உங்கள் முதல் எதிரி ஷைத்தான்

ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன். 1.ஷைத்தான் மனிதன் மீது பொறாமை கொண்டவன். 2 பெருமை கொண்டவன். 3. தவறான முறையில் வாதிடவும் வழிகாட்டுவான். 4. மூமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்க முயற்சிப்பான். 5. வீண்விரயம் செய்ய அழைப்பான். 6. அவனது அழைப்பு இசையாகும். 7. சகோதரர்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணுவான்
உளத் தூய்மைளர்கள் மத்தியில் அவன் பலயீன மானவன்

اسم الكتاب: الشيطان عدوك الأول


تأليف: عبد الله بن عبد الحميد الأثري


الناشر: المكتب التعاوني للدعوة وتوعية الجاليات بالربوة


نبذة مختصرة: كتاب مترجم إلى اللغة التاميلية يبين تصورا كاملا عن الشيطان - عدو الإنسان ومتى صار عدوا ؟ وكيفية مكره وحيلته ؟ وما هي الطرق التي يسلكها هذا العدو لإضلال الناس عن رب الناس.


உங்கள் முதல் எதிரி “ஷைத்தான்”

 


< தமிழ் >
        
அப்துல்லாஹ் இப்னு அப்துல் ஹமீத் அல் அசரி




Translator's name N.H.M. ஹம்ஸா

Reviser's nameமுஹம்மத் அமீன்
 
الشيطان عدوك الأول
< تاميلي >
        

اسم المؤلف
عبد الله بن عبد الحميدالأثري



ترجمة: محمد أسامة بن نور الحمزة
مراجعة:محمد أمين
 
Introduction

ஷைத்தான் உங்கள் முதல் எதிரி
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன். சாந்தியும் சமாதானமும் எம் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் மீதும் உண்டாவதாக.
மனிதனது தோற்றம் முதல், ஷைத்தானுடனான அவனது கதை ஆரம்பித்து விட்டது. அதுதான் எம் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிரான விரட்டப் பட்ட ஷைத்தானின்  சூழ்ச்சி, அதன் பின் அவரின் வழித்தோன்றல்களை மறுமை நாள் வரை வழி கெடுக்க முயற்சித்துக் கொண்டே இருப்பான்.
இதனால் தான் அல்லாஹ் ஷைத்தானுடைய தந்திரத்தில் இருந்தும் தொந்தரவில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளும் படி அல்குர்ஆனில் பல இடங்களில் எம்மை எச்சரித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال الله تعالى: ( ٱلشَّيۡطَٰنُ يَعِدُكُمُ ٱلۡفَقۡرَ وَيَأۡمُرُكُم بِٱلۡفَحۡشَآءِۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغۡفِرَةٗ مِّنۡهُ وَفَضۡلٗاۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ٢٦٨) البقرة: ٢٦٨
 (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
وقال الله تعالى أيضا: ( إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمۡ عَدُوّٞ فَٱتَّخِذُوهُ عَدُوًّاۚ إِنَّمَا يَدۡعُواْ حِزۡبَهُۥ لِيَكُونُواْ مِنۡ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ ٦) فاطر: ٦
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான், ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள், அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். 35:6
இன்னும்அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: (يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواْ مِمَّا فِي ٱلۡأَرۡضِ حَلَٰلٗا طَيِّبٗا وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٌ ١٦٨ إِنَّمَا يَأۡمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلۡفَحۡشَآءِ وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ١٦٩) البقرة: ١٦٨ - ١٦٩
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப் பட்டவற்றையும், பரிசுத்தமான வற்றையும் உண்ணுங்கள், ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடான வற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். 2:168،169
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱدۡخُلُواْ فِي ٱلسِّلۡمِ كَآفَّةٗ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ٢٠٨ ) البقرة: ٢٠٨
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள், தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள், நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், 2:208.
قال تعالى: (كَمَثَلِ ٱلشَّيۡطَٰنِ إِذۡ قَالَ لِلۡإِنسَٰنِ ٱكۡفُرۡ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ ١٦) الحشر: ١٦
அல்லாஹ் கூறுகிறான்:
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது, (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன். (ஏனெனில்) நான் அகிலங்களுக் கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான். 59:16.
இதனால் தான் அல்லாஹ் அவனது சூழ்சியிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள, அவனது தந்திரங்களைப் பற்றி விளக்கும் குர்ஆன் வாசனங்களை அருளி அவனது மாய வலையில் சிக்கிக்கொள்ளது எம்மை தற்காத்துக் கொள்ள பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளான்.
அவனது மாயைகளுக்கு அடிமையானோர் அவனுடன் நரக நெருப்பில் எறியப்படுவர்.
மேலும் அஹ்லுஸுன்னா வல்ஜமாஆவின் கோட்பாடு:” மனிதர்களைக் குழப்பி வழிகேட்டின் பால் அவனை ஏவுகின்ற ஷைத்தானை அல்லாஹ் தான் படைத்தான் என்பதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: (وَلَا تَأۡكُلُواْ مِمَّا لَمۡ يُذۡكَرِ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَإِنَّهُۥ لَفِسۡقٞۗ وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوۡلِيَآئِهِمۡ لِيُجَٰدِلُوكُمۡۖ وَإِنۡ أَطَعۡتُمُوهُمۡ إِنَّكُمۡ لَمُشۡرِكُونَ ١٢١) الأنعام: ١٢١
எதன்மீது (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும், நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள். 6:121
அல்லாஹ்வின் நாட்டப்படி அவனுடைய அடியார் களிலிருந்து ஷைத்தானுக்கு அடிமையாகின்றனர்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( وَٱسۡتَفۡزِزۡ مَنِ ٱسۡتَطَعۡتَ مِنۡهُم بِصَوۡتِكَ وَأَجۡلِبۡ عَلَيۡهِم بِخَيۡلِكَ وَرَجِلِكَ وَشَارِكۡهُمۡ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِ وَعِدۡهُمۡۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا ٦٤ ) الإسراء: ٦٤
 “இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய், உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களி லும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள், அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதி களையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்). ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை. 17:64
இன்னும் தான் நாடியவர்களை ஷைத்தானுடைய சூழ்ச்சியிருந்து பாதுகாக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: (إِنَّهُۥ لَيۡسَ لَهُۥ سُلۡطَٰنٌ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ ٩٩ إِنَّمَا سُلۡطَٰنُهُۥ عَلَى ٱلَّذِينَ يَتَوَلَّوۡنَهُۥ وَٱلَّذِينَ هُم بِهِۦ مُشۡرِكُونَ ١٠٠ ) النحل: ٩٩ – ١٠٠
எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமு மில்லை.
திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும் தான் (செல்லும்). 16:99. 100
எனவே அவனுடைய தந்திரமும் சூழ்ச்சியும் இந்த அளவு மனிதனை ஆக்கிரமித்துக் கொள்வதால் நிச்சயமாக ஒவ்வொரு முஸ்லிமும் அந்த ஷைத்தானைப் பற்றி பூரண தெளிவு பெற்றிருத்தல் வேண்டும்.
ஆகவே தான் மனிதனை வழிகெடுத்தும் ஷைத்தானைப் பற்றியும் அவனது சூழ்ச்சியிலிருந்தும், தந்திரங்களி லிருந்தும் ஒரு மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவது எவ்வாறு? என்பது பற்றியும் அல்குர்ஆனினதும், அல் ஹதீஸினதும் ஒளியில் இச்சிறு நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் இச்சிறு தொகுப்பைக் கொண்டு ஈமான் கொண்ட நல்லடியார் களுக்குப் பிரயோசனத்தை வழங்கி, சலபுஸ்ஸாலிஹீன்களது நேரான வழியை அடைய அருள் புரிவானாக.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ وَلَوۡ ءَامَنَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ لَكَانَ خَيۡرٗا لَّهُمۚ مِّنۡهُمُ ٱلۡمُؤۡمِنُونَ وَأَكۡثَرُهُمُ ٱلۡفَٰسِقُونَ ١١٠) آل عمران: ١١٠
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள், இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். 3:110.
ஷைதானின் பண்புகள்
1.    ஷைத்தான் மனிதன் மீது கொண்ட பொறாமையாலும், குரோதத்தாலும் அவனுடன் எப்போதும் போராடக் கூடியவனாக இருப்பான்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ٣٦ قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ٣٧ إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ ٣٨ قَالَ رَبِّ بِمَآ أَغۡوَيۡتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَلَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ ٣٩ ) الحجر: ٣٦ – ٣٩

“என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.
“நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;”
“குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான்.
(அதற்கு இப்லீஸ்) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 15:36. 39
2. அவனை நாளாபக்கங்களாலும் சூழ்ந்துகொண்டு வழிகெடுக்கும் பணியில் ஈடுபடக் கூடியவனாவான்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( قَالَ فَبِمَآ أَغۡوَيۡتَنِي لَأَقۡعُدَنَّ لَهُمۡ صِرَٰطَكَ ٱلۡمُسۡتَقِيمَ ١٦ ثُمَّ لَأٓتِيَنَّهُم مِّنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ وَعَنۡ أَيۡمَٰنِهِمۡ وَعَن شَمَآئِلِهِمۡۖ وَلَا تَجِدُ أَكۡثَرَهُمۡ شَٰكِرِينَ ١٧) الأعراف: ١٦ – ١٧
(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப் பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன். ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர் களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்). 7:16. 17
3. பெருமை எனும், அல்லாஹ் வெறுக்கக் கூடிய பண்பைத் தன்னகத்தே கொண்டவன்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ٣٤)  البقرة: ٣٤
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன்(இப்லீஸு) மறுத்தான், ஆணவமும் கொண்டான். இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். 2:34.
4. அல்லாஹ்வின் விடயத்தில் பூரண அறிவின்றிப் பேசவும், அவனைப்பற்றித் தவறான முறையில் வாதிடவும்  வழிகாட்டுபவன்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّبِعُ كُلَّ شَيۡطَٰنٖ مَّرِيدٖ ٣)  الحج: ٣
இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர் களில் இருக்கிறார்கள். 22:3.
5.  அவன் மூமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்க சதாகாலமும் முயற்சிப்பவன்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( وَقُل لِّعِبَادِي يَقُولُواْ ٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ يَنزَغُ بَيۡنَهُمۡۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلۡإِنسَٰنِ عَدُوّٗا مُّبِينٗا ٥٣) الإسراء: ٥٣
(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான். 17:53.
6.  வீண்விரயம் செய்வோரோடு தோழமை கொண்டு அவனை நரகின் பால் அழைத்துச் செல்பவான்.
அல்லாஹ் கூறுகிறான்:

قال تعالى: ( إِنَّ ٱلۡمُبَذِّرِينَ كَانُوٓاْ إِخۡوَٰنَ ٱلشَّيَٰطِينِۖ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِرَبِّهِۦ كَفُورٗا ٢٧) الإسراء: ٢٧
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். 17:27.
7.   அவன் சில விடயங்களை அதன் பெயர் அல்லாத வேறு பெயர் கொண்டு அழைக்க வழிகாட்டுபவன்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: (فَوَسۡوَسَ إِلَيۡهِ ٱلشَّيۡطَٰنُ قَالَ يَٰٓـَٔادَمُ هَلۡ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ ٱلۡخُلۡدِ وَمُلۡكٖ لَّا يَبۡلَىٰ ١٢٠) طه: ١٢٠
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தை யும்) குழப்பத்தையும் உண்டாக்கி; “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.20:120.

8. அவனது (அழைப்பு) வழி காட்டி இசையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: (وَٱسۡتَفۡزِزۡ مَنِ ٱسۡتَطَعۡتَ مِنۡهُم بِصَوۡتِكَ وَأَجۡلِبۡ عَلَيۡهِم بِخَيۡلِكَ وَرَجِلِكَ وَشَارِكۡهُمۡ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِ وَعِدۡهُمۡۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا ٦٤) الإسراء: ٦٤
“இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களி லும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதி களையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை. 17:64.

9. ஷைத்தான் படைப்புகளின் கோலங்களை மாற்றும்படி ஏவுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: (وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُغَيِّرُنَّ خَلۡقَ ٱللَّهِۚ ١١٩) النساء: ١١٩
இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான். 4:119.
10. சகோதரர்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணுவான்.
 அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( وَرَفَعَ أَبَوَيۡهِ عَلَى ٱلۡعَرۡشِ وَخَرُّواْ لَهُۥ سُجَّدٗاۖ وَقَالَ يَٰٓأَبَتِ هَٰذَا تَأۡوِيلُ رُءۡيَٰيَ مِن قَبۡلُ قَدۡ جَعَلَهَا رَبِّي حَقّٗاۖ وَقَدۡ أَحۡسَنَ بِيٓ إِذۡ أَخۡرَجَنِي مِنَ ٱلسِّجۡنِ وَجَآءَ بِكُم مِّنَ ٱلۡبَدۡوِ مِنۢ بَعۡدِ أَن نَّزَغَ ٱلشَّيۡطَٰنُ بَيۡنِي وَبَيۡنَ إِخۡوَتِيٓۚ إِنَّ رَبِّي لَطِيفٞ لِّمَا يَشَآءُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ١٠٠) يوسف: ١٠٠
இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்;; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மை யாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச் சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார். 12:100.
11. அவனுடைய வழி, கெட்ட வழியாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( وَأَنَّ هَٰذَا صِرَٰطِي مُسۡتَقِيمٗا فَٱتَّبِعُوهُۖ وَلَا تَتَّبِعُواْ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمۡ عَن سَبِيلِهِۦۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ١٥٣)  الأنعام: ١٥٣
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். 6:153.
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: (إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ إِذَا مَسَّهُمۡ طَٰٓئِفٞ مِّنَ ٱلشَّيۡطَٰنِ تَذَكَّرُواْ فَإِذَا هُم مُّبۡصِرُونَ ٢٠١)  الأعراف: ٢٠١
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார் களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள். 7:201.
12. உளத் தூய்மைளர்கள் மத்தியில் அவன் பலயீன மானவன் .
அல்லாஹ் கூறுகிறான்:
قال تعالى: ( قَالَ رَبِّ بِمَآ أَغۡوَيۡتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَلَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ ٣٩) الحجر: ٣٩
(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 15:39.
இறுதியாக:
என் ஈமானிய சகோதரனே! அறிந்து கொள்வீராக, அல்லாஹ் தனது அடியார்கள் மீது ஷைத்தானுக்கு எந்த ஒரு ஆக்கிரமிப்பையும், அதிலிருந்து விடுபடுவதற்குரிய வழியைக்   காட்டாமல் அன்றி ஏற்படுத்தவில்லை, ஆகவே அல்லாஹ்வின் பிடியின் கீழ் தான் அவனும் உள்ளான். எனவே எவருடைய வாழ்க்கையில் நலவு நடக்கிறதோ அவர் அல்லாஹ்வைப் புகழட்டும், அதேபோல் எவர் நலவல்லாத விடயங்களின்பால் செல்கிறாறோ  அவர், அவரிலே தான் குறை இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.
அவ்வாறு ஷைத்தான் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடக் கூடாது என்ற ஆசையிருப்பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த அத்கார்கள், துஆக்களில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கவும். ஏன் என்றால் அவற்றை யார் சரிவர வழமையாக ஓதிக் கடைபிடித்து வருகிறாரோ அவர்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கும் அல்லாஹ்வின் பாதுகாப்புக் கிடைக்கிறது.
முடிவாக அவல்லாஹ்வின் சாந்தி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார் தோழர்கள் மீதும் உண்டாவதாக!.

 


 
Contents


الصفحة    العنوان    م
1        1
        2
        3
        4
        5
        6
        7
        8
        9
        10
        11
        12
        13
        14
        15