நோயாளியின் தொழுகையும் அதன் விதி முறைகளும்

1. நோயாளியின் தொழுகையும் அதன் விதி முறைகளும்.2. சுத்தம் செய்தல் தொடர்பான சில சட்டங்கள். 3. தயம்மும். 4. நோயாளிகளும், அவர்களின் நிலையும்.5. நோயாளியின் தொழுகையும், அதனை நிறைவேற்றும் முறையும்

நோயாளியின் தொழுகையும்
அதன் விதி முறைகளும்
தலைப்பு
< தமிழ் >

 


நூல்ஆசிரியர்
அஷ் ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹி)

மொழி பெயர்ப்பாளர்
Y.M செய்யது இஸ்மாயில் இமாம்

மீளாய்வு செய்தவர்
முஹம்மத் அமீன்

 
أحكام صلاة المريض وطهارته
< تاميلية >
        
اسم المؤلف
لسماحة الشيخ عبد العزيز بن عبدالله بن باز رحمه الله




ترجمة:
 سيد إسماعيل إمام بن يحي مولانا
مراجعة:
محمد أمين
 
أحكام صلاة المريض وطهارته
لسماحة الشيخ عبد العزيز بن عبدالله بن باز رحمه الله
إعداد القسم العلمي بمدار الوطن
مدار الوطن للنشر
المترجم/ سيد إسماعيل إمام بن يحي مولانا

என்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம். அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் நமது அன்புக்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், அன்னாரின் கிளையார், தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
தொழுகை, இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை களில் ஒன்று. ஒரு கட்டிடத்திற்கு தூண் எப்படி அவசியமோ, இஸ்லாத்திற்கு அதை விடவும் தொழுகை அவசியம். எனவே தொழுகை இல்லாதவனுக்கு, இஸ்லாத்தில் எந்த அருகதையும் இல்லை. ஆகையால்தான் “தொழுகையைத் தகர்த்தவன், இஸ்லாத்தைத் தகர்த்தவன்” என்று ரஸுல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
தொழுகைக்கு சுத்தம் அவசியம். சுத்தம் பேணாதத் தொழுகை, ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மேலும் தொழுகைக்கென்ற பிரத்தியேகமான சுத்தமே வுழூஃ எனப்படுகிறது. சில சந்தர்ப்பங் களில் குளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்படுகின்றது. எனினும் சில வேளைகளில் தண்ணீர் கிடைக்காமலோ, அல்லது அதனைப் பயன்படுத்த முடியாமலோ போகலாம். அவ்வாறான சந்தர்ப்பத்திலும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதியில்லை.
எனவே, குறிப்பாக நோயாளிகள் இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆகையால் அவர்கள், எவ்வாறு சுத்தம் பேணி, தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து அல்குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்க ளுடன் இஸ்லாமிய அறிஞர்கள் பல நூல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளனர். அதன் வரிசையில் உலகம் போற்றும் மாமேதை அஷ்ஷைய்க் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்) அவர்கள்,
"أحكام صلاة المريض وطهارته"
என்ற பெயரில் சுருக்கமாகவும் தெளிவாகவும் கைநூல் ஒன்றை எழுதியுள்ளார்கள். அதில் அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக ‘இஸ்திஜ்மார்’- கற்களைக் கொண்டு சுத்தம் செய்யும் முறையினைப் பற்றியும், மற்றும் தயம்மும் செய்யும் முறையினைப் பற்றியும் விளக்கியுள்ளார்கள். மேலும் தயம்மும் செய்வதற்காக, கையை மண் மீது இரண்டு தடவைகள் அடிக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை அடிக்க வேண்டுமா? அவ்வாறே உள்ளங் கையில் பட்டுள்ள தூசியை, இரண்டு முழங்கை வரையில் தடவுவதா, அல்லது மணிக்கட்டு வரையில் தடவுவதா, என்ற விடயத்தில் மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து முரன்பாடுகள் நிலவுகின்றன. எனினும் அம்மார் இப்னு யாஸிர் (ரஹ்) சம்பந்தப்பட்ட ஹதீஸில், இவ்விடயம் தெளிவாக இருக்கின்றபடியால், பின் பாஸ் (ரஹ்) அதன்படி தன் முடிவை முன் வைத்துள்ளார்கள்.    அந்நூலையே, “நேயாளியின் தொழுகையும். அதன் விதி முறைகளும்” எனும் பெயரில் அடியேன் மொழி பெயர்த்துள்ளேன். இதன் மூலம் இஸ்லாமிய தமிழ் உலகம் பயன் பெறும் என்பது எனது நம்பிக்கை.
நம் அனைவரின் குற்றம் குறைகளையும் அல்லாஹ் மன்னித்து ஈருலகிலும் நம் அனைவருக்கும் நற் பாக்கியத்தைத் தந்தருள்வாக.
وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين
                       
திக்குவல்லை இமாம் (ரஷாதீ-பெங்களூர்
13/09/2015                
 

நோயாளியின் தொழுகையும்
அதன் விதி முறைகளும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.
புகழ் யாவும் சர்வ உலகின் இரட்சகனான அல்லாஹ் வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் நபிமார்கள், ரஸூல்மார்கள் யாவரிலும் மிகவும் சிரேஷ்டமான நமது நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார் தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
ஒரு தொழுகையாளிக்குத் துடக்கு ஏற்பட்டி ருந்தாலோ. அல்லது அவரின் உடலிலோ உடையிலோ தொழும் ஸ்தானத்திலோ அசுத்தம் இருந்தாலோ முதலில் அதனை நீக்கி சுத்தமாக வைத்துக்க கொள்வது அவசியம். ஏனெனில் துடக்கை விட்டும் நீங்கி இருப்பதுவும் முன் குறிப்பிட்ட மூன்று பொருட்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வதும் தொழுகை செவ்வனே நிறைவேறத் தேவையான இரண்டு நிபந்தனைகளாகும்.
எனவே தொழுகையை நிறைவேற்ற விரும்பும் ஒருவர் சிறு துடக்கு உடையவராக இருப்பின் முதலில் அவர் வுழூஃ செய்து கொள்வதுவும், பெருந் துடக்கு உடையவராக இருப்பின் குளித்துக் கொள்வதும் கடமையாகும். மேலும் மல சலம்  ஏற்பட்டிருந்தால், வுழூஃ செய்து கொள்ளு முன்னர் அதனை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்காக தண்ணீரை அல்லது அசுத்தத்தை உரிஞ்சும் படியான கல் அல்லது மெல்லிய காகிதத் துண்டை அல்லது துணி எதனையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
சுத்தம் செய்தல் தொடர்பான சில சட்டங்கள்
மல சலமோ அல்லது வேறு ஏதாகிலுமோ முன் பின் வழிகள் மூலம் வெளிப்பட்டால் அதனைத் தண்ணீர் கொண்டோ, அல்லது அசுத்தத்தை உரிஞ்சும் படியான கற்களைக் கொண்டோ,  அல்லது வேறு ஏதாகிலும் ஒரு பொருளைக் கொண்டோ சுத்தம் செய்து கொள்வது கடமை. ஆனால் காற்று வெளிப்பட்டதற்காக, சுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை. அதற்காக வுழூஃ மாத்திரம் செய்து கொள்வது போதுமானது. ஏனெனில் அசுத்தம் ஏற்பட்டாலே, அதனைச் சுத்தம் செய்வது கடமை, ஆனால் நித்திரைக் கொண்டதாலோ, காற்று வெளிப்பட்டதாலோ அசுத்தம் உண்டாகாது. எனவே அதற்காக சுத்தம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை, என்பதைக் கவணத்தில் கொள்ளவேண்டும். சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பொருள் சுத்தமான வஸ்துவாக இருத்தல் வேண்டும். மேலும் அது கல்லெனில், குறைந்த பட்சம் மூன்று கற்களைக் கொண்டு சுத்தம் செய்வது அவசியம். ஏனெனில்,

في الصَّحيحين عن أبي هريرة أنَّ رسول الله صلَّى الله عليه وسلَّم قال: ((مَن استجمر فلْيوتِرْ

“ஒருவர் கல்லின் மூலம் சுத்தம் செய்வாராகில், அவர் அதனை ஒருமைப்படுத்திக் கொள்ளட்டும்” என்று ரஸுல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என்றும் (ஸஹீஹைன்)
   
« عن عائشة رضي الله عنها أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم قال: ((إذا ذهب أحدُكم إلى الغائطِ، فليذهبْ معه بثلاثة أحجارٍ يَستطيب بهنَّ؛ فإنَّها تُجزئ عنه)) (3) .ابوداوود والنسائي))

“உங்களில் எவரேனும் மலம் கழிக்கச் செல்வாராகில், அவர் தன்னுடன் மூன்று கற்களை எடுத்துச் சென்று அதனைக் கொண்டு சுத்தம் செய்து கொள்வது அவருக்குப் போதுமானது.” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள், என ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூ தாவூத், நஸாஈ). மேலும் மூன்று கற்களை விடவும் குறைந்த அளவு கற்களைக் கொண்டு சுத்தம் செய்து கொள்வதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள், என முஸ்லிமில் பதிவாகி யுள்ளது. மேலும் சுத்தம் செய்ய, விட்டை, மற்றும் அது போன்ற அசுத்தமான  பொருட்கள் எதனையும் பயன்படுத்தக் கூடாது அவ்வாரே எலும்புகளையும், உணவுப் பொருட்களையும், மற்றும் மதிக்கப்பட வேண்டிய  பொருட்களையும் இதற்காகப் பயன்படுத்தக் கூடாது.
சுத்தம் செயவதற்காக கல் மற்றும் துணி போன்ற பொருளை பயன்படுத்தும் போது, அதனைத் தெடர்ந்து தண்ணீரால் கழுவிக் கொள்வது சிறந்தது. ஏனெனில் கல் அசுத்தத்தை நீக்கவும், தண்ணீர் அசுத்தம் வெளியான இடத்தையும் சுத்தம் செய்யும். இதனால் சுத்தம் அதிகரிக்கும். எனினும் மனிதன் இவ்விடயத்தில் எதனை வேண்டு மானாலும் தெரிவு செய்து கொள்ளலாம். எனவே அவர் தண்ணீரை அல்லது கல் போன்ற பொருளைத் தனியாகவும் அல்லது அவ்விரண்டை யும் ஒன்று சேர்த்தும் எப்படி வேண்டுமானாலும் அவர் சுத்தம் செய்து கொள்ளலாம். அதனைத் தெரிவு செய்யும் சுதந்திரம் அவருக்குண்டு. ஆனால் ரஸூல் (ஸல்) அவர்கள் சுத்தம் செய்ய தண்ணீரைப் பயன்படுத்தி வந்தார்கள், என்பதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது.
عن أنس بن مالك رضي الله عنه أنه قال}  كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء ، فأحمل أنا وغلام نحوي إداوة من  ماء وعنزة ، فيستنجي بالماء{  . صحيحين

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலசல கூடத்திற்குச் செல்லுங்கால் நானும், என்னைப் போன்ற இன்னொரு பையனும் தண்ணீர் பாத்திரம் ஒன்றும், சிறிய ஈட்டி யொன்றும் எடுத்துச் செல்வோம். நபியவர்கள் அந்தத் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்து கொள்வார்கள், என்று அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரீ,முஸ்லிம்). மேலும்

عن عائشة -رضي الله عنها- مرن أزواجكن أن يستطيبوا بالماء، فإني أستحييهم، وأن رسول الله -صلى الله عليه وسلم- كان يفعله) قال الترمذي هذا حديث صحيح(

“தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளும்படி நீங்கள் உங்களின் மனைவியருக்கு உத்தரவிடுங்கள். நான் அவர்கள் விடயத்தில் வெட்கப்படுகின்றேன், நிச்சயமாக ரஸூல் (ஸல்) அவர்களும் அப்படித்தான் செய்தார்கள்” என்று ஆஇஷா (ரழி) அவர்கள் ஒரு கூட்டத்தினரிடம் கூறினார்கள். (திர்மிதீ).
எனினும் இவ்விரு பொருளிலிருந்து ஏதேனும் ஒன்றைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வ தாயின், தண்ணீரே சிறந்தது. ஏனெனில் தண்ணீர், அசுத்தத்தை மாத்திர மின்றி, அசுத்தம் வெளியான இடத்தையும் தூய்மைப் படுத்தும். ஆகையால் அசுத்தத்தை நீக்கி அவ்விடத்தைத் தூய்மைப்படுத்த தண்ணீரே மேலானது. சுத்தம் செய்ய கல், அல்லது துணி போன்ற எதனையும் பயன்படுத்துவதாயின் அதனைத் தொடர்ந்து தண்ணீரால் கழுவுவது சிறந்தது. ஏனெனில் கல் போன்றவை அசுத்தத்தை நீக்கி விடுமேயல்லாது, அசுத்தம் வெளியான இடத்தை தூய்மைப் படுத்தாது. எனவே அத்துடன் தண்ணீரைக் கொண்டு கழுவினால் அசுத்தம் வெளியான இடத்தையும் அது தூய்மைப்படுத்தி விடும். எனினும் ஒருவர், சுத்தம் செய்ய தண்ணீரை மாத்திரமோ அல்லது  கல் போன்ற பொருளையோ தெரிவு செய்து கொள்ளலாம். ஆனால் நபியவர்கள்  தண்ணீரைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பதை முன் குறிப்பிட்ட  ஹதீஸ் எடுத்துக் காட்டியது.
மூன்று கற்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பட்சத்தில், அவை அசுத்தத்தை நீக்கிவிட்டால் அதுவே போதுமானது. ஆனால் அது போதாது எனக்கண்டால், அசுத்தம் நீங்கும் வரை நான்கு, ஐந்து என தேவைக்கேற்ப கற்களின் எண்ணிக்கை யை அதிகரித்தல் வேண்டும். அச்சமயம் கற்களின் எண்ணிக்கை ஒருமை வாய்ந்திருப்பது  சிறந்தது. ஏனெனில்,
 في حديث أبي هريرة في الصحيحين:  من استجمر فليوتر

“எவர் கல்லின் மூலம் சுத்தம் செய்கின்றாரோ அவர் அதனை ஒருமையில் நிறைவு செய்து கொள்ளட்டும்.” என்று நபியவர்கள் நவின்றுள் ளார்கள். மேலும் வலது கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம், என நபியவர்கள் தடுத்துள்ளார்கள், என்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும். அவ்வாறே
أخرج الشيخان من حديث أبي قتادة قال رسول الله صلى الله عليه وسلم: لاَ يُمْسِكَنّ أَحَدُكُمْ ذَكَرَهُ بِيَمِينِهِ وَهُوَ يَبُولُ. وَلاَ يَتَمَسّحْ مِنَ الْخَلاَءِ بِيَمِينِهِ. .
சிறுநீர் கழிப்பவன் தன் மர்மஸ்தானத்தை வலது கையால் தொடக் கூடாது
மேலும் மலம் கழிப்பவன் வலது கையால் துடைக்கவும் கூடாது” என்று நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.
எனினும் இடது கை துண்டிக்கப்பட்டோ, அல்லது உடைக்கப்பட்டோ, ஏதேனும் நோய்க்கு இலக்காகியோ இருந்தால், வலது கையைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. மேலும்  தண்ணீரையும், கல் போன்ற வற்றையும் சேர்த்து சுத்தம் செய்வது சிறந்ததும் பரிபூரணமானதுமாகும்.
இஸ்லாமிய     ஷரீஆ    இலகுவின்    அடிப்படை யில்    உருவாக்கப்பட்டதாகும்.
எனவே துன்பத்துக்குள்ளானோர், இபாத்தத்துக் களை சிரமமின்றி நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அல்லாஹ் அவர்களுக்கு சில சலுகைகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளான். இதனை இறை வசனம் இப்படி இயம்புகிறது.
“وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَ‌جٍ ۚ (الحج/78)
“இந்த மார்க்கத்தில் அவன் (அல்லாஹ்) உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்த வில்லை” (22\78)
يُرِ‌يدُ اللَّـهُ بِكُمُ الْيُسْرَ‌ وَلَا يُرِ‌يدُ بِكُمُ الْعُسْرَ‌(البقرة/185)
“அல்லாஹ் உங்களுக்கு இலகுவைக் கொடுக்க நாடுகிறான். மேலும் அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை” (2/185)
فَاتَّقُوا اللَّـهَ مَا اسْتَطَعْتُمْ  (التغابن/16)
“உங்களால் இயன்ற அளவுக்கு அல்லாஹ்வுக்குப் பயந்து நடவுங்கள் (64\16)
மேலும், ரஸூல் (ஸல்) அவர்கள்,
: " إذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم " ,  (رواه البخاري)
“நான் உங்களுக்கு ஒரு விடயத்தை உத்தரவிட்டால், முடிந்த வரை நீங்கள் அதனைச் செய்யுங்கள்.” என்றும்
 
"إن الدين يسر" )رواه البخاري)
“நிச்சயமாக மார்க்கம் இலேசானது.” என்றும் நவின்றார்கள்.”

தயம்மும்
எனவே நோயாளிக்குத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாது என்றிருந்தாலோ அல்லது  அதனால் தன்னுடைய நோய் அதிகரித்து விடுமென்ற பயமோ, அதிலிருந்து குணமடைய கால தாமதம் ஏற்படும் என்ற அச்சமோ இருந்தால், அவன் தனது சிறு துடக்கை நீக்கிக் கொள்ள வுழூஃ செய்வதையும், பெரு துடக்கை நீக்கிக் கொள்ள குளிப்பதையும் தவிர்த்து, பதிலாக ‘தயம்மும்’ செய்து கொள்ளலாம். ‘தயம்மும்’ என்பது உள்ளங்கை இரண்டையும் மண்ணுக்கு மேல் ஒரு தடவை அடித்து, விரல்களின் உற்புரத்தை  முகத்திலும், இரண்டு உள்ளங் கைகளையும் மணிக் கட்டின் மீதும், தடவிக் கொள்வதாகும். எனவே தண்ணீர் கிடைக்காதவனுக்கு, என்ன சலுகை வழங்கப்பட்டுள்ளதோ அதே சலுகையை, தண்ணீரைப் பயன்படுத்த இயலாதவனுக்கும் ஷரீஆ வழங்கியுள்ளது. என்பதை, அல்லாஹ்வின் திரு வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُ‌وا ۚ وَإِن كُنتُم مَّرْ‌ضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ‌ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ ۚ (المائدة/6)
“நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி நீங்கள் நோயாளியா கவோ அல்லது பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலசல கழிக்க சென்று வந்திருந்தோ அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தோ, இருக்கின்ற நிலையில் தண்ணீரை நீங்கள் பெறாவிடில் சுத்தமான மண்ணை நாடுங்கள். பின்னர் அதிலிருந்து உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்”(5\6)
 
فَاتَّقُوا اللَّـهَ مَا اسْتَطَعْتُمْ  (التغابن/16)
“உங்களால் இயன்ற அளவுக்கு அல்லாஹ்வுக்குப் பயந்து நடவுங்கள் (64\16). மேலும்,
 وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَ‌جٍ ۚ (الحج/78)
 
“இந்த மார்க்கத்தில், அல்லாஹ் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை” (22/78)
மேலும், ரஸூல் (ஸல்) அவர்கள்,
 إذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم " ,  (رواه البخاري)
 “உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் உங்களால் சாத்தியமான வரையில் அதனை நடைமுறைப் படுத்துங்கள்” என்றும்,
"إن الدين يسر" )رواه البخاري)
“நிச்சயமாக மார்க்கம் இலகுவானது” என்றும்  குறிப்பிட்டுள்ளார்கள்.
 “ ரஸூல் (ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவரகளிடம்
إنما يكفيك أن تقول بيديك هكذا - ثم ضرب بيديه الأرض ضربة واحدة ، ثم مسح بهما وجهه وكفيه  .  
“நீங்கள் உங்களின் இரண்டு கைளாலும் இவ்வாறு செய்து கொள்வது உங்களுக்குப் போதுமானது” என்று கூறிய நபியவர்கள் தன்னுடைய இரண்டு கரங்களையும் பூமியின் மேல் ஒரு தடவை அடித்தார்கள். பின்னர் அவற்றைக் கொண்டு தனது முகத்திலும், இரண்டு மணிக்கட்டின் மேலாலும் தடவினார்கள். என்ற நபி அவர்களின் ஸுன்னாவும் உறுதி செய்கின்றன.
தய்யம்மும் செய்யப் உபயோகிக்கும் மண், சுத்தமாக இருப்பது அவசியம். மேலும் ‘தயம்மும்’ செய்கிறேன் என்ற நிய்யத் - எண்ணமும் அவசியம். தயம்மும் நிறைவேற இவை இரண்டும் முக்கியமான நிபந்தனைகளாகும். எனவே இவை கவணிக்கப்படாது போனால் தயம்மும் செல்லுபடியாகாது. இதனை.
“عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه ، قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول   إنما الأعمال بالنيّات ، وإنما لكل امريء مانوى ، فمن كانت هجرته إلى الله ورسوله ، فهجرته إلى الله ورسوله ، ومن كانت هجرته لدنيا يصيبها ، أو امرأة ينكحها ، فهجرته إلى ما هاجر إليه ) رواه البخاري ومسلم في صحيحهما .
“செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொருத்தேயாம், யாவருக்கும் அவ்வரவர் எண்ணியதே அநுகூல மாகும்” என்ற நபி மொழி உறுதி படுத்துகிறது.
நோயாளிகளும், அவர்களின் நிலையும்
எல்லா நோயாளிகளின் நிலையும் சமதன்மை வாய்ந்ததல்ல. எனவே அதற்குத் தக்கபடியே, தயம்மும் விடயத்தில் அவர்களுக்குச் சலுகைத் தரப்பட்டுள்ளது, என்பதைக் கவணத்தில் கொள்ள வேண்டும்.
1.    இலேசான நோயுள்ளவன், தண்ணீரைப் பயன் படுத்துவதன் மூலம், அவனின் நோய் குணமடைவதில் தாமதமுண்டாகும், அல்லது வேதனை அதிகரிக்கும், அல்லது நோய் பயங்கர நிலையை அடையும் போன்றஅச்சம் ஏதும் இல்லை எனில் அவனுக்கு தயம்மும் செய்து கொள்ளும் சலுகை இல்லை. அதற்கு உதாரணமாக தலைவலி, பல்வலி போன்ற நோய்களைக் குறிப்பிடலாம். அவ்வாறே சுடு தண்ணீர் பாவிக்க இயலுமான நோயாளியும் தயம்மும் செய்து கொள்வது ஆகாது. ஏனெனில் தயம்மும் ஏற்படுத்தப் பட்டுள்ளதன் நோக்கம் தண்ணீர் பாவணையால் உண்டாகும் வேதனையையும் துன்பத்தையும் தவிர்த்துக் கொள்வதே. ஆனால் இப்படிப்பட்ட நோயாளிக்குத தண்ணீரைப் பயன் படுத்திக் கொள்வதில் எந்த  விபரீதமும் இல்லாத படியால் நோயாளி என்ற முறையில் தயம்மும் செய்து கொள்ள அவருக்குச் சட்டதில் இடமில்லை. எனவே தண்ணீர் கிடைக்கப் பெறும் போது வுழூஃ செய்து கொள்வது அவரின் மீது கடமை.
2.    தண்ணீர் பாவணை காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படும், அல்லது உடலுறுப்பு அழிந்து விடும், அல்லது இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் அல்லது அதன் பக்க விழைவாக, உருப்பொன்றை இழக்கும் படியான  இன்னொரு நோய் ஏற்படலாம், அல்லது தன் உருப்புக்களால் உரிய பயனை அடைய முடியாமல் போய் விடலாம் என்ற அச்சமுள்ள நோயாளி தயம்மும் செய்து கொள்வதற்கு அனுமதி உண்டு. இதற்கு,
“وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّـهَ كَانَ بِكُمْ رَ‌حِيمًا ﴿٢٩/النساء﴾
“உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களின் மீது இரக்க முள்ளவன்” (4/29) என்ற இறை வசனம் ஆதாரமாக விளங்குகின்றது.
3.    எங்கும் நடமாட முடியாத ஒரு நோயாளி, அவனுக்குத் தண்ணீர் அள்ளி வர எவரும் இல்லை யெனில், அவனும் தயம்மும் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு நோயாளியால் தானாக தயம்மும் செய்து கொள்ள இயலாது என்றிருந்தால் அவருக்கு இன்னொருவர் தயம்மும் செய்து வைக்கலாம்.
மேலும் நோயாளியின் உடம்பிலோ, உடையிலோ, படுக்கையிலோ அசுத்தம் ஏதும் பட்டிருக்க அதனை அவனால் நீக்கிக் கொள்ளவோ, சுத்தம் செய்து கொள்ளவோ இயலாது என்றிருந்தால், அவன் அதே நிலையில் தனது தொழுகையை நிறை வேற்ற வேண்டும். அதற்கு அவனுக்கு அனுமதி உண்டு. இதனையும் “உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து நடவுங்கள்” என்ற இறைவசனம் உறுதி செய்கின்றது.
எனவே தன்னிடமுள்ள அசுத்தம் எதனையும் நீக்கிக் கொள்ள இயலாத அல்லது சுத்தம் செய்து கொள்ள இயலாத நோயளி, எக்காரணம் கொண்டும் தொழுகைய அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்தக் கூடாது. அதற்கு அவருக்கு அனுமதியில்லை.
4.    காயம் அல்லது எலும்பு முறிவுக்கு இலக்கான நோயாளி தண்ணீரைப் பயன் படுத்த இயலாத நிலையில் இருக்க, அவனுக்குக் குளிக்க வேண்டிய சங்கட நிலை  ஏற்பட்டு விட்டால், அவன் தயம்மும் செய்து கொள்ளலாம். அதற்கும் மேலே குறிப்பிட்ட ஆதாரங்கள் பொருந்தும்.          
5.    ஒரு நோயாளி தண்ணீரும் கிடைக்காத , மண்ணும் கிடைக்காத ஓர் இடத்தில் இருக்கின்றான். அவனுக்கு அதனைக் கொண்டு வந்து தரக்கூடிவர்களும் இல்லை யெனில், அவன் தொழுகையின் நேரத்தை பின் தள்ளாமல், தான் இருக்கும் அதே நிலையில் தொழுவது அவன் மீது கடமை. இதற்கும் “உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து நடவுங்கள்” எனும் திருவசனமே ஆதாரமாக விளங்குகின்றது.
6.     சிகிச்சைகள் பயனளிக்காத, அடிக்கடி சிறு நீர் வெளியேறும் அல்லது இரத்தப் போக்குக்கு இலக்கான நோயாளி, அல்லது காற்று வெளிப்படும் நிலையிலுள்ள அசாதாரண மனிதன். தொழுகையின் நேரம் வந்ததும்,  தன்னுடைய மேனியிலும், உடையிலும் அசுத்தம் படிந்திருந்தால் முதலில் அதனைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் வுழூஃ செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லாத் தொழுகையின் நேரமும் வந்தவுடன் வுழூ செய்து கொள்ள வேண்டும். மேலும் தொழுகைக்கென்று பிரத்தியேகமாக இன்னொரு ஆடையை வைத்துக் கொள்ள முடியுமாயின், அதனைத்  தொழுகையின் நேரம் வந்த பின்னர்  உடுத்துக் கொள்ளலாம். இதனை,
“இந்த மார்க்கதில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்த வில்லை.” (22\78)
“அல்லாஹ் உங்களுக்கு இலகுவைக் கொடுக்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை”  என்ற இறைவசனங்களும்,
“உங்களுக்கு நான் எதையேனும் உத்தரவிட்டால், உங்களால் சாத்தியமான வரையில் அதனை நீங்கள் செய்து வாருங்கள்” என்ற நபி மொழியும் உறுதி செய்கின்றன. மேலும் சிறுநீரும், இரத்தமும், தொழும் தருவாயில் ஆடையிலும், மேனியிலும், மற்றும் தொழும் ஸ்தானத்திலும் பரவி விடாதபடி நோயாளி கவணமாக இருப்பது அவசியம்.
மேலும் குறித்த தொழுகையின் நேரம் ஆரம்பித்தது முதல் அதன் நேரம் முடியும் வரையில் அவர், தான் விரும்பிய ஸுன்னத்தான, நபிலான தொழுகை களைத் தொழவும், அல்குர்ஆனைப் பாராயணம் செய்யவும் இயலும். ஆனால் குறித்த தொழுகையின் நேரம் கழிந்தவுடன் அந்நேரத்தில் அவர் செய்து கொண்ட வுழூஃ காலாவதி யடைந்து விடும். எனவே அதன் நேரம் கழிந்ததன் பின்னர் அடுத்த நேரத் தொழுகைக்காக அவர் மீண்டும் வுழூஃ செய்து கொள்வது அவசியம். அவர் தண்ணீரைப் பயன் படுத்த முடியாத நோயாளியாக இருந்து, அவர் தயம்மும் செய்திருந்தால், (தொழுகை நேரம் முடிந்த வுடன்) அவருடைய தயம்மும் முறிந்து விடும். ஆகையால் அவர் மீண்டும் தயம்மும் செய்து கொள்வது அவசியம். ஏனெனில் ரஸுல் (ஸல்) அவர்கள் ஒரு ‘முஸ்தஹாழா’ பெண்ணிடம் எல்லாத் தெழுகை யின் போதும், அதனதன் நேரம் பிரவேசித்த பின்னர் தயம்மும் செய்து கொள்ளும் படி அவளைப் பணித்தார்கள். வழமையான மாதாந்த குருதி வெளிப்படும் தினங்களுக்கு, மேலதிகமாகவும் குருதி வெளியாகும் பெண்ணை ‘முஸ்தஹாழா’ என்பர். அடிக்கடி சிறுநீர் வெளிப்படும் நோயாளியின் நிலையும், முஸ்தஹாழாவின் நிலையை ஒத்ததாகும். எனவே அவர் தொழும் போது சிறுநீர் வெளிப்படுவதால் அவருடைய தொழுகையில் எந்தப் பாதிப்பும் உண்டாகாது.                 
*காயத்தின் மீது கட்டுப் போட்டுள்ள ஒரு நோயாளி, அந்தக் கட்டை தொடர்ந்தும் வைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு இருப்பின் அவன் கட்டை அவிழ்க்க வேண்டியதில்லை. வழூவின் போதும் குளிக்கும் போதும் அதன் மீது தண்ணீரைத் தடவிக் கொண்டால் போதுமானது. ஆனால் கட்டின் மேல் மஸ்ஹு செய்வதால்-தண்ணீரைக் கொண்டு தடவி விடுவதால் அல்லது கட்டுப் போட்டுள்ள உருப்பின் எஞ்சிய பகுதியைக் கழுவி விடுவதன் காரணமாக அவனுக்குத் தீமை ஏதும் ஏற்படும் என்றிருந்தால், அவன் அச்சந்தர்ப்பத்திலும், கழுவினால் தீமை உண்டாகலாம் என்ற சந்தர்ப்பத்திலும் தயம்மும் செய்து கொள்வது போதுமானது.  
*வழூஃ முறிவுக்குக் காரணமானவுள்ள அனைத்துக் காரணிகளும் தயம்மத்தையும் முறித்து விடும். இதனைத் தவிர தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டவுடனும், கிடைக்காமல் இருந்த தண்ணீர் கிடைத்தவுடனும் தயம்மும் முறிந்து விடும். எல்லா வற்றையும் நன்கறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

நோயாளியின் தொழுகையும், அதனை நிறைவேற்றும் முறையும்  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இம்ரான் இப்னு ஹஸீன் (ரழி) அவர்களிடம்,
 " صل قائما ، فإن لم تستطع فقاعدا ، فإن لم تستطع فعلى جنب " .رواه البخاري .
“நின்ற நிலையில் தொழுவீராக. இயலாது போனால் அமர்ந்த நிலையிலும் அதுவும் இயலவில்லை எனில், பக்கவாட்டில் சாய்ந்த நிலையிலும் தொழுவீராக.” என்று கூறினார்கள். (புகாரீ) நஸஈயின் அறிவிப்பில் அதுவும் இயலவில்லையாயின் மல்லாந்து படுத்த நிலையில் தொழுவீராக” என்று பதிவாகியுள்ளது.
ஆகையால் நின்ற நிலையில் தொழ இயலாதவன், இருந்த நிலையிலும், அதனையும் செய்ய இயலாதவன் கிப்லாவுக்கு முகம் காட்டியவாறு, இயலுமாயின் வலது பக்கமாகப் பக்கவாட்டில் சாய்ந்த நிலையிலும், அதுவும் இயலாது போனால் மல்லாந்து படுத்த நிலையிலும் தொழுகையை நிறைவேற்றுவது அவனின் மீது கடமை என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவாகும்.
நின்ற நிலையில் தொழும் ஒருவனால் ருகூஃ, ஸஜூதுகளைச் செய்ய முடியவில்லை எனில், அவன் நின்றபடியே தொழுவேண்டும். அவ்வமயம் அவன்  நின்ற நிலையில் சாடை செய்து ருகூஃ செய்து கொள்ளவும், இருப்பின் நிலைக்கு வந்ததும் சாடை செய்து ஸஜூதை நிறைவேற்றுவும் வேண்டும். ஏனெனில்,
“وَقُومُوا لِلَّـهِ قَانِتِينَ ﴿٢٣٨/البقرة﴾
“மேலும் அல்லாஹ்வுக்குப் பயந்து பணிந்தவர்களாக தொழுகையில் நில்லுங்கள்” என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். (2\238) மேலும் “உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து நடவுங்கள்” என்ற அல்லாஹ்வின் பொதுவான கட்டளையும் இதனை உறுதி படுத்துகின்றது.   
•    கண் பாதிக்கப்பட்ட ஒருவனிடம், ஏற்றுக் கொள்ளத் தகுந்த உண்மையான ஒரு வைத்தியன் “நீர் மல்லாந்து கிடந்தால்தான் உமக்கு சிகிச்சையளிக்க முடியும்’ என்று கூறுவாராகில், அந்த நோயாளி மல்லாந்த நிலையில் தொழுகையை நிறைவேற்றலாம். அவ்வாறு இல்லையாயின் அவருக்கு அந்தச் சலுகை இல்லை.
•    ருகூஃ, ஸஜூதுகளை உரிய முறையில் நிறைவேற்ற இயலாதவன், அவற்றைச் சைகை மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அவ்வமயம் ருகூவை விடவும் தாழ் நிலையில் ஸுஜூதுக்காக சைகை செய்தல் வேண்டும்.
•    ருகூவின் போது முதுகை முழங்கால் வரையில் தாழ்த்த இயலாத ஒருவன், அல்லது ருகூவில் இருப்பது போன்ற வளைந்த முதுகுள்ள ஒருவன், ருகூஃ செய்யும் போது சற்று அதிகமாகத் தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அவர் அமர்வு நிலையில் தொழும் ஒருவராக இருந்தால், முடியுமாயின் ஸஜூதின் சந்தர்ப்பத்தில் ருகூவை விடவும் அதிகமாக தன் முகத்தை நிலத்தின் பக்கமாகக் கொண்டு செல்ல  முயல வேண்டும்.
•    தலையைக் கூட அசைக்க இயலாத ஒரு நோயாளி சுய சிந்தனையுடையவராக இருக்கும் பட்சத்தில், அவர் மீது விதிக்கப்பட்டுள்ள தொழுயின் கடமை அவரை விட்டும் நீங்காது. எனவே அவர் தன்னால் முடியுமான வரையில் தொழுகையை நிறைவேற்றுவது அவரின் கடமை. ஆகையால் அவர் மனதால் நிய்யத்து வைத்து தொழுகையில் ஓத வேண்டிய ஓதல்களை முடியுமான வரையில், அதனை அவர் ஓதிக் கொள்ள வேண்டும். இதற்கும் முன்னர் குறிப்பிட்ட ஆதாரங்கள் போதுமானவை.
•    மேலும் தன்னால் முடியுமான வரையில் தொழுகையை நிறைவேற்றி வந்த ஒரு நோயாளிக்குத் தொழுது கொண்டிருக்கும் போது, அவனால் இயலாமல் இருந்த எழுந்து நிற்றல், அல்லது அமருதல், அல்லது ருகூஃ, ஸஜூது செய்தல், அல்லது அதனைச் சைகை செய்தல் போன்ற காரியம் எதனையும் செய்யும் திராணி அவனுக்கு ஏற்பட்டு விட்டால், அவன் உடனடியாக அந்தக் கருமத்தை ஆரம்பித்து விடவேண்டும். பின்னர் அதனைத் தொடர்ந்துத் தொழுகையின் எஞ்சிய பகுதிகளை நிறைவு செய்திட வேண்டும்.
•    தூக்கத்தின் காரணமாக அல்லது மறதியின் காரணமாகத்  தொழுகையைத் தவற விட்டவன், தூக்கத்தை விட்டும் எழுந்தவுடன். அல்லது நினைவு வந்தவுடன் உடனடியாக அந்தத் தொழுகையை நிறைவேற்றுவது அவனின் கடமை. அதனை அடுத்த நேரம் வரும் வரையில் தள்ளிப் போடக் கூடாது. ஏனெனில்
"من نام عن الصلاة أو نسيها فليصليها إذا ذكرها, لا كفارة لها إلا ذلك"
“யாரேனும் தொழாமல் தூங்கி விட்டால், அல்லது மறதியாக அதனைத் தவறவிட்டால், அவருக்கு அது ஞாபகம் வந்தவுடன் அவர் அதனைத் தொழ வேண்டும். அதன் பிராயச் சித்தம் அதுவே அல்லாது வேறில்லை” என்று நபியவர்கள் கூறினார்கள். பின்னர்.
“ وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِ‌ي ﴿١٤/طه﴾  
“என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிறை வேற்றுவீராக” (20\14) என்ற திரு வசனத்தையும் ஓதினார்கள்.
*எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை விடலாகாது. எனவே யார் மீது தொழுகை விதிக்கப் பட்டுள்ளதோ அவர் தன் ஆரோக்கியமான காலத்தை விட நோய்வாய்ப் பட்டிருக்கும் காலத்தில் தொழுகை விடயத்தில் அதிகம் ஆர்வம் காட்டல் வேண்டும். எனவே அவர் ஒரு நோயாளியாக இந்த போதிலும் அவருக்கு சுய புத்தி இருக்கும் வரையில் பர்ழான தொழுகை எதனையும் அதன் நேரம் தவறிப் போகும் வரையில் தள்ளிப் வைக்கக் கூடாது. பதிலாக முடியுமான வரை அவர் அதனை உரிய நேரத்தில் நிறைவேற்றிவிட வேண்டும். அல்லாது போனால் தொழுகை தன் மீது விதிக்கப்பட்டுள்ள அவர், சுயபுத்தி உள்ளவராக இருந்து, அதனை நிறைவேற்ற அல்லது சைகை மூலம் அதனைன அமுல் படுத்த திராணி உடையவராக இருந்த படியால் அவர், தொழுகையைத் தவற விட்டமையால், ஒரு பாவியாகி விடுவார். மேலும் இப்படிப்பட்ட ஒருவர் ஒரு காபிர் என்று கூட அறிஞர் குழு வொன்று கூறுகின்றது. ஏனெனில்,
“ العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر"
 (رواه أحمد والترمذي والنسائي وابن حبان والحاكم)
“நமக்கும் அவர்களுக்கும் மிடையே உள்ள வேறுபாடு தொழுகையே. ஆகையால் அதனை விட்டவன் காபிராவான்” என்றும், “
"رأس الأمر الإسلام ، وعموده الصلاة ، وذروة سنامه الجهاد"
"சகல விஷயங்களின் சிரசு (முக்கியமானது)  இஸ்லாம், அதன் தூண் தொழுகை, அதன் சிகரம் அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவது” என்றும்,
بين الرجل وبين الكفر ترك الصلاة ) رواه مسلم (
 
“முஸ்லிம் மனிதனுக்கும், குப்ருக்கும் இடையே உள்ள வேறுபாடு தொழுகை (யை விடுவது) தான்.” என்றும் நபியவர்கள் நவின்றுள்ளார்கள். இந்தக் கூற்றுக்களை அந்த அறிஞர்கள் தங்களின் கருத்திற்கு ஆதாரமாக முன் வைத்துள்ளனர். ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த ஹதீஸை, தொழுகை சம்பந்தமான அல்குர்னின் திருவசனங்களுடனும், ஏனைய ஹதீஸ்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அந்த அறிஞர்களின் கருத்து மிகவும் சரியாவே உள்ளது.
•    எனினும் எல்லாத் தொழுகையும் உரிய நேரத்தில் நிறை வேற்றுவதில் அவனுக்கு சிரமங்கள் இருந்தால், அவன் ழுஹரையும், அஸரையும் இணைத்தும்  மஃரிபையும் இஷாவை யும் இணைத்தும் முற்படுத்தியோ பிற்படுத்தியோ ‘ஜம்உ’ செய்து கொள்ளலாம். அவனுக்கு வசதி போல் ழுஹருடன் அஸரை முற்படுத்தியும், அஸருடன் ழுஹரைப் பிற்படுத்தியும், அவ்வாறே மஃரிபுடன் இஷாவை முற்படுத்தியும், இஷாவுடன் மஃரிபைப் பிற்படுத்தியும் ‘ஜம்உ’ செய்து - சேர்த்துத் தொழுது கொள்ளலாம். ஆனால் பஜ்ருத் தொழுகை எந்தத் தொழுகையின் நேரத்துடனும் முன்னாலோ பின்னாலோ சேராமல், வேறுபட்டுள்ள படியால் அதனை எந்தத் தொழுகையுடனும் சேர்த்துத் தொழ அனுமதிக்கப் பட வில்லை.
முஸ்லிம் நோயாளிகளுக்குச் சுகத்தைக் கொடுத்திடு மாறும், அவர்களின் தீமைகளை அழித்து விடுமாறும், மேலும் நம் அனைவருக்கும் இகபரத்திலும் பாவ மன்னிப்பையும், நல்லாரோக்கி யத்தையும் தந்தருளுமாறும் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.
وصلى الله على نبيينا محمد وعلى آله وأصحابه أجمعين.
             المفتي العام للمملكة العربية السعودية
ورئيس هيئة كبار العلماء وإدارة البحوث العلمية والإفتاء
عبد العزيز بن عبد الله بن باز

 

 

 

Contents


الصفحة    العنوان    م
1    நோயாளியின் தொழுகையும் அதன் விதி
 முறைகளும்    1
       சுத்தம் செய்தல் தொடர்பான சில சட்டங்கள்    2
      தயம்மும்    3
    நோயாளிகளும், அவர்களின் நிலையும்    4
    நோயாளியின் தொழுகையும், அதனை       நிறைவேற்றும் முறையும்      5
        6
        7
        8
        9
        10
        11
        12
        13
        14
        15