கள் பார்க்க வில்லையா? நமக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதைத் தாங்கள் காண வில்லையா? எனவே நமக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள்” என அவர்கள் அவரிடம் கூறுவர். அதற்கு அவர் எனது இறைவன் இன்று மிகவும் கோபமாக இருக்கின்றான். இதற்கு முன் அவன் இப்படி கோபத்துடன் இருக்கவில்லை. இனிமேல் அப்படி கோபமாக இருக்கவும் மாட்டான். என்று கூறும் அவர், தன்னைப் பற்றிய குற்றம் எதனையும் குறிப்பிடாத போதிலும்,  நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆகையால் நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று அவர்களிடம் கூறுவார். எனவே அவாகள் என்னிடம் வருவர்.
அப்போது அவர்கள் என்னிடம் “முஹம்மதே! தாங்கள் அல்லாஹ்வின் தூதரும், இறுதி நபியும் ஆவீர்கள். உங்களின் முந்திய, பிந்திய பாவங்களை அல்லாஹ் மன்னித்துள்ளான். தாங்கள் நமது நிலையைப் பார்க்க வில்லையா? நமக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதைத் தாங்கள் காண விலையா? எனவே நமக்காக உங்களின் இரட்சகனிடம் பரிந்து பேசுங்கள்” என வேண்டுவர். எனவே உடனடியாக நான் புறப்படுவேன். அர்சுக்கு கீழே வந்து எனது இறைவனுக்கு ஸுஜூது செய்வேன். பின்னர் அல்லாஹ் எனக்கு அவனைப் புகழவும், பாராட்டவும் என சில வார்த்தைகளை எனது உள்ளத்தில் திறந்து தருவான். ஆனால் அந்த வார்த்கைள் எனக்கு முன்னர் யாருக்கும் அருளப் படவில்லை. பின்னர் முஹம்மதே! உமது தலையை உயர்த்துங்கள், எனக் கூறப்படும். அப்பொழுது நான் “என் இரட்சகா! என் சமுதாயமே! என் சமுதாயமே! என்று கூறுவேன். அப்போது முஹம்மதே! உமது சமுதாயத்தினரில் கேள்வி கணக்குக்கு உட்படாதவர்களை சுவனபதியின்  வலது வாயல் மூலம்,  பிரவேசிக்கச் செய்யுங்கள. அந்த வாயல் அவர்களுக்கு உரியதாகும். சுவர்க்கத்தின் ஏனைய வாயல்களில் இதர மனிதர்களைப் போன்று அவர்களும் பங்காளிகளாவர். யார் கையில் முஹம்மதின் உயிர் இருக்கின்றதோ அவனின் மீது ஆணையாக சுவர்க்கத்து வாயலின் கதவின் இரண்டு பாதிகளுக்கும் இடையே உள்ள இடை வெளி மக்காவுக்கும் ஹிஜ்ருக்கும் அல்லது மக்காவுக்கும் புஸ்ராவுக்கும் இடையே உள்ள தூரமாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி) மேலும். அல்லாஹ் தன்னுடைய மகத்துவத்திற்கு ஏற்பவும், மற்றும்  மலக்குகளும் பின் வரும் இறை வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இறங்கி வருவார்கள்.

 “هَلْ يَنظُرُ‌ونَ إِلَّا أَن يَأْتِيَهُمُ اللَّـهُ فِي ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلَائِكَةُ وَقُضِيَ الْأَمْرُ‌ ۚ وَإِلَى اللَّـهِ تُرْ‌جَعُ الْأُمُورُ‌ ﴿٢١٠﴾   
“அல்லாஹ்வும் மலக்குகளும் மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து, அவர்களின் காரியத்தை முடிப்பதைத் தவிர  வேறு எதனையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? எல்லா விஷயங்களும் அல்லாஹ் விடமே கொண்டு வரப்படும்” (2\210).
பட்டோலைகள் பரத்தப்படுதல்
அதன் பின், தன் சிருஷ்டிகளிடம் அல்லாஹ் கேள்வி கணக்குகள் கேட்கத் தெடாங்குவான். யாரிடம் கேள்வி கேட்பதைத் தளர்த்தாமல், நுணுக்கமாக அல்லாஹ் கேள்வி கேட்பானோ அவன் தண்டனையில் மாட்டிக் கொள்வான். என்பதை ஹதீஸ் உறுதி செய்கின்றது “எவன் கியாமத்து நாளில் விசாரணைக்கு உள்ளாகின்றானோ அவன் தண்டனைக்குள்ளா வான்” என்று (ரஸூல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே!
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ﴿٧﴾ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرً‌ا ﴿الإنشقاق/٨)                                                                      
“எவருடைய வலது கையில் அவருடைய ஏடு கொடுக்கப் படுகின்றதோ, அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார் ”(84\7,8) என்று அல்லாஹ் கூறியிருக்கின்றான் அல்லவா? என்று நான் கூறினேன். அதற்கு நபியவர்கள் “அது கேள்வி கணக்கு கேட்பதைக் குறிக்காது,  பதிவேட்டைக் காட்டுவதையே குறிக்கும். ஏனெனில் கியாமத்து நாளில் யாருடைய  கணக்கு பற்றி விசாரிக்கப்படுமோ, அவர் தண்டனைக்கு உள்ளாவார்” என நபிகளார் கூறினார்கள். என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவக்கின்றார்கள். (முஸ்லிம்)
மேலும் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “நான் நரகத்தை நினைத்து அழுதேன்” அப்பொழுது நபியவர்கள் “உன்னை அழ வைத்தது எது? என கேட்டார்கள்.” அதற்கு “நான்  நரகத்தை நினைத்து அழுதேன், மேலும் கியாமத்து நாளில் உங்களுக்குக் குடும்பத்தினரின்  ஞாபகம் வருமா?” என்றும் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “மூன்று சந்தர்ப்பங்களில் யாரும் யாரைப் பற்றியும் நினைக்க மாட்டார்கள். அவை தான், தராசு தயார் நிலையில் இருக்கின்ற போது, தன்னுடைய தராசு கனத்துள்ளதா அல்லது இலேசாக உள்ளதா? என்பதை அறியும் வரையிலும், பதிவேடு பரத்தப் படுகின்ற போது அது, தனது வலது கையில் கொடுக்கப் படுகின்றதா, அல்லது தனது இடது கையிலா, முதுகுக்குப் பின்னாலா? என்பதை அறியும் வரையிலும், மற்றும் நரகத்தின் மேலுள்ள பாலத்தைக் கடக்கும் வரையிலும்” என்று நபியவர்கள் கூறினார்கள். என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)
மேலும் கேள்வி கணக்குகள் கேட்கப்படும் போது, சிருஷ்டி களிடம் அவர்களுக்குரிய ஏடுகள் கொடுக்கப்படும், என்பதை நபி மொழி உறுதி படுத்துகின்றது. மேலும் நபியவர்கள்,
يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ ۖ)الإسراء/71)
“ஒவ்வொரு மனிதனும் அவர்களின் தலைவர்களுடன் நாம் அழைக்கும் நாளில்(17\71) என்ற இறை வசனத்திற்கு ரஸூல்(ஸல்) அவர்கள் விளக்கம் தரும் போது, “ ஒரு மனிதன் அழைக்கப்படுவார். பின்னர் அவரின் ஏடு அவரின் வலது கரத்தில் கொடுக்கப்படும்.  அவரின் மேனி அறுபது முழமாக விஸ்தரிக்கப்படும். மேலும் அவரின் முகம் வெண்மையாக பிரகாசிக்கும். மேலும் அவரின் தலையில் முத்திலான கிரீடம் ஒன்று அணிவிக்கப்படும். பின்னர் அவர் தன் தோழர்களின் பக்கமாகச் செல்வார். அப்பொழுது அவர்கள் “அல்லாஹ்வே! இவரை நம்மிடம் அனுப்புவாயாக, இவரின் விடயத்தில் நமக்கு அருள் பாளிப்பாயாக.” என்று கூறுவர். அப்பொழுது அவர்களிடம் வரும் அவர், “உங்கள் யாவருக்கும் இது போன்ற நிலை இருக்கின்றது. அதையிட்டு நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்” என்று கூறுவார். ஆனால் காபிரின் முகமோ கறுமை அடைந்து விடும். மேலும் ஆதமின் தோற்றத்தைப் போன்று அவனுடைய மேனியும் அறுபது முழமாக விஸ்தரிக்கப்படும். அப்போது அவனின் தலையில் ஒரு கிரீடமும் அணிவிக்கப்படும். அவனைக் காணும் அவனின் தோழர்கள் “இவனின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேடுகின்றோம், அல்லாஹ்வே! இவனை நம்மிடம் அனுப்பி விடாதே” என்று கூறுவர். எனினும் அவன் அவர்களிடம் வந்து விடுவான். அப்போதவர்கள் “அவனைக் கேவலப் படுத்துவாயாக” என்று கூறுவர். அப்போதவன் “அல்லாஹ்வின் சாபம் உங்களின் மீதும் உண்டாகட்டும். நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இது போன்ற ஒரு நிலையே உண்டு” என்று கூறுவான். என கூறினார்கள், என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(திர்மிதி)   
ஏடுகளை வழது கரங்களிலும் இடது கரங்களிலும் எடுத்து வரும் காட்சியை பின் வரும் வசனங்களின் மூலம் அல்லாஹ் படம் பிடித்துக் காட்டுகின்றான்,
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَ‌ءُوا كِتَابِيَهْ ﴿١٩﴾ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ ﴿٢٠﴾ فَهُوَ فِي عِيشَةٍ رَّ‌اضِيَةٍ ﴿٢١﴾ فِي جَنَّةٍ عَالِيَةٍ ﴿٢٢﴾ قُطُوفُهَا دَانِيَةٌ ﴿٢٣﴾ كُلُوا وَاشْرَ‌بُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ ﴿٢٤﴾ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ ﴿٢٥﴾ وَلَمْ أَدْرِ‌ مَا حِسَابِيَهْ ﴿٢٦﴾ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ ﴿٢٧﴾ مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ ﴿٢٨﴾ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ ﴿٢٩﴾ خُذُوهُ فَغُلُّوهُ ﴿٣٠﴾ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ﴿٣١﴾ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْ‌عُهَا سَبْعُونَ ذِرَ‌اعًا فَاسْلُكُوهُ ﴿٣٢﴾ إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّـهِ الْعَظِيمِ ﴿الحاقة/٣٣﴾

“எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு, அவனுடைய வலது கையில் கொடுக்கப்படுகின்றானோ  அவன் இதோ என்னுடைய ஏடு, இதனை நீங்கள் படித்துப் பாருங்கள்” என்றும், நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன், என்றும் கூறுவான். ஆகவே, அவன் திருப்தியடையும் படியான சுகபோகத்தில். மேலான சுவனபதியில் இருப்பான். அதன் கனிகள் நெருங்கி  இருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் சேமித்து வைத்திருந்த வைகளின் காரணமாக, மிக்க தாராளமாக இவைகளைப் புசியுங்கள், அருந்துங்கள்” (என்.று கூறப்படும்). எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு, அவனுடைய இடது கையில் கொடுக்கப் பெறுவானோ அவன் “என்னுடைய ஏடு எனக்குக் கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா? என்னுடைய கணக்கையே இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டமா?, நான் இறந்த பொழுதே என்னுடைய காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டாமா?, என்னுடைய பொருள் எனக்கு ஒரு பயனும் அளிக்க வில்லையே!, என்னுடையை அரசாட்சியும் அழிந்து விட்டதே!” என்று புலம்புவான், (பின்னர்) அவனைப் பிடியுங்கள்.அவனை நரகத்தில் தள்ளுங்கள். எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள், (என்று நாம் கூறுவோம்). நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளவில்லை. (69\19 - 33)
இந்த வசனங்களின் மூலம் தங்களின் செயலேடுகள் வலது கைகளிலும் மற்றும் இடது கைகளிலும் பெற்றவர்களின் நிலை எப்படி அமைந்திருக்கும் என்ற காட்சியை அல்லாஹ் எடுத்துக் காட்டுகின்றான்.
ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் “கஃபே! மறு உலகத்தின் செய்திகள் பற்றி நமக்கு அறியத் தாருங்கள்” என்றார்கள். அப்பொழுது கஃபு (ரழி) அவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! கியாமத்து நாள் ஏற்படும் போது ‘லௌஹுல் மஹ்பூழ்’ உயர்த்தப்படும். அப்பொழுது எல்லா படைபுக்களும் தாங்கள் செய்த காரியங்களைப் பார்ப்பார்கள். அப்பொழுது அடியார்கள் செய்த காரியங்கள் பதியப்பட்டுள்ள ஏடுகள் கொண்டு வரப்பட்டு அவை ‘அர்ஷை’ சுற்றி பரத்தப்படும். என்றார்கள்.  பின்னர் இதனையே,
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَ‌ى الْمُجْرِ‌مِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَـٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ‌ صَغِيرَ‌ةً وَلَا كَبِيرَ‌ةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرً‌ا ۗ وَلَا يَظْلِمُ رَ‌بُّكَ أَحَدًا ﴿الكهف/٤٩﴾    
“குறிப்புப் புத்தகம் முன்வைக்கப் பட்டால் குற்றவாளிகள் பயந்து “எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! சிறிதோ பெரிதோ ஒன்றையும் விடாது  இதில் எழுதப்பட்டிருக்கின்றதே,” என்று அவர்கள் கூறுவதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் செய்த அனைத்தும் அதில் இருக்கக் காண்பார்கள். உங்கள் இறைவன் எவனுக்கும் அநியாயம் செய்ய மாட்டான். ”(18\49) என்ற  வசனம் தெளிவு படுத்துகின்றது, என்று கூறினார்கள்
குர்துபி (ரஹ்) அவர்கள் تذكرة என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள். ”சகோதரனே! உங்களைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள். பதிவேடுகள் பரத்தப்பட்டு, தராசுகளும் நிருவப்பட்டுள்ள அந்நாளில், படைப்புக்கள் எல்லாம் ஒன்று கூடியிருக்கும் அவ்வேளையில் இன்னாரின் மகன் இன்னாரே! என்று உங்களின் பெயர் சொல்லி நீங்கள் அழைக்கப் படுகின்றீர்கள். அப்பொழுது நீங்கள் அல்லாஹ்வின் முன் விரைந்து வருவீர்கள். உங்களைப் பிடிக்க மலக்குகள் சாட்டப்பட்டிருப்பர். உங்களின் பெயர் போன்று பல பெயர்கள் இருந்த போதிலும், அது நீங்கள் அல்லாஹ்விடம் நெருங்கி வருவதற்குத் தடையாக இருக்காது. ஏனெனில் அந்த அழைப்புக்கு உரியவர் நீங்கள்தான் என்பது தெரிய வந்தவுடன், அந்த அழைப்பின் காரணமாக உங்களின் உள்ளத்தில் ஒரு சுரண்டல் உண்டாகும். அப்பொழுது அந்த அழைப்புக்குரியவர் நீங்கள்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அப்பொழுது உங்களின் கழுத்து நரம்பு அதிரும். மேலும் உங்களின் உடல் உருப்புக்களும் குழுங்கும். இன்னும் உங்களின் நிறமும் மாறிவிடும். அப்பொழுது உங்களின் உள்ளமும் அடிக்கும். எனவே நீங்கள் அணிகளுக்கு ஊடாக  உங்களின் இறைவனின் முன்னிலையில் போய் நிற்பீர்கள். அப்பொழுதும் உங்களின் இதயம் அடிக்கும். மேலும் உங்களின் அச்சமும் அதிகரிக்கும். ஏனெனில் எதற்காக நீங்கள் அழைப்பட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் நிலையை இன்னும் சற்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் உங்கள் இறைவனின் முன்னால் இருக்கின்றீர்கள். உங்களின் கையில் உங்களின் செயல்களை அறிவுறுத்தும் ஏடு இருக்கின்றது. நீங்கள் மறைத்து வைத்த கருமங்கள் எதனையும் அது விட்டு வைக்கவில்லை. நீங்கள் மறைவாகச் செய்த காரியங்களையும் அது மறைத்து விடவில்லை. தற்பொழுது நீங்கள் அதிலுள்ளதை பலவீனமான குரலில், மனம் உடைந்தவராக வாசிக்கின்றீர்கள். தற்பெழுது உங்களின் முன்னாலும் பின்னாலும் பயங்கரம் சூழ்ந்துள்ளது. நீங்கள் நினைவு கூற மறந்த பல சோதனைகளும், நீங்கள் மறைத்து வைத்த பல தீய செயல்களும் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டன. மேலும் உங்களுக்கு நிம்மதியையும், விடுதலையையும் தந்து விட்டதாக நீங்கள் நினைத்திருந்த எத்தனையோ கருமங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பி வந்துவிட்டன.  நீங்கள் உங்களின் இறைவனுக்கு கட்டுப்படும் விடயத்தில் மாறு செய்திருப்பின் இந்த சந்தரப்பம் உங்களுக்கு கவலையையும் துக்கத்தையும் தான் தரும்” என குர்துபீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கேள்வி கணக்கு முறை    
 முஃமினின் செயல்களை அல்லாஹ் மறைத்து வைப்பான். அவனை அவமானப்படுத்த மாட்டான். காபிரின் செயல்களை வெளிப்படுத்தி அவனை அவமானப்படுத்துவான். ”கியாமத்து நாளில் முஃமின் அழைக்கப்படுவான். அவனின் கர்மப் பொதி அவன் முன் வைக்கப்படும். அப்பெழுது அவன் தன்னுடைய குற்றங்களை ஏற்றுக் கொள்வான். அவனிடம் அல்லாஹ் இதனை நீ அறிவாயா? என்பான். அதற்கு அவன் ஆம் என்பான். அப்பொழுது அல்லாஹ் அவற்றை நான் உலகில் மறைத்து வைத்திருந்தேன். இன்று அவற்றை நான் மன்னித்து விட்டேன். என்று  கூறுவான். பின்னர் அவனின் நற்கருமங்க ளின் ஏடு அவனிடம் கொடுக்கப்படும். மேலும் காபிர்களும் முனாபிக்குகளும் மக்கள் மத்தியில் அழைக்கப்படுவர். அவர்கள் தான் அல்லாஹ்வைப் பொய்ப்  படுத்தியவர்கள்” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
மேலும் அபூ தர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ரஸூல்(ஸல்) அவர் கூறினார்கள், “சுவர்க்கத்தில் கடைசியாக பிரவேசிப்பவர் யார் என்பதை நிச்சயமாக நான் அறிவேன். மேலும் நரகில் இருந்து கடைசியாக வெளியேறும் மனிதன், கொண்டு வரப்படுவான். பின்னர் அவனின் சிறிய பாவங்களை அவனுக்குக் காட்டுங்கள். அவனின் பெரிய பாவங்களை அழித்து விடுங்கள் என்று கூறப்படும். இதன்படி அவனின் சிறு பாவங்கள் அவனுக்குக் காட்டப்படும். மேலும்  இன்ன இன்ன நாட்களில், இப்படி இப்படி செய்தாய் என்று அவனிடம் கூறப்படும். அதனைத் தன்னால் மறுக்க முடியாமலும் தன்னுடைய பெரிய பாவங்களை எண்ணி பயந்தவனாகவும், அவன் ஆம் என்பான். அப்பொழுது அவனிடம், உன்னுடைய எல்லா பாவங்களின் இடத்திலும் ஒரு நன்மை வைக்கப்பட்டுள்ளது. என்று கூறப் படும். அப்பொழுது அவன் “என் இரட்சகனே! நான் செய்த பல காரியங்களை இங்கு நான் காணவில்லை” என்று கூறுவான் என்று நபியவர்கள் கூறினார்கள். இப்படி அவர்கள் குறிப்பிடும் போது நான் அவர்களைப் பார்த்தேன் அப்பொழுது அவர்கள் தன்னுடைய பற்கள் வெளியில் தெரியுமாறு சிரித்தார்கள். என்று அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(முஸ்லிம்) மேலும் “உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் பேசுவான். அப்பெழுது அல்லாஹ் வுக்கும் அவனுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளன் யாரும் இருக்க மாட்டார்கள். அப்பொழுது அவன் வலதுபுறத்தைப் பார்க்கின்ற போது, அங்கு அவன் முன் செய்தவை இருக்கக் காண்பான். மேலும் இடது புறத்தையும் அவன் பார்ப்பான். அங்கும் தான் முன் செய்தவைகள் இருக்கக் காண்பான். மேலும் தன் முன்னால் நரகையன்றி வேறு எதனையும் அவன் காண மாட்டான். ஆகையால் ஒரு ஈச்சம் பழத்தை தருமம் கொடுத்தாயினும் நரகத்தை விட்டும் பாதுகாப்புத் தேடிக் கொள்ளுங்கள்”  என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அதிய் இப்னு ஹாதம் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இன்னொரு அறிவிப்பில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாயினும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (புகாரி, முஸ்லிம்)  
அல்லாஹ் தன் அடியானிடம், அவனின் செவி, பார்வை, மனம், சுகபோகம், வாலிபம், செல்வம், செயற்பாடு என்பவைப் பற்றி எல்லாம் விசாரிப்பான். இதனையே,
إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ‌ وَالْفُؤَادَ كُلُّ أُولَـٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا ﴿الإسراء/٣٦﴾
“நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய ஒவ்வொன்றிடமும் கேள்வி கேட்கப்படும்.” (17\36) என்ற  இறை வசனம் குறிப்பிடுகின்றது. மேலும்
   ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ﴿التكاثر/٨﴾
“பின்னர் நிச்சயமாக அருளைப் பற்றியும் நீங்கள் கேட்கப்படுவீர்கள்” (102\8) என்ற வசனம் இறக்கப்பட்டபோது, “அல்லாஹ்வின் தூதரே! நமது எந்த அருளைப் பற்றி நம்மிடம் விசாரிக்கப்படும். எதிரிகள் வந்துள்ள இந்நிலையில் நமது புயங்களின் மீது வாள்கள் ஏறியுள்ள இந்நிலையில் இந்த ஈச்சம் பழத்தையும், தண்ணீரைப் பற்றியுமா நம்மிடம் விசாரிக்கப் படும்?” என்று மக்கள் கூறினர். அதற்கு நபியவர்கள், “நிச்சயமாக அது நிகழும்” என்றார்கள். என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் நபியவர்கள் “கியாமத்து நாளில் அடியானிடம்  விசாரிக்கப்படும் போது ,உமக்கு நாம் உடல் ஆரோக்கியத்தையும், குளிரான தண்ணீரையும் புகட்ட வில்லையா? என்றே முதலில் அவனிடம் கூறப்படும்” என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று, அபூ ஹுரைரா (ரழி) அவர்கள்  அறிவித்துள்ளார்கள். (திர்மிதி) மேலும் “அடியானிடம், அவன் தன்னுடைய ஆயுளை எப்படி கழித்தான், தன்னுடைய மேனியை எப்படி பயன் படுத்தினான், தன் அறிவைக் கொண்டு என்ன செய்தான், தன் செல்வத்தை எப்படி, எங்கு செலவழித்தான் என்ற நான்கு விடயங்களைப் பற்றி கேற்கப்படும் வரையில் அவனின் இரு பாதங்களும் நகராது” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ புர்ஸா அல் அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)
அல்லாஹ் சிலருக்கு சிலரிடமிருந்து தண்டனையைப் பெற்றுக் கொடுப்பான். “கியாமத்து நாளில் அவரவருக்குரிய உரிமைகள் நிறை வேற்றிக் கொடுக்கப்படும். கொம்பில்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆடும் தண்டிக்கப்படும்” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) மேலும் அடியானுடையவும், அடியாளுடையவும் கைகளைப் பிடித்து அவர்கள், மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். பின்னர்  “ இதோ இன்னாரின் மகன் இன்னார், யாருக்கேனும் இவரிட மிருந்து ஏதேனும் கிடைக்க வேண்டி இருந்தால் அவர் வந்து தனக்குரிய உரிமையைப் பெற்றுக் கொள்வாராக என்று ஒருவர் அழைப்பார்.” அவ்வமயம் தன் மகன், அல்லது தன் சகோதரி, அல்லது தன் தந்தைக்கு எதிராகத் தனக்கு நீதியைப் பெற்றுத் தந்தமைக்காக ஒரு பெண் சந்தோச மடைவாள்.” என்று கூறிய இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள்,   
فَلَا أَنسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ ﴿المؤمنون/١٠١﴾
“அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார் (23\101) என்ற வசனத்தையும் ஓதினார்கள். பின்னர், இவ் வசனத்திற்கு விளக்கமளித்த அவர், “அவர்களின் உரிமையை அவர்களுக்குக் கொடுத்து விடு” என்று அவர்களிடம் அல்லாஹ் கூறுவான். அப்பொழுது அவன் எல்லாமே உலகில் அழிந்து விட்டன. ஆகையால் எங்கிருந்து கொடுப்பேன்” என்று கேட்பான். அப்பொழுது அல்லாஹ் மலக்குகளிடம் “அவர்களின் வேண்டுகோளின் அளவுக்கு ஏற்றாப்போல் அவனின்  நல் அமல்களில் இருந்து அவர்களுக்கு எடுத்துக் கொடுங்கள்” என்று கூறுவான். என்று விளக்கம் தந்தார்கள். மேலும் அந்த அடியான் அல்லாஹ்வின் நேசனாக இருந்தால், அவனின் கடுகளவு நன்மையை பன்மடங்காக்கி அவனை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான். என்று கூறிய அவர்,
إِنَّ اللَّـهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّ‌ةٍ ۖ وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرً‌ا عَظِيمًا ﴿النساء/٤٠﴾
“நிச்சயமாக அல்லாஹ் ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும் நன்மை இருந்தால் அதனை இரட்டிப்பாக்கித் தன் அருளால் பின்னும் அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கின்றான்” (4\40) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் அடியான் துர்ப் பாக்கியவானாக இருப்பின், மலக்குகள் “இரட்சகனே!  அவனுடைய நல் அமல்கள் எல்லாம் தீர்ந்து விட்டன, ஆயினும் உரிமை கோரும் மக்கள் இன்னும் இருக்கின்றனர்” என்பர். அதற்கு அல்லாஹ் அவர்களின் பாவச் செயல்களில் இருந்து எடுத்து அதனை அவனின் பாவச் செயலில் சேர்த்து விடுங்கள், அவனை நரகத்தின் ஒரு வாயலில் கொண்டு போய் அடையுங்கள்” என்று கூறுவான்.  என இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள், என்று  அபூ நஈம் அல்ஹாபிழ் அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் “பெற்றோருக்காக மகன் நிறைவேற்ற வேண்டிய கடனும் உண்டு. ஆகையால் கியாமத்து நாளில் அவன் மேல் அவனின் பெற்றோர் தொங்குவார்கள். அப்போதவன் நான் உங்கள் இருவரினதும் மகன், என்பான். அப்பொழுது அவர்கள் இதை விடவும்  பிள்ளைகள் அதிகமாக இருக்க வேண்டுமே என்று ஆசைப்படுவார்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன், என்று இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
முதலில் ரஸூல்(ஸல்) அவர்களின் சமுதாயத்திடமே அல்லாஹ் விசாரணையை ஆரம்பம் செய்வான். ஏனெனில் நபியவர்கள்  “சமூகங்களில் இறுதியான சமூகமாகிய நாமே இறுதி நாளில் முதலில் விசாரிக்கப்படுவோம். எனவே நாமே அந்தமும், ஆதியும் ஆவோம்.” என்று கூறினார்கள்.(இப்னுமாஜா) மேலும் “ஏனைய சமுதாயத்தினர் நமக்கு வழியைத் திறந்து தருவார்கள். எனவே வுழூவின் அடையாளமாகவுள்ள நமது பிரகாசமான வெண்மையான முன் கைகளுடன் நாம்  நடந்து செல்வோம். அதனைக் காணும் அந்த சமூகங்கள், “இந்த உம்மத்தினர் யாவரும் நபிமார்களாக ஆகும் நிலைக்குக் நெருங்கி விட்டனர்” என்று கூறுவர், என நபியவர்கள் கூறினார்கள்” (அபூ தாவூத்). மேலும் இறுதி நாளில் மனிதர்களிடம் இரத்தம் சிந்தப்பட்ட விடயமாகவே  முதலில் விசாரணை செய்யப்படும். ஏனெனில் ரஸூல்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் “ கியாமத்து நாளில் மக்கள் மத்தியில் முதலில் இரத்தம் பற்றியே தீர்ப்பு வழங்கப்படும்” என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலும் “கொலைகாரனைக் கொலையுண்டவன் கியாமத்து நாளில் அழைத்து  வருவான். அவன் கையில் தனது தலை இருக்கும். அவனின் கழுத்து நரம்பில் இருந்து இரத்தம் ஓடிக் கொண்டிருக்கும். அவன் என் இறைவனே! இவன் என்னைக் கொலை செய்தான் என்று கூறிக் கொண்டிருப்பான். அர்ஷிலிருந்து நீதி கிடைக்கும் வரை அவன் இப்படிக் கூறிக் கொண்டே இருப்பான்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) மேலும் “கியாமத்து நாளில், மனிதனின் நற் செயல்களில் தொழுகையைப் பற்றியே முதலில் கேள்வி கேட்கப் படும். அப்பொழுது அல்லாஹ் தன் மலக்குகளிடம் எனது அடியானின் தெழகையைப் பாருங்கள். அதனை அவன் பூரணப் படுத்தி யிருக்கின்றானா, அல்லது அதில் குறைகள் செய்திரக்கின்றானா? என்று கவணியுங்கள். அது பூர்த்தியான தாயின், அது பூரணமானதுதான் என்று குறித்து விட்டேன். அதில் குறைகள் இருக்குமாயின், எனது அடியானிடம் உபரியான நல்லமல்கள் ஏதும் இருக்கின்றனவா? என்று பாருங்கள். அப்படி இருந்தால் அதனைக் கொண்டு எனது அடியானின் பர்ழான கடமையைப் பூர்த்தி செய்து விடுங்கள், என்று கூறுவான். இவ்வாறு எல்லா அமல்களும் எடுத்துக் கொள்ளப்படும்” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூ தாவூத்)
    மேலும் கண்டனத்திற்குரிய வியங்களை கண்டிக்காமல் இருந்தது குறித்தும் அடியானிடம் அல்லாஹ் விசாரிப்பான். இதனையே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
    “கியாமத்து நாளில் அடியானிடம் விசாரனை செய்யும் அல்லாஹ், அவனிடம் “நீ கண்டனத்திற்குரிய விடயத்தைக் கண்ட போது, அதனை நீ கண்டிக்காது உன்னைத் தடுத்தது எது?” என்றும் கேட்பான். அப்போது  அதற்கான நியாயாயத்தை அடியானின் உள்ளத்தில் அல்லாஹ் ஏற்படுத்தும் பட்சத்தில், அவன் என் இறைவனே! நான் மனிதர்களுக்கு அஞ்சியதாலும் உன் கருணையின் மீது நம்பிக்கை வைத்ததாலுமே என்பான்” என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)
மேலும் அடியார்களின் உள்ளிருந்தே அவர்களின் செயல்களுக்கு எதிர் சாட்சிகளை அல்லாஹ் எற்படுத்துவான். அவைதான் தோல்கள், கைகள், கால்கள், செவிகள், கண்கள், பூமி, செல்வம் என்பன. இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்,
الْيَوْمَ نَخْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْ‌جُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ ﴿يس/٦٥(
“அன்றைய தினம் நாம் அவர்ளுடைய வாய்களில் முத்திரையிட்டு அவர்களுடைய கைகளைப் பேசும்படி செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்”. (36\65)
    மேலும் “நீங்கள் கியாமத்து நாளில் வரும் போது உங்களின் வாய்களில் வடிகளால் முத்திரையிடப்பட்டிருக்கும் அப்பொழுது மனிதனிடமிருந்து அவனின் தொடையும் செவியுமே முதலில் பேசும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் நபியவர்கள் சிரித்தார்கள் . பின்னர் “நான் ஏன் சிரித்தேன் என்று நீங்கள் அறிவீர்களா”? என்றார்கள் அதற்கு நாம், அல்லாஹ்வும் அவனின் தூதரும்தான் அறிவார்கள். என்றோம். அதற்கு நபியவர்கள் அடியான் என் இரட்சகனே! நீ எனக்கு அநீதி இழைப்பதில்லை, என்று கூற வில்லையா? என்ற போது, அல்லாஹ் ஆம் என்பான். அதற்கு அவன், எனக்கு எதிராக என்னிடமிருந்தே ஒரு சாட்சி வரும் வரையில் எனக்கு எதிரான குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் இன்று உனக்கு எதிர் சாட்சியாக நீயும், ‘கிராமுன் காதிபீன்’ எனும் செயல்ளை பதிவு செய்யும் கண்ணியமான மலக்குகளும் போதும் என்பான், பின்னர் அவனின் உருப்புக்களிடம் நீங்கள் பேசுங்கள். என்று கூறுவான். எனவே அவனின் செயல்கள் பற்றி அவை பேசும். பின்னர் வழமை போல் அவனைப் பேச விடுவான். அப்பொழுது அவன் தன் உருப்புக்களிடம், நீங்கள் நாசமடையட்டும். உங்களுக்காகத் தான் நான் போராடினேன். என்பான். அல்லாஹ்வுடனான அடியானின் இந்த உரையாடல்தான் என்னைச் சிரிக்க வைத்தது. என நபியவாகள் கூறினார்கள்.(முஸ்லிம்)
     மேலும் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ரஸுல் (ஸல்) அவர்கள்
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَ‌هَا ﴿الزلزلة/٤﴾
                  “ அந்நாளில் அது(பூமி) தனக்குத் தெரிந்தவைகளை  அறிவிக்கும் (99\4)    
    என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் நபியவர்கள், அதன் செய்திகள் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு தோழர்கள் அல்லாஹ்வும் அவனின் தூதரும்தான் அறிவார்கள் என்று கூறினர். அதற்கு நபியவர்கள் அதன் செய்திகள் என்றால் அந்தப் பூமியின் மேல் ஒவ்வொரு அடியானும் அல்லது உவ்வொரு சமூகமும் செய்த கருமங்களுக்கு எதிராக அவை சாட்சி சொல்வதாகும் என்றும், அது இன்னான், இன்ன நாளில் இன்ன கருமம் செய்தான் என்று சாட்சி சொல்லும் என்றும், இதுதான் அதன் செய்திகள்”. என்று நபியவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(திர்மிதி)
      மேலும் “இந்த செல்வம் பசுமையானதும் இனிமையானது மாகும். யார் இதிலிருந்து ஏழைக்கும், அனாதைக்கும், வழிப்போக்கனுக்கும் வழங்கினானோ, அது தான் ஒரு முஸ்லிமின் நல்ல தோழனாகும்.” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இன்னொரு ஹதீஸில் “யார் உரிமையின்றி இந்தப் பொருளைக் கையாளுகின்றாறோ, அதனைச் சாப்பிட்ட அவன், சாப்பிட்டும் வயிறு நிறையாதவன் போன்றவன். மேலும் மறுமை நாளில் அவன் அதற்கு எதிர் சாட்சியாகவும் இருப்பான்” என்று நபியவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)
      மேலும் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினர் ஏனைய நபிமார்களின்  சமூகத்தினருக்கு எதிராகவும், மேலும் முன்னைய நபிமார்கள் அல்லாஹ்வின் கட்டளையைத் தன் சமுதாயத்தினருக்கு எத்தி வைத்தார்கள் என்றும், அவர்களுக்கு எச்சரிக்கையும் செய்தார்கள் என்றும் சாட்சி பகர்வார்கள். இதனை பின்வரும் ஹதீஸ் இவ்வாறு இயம்புகிறது. “நாளை மறுமை நாளில் ஒரு நபி  ஒரு மனிதனுடனும் இன்னொரு நபி இரண்டு மனிதர்களுடனும் மற்றொரு நபி  மூன்று மனிதர் களுடனும், இன்னும் அதை விட அதிகமானவர் களுடனும் வருவார்கள். அந்த நபியிடம் நீங்கள் உங்களின் சமூகத்தினருக்கு எத்தி வைத்தீர்களா? என்று கேட்கப்படும். அதற்கு அவர் ஆம் என்பார். பின்னர் அவரின் சமூகத்தவர் அழைக்கப்பட்டு அவர்களிடம், இவர் உங்களுக்கு எத்தி வைத்தாரா? என்று வினவப்படும். அதற்கு அவர்கள், இல்லை என்பார்கள். அப்போது அந்த நபியிடம் உங்களுக்கு யார் சாட்சி? என கேட்கப்படும். அதற்கு அவர், முஹம்மது (ஸல்) அவர்களும் அன்னாரின் உம்மத்தினரும் என்பார்கள். அப்பொழுது முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினர் அழைக்கப்பட்டு அவர்களிடம், இவர் எத்திவைத்தாரா? என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள் ஆம் என்பர். அபோது அது உங்களுக்கு எப்படி தெரியும், என்று கூறப்படும். அதற்கு அவர்கள், நபிமார்கள் தங்களின் தூதை எத்திவைத்தனர் என்று, நமது நபி அவர்கள் நமக்கு அறிவித்தார்கள். அதனை நாம் உண்மைப்படுத்தினோம். என்று கூறுவார்கள். இதனையே,  
 وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّ‌سُولُ عليكم شَهِيدًا ۗ (البقرة/143)
 
   “அவ்வாறே உங்களை நடுநிலையான வகுப்பினராக நாம் ஆக்கினோம். ஆகவே நீங்கள் மனிதர்களுக்குச் சாட்சியாக இருங்கள். தூதர் உங்களுக்குச்சாட்சியாக இருப்பார்(2\143) என்ற இறை வாக்கு குறிப்பிடுகின்றது. என்று ரஸுல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
     மேலும் அல்லாஹ் தீர்ப்புக்கள் வழங்கி வரும் காலை, தங்களின் செல்வத்திலிருந்து ஸகாத் தர மறுத்தவர்களையும் அவன் தண்டிப்பான். என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ”தங்கம் வெள்ளியின் ஸகாத்தை நிறைவேற்றாத, அதன் உரிமையாளன் கியாமத்து நாளில் ஒரு நெருப்புத் தட்டில் கிடத்தப் படுவான் பின்னர் அது நரக நெருப்பால் சூடேற்றப்பட்டு அதன் மூலம் அவனின் விலாவிலும், நெற்றியிலும், முதுகிலும் ஒரு தினம் சூடு போடப்படும். அது குளிர் அடையும் போது மீண்டும்  சூடேற்றப் படும். அன்றைய ஒரு நாள் ஐம்பது வருடங்களுக்குச் சமனாகும். இவ்வாரு அடியார்களுக்கு மத்தியில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கி வரும் போது, அவர்கள் தாங்கள் போகும் வழியைக் பார்ப்பார்கள். அது சுவர்க்கத்தின் வழியாகவோ, நரகத்தின் வழியாகவோ இருக்கும்” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
மேலும் அல்லாஹ் தனது அடியார்கள் அனைவரையும் ஒன்று சேர்த்ததும், ஒவ்வாரு வஞ்சகனுக்காகவும் ஒரு கொடி ஏற்றப்படும். இதனை ரஸூல்(ஸல்) அவர்களின் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. “கியாமத்து நாளில் ஆதி காலத்தவரையும் அந்திம காலத்தவரையும் அல்லாஹ் ஒன்று கூட்டியதும் ஒவ்வொரு வஞ்சகனுக்காகவும் ஒரு கொடி ஏற்றப்படும். பின்னர் இது இன்னானின் வஞ்சகத்துக்குரியது, இது இன்னானின் வஞ்சகத்துக்குரியது, என்று கூறப்படும்” என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி-முஸ்லிம்)   
*****************************************
நபி அவர்களின் நீர்த் தடாகம்

கியாமத்து நாளின் வெட்ட வெளியில், நீர் அருந்துவதற்காக ரஸுல்(ஸல்) அவர்களின் நீர் தடாகத்திற்கு முஃமின்கள் வருவார்கள், அதிலிருந்து அவர்கள் தண்ணீரும் அருந்துவார்கள். ஆனால் அங்கு வரும் காபிர்களோ விரட்டியடிக்கப்படுவார்கள்.
حدثنا ‏ ‏إبراهيم بن المنذر الحزامي ‏ ‏حدثنا ‏ ‏محمد بن فليح ‏ ‏حدثنا ‏ ‏أبي ‏ ‏قال حدثني ‏ ‏هلال بن علي ‏ ‏عن ‏ ‏عطاء بن يسار ‏ ‏عن ‏ ‏أبي هريرة ‏
‏عن النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏(( ‏بينا أنا قائم إذا زمرة حتى إذا عرفتهم خرج رجل من بيني وبينهم فقال هلم فقلت أين قال إلى النار والله قلت وما شأنهم قال إنهم ارتدوا بعدك على أدبارهم القهقرى ثم إذا زمرة حتى إذا عرفتهم خرج رجل من بيني وبينهم فقال هلم قلت أين قال إلى النار والله قلت ما شأنهم قال إنهم ارتدوا بعدك على أدبارهم القهقرى فلا أراه يخلص منهم إلا مثل همل النعم (البخاري)
,    “நீர்த்தடாகத்தின் பக்கத்தில் நான் நிற்கும் போது அங்கு ஒரு கூட்டம் நின்றது. நான் அவர்கள் யார் என்பதை அறிந்து கொண்டேன். அப்போது எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு மனிதர் குறுக்கிட்டார்.  அவர்களிடம் அவர் “அவசரமாக வாருங்கள்” என்றார். அதற்கு நான் அவரிடம் எங்கே? என்றேன். அதற்கவர், “நரகத்திற்கு என்றார். அதற்கு நான் அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்களின் விவகாரம் என்ன? என்றேன். அதற்கவர் “அவர்கள்தான், உங்களுக்குப் பின்னர் முற்றிலும் மார்க்கத்தை விட்டும் திரும்பியவர்கள்’ என்று கூறினார். பின்னர் இன்னொரு கூட்டம் அங்கு வந்தது. அவர்களையும்  நான் அறிந்து கொண்டேன். அப்பொழுதும் எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு மனிதர் குறுக்கிட்டு, அவர்களிடம் அவசரமாக வாருங்கள், என்றார். அதற்கு நான் அவரிடம், எங்கே? என்றேன் அதற்கவர், “நரகத்திற்கு என்றார். அதற்கு நான் “அவர்களின் விவகாரம் யாது? என வினவினேன். அதற்கவர், “அவர்கள்தான், உங்களுக்குப் பின்னர், முற்றிலும் மார்க்கத்தை விட்டும் திரும்ம்பியவர்கள்” என்றார். கவணிப்பாரற்ற ஒட்டங்களைப் போன்றிருந்த அக்கூட்டத்திலிருந்து ஒரு சிலரையல்லாது வேறு எவரையும் அவர் விடுதலை செய்ததை நான் காணவில்லை” என்று ரஸூலுல்லாஹி(ஸல்) கூறினார்கள். என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றர்கள் (புகாரீ\முஸ்லிம்).
      قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ مَا آنِيَةُ الْحَوْضِ ؟ قَالَ : " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ نُجُومِ السَّمَاءِ وَكَوَاكِبِهَا فِي اللَّيْلَةِ الْمُظْلِمَةِ الْمُصْحِيَةِ فِيهِ مِنْ آنِيَةِ الْجَنَّةِ ، مَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ ، عَرْضُهُ مِثْلُ طُولِهِ مَا بَيْنَ عَمَّانَ إِلَى أَيْلَةَ ، وَمَاؤُهُ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ " (رواه مسلم)
     “அல்லாஹ்வின் தூதரே! அந்தத் தடாகத்திலுல்ல பாத்திரங்கள் யாது? என்றேன். அதற்கு நபியவர்கள், “என் ஆத்மா யார் கையில் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக  சுவனபதியின் அந்தப் பாத்திரங்கள், வானத்தில் இருள் மயமான,  இரவில் பிரகாசிக்கும்   நட்சத்திரங்களை விடவும் அதிகமானவை. அந்தத் தடாகத்திலிருந்து அருந்தியவருக்கு மேலும் தாகம் வராது. அதன் அகலம் ‘ஓமானுக்கும்’ ‘ஐலாவுக்கும்’ இடையே உள்ள தூரமாகும். மேலும் அதன் தண்ணீர் பாலை விடவும் வெண்மையாகவும், தேனை விடவும் இனிமையாகவும் இருக்கும்.” என்று நபியவர்கள் கூறினார்கள், என்று அபூ தர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்)
      மேலும் ஏழை முஹாஜிரீன்கள்தான் இத் தடாகத்திற்கு முதலில் வருவர். இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.    
   
عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال: إن حوضي ما بين عدن إلى إيلة أشد بياضًا من اللبن وأحلى من العسل أكاويبه كعدد نجوم السماء من شرب منه لم يظمأ بعدها أبدًا، وأول الناس من يرد على الحوض فُقراء المهاجرين: الدنس ثيابا الشعث رؤوسًا الذين لا ينكحون المتنعمات ولا تفتح لهم أبواب السدد قال: فبكى عمر حتى ابتلت لحيته فقال: لكني نكحت المتنعمات وفتحت لي أبواب السدد، لا جرم أني لا أغسل ثوبي الذي يلي جسدي حتى يتسخ، ولا أدهن رأسي حتى تشعث. خرجه الترمذي.
   
    “ஏடனுக்கும்’ ‘ஐலாவுக்கும்’ இடையிலான விசாலமுடைய என்னுயை தடாகத்தின் பானம் பாலை விடவும் வெண்மையானது, தேனை விடவும் இனிமையானது, அதன் குவளைகளின் எண்ணிக்கை, வானத்தின் நட்சத்திரங்களின் எண்ணிக்கை போன்றது. அத் தடாகத்திற்கு, உடை அழுக்காகவும், தலைவிரி கோலமாகவும், சுக வாழ்வை விரும்பும் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளாமலும், மூடிய கதவுகள் திறக்கப்படாமலும் இருந்த ஏழை முஹஜிர்கள்தான் முதலில் வருவார்கள். என்று நபியவர்கள் கூறிய போது உமர் (ரழி) அவர்கள் தன்னுடைய தாடி நணையும் வரை அழுதார்கள். பின்னர் அவர்கள் “நானோ! சுக வாழ்வை விரும்பும் பெண்களைத் திருமணம் செய்து கொண்டேன், எனக்காக அடைத்த கதவுகள் திறக்கப்பட்டன. உண்மையில் எனது மேனியில் இருக்கும் ஆடையை, அழுக்குப்படியும் வரையில் நான் துவைக்காமலும், என் தலை முடி சிதரி விடும் வரையில் தலையில் எண்ணெய் தேய்க்காமலும் இருந்திருக்க வேண்டுமே” என்று கூறினார்கள். என ‘ஸௌபான்’ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(துர்மிதீ)
    மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹம்ஸா (ரழி) அவர்கள் அறிவிக்க்கின்றார்கள்,  

عن حمزة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم "إن لكل نبي حوضاً، وأنهم يتباهون أيهم أكثر واردة، وإني لأرجو أن أكون أكثرهم واردة "(رواه الترمذي)

     “எல்லா நபிமார்களுக்கும் ஒரு தடாகம் உண்டு. யாருடைய தடாகத்திற்கு அதிமானவர்கள் வருகின்றனர் என்பதையிட்டு அவர்கள் பெருமை பாராட்டுவார்கள். ஆகையால்  அதிமான மக்கள் என்னிடம் வருவதை நான் எதிர் பார்கின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்.(துர்மிதீ)

அல் மீஸான்- தராசு
     அடியார்களின் செயலின் பரிமாணத்தை வெளிப்படுத்துவதற்காக நாளை கியாமத்து நாளில் அல்லாஹ் தராசுகளை நிறுவுவான். இதனை பின் வரும் அல் குர்ஆன் வசனங்களும். ஹதீஸ்களும் தெளிவு படுத்துகின்றன.
 وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ (الأنبياء/47)
       “மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவேம். யாதொரு ஆத்மாவுக்கும் அநியாயம் யெயப்படமாட்டாது. அது ஒரு கடுகின் அளவாக இருந்த போதிலும். அதனையும கொண்டு வருவோம். கணகெடுக்க நாமே போதும்”. (21\47)
فَمَنْ ثَقُلَتْ مَوازِينُهُ فَأُولئِكَ هُمُ الْمُفْلِحُونَ (102) وَمَنْ خَفَّتْ مَوازِينُهُ فَأُولئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ(المؤمنون/102-103)
   “எவர்களுடைய நன்மையின் எடை கணக்கிறதோ அவர்கள்தாம் வெற்றி அடைவார்கள்.இன்னும் எவர்களுடைய எடை குறைகின்றதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள்.(23\102-103)
عن أبي الدرداء -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- قال: (ما من شيء أثقل في الميزان من حسن الخلق)وفي رواية: (ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من خلق حسن، وإن الله تعالى يبغض الفاحش البذيء)(رواه الترمذي)وفي رواية: (ما من شيء يوضع في الميزان أثقل من حسن الخلق، وإن صاحب حسن الخلق ليبلغ به درجة صاحب الصوم والصلاة)
   “தராசியிலே நற்குணத்தை விடவும் கனமானது இதுவுமில்லை” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ தர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (துர்மிதீ) இன்னொரு அறிவிப்பில் கியாமத்து நாளில் முஃமினின் தராசியில் நற் குணத்தை விட கனமானது எதுவுமில்லை, மேலும் கெட்டவன் மீதும், கெட்ட வார்த்தை பேசுபவன் மீதும் அல்லாஹ் கோபம் கொள்கிறான், என்றும், மற்றொரு அறிவிப்பில் தராசியில் வைக்கப்படுகின்றவற்றில் நற் குணத்தை விடவும் பாரமானது எதுவுமில்லை. மேலும் நற் குணமுள்ளவன் நற் குணத்தின் மூலம் நோன்பாளியினதும், தொழுகையாளியினதும் பதவியை அடைந்து கொள்வான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நல்லமல்கின் ஏடு கனத்திருக்கும், என்பதை நபி மொழி உறுதிப்படுத்துகிறது.
عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبلِيِّ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ ـ عَزَّ وَجَلَّ ـ يَسْتَخْلِصُ رَجُلا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلائِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلا ، كُلُّ سِجِلٍّ مَدُّ الْبَصَرِ ؛ ثُمَّ يَقُولُ لَهُ : أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا ؟ أَظَلَمَتْكَ كَتَبَتِي الْحَافِظُونَ ؟ قَالَ : لا يَا رَبِّ ، فَيَقُولُ : أَلَكَ عُذْرٌ أَوْ حَسَنَةٌ ؟ فَيُبْهَتُ الرَّجُلُ ، فَيَقُولُ : لا يَا رَبِّ ، فَيَقُولُ : بَلَى ؛ إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً وَاحِدَةً لا ظُلْمَ الْيَوْمَ عَلَيْكَ ، فَيُخْرِجُ لَهَا بِطَاقَةً فِيهَا : أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، فَيَقُولُ : أَحْضِرُوهُ ، فَيَقُولُ : يَا رَبِّ ، مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلاتِ ؟ فَيُقَالُ : إِنَّكَ لا تُظْلَمُ ، قَالَ : فَتُوضَعُ السِّجِلاتُ فِي كِفَّةٍ ، وَالْبِطَاقَةُ فِي كِفَّةٍ . قَالَ : فَطَاشَتِ السِّجِلاتُ وَثَقُلَتِ الْبِطَاقَةُ " . الْبِطَاقَةُ : الْقِطْعَةُ (رواه ا لترمذي)
    “நிச்சயமாக எனது உம்மத்திலிருந்து ஒரு மனிதனை அல்லாஹ் கியாமத் நாளில் சிருஷ்டிகளின் முன்னிலையில் விடுதலை செய்வான். அவன் முன்னிலையில் தொந்நூற்றி ஒன்பது தஸ்தாவேஜுகள் பரத்தி வைக்கப்படும். ஒவ்வொரு தஸ்தாவேஜும் கண்ணெட்டும் தூரம் வரையில் இருக்கும். பின்னர் அவனிடம், இதில் எதையேனும் நீ மறுக்கின்றாயா? உனக்கு என்னுடைய பாதுகாலர்களான எழுத்தாளர்கள் ஏதேனும் அநீதி இழைத்தார்களா? என்று அல்லாஹ் கூறுவான்“ அதற்கு அவன் “ என் இரட்சகனே இல்லை” என்பான். அப்பொழுது அவனிடம் அல்லாஹ் “உன்னிடம் நியாயம் ஏதேனுமோ, அல்லது நல்லமல் ஏதேனுமோ இருக்கின்றதா?” என்று கேட்பான். அப்பொழுது அவன் திகைப்படைந்தவனாக, “என் இரட்சகனே இல்லை” என்பான். அதற்கு அல்லாஹ் “இவை அனைத்துக்குமாக நம்மிடம் உனது ஒரேயொரு நன்மை இருக்கின்றது, இன்று உனக்கு அநீதி எதுவும் இழைக்கப்பட மாட்டாது” என்று கூறுவான். பின்னர் அவன் ஒரு துண்டை வெளியில் எடுப்பான். அதில் “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹவையன்றி யாரும் இல்லை, என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் அடியானும் தூதரும் ஆவார் என்றும் சாட்சி பகர்கின்றேன்” எனும் வாசகம் இருக்கும். பின்னர் “உனது நிறையை சமர்ப்பி” என்று அல்லாஹ் கூறுவான். அப்பொழுது அவன் “என் இறைவனே! இந்த தஸ்தாவேஜுகளுடன் இருக்கும் இந்தத் துண்டு யாது? என்பான். அப்போது “உனக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது” என்று கூறப்படும். பின்னர் தராசின் ஒரு தட்டில் தஸ்தாவேஜுகளும், இன்னொரு தட்டில் அந்தத் துண்டும் வைக்கப்படும். அப்பொழுது தஸ்தாவேஜுகளின் தட்டின் கனம் குறைந்து விடும். துண்டிருக்கும் தட்டு கனத்துவிடும். ஏனெனில் அல்லாஹ்வின் பெயருடன் ஏனையவை கனத்துவிட முடியாது.” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று அப்துல்லாஹ் இப்னு அம்று இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (துர்மதீ)   
           
عن عائشة ، وبعض أصحاب النبي - صلى الله عليه وسلم - عن النبي - صلى الله عليه وسلم - : أن رجلا جلس بين يديه فقال : يا رسول الله ، إن لي مملوكين يكذبونني ، ويخونونني ويعصونني ، وأضربهم وأشتمهم ، فكيف أنا منهم يا رسول الله ؟ فقال له رسول الله - صلى الله عليه وسلم - : " بحسب ما خانوك ، وعصوك ، وكذبوك ، وعقابك إياهم ، فإن كان عقابك إياهم دون ذنوبهم كان فضلا لك ، وإن كان عقابك إياهم بقدر ذنوبهم كان كفافا ، لا لك ولا عليك ، وإن كان عقابك إياهم فوق ذنوبهم اقتص لهم منك الفضل الذي بقي قبلك " . فجعل الرجل يبكي بين يدي رسول الله - صلى الله عليه وسلم - ويهتف ، فقال له رسول الله - صلى الله عليه وسلم - : " ما لك ؟ ما تقرأ كتاب الله : " ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين "  فقال الرجل : يا رسول الله ، ما أجد شيئا خيرا لي من فراق هؤلاء - يعني عبيده - أشهدك أنهم أحرار كلهم .  ( رواه الترمذي)
       ஆயிஷா (ரழி) அவர்களும், இன்னும் சில நபித் தோழர்களும் பின் வரும் சம்பவத்தை அறிவிக்கின்றனர்,
“நபி (ஸல்) அவர்களின் எதிரில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு மனிதன் “என்னிடம் அடிமைகள் இருக்கின்றனர், அவர்கள் என்னை பொய்யன் என்கின்றனர், மேலும் எனக்கு துரோகம் செய்கின்றனர், எனக்கு மாறும் செய்கின்றனர். ஆகையால் அவர்களை நான் அடிக்கவும் ஏசவும் செய்கிறேன். எனவே அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் விடயத்தில் எனது நிலை யாது? என்றார். அப்போது அவரிடம் நபியவர்கள் “அவர்கள் உமக்குத் துரோகம் செய்ததற்கும், மாறு செய்ததற்கும் உம்மை பொய்யன் என்றதற்கும், மற்றும் நீர் அவர்களைத் தண்டித்ததற்கும் ஏற்றாப்போல் இருக்கும். எனவே அவர்களுக்கு நீர் கொடுத்த தண்டனை அவர்களின் குற்றத்தை விடவும் குறைவாக இருப்பின் அது உமக்கு சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு நீர் கொடுத்த தண்டனை, அவர்களின் குற்றத்தின் அளவுக்கு ஏற்றாப்போல் இருப்பின், அது போதுமானதே. எனவே அது உமக்கு சாதகமாகவும் இருக்காது பாதகமாகவும் இருக்காது. ஆனால் அவர்களுக்கு நீர் கொடுத்த தண்டனை அவர்களின் குற்றத்தை விடவும் அதிகம் எனில், உமது நிலுவையில் இருக்கும் உமது அதிகப்படியான செயலுக்காக உம்மிடமிருந்து அவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும்” என்று நபியவர்கள் கூறினார்கள். அப்பொழுது அவர் ரஸுல் (ஸல்) முன்னிலையில் சத்தமிட்டு அழலானார். அப்பொழுது நபியவர்கள் அவரிடம் “உமக்கு என்ன நடந்தது? “மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மாவுக்கும் அநியாயம் செய்யப்படமாட்டாது, ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதனையும் கொண்டு வருவோம். கனக்கெடுக்க நாமே போதும்” என்ற திரு வசனத்தை நீங்கள் ஓதவில்யா? என்றார்கள். அப்பொழுது அம்மனிதன் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹவின் மீது ஆணையாக அவர்களை விட்டும் பிரிவதை விட எனக்கும், அவர்களுக்கும் நன்மை தரக்கூடிய எதனையும் நான் காணவில்லை. ஆகையால் நீங்கள் சாட்சியாக இருங்கள் நிச்சயமாக அவர்கள் யாவருக்கும் விடுதலை” என்றார். (துர்மிதீ)

முஃமின்களைப் பரீட்சித்தலும், ஸிராத்-பாலமும்
     ஒவொருவரின் செயலும் நிறுக்கப்பட்ட பின், ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் எதனை வணங்கி வந்தனரோ, அதனைப் பின் தொடர்ந்து செல்வார்கள். ஆனால் முனாபிக்குகளோ, முஃமின்களுடன் தங்கிவிடுவார்கள். அப்பொழுது ‘ஸிராத்’ எனும் பாலம் நிர்மாணிக்கப்பட்டு விடும். “அல்லாஹ்வின் தூதரே! கியாமத்து நாளில் அல்லாஹ்வை நாங்கள் பார்ப்போமா? என சிலர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் கேட்டனர்” அதற்கு நபியவர்கள் தந்த விளக்கம்  ஸஹீஹ் முஸ்லிமில் பின் வருமாறு பதிவாகியுள்ளது.
   عن أبي هريرة أن الناس قالوا يا رسول الله هل نرى ربنا يوم القيامة فقال رسول الله صلى الله عليه وسلم هل تضارون في القمر ليلة البدر قالوا لا يا رسول الله قال فهل تضارون في الشمس ليس دونها سحاب قالوا لا يا رسول الله قال فإنكم ترونه كذلك يجمع الله الناس يوم القيامة فيقول من كان يعبد شيئا فليتبعه فيتبع من كان يعبد الشمس الشمس ويتبع من كان يعبد القمر القمر ويتبع من كان يعبد الطواغيت الطواغيت وتبقى هذه الأمة فيها منافقوها  فيأتيهم الله في صورة غير صورته التي يعرفون فيقول أنا ربكم فيقولون نعوذ بالله منك هذا مكاننا حتى يأتينا ربنا فإذا جاءنا ربنا عرفناه فيأتيهم الله في صورته التي يعرفون فيقول أنا ربكم فيقولون أنت ربنا فيتبعونه ويضرب الصراط بين ظهري جهنم فأكون أنا وأمتي أول من يجيزها ولا يتكلم يومئذ إلا الرسل ودعوى الرسل يومئذ اللهم سلم سلم وفي جهنم كلاليب مثل شوك السعدان هل رأيتم السعدان قالوا نعم يا رسول الله قال فإنها مثل شوك السعدان غير أنه لا يعلم ما قدر عظمها إلا الله تخطف الناس بأعمالهم فمنهم الموبق بقي بعمله أو الموثق بعمله ومنهم المخردل أو المجازى حتى ينجي
     “அல்லாஹ்வின் தூதரே! கியாமத்து நாளில் நாங்கள் அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா?” என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபியவர்கள் “பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதில் உங்களுக்கு இடைஞ்சல் ஏதும் உண்டா?” என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இல்லை” என்றனர். அப்போது நபியவர்கள் “மேகம் இல்லாத போது சூரியனைக் காண்பதில் இடைஞ்சல் ஏதும் இருக்குமா?” என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இல்லை” என்றனர். அப்போது நபியவர்கள் “அது போன்றுதான் நீங்கள் அவனைக் காண்பீர்கள்” மேலும் கியாமத்து நாளில் மனிதர்களை அல்லாஹ் ஒன்று கூட்டி, அவர்களிடம் “யார் எதனை வணங்கி வந்தாரோ, அவர் அதனைப் பின் தொடரவும்” என்பான் அப்பொழுது சூரியனை வணங்கியவன் சூரியனையும், சந்திரனை வணங்கியவன் சந்திரனையும், ஷைத்தான்களை வணங்கியவன் ஷைத்தான்களையும் பின் தொடர்வான். அப்பொழுது இந்த உம்மத்தினர் அவ்விடத்தில் தங்கிவிடுவார்கள், அவர்களுக்கு மத்தியில் இந்த சமூகத்தின் முனாபிக்குகளும் இருப்பார்கள். அவர்களிடம் அல்லாஹ் வருவான். அப்போதவன் அவர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு தோற்றத்தில் காட்சியளிப்பான். அப்போதவன் “நான்தான் உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள் “நாங்கள் உன்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். நம் இறைவன் நம்மிடம் வரும் வரையில் இதுதான் நமது இடம். நமது இறைவன் வந்தவுடன் நாம் அவனைத் தெரிந்து கொள்வோம்” என்பர். பின்னர் அவர்களுக்கு அறிமுகமான தோற்றத்தில், அவர்களிடம் அல்லாஹ் வருவான். பின்னர் அவர்களிடம் “நான்தான் உங்களின் இறைவன்” என்பான். அப்பொழுது அவர்கள் “நீதான் நமது இறைவன்” என்று கூறியவாறு அவனைப் பின் தொடர்வார்கள். மேலும் நரகத்தின் மேல், பாலம் அமைக்கப்படும். அதனை நானும் எனது உம்மத்தினரும்தான் முதலில் கடந்து செல்வோம். அல்லாஹ்வின் தூதர்களைத் தவிர வேறு எவரும் அந்நாளில் பேசமாட்டார்கள். அன்று தூதர்கள் “அல்லாஹ்வே! காப்பாற்று, காப்பாற்று என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள். மேலும் நரகத்தில் ‘ஸஃதான்’ முல்லு போன்ற கொக்கிகள் இருக்கும். நீங்கள் ‘ஸஃதான்’ முற்களைப் பார்த்திருக்கின்றீர்களா? என்று நபியவர்கள் கூறிய போது, அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றனர்”.அப்போது நபியவர்கள் “அந்தக் கொக்கிகள் ‘ஸஃதான்’ முல்லு போன்றுதான் இருக்கும், ஆனால் அதன் பரிமாணத்தை அல்லாஹ்வையன்றி யாரும் அறியார்கள், அது மனிதர்களின் செயலுக்கு ஏற்ப அவர்களைப் பற்றிப் பிடிக்கும். அப்பொழுது அதில் மாட்டிக் கொள்பவர்களும் இருப்பார்கள், அதனைத் தாண்டிச் சென்று தப்பித்துக் கொள்பவர்களும் இருப்பார்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஸஃதான், என்பது ஈச்ச மரத்து முற்களையும், பாலை வணத்திலுள்ள சில முல்லு மரங்களையும் குறிக்கும்)                          
     இதன் பின் இறுதி நாளின் அந்த வெட்ட வெளியில் முஃமின்களையும், அவர்களுடன் கலந்திருக்கும் முனாபிக்குகளையும் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒளியை அல்லாஹ் வழங்குவான். அவர்கள் அந்தப் பாலத்தைக் கடக்க முற்படும் போது முனாபிக்குகளுக்கும் முஃமின்களுக்கும் இடையில் ஒரு வேலி போடப்படும். முஃமின்களின் வேளிக்குள்ளே அல்லாஹ்வின் அருளும், முனாபிக்குகளின் வேலிக்குள்ளே வேதனையும் இருக்கும். அதனையே அல்லாஹ்வின் வசனம் இப்படிக் குறிப்பிடுகின்றது.         
يَوْمَ لَا يُخْزِي اللَّـهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ ۖ نُورُ‌هُمْ يَسْعَىٰ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَ‌بَّنَا أَتْمِمْ لَنَا نُورَ‌نَا وَاغْفِرْ‌ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ‌ ﴿التحريم/٨﴾
    “நபியையும் அவருடன் நம்பிக்கை கொணடவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அந்நாளில் இவர்களுடைய பிரகாசம் இவர்களுக்கு முன்னும், இவர்களுடைய வலது பக்கத்திலும் ஊடுருவிச் சென்று கொண்டிருக்கும். இவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ பரிபூரணமாக்கி வைப்பாயாக. எங்களுடைய குற்றங்களையும் நீ மன்னித்து அருள் புரிவாயாக. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள். (66\8)
   எனவே அந்தப் பாலத்தைத் தாண்டிச் செல்லும் முஃமின்கள் அவர்களின் செயலின் தரத்திற்கேற்ப அதனைத் தாண்டுவார்கள். சில முஸ்லிம்கள் எந்தப் பாதகமும் இன்றி அதனைத் தாண்டி தப்பித்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் சிராய்ப்புகளுடன் தப்பித்துக் கொள்வார்கள். வேறு சிலர் அந்த கொக்கிகளில் சிக்குண்டு நரகில் விழுவார்கள். மேலும் இந்தப் பாலம் முடியை விடவும் மெல்லியதாகவும், வாளை விடவும் கூர்மையாகவும் இருக்கும், அதன் மீது பெரிய கொக்கிகள் பூட்டப்பட்டிருக்கும், அது மனிதர்களின் செயல்களுக்குத் தக்கவாறு அவர்களைப் பற்றிப் பிடிக்கும். மேலும் முஃமின்கள் தங்களின் நிலைகளுக்குத் தக்கவாறு அந்தப் பாலத்தைக் கடந்து செல்வார்கள். அதன் வர்ணனைகள் பற்றிப் பின் வரும்  ஹதீஸ்களில் பதிவாகி உள்ளன.
عن حذيفة وأبي هريرة رضي الله عنهما قالا قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله تبارك وتعالى الناس فيقوم المؤمنون حتى تزلف لهم الجنة فيأتون آدم صلوات الله عليه فيقولون يا أبانا استفتح لنا الجنة فيقول وهل أخرجكم من الجنة إلا خطيئة أبيكم لست بصاحب ذلك اذهبوا إلي ابنى إبراهيم خليل الله قال فيأتون إبراهيم فبقول إبراهيم لست بصاحب ذلك إنما كنت خليلا من وراء وراء اعمدوا إلى موسى الذي كلمه الله تكليما فيأتون موسى فيقول إبراهيم لست بصاحب ذلك اذهبوا إلى عيسى كلمة الله وروحه فيقول عيسى لست بصاحب ذلك فيأتون محمد صلى الله عليه وسلم فيقوم فيؤذن له وترسل الأمانة والرحم فيقومان جنبتى الصراط يمينا وشمالا فيمر أولكم كالبرق قلت بأبي وأمي أي شيء كمر البرق قال ألم تروا كيف يمر ويرجع في طرفة عين ثم كمر الريح ثم كمر الطير وشر الرجال تجري بهم أعمالهم ونبيكم قائم على الصراط يقول رب سلم سلم حتى تعجز أعمال العباد حتى يجئ الرجل لا يستطيع السير إلا زحفا وفي حافتي الصراط كلاليب معلقة مأمورة بأخذ من أمرت به فمخدوش ناج ومكردس في النار والذي نفس محمد بيده إن قعر جهنم لسبعون خريفا رواه مسلم

   அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “முஹம்மது (ஸல்) அவர்களிடம், அவர்கள் வருவார்கள். அவ்வமயம் ரஸுல் (ஸல்) அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். ஆகையால் எழுந்து நிற்பார்கள். மேலும் மார்க்கமும் இரத்த பந்துத்துவமும் அங்கு அனுப்பப்பட்டிருகும். அவை பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் வலமாகவும் இடமாகவும் நின்று கொள்ளும். அவ்வமயம் முதலில் பாலத்தைக் கடப்பவர் இராய்ஞ்சு செல்லும் மின்னலைப் போன்று அதனைக் கடப்பார். என்று நபியவர்கள் கூறிய போது, “எனது தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணம்மாகட்டும். மின்னல் போன்று கடக்கும் பொருள் எது?” என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள், “கண் மூடி திறப்பதற்குள் மின்னல் எப்படி போய் வருகின்றது, என்பதை நீர் கண்டதில்லையா? என்று கூறியவாறு, பின்னர் காற்று செல்வது போறும், பறவைகள் செல்வது போன்றும் அதனை மக்கள் கடந்து செல்வார்கள். மேலும் கெட்ட மனிதர்களை அவர்களின் செயல்கள் ஓட்டிக் கொண்டு செல்லும். அவ்வமயம் பாலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் ரஸூல் (ஸல்) அவர்கள், “என் இறைவனே பாதுகாப்பாயாக, பாதுகாப்பாயாக என்று கூறிக் கொண்டு இருப்பார்கள். அடியார்கள் செய்த கர்மங்கள் செயலிழந்திருக்கும் அவ்வேளையில், ஒரு மனிதன்  நடக்க முடியாமல்,  ஊர்ந்து வருவான். மேலும் பாலத்தின் இரு மருங்கிலும் கொக்கிகள் இருக்கும். அதனிடம் யாரைப் பிடிக்கும்படி  உத்தரவு விடப்பட்டுள்ளதோ, அவனை அது பிடித்துக் கொள்ளும். அவ்வமயம் யாரின் மீது சிராய்ப்பு ஏற்பட்டதோ, அவர் தப்பித்துக் கொள்வார். யார் அதில் சிக்குண்டாரோ, அவர் நரகில் இருப்பார். யார் கையில் முஹம்மதுவின் ஆத்மா இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக, நிச்சயமாக நரகின் ஆழம் எழுபது ஆண்டு பயணத்தின் தூரமாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள், என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(முஸ்லிம்).
عن عبد الله بن محمد بن أسماء بن عبيد حدثنا ابن المبارك عن يحيى بن أيوب عن عبد الله بن سليمان عن إسمعيل بن يحيى المعافري   عن سهل بن معاذ بن أنس الجهني عن أبيه  عن النبي صلى الله عليه وسلم قال من حمى مؤمنا من منافق أراه قال بعث الله ملكا يحمي لحمه يوم القيامة من نار جهنم ومن رمى مسلما بشيء يريد شينه به حبسه الله على جسر جهنم حتى يخرج مما قال
மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒரு முஃமினுக்கு தொல்லை கொடுத்த ஒரு முனாபிக்கைக் நான் கண்டேன். அவனிடம் ஒரு மலக்கை அல்லாஹ் அனுப்பினான். அவர் அந்த கியாமத்து நாளில் அவனின் சதையின் மீது நரகத்தின் நெருப்பைக் கொண்டு சூடு போட்டார். மேலும் ஒரு முஸ்லிமை அவதூறு சொல்லிக்  கேவலப்படுத்திய ஒருவனையும் கண்டேன். அவன், தான் கூறியதை வெளிப்படுத்தும் வரையில், அவனை நரகின் மேலுள்ள பாலத்தின் மீது அல்லாஹ் தடுத்து வைத்தான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று முஆத் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(அபூதாவூத்)
    இப்போது சற்று சிந்தியுங்கள். உங்களின் மனதில் ஏற்படும் பயத்தைக் கவணியுங்கள். உண்மையில் கியாமத்து நாளின் அந்த பாலத்தையும், அதன் ஒடுக்கமான தோற்றத்தையும் இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களின் பார்வை அந்தப் பாலத்தின் கீழே உள்ள நரகத்திலிருக்கும் பெரும் கூட்டத்தினர் மீது விழுகிறது. இந்நேரத்தில் உங்களின் மனதில் நரகத்தின் சுவாலை இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சூழலில் அந்தப் பாலத்தின் மேல் நீங்கள் நடந்து செல்ல வேண்டுமென  பணிக்கப்பட்டுள்ளீரகள். அப்பொழுது உங்களின் நிலையோ பலவீனமாகவும், உங்களின் மனம் பட படத்துக் கொண்டும், உங்களின் கால் நடுங்கிக் கொண்டும், உங்களின் பாவங்கள் உங்களின் முதுகை கனக்க வைத்துக் கொண்டும் இருக்கின்றன. இந்த நிலையில் கூர்மையான அந்த பாலத்தின் மீது நடப்பது ஒரு புறமிருக்க, விசாலமான பூமியின் மேலால் கூட உங்களால் நடக்க முடியாது. எனவே இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் உங்களின் ஒரு காலை அதன் மீது வைக்கும் போது உங்களின் நிலை எப்படி இருக்கும்? எனவே அந்த சூழலில் உங்களின் முன்னால் மக்கள் சருகி விழுகின்றனர், நரகத்தின் பாதுகாவளர்களான ‘ஸபானிய்யாக்கள் கொக்கிகளைக் கொண்டு அவர்களைப் பிடித்து இழுக்கின்றனர். இந்தப் பயங்கரக் காட்சியை நீங்கள் பார்துக் கொண்டு இருக்கும் போது, அந்த கூரிய பாலத்தின் மீது உங்களின் மறு காலையும்  வைக்கும்படி நீங்கள் நிர்பந்திக்கப்படுகின்றீர்கள் என்றால், உங்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
----------------------------------------------------
இன்னுமொரு பாலம்  
   நரகத்தின் மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலத்தை முஃமின்கள் தாண்டி, அவர்கள் அதிலிருந்து தப்பித்துக் கொண்ட பின்னர், இன்னொரு பாலத்தின் மீது அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவர். சுவரக்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் இருக்கும் அதன் மீது அவர்கள் நிறுத்தப்பட்டு, தம் மத்தியில் நிகழ்ந்த அநீதிகளுக்குரிய தண்டனைகளை அவர்கள்   ஒவ்வெருவரும் பெற்றுக் கொள்ளும் வரையில், சுவர்க்கத்தில் பிரவேசிக்க யாருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.                                                                                     
حَدَّثَنَا سَعِيدٌ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَخْلُصُ الْمُؤْمِنُونَ مِنَ النَّارِ فَيُحْبَسُونَ عَلَى قَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ ، فَيُقَصُّ لِبَعْضِهِمْ مِنْ بَعْضٍ مَظَالِمُ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا ، حَتَّى إِذَا هُذِّبُوا وَنُقُّوا أُذِنَ لَهُمْ فِي دُخُولِ الْجَنَّةِ ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، لَأَحَدُهُمْ أَهْدَى بِمَنْزِلِهِ فِي الْجَنَّةِ مِنْهُ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا (رواه البخاري)
     “நரகத்தில் விழுந்து விடாமல் தப்பித்துக் கொண்ட முஃமின்கள், சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் இருக்கும் ஒரு பாலத்தின் மீது தடுத்து நிறுத்தப்படுவார்கள்.  அவ்வமயம் உலகில் அவர்களுக் கிடையில் நிகழ்ந்த அநீதிகளுக்காக சிலரிடமிருந்து சிலருக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தூய்மைப் படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு சுவர்க்கத்தில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும். யாருடைய கையில் முஹம்மதுவின் ஆத்தமா இருக்கின்றதோ அவனின் மீது ஆணையாக, உலகத்தில்  தங்களின் இல்லங்களின் வழியை அவர்கள் தெரிந்து கொள்வது போன்று சுவர்க்கதில் தங்களின் இல்லம் இருக்கும் இடத்தை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.” என்று ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரீ) மேலும் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது,   
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: "أتدرون من المفلس؟" قالوا: المفلس فينا من لا درهم له ولا متاع فقال:" إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة، ويأتي وقد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا و ضرب هذا فيعطى هذا من حسناته، وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضي ما عليه أُخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار".(رواه مسلم)
   “உங்களுக்கு ஓட்டாண்டி யார் என்று தெரியுமா?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு தேழர்கள் “நம்மிடத்தில் ஓட்டாண்டி என்பவர், பணம், பொருள் இல்லாதவர்தான்”, என்றனர். அதற்கு நபியவர்கள் “கியாமத்து நாளில் ஒருவன் தொழுகை, நோன்பு, ஸகாத்துகளுடன் வருவான். அப்பொழுது இன்னாருவன் வந்து இவன் இன்னாரைத் திட்டினான், இன்னாரை பற்றி அவதூறு சொன்னான், இன்னாரின் பணத்தை சாப்பிட்டான், இன்னாரின் இரத்தத்தை சிந்தினான், இன்னாரை அடித்தான் என்று முறையிடுவான். அப்பொழுது குறிப்பிட்டவர்களுக்கு அவனின் நன்மைகளில் இருந்து எடுத்துக் கொடுக்கப்படும். பின்னர் அவனுக்கு எதிரான தீர்ப்புக்கள் நிறைவு பெறு முன்னர் அவனின் நனமைகள் தீர்ந்து விட்டால். குறிப்பிட்டவர்களிடமிருந்து அவர்களின் குற்றம், குறைகள் எடுக்கப்பட்டு அவனின் மீது எறியப்படும், பின்னர் அவன் நரகில் எறியப்படுவான். அவன்தான் ஓட்டாண்டி.” என ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள், என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
    பின்னர் சுவர்க்க வாசிகள் சுவர்க்கத்திலும், நரக வாசிகள் நரகிலும் பிரவேசிப்பார்கள். அவர்களுடன் அல்லாஹவின் நாட்டத்திலுள்ள பாவிகளும் பெரும் பாவிகளும் நரகில் பிரவேசிப்பார்கள். நரவாசிகளின் நிலையைப் பற்றி பின் வரும் நபி மொழி இவ்வாறு இயம்புகிறது.   
عن أبي سعيد قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((أما أهل النار الذين هم أهلها فإنهم لا يموتون فيها ولا يحيون، ولكن ناس أصابتهم النار بذنوبهم (أو قال: بخطاياهم) فأماتهم الله إماتة، حتى إذا كانوا فحماً، أذن بالشفاعة فجيء بهم ضبائر ضبائر، فبثوا على أنهار الجنة، ثم قيل: يا أهل الجنة أفيضوا عليهم، فينبتون نبات الحبة تكون في حميل السيل (رواه مسلم)
   
     “நரக வாசிகள் நரகில் சாகவும் மாட்டார்கள் வாழவும் மாட்டாரகள். எனினும் பாவத்தின் காரணமாக நரக நெருப்பு தீண்டிய சில மக்களை அல்லாஹ் மரணிக்கச் செய்வான். அவர்கள் கரியாக மாறியதும், அவர்களுக்காக ஷபாஅத் செய்வதற்காக அனுமதி வழங்கப்படும். பின்னர் அவர்கள் கட்டுக் கட்டாக எடுத்து வரப்பட்டு சுவர்க்கத்தின் நதிகளில் பரத்தப்படுவார்கள். பின்னர் “அவர்களின் மீது தண்ணீரைக் கொட்டுங்கள்” என்று சுவர்க்க வாசிகளிடம் கூறப்படும். அப்போதவர்கள் வெள்ளத்தின் மீதுள்ள விதைகள் முளைப்பது போன்று வளர ஆரம்பிப்பார்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று அபூ ஸஈதுல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
--------------------------------------------------


ஷபாஅத்
    நபியவர்களின் ஷபாஅத்துக்குப் பின் முஃமின்களான  பாவிகள் நரகிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதனை, நபி மொழிகள் உறுதி செய்கின்றன.
عن عمران بن حصين عن النبي صلى الله عليه وسلم قال ليخرجن قوم من أمتي من النار
 بشفاعتي يسمون الجهنميون قال أبو عيسى هذا حديث حسن صحيح وأبو رجاء العطاردي اسمه عمران بن تيم ويقال ابن ملحان (رواه الترمذي )
   “நிச்சயமாக எனது ஷபாஅத்தின் காரணமாக, நரகிலிருந்து என்னுடைய உம்மத்தில் இருந்து  ஒரு சமூகம் வெளியேறும். அவர்கள் ‘ஜஹன்னமீ’ கள்- நரகில் இருந்தவர்கள், என அழைக்கப்படுவர்” என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என இம்ரான் இப்னு ஹஸீன் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(துர்மிதீ). மேலும் இன்னொரு நபி மொழி இவ்வாரு கூறுகிறது,
“ شفاعتي لأهل الكبائر من أمتي”
   “எனது சமூகத்தின் பெரும் பாவிகளுக்கு என்னுடைய ஷபாஅத்து உண்டு” என்று நபியவர்கள் கூறினார்கள்.
     ஏனைய பாவிகளான முஃமின்ளுக்காக, முஃமினான நல்லடியார்களும் ஷபாஅத் செய்வார்கள், என்பதை பின் வரும் ஹதீஸ் எடுத்துரைக்கின்றது.
َ
 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ  قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم إ ذَا خَلَصَ الْمُؤْمِنُونَ  مِنَ النَّارِ وَأَمِنُوا ، فَمَا مُجَادَلَةُ أَحَدِكُمْ لِصَاحِبِهِ فِي الْحَقِّ يَكُونُ لَهُ عَلَيْهِ فِي الدُّنْيَا بِأَشَدَّ مِنْ مُجَادَلَةِ الْمُؤْمِنِينَ لِرَبِّهِمْ فِي إِخْوَانِهِمُ الَّذِينَ أُدْخِلُوا النَّارَ ، قَالَ : يَقُولُونَ : رَبَّنَا ، إِخْوَانُنَا كَانُوا يُصَلُّونَ مَعَنَا ، وَيَصُومُونَ مَعَنَا ، فَأَدْخَلْتَهُمُ النَّارَ ، قَالَ : فَيَقُولُ : " اذْهَبُوا فَأَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ مِنْهُمْ " ، فَيَأْتُونَهُمْ فَيَعْرِفُونَهُمْ بِصُوَرِهِمْ ، لا تَأْكُلُ النَّارُ صُوَرَهُمْ ، فَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ النَّارُ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ ، وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ إِلَى كَفَّيْهِ ، فَيُخْرِجُونَ ، فَيَقُولُونَ : رَبَّنَا قَدْ أَخْرَجْنَا مَنْ أَمَرْتَنَا ، قَالَ : ثُمَّ يَقُولُ : " أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ دِينَارٍ مِنَ الإِيمَانِ ، ثُمَّ مَنْ كَانَ فِي قَلْبِهِ وَزْنُ نِصْفِ دِينَارٍ " ، حَتَّى يَقُولَ : " أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ " ، قَالَ أَبُو سَعِيدٍ : فَمَنْ لَمْ يُصَدِّقْ بِهَذَا الْحَدِيثِ فَلْيَقْرَأْ هَذِهِ الآيَةَ : إِنَّ اللَّهَ لا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا سورة النساء آية 40 ، قَالَ : فَيَقُولُونَ : رَبَّنَا قَدْ أَخْرَجْنَا مَنْ أَمَرْتَنَا فَلَمْ يَبْقَ فِي النَّارِ أَحَدٌ فِيهِ خَيْرٌ ، قَالَ : ثُمَّ يَقُولُ اللَّهُ : شَفَعَتِ الْمَلائِكَةُ ، وَشَفَعَتِ الأَنْبِيَاءُ ، وَشَفَعَ الْمُؤْمِنُونَ ، وَبَقِيَ أَرْحَمُ الرَّاحِمِينَ ، قَالَ : فَيَقْبِضُ قَبْضَةً مِنَ النَّارِ ، أَوْ قَالَ : قَبْضَتَيْنِ نَاسًا لَمْ يَعْمَلُوا لِلَّهِ خَيْرًا قَطُّ ، قَدِ احْتَرَقُوا حَتَّى صَارُوا حُمَمًا ، قَالَ : فَيُؤْتَى بِهِمْ إِلَى مَاءٍ يُقَالُ لَهُ : الْحَيَاةُ ، فَيُصَبُّ عَلَيْهِمْ ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ ، قَالَ : فَيَخْرُجُونَ مِنْ أَجْسَادِهِمْ مِثْلَ اللُّؤْلُؤِ ، وَفِي أَعْنَاقِهِمُ الْخَاتَمُ عُتَقَاءُ اللَّهِ ، قَالَ : فَيُقَالُ لَهُمْ : ادْخُلُوا الْجَنَّةَ ، فَمَا تَمَنَّيْتُمْ وَرَأَيْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ لَكُمْ ، قَالَ : فَيَقُولُونَ : رَبَّنَا أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ ، قَالَ : فَيَقُولُ : فَإِنَّ لَكُمْ عِنْدِي أَفْضَلَ مِنْهُ ، فَيَقُولُونَ : رَبَّنَا وَمَا أَفْضَلُ مِنْ ذَلِكَ ؟ فَيَقُولُ : رِضَائِي عَنْكُمْ ، فَلا أَسْخَطُ عَلَيْكُمْ أَبَدًا " . (رواه ابن ماجة(   
            
  “முஃமின்கள் நரகிலிருந்து தப்பித்துப் பூரண அமைதியை அடைந்த பின்னர், அவர்கள் நரகிலுள்ள தங்களின் சகோதரர்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவார்கள். அது உலகில் ஒருவனிடமிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு உரிமைக்காக, தங்களின் இறைவனிடம் அவர்கள் வாதிடுவதை விடவும் கடுமையாக இருக்கும். அப்பொழுது அவர்கள், “நமது இறைவனே! நமது சகோதரர்கள் நம்முடன் தொழுதார்கள், நம்முடன் நோன்பு நோற்றார்கள். அவர்களை நீ நரகில் தள்ளியிருக்கின்றாய்”, என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் “அவர்களில் யாரை உங்களுக்குத் தெரியுமோ அவரிடம் சென்று அவரை வெளியே எடுங்கள்” என்பான். எனவே அவர்கள், அவர்களிடம் செல்வார்கள். அவர்களின் முகத்தோற்றத்தை நெருப்பு சாப்பிடாது, ஆகையால் அவர்களிடம் செல்லும் அவர்கள், அவர்களை இனம் கண்டு கொள்வார்கள்.
அவர்கள் சிலரின், பாதிக் கெண்டைக் கால் வரையிலும், இன்னும் சிலரின் மணிக்கட்டு வரையிலும், நெருப்பு தின்று இருக்கும். அவர்களை எல்லாம், அவர்கள் வெளியேற்றி விடுவார்கள். பின்னர் “எங்கள் இரட்சகனே! நீ யாரை எல்லாம் அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டாயோ, அவர்களை எல்லாம் நாம் அப்புறப்படுத்தி விட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள். அதன் பின் யாருடைய மனதில் ஒரு தங்கக் காசு எடை ஈமான் இருக்கின்றதோ அவர்களையும், பின்னர் யாருடைய மனதில் அரை தங்க காசு எடை ஈமான் இருக்கின்றதோ அவர்களையும், ஈற்றில் யாருடைய மனதில் அணுவளவு ஈமான் ஈமான் இருக்கின்றதோ அவர்களையும் அப்புறப்படுத்தி விடுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான். (இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூ ஸஈத் (ரழி) அவர்கள் “யாருக்கேனும் இந்த செய்தியை நம்ப முடியாதென்றிருந்தால், அவர் ‘அந்நிஸா’ அத்தியாயம் குறிப்பிடும் “நிச்சயமாக அல்லாஹ் ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும் ஒரு நன்மை இருந்தால் அதனை இரட்டிப்பாக்கித் தன் அருளால் பின்னும் அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கின்றான்” என்ற வசனத்தை ஓதிப் பார்க்கட்டும்” என்று குறிப்பிட்டார்கள்.) பின்னர் அவர்களை, அவர்கள் வெளியேற்றிய பின், அவர்கள் “நம் இறைவனே! யாரை எல்லாம் அப்புறப்படுத்தும்படி நீ உத்தரவிட்டாயோ, அவர்களை எல்லாம் நாம் அப்புறப்படுத்தி விட்டோம். எனவே ஒரு நன்மையேனும் உள்ள எந்த மனிதனும் நரகில் இல்லை” என்பார்கள்.
    அப்பொழுது “மலகுகளும் ஷபாஅத் செய்து விட்டனர், நபிமார்களும் ஷபாஅத் செய்து விட்டனர், முஃமின்களும் ஷபாஅத் செய்து விட்டார்கள். எஞ்சி இருப்பது அருளாளர்களில் எல்லாம் அருளாளனான, மகா அருளாளன் ஒருவன்தான்” என்று அல்லாஹ் கூறுவான். பின்னர் நரகிலிருந்து ஒரு நன்மையும் செய்யாத, நெருப்புக்கு முற்றிலும் இரையாகி கரிக் கட்டைகளாக மாறிப்போன மனிதர்களிலிருந்து ஒரு பிடி அல்லது இரண்டு பிடி மனிதர்களை பிடித்தெடுப்பான். பின்னர் அவர்கள் ‘மாஉல் ஹயாத்’ ஜீவ நீர் எனும் தண்ணீரின் பால் எடுத்து வரப்படுவர். அவர்களின் மேல் அந்தத் தண்ணீர் ஊற்றப்படும். அப்பொழுது அவர்கள், தண்ணீரின் மேல் முளைக்கும் விதை போல வளர்ந்து விடுவார்கள். அவர்களின் மேனியில் முத்துக்கள் போன்ற அடையாளம் இருக்கும்.   மேலும் அவர்களின் கழுத்தில். ‘அல்லாஹ்வின் விடுதலையைப் பெற்றவர்கள்’ எனும் மோதிரமும் இருக்கும் . பின்னர் அவர்களிடம் “நீங்கள் சுவர்க்கத்தில் நுழையுங்கள். அங்கு எதன் மீது உங்களுக்கு ஆசையோ, மற்றும் எதனை நீங்கள் காண்கின்றீர்களோ அதுவெல்லாம் உங்களுக்கு தான்” என்று அவர்களிடம் அல்லாஹ் கூறுவான். அதற்கு அவர்கள் “நம் இறைவனே! நீ உலகத்தாரில் யாருக்கும் வழங்காத வைகளை எல்லாம் நமக்குத் தந்திருக்கின்றாய்” என்று கூறுவர். அதற்கு அல்லாஹ் “உங்களுக்காக என்னிடம் இதனை விடவும் சிறந்ததுவும் உண்டு” என்று  கூறுவான். அப்போதவர்கள் “நம் இறைவனே! இதனை விடவும் சிறந்தது ஏது?” என்பார்கள். அதற்கு அல்லாஹ் “அதுதான் உங்களின் மீதான எனது திருப்தி, எனவே இனி ஒரு போதும் உங்களின் மீது நான் கோபம் கொள்ள மாட்டேன்” என்று கூறுவான், என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா).
     மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்,
      ومنهم المجازى حتى ينجي ، حتى إذا فرغ الله من القضاء بين العباد ، وأراد أن   أن يخرج برحمته من أراد من أهل النار ، أمر الملائكة أن يخرجوا من النار من كان لا يشرك بالله شيئا ، ممن أراد الله أن يرحمه ، ممن يشهد أن لا إله إلا الله ، فيعرفونهم في النار بأثر السجود ، تأكل النار ابن آدم إلا أثر السجود ، حرم الله على النار أن تأكل أثر السجود ، فيخرجون من النار قد امتحشوا ، فيصب عليهم ماء الحياة ، فينبتون تحته كما تنبت الحبة في حميل السيل ،(رواه مسلم)

   “அவர்களில் பாலத்தைத் தாண்டி தப்பித்துக் கொண்டவர்களும் இருப்பார்கள். அல்லாஹ் அடியார்களின் மத்தியில் தீர்ப்புக்கள் வழங்கி முடிந்ததும் தன் அருளால் நரகிலிருந்து தான் விரும்பியவரகளை வெளியேற்ற அவன் விரும்புவான், அப்போதவன் தன் மீது எதனையும் இணையாக்காத, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லை என்று சாட்சி பகர்ந்தோரில், தான் கருணை காட்ட விரும்புகின்றவர்களை நரகிலிருந்து வெளியேற்று மாறு மலக்குகளுக்கு உத்தரவிடுவான். மனிதனின் ஸுஜூதின் அடையாளத்தை நெருப்பு தீண்டாது என்றபடியால் மலக்குகள் அவர்களை இனங்கண்டு நரகிலிருந்து வெளியே எடுப்பார்கள். அப்பொழுது  அவர்களின் உடல் கருகியிருக்கும். எனவே அவர்களின் மீது ‘மாஉல் ஹயாத்’ என்ற ஜீவ நீர் ஊற்றப்படும். அபோதவர்கள் வௌளத்தின் மீதுள்ள விதைகள் முளைப்பது போன்று வளர்ந்து விடுவார்கள். (முஸ்லிம்)

 إن الله تعالى خلق يوم خلق السماوات والأرض مائة رحمة كل رحمة طباق ما بين السماء إلى الأرض فجعل منها في الأرض رحمة فبها تعطف الوالدة على ولدها والوحش والطير بعضها على بعض فإذا كان يوم القيامة، أكملها بهذه الرحمة .(رواه مسلم)
     “அல்லாஹ் வானத்தையும் பூமியையும் படைத்த நாளில் நூறு ‘ரஹ்மத்தை’- கருணையை உண்டாக்கினான். கருணை ஒவ்வொன்றும் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான விஸ்தீரனம் கொண்டதாகும். அதில் ஒரு கருணையை அவன் பூமியில் வைத்தான். அதன் காரணமாகவே தாய் தன் பிள்ளையின் மீதும், மிருகங்களும் பறவைகளும் ஒன்றோடொன்று இரக்கமாக இருக்கின்றன. கியாமத்து நாளில் இதனுடன் சேர்த்து எல்லா கருணையையும் அல்லாஹ் பரிபூரணப்படத்தி விடுவான் (முஸ்லிம்).
     சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும் நரக வாசிகள் நரகத்திற்கும் பிரவேசித்த பின்னர்  நன்மைகளும் பாவங்களும் சமமாகவுள்ள, சிகரங்களில் இருப்பவர்கள் மாத்திரம் எஞ்சியிருப்பார்கள். அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய ஆசைப்பட்டவர்களாக சுவர்க்கவாசிகளைப் பார்ப்பார்கள். பின்னர் “நமது இறைவனே! நம்மை அநியாயக் காரர்களுடன் ஆக்கிவிடாதே” என்று அவர்கள் கூறுவார்கள். பின்னர் நரகவாசிகள், சிகரங்களில் இருப்பவர்களைப் பார்த்து,
مَا أَغْنَىٰ عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُ‌ونَ ﴿٤٨﴾ أَهَـٰؤُلَاءِ الَّذِينَ أَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ اللَّـهُ بِرَ‌حْمَةٍ ۚ ادْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَا أَنتُمْ تَحْزَنُونَ ﴿٤٩﴾    

“நீங்கள் சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவைகளும், நீங்கள் எவைகளைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவைகளும் உங்களுக்குப் பயனளிக்கவில்லையே” என்று கூறுவார்கள் (7\48) “அல்லாஹ் அருள் புரியமாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள், இவர்கள் அல்லவா? பின்னர் சுவனவாசிகளை நோக்கி “நீங்கள் சுவனபதி சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் துக்கிக்கவும் மாட்டீர்கள் என்றும்” கூறுவார்கள் (7\49)
   நபியவர்கள் சுவர்க்கவாசிகளினதும் நரகவாசிகளினதும் பண்புகளைப் பற்றி விபரிக்கும் போது பின் வருமாறு கூறினார்கள்,

أن رسول الله صلى الله عليه وسلم قال ذات يوم وأهل الجنة ثلاثة ذو سلطان مقسط متصدق موفق’ ورجل رحيم رقيق القلب لكل ذي قربى ومسلم’ وعفيف متعفف ذو عيال’ قال وأهل النار خمسة الضعيف الذي لا زبر له’ الذين هم فيكم تبعا لا يبتغون أهلا ولا مالا’ والخائن الذي لا يخفى له طمع وإن دق إلا خانه’ ورجل لا يصبح ولا يمسي إلا وهو يخادعك عن أهلك ومالك وذكر البخل أو الكذب’ والشنظير الفحاش  (رواه مسلم)
    சுவர்க்கவாசிகள் மூன்று வகையினர் என்று நபியவர்கள் ஒரு நாள் கூறினார்கள். ஒருவர் நீதியான, தர்மம் செய்கின்ற, காரியத்தைச் சரியாகச் செய்யும் வாய்ப்பைப் பெற்ற அதிகாரமுள்ள மனிதன். இன்னொருவர் எல்லா உறவினர் மீதும், முஸ்லிம்கள் மீதும் இரக்கமுல்ல, இலகிய மனம் கொண்ட மனிதன். மற்றொருவர் பத்தினித் தன்மையும், கஷ்டங்களைப் பிரகடணப் படுத்தாத, பேனிப்புமுள்ள குடும்பஸ்தன். மேலும் நரகவாசிகள் ஐந்து வகையினராவர். ஒருவன், பாவ காரியத்திலிருந்து தன்னைத் தடுத்துக் கொள்ள திராணியற்ற பலவீனன், இரண்டாமவன், தங்களின் ஆட்சி அதிகாரங்களின் மீது பிடிப்புள்ளவர்கள், இவர்கள் குடும்ப வாழ்க்கையின் மீதும், ஹலாலான பொருலீட்டலின் மீதும் விருப்பம் இல்லாதவர்கள். மூன்றாமவர் நம்பிக்தை  துரோகம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள்.  சிரமமான காரியமாக இருந்தாலும் அதிலும் துரோகம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள், அவர்கள். நான்காமவர் உங்களின் பொருள் மற்றும் குடும்ப விடயத்தில் இரவு பகலாக சூழ்ச்சி செய்பவன். மேலும் உலோபியும், பொய்யனும். ஐந்தாமவன் ஆபாச கதை பேசுபவன்” என்று நபியவர்கள் நவின்றார்கள்.(முஸலிம்)  
     நபியவர்களின் இன்னொரு ஹதீஸ் இப்படி இயம்புகிறது,
أهل الجنة عشرون ومائة صف، ثمانون منها من هذه الأمة، وأربعون من سائر الأمم (رواه ابن ماجة)
       “சுவர்க்கவாசிகளின் அணிகள் நூற்றி இருபதாகும். அதில் என்பது அணிகள், இந்த உம்மத்தைச் சார்ந்ததவை. ஏனைய நாற்பது அணிகளும், மற்ற எல்லா சமூகங்களையும் சார்ந்த்தவைளாகும் ” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா).
                     
நரகத்தின் வர்ணனையும், அதன் வேதனையும்    
     அல்லாஹ் தன் வேதத்தின் மூலமும், ரஸூல் (ஸல்) அவர்கள் தன் வாக்கின் மூலமும் நரகத்தைப் பற்றி விபரித்துள்ளனர். முதலில் அது பற்றிய அல் குர்ஆன் வசனங்கள் சிலதைக் கவணிப்போம். அவை வருமாறு,
وَمَن فِي الْأَرْ‌ضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ ﴿١٤﴾ كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ ﴿١٥﴾ نَزَّاعَةً لِّلشَّوَىٰ ﴿المعارج/١٦﴾
     “இன்னும் பூமியிலுள்ள அனைத்தையும் கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள குற்றவாளி விரும்புவான். ஆனால் அது ஆகக் கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பாகும். அது தோல்களை எரித்து விடும்”(70\14-15-16) அதாவது அந்த நெருப்பு தலையின் தோலைக் கழற்றி விடும் என்பது இதன் கருத்தாகும்.
وَمَا أَدْرَ‌اكَ مَا سَقَرُ‌ ﴿٢٧﴾ لَا تُبْقِي وَلَا تَذَرُ‌ ﴿٢٨﴾ لَوَّاحَةٌ لِّلْبَشَرِ‌ ﴿المدثر/٢٩﴾
     “அந்த நரகம் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? அது எவரையும் மிச்சம் வைக்காது, யாரையும் விடவும் மாட்டாது. அது மனிதனின் கோலத்தையே மாற்றி விடும்” (74\27-28-29).
     மேலும் நரவாசி கடுமையாகப் பிடிக்கப்படுவான் என்பதைக் குறிப்பிடும் போது அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
خُذُوهُ فَغُلُّوهُ ﴿٣٠﴾ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ﴿٣١﴾ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْ‌عُهَا سَبْعُونَ ذِرَ‌اعًا فَاسْلُكُوهُ ﴿الحاقة/٣٢﴾
                                                                                                “அவனைப் பிடியுங்கள். அவனுக்கு விலங்கிடுங்கள். பின்னர் அவனை நரகத்தில் தள்ளுங்கள். மேலும் எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” என்று நாம் கூறுவோம். (69\30-31-32)
     “உலகிலுல்ல சகல இரும்பையும் ஒன்று சேர்த்தால் அது அந்த சங்கிலியின் ஒரு வலயத்திற்குத்தான் போதுமானதாக இருக்கும்” என்று அதனைப் பற்றி முஹம்மத் இப்னு அல்முன்கதிர் அவர்கள், குறிப்பிடுகின்றார்கள். மேலும் “ அதன் ஒரு முலம் எழுபது பாகமாகும். அதன் நீலம் கூபா நாட்டுக்கும், மக்காவுக்கும் இடையே உள்ள தூரமாகும்.” என்று நௌப் என்பார் குறிப்பிடுகின்றார். மேலும் “நரகவாசியின் பின் துவாரத்தின் மூலம் அது செலுத்தப்பட்டு அவனின் வாயின் வழியாக வெளிக் கொண்டு வரப்படும், எனும் ஒரு செய்தி நமக்குக் கிடைத்துள்ளது” என்று ஸுப்யானுஸ் ஸௌரீ அவர்கள் கூறுகின்றார்கள். மேலும் பின் வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.      
    سَأُرْ‌هِقُهُ صَعُودًا ﴿المدثر/١٧﴾
“அதி சீக்கிரத்தில் அவனை ஒரு கஷ்டமான சிகரத்தில் ஏற்றி விடுவேன்.” (74\17)
    “நரகத்தில் صعود‘ ஸஊத்’ என்ற பெயரில் ஒரு மலை உண்டு. அதன் மீது ஒரு காபிர் ஏறுவதற்கு முன் நாற்பது ஆண்டுகள் வரை அவன் அதபை பார்த்துக் கொண்டிருப்பான்” என்று ஷிபா அல் இஸ்பஹீ என்பார் கூறுகின்றார். மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,
فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ ۖ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ﴿مريم/٥٩﴾
    “அவர்களுக்குப் பின்னர் அவர்களின் இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை வீனாக்கி விட்டவர்கள். அவர்கள் غَي என்ற நரகையே- தீமையையே சந்திப்பார்கள்(19\59)  
      غَي’ என்பது நரகிலுல்ல சீழும் இரத்தமும் ஓடும் ஓர் ஓடையாகும். என்று அல் இஸ்கஹீ அவர்கள் கறிப்பிடுகிறார்கள்.
    மேலும் அல்லாஹ்வின் இந்த வசனத்தைக் கவணியுங்கள்.
إِنَّ الَّذِينَ كَفَرُ‌وا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارً‌ا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَ‌هَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ إِنَّ اللَّـهَ كَانَ عَزِيزًا حَكِيمًا ﴿النساء/٥٦﴾
    “எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல் கருகி விடும் போதெல்லாம் மற்றொரு புதிய தோலை மாற்றிக் கொண்டே இருப்போம்.(4\59)  
   தினமும் எழுபதாயிரம் தடவைகள் அவர்களின் தோலை நரக நெருப்பு கருகச் செய்யும், என்று ஹஸனுல் பஸரீ அவர்கள் கூறுகின்றார்கள்.
  மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்,
    فَالَّذِينَ كَفَرُ‌وا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّن نَّارٍ‌(الحج/19)
    “எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவரகளுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. (22\19)
     மேலும் அல்லாஹ் கூறுகிறான்.
 سَرَ‌ابِيلُهُم مِّن قَطِرَ‌انٍ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ النَّارُ‌ ﴿ابراهيم\٥٠﴾
     “அவர்களின் சட்டை தாரால் செய்யப்பட்டிருக்கும், அவர்களுடைய முகத்தைச் நெருப்பு பொசுக்கி விடும்”(14\50

    فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ ﴿٣٥﴾ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ ﴿الحاقة٣٦﴾     
 “ஆகவே இன்றைய தினம் அவனுக்கு இங்கு யாதொரு நன்பனும் இல்லை. சீழ் சலங்களைத் தவிர வேறு உணவும் இல்லை.(69\35-36)
           “நரக வாசிகளின் உடம்பிலிருந்து வடிந்து வரும் சீழே நரவசிகளுக்கு உணவாக அமையும்” என அல் ஹுரவீ அவர்கள்,  இந்த வசனத்திற்கு விளக்கம் தந்துள்ளார்கள். மேலும் அல்லாஹ் கூறுகிறான்,  
 هَـٰذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقٌ ﴿٥٧﴾
 “இதோ கொதித்த நீரும், சீழ் ஜலமும், அதனை அவர்கள் சுவைத்துப் பார்க்கட்டும் (38\57) “இவ்வசனத்திலுள்ளغَساق  எனும் சொல் நரகவாசிகளின் துர் நாற்றமுள்ள கனமான சீழைக் குறிக்கும்” என அபூ ரஸீன் என்பார் குறிப்பிடுகின்றார்.
     “ஐந்து விடயங்ளைப் பற்றி நரகவாசிகள் பிராத்தனை செய்வார்கள். அவற்றில் நான்கு வேண்டுகோலுக்கு அல்லாஹ் விடையளித்த பின், ஐந்தாவது வேண்டுகோலுக்கும் அவன் விடையளிப்பான். அதன் பின்னர் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்”. என்று கஃப் அல்குரழீ அவர்கள் கூறுகிறார்கள், என பைஹகீ அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களின் வேண்டுக்கோலும் அதற்கு அல்லாஹ் அளித்த பதிலும் வருமாறு,
قَالُوا رَ‌بَّنَا أَمَتَّنَا اثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَ‌فْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَىٰ خُرُ‌وجٍ مِّن سَبِيلٍ ﴿١١﴾قَالُوا رَ‌بَّنَا أَمَتَّنَا اثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَ‌فْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَىٰ خُرُ‌وجٍ مِّن سَبِيلٍ ﴿ غافر/١١﴾
“எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய். இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டோம். ஆகவே (இதிலிருந்து வெளியேற ஏதும் வழி உண்டா” என்று அவர்கள் கேட்பார்கள்.(40\11)
     இதற்கு இவ்வாறு அல்லாஹ் விடையளிக்கின்றான்,
ذَٰلِكُم بِأَنَّهُ إِذَا دُعِيَ اللَّـهُ وَحْدَهُ كَفَرْ‌تُمْ ۖ وَإِن يُشْرَ‌كْ بِهِ تُؤْمِنُوا ۚ فَالْحُكْمُ لِلَّـهِ الْعَلِيِّ الْكَبِيرِ‌ ﴿غافر/١٢﴾
     “இதுவாகிறது உங்களுக்கு அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறப்பட்ட போது அதனை நீங்கள் மறுத்தீர்கள், அவனுக்கு இணை உண்டு என்று எவரும் கூறினால் அதனை நீங்கள் நம்பினீர்கள்! என்பதனால் தான். ஆதலால் தீர்ப்பு மிகப் பெரியவனும் மேலானவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.(40\12)  
    பின்னர் அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்,
رَ‌بَّنَا أَبْصَرْ‌نَا وَسَمِعْنَا فَارْ‌جِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ ﴿السجدة/١٢﴾
    “எங்கள் இறைவனே! எங்களுடைய கண்களும், காதுகளும் திறந்து கொண்டன. எங்களை திரும்பவும் அனுப்பி வை. நிச்சயமாக நாங்கள்  உறுதியாக (இந்நாளை) நம்புகிறோம் என்று அவர்கள் கூறுவார்கள்” (32\12)  
     அவர்களின் இந்த வேண்டுகோளுக்கு அல்லாஹ் இவ்வாறு விடையளிக்கின்றான்,
فَذُوقُوا بِمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَـٰذَا إِنَّا نَسِينَاكُمْ ۖ وَذُوقُوا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿١٤﴾فَذُوقُوا بِمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَـٰذَا إِنَّا نَسِينَاكُمْ ۖ وَذُوقُوا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿السجدة/١٤﴾
    “ஆகவே சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்து விட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்”(32\14)
    பின்னர் நரகவாசிகள் இவ்வாறு கூறுவார்கள்,
رَ‌بَّنَا أَخِّرْ‌نَا إِلَىٰ أَجَلٍ قَرِ‌يبٍ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّ‌سُلَ ۗ(ابراهيم)
     “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்ப தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு செவி கொடுத்து தூதரைப் பின்பற்றி நடப்போம்” என்று கூறுவார்கள்”(14\44)
      அதற்கு அல்லாஹ் இவ்வாறு விடையளிப்பான்,
أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍ ﴿ابراهيم/٤٤﴾
 
     “இதற்கு முன்னர் நீங்கள் உங்களுக்குக் அழிவே இல்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?” என்று கூறுவான்(14\44) அதற்கு அவர்கள்,
                  
وَهُمْ يَصْطَرِ‌خُونَ فِيهَا رَ‌بَّنَا أَخْرِ‌جْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ‌ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ(فاطر\37)
      “எங்கள் இறைவனே! எங்களை வெளியேற்றிவிடு. நாங்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்” என்று ஓலமிடுவார்கள்” (35\37)
                                                                                     அதற்கு அல்லாஹ்,
أَوَلَمْ نُعَمِّرْ‌كُم مَّا يَتَذَكَّرُ‌ فِيهِ مَن تَذَكَّرَ‌ وَجَاءَكُمُ النَّذِيرُ‌ ۖ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ‌ ﴿٣٧/35)
       “நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சிப் பெறுவதற்குப் போதுமான காலம் வரையில் நாம் உங்களை உயிரோடு விட்டு வைக்கவில்லையா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். ஆதலால் நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள், அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை” என்று கூறுவான்.(35\37)
 பின்னர் நரகவாசிகள்,
رَ‌بَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِّينَ ﴿المؤمنون/108﴾
       “எங்கள் இறைவனே! எங்களுடைய துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது, ஆதலால் நாங்கள் தவறான வழியில் சென்றுவிட்டோம்” என்று கூறுவார்கள். (23\108)
 அதற்கு அல்லாஹ்,
قَالَ اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ ﴿المؤمنون/١٠٨﴾
       “அதிலேயே சிறுமைப்பட்டுக் கிடவுங்கள். நீங்கள் என்னுடன் பேசாதீர்கள்” என்று கூறுவான் (23\108)        
     எனவே அதன் பின் அவர்கள் அறவே பேச மாட்டார்கள். எனினும் நரகத்தின் காவலாலர்களிடம் பாதுகாப்புத் தேடுவார்கள். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
 وَقَالَ الَّذِينَ فِي النَّارِ‌ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوا رَ‌بَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ ﴿غافر/٤٩﴾
    ”பின்னர் நரகத்திலுள்ளவர்கள் நரகத்தின் காவலாலர்களை நோக்கி “வேதனையை ஒரு நாளேனும் எங்களுக்கு இலேசாக்குமாறு உங்கள் இறைவனிடம் கேளுங்கள்” எனக்கூறுவார்கள்” (40\49)
              அதற்கு அந்தக் காவலாலர்கள்,
قَالُوا أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُ‌سُلُكُم بِالْبَيِّنَاتِ ۖ قَالُوا بَلَىٰ ۚ قَالُوا فَادْعُوا ۗ وَمَا دُعَاءُ الْكَافِرِ‌ينَ إِلَّا فِي ضَلَالٍ ﴿٥٠﴾
      “உங்களிடம் வந்த தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் (நரகவாசிகள்) “ஆம் மெய்தான்” என்று கூறுவார்கள். அதற்கவர்கள் (காவலாளர்கள்) ”அவ்வாறாயின் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை யாதொரு பயனும் அளிக்காது” (40\50)
     எனவே நரகத்தின் காவலாலர்களிடமிருந்தும் அவர்கள் நம்பிக்கையிழந்த பின்னர், அவர்கள் மாலிக் (அலை) அவர்களை அழைப்பார்கள். அவர் நரகின் நடுவில் தன்னுயை ஆசனத்தில் இருப்பார். அவர் பக்கத்தில் உள்ளதைப் பார்ப்பது போலவே நரகத்தின் கடைசி எல்லையில் இருப்பவைகளையும் பார்த்துக் கொணடிருப்பார். அங்கேயுள்ள பாலங்களின் மேலால் மலக்குகள் சென்று கொண்டிருப்பார்கள். அவ்வமயம் நரகவாசிகள்,
يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَ‌بُّكَ ۖ (الزخرف/77)
    “மாலிக்கே! உங்களது இறைவன் எங்களுடைய காரியத்தை முடித்து விடவும்” என்று கூறுவார்கள். (43\77)
    இவ்வாறு அவர்கள் தங்களுக்கு மரணம் கிடைத்துவிட வேண்டும் என, என்பது ஆண்டுகள் வரை வேண்டிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நரகத்தின் அதிபதி மாலிக்கு (அலை) அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள். ஒரு ஆண்டு என்பது, முன்னூற்றி அறுபது நாட்களையும், ஒரு மாதம் என்பது முப்பது நாட்களையும் கொண்டதாகும். எனினும் கியாமத்து நாளில் ஒரு நாள் என்பது, ஆயிரம் மாதங்களுக்குச் சமமாகும். இதனை இறை வசனம் இப்படிக் கூறுகிறது,
     
    وَإِنَّ يَوْمًا عِندَ رَ‌بِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ ﴿الحج/٤٧﴾
    “நிச்சயமாக உங்களது இறைனிடத்தில், ஒரு நாள் நீங்கள் எண்ணும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமாகும்” (22\47)    
    இத்தனை நீண்ட காலம் வரையில் மாலிக் (அலை) அவர்களிடம் நரகவாசிகள் முறையிட்ட பின்னர் அவர் அவர்களைப் பார்த்து,
قَالَ إِنَّكُم مَّاكِثُونَ ﴿الزخرف/٧٧﴾      
       “நிச்சயமாக நீங்கள் இதே நிலையில் இருக்க வேண்டியதுதான்” என்று கூறுவார்.”(43\77)
     இப்படி மாலிக் (அலை) அவர்கள் சொல்வதைக் கேட்ட அவர்கள் நம்பிக்கையிழந்து விடுவார்கள். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர், “வணக்க வழிப்பாட்டில்  நல்ல மனிதர்கள் பொருமையுடன் இருந்தது போல நாமும் பொருமையாக இருப்போம்” என்று கூறுவர்கள். பின்னர் அவர்கள் தங்களின் நீண்ட பொருமைக்குப் பின் பதபதைத்துக் கொண்டு,
سَوَاءٌ عَلَيْنَا أَجَزِعْنَا أَمْ صَبَرْ‌نَا مَا لَنَا مِن مَّحِيصٍ ﴿ابراهيم/٢١﴾
    “நாங்கள் பதைபதைத்துத் துடிப்பதும் அல்லது சகித்துக் கொண்டு பொருமையாக இருப்பதும் ஒன்றாகவே இருக்கின்றது. தப்ப எங்களுக்கு யாதொரு வழியும் இல்லையே என்று புலம்புவார்கள்”(14\21)
    இவ்வாறு இவர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் போது இப்லீஸ் எழுந்து,
إِنَّ اللَّـهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِيَ عَلَيْكُم مِّن سُلْطَانٍ إِلَّا أَن دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي ۖ فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنفُسَكُم ۖ مَّا أَنَا بِمُصْرِ‌خِكُمْ وَمَا أَنتُم بِمُصْرِ‌خِيَّ ۖ إِنِّي كَفَرْ‌تُ بِمَا أَشْرَ‌كْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿ابراهيم/٢٢﴾
 “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்து இருந்தான். நானும் உங்களுக்கு வாக்களித்தேன். எனினும் நான் உங்களை வஞ்சித்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன். நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள். உங்களை நான் நிர்பந்திப்பதற்கு எனக்கு யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால் நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள். உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை இணை ஆக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன்” என்று கூறுவான்(14\22)
    எனவே அவனின் இந்தப் பேச்சைக் கேட்டதும் அவர்கள் தங்களின் மீதே கோபமடைவார்கள். அப்பொழுது அவர்களிடம்,
لَمَقْتُ اللَّـهِ أَكْبَرُ‌ مِن مَّقْتِكُمْ أَنفُسَكُمْ (غافر/10)
     “நீங்கள் உங்கள் ஆத்மாவை கோபித்ததைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்” என்று கூறப்படும்(40\10)
    நரகவாசிகள் அல்லாஹ்விடம் ஐந்து தடவைகள் மன்றாடியும், அவர்களின் மன்றாட்டத்தை அவன் ஏற்றுக் கொள்ளாத படியாலும், ஈற்றில் அவர்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்படுவதாலும், அவர்கள் தொடர்ந்தும் நரகில் இருக்க வேண்டிய அவல நிலை காரணமாகவும்,  அவர்களின் முகம் எப்படி மாறிவிடும் என்பதை, இறைவசனம் இப்படி குறிப்பிடுகின்றது,   
تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ‌ وَهُمْ فِيهَا كَالِحُونَ ﴿المؤمنون/١٠٤ ﴾
     “அவர்களுடைய முகங்களை நெருப்புப் பொசுக்கும். எனவே அவர்களுடைய முகம் விகாரமாக இருக்கும்” (23\104)

عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " تَشْوِيهِ النَّارِ، فَتُقَلِّصُ شَفَتَهُ الْعُلْيَا حَتَّى تَبْلُغَ وَسْطَ رَأْسِهِ ، وَتَسْتَرْخِي شَفَتُهُ السُّفْلَى حَتَّى تَضْرِبَ سُرَّتَهُ   وَ لِسُرَادِقِ النَّارِ أَرْبَعَةُ جُدُرٍ , كُثُفُ  كُلٍِّ جِدَارٍ   مَسِيرَةُ أَرْبَعِينَ سَنَةً " . " لَوْ أَنَّ دَلْوًا مِنْ غِسْلِين َأُهْرِيقَ فِي الدُّنْيَا، لَأَنْتَنَ أَهْلَ الدُّنْيَا " .
     மேலும் “நரகவாசியை நெருப்புப்  பொசுக்கி விடும். அதன் காரணமாக அவனின் மேல் உதடு அவனுடைய நடுத் தலை வரையும், அவனின் கீழ் உதடு அவனின் தொப்புள் வரையும் நீண்டு  விடும். மேலும் நரகத்தின் நெருப்பு நான்கு சுவர்கள் போன்று விசாலமானது. ஒவ்வொரு சுவரும் நாற்பது ஆண்டு பயணத் தூரம் கொண்டதாகும். நரகின் ஒரு வாளி சீழ் உலகில் கொட்டப்படுமானால் அது உலகிலிருக்கும் யாவரையும் நாறச் செய்திடும்” என்று நபியவர்கள் கூறினார்கள்.(திர்மிதீ)
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال إِنَّ لِجَهَنَّمَ سَبْعَةَ أَبْوَابٍ ، بَابٌ مِنْهَا لِمَنْ سَلَّ سَيْفَهُ عَلَى أُمَّتِي " أَوْ قَالَ : " عَلَى أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وقال صلى الله عليه وسلم : يؤتى بجهنم يوم القيامة لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملك يجرونها " .
      மேலும் “நரகத்திற்கு ஏழு வாயல்கள் உண்டு. அதில் ஒரு வாயல் எனது உம்மத்தினருக்கு எதிராக வாளை வெளியில் எடுத்தவனுக்குரியது” என்று நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) இன்னொரு ஹதீஸில் “மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும். அதில் எழுபது கடிவாளங்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றுடனும் இருக்கும் எழுபதாயிரம் மலக்குகள்   அதனை  இழுத்து வருவார்கள்” என்று நபியவர்கள் குறிப்பிடப்பிடார்கள்” (முஸ்லிம்)
    மேலும் நரகத்தின் பாதுகாவளர் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது, “அவர்கள் ஒருவரின் இரண்டு புயங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி, ஒரு வருட பயணத்தின் தூரமாகும். மேலும் அவரின் சம்மட்டியறை. எழுபதாயிரம் பேர்களை  நரகத்தின் அடியில் கொண்டு போய் தள்ளி விடும் அளவுக்கு, அவர் பலம் மிக்கவர்” என்று கூறினார்கள். மேலும்  “நெருப்பு சிவப்பாக மாறும் வரையில் ஆயிரம் வருடங்கள் எரிக்கப்படும். பின்னர் அது வெண்மையாகும் வரையில் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் எரிக்கப்படும். பின்னர் அது கடும் இருளாக மாறும் வரையில் மேலும் ஆயிரம் ஆண்டுகள் எரிக்கப்படும்” என்று அபூ ஹரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ناركم هذه التي توقدون جزء واحد من سبعين جزءا من حر جهنم قالوا والله إن كانت لكافية يا رسول الله قال فإنها فضلت بتسعة وستين جزءا كلهن مثل حرها(رواه مسلم)
    “மேலும் நீங்கள் எரிக்கும் உங்களின் இந்த நெருப்பு’ நரக சூட்டின் எழுபதில் ஒரு பாகமாகும்” என்றார்கள். அதற்கு “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக இது போதுமானதா?” என்றனர். அதற்கு நபியவர்கள் “அது தொண்ணூற்றி ஒன்பது பாகத்தால் பெருக்கப்படும், அவை ஒவ்வொன்றின் சூடும் அதன் முதல் சூடு போன்றே இருக்கும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்). மேலும் நபியவர்கள் கூறினார்கள்.
عن أنس بن مالك قال ، قال رسول الله صلى الله عليه وسلم : يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة فيصبغ في النار صبغة ثم يقال يا ابن آدم هل رأيت خيراً قط ؟ هل مر بك نعيم قط ؟ فيقول لا والله يا رب ..
ويؤتى بأشد الناس بؤساً في الدنيا من أهل الجنة فيصبغ صبغة في الجنة فيقال له يا ابن آدم هل رأيت بؤساً قط ؟ وهل مر بك شدة قط ؟ فيقول لا والله يا رب ما مر بي بؤس قط ولا رأيت شدة قط(رواه مسلم)
“உலகில் மிகவும் சுகபோக வாழ்க்கை அனுபவித்து வந்த நரகவாசி ஒருவர் நாளை மறுமை நாளில் கொண்டு வரப்படுவார். பின்னர்  நரகவாசி எனும் சாயம் அவனுக்கப் பூசப்படும்.  பின்னர் அவனிடம் “இங்கு எந்த நன்மையையேனும் நீ கண்டாயா? என்றும், சுகபோகி எவனையும் இங்கு கண்டாயா?” என்றும் கேட்கப்படும். அதற்கு அவன் “ என் இரட்சகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக இல்லை” என்பான். மேலும் உலகில் மிகவும் கஷ்டம் அனுபவித்த வந்த ஒரு சுவர்க்கவாசியும் கொண்டு வரப்படுவார். அவருக்கு சுவர்க்கவாசி எனும் சாயம் பூசப்படும். பின்னர் அவரிடம் “நீர் இங்கு கஷ்டங்கள் எதனையும் கண்டீரா? என்றும் இங்கு கஷ்டப்படுகின்ற எவரேனும் உன் பக்கத்தால் செல்வதைக் கண்டீரா?” என்றும் கேட்கப்படும். அதற்கு அவர் “என் இரட்சகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்படி ஒன்றையும் நான் காணவில்லை” என்பார்.(முஸ்லிம்).
ضرس الكافر، أو ناب الكافر، مثل أحد، وغلظ جلده مسيرة ثلاث(رواه مسلم)  
   மேலும் “காபிரின் பல் உஹுது மலை போன்று இருக்கும். மேலும் அவனுடைய தோலின் கனம் மூன்று  நாள் பயணத்தின் தூரமாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸலிம்).
قال رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلمُ : " يُجَاءُ بِرَجُلٍ فَيُطْرَحُ فِي النَّارِ فَيَطْحَنُ فِيهَا كَطَحْنِ الْحِمَارِ بِرَحَاهُ ، فَيُطِيفُ بِهِ أَهْلُ النَّارِ ، فَيَقُولُونَ : أَيْ فُلَانُ ، أَلَسْتَ كُنْتَ تَأْمُرُ بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ ؟ ، فَيَقُولُ : إِنِّي كُنْتُ آمُرُ بِالْمَعْرُوفِ وَلَا أَفْعَلُهُ ، وَأَنْهَى عَنِ الْمُنْكَرِ وَأَفْعَلُه (رواه البخاري) " .
மேலும் நரகில் ஒருவர் தூக்கி வீசப்படுவான். அவன் அங்கு செக்கில் கட்டிய கழுதை போன்று  அரைத்துக் கொண்டு இருப்பான். நரகவாசிகள் அவனை எடுத்துக் கொண்டு சுற்றுவார்கள் “மேலும் அவனிடம இன்னானே! நீ நன்மையைக் கெண்டு ஏவியும், தீமையை விட்டும் விலக்கியும் வரவில்லையா? என்பர் அதற்கு அவன் “நான் நன்மையைக் கொண்டு ஏவினேன். ஆனால் நான் அதனைச் செய்யவில்லை. நான் தீமையை விட்டும் தடுத்தேன். நான் அதனைத் தவிர்ந்து கொள்ளவில்லை” என்பான்.(புகாரீ).
عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل النار خروجا منها وآخر أهل الجنة دخولا الجنة رجل يخرج من النار حبوا فيقول الله تبارك وتعالى له اذهب فادخل الجنة فيأتيها فيخيل إليه أنها ملأى فيرجع فيقول يا رب وجدتها ملأى فيقول الله تبارك وتعالى له اذهب فادخل الجنة قال فيأتيها فيخيل إليه أنها ملأى فيرجع فيقول يا رب وجدتها ملأى فيقول الله له اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها أو إن لك عشرة أمثال الدنيا قال فيقول أتسخر بي أو أتضحك بي وأنت الملك قال لقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه قال فكان يقال ذاك أدنى أهل الجنة منزلة(رواه مسلم)  
    மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நரகிலிருந்து இறுதியாக வெளியில் வருபன் யார் என்பதையும், இறுதியில் சுவர்க்கம் செல்பவன் யார், என்பதையும் நான் அறிவேன். அவன் நரகிலிருந்து தவழ்ந்து தவழ்ந்து வெளியில் வருவான். அவனிடம் அல்லாஹ் “நீ போய் சுவர்க்கத்தில் பிரவேசி” என்பான். அவன் சுவர்கத்திற்கு வந்ததும் அது அவனுக்கு நிறைந்திருப்பது போன்று தோன்றும். எனவே அவன் திரும்பி வந்து “என் இவைனே! அது நிறைந்திருக்க நான் கண்டேன். என்பான்.” அதற்கு அல்லாஹ் “நீ போய் சுவர்க்கதில் பிரவேசி” எனபான் மறுடியும் அவன் அங்கு சென்றதும், அது நிரம்பி இருப்பது போன்றே அவனுக்குத் தோன்றும். எனவே அவன் திரும்பி வந்து, என் இறைவனே! அது நிரம்பி இருக்கக் கண்டேன், எனபான். அதற்கு அல்லாஹ் “நீ போய் சுவர்க்கத்தில் பிரவேசி, நிச்சயமாக உனக்கு இவ்வுலகம் போன்றதுவும், மேலும் அது போன்று பத்து மடங்கும்  உனக்குண்டு” என்பான். அப்பொழுது அவன் “நீ பேரரசானாக இருக்கின்றாய், நீ என்னைக் கேலி பண்ணுகிறாயா, அல்லது என்னைப் பார்த்து சிரிக்கின்றாயா? என்று கூறுவான். என்று  நபியவர்கள் கூறும் போது. அவர்கள் தன்னுடைய பற்கள் வெளியில் தெரியுமாறு சிரித்ததை நான் பார்த்தேன். அவ்வமயம் அதுதான் மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள சுவர்க்கவாசியின் அந்தஸ்த்து என்று அவனிடம் கூறப்படும்”, என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள்  அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்).
عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلي الله عليه وسلم ( ما منكم من أحد إلا له منزلان : منزل في الجنة ، ومنزل في النار ، فإذا مات فدخل النار ، ورث أهل الجنة منزله ، فذلك قوله تعالى:{أولئكهم الوارثون}   
صححه  الألباني في " الصحيحة "
   மேலும் சுவர்க்கத்தில் ஒரு இல்லமும், நரகத்தில் இன்னொரு இல்லமும் என, உங்களுக்கு இரண்டு இல்லங்கள் உள்ளன.  எனவே ஒருவன் இறந்த பின்னர் அவன் நரகத்திற்கச் சென்றதும், சுவர்க்கத்திலுள்ள அவனின் இல்லத்தை, சுவர்க்கவாசிகள் வராசத்தாக எடுத்துக் கொள்வார்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் “இத்தகையவர்தாம் உண்மையான வாரிசதாரர்கள்” (23\10). என்ற இறை வசனம் இதனையே  குறிப்பிடுகின்றது, என்றும் ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்                                              
சுவர்க்கமும் சுக வாழ்வும்
     அல்லாஹ்வும் அவனின் தூதரும் சுவர்க்கத்தின் சுகபோகங்கள் பற்றி விபரித்துள்ளனர். முதலில் அது பற்றிய அல் குர்ஆன் வசனங்கள் சிலதைக் கவணிப்போம்.
وَلِمَنْ خَافَ مَقَامَ رَ‌بِّهِ جَنَّتَانِ ﴿٤٦﴾
     “எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் சுவனபதியில் இரு சோலைகள் உண்டு. (55\46)
فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ ﴿٥٢﴾
  “அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனி வர்க்கத்திலும் இரு வகை உண்டு” (55\52)
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْ‌جَانُ ﴿٥٨﴾
  “அவர்கள்  சிகப்பு மாணிக்கத்தைப் போலும் பவளங்களைப் போலும் இருப்பார்கள்.(55\58)
حُورٌ‌ مَّقْصُورَ‌اتٌ فِي الْخِيَامِ ﴿٧٢﴾
  “அவர்கள்தாம் ஹூர்கள். அவர்கள் கூடாரங்களில் வசித்திருப்பார்கள்.” (55\72)
مُتَّكِئِينَ عَلَىٰ رَ‌فْرَ‌فٍ خُضْرٍ‌ وَعَبْقَرِ‌يٍّ حِسَانٍ ﴿٧٦﴾
   “சிறந்த பசுமையான, இரத்தினக் கம்பளங்களில் திண்டு தலையனைகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்”  (55\76)
مَّثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۖ فِيهَا أَنْهَارٌ‌ مِّن مَّاءٍ غَيْرِ‌ آسِنٍ وَأَنْهَارٌ‌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ‌ طَعْمُهُ وَأَنْهَارٌ‌ مِّنْ خَمْرٍ‌ لَّذَّةٍ لِّلشَّارِ‌بِينَ وَأَنْهَارٌ‌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى ۖ
    “இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையாவது அதில் தீங்கற்ற நீரருவிகள் இருக்கின்றன. பரிசுத்தமான ருசி மாறாத பாலாறுகளும் இருக்கின்றன. திராட்சை ரச ஆறுகளும் இருக்கின்றன. அது குடிப்பவர்களுக்குப் பேரின்பமளிக்கக் கூடியது. தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன. (47\15)
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّ‌ةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿١٧﴾
   “அவர்கள் செய்த காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக் கூடியதை எவராலும் அறிந்து கொள்ள முடியாது” (32\17)
وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرً‌ا مِّن سُندُسٍ وَإِسْتَبْرَ‌قٍ
 “அவர்கள் பசுமையான பட்டாடைகளை அணிவார்கள்” (18\31)
وَفُرُ‌شٍ مَّرْ‌فُوعَةٍ ﴿٣٤﴾
    “உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்)” (56\34) இந்த வசனத்தைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது,
 ارتفاعها كما بين السماء والأرض ومسيرة ما بينهما خمس مائة عام
    “அந்த விரிப்பின் உயரம் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்றது. அவ்விரண்டுக்கும் இடையே உள்ள தூரம், ஐநூறு வருட பயணத்தின் தூரமாகும் ” என்றார்கள். (திர்மிதீ)
وَسَقَاهُمْ رَ‌بُّهُمْ شَرَ‌ابًا طَهُورً‌ا ﴿الانسان/٢١﴾
    “பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான்” (76\21)
وَنَزَعْنَا مَا فِي صُدُورِ‌هِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُ‌رٍ‌ مُّتَقَابِلِينَ ﴿٤٧﴾ لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَ‌جِينَ ﴿الحجر/٤٨﴾
    “அவர்களின் மனதில் இருந்த குரோதங்களை நாம் நீக்கி விடுவோம். சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முன்னோக்கிக் கட்டில்களில் இருப்பார்கள், அதில் அவர்களை யாதொரு சிரமமும் அணுகாது, அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்” (15\47-48).
    இவ்வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது, “சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்ததுவும் அவர்களுக்கு முதலில் இரண்டு ஊற்றுக்கள் காட்டப்படும். அந்த ஊற்றில் ஒன்றிலிருந்து அவர்கள் குடிப்பார்கள், அப்பொழுது அவர்களின் உள்ளத்தில் இருந்த குரோதங்களை அல்லாஹ் நீக்கி விடுவான். பின்னர் இரண்டாம் ஊற்றுக்குப் போய் அதில் குளிப்பார்கள். அப்பொழுது அவர்களின் நிறங்கள் ஒளிரும், அவர்களின் முகம் தூய்மையடையும், மேலும் அவர்கள் செழிப்படைவார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَ‌ائِكِ مُتَّكِئُونَ ﴿يس/٥٦﴾
    “அவர்களும் அவர்களின் மனைவிமார்களும் நிழலின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து கொண்டிருப்பார்கள்” (36\56)
وَبَشِّرِ‌ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِ‌ي مِن تَحْتِهَا الْأَنْهَارُ‌ ۖ كُلَّمَا رُ‌زِقُوا مِنْهَا مِن ثَمَرَ‌ةٍ رِّ‌زْقًا ۙ قَالُوا هَـٰذَا الَّذِي رُ‌زِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا ۖ وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَ‌ةٌ ۖ وَهُمْ فِيهَا خَالِدُونَ ﴿البقرة/٢٥﴾  
    “எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அவற்றில் நீரருவிகள் ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றிலிருந்து ஒரு கனி புசிக்கக் கொடுக்கப் படும் போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்படதும் இதுதானே! எனக் கூறுவார்கள். பார்வைக்கு ஒரே விதமாகத் தோன்றக் கூடியவைகளையே கொடுக்கப்பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அன்றி அவர்கள் அதில் எனறென்றும் தங்கி விடுவார்கள்” (2\25)
    இனி சுவர்க்கம் பற்றி  ஹதீஸில் வரும் சில விவரணங்களைக  கவணிப்போம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( يَقُولُ اللَّهُ تَعَالَى : أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ذُخْرًا بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ) ، ثُمَّ قَرَأَ ( فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ )   رواه البخاري  ومسلم   وعنده : ( بَلْهَ مَا أَطْلَعَكُمْ اللَّهُ عَلَيْهِ       
 “உங்களுக்கு நான் அறிவித்தவைகளைத் தவிர, ஒரு கண்ணும் பாராத, ஒரு காதும் கேளாத, எந்தவொரு மனிதனின் உள்ளத்திலும் தோன்றாத ஆஸ்திகளை என்னுடைய நல்லடியார்களுக்காக நான் தயார் படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான், என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு “அவர்கள் செய்த காரியங்களுக்குக் கூலியாக மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடியதை எவராலும் அறிந்து கொள்ள முடியாது” என்ற திரு வசனத்தையும் ஓதினார்கள்” எனறு அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(முஸ்லிம்(
عن أبي هريرة رضي الله عنه قال  : قلنا: يا رسول الله, حدثنا عن الجنة ما بناؤها؟ قال: لبنة ذهب، ولبنة فضة، وملاطها المسك، وحصباؤها اللؤلؤ والياقوت   ، وترابها الزعفران, من يدخلها ينعم لا يبأس، ويخلد لا يموت لا تبلى ثيابه، ولا يفنى شبابه (رواه ابو داوود)
     ரஸூல் (ஸல்) அவர்களிடம் சுவர்க்கம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளது? என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அதன் ஒரு செங்கல் தங்கத்தினாலும் இன்னொரு செங்கல் வெள்ளியினாலும் ஆனது. அதன் சாந்துக் கலவை மிக மணம் பொறுந்திய  கஸ்தூரியினாலானது, அதன் கற்கள் முத்தினாலும் சிவப்பு மாணிக்கத்தினாலுமானது, அதன் மண் குங்குமத்தினாலானது. அதனுல் சென்றவர் அங்கேயே தங்கிவிடுவார், நம்பிக்கை இழக்க மாட்டார், அதில் என்றென்றும் இருப்பார், மரணிக்க மாட்டார், அவரின் ஆடை பழசுப்படாது, மேலும் அவரின் இளமையும் அழியாது” என்று நபியவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்’ (அபூ தாவூத்).
عن أبي سعيد الخدري أن ابن صباد سأل رسول الله  عن تربة الجنة قال در مكة بيضاء ومسك خالص
     மேலும் “சுவர்க்கத்தின் மண் மக்காவின் வெள்ளை முத்தினாலும் தூய கஸ்தூரியினாலுமானது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ ஸஈதுல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்) மேலும் நபியவர்கள்
أن رسول الله صلى الله عليه وسلم قال: إن في الجنة مائة درجة أعدها الله للمجاهدين في سبيل الله، ما بين الدرجتين كما بين السماء والأرض، فإذا سألتم الله فاسألوه الفردوس، فإنه أوسط الجنة، ومنه تفجر أنهار الجنة، وفوقه عرش الرحمن. (رواه البخاري)
    “சுவர்க்கத்தில் நூறு தட்டுகள்  இருக்கின்றன. அதனை அல்லாஹ் வின் பாதையில் அறப்போரில் பங்கேற்றவர்களுக்காக அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். ஒவ்வொரு இரண்டு தட்டுகளுக்கும் இடையே வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் உண்டு. எனவே நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டும் போது சுவர்க்கத்தின் நடுவிலுள்ள மேலான சுவர்க்கமான ‘அல் பிர்தெளஸ்’ என்ற சுவர்க்கத்தைக் கேளுங்கள். அதற்கு மேலால்தான் அல்லாஹ்வின் ‘அர்ஷ்’ இருக்கின்றது, மேலும் அதிலிருந்தான் சுவர்க்கத்தின் நதிகள் பெருக்கெடுக்கின்றன” என்று கூறினார்கள். (புகாரீ).  மேலும்
عن أبي هريرة ، رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال : " من لبس الحرير في الدنيا لم يلبسه في الآخرة ، ومن شرب الخمر في الدنيا لم يشربه في الآخرة ، ومن شرب في آنية الذهب والفضة في الدنيا لم يشرب بها في الآخرة  : "(رواه النسائي)
     “இவ்வுலகில் பட்டு அணிந்தவன் மறு உலகில் பட்டணிய மாட்டான், இவ்வுலகில் மது அருந்தியவன் மறு உலகில் மதுவருந்த மாட்டான், தங்க வெள்ளி பாத்திரங்களில் பானம் அருந்தியவன் மறு உலகில் அதில் அருந்த மாட்டான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்ள். என அபூஹரைரா (ரழி) அவர்கள் அறிவிகின்றார்கள் (நஸாஈ). மேலும்
  عَنْ جَابِرٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَأْكُلُونَ وَيَشْرَبُونَ وَلا يَتَغَوَّطُونَ وَلا يَبُولُونَ وَلا يَتْفِلُونَ وَلا يَتَمَخَّطُونَ , يُلْهَمُونَ التَّسْبِيحَ وَالتَّحْمِيدَ كَمَا تُلْهَمُونَ النَّفْسَ , يَكُونُ طُعَامُهُمْ جُشَاءً وَرَشْحًا كَرَشْحِ الْمِسْكِ "(رواه مسلم)
      “சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் உண்பார்கள் குடிப்பார்கள், ஆனால் அவர்கள் துப்பவும், சிறு நீர் கழிக்கவும், மலம் கழிக்கவும் மாட்டார்கள், இன்னும் அவர்களுக்கு மூக்குச் சலியும் இருக்காது.” என்று நபியவர்கள் கூறிய போது,  “அவர்கள் உண்ட உணவின் நிலை என்ன? என்று தேழர்கள் கேட்டனர். அதற்கு அன்னார் “அது ஏப்பமாகவும், வேர்வையாகவும் வெளி வரும், அதிலிருந்து கஸ்தூரி போன்று வாடை வீசும். மேலும் அவர்கள் மூச்சு விடுவது போல தஸ்பீஹும் தஹ்மீதும் செய்து கொண்டிரப்பார்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (முஸ்லிம்). என்ன காரியத்தைச் செய்து கொண்டிருந்த போதிலும் இடைவிடாது மூச்சு விடும் காரியம்  நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கும் அது போல சுவர்க்க வாசிகள் தஸ்பீஹ் தஹமீத் செய்வதை நிறுத்த மாட்டார்கள், அதனைச் செய்வதிலே அவர்களுக்கு எந்தச் சிரமும் இருக்காது, என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
     சுவர்க்கத்தின் சுகபோகம் அழிவில்லாதது, நிலையானது. அவ்வாறே நரகவாசியின் வேதனையும் தொடர்ச்சியானது நிலையானது. சுவரக்கவாசிகளும் நரகவாசிகளும் மரணிக்கவும் மாட்டார்கள். இதனையே பின் வரும் நபி மொழி அறியத் தருகின்றது.
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ [: « يُجَاءُ بِالْمَوْتِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ كَبْشٌ أَمْلَحُ - زَادَ أَبُو كُرَيْبٍ: فَيُوقَفُ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، وَاتَّفَقَا فِي بَاقِي الْحَدِيثِ - فَيُقَالُ: يَأَهْلَ الْجَنَّةِ، هَلْ تَعْرِفُونَ هَذَا؟ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ، وَيَقُولُونَ: نَعَمْ هَذَا الْمَوْتُ، قَالَ: وَيُقَالُ: يَأَهْلَ النَّارِ، هَلْ تَعْرِفُونَ هَذَا؟ قَالَ: فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ، وَيَقُولُونَ: نَعَمْ هَذَا الْمَوْتُ. قَال: فَيُؤْمَرُ بِهِ فَيُذْبَحُ، قَالَ: ثُمَّ يُقَالُ: يَأَهْلَ الْجَنَّةِ خُلُودٌ فَلَا مَوْتَ، وَيَأَهْلَ النَّارِ خُلُودٌ فَلَا مَوْتَ. قَالَ: ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ [: {وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ} وَأَشَارَ بِيَدِهِ إِلَى الدُّنْيَا.(رواه مسلم)
     “சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும் நரகவாசிகள் நரகிலும் பிரவேசித்த பின்னர், நாளை மறுமை நாளில் மரணம் கொண்டு வரப்படும். அது அழகான ஒரு செம்மரி ஆட்டின் தோற்றத்திலிருக்கும் அது, சுவர்க்கத்திற்கும் நரகிற்கும் இடையில் நிறுத்தி வைக்கப்படும். அவ்வமயம் சுவர்க்கவாசிகளிடம் “இதனை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்கப்படும். அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள் “ஆம், இதுதான் மரணம்” என்பார்கள். பின்னர் நரகவாசிகளிடமும் “இதனை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்கப்படும். அவர்களும் “ஆம் இதுதான் மரணம்” என்பர். பின்னர் அதனை அறுத்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படும். பின்னர் “ சுவர்க்கவாசிகளே! உங்களுக்கு மரணம் இல்லை நீங்கள் இங்கு நிரந்தரமாக இருங்கள்”, என்று கூறப்படும். அவ்வாறே நரகவாசிகளிடமும் “நரகவாசிகளே! உங்களுக்கும் மரணம் இல்லை. நீங்கள் இங்கு நிரந்தரமாக இருங்கள்” என்று கூறப்படும். என்று கூறிய நபியவர்கள்,
    “ஆனால் நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிகவும் துயரமான நாளைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். எனினும் அவர்கள் கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஆதலால் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்” (19\39) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினாரகள். முஸலிம்).
    மேலும் முஃமின்களுடையவும், காபிர்களுடையவும் முடிவு எவ்வாறிருக்கும் என்பதை இவ்வாறு அல்லாஹ் உருவகப்படுத்திக் காட்டுகிறான்,
مَا قَدَرُ‌وا اللَّـهَ حَقَّ قَدْرِ‌هِ وَالْأَرْ‌ضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِ‌كُونَ ﴿٦٧﴾ وَنُفِخَ فِي الصُّورِ‌ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْ‌ضِ إِلَّا مَن شَاءَ اللَّـهُ ۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَ‌ىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُ‌ونَ ﴿٦٨﴾ وَأَشْرَ‌قَتِ الْأَرْ‌ضُ بِنُورِ‌ رَ‌بِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ ﴿٦٩﴾ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ ﴿الزمر/٧٠﴾
    “அல்லாஹ்வின் தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும் வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன். அவன் மிக பரிசுத்தமானவன்.”
     “ஸூர் ஊதப்பட்டால் வானங்ளில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர மூர்ச்சித்து மதியிழந்து விடுவர்கள். மறு முறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர் நோக்கி நிற்பார்கள்.”
    இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். தினசரி குறிப்பு முன் வைக்கப்படும். நபிமார்களும், இவர்களுடைய சாட்சியங்களும் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (39\67-68-69)
      இவ்வாறு இந்த அத்தியாயத்தின் இறுதி வரை முஃமின்களினதும் காபிர்களினதும் முடிவு எப்படியிருக்கும் என்பதைத்  தெளிவு படுத்தும் வசனங்களை அந்த அத்தியாயத்தின் இறுதி வரை ரஸூல்(ஸல்) ஓதினார்கள்.
                              ------------------    
           எனவே மறு உலகையும் அதன் பயங்கர நிலைகளையும் மற்றும் அந்நாளில் அல்லாஹ்வின் முன்னால் விசாரனைக்காக நிறுத்தப்படவுள்ளதையும், வாளை விடவும் கூர்மையான முடியை விடவும் மெல்லிய, நரகத்தின் மீது கட்டப்பட்டுள்ள அந்த பாலத்தைத் தாண்ட வேண்டியுள்ள நிர்பந்தத்தையும் நினைவு கூறுவதானது அல்லாஹ்வின் மீது அச்சத்தையும், பாவமன்னிப்புக் கோருவதன் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தும். அதன் மூலம் அல்லாஹ்வின் அருளைப் பெற்று நரகை விட்டும் பாதுகாப்புப் பெற்று சுவர்க்கம் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.
    எனவேதான் பாவ கர்மங்கள் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்த பல பாவிகள் தங்களின் பாவச் செயலை உணர்ந்து அவற்றை விட்டும் நீங்கி அல்லாஹ்விடம பாவ மன்னிப்புக் கோரி அவனிடம் தஞ்சமடைந்த போது, கிருபை மிக்க அல்லாஹ் அவர்களை மன்னித்தருளினான் என்பதை நபி மெழிகளில் காண முடிகின்றது. எனவே சகல முஸ்லிம்களும் தங்களை எதிர்நேக்கியுள்ள மறு உலகின் பயங்கர நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தங்களின் கடந்த வாழ்க்கையினைப் பற்றி மறு பரிசீலனை செய்து அவற்றிலிருந்த நீங்கி அவற்றுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பக் கோருவதும், மரனத்தின் பின்னான மறு உலக வாழ்வுக்காகத் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள்வதுமே புத்திசாலித் தனமாகும். எனவே நம் பாவங்களை விட்டும் நாம் நீங்கிக் கொள்ள நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியவேண்டும். மது சகல பாவங்களையும் மன்னித்தருள வேண்டும்,