அல்லாஹ்வை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதும்

1- இறையச்சம் குறித்த சில குர்ஆன் வசனங்கள்
இறையச்சத்தின் யதார்த்தம், இறையச்சமுள்ளவரின் அடையாளங்கள், இறையச்சத்தை உண்டாக்கும் காரணிகள். அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல். (அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைப்பவரை அறிந்து கொள்ளும் அடையாளங்கள்.

அல்லாஹ்வை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதும்


] Tamil – தமிழ் –[ تاميلي 

தயாரிப்பு
மதாருல் வதன் அச்சகத்தின் கல்விப் பிரிவு

தமிழாக்கம்.
மௌலவி: அப்துல் சத்தார் மதனி
M.A in (Edu) Sudan.







2014 - 1436
 
 
الخوف والرجاء

« باللغة التاميلية »



إعداد: القسم العلمي بمدار الوطن





ترجمة
عبد الستار بن عبد الرشيد خان





2014 - 1436
 
 
 
அல்லாஹ்வை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதும்
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன, (ஸலாத்) எனும் கருணையும், (ஸலாம்) எனும் ஈடேற்றமும் இறைத் தூதர்களுக்கும் நபிமார் களுக்கும் இறுதியாக வந்துதித்த எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிழையார்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்லாஹ்வை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தன் பிரயாணக் களைப்பை அகற்றிக் கொள்ளவும், பாதையில் இருக்கும் பல்வேறு ஆபத்துகளில் இருந்து தன்னைக் காத்து, நேரான  பாதையை அறிந்து கொள்ளவும் அவனுடைய இதயத்தில் சில பிரயாணப் பொருட்களை எடுத்துச் செல்வது அவசியமாகும்.
இதற்கு அவன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டிய இரு பிரயாணப் பொருட்களாவன, அல்லாஹ்வை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதுமாகும்.
காரணம் அல்லாஹ்வின் அச்சம் அவனை பாவத்திலிருந்தும், அவன் மீது  ஆதரவு வைப்பது அவனை நிராசை கொள்வதில் இருந்தும் பாதுகாக்கும்.
இதன் முக்கியத்துவத்தை அறிந்த முன்னோர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள்;
அல்லாஹ்வை நோக்கிப் பயணிப்பவர் ஒரு பறவைக்கு நிகரானவர். இறைநேசம் அப்பறவையின் சிரமாகும், அவனை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதும் அதன் இறக்கைகளாகும். இம்மூன்றும் ஆரோக்கியமாக இருக்கும் பறவையால் தைரியமாக எழுந்து பறக்க முடியும். சிரச் சேதம் செய்யப்பட்ட பறவையாயின் (அவ்விடத்திலே) அது  இறந்து விடும். இறக்கைகளை இழந்த பறைவையாயின் அது பிற வேட்டைப் பிராணியின் விருந்துக்கு இலக்காக வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியமாக இருக்கும் மனிதர் அல்லாஹ் வை பயப்படுவதும், இவ்வுலகை பிரிந்து (மரணித்து) செல்பவர் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பதுமே சிறந்த வழிமுறை என சில ஸாலிஹான முன்னோர்கள் கருதுகின் றார்கள். வேறு சிலரோ இவ்விரண்டில் நடுநிலையும், இறை நேசம் மிகைத்து இருப்பதையுமே சிறப்பாக கருதுகின்றார்கள்.
வாஸிதி (ரஹ்) கூறினார்; இவ்விரண்டும் ஆன்மாக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்தி ருக்கும் இரு மூக்கணங்கயிர்களாகவே பார்க்கப்படும்.
அபூ உஸ்மான் அல் மஃரிபி கூறினார்; அல்லாஹ்வை அஞ்சாது அவன் மீது வெறும்ஆதரவு வைப்பவர் அவனை (வழிபடாது) வெட்டியாக இருப்பார். இதற்கு எதிர் நிலையில் இருப்பவர் (அவன் அருளில்) நம்பிக்கை இழந்து விடுகிறார் ஆகவே இரண்டிலும் சமநிலையை பேணுவதே உகந்தது.
ஒன்று - அல்லாஹ்வை அஞ்சுவது
இறையச்சம் குறித்த சில  குர்ஆன் வசனங்கள்.
அல்லாஹ்வை அஞ்சுவது இறை விசுவசிகளினதும்,  இறை பக்தர்களினதும் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;    
إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءهُ فَلاَ تَخَافُوهُمْ وَخَافُونِ إِن كُنتُم مُّؤْمِنِينَ- 175 آل عمران
தனது நேசர்களை ஷைத்தான் தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! ஆலு இம்ரான் 175.
“இறையச்சம்”  என்பது இறைவிசுவாசத்துடன் இணைந்த  ஒரு பண்பு என அல்லாஹ் இங்கு பிரஸ்தாபித்துள்ளான். 
-    “இறையச்சம்” எனும் பண்பு எல்லா முஸ்லிம்களிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய, இதயத்தால் செய்யும் ஒரு கடமையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
  وَإِيَّايَ فَارْهَبُونِ-  البقرة : 40 
என்னையே அஞ்சுங்கள்! அல் பகரா 40.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ - المائدة 44
எனவே மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! அல் மாஇதா 44.
-    அல்லாஹ்வை அஞ்சிய காரணத்துக் காக ஸகரிய்யா (அலை) அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர்ளையும் அல்லாஹ் புகழ்ந்துரைத்திருப்பது போல், அவனைப் அஞ்சிய ஏனைய நபிமார் களையும், அவனுடைய நேசர்களையும் அல் குர்ஆனில் புகழ்ந்துரைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ- الأنبياء:90 
அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும் ஆர்வத்துடனும் அச்சத்துட னும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர். அல் அன்பியா 90.
-    அளவு கடந்து அல்லாஹ்வை அஞ்சும் அவனுடைய வானவர்களையும் அல்லாஹ் புகழ்ந்துரைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ - الأنبياء  28
அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்கு வார்கள். அல்அன்பியா 28
-    அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு அவன் சுவனத்தை வாக்களித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ- الرحمن:46
தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அர்ரஹ்மான் 46.
-    அவர்களுக்கு பூமியில் )ஆட்சி அதிகாரங் களை வழங்கி) அவர்களை குடியமர்த்துவ தாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَلَنُسْكِنَنَّـكُمُ الأَرْضَ مِن بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيد -إبراهيم 14
அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்” என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.
இறையச்சம் குறித்த சில நபி மொழிகள்
1-عن عائشة قلت: يا رسول الله، (( وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَة )) [المؤمنون:60] أهو الذي يزني ويشرب الخمر ويسرق؟ قال: لا يا ابنة الصديق ولكنه الرجل يصوم ويصلي ويتصدق ويخاف أن لا يقبل منه – رواه أحمد والترمذي وصححه الحاكم.
1-    ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ் தன் திருமரையில்
وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ –المؤمنون  
என குறிப்பிட்டிருப்பது விபச்சாரம் புரிபவர்களையும், மது அருந்துபவர்களை யும், களவு எடுப்பவர்களையும் அல்லவா? என கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்கர் ஸித்தீக்கின் அருமைப் புதல்வியே  இல்லை, அவர் தான் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற அமல்களை செய்பவர்  ஆனால் அவரிட மிருந்து அல்லாஹ்வாள் அவைகளை ஏற்றுக் கொள்ளபடாமல்போகமோ? என அச்சம் கொள்பவர்கள். என விளக்க மளித்தார்கள்.   நூற்கள் அஹ்மத், திர்மிதி, ஹாகிம்.
2-عن النعمان بن بشير رضي الله عنهما قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : (( إن أهون أهل النار عذابا يوم القيامة لرجل يوضع في أخمص قدميه جمرتان يغلي منهما دماغه ، ما يرى أن أحداً أشد منه عذاباً ، وإنه لأهونهم عذاباً )) متفق عليه
2-    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவித்தார் கள். மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும்  இலேசான வேதனை செய்யப் படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங் கால்களின் நடுவில் (நெருப்புத்துண்டுகள்இரண்டை) நெருப்புத்தணல்களை வைக்கப்படும் அதனால் அவரின் மூளை கொதிக்கும். நூற்கள் புகாரி முஸ்லிம்.
3- عَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ : خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ  خُطْبَةً مَا سَمِعْتُ مِثْلَهَا قَطُّ قَالَ : " لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلا وَلَبَكَيْتُمْ كَثِيرًا " قَالَ : فَغَطَّى أَصْحَابُ رَسُولِ اللَّهِ  وُجُوهَهُمْ  لَهُمْ خَنِينٌ  متفق عليه
3-    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நான் அறிந்து வைத்திருப்பவைகளை நீங்கள் அறிவீர்களானால் கொஞ்சமாக சிரித்து, அதிகமாக அழுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் அழுகை மிகுதியால் தங்களுடைய முகங்களை (கைகளால்) மூடிக்கொண்டார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.
4-وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال :" سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله عز ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه " .
4- நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்: அல்லாஹ் தனது (அரியைண யின்) நிழைலத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
1.     நீதி மிக்க ஆட்சியாளர்.
2.    இறை வழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன்.
3.     பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.
4.    இறைவனுக்காகவே  நேசித்து, அவனுக்கா கவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.
5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தன்னை ( தவறு செய்ய) அழைத்த போதும் "நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.
6.    தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்.
  5-عن عائشة رضي الله عنها: أنَّ رجلا جاء إلى النبي صلى الله عليه و سلم يستفتيه وهي تسمع من وراء الباب فقال: يا رسول الله تدركني الصلاة وأنا جنبٌ أفأصوم ؟ فقال رسول الله صلى الله عليه وسلم:" وأنا تدركني الصلاة وأنا جنب فأصوم ", فقال: لست مثلنا يا رسول الله قد غفر الله لك ما تقدَّم من ذنبك وما تأخر فقال:" والله إني لأرجو أن أكون أخشاكم لله وأعلمكم بما أتقي- متفق عليه
5-    ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் (ஒரு விஷயத்தில்) தீர்ப்புக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நான் கதவுக்குப் பின்னாலி ருந்து கேட்டுக் கொண்டிருந் தேன். அவர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் (ஃபஜ்ர்) தொழுகையின் நேரம் என்னை வந்தைடந்தால், அப்போதும்  நான் நோன்பு நோற்க வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் (ஃபஜ்ர்) தொழுகை நேரம் என்னை வந்தைடகிறது. அப்போதும் நான் நோன்பைத் தொடரவே செய்கிறேன்'' என்று விடையளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதேர! தாங்கள் எங்கைளப் போன்றவர்கள் அல்லர். அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டானே?'' என்று சொன்னார். அதற்கு, "அல்லாஹ் வின் மீதணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ் வை அஞ்சுபவனாகவும், எவற்றிலிருந்து நான் தவிர்ந்து கொள்ள  வேண்டும் என்பதை உங்கைள விட அதிகமாக அறிந்த வனாகவும் இருக்கவே நான் ஆசிக்கிறேன்'' என்றார்கள்.
 6- عن عبد الله بن الشخير رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل في الصلاة يسمع لصدره أزير كأزير المرجل – رواه أبو دوود والترمذي.
6-    அப்துல்லாஹ் இப்னு ஷகீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால், அவர்களுடைய நெஞ்சில் இருந்து (தகித்துக்) கொதிக்கும் பாத்திரத்தின் இறைச்சல் போல் கேட்கும்.  
இறையச்சத்தின் யதார்த்தம்
இறையச்சத்தின் கருத்துக்களையும், அதன் படித்தரங்களையும் வரையரை செய்ய முயற்சித்த அறிஞர்களின் கருத்துகள் வேறு பட்டதாக உள்ளன. ஆயினும் அவர்கள் எல்லோரும் அல்லாஹ்வினால் தடைசெய்யப் பட்டவைகளை பயந்து நடப்பவரின் அச்சம் புகழுக்குரியது என்றும், அவ்வாறு அச்சம் கொள்ளாத, அவனுக்கு வழிப்படாத  நம்பிக்கை இழந்தவர் இகழ்ச்சிக்குரியவர் என்றும் ஏகோபிக்கத் தக்க கருத்தை வெளியிட்டுள்ளனர். 
-    அபூ உஸ்மான் கூறினார்; (இறை) அச்சத்தின் யதார்த்தம் யாதெனில் அகத்தாலும் புறத்தாலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாதிருக்கும் பேனுதல் நிலையாகும்.
-    அபுல் காஸிம் அல் ஹகீம் கூறினார்; வஸ்துக்களுக்கு அஞ்சுபவர் அவைகளை விட்டும் ஓடிவிடுவார் ஆனால் அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர் அவன் பக்கம் விரைந்து செல்வார்.
-    இப்ராஹீம் இப்னு ஷைபான் கூறினார்;   இறையச்சம் குடிகொள்பவருடைய இதயத்தில் இருக்கும் மனோஇச்சை களையும், உலக ஆசையையும் அது எரித்து விடும்.
-    ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) கூறினார்; புகழுக்குரிய (உண்மையான) இறையச்சம் உடையவரை அது பாவச் செயல்களில் இருந்து பாதுகாக்கும்.
அன்பின் சகோதரா! நீ இறையச்சம் உள்ளவனா? அல்லாஹ்வை புறக்கனித்து எப்போதும் அவனுக்கு மாறு செய்வதில் உன் ஆயுலை கழிக்கும் நீ அவனை அஞ்சுகிறாயா?
அல்லாஹ் தடை     செய்த இடங்களில் சமுகம் கொடுத்தும், அவன் அனுமதித்த இடங்களில் விழகியும் இருக்கும் உன்னை, எவ்வாறு அல்லாஹ்வை அஞ்சுபவன் எனக்  கூறலாம்?.  
இறையச்சமுள்ளவரின் அடையாளங்கள்
பகீஃ அபுல் லைஸ் அஸ்ஸமர்கன்தீ கூறினார்; இறையச்ம் உள்ளவரை அறிய ஏழு அடையாளங்கள் உள்ளன;
ஒன்று, நாவு; (இறையச்சமுடைய) அவர் பொய், புறம், வீண் பேச்சுக்கள் பேசமாட்டார்.  எப்பொழுதும் அல்லாஹ்வை நினைவு கூறுவதிலும், திருக்குர்ஆனை  ஓதுவதிலும், அறிவை கற்பதிலும் தன் நாவை ஈடுபடுத்துவார். 
இரண்டு, வயிறு; (இறையச்சமுடைய) அவர் ஹலாலான உணவுகளை, தேவைக்கு ஏற்ற அளவே உட்கொள்வார்.
மூன்று, பார்வை; (இறையச்சமுடைய) அவர் ஹராமானவைகளை பார்வையிடமாட்டார், மேலும் இவ்வுலகை படிப்பினைக்காகவே அன்றி திருப்தியோடு நோக்கார்.
நான்கு, கரங்கள்; (இறையச்சமுடைய) அவர் தன் கரங்களினால் அல்லாஹ் அனுமதித்த வைகள் அன்றி அவன் தடை செய்தவை களைத் தொடமாட்டார்.
ஐந்து, பாதங்கள்; (இறையச்சமுடைய) அவர் தன் பாதங்களால் பாவமான காரியங்களுக்கு நடந்து செல்ல மாட்டார்.
ஆறு, இதயம்; (இறையச்சமுடைய) அவர் பகைமை, கோபம், பிற சகோதர்களுடன் பொறாமை கொள்ளல் பேன்றவைகளில் இருந்து நீங்கி, இறக்கம், முஸ்லிம்களுக்கு உபதேசித்தல் போன்ற நற்குணங்களை கடைபிடிப்பார். 
ஏழு, (இறையச்சமுடைய) அவர் அல்லாஹ் வை உள்ளச்சத்துடன் வழிபடுவார், எப்பொழுதும் நயவஞ்சகம், முகஸ்துதி போன்றவைகளை விட்டு அவனிடம் பாதுகாவல் தேடிக்கொள்வார். இத்தகையவர் களுக்கே அல்லாஹ் சுவனத்தை சித்தப்படுத்தி வைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَالْآخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ- الزخرف 35
(இறைவனை) அஞ்சுவோருக்கு உமது இறைவனிடம் மறுமைஇருக்கிறது.  அஸ்ஸுகுருப் 35.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمٍ الطور 17.
அல்லாஹ்வை அஞ்சிய சில முன்னோர்கள்.
லஹ்ஹாக் (ரஹ்) கூறினார்; (நபித்தோழர்) அபூ பக்கர்  ஸித்தீக் (ரலி) அவர்கள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்த பறவைக்கு பக்கத்தால் நடந்து சென்றார்கள், அப்போது அப்பறவையை நோக்கி “பறவையே உனக்கு சோபனங்கள் உண்டாகட்டும். (சுதந்திரமாக) பறந்து திரிந்து விட்டு பின்னர் இந்த மரத்தில் அமர்ந்து கனிகளையும் புசிக்கின்றாய், (மறுமையில்) விசாரணை, வேதனை போன்ற எதுவும் உனக்கு இல்லையே! நானும் உன்னைப் போன்று (பறவையாக) இருக்கக் கூடாதா”!  எனக் கூறுவார்களாம்.
அன்பின் சகோதரா!
(நபித்தோழராகிய) அபூ பக்கர் ஸித்தீக் (ரலி) இப்படிக் கூறுவார்களாயின், நானும் என்னைப் போன்ற நீயும் என்ன தான் கூறுவது?
அல்லாஹ்வின் கோபத்திலிருந்து பாதுகாவல் தோடுகிறோம்.
அப்துல்லாஹ் இப்னு ஈஸா கூறினார்; (நபித் தோழர்) உமர் (ரலி) அவர்களின் வதனத்தில் அழுகையால் இரு கரு நிறத்தழும்புகள் காணப்பட்டன.
ஹஸன் (ரலி) கூறினார்கள்; (நபித் தோழர்) உமர் (ரலி) அவர்கள் தனது நாளாந்த அவ்ராதுகளில் வரும் திருக்குர்ஆன் வசனம் ஒன்றை  ஓதியதும் அதன் அச்சத்தால்  சில நாட்களுக்கு நோயுற்று விழுந்து விடுவார்கள்.   
ஒரு முறை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் அமர்திருந்த ஒரு மனிதர், ”நான் வலது கரத்தவர்களில் ஒருவராக இருக்க விரும்பவில்லை, அல்லாஹ்வுக்கு மிக நெறுக்கமானவர்களில் ஒருவராக இருப்பதே என்னிடத்தில் மிகவும் மேலானது” என்றார். இதைக் கேட்ட இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தம் ஆத்மாவை நோக்கியவராக, “இங்கு ஒரு மனிதர் இருக்கிறார். அவர் மரணித்தால் (மறுமையில்) எழுப்பப்படாமல் இருக்கவே விரும்புகிறார்” எனக் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) கூறினார்கள்; “நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?
யஸீத் இப்னு ஹவ்சப் கூறினார்; ஹசன் (ரலி) உமர் (ரலி) ஆகிய இருவரையும் விட இறையச்சம் உடையவர்களை நான் கண்டதே இல்லை, காரணம் அவர்கள் இருவருக்கு மென்றே நரகம் படைக்கப்பட்டுள்ளதைப் போன்று அல்லாஹ்வை அஞ்சுவார்கள்.
அன்பின் சகோதரா!
அல்லாஹ்வின் நல்லடியார்களின் இறையச்சம் இவ்வாறு தான் இருந்தது, அவர்கள் அமல்களை சரிவரச் செய்தாலும் அவை அல்லாஹ்வினால் அங்கீகரிக்ப் படுமா? என அஞ்சுவார்கள். ஆனால் எங்களில் சிலர் (அமல்கள் விடயத்தில்) கவனக்குறைவாக இருந்து விட்டு, (அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைக்கிறார்கள். (சகோதரா!) இன்னும் உனக்கு சந்தர்ப்பம் இருக்கிறது, எனவே (இறையச்சத்துடன்) நடந்து செல்லத் துணிந்தெழு.
அன்பின் சகோதரா! நீ அல்லாஹ்வை அஞ்சி வழிபடக் கடமைப்பட்டுள்ளாய்,  (வெட்டியாக இருந்து) பிறகு அவனிடம் திரும்பிச் சென்று வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து விடாதே!
-    அல்லாஹ்வின் பயத்தால் அழுவதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்.
-    எச்சரிக்கையுடன் (ஆன்மாவை) கண் காணிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்.
-    அல்லாஹ்வைப் பயந்து நடுங்குவதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்.
-    அல்லாஹ்விடம் பட்சாதாபப்பட்டு இறைஞ்ச நேரத்தை ஒதுக்கிக் கொள்.
-    அல் குர் ஆனை ஓதுவதற்கும், அல்லாஹ்வை திக்ர் செய்வதற்கும் நேரத்தை ஒதுக்கிக் கொள்.
-    அல்லாஹ்வை இரவின் நின்று வணங்கி அவனுடன் சம்பாஷனை செய்ய நேரத்தை ஒதுக்கிக் கொள்.
இறையச்சத்தை உண்டாக்கும் காரணிகள்
அன்பின் சகோதரா!
பாவங்களை விட்டொழித்து இறையச்சத்தை உண்டாக்கும்  சில காரணிகள் உள்ளன அவையாவன;
1-    அல்லாஹ்வுடைய பண்புகள், பெயர்கள் சகிதம் அவனை அறிந்து கொள்வது.
2-    எப்பொழுதும் மனிதனை அல்லாஹ் அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்வது.
3-    மார்க்க அறிவை கற்றுக் கொள்வது. இறைவனை அஞ்சுவதற்கும், அவன் அவதானிப்தை உணர்வதற்கும் அது உதவியாக இருக்கும். 
4-    இரட்சகனாகிய அல்லாஹ்வின் மகத்து வத்தை அறிவதுடன், அவனுடைய கட்டளைகள் மீறப்படும் பட்சத்தில் அவனுக்கு ஏற்படும் கோபம் குறித்து சிந்தித்தல்.
5-    (அல்லாஹ்வுக்கு முன்னால்) அடியானின் இழிவு, சிறுமை, பலவீனம், ஏழ்மை போன்றவை பற்றியும், மறுமையில் சகிக்க முடியாத அவனுடைய வேதனை குறித்தும் சிந்தித்தல். 
6-    பாவங்களின் அவலட்சணத்துக்குரிய விளைவுகள் குறித்து சிந்தித்தல்.
7-    “தங்களுடைய நற்செயல்கள் அல்லாஹ் வினால் ஏற்கப்படுமா?” என அச்சம் கொண்ட நபிமார்கள், ஸஹாபாக்கள், தாபிஈன்கள், அவர்களுக்குப் பின் வந்த இறை பக்தர்கள் போன்றோரின் சம்பவங் களை வாசித்துப் பார்த்தல்.
8-    உலகத்தின் இழிவையும், அதன் அழிவையும், இங்கு நிலைத்திருக்காத இன்பங்களையும் அறிதல்.
9-    அல்லாஹ்வைப் பயந்து மறுமைக்காக நற்செயல் செய்யும் நல்லோர்களுடன் நற்பு வைத்தல்.
10-    அல் குர்ஆனை ஓதுதல். அது இறையச்சத்தை உண்டாக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

இரண்டு; அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல்.
1-    அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பது குறித்து அல்குர்ஆனில் வந்துள்ள சில வசணங்கள்.
ஒரு விடயத்தில் பேராவல் கொண்டு, அதை அடைய இலட்சியம் வைப்பதையும், அதில் நல்லெண்ணம் வைப்பதையும், குறித்த விடயத்தில் “ஆதரவு வைத்தல்” என்போம். நற்செயல்களுடன் இணைந்த ஆதரவே புகழுக்குரிய (ஏற்றுக் கொள்ளத்தக்க)தாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்.
1-    فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا  - الكهف 110
 1- “தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!  அல் கஹ்ப் 110.
எவர் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தயாளம் மிக்க அருள் மீதும், நம்பிக்கை  வைத்து விட்டு, பிறகு தீய செயல்களில் ஈடுபடுகிறாரோ அவரை நாம் ஏமாற்ற மடைந்த முட்டாள் என்றே அடையாளப் படுத்துவோம்.
உண்மையில் அல்லாஹ்வுடைய அருளை ஆதரவு வைக்கத் தகுதியுடையவர்கள் நல்லமல்கள் செய்து, அறப்பேர் புரியக்கூடிய இறைவிசுவாசிகள் தான் என்பதை அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ الَّذِينَ آمَنُواْ وَالَّذِينَ هَاجَرُواْ وَجَاهَدُواْ فِي سَبِيلِ اللّهِ أُوْلَـئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللّهِ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ -البقرة 218
 2- நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர் பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன். அல் பகரா 218.
அதற்கு மாற்றமாக ஒருவர் அல்லாஹ்வுக்கு வெறுப்பான செயல்களில் மூழ்கி விட்டு,  தனது செயல்களுக்காக கிஞ்சித்தும் கூச்சப் படாமல், பாவ மன்னிப்பும் கோராமல் அல்லாஹ்வின் மன்னிப்பை எதிர்பார்த்தி ருப்பது வெறும் முட்டால் தனமாகும். இத்தகையோர் விவசாயத்துக்கு  ஒவ்வாத பூமியில் தானியத்தை விதைத்து பிறகு  கலை பிடுங்கி நீர் பாய்ச்சாது அறுவடையை எதிர் பார்த்து இருப்போருக்கு சமமானவர்கள்.
யஹ்யாப்னு முஆத் கூறினார்; மிகப்பெரும் ஏமாற்றம்  யாதெனில் ஒருவர் நித்தமும் பாவங்களில் மூழ்கி, பிறகு அதற்காக கிஞ்சித்தும் வருத்தப்படாமல் அல்லாஹ்வின் மாவ மன்னிப்பையும், அவனை வழிபடாது  அவனுடைய நெருக்கத்தையும்  நரகத்தின் விதைகளை விதைத்து விட்டு சுவனத்தின் பயிர்களை எதிர்பார்பதும், தனது பாவச் செயல்களுக்கு பிரதியீடாக அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களின் சுவனத்தையும், எந்த நன்மையான காரியங்களையும் செய்யாது நற்கூலிகைளை எதிர்பார்ப்பதும், கவணயீ னமாக இருந்து விட்டு அல்லாஹ்வின் மீது ஆதரவும் வைப்பதாகும்.  
கவிதை;
வெற்றியளிக்கும் பாதைகளில் நடந்து செல்லாது வெற்றியடைய விரும்புகிறாய்.
உளர்ந்த தரையில் கப்பல் பயணம் செய்வதில்லையே!
உண்மையான ஆதரவு இறை விசுவாசத்து டன் இணைந்திருக்கும், காரணம் இறை விசுவாசி (அல்லாஹ்வின் அருளில்) நம்பிக்கை இழக்க மாட்டான். அல்லாஹ் கூறுகின்றான்;
1-    إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ-  يوسف 87
3-(ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். யூஸுப் 87.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
2-     وَمَنْ يَقْنَطُ مِنْ رَحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ - الحجر 56  
4-வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?  அல் ஹிஜ்ர் 56.
(அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைப்பதன் மறுபுரத்தை இறை மறுப்பாகவும், வழி கேடாகவும் நாம் நோக்கினால், ஆதரவு வைப்பதன் உள்ளார்ந்த கருத்தை இறை விசுவாசமாகவும், நேர்வழியாகவும் கொள்ளலாம்.
இப்னு குதாமா கூறினார்; (அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைப்பது விருப்பத்துக்குரிய செயல், காரணம் அதன் மூலம் ஒருவர் நற்செயல்கள் செய்ய தூண்டப்படுகிறார், அவ்வாரே (அவன் மீது) நம்பிக்கை இழப்பது வெறுப்புக்குரிய செயல் காரணம் அத்தகைய மனிதர் தீய செயல்களுக்கு தூண்டப் படுகிறார்.
(அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைப்பவர்களை அவன் பின் வருமாறு அடையளப் படுத்துகிறான்,
அல்லாஹ் கூறுகின்றான்;
3-    قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ ۚ  الزمر 53.
5- தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! அஸ்ஸுமுர் 53.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
4-    أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ ۚ الإسراء 57.
6-இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்க மானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர்.  அல் இஸ்ரா 57
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
5-    إِنَّ اللَّهَ لا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا - النساء:48
7- தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அன்னிஸா 48.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
6-     وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ ۚ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُم بِآيَاتِنَا يُؤْمِنُونَ - الأعراف 156.
8-எனது அருள், எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது.  அல் அஃராப் 156.
(இது குறித்து) மேலே கூறப்பட்ட ஆதாரங்களும் இவை போன்ற மேலும் பல ஆதாரஙகைளும் உள்ளன.
அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பது குறித்து  சில நபிமொழிகள்
அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பது குறித்தும் அவன் மீது நல்லெண்ணம் கொள்வது குறித்தும் சில நபி மொழிகள் வந்துள்ளன. அவைகளில் சில வருமாறு;
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ مَا طَمَعَ بِجَنَّتِهِ أَحَد، وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ مَا قَنَطَ مِنْ جَنَّتِهِ أَحَدٌ  متفق عليه
1-    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்விடமுள்ள தண்டைனையப் பற்றி நன்கறிவாரானால், (அதிலிருந்து தப்பித்தால் போதும் என்று கருதுவாரே தவிர)அவனது சொர்க்கத்தின் மீது (இறை நம்பிக்கையாளர்களில்) யாரும் ஆசை கொள்ளமாட்டார்கள். இறை மறுப்பாளர் அல்லாஹ்விடமுள்ள கருணையைப் பற்றி நன்கறிவாரானால், அவனது சொர்க்கத் தைப் பற்றி (இறைமறுப்பாளர்களில்) யாருமே நிராசை கொள்ளமாட்டார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.
 عن أبي هريرة -رضي الله عنه- قال: قال النبي -صلى الله عليه وسلم -  يقول الله تعالى: أنا عند ظن عبدي بي، وأنا معه إذا ذكرني متفق عليه. 
2- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுவது போலவே நடந்து கொள்கிறேன், அவன் என்னை நினைக்கும் - திக்ர் செய்யும் - போது நான் அவனுடனேயே இருக்கிறேன் நூற்கள் புகாரி முஸ்லிம்.   
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِي قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ مَوْتِهِ بِثَلاَثَةِ أَيَّامٍ يَقُولُ لاَ يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلاَّ وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللَّهِ عَزَّ وَجَلَّ رواه مسلم.

3- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; “வல்லமையும், மாண்பும் மிக்க, அல்லாஹ் வைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டவராகவே தவிர உங்களில் எவரும் மரணிக்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூறியதை நான் கேட்டேன். நூல் முஸ்லிம்.
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي  متفق عليه      
4- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ் படைப்பினங் களை படைத்த போது தன்னிடமுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்’ எனும் அவனது ஏட்டில்  ‘என் ரஹ்மத் (கருணை) என் கோபத்தை மிகைத்து விட்டது’  என்று எழுதியுள்ளான். இந்த வார்த்தைகள் அவனுக்கு முன்னால் அர்ஷின் மீது எழுதப்பட்டுள்ளது’ என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’  நூற்கள் புகாரி முஸ்லிம்.
عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول جعل الله الرحمة مائة جزء فأمسك عنده تسعة وتسعين جزءا وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلق حتى ترفع الفرس حافرها عن ولدها خشية أن تصيبه
5- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில்  தொண்ணூற்று ஒன்பது பாகங்கைளத் தன்னிடேம  வைத்துக்  கொண்டான். (மீதி யிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான்  படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் (பிராணி) குதிரை தனது குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.

وعن أبي هريرة - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه سلم - " والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ، ولجاء بقوم يذنبون ، فيستغفرون الله فيغفر لهم " . رواه مسلم
6- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: என் உயிர் எவன் கையில் உள்ளேதா அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான். நூல் முஸ்லிம்.
 عن صفوان بن محرز  قال قال رجل لابن عمر كيف سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في النجوى قال سمعته يقول يدنى المؤمن يوم القيامة من ربه عز وجل حتى يضع عليه كنفه فيقرره بذنوبه فيقول هل تعرف فيقول أي رب أعرف قال فإني قد سترتها عليك في الدنيا وإني أغفرها لك اليوم فيعطى صحيفة حسناته وأما الكفار والمنافقون فينادى بهم على رءوس الخلائق هؤلاء الذين كذبوا على الله  متفق عليه
 7-ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “(மறுமை நாளில் அல்லாஹ் வுக்கும் அவனுடைய அடியார் களுக்கும் இடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர் ஒருவர் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவனுக்கு அருகில்  கொண்டு செல்லப்படுவார். இறைவன் தனது திரையைப்  போட்டு (அவரை மறைத்து) விடுவான். அப்போது அந்த இறை நம்பிக்கையாளர்  இறைவனிடம் தம் பாவங்களை ஒப்புக் கொள்வார். "நீ (உலகத்தில் செய்த இன்னின்ன பாவங்களை) அறிவாயா?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அந்த நம்பிக்கையாளர், “என் இறைவா! நான் (அவற்றை) அறிவேன்” என்று கூறுவார். அப்போது  இறைவன், "நான் அவற்றை உலகில் (மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்;   இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்து விடுகிறேன்” என்று சொல்வான். பின்னர் அவருடைய நன்மைகளின் ஏடு அவரிடம் கொடுக்கப்படும். இறை மறுப்பாளர்கைளயும் நயவஞ்சகர்களையும் காட்டி, "இவர்கள் தான் அல்லாஹ்வின் மீது  பொய்  உரைத்தவர்கள்'' என்று படைப்பினங்களுக்கிடையே அறிவிக்கப்படும். நூற்கள் புகாரி முஸ்லிம்.
عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ((إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار، ويبسط يده بالنهار ليتوب مسيء الليل، حتى تطلع الشمس من مغربها))  رواه مسلم
8-நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். வல்லைமயும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக்  கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான், இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில்  கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்) வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டி ருக்கிறான்). நூல் முஸ்லிம்.

முன்னோர்களின்  சில கூற்றுகள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَىٰ ظُلْمِهِمْ ۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ -الرعد 6
உமது இறைவன் மக்களை மன்னிப்பவன்; உமது இறைவன் கடுமையாகத் தண்டிப்பவன்.  அர் ரஃத் 6
முதிரிப் என்பவர் மேல் கூறப்பட்ட  திரு வசனத்தை  ஓதியதும் பின் வருமாறு கூறினார்கள். அல்லாஹ்வின் பாவமன்னிப்பு, அருள் முதலியவற்றின் அளவை மக்கள் அறிவார்களானால் நிச்சயம் அவர்கள் சந்தோசமடைவார்கள். மேலும் அவனுடைய தண்டனையை அறிந்தால் (அழுது புலம்பியே)  அவர்களுடைய கண்களில் நீர் வற்றி விடும்.
யஹ்யப்னு முஆத் என்பவர் அல்லாஹ்வுடன் சம்பாஷனை நிகழ்த்தும் போது கூறுவார்; இறைவா! நீ எனக்களித்த அருட் கொடைகளுக்கு முன் எனது நற்செயல்கள் குறைவான போதிலும், நான் உன் மீது வைத்திருக்கும் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது.
அஹ்மத் பின் ஆஸிம் அல் அன்தாகி என்பவரிடம் “ ஒரு அடியான் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பதற்குரிய அடையாளம் யாது”? என வினவப்பட்டது. அதற்கு அவர் ; அல்லாஹ்வின் அருள் அவனை சூழ்ந்து கொண்டால் உலகத்தில் அவ்வருளை பூரணப்படுத்தி மறுமையில் அல்லாஹ்வின் பாவ மன்னிப்பையும் பூரணப்படுத்துமாறு அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பான்.
(அல்லாஹ்வின் மீது)  ஆதரவு வைப்பவரை அறிந்து கொள்ளும் அடையாளங்கள்.
1-    அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வழிப்படுதல் அல்லாஹ் கூறுகின்றான்;
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ ۗ الزمر 9.
2-    இரவு நேரங்களில் ஸஜ்தா செய்தவராகவும், நின்றவராகவும், மறுமையைப் பயந்து தனது இறைவனின் அருளை எதிர்பார்த்தவராகவும் வணங்கிக் கொண்டிருப்பவரா? (அல்லது அவ்வாறு இல்லாதவரா?)அஸ்ஸுமுர் 9.
3-    அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவன் பக்கம் மீள்வது.
  அல்லாஹ் கூறுகின்றான்;
وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ- الأعراف 56.
4-    அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள், நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. அல் அஃராப் 56.
5-    நபி வழியைப் பின்பற்றுதல். அல்லாஹ் கூறுகின்றான்;
 لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ -الأحزاب 21
6-    அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.  அல் அஹ்ஸாப் 21.
7-    உலக ஆசையை கைவிடல்
مَنْ كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ  -العنكبوت 5
8-    யார் அல்லாஹ்வின் சந்திப்பை எதிர் பார்க்கிறாரோ அதற்கான அல்லாஹ்வின் காலக் கெடு வந்தே தீரும். அவன் செவியுறுபவன், அறிந்தவன். அல் அன்கபூத் ஆயாத் 5.
9-    அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது.
10-    தவ்பா செய்வதும், சுய விசாரணை செய்வதும்.
11-    துன்பங்களை சகித்துக் கொள்வதும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செழுத்துவதும்.
12-    நபி வழியில் நிலைத்திருப்பதும், மார்க்கத்தில் புதுவழிகளை உண்டாக்கா திருப்பதும்.
13-    யா அல்லாஹ் எங்களை உன்னை அஞ்சுபவர்களுடனும், உன் மீது ஆதரவு வைப்பவர்களுடனும், மேலும் உன்னை நேசிப்பவர்களுடனும், உளத் தூய்மை உள்ளவர்களுடனும், உன்னைச் சார்ந்தி ருப்பர்களுடனும் ஆக்கியருள்வாயாக. ஆமீன்.
 
உங்கள் கருத்துக்களை எமக்கு அறிவிக்கவும்.           

[email protected]