வணக்கங்களின் விளக்கங்கள்

இஸலாத்தில் ஏக இறைவன் மீது நம்பிக்கை வைப்பதில் பின்பற்ற வேண்டிய நெறிகள் பற்றிய விளக்கம். தவ்ஹீத் உலூஹிய்யா, தவ்ஹீத் ரூபூபிய்யா, அஸ்மா வ ஸிபா என்பவற்றின் முக்கியத்துவம். வணக்கத்தில் ஏகத்துவக் கொள்கையை முழுமையாக பின்பற்றாதவர்கள் செய்யக்கூடிய பிழைகள் காரணமாக, அவர்களது இறை விசுவாசமே உறுதியற்ற நிலைக்கு ஆளாக நேரும் ஆபத்து பற்றிய விளக்கங்கள் இதில் உள்ளன.

வணக்கங்களின் விளக்கங்கள்
>தமிழ்-Tamil تاميلي ->
         
ஆசிரியர்
அஷ் ஷெய்க் முஹம்மத் அஸ்ஸாலிஹ் அல் உஸைமீன்

மொழி பெயர்த்தவர்
   நூர் ஹம்ஸா முஹம்மத் ஸஈத்
 
மீளாய்வு செய்தவர்கள்
ஜாசிம் இப்னு தஇயான் -  முஹம்மத் அமீன்


 
فقه العبادات
        

لفضيلة الشيخ
 محمد بن صالح العثيمين




ترجمة:  نور الحمزة محمد سعيد
 
مراجعة:محمد أمين و جاسم دعيان


பிஸ்மில்லாஹ்pர்; ரஹ்மானிர்; ரஹீம்
அகீதா தொடர்;பான மார்க்;கத் தீர்;ப்புகள்
ஓரிறைக் கொள்கையும் நம்பிக்கையும்
கேள்வி 1
மதிப்புக்குரிய அறிஞர்; அவர்;களே மனித படைப்பின் நோக்கம் என்ன?
பதில்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
புகழனைத்தும் அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது. எங்கள் நபி முஹம்மத் (ஸல்); அவர்;களின் மீதும் அவர்;களின் குடும்பத்தார்; மற்றும் அவர்;களின்; தோழர்கள் அனைவர்; மீதும் ஸலாத்தும், ஸலாமும;; உண்டாவதாக.
மேற்படி கேள்விக்கு விடையளிக்க முன் அல்லாஹ்வின் படைப்பு குறித்தும் அவனின் மார்;க்க நியதியைக் குறித்ததுமான  ஒரு பொது விதி குறித்து தெளிவு படுத்த விரும்புகின்றேன். அப் பொதுவிதியானது பின்வரும் அல்லாஹ்வின் கூற்றுக்களான التحريم :02 وهو العليم الحكيم “அவன் மிக அறிந்தோனும் ஞான மிக்கோனுமாவான்" .
إنَّ اللّهَ كَانَ عَلِيما حَكِيماً الأحزاب : 01 நிச்சயமாக அல்லாஹ் (பிரபஞ்ச நிகழ்வுகள் குறித்து) மிக அறிந்தவனாகவும், ஞானமிக்கவனுமாகவும் உள்ளான்”என்ற வசனங்களிலிருந்தும்  மற்றும் இக்கருத்தை பிரதிபலிக்கும் இது போன்ற குர்;ஆனின் ஏனைய வசனங்களிலிருந்தும் பெறப்பட்டதாகும்.
இவ்வசனங்கள் யாவும் அல்லாஹ் படைத்த வற்றினதும்,  அடியார்;களுக்கான மார்;க்க வழிமுறை குறித்தும் மிகை ஞானம் அவனுக்கே  உரியது என்பதை உறுதிப்படுத்துகிறன. அத்துடன் அதன் நோக்கத்தையும், காரணத்தையும் அவன் மிக அறிந்தவன் என்பதையும் காட்டுகிறது. இவை அவனின் பிரபஞ்ச ரிதியிலான மற்றும் அடியார்; களுக்கான மார்;க்க நியதிகளிலும் இருக்க முடியும். அவன் இந்த உலகத்தில்; படைத்தவற்றில் ஒரு நோக்கம் அல்லது காரணம் இல்லாமல் இல்லை. அல்லாஹ் எதனை ஆக்கினாலும் அழித்தாலும் அதன் காரணத்தை மனிதனால்  மிகச்சரிpயாக அறிய முடியாது. அதே போல் அடியார்;களுக்கான அவனது மார்;க்க ரிதியான சட்ட ஒழுங்குகளில் கட்டாயப்படுத்தியது, தடைசெய்யப்பட்டது, அனுமதித்தது போன்றவற்றிலும் முழுமையான ஞானம் அவனுக்கே உரியது.
என்றாலும் இவைகள் உள்ளடக்கியுள்ள இந்நோக்கங்கள் அவனின் பிரபஞ்ச மற்றும் மார்;க்;க வழிமுறைசார்;ந்த நியதிகளை  உள்ளடக்கியுள்ளது  அவைகள்  சிலபோது எமது அறிவிற்குற்பட்ட தாகவும்; அறிவுற்குற்படாததாகவும்  இருக்கலாம்.; அல்லது சிலருக்கு தெரியவும் மற்றும் பலருக்கு தொpயாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இவைகள் அல்லாஹ் அடியார்;களுக்கு வழங்கியிருக்கும் அறிவையும் விளக்கத்தையும் பொருத்தது ஆகும்.
இவ்விடயத்தை  நாம் புரிந்து கொண்டால் உண்மையில் அல்லாஹ் மனித ஜின் இனங்களை அவனை வணங்கி வழிபடும் உயர்; இலட்சியத்திற் காகவும், உண்ணத நோக்கத்திற்காகவும் இவ்வுலகத்தில் படைத்துள்ளான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இக்கருத்தை பின்வரும் அல் குர்;ஆனிய வசனங்கள் தௌpவுபடுத்துகின்றன.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالأِنْسَ إِلاَّ لِيَعْبُدُونِ  ( الذاريات :56
என்னை வணங்குவதற்காகவேயன்றி ஜின்களையும், மனிதர்;களையும் நான் படைக்கவில்லை.
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ ‏(المؤ منون: 115
நாம் உங்களை வீணுக்காகப் படைத்தோம் எனவும் நிச்சயமாக நீங்கள் எம்மிடம் மீட்டப்படமாட்டீர்;கள் எனவும் எண்ணிக்கொண்டிருந்தீர்;களா?
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَك سُدًى  (القيامة :36
மனிதன்  (விசாரணையின்றி) வெறுமனே விட்டு விடப்படுவான் என அவன் எண்ணிக் கொண்டிருக் கின்றானா? (அல் கியாமா-36)
இக்கருத்தை பிரதிபலிக்கும் இதுபோன்ற அதிகமான வசனங்கள் அல் குர்;ஆனில் இடம் பெற்றிருப்பதை அவதானிக்கலாம். அவைகள் யாவும் மனித ஜின் இனத்தை படைத்ததின்; உயரிpய நோக்கம் அவனை வணங்கி வழிபடுவதாகும் என்பதே.

அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் எமக்களித்த ஷரிPஆ சட்டதிட்டங்களுக்கேட்ப அவனின் கட்டளைகளை ஏற்று நடப்பதன் மூலமும் அவன் தடுத்தவற்றிலிருந்து முற்றாக விலகி நடப்பதன் மூலமும் அவனை மகத்துவப் படுத்தி  அன்பு கொள்வதனையே இபாதத் என்பது குறிக்கும்.
அல்லாஹ் இக்கருத்தை தனது திருமறையில் நேரிய வழி நின்று கலப்பற்றவர்;களாக அவனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வை வணங்குமாறு தவிர ஏவப்படவில்லை எனப் பிரஸ்தாபிக்கின்றான்.   
ஆகவே இதுதான் மனித, ஜின் இனத்தினரை படைத்ததின்; நோக்கமாகும். இந்நோக்கத்தை விட்டு விலகி எவறேனும் ஒரு மனிதன் தனது இரட்சகனுக்கு கட்டுபடாது, அவன் விதிpத்த கடமைகளை புறக்கனித்து  மனமுரண்டாக நடந்து கொள்வானாயின் அவன் அல்லாஹ் படைத்த நோக்கத்தை பொருட்டாக கொள்ளாதவனாக மாறிவிடுகிறான்.
இவ்வாறான அவனது செயற்பாடானது இறை படைப்பின் நோக்கத்தை ஒரு பொருட்டாகவே கருதாததற்கு சான்றாக அமைந்து விடும் ஆபத்தான நிலையாகும்;. இதனை அவன் வெளிப்படையாக குறிப்பிடவில்லையாயினும்  மேற்குறிப்பிட்ட பொறுப்பற்ற தன்மையையே காட்டும். இதுவே அல்லாஹ்வுக்கு கட்டுப்படாது மனமுரண்டாக நடத்தல் என்பதற்கான கருத்தாகும்.
கேள்வி :  இபாதத் என்பதற்கு நாம் குறிப்பிட்டு சொல்லக் கூடிய கருத்து உள்ளதா? அல்லது அதற்கு பொதுக் கருத்து (மப்ஹூம் ஆம்)مفهوم عام  அல்லது (மப்ஹூம் காஸ்) مفهوم خاص        வரையருக்கப்பட்ட  குறிப்பான கருத்தொன்று உள்ளதா?
பதில் :ஆம், நான் மேலே குறிப்பிட்டது போன்று இபாதத் என்பது அல்லாஹ்வில் அன்பு கொண்டு அவனுக்கு கட்டுப்படுவதனைக் குறிக்கும். இதுவே இபாதத்திற்கான  “மப்ஹூம் ஆம்” مفهوم عام பொதுவான கருத்தாகும்.
   مفهوم خاص குறிப்பான புரிதல் என்பதின்   விரிவான கருத்தை இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்;கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்; “இபாதத் -வணக்கம் என்பது அல்லாஹ்வுக்குப் பிரியமான திருப்தியான, வெளிப்படையான, மறைமுகமான அனைத்து வார்;த்தைகளும், செயல்களுமாகும்.
அல்லாஹ்வைப் பயப்படுதல், அஞ்சுதல், அவன் மீது நம்பிக்கை வைத்தல், தொழுதல், ஸகாத் கொடுத்தல், நோன்பு நோற்றல் மற்றும் இவையல்லாத  இஸ்லாமிய ஷரிஆ காட்டித்தரும் அம்சங்கள் இதற்கான உதாரணங்களாகும்.”
அல்லது   இபாபதத்திற்கான  “மப்ஹூம் ஆம்” மப்ஹூம் காஸ்” என்ற இரு கருத்தியல்களின் மூலம் நீங்கள் நாடுவது சில அறிஞர்கள் இபாதத்தை “இபாதா கவ்னிய்யா”  இபாதா ஷரஇய்யா என்று வகைப்படுத்தியமையை  கருதுவீர்;களாயின்
அதாவது  அதன் கருத்தாவது  மனிதனைப் பொருத்தவரை ஒன்றில் “இபாதா கவ்னிய்யா” பிரபஞ்ச நியதிகளுக்கு அமைவாக அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழுதல் அல்லது அவனால் வகுத்தளித்த ஷரிPஆவினூடாக கட்டுப்பட்டு வாழுதல் என்பதாகும் .
“இபாதா கவ்னிய்யா” பிரபஞ்ச நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழுதல் என்பது பொதுவாக இறைவிசுவாசி – முஃமின், காபிர், நல்லவன், கெட்டவன் என்ற வித்தியாசமின்றி இதற்கு உட்பட்டவர்;களாக உள்ளனர்;. இக்கருத்தை பின்வரும் இறைவசனம் சுட்டுகிறது. “வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அர்ரஹ்மானின் அடிமையாகவே வருவர்.;”
எனவே பிரபஞ்சத்தில் உள்ளவை அனைத்தும் பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டே உள்ளன என்பது உண்மையாகும். அவை எந்தவொரு நிலையிலும் பிரபஞ்சவிதிகளை மீறி அல்லாஹ்வுக்கு எதிராக, அல்லது முரணாக  எவ்வகையிலும் செயற்பட முடியாது.
அல் இபாதா அல்- காஸ்ஸா  (العبادة الخاصة) வைப் பொறுத்த மட்டில் ஷரிஆ அடிப்படையில் செயற் படுவதாகும். இது அல்லாஹ்வை ஏற்று விசுவாசித்த முஃமின்களுக்கானதாகும். இவ் வகையை பொருத்தவரை  நபிமார்;களைப் போன்று மிக உரிpய நிலையில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணக்கம் செலுத்தியோர்; எனவும் அதை விட குறைந்த தரத்தில் வணக்கம் செலுத்தியோர்; எனவும் வித்தியாசப்படுத்தி குறிப்பிட முடியும். இறைதூதார்கள் அல்லாஹ்வுக்கு முழுமையாக  கட்டுப்பட்டு வணக்கம் செலுத்தியோர்; என்ற வகையில் அவர்;கள் உபூதிய்யத்  எனும் உயர் ;நிலை பண்பை பெற்றிருந்தார்;கள் என்பதை பின்வரும்  அல் - குர்;ஆன் வசனங்கள் காட்டுகின்றன.
“தனது அடியானுக்கு புர்;கானை இறக்கிவைத்தவன் மிகத்தூயவனாக உள்ளான்” புர்;கான் 1
நமது அடியார்; (முஹம்மத் (ஸல்) மீது இறக்கியவற்றில் நீங்கள் சந்தேகத்திலிருந்தால் பகரா 23
எமது அடியார்;களாகிய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரை நினைவு கூர்;வீராக “ ஸாத் 45
கேள்வி: 3
இபாதா ஷரஇய்யாவை புறக்கணித்து – ஷாரிஆ ரீதியாலான வணக்க வழிபாடுகளில்  ஈடுபடாமல்  இபாதா கவ்னிய்யா (عبادة كونية ) “பிரபஞ்சாPதியான விதிகளுக்கு உட்பட்டு வாழுகின்றவா;களுக்கு இறை கூலி கிடைக்குமா?
பதில்: அவர்;களுக்கு இறைகூலி கிடைக்காது. ஏனெனில் அவர்;கள் அல்லாஹ்வுக்கு தனது சுயவிருப்பத்தின் பேரில் கட்டுப்படவில்லை, அவர்;கள் விரும்பியோ விரும்பாமலோ  இயல்பாக அல்லாஹ்வின் பிரபஞ்ச விதிகளுக்கு அவர்;கள் கட்டுப்பட்டவர்;களாக உள்ளனார். அதாவது மனிதனைப் பொருத்தவரை இவ்வுலகில் நோய் வாய்ப்படுவதும், வறுமை பீடிப்பதும், நேசத்திற்குரிய வர்;களை இழப்பதும் அவன் விரும்பாத விடயங்களாகும். எனவே அவன் பிரபஞ்ச ரீதியான விதிகளுக்கு கட்டுப்பட்டே தீர வேண்டும். அதற்கு எவ்விதப் பெருமானமும் கிடையாது
அடியார்;கள்;; மீதுள்ள முதல் கடமை
கேள்வி : 4
அடியார்;கள் மீதான  முதல் கடமை என்ன?
பதில் : அடியார்;கள் மீதான முதல் கடமையையும், அடியார்;கள் அழைக்கப் பட வேண்டிய முதல் விடயத்தையும் முஆத் (ரழி) அவர்;களை யமனுக்கு அனுப்பும்;போது நபியவர்;கள் அவர்;களுக்கு குறிப்பிட்ட செய்தி தெளிவு படுத்துகிறது. நபியவர்;கள்  அவரை நோக்கி பின்வருமாறு குறிப்பிட்டார்;கள் “நீ தற்போது வேதம் கொடுக்கப் பட்டவர்;களிடம் செல்லப் போகிறாய், ஆகவே அவர்;களை வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மைக் கடவுள் இல்லை யெனவும், முஹம்மத் (ஸல்) அவர்;கள் அல்லாஹ்;வின் தூதராவார் எனவும்  ஏற்று சாட்சி சொல்வதன்  பால்  முதலில் அழைக்க வேண்டும்.
எனவே அல்லாஹ்வை ஒருவனாக ஏற்று நபியவர்;களை தூதர்; என ஏற்று சான்று பகருவதும் தான் அடியார்;களின் மீதுள்ள முதல் கடமையாகும்.
இவ்விரண்டு அடிப்படைகள்  மூலம் தான் எல்லா  வணக்கங்களும்  ஏற்றுக் கொள்ளப் படுவற்குரிய பின்வரும் இரு நிபந்தனைகளும் அமையப் பெறுகின்றன. அவைகளில் முதலாவது  அல்லாஹ் வுக்கென மாத்திரம் எந்த கருமத்தையும் மேற் கொள்ளல் எனும் இஹ்லாஸ் إخلاص  மனத்தூய்மை, இரண்டாவது செயல்கள் யாவும் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றியதாக இருத்தல் என்ற  முதாபஆ متابعة  போன்றனவாகும்.
ஆகவே அல்லாஹ்வை ஒருவனாக ஏற்று நபி ஸல் அவர்;களை தூதுத்துவத்திற்கு சான்று பகார்ந்து ஏற்றுக் கொள்வதுதான் அடியார்;களின் முதல் கடமை. லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகமானது ஓரிறைக் கொள்கையின் முழுக் கருத்தையும் உள்ளடக்கியுள்ளது என்பதும் கவனி;க்கத் தக்கதாகும்.
தவ்ஹீதின் வகைகளினுடனான ஷஹாதா கலிமாவி;ன் தொடர்;;பு
கேள்வி: الشهادة" கலிமாவானது தவ்ஹீதின் அனைத்து வகைகளையும் உள்ளடக்கியுள்ளதா?
பதில்: الشهادة" கலிமாவானது தவ்ஹீதின் அனைத்து வகைகளையும் உள்ளடக்கியுள்ளது. அவை  பின் வரும் இரு நிலைகளில் இருக்க முடியும் ஒன்றில் கருத்து ரிதியிலானதாக, அல்லது உள்ளடக்கத்Pதி லானதாக இருக்க முடியும். அதாவது இதனை உதாரணம் மூலம்  குறிப்பிடுவதாயின் ஒருவா; “நான் அல்லாஹ்வைத் தவிர உண்மையான கடவுள் எவரும் கிடையாது” என சான்று பகர்;கிறேன் எனக்  குறிப்பிடின் இதன் கருத்து அவன் உண்மையாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான் என்பதே எமது புரிதலுக்கு உட்படுகின்ற ஒரு  விடயமாகும்.
அதாவது   توحيد العبادة”  தவ்ஹீதுல் இபாதா என்பது தவ்ஹீதுல் உலூஹிய்யாவான கொள்கை ரீதியாக அல்லாஹ்வை ஒருவன் என ஏற்று வணங்குதல் என்ற விடயங்களை வலியுறுத்தும். அதே வேலை توحيد الربوبية  தவ்ஹீதுல் ருபூபிய்யாவையும் கருத்து ரீதியாக அல்லாஹ்வை ஒருவன் என ஏற்றுக் கொள்ளுதல் என்ற கருத்தும் அதில் உள்ளடங்கியுள்ளது. ஏனெனில் அல்லாஹ் வை மாத்திரம் வணங்குபவர்;கள் توحيد தவ்ஹீதுல் ருபூபிய்யாவை ஏற்காது அவனை வணங்குவது சாத்தியமில்லை. அது நிகழமுடியாத விடயமுமாகும். அது மட்டுமல்லாமல் توحيد العبادة  தவ்ஹீதுல் இபாதாவானது அல்லாஹ்வை அவனது பெயர்கள் பண்புகளில் தனித்துவமானவன் என ஏற்றுக்கொள்ளும் توحيد الأسماء والصفات  என்ற வகையும் உள்ளடக்கியுள்ளது  என்பதும் முக்கிய அம்சமாகும்.
ஆகவே ஒரு மனிதனைப் பொருத்தமட்டில் எதை வணங்குவதாயினும் அது வணக்கத்திற்கு தகுதி யானது என ஏற்று அதன் பெயர்;களையும், பண்புகளையும்  அறிந்துதான் வணங்க தலைப் படுகிறான். இதனால் தான் இப்ராஹீம் அலை அவர்;கள் தனது தந்தையை நோக்கி “எனது அருமைத்தந்தையே கேட்காத, பார்;க்காத, உமக்கு எவ்விதப்பயனையும் தராதவற்றை ஏன் வணங்கு கிறீர்;கள்? எனக் கேட்டார்;கள்.   
எனவே (توحيد العبادة) தவ்ஹீதுல் இபாதா என்பது தவ்ஹீதுல் உலூஹிய்யாவைக் குறிக்கிறது. தவ்ஹீதுல் உலூஹிய்யாவானது الربوبية)  توحيد) தவ்ஹீதுல் ருபூபிய்யாவையும் (توحيد الأسماء والصفات) தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது
தவ்ஹீத்;- ஓரிறைக்கொள்கை   என்பதின் கருத்து
கேள்வி :தவ்ஹீத் என்பதன் கருத்து யாது?
பதில் : தவ்ஹீத் என்ற சொல் “வஹ்ஹத” என்ற சொல்லின் வினையடியாகும். இதற்கு “ஒருமைப் படுத்துதல்” தனித்தவனாய் இருத்தல் அல்லது ஒரு குறிப்பிட்ட ஒன்றை  தனித்தன்மைப் பெற்றதாக மாற்றுதல் என்பது இதன் மொழிக் கருத்தாகும். இச்சொல்லானது மேற்படி கருத்தை பிரதிபலிப்பதாயின் இரண்டு அம்சங்களை பெற்று வரவேண்டும். அவை نفي நிராகரிpத்தல் اثبات உறுதிப்படுத்தல் என்பவையாகும். அதாவது குறிப்பிட்ட பொருளானது தனது தனித்தன்மைக்கு பொருந்தாதவற்றை ஏற்காதிருத்தல் (نفي) பொருத்தமானதை ஏற்றுக்கொள்ளுதல் (اثبات) எனும் இரு அம்சங்களை பெற்று வரும் போது தான் இவ்விடயம் சாத்தியமாக முடியும்.
அல்லாஹ்வைத் தவிர உண்மைக் கடவுள் எவருமில்லை என சாட்சி கூறி  இறைமைத்துவம் (الألوهية) அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த ஒன்றிற்கும் கிடையாது என உறுதியாக நம்பி, அல்லாஹ் மாத்திரம்தான் அதற்கு மிகத் தகுதியானவன் என உறுதியாக நம்பும் வரையில் ஒரு மனிதனின் ஒரிறைக் கொள்கை  பரிpபூரணம் பெற்றதாக அமையாது.
அதாவது முழுமையாக ஒன்றை நிராகரித்தல் என்பது அதனை முழுமையாக பொருட்படுத்தாமல் இருத்தல் என்பதாகும்.அதே போல் ஒரு விடயத்தை முழுமையாக உறுதிப்படுத்தல் என்பது ஏனையவை அத்தீர்;ப்பில் பங்குகொள்ள முடியாது என்பது அர்த்தமல்ல. உதாரணத்திற்கு அறபு இலக்கன அமைப்பில் இவ்விடயத்தை பின்வருமாறு தெளிவு படுத்த முடியும்.
ஒரு மனிதன் எழுந்து நின்றான் என நாம் குறிப்பிடின் அவன் எழுந்து நிற்பதை மாத்திரமே குறிக்கும். மாற்றமாக அவன் மாத்திரம் எழுந்து நின்றான் பிறர்; எழுந்து நிற்கவில்லை என்பதை காட்டாது ஆகவே பிறார் எழுந்து நிற்க முடியும் என்பதும் தெளிவாகும். அதே போல்; எழுந்து நிற்பவன் எவனும் கிடையாது எனக்குறிப்பிட்டால் மற்றவர்கள் இவ்விடயத்தில் பங்கு கொள்ள வில்லை என்பதை விளங்க முடிகிறது
ஸைதை தவிர எழுந்து நிற்கவில்லை என நாம் குறிப்பிட்டால் ஸைத் மாத்திரம்தான் எழுந்து நிற்பவன், மற்ற எவரும் கிடையாது என்பது பொருள்
இதே போன்றுதான் நடைமுறையில் நாம்  தவ்ஹீத் - என்ற சொல்லையும் விளங்க வேண்டும்  அதாவது தவ்ஹீத் என்பது  அல்லாஹ்வைத் தவிர  உண்மைக் கடவுள் வேறு எவரும் கிடையாது. இவ்வாசகத்தில் இரு விடயங்கள் புதைந்திருக் கின்றன. உண்மையான கடவுள் அல்லாஹ் மாத்திரம் என்பதும் இதனை  ‘إثبات" என்றும் வேறு கடவுள்;கள் கிடையாது  என குறிப்பிடும் "نفي" எனும் இரு அம்சங்களையும் கொண்டிருக்கிறது. உண்மையான தவ்ஹீத் என்பது இவ்விரு அம்சங்ளையும் பெற்று வருதன் மூலமே முழுமை பெரும்.
கேள்வி : தவ்ஹீதின் வகைகளை சுருக்கமாக குறிப்பிட முடியுமா?
பதில் : அறிஞர்;கள் குறிப்பிட்டதற்கிணங்க தவ்ஹீ;த் (توحيد) மூன்று வகைப்படுகிறது அவைகளாவன.   தவ்ஹீதுர்; ருபூபிய்யா (توحيد الربوبية), தவ்ஹீதுல் உலூஹிய்யா, (توحيد الألوهية) தவ்ஹீதுல் அஸ்மா, வஸ்ஸிபாத் (توحيد الأسماء والصفات) என்பவைகளாகும்.
இவ்வகைப்படுத்தலை அறிஞார்;கள் அல்குர்;ஆனிய வசனங்களையும், ஹதீஸ்களையும் பகுப்பாய்வு செய்வதினூடாக பெற்றுக்கொண்டதுடன் தவ்ஹீத் என்ற கருத்தியல் இம்மூன்று வகையில் உள்ளடங்கி விடுவதையும்  தமது ஆய்வினடியாகக் கண்டு கொண்டனர்.
கேள்வி : தவ்ஹீதின் வகைகளை விரிவாகவும், உதாரணங்களுடன் குறிப்பிட முடியுமா?
பதில்: பொதுவாக தவ்ஹீதின் வகைகளை அல்லாஹ்வுடன் தொடர்;பு படுத்தி குறிப்பிடும்போது “அல்லாஹ் பெற்றிருக்கும் பிரத்தியேகமான, விசேடமான அம்சங்களில் அவன் தனித்துவ மானவன் என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.”   எனும் ஒரு பொது வரைவிலக்கிணத்திற்குள் உள்ளடக்கி விடமுடியும். எனவே தவ்ஹீத் மூன்று வகைப் படுகிறது அவற்றை பின்வருமாறு விரிவாக குறிப்பிட முடியும்.
முதலாவது: தவ்ஹீதுர் ருபூபிய்யா : "التوحيد الربوبية" இப்பிரபஞ்சத்தை படைத்து பரிpபாலித்து திட்;;;டமிட்டு ஆட்சி செலுத்துவதில் அல்லாஹ்வை தனித்துவ மானவன் என ஒருமுகப்படுத்துவதே தவ்ஹீத் அர்;ருபூபிய்யா என்பதின் கருத்தாகும் எனவே தவ்ஹீதுத் ருபூபிய்யா : "التوحيد الربوبية" என்பது படைத்தல், ஆட்சிசெய்தல், திட்டமிடுதல் எனும் மூன்று அடிப்படை அம்சங்களை கொண்டிருக்கிறது இவற்றில் முதல் அம்சமான இறைப்படைப்பில் அல்லாஹ் தனித்துவமானவன் குறித்து விளங்க முற்படுவோம். இவ்வகையில்   அல்லாஹ்வைத் தவிர வேறு படைப்பாளன் கிடையாது என்ற உண்மையை பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அல்லாஹ்வைத் தவிர வேறு படைப்பாளன் இருக்கின்றானா? அவனே வானம், பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிக்கின்றான், அவனைத் தவிர உண்மையான கடவுள்; எவருமில்லை.(அல் பாதிர்; 3)
ஆகவே படைக்கின்றவனும், படைக்காதவனும் சமமாவார்;களா? நீங்கள் சிந்தித்து உணர்;ந்து கொள்ள வேண்டாமா? (அந்நஹ்ல் 17)
ஆகவே படைப்பாளன் அல்லாஹ் மாத்திரம் தான். அவன் தான் அனைத்து சிருஷ்டிகளையும் படைத்து அவற்றின் அளவையும் நிர்;ணயம் செய்தான். .அவனின் படைப்பானது அவனின் பிரதிபலிப்பு களையும் (مفعولات), அடியானின் பிரதிபலிப்புக் களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த உண்மையைத் தான்  இறை நியதி கலாகத்ரை ஈமான் கொள்ளுதலின் பூரண நிலையானது. அல்லாஹ் மனிதனது செயற்பாடுகளை சிருஷ்டிப்பவன் -படைப்பவன்; என ஈமான் கொள்வது எடுத்து காட்டுகிறது. இது குறித்து அல்லாஹ் குறிப்பிடும் போது “உங்களையும் நீங்கள் செய்யும் செயல் களையும் அல்லாஹ் படைத்தான் என குறிப்pடுகிறான்.
இதனை மேலும் தெளிவு படுத்துவதாயின் அடியானின் செயற்பாடானது அவனின் பண்புகளில் ஒன்றாகும். அடியான் அல்லாஹ்வுக்காக படைக்கப்பட்டவன் எனவே ஒரு குறித்த பொருளை படைத்தவன் அதன் பண்புளையும் படைத்தவனா வான் என குறிப்பிட முடியும்.
இவ்விடயத்தை இன்னொரு வகையில் குறிப்பிடுவதாயின் “அடியான் செய்யும் செயலானது  அவனின் பூரண விருப்பத்துடன், அவனது ஆற்றலுக்குட்பட்டும் நிகழ்கிறது. எனவே காரணத்தைப் படைத்தவன் அக்காரணத்திற்கு படுகின்றவைகளையும் படைத்துள்ளான் என்பது தெளிpவாகிறது.
அத்துடன்  இப்படைத்தல்  என்ற விடயத்தில் அல்லாஹ் தனித்துவமானவன் என அல்லாஹ்விற்கு மாத்திரம் குறிப்பிட்டாலும், இவ்விடயமானது மனிதர்;களுடனும் தொடர்பு படுவதை காணலாம். இக்கருத்தை பின்வரும் அல்லாஹ்வின் திருவசனத்திலிருந்தும் நபியவர்;க ளின் கூற்றிலிந்தும் பெற முடிகிறது.  “படைப்பாளர்;களில் மிகச் சிறந்தவனான  அல்லாஹ் மிகவும் மகத்துவமிக்கவனாக உள்ளான் (அல் முஃமினூன் -14)
நபி ஸல் அவர்;கள் சிலைகளை வடித்தவர்;கள்  பற்றி குறிப்பிடும் போது  “மறுமை நாளில்  அவர்;களைப் பார்;;த்து நீங்;கள் படைத்தவைகளுக்கு நீங்களே  உயிர்; கொடுங்கள் என அவர்;களுக் கூறப்படும்”.
மேற்படி இக்கருத்துக்கான பதிலாவது அல்லாஹ் அல்லாதவர்;கள் அல்லாஹ்வின் படைப்பை போன்று படைக்க முடியாது என்பதுதான். ஏனெனில் இல்லாமையிருந்து புதிதாக படைத்தல் என்பதும் மரணித்தவரை உயிர்;ப்பிப்பதும் முடியாத விடயங்களாகும். மனிதனின் படைப்பு என்பது மாற்றத்தை ஏற்படுத்துதல், ஒரு பொருளை இன்னொரு வடிவத்துக்கு மாற்றுதல் போன்ற வற்றுடன் வரையறுக்கப் பட்டுள்ளது. ஏனெனில் அவனும் அல்லாஹ்வின் படைப்பாகும். உதாரணத்திற்கு ஒரு மனிதன் புகைப்படம்  எடுத்தால் அவன்; எந்த ஒன்றையும் புதிதாகச் செய்யவில்லை  இவ்விடயத்தில் அவனின் உச்சகட்ட முயற்சியானது குறிப்பிட்ட பொருளை இன்னொன்றாக மாற்றியமையே.  அதாவது  கலிமண்ணால் ஒரு பறவையை, ஒட்டகத்தை  வடிவமைப்பது போன்றாகும்  அல்லது வெள்ளை காகிதத்தில் அழகான வர்;ணங்களை பயன்படுத்தி அழகான உருவத்தை வரைவதற்கு  ஒத்ததாகும். எனவே இந்த செயற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட வர்ணமும் வெள்ளைக் காகிதமும் அல்லாஹ்வின் படைப்பாகும் என்பதே உண்மை.
இதுவே அல்லாஹ்வி;ன் படைத்தலுக்கும், மனிதனின் படைத்தலுக்கிடையில் உள்ள வித்தியாசமாகும். எனவே நாம் மேலே குறிப்பிட்டது போன்று  அல்லாஹ் அவன் பெற்றி ருக்கும் பிரத்தியேகமான அம்சங்களில் தனித்துவ மானவனாக இருக்கிறான் .இவ்விடயத்தில் மனிதனுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
அத்துடன் தவ்ஹீதுத் ருபூபிய்யா : "توحيد الربوبية"; உள்ளடக்கியுள்ள இன்னொரு  அடிப்படை அம்சம் யாதெனில்; அல்லாஹ்வின்  ஆட்சி அதிகாரம் பற்றியதாகும். இந்த விடயத்திலும் அல்லாஹ் மாத்திரமே தனித்துவமானவனாக உள்ளான். அல்லாஹ் இது பற்றி பிரஸ்தாபிக்கும் போது “ஆட்சி யாரின் கையில் உள்ளதோ அவன் துய்மை யானவனாக உள்ளான். அவன் யாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்” (ஸூறத்துல் முல்க் 1)
“நீங்கள் அறிந்திருந்தால் (உங்களைப்) பாதுகாப்ப வனும், எவராலும் பாதுகாக்கப்படாதவனும், அனைத்து பொருட்களிலும் தனது அதிகாரத்தை வைத்திருப்பனும் யார்? நபியே நீ அவர்;களிடம் கேட்பீராக. (அல் முஃமினுன் 88)
இவ்வசனங்கள் யாவும் இப்பிரபஞ்சத்தில் முழுமையான அதிகாரத்தை பெற்றவன் அல்லாஹ் மாத்திரமே எனக் குறிப்பிடுகின்றன. எனினும் இவ்வதிகாரத்தின் சிலதை ஏனையவர்;களும்  பெற்றிருக்க முடியும் என்பதை பின்வரும் அல்குர்;ஆனிய வசனங்களில் குறிப்பிடுகின்றான். “நீங்கள் எவற்றின் திறவு கோள்களை உடமையாக்கிக் கொண்டீர்;களோ…..” அந்நூர்; 61
“அவர்;களின் மனைவியார் மற்றும் அவர்;கள் வலக்கரம் சொந்தமாக்கி;க்கொண்டோர்; தவிர “ அல் முஃமினூன்
மேற்படி வசனங்களும் இதே கருத்தை வலியுறுத்தும். இது போன்ற வசனங்கள் யாவும் அல்லாஹ் அல்லாதவர்;களும் அதிகாரம் பெற்றிருக் கிறார்;கள் என்பதை குறிப்பிடுகிறது.
ஆனாலும் அவ்வதிகாரம் யாவும் முழுமையற்றது, வரையறுக்கப்பட்டது என்பதே உண்மையாகும், இதனை ஒரு எளிய உதாரணம் மூலம் விளக்க முடியும். அதாவது ஸைதிற்குச் சொந்தமான ஒரு வீடு அம்ருக்கு சொந்தமானது அல்ல. அதே போல் அம்ரின் வீடு ஸைதிற்கு சொந்தமானது அல்ல. எனவே இவ்வதிகாரமானது மனிதனைப் பொறுத்த மட்டில் வரையறுக்கப்பட்டது. அதே போல் ஒரு மனிதன் முழு அதிகாரம் பெற்றவற்றில் கூட அல்லாஹ் விதித்த வரையறையுடன்தான் அதனை நிர்;வகிக்க முடியுமே தவிர அவனின் சுய விருப்பின் போpல் அதனை நிர்;வகித்து அதிகாரம் செலுத்த முடியாது, இதைத்தான் நபி ஸல்) அவர்;கள் செல்வங்களை  எவ்விதத் தேவையின்றி வீணாக்ககுதலை அல்லாஹ் தடுத்திருப்பதாக குறிப்பிட்டார்;கள். அத்துடன் இதே கருத்தை அல்லாஹ் பின்வரும் அல் குர்;ஆன் வசனத்திலும் குறிப்பிடுகின்றான். “அல்லாஹ் உங்களிடம்; நிர்;வகிப்பதற்காக வழங்கியிருக்கும் சொத்துக்களை விபரம் அறியாதவர்;களிடம் கொடுத்துவிடாதீர்;கள்.”  அன்னிஸா 5
மேற்குறிப்பிட்ட இறைவசனங்களும்; நபியவர்களின் ஹதீஸூம் மனிதன் பெற்றிருக்கும் அதிகாரம் குறைவானது, வரையறுக்கப்பட்டது என்பதற்கான தௌpவான ஆதாரமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். நிறைவானதும், முழுமையானதும் அதிகாரத்திற்கு சொந்தக்காரனாக அல்லாஹ் மாத்திரமே உள்ளான். அவன் நாடியதை செய்பவன் அவன் செய்பவற்றை குறித்து கேள்வி கேட்டு விசாரிக்கும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. ஆனால் மனிதன் செய்யும் செயல்களைக் குறித்து விசாரிக்க முழு அதிகாரம் பெற்றவன் அவனே.
தவ்ஹீத் அர்;ருபூபிய்யா உள்ளடக்கியுள்ள மூன்றாவது அடிப்படை அம்சம் யாதெனில் அவனின் திட்டமிடலாகும். இதிலும் அவன் மாத்திரம் தனித்துவம் நிறைந்தவனாக உள்ளான். எனவே சிருஷ்டிகளைப் படைத்து வானங்கள் மற்றும் பூமியின் சீரான இயக்கத்தை திட்டமிட்டு வழிநடாத்துகிறான். இதனை அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகின்றான் “படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும்  அதிகாரமும் அவனுக்கே உரியனவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அகிலாத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்” அல் அஃராப் 54
அல்லாஹ்வின் இத்திட்டமிடல் நிறைவானதும் முழுமையானதுமாகும். இதனை தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ எவருக்கும் முடியாது ஆனாலும் அல்லாஹ்வின் சில படைப்பினங்க ளுக்கு இப்பண்பை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். உதாரணத்திற்கு மனிதன் தனது செல்வங்களை குழந்தைகளை, பணியாளர்களை திட்டமிட்டு வழி நடாத்தும் விடயத்தைக் குறிப்பிடலாம். இவைகள் யாவும் குறிப்பிட்ட விடயங்களுடன்  வரையறுக்கப் பட்டுள்ளன. இவை முழுமையான திட்டமிடல் அல்ல.
ஆகவே தவஹீதுத் ருபூபிய்யா : "توحيد الربوبية" விற்கான வரைவிலக்கணத்தில் குறிப்பிடப்பட்ட படைக்கும் ஆற்றல், அதிகாரம், திட்டமிடல் எனும் மூன்று அம்சங்களிலும் அல்லாஹ் தனித்துவ மானவன் என்பதை ஏற்றுக்கொள்ளல் என்ற  எமது கூற்று உண்மையானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.   தவ்ஹீதின் - ஓரிறைக் கொள்கையின் -இரண்டாம் பகுதி தவ்ஹீதுல் உலூஹிய்யா (توحيد الألوهية) வாகும் – வணங்கி வழிபடுவதன் மூலம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி ஏற்றுக்கொள்வது இதன் கருத்தாகும்.
அல்லாஹ்வை வணங்கி அவனை நெருங்குவது போன்று மனிதன் அல்லாஹ்வுடன்  வேறொன்றை சேர்த்து  வணங்கி வழிபட்டு நெருங்குவதற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொள்வது இப்பிரிவிற்கு மாற்றமான அம்சமாகும். இப்பிரிவில்தான் இணைவைப்பாளர்;கள்- அல்லாஹ் அல்லாதவற்றை கடவுளாக மதித்து நடக்கும் அனைவரும் - வழிதவறியுள்ளனார். .மேலும்–தவ்ஹீதுர்; ருபூபிய்யாவுடனும், தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் என்ற பிரிவுடன் சோ;த்து - தவ்ஹீதுல் உலூஹிய்யா (توحيد الألوهية) வை நிலை நாட்டவே தூதா;கள் அனுப்பட்டமையும், வேதங்கள் இறக்கப் பட்டமையுமாகும்.
மனிதன் அல்லாஹ்வுக்கு செலுத்தும் வணக்கங்கள் எதையும் அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குக்கோ, இறைதூதருக்கோ,  இறை நேசருக்கோ, அல்லாஹ்வின் படைப்புக்களில் ஒன்றிற்கோ செலுத்தி விடாமல் இருப்பதற்காக நபிமார்;கள் - இறை தூதர்கள் தனது சமூகத்திற்கான இறைபிரச்சாரத்தில் அதிகம் கவனம் செலுத்திய ஒரு பகுதியாக தவ்ஹீத் உலூஹிய்யா உள்ளது. காரணம் யாதெனில் வணக்கம் என்பது அல்லாஹ்விற்கு மாத்திரம் செலுத்தப் பட வேண்டிய ஒன்றாக இருப்பதினாலாகும். இவ்வடிப்படையை ஏற்காதவன் தவ்ஹீதின் இரு பிரிவுகளான தவ்ஹீ;த் ருபூபிய்யாவையும், தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் ஆகியவற்றை ஏற்றிருப்பினும் அவன் அல்லாஹ்வை நிராகரித்த ஒரு இணைவைப்பாளானாகக் கருதப்படுவான்.
உதாரணத்திற்கு ஒரு மனிதன் அல்லாஹ்வை உண்மையான படைப்பாளன், அதிகாரம் படைத்தவன், அனைத்து விடயங்களையும் மிகச் சிறப்பாக திட்டமிடுபவன் எனவும், அவனுக்கு தகுதியான அழகான திருநாமங்களும், பண்புகளும் உண்டு என்று ஈமான் கொண்டாலும் அவனின் இவ்விசுவாசம் பயனற்றது. அதே போல் ஒரு மனிதன் தவ்ஹீதுத் ருபூபிய்யாவையும், அஸ்மா வஸ்ஸிபாத்தையும் முழுமையாக ஏற்று கொண்டு சமாதிகளிடம்; சென்று அதில் அடக்கப்பட்டவனை வணங்கி, அல்லாஹ்வை நெருங்குவதற்காக அவருக்கு குர்;பானி கொடுப்பவன், அல்லாஹ்வை ஏற்காத ஒர்; இணைவைப்பாளனும் நிரந்தர நரகவாதியுமாவான்.
 நபி (ஸல்); அவர்;கள்  எதிர்;த்துப் போராடிய இணை வைப்பாளர்;களை பொருத்த வரையில் அவர்;கள் தவ்ஹீதுர் ருபூபிய்யாவை அதாவது அல்லாஹ் தான் படைத்து பரிபாலிக்கும் இரட்சகன் என்பதை எவ்வித சந்தேகமுமின்றி ஏற்றிருந்தும் தவ்ஹீதுல் உலூஹிய்யாவை ஏற்றுக்கொள்ளாத காரணமாக  அவர்;களுடன் போராடியது மட்டுமல்லாமல் அவர்;களின்  உயிர்;களுக்கும், உடமைகளுக்கும் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை இந்த விடயத்தை இறை வேதத்தை வாசித்த அனைவருக்கும் புரிந்து கொள்ள முடியும்  எனினும் இவர்கள்; அல்லாஹ் வுடன் சோ;த்து பிறவற்றையும்  வணங்கியதால் இறைநிராகாpப்பாளார்களாக மாறிவிட்டனர்;.
தவ்ஹீதின் மூன்றாவது வகை தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் (توحيد الأسماء والصفات) “கண்ணிய மிக்க அல்லாஹ் அல்குர்;ஆனில் அவனைப்பற்றி எவ்வாறு பெயரிட்டும், வர்;ணித்தும் கூறியுள்ளானோ அவற்றிலும் அவனது தூதர்; நபி ஸல் அவர்;கள் மொழிந்த ஆதாரபூர்;வமான ஹதீஸ்களில் அல்லாஹ்விற்கு எந்தெந்தப் பெயர்;களை பண்புகளைக் கூறி வர்;ணித்து உள்ளார்;களோ அவற்றைத் திரிபு படுத்தாமலும், இல்லையென்று மறுக்காமலும், உருவகப் படுத்தாமலும், உவமைக் கற்பிக்காமலும் நம்புவதன் மூலம் அவனை ஒருமைப்படுத்தி ஏற்றுக் கொள்வதாகும்.
ஆகையால் அல்லாஹ் தனக்கென குறிப்பிட்டி ருக்கும் பெயார்களையும், பண்புகளையும்  உருவகப்படுத்தாமலும், உவமைக்கற்பிக்காமலும் (مجاز) மறைபொருள் கொள்ளாது (حقيقة) நேர்;பொருளாக ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இவ்வகையைப் பொருத்தவரை இஸ்லாமிய உம்மத்தில் உள்ள பல பிரிவினர்;களும்,  இஸ்லாத்தை மார்;க்கமாகக் கொண்டவர்களும் பல விதத்திலும் வழிதவறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அவர்;களில் ஒரு பிரிவினர்; அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் முகமாக அவனுக்கு பெயர்களும்,; பண்புகளும் கிடையாது என முற்றாக மறுத்து இஸ்லாமிய வரம்பை விட்டு வெளியில் செல்லுமளவுக்கு அதிதீவிர கருத்தை கடைப்பிடித்தனா;ர். இன்னும் ஒரு பிரிவின;ர் இதி;ல் நடுநிலைப்போக்கைக் கையான்டனர். மற்றும் ஒரு பிரிவினர்; அஹ்லுஸ்ஸூன்னாவிற்கு நெருக்கமான கருத்துக்களை வெளியிட்டனார். என்றாலும் இவ்விடயத்தில் ஸலபுகளை பொருத்தவரை “அல்லாஹ் தன்னை எவ்வாறு பெயரிட்டு பண்புகளைக் கூறி  அழைத்துள்ளானோ அவற்றை அதே விதத்தில் எவ்வித திரிபு படுத்தலு மின்றியும், மறுத்துரைக்காமலும், உருவகப்படுத்தாமலும், உவமை கூறாமலும் ஏற்றுக்கொள்வதைத்தான் வழிமுறையாகக் கொண்டுள்ளனர்;.
இப்பகுதியை ஒரு சில உதாரணங்களுடன் விளக்க முற்படுகின்றேன். அதாவது அல்லாஹ் தனக்கு நித்திய ஜீவன் என்ற பெயரை வைத்துள்ளான். எனவே இப்பெயரை நாம்  الحي  என்ற அல்லாஹ் வின் பெயரில் நிறைவான பூரண வாழ்வு எனும் பண்பு உள்ளடங்கியுள்ளது. எனவே இதிலிருந்து நித்தியமும் நிறைவானதுமான வாழ்வு அல்லாஹ் வுக்குரியது என ஈமான் கொள்ள வேண்டும்.
அதே போன்று அல்லாஹ் அஸ்ஸமீஉ – நன்றாகக்; கேட்கக் கூடியவன் அல் அலீமு யாவற்றையும் நன்கறிந்தவன். எனும் பெயர்களை குறிப்பிட்டி ருக்கிறான். அவைகள் இரண்டும் அல்லாஹ்வின் திருநாமங்களாகும். அதே வேளை  இப்பெயர்;கள் பண்புகளான கேட்டல், அறிதல் போன்றவற்றை  கொண்டிருக்கின்றன ஆகவே கேட்டல் அறிதல் எனும் பண்புகளைக் அவன் பெறாமல் இத் திருநாமங்களை பெற்றிருப்பது சாத்தியமற்றது.
இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடுகின்றேன். அல்லாஹ் தனது திரு மறையில் “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது. என்று யூதர்;கள் கூறுகிறார்;கள். அவர்;களின் கைகளே கட்டப் பட்டுள்ளன. மாறாக அவனின் இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன.
அல்லாஹ் இத்திருவசனத்தில் தனக்கு விரிந்த இரு கைகள் உள்ளன என குறிப்பிடுகின்றான். விரிந்த என்பது  இங்கு தாராளமான வாரிவழங்கக் கூடிய என பொருள் படும். ஆகவே நாம் அல்லாஹ்விற்கு அருள்கள் நிறைந்த இரு கைகள் உள்ளன என ஈமான் கொள்ளல் வேண்டும். ஆனால் எமது உள்ளங்களிலோ, அல்லது கற்பனைகளிலோ எமது நாவுகளாலோ ஒரு போதும் அக்கைகளை உருவகப்படுத்தி உவமானம் கூற முற்படக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் “அவனைப் போன்று எதுமில்லை அவன் நன்கு செவிமடுக்க கூடியவனாகவும், யாவற்றையும் நன்கு பார்;க்கக் கூடியவனாகவும் உள்ளான் என குறிப்பிடுகின்றான்.
மேலும் அல்லாஹ் தனது திருமறையில் “மானக் கேடானவற்றில் பகிரங்கமானவற்றையும், மறைவானவற்றையும், நேர்;மைக்கு மாறாக வரம்பு மீறுவதையும், எவ்வித ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்காமல் இருக்கும் போது அவனுக்கு இணை வைப்பதையும், அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடுத்துள்ளான் என நபியே நீர்; கூறுவிராக.
மேலும் அல்லாஹ் மீது உமக்கு எது பற்றி அறிவில்லையோ அதை நீ பின்பற்ற வேண்டாம். பார்;வை செவிப்புலன் ஆகிய இவை ஒவ்வொன்றும்; விசாரிக்கப்படக்கூடியதாக உள்ளது .
எவனொருவன் அல்லாஹ்வின் இரு கைகளையும் அடியார்;களின் கைகளுக்கு உவமை கூற முயற்சிக்கின்றானோ அவன் அல்லாஹ்வின் கூற்றான |”அவனைப் போன்று எதுமில்லை அவன் நன்கு செவிமடுக்ககூடியவனாகவும், யாவற்றையும் நன்கு பார்;க்கக்கூடியவனாகவும் உள்ளான் என்ற வசனத்தை பொய்ப்பித்து “அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணம் கூறாதிர்;கள் என்ற இறைவசனத்திற்கு முரணாக நடந்த ஒருவனாக மாறி விடுகின்றான்
அதே போல் அல்லாஹ்வின் கைகளை எவனொருவன் குறிப்பிட்ட வடிவத்திற்கு உருவகப் படுத்துகின்றானோ அவன் அறிவில்லா ஒரு விடயத்தை கூறி அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டியவனாக மாறிவிடுகின்றான்.