சமூக புணரமைப்பில் மஸ்ஜிதின் பங்கு

இஸ்லாத்தின் பார்வையில் பள்ளி வாசல்(மஸ்ஜித்) என்பது வெறும் வணக்க வழிபாடுகளுக்காக மட்டும் உருவாக்கப் படுவதல்ல. ஆன்மீக லௌகீக வாழ்வில் இலட்சியமுள்ள சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.

الاسم : دور المسجد في إصلاح المجتمع


تأليف: محمد إمتياز يوسف

نبذة مختصرة: كتاب باللغة التاميلية يبين أهمية دور المسجد في إصلاح المجتمع، وأن المسجد ليس للصلاة فقط بل لتعليم أمور الحياة الدنيوية والأخروية واهتمام شؤون المجتمع وتصحيح مساره وتسيير أموره.

சமூக புணரமைப்பில மஸ்ஜிதின் பங்கு



] Tamil – தமிழ் –[ تاميلي 

M.S.M.இம்தியாஸ் யூசுப்




2014 - 1435
 
 
دور المسجد في إصلاح المجتمع
« باللغة التاميلية »

محمد إمتياز يوسف




2014 - 1435
 
 
சமூக புணரமைப்பில் மஸ்ஜிதின் பங்கு
எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி.
PART- 01
இந்த பூமியில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் சொந்தமானதுமான இடம் பள்ளி வாசலாகும்.
 பள்ளிவாசல் என்பதற்கு அரபியில் மஸ்ஜித் எனப்படும். அல்லாஹ் ஒருவனுக்கு சிரம் தாழத்தி வணங்குகின்ற இடம் என்பது இதன் பொருளாகும்.
தன்னை வணங்குவதற்காக தன்னுடைய வார்த்தைகள் மற்றும் கட்டளைகளை செயற் படுத்து வதற்காக தன்னுடைய மார்க்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காக தான் விரும்புகின்ற சமூகக் கட்டமைப்பை உருவாக் குவதற்காக அல்லாஹ் சொந்தமாக்கிக் கொண்ட ஒரே ஒரு இடம் பள்ளிவாசல் மட்டும்தான்.
எனவே இஸ்லாத்தின் பார்வையில் பள்ளி வாசல்(மஸ்ஜித்) என்பது வெறும் வணக்க வழிபாடுகளுக்காக மட்டும் உருவாக்கப் படுவதல்ல. ஆன்மீக லௌகீக வாழ்வில் இலட்சியமுள்ள சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும். பள்ளிவாசல் முஸ்லிம் களின் இதயமாகவும் கேந்திர நிலையமாகவும் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு சொந்தக் காரன் அல்லாஹ்:
பூமியிலுள்ள அனைத்துப் பொருட்களையும் சொத்துக் களையும் மனிதன் சொந்தமாக்கிக் கொள்கிறான். உரிமை கொண்டாடுகிறான். ஒருவன் வீட்டை கட்டினால் அது அவனுக்குச் சொந்தமாகின்றது. அவனுடைய வீட்டை எப்படி அழகுபடுத்துவது நிர்வகிப்பது என்பது என்று முடிவு செய்யும் அதிகாரமும் அவனுக்குரியது. அதில் யாரும் தலையிட முடியாது.
அல்லாஹ்வை வணங்குவதற்காக ஒருவரோ அல்லது மக்கள் கூட்டமோ ஒரு பள்ளிவாசலை கட்டினால் அப் பள்ளிவாசல் கட்டியவர் களுக்குச் சொந்தமாகாது. அல்லாஹ்வுக்கே சொந்தமாகிறது.
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ
நிச்சயமாக பள்ளிவாசல்கள் (மஸ்ஜிதுகள்) அல்லாஹ்வுக்குரியது. எனவே அல்லாஹ்வுடன் யாரையும் அழைக் காதீர்கள். (72:18)
سنن ابن ماجه (1/ 243)
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ»
யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலை கட்டுகிறாரோ அவருக்கு அது போன்ற வீட்டை அல்லாஹ் சுவனத்தில் கட்டுவான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உஸ்மான்(ரலி) நூல் : முஸ்லிம் இப்னுமாஜா)
அல்லாஹ்வுக்குரிய பள்ளிவாசல் அவனது விருப்பத்தின் பிரகாரம் ஒழுங்குகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
நிர்வாகிகள் தெரிவு செய்யப்படும் முறை
ஒரு வீட்டை கட்டுகிறவர் அல்லது ஒரு கம்பனியை நடாத்துகின்றவர் அல்லது தொழிற் சாலையை ஆரம்பிப் பவர் தனக்குத் தேவையான சட்டங்களை வகுப்பதுடன் தான் விரும்பும் தகுதியுடையவர்களை தெரிவும் செய்கிறார்.
பள்ளிவாசலுக்கு சொந்தக்காரனாகிய அல்லாஹ் அப்பள்ளி வாசலை நிர்வகிப்ப தற்கும் ஒழுங்கமைப்பதற்குமுரிய விதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறான். அதனடிப்படை யில்தான் நிர்வாகிகள் தெரிவு செய்யப் பட்டுநிர்வாகம் செய்யப்பட வேண்டும்.
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
 அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தையும் கொடுத்து அல்லாஹ் வைத் தவிர வேறு எவரையும் அஞ்சாதோரே அல்லாஹ்வின் மஸ்ஜித்களைப் பராமரிக்கத் தகுதியுடைய யோராவார். எனவே இவர்கள் நேர்வழி பெற்றோர்களில் உள்ளவர்களாவார். (9: 17-18)
ஊரில் அந்தஸ்த்து உள்ளவர் முக்கியஸ்தர், செல்வம் படைத்தவர் என்ற அடிப்படையில் நிர்வாகிகள் தெரிவு செய்யப் படக் கூடாது. தூய்மையான இறை நம்பிக்கை யுடன் அல்லாஹ்வின் சட்டங்களை பின்பற்றுவதுடன் நடைமுறைப் படுத்தக்கூடியவர்களாகவும் ஸகாத்தை முறைப்படி வசூலித்து பகிரக் கூடியவர்களாகவும் அல்லாஹ்வுக்கு தவிர எவருக்கும் அஞ்சாதவர்களாகவும்   உள்ள வர்களே நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும். பள்ளிவாசலுக்குரிய நிர்வாகிகளின் தகுதிகளை அல்லாஹ் வரையறுத்திருப்பதன் அவசியத்தை உணரும் போது பள்ளி வாசலை மையமாகவைத்து சமூகத்தின் அத்திவாரத்தை அமைப்பதற்கு இத்தகைய பண்புகள் உள்ள வர்களால் மாத்திரமே முடியுமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அல்லாஹ்வுக்கு மாத்திரம்  வணக்கம் செலுத்தப்பட வேண்டிய இடம்
அல்லாஹ்வை வணங்குவதற்காக கட்டப்படும் பள்ளி வாசலில் அல்லாஹ்வும் அல்லாஹ்வு டைய தூதரும் கட்டளையிட்ட பிரகாரம் அல்லாஹ்வுக்கு தவிர வேறு யாருக்கும் வணக்கம் செலுத்தப்படக் கூடாது.
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
நிச்சயமாக பள்ளிவாசல்கள் (மஸ்ஜிதுகள்) அல்லாஹ் வுக்குரியது. எனவே அல்லாஹ் வுடன் யாரையும் அழைக் காதீர்கள். (72:18)
அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட பள்ளிவாசல்களில் அல்லாஹ்வுக்கு இணையாக துணை யாக யாரையும் வணங்கக் கூடாது.
அல்லாஹ்வை தவிர யாரையும் அழைத்து பிரார்த்திக் கவோ துதிக்கவோ கூடாது. அல்லாஹ்வுடைய திருநாமங் களை (திக்ரு களை) தவிர வேறொருவரின் பெயரில் திக் ருகள், துதி பாடல்கள் பாடக்கூடாது.
வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அந்த வணக்கங்களில் எதையும் இன்னு மொருவருக்கு செய்திடக் கூடாது.
அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டியவுடன் உள்ளச் சத்துடன் அல்லாஹ்வை நினைவுபடுத்தி அல்லாஹ் வுடைய சிந்தனையில் அல்லாஹ்வுடன் உரையாடல் (முனாஜாத்) செய்கிறோம் என்ற பக்தியுடன் நின்று வணங்குகிறோம். பாதிஹா ஓதுவதற்கு முன், வாழ்வும் மரணமும் அல்லாஹ்வுக்காக என்றும், வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ் வுக்காக மட்டுமே செய்வதாகவும், இணை வைக்கும் ஒருவரில் உள்ளவன் அல்ல என்றும் (வஜ்ஜஹ்து ஓதுவதன் மூலம்) உறுதி மொழி அளிக்கிறோம். அந்த பரிசுத்தமான எண்ணத் திற்கும் செயற்பாட்டிக்கும்  கலங்கம் ஏற்படாத வகையில் மஸ்ஜிது கள் அமையப் பெற வேண்டும்.
ஷிர்க்கை துடைத்தெறிந்து ஏக இறை கொள்கையை நிலை நாட்டுதல்
பள்ளி வாசலில் அல்லாஹ்வுக்கு இணையாக எதனையும்  ஏற்படுத்திட இடம் கொடுக்கக் கூடாது என்ற பாடத்தை இப்றாஹீம் நபி அவர்களின் வரலாற்றின் மூலம் அல்லாஹ் கற்றுத்தருகிறான்.
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
(கஅபா எனும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும் (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கின்றோம்.
(மகாமு இப்றாஹீம் எனும்) இப்றாஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்.
(கஃபாவாகிய அந்த ஆலயத்தை) வலம் வருபவர்களுக்கும் தியானம் புரிய தங்குபவர் களுக்கும் குனிந்து சிரம் பணி பவர்களுக் கும் என்னுடைய வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள் என்று இப்றாஹீம் இடத்திலும் இஸ்மாயீல் இடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். (2:125)
இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது அல்லாஹ்வுடன் செய்த வாக்குறுதியை இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடு கிறான்.
கஃபா எனும் ஆலயம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
பரிசுத்தம் என்றால் துப்பரவு செய்து அலங்காரம் செய்வது மட்டுமல்ல. அல்லாஹ் வுக்குரிய இடத்தில் அல்லாஹ்வுக்கு இணை யாக்கக் கூடிய எந்தவொரு அம்சமும் இல்லாமல் இருக்கவும் வேண்டும்.
நிச்சயமாக (முஷ்ரிகீன்கள்) இணை வைப்பா ளர்கள் அசுத்தமானவர்கள் (9:28) என்று அல்லாஹ் கூறுகிறான். இணைவைப்ப வர்கள் உடல் ரீதியில் அழுக்கானவர்களாக -சுகாதாரத்தை பேணாதாவர்களாக இருப்ப தனால் அவர்கள் அசுத்தமானவர்கள் என்று அல்லாஹ் இங்கே குறிப்பிடவில்லை.
கொள்கை ரீதியாக அவர்கள் அசுத்தமானவர்கள் என்பதைத்தான் குறிப்பிடுகிறான். அல்லாஹ் ஒருவனை ஏற்று அவனுக்கு மட்டும் வணக்கங்களை செலுத்து வோரை சுத்தமானவர்கள் என்று குறிப்பிடு கிறான்.
பள்ளிவாசல்களில் கூட ஷிர்க் எனும் அசுத்தங் களை விட்டும் தூய்மையானதாக இருப்பதற்கே அல்லாஹ் கட்டளையிடு கிறான்.
இப்றாஹீம் நபி. இஸ்மாயீல் நபி புனித ஆலயத்தை பரிசுத்த இடமாக ஆக்கினார் கள். ஆனால் அவர்களுடைய சந்ததிகள் அந்த பரிசுத்தமான இடத்தை அல்லாஹ் அல்லாத வர்களை வணங்கியதைக் கொண்டு சிலை களை வைத்ததைக் கொண்டு அசுத்தமானதாக ஆக்கினார்கள். அல்லாஹ்வை வணங்கக் கூடிய அந்த ஆலயத்தில் பல தெய்வ வழிபாட்டை ஏற்படுத்தியதுடன் இப்றாஹீம் நபிக்கும் இஸ்மாயீல் நபிக்கும் சிலை உருவ வழிபாட்டை ஏற்படுத்தினார்கள்.
நபிகளார் (ஸல்) அவர்கள் இந்த வழி பாட்டை வணங்கும் முறையை நீக்குவதற்காக கடுமை யாக பிரச்சாரம் செய்தார்கள். மக்கா வெற்றியின்போது கபாவிலுள்ள அத்தனை அசுத்தங்களையும் நீக்கி சுத்தப் படுத்தினார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ أَبَى أَنْ يَدْخُلَ البَيْتَ وَفِيهِ الآلِهَةُ، فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ، فَأَخْرَجُوا صُورَةَ إِبْرَاهِيمَ، وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا الأَزْلاَمُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَاتَلَهُمُ اللَّهُ، أَمَا وَاللَّهِ لَقَدْ عَلِمُوا أَنَّهُمَا لَمْ يَسْتَقْسِمَا بِهَا قَطُّ». فَدَخَلَ البَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِيهِ، وَلَمْ يُصَلِّ فِيهِ
நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்த போது கஃபதுல்லாஹ் வுக்குள் சிலைகள் இருக்கும் நிலையில் அதனுள் நுழைய மறுத்து அச்சிலைகளை அகற்றுமாறு கட்டளை யிட்டார்கள். அங்கே இப்றாகீம் இஸ்மாயில் ஆகிய நபி மார்களின் சிலைகள் வைக்கப்பட்டு அவர்களின் கைகளில் அம்புகளும் வைக்கப் பட்டிருந்தன. அச்சிலைகளும் அப் புறப்படுத்தப் பட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள் இதனை செய்த அம்மக்களை அல்லாஹ் அழிப்பானாக! நிச்சயமாக அவ்விரு நபிமார் களும் அம்பின் மூலம் குறிபார்ப்பவர்களாக இருக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியும் என்று கூறிவிட்டு கஃபாவுக்குள் நுழைந்து அதன் மூளைகளில் தக்பீர் கூறினார்கள். அங்கு தொழவில்லை. என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் புகாரி.
அல்லாஹ்வை மட்டும் வணங்கக் கூடியதாக அந்த புனித ஆலயத்தை ஆக்கினார்கள். தன்னுடைய மரணத் தருவாயிலும் இந்த ஷிர்க்கை குறித்தே எச்சரித்தார்கள்.
صحيح البخاري (2/ 102)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ: «لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»، لَوْلاَ ذَلِكَ أُبْرِزَ قَبْرُهُ [ص:103] غَيْرَ أَنَّهُ خَشِيَ - أَوْ خُشِيَ - أَنَّ يُتَّخَذَ مَسْجِدًا
நபி(ஸல்)அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, 'யூதர் களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப் பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்க ஸ்தலங்களாக ஆக்கி விட்டார்கள்’  எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி(ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்திருந்தார்கள், அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  என ஆயிஷா(ரலீ) அறிவிக்கிறார்கள்.(நூல்: புகாரி)
கப்று வணக்கத்தை நீக்குதல்
இந்த உலகத்தில் வாழ்ந்த அதிசிறப்புக்குரிய நபிமார்களின் மண்ணறைகளை வணக்க ஸ்தலங்களாக எடுத்து வழிபட்ட வர்கள் யூத, கிறிஸ்தவர்கள்.
அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கப் பட வேண்டும் என தவ்ஹீத் பிரசாரத்தை பலமாக மேற்கொண்டு ஷிர்க்கிற்கு எதிராக போராடிய அந்த நபிமார்களின் பெயர்களாலே கப்று வணக்கங்களை ஏற்படுத்தி வணங்கத் தொடங் கினார்கள்.
صحيح مسلم (1/ 377)
 عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ النَّجْرَانِيِّ، قَالَ: حَدَّثَنِي جُنْدَبٌ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ، وَهُوَ يَقُولُ: «إِنِّي أَبْرَأُ إِلَى اللهِ أَنْ يَكُونَ لِي مِنْكُمْ خَلِيلٌ، فَإِنَّ اللهِ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا، كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ، أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ، إِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ»
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் "உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக் குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக் கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக் கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள், உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த) வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் (சாலிஹான வர்களின்) நல்லோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக் கொண்டார் கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்" என்று கூறுவதை நான் கேட்டேன். அறிவிப்பவர்: ஜூன்துப் (ரலி) நூல்: முஸ்லிம்
سنن أبي داود (2/ 218)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ»
உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்காதீர் கள்.எனது மண்ணறையை கொண்டாடக்கூடிய இடமாக ஆக் காதீர்கள், எங்கிருந்தாலும் என் மீது ஸலாம் சொல்லுங்கள் உங்கள் ஸலாம் எனக்கு எத்திவைக்கப்டும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்:அபூஹூரைரா(ரலி)(நூல்:அபூதாவுத் அஹ்மத்
موطأ مالك رواية أبي مصعب الزهري (1/ 223)
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلى الله عَلَيه وَسَلم، قَالَ: اللَّهُمَّ لا تَجْعَلْ قَبْرِي وَثَنًا يُعْبَدُ، اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ.
யாஅல்லாஹ்! எனது கப்றை வணங்கப் படக்கூடிய சிலையாக ஆக்காதே. தங்களது நபிமார்களின் கப்றுகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்ட மக்கள் மீது அல்லாஹ் கடுமையாக கோபம் கொண்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதா இப்னு யஸார்(ரலி) நூல்: முஅத்தா
கப்று வணக்கம் என்ற இந்த மாபெரும் அநியாயத்தையே நபிகளார் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் கண்டிக்கிறார்கள். அல்லாஹ் வை வணங்குவதற்காக கட்டப்பட்ட மஸ்ஜிதில் எந்த கப்றும் இருக்கக் கூடாது. கப்றுள்ள இடத்தை மஸ்ஜிதாகவும் ஆக்கக் கூடாது. மஸ்ஜித் தனியாகவும் கப்றுகள் தனியாகவும் இருக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்தில் மதிப்புள்ளவர்கள் மரணித்த பின் அவர்களுக் கான மண்ணறையை பள்ளி வாசலில் அமைத்து வழிபடும் நிலையை ஒரு சிலர் உருவாக்கியிருந்தனர்.
தனி நபர் மீது கொண்ட மோகம், மற்றும் பக்தி காரணமாக இந்த வழிபாட்டை உருவாக்கினர். இது இஸ்லாத்திற்கு உடன்பாடானதல்ல
அல்லாஹ்வை ஏக இரட்சகனாக நம்பிக்கை கொண்டு பள்ளிவாசலில் அவனுக்கு வணக்கம் செலுத்தி உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம் எங்களுக்கு நேரான வழியை காட்டுவாயாக. உன்னுடைய கோபத்திற்கு ஆளாகிய வழிகெட்டுப் போனவர் களின் வழியை காட்டாதே என பொருள்படும் சூறதுல் பாதிஹாவை ஓதி தொழுகின்ற முஸ்லிம் இந்த கப்று வணக்கத்தில் ஒரு போதும் ஈடுபடமாட்டான்.
இஸ்லாமின் வழிபாட்டை சரிவர புரிந்து கொள்ளாத வர்கள் தொழுது முடிந்த பின் அந்த மஸ்ஜிதில் உள்ள கப்றுக்குப் போய் மகானே! நாதாவே! அவ்லியாவே! என அக்கப்றில் உள்ளவரை அழைத்து பிராத்தித்து அழுது கண்ணீர் வடிக்கிறார்கள் இது அவர்களது இறை நம்பிக்கையை கேள்விக் குறியாக்குகின்றது
இவர்கள்  மஸ்ஜிதில் பெயரளவில் தொழுதிரு கிறார்கள். தொழுகையின் யதார்த்தத்தை உணராமல் அல்லாஹ்வின் வல்லமையை அறியாமல் தவ்ஹீதை புரியாமல் தொழு திருக்கிறார்கள்.
கஃபாவிற்குள் நபிமார்களின் நல்லடியார்களின் சிலைகளை வைத்து அன்று மக்கத்து மக்கள் வணங்கி வழிபட்டதும், யூத கிறிஸ்தவர்கள் நபிமார்களின் கப்றுகளை மஸ்ஜிதுகளாக ஆக்கி வணங்கி வழிபடுவதும், முஸ்லிம்கள் எனக் கூறுவோர் மஸ்ஜிதுகளில் அவ்லியா கப்றுகளை கட்டி (கப்றுள்ள இடத்தை மஸ்ஜிதுக் குள்ளாக்கி) வணங்கி வழிபடுவ                             திலும் எந்த வேறுபாடும் இல்லை.
சிலை வணக்கம் கூடாது என அஞ்சியவர்கள் கப்று வணக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். இன்னுமொரு வார்த்தையில் கூறினால் சிலையை முஸ்லிமல்லாதவர் வணங்குவார். கப்றை முஸ்லிம் வணங்குவார் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இவர்கள் வணங்கும் வடிவத்தை (உருவத்தை) மாற்றி யுள்ளாரகளளே தவிர வணக்கத்தை மாற்றவில்லை. சிலையிடம் எந்த நம்பிகை வைத்து கேட்கிறார்களோ அதே நம்பிக்கைக்கு ஈடாகவே இவர்களும் கப்றில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கேட்கிறார்கள்.
    நூஹ் நபியுடைய சமூதாயம் நேர்வழியை விட்டும் நெறி பிறழ்வதற்கு பிரதான காரணமும் இந்த கப்று வணக்கமாகும். அல்லாஹ் அதனை கண்டித்து பிரசாரம் செய்வதற்கு நூஹ் (அலை) அவர்களை இறைதூதராக அனுப்பிவைத்தான்.
    அவர்களது சமூகத்தில் வாழ்ந்த நல்லடியார்களான வத், சுவா, யஊஸ், யஹூக் ஆகியவர்கள் மரணித்த போது அவர்களது கப்ருகளில் ஞாபகார்த்த சின்னங்களை நட்டுமாறும் அதிலே அவர்களது பெயர்களை பொறிக்கு  மாறும் ஷைத்தான் மக்களை தூண்டினான். அந்த மக்கள் அந்த நல்லவர்களை வணங்கவில்லை. இந்த சமூகத்திற்கு அடுத்த தலைமுறையாக வந்த மக்கள் அது பற்றிய அறிவு இன்றி அவர்களை வணங்கத்தொடங்கினர். (அவர்களை கடவுளர்கள் என்றும் அழைத்தனர் சிலைகளாக வடித்தும் வணங்கினர்) என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்.புகாரி, தப்ஸீர் இப்னு கஸீர்)
நபிமார்களாக இருந்தாலும் மலக்குகளாக இருந்தாலும் அவ்லியாக்களாக இருந்தாலும் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களும் அல்லாஹ்வின் அடிமைகளே! அவர்கள் வணக்கங்களுக்கு உரிமை படைத்தவர்களல்ல. எனவே கப்றுகள் வேறாகவும் மஸ்ஜிதுகள் வேறாகவும் ஆக்கப்பட வேண்டும்.
سنن ابن ماجه (1/ 246)
 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ، إِلَّا الْمَقْبَرَةَ، وَالْحَمَّامَ»
மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்படக் கூடிய இடங்களையும் கழிவறைகள் உள்ள இடத்தை யும் தவிர பூமி முழுவதும் தொழக்கூடிய இடமாகும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ருப்னு யஹ்யா(ரலி) நூல்: இப்னு மாஜா
கப்றுகள் உள்ள  இடங்களிலும் அசுத்தங்கள் உள்ள இடங்களிலும் தொழுகையை நிலை நாட்டுவது தடுக்கப் பட்டுள்ளது என நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ள தனால் மையத்துக்களை அடக்குவதற்கு தனியான இடமும் பரிசுத்தமான அல்லாஹ்வை வணங்குதற்கு  தூய்மையான இடமும் கண்டிப்பாக வேறுப்படுத்தியே ஆகவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் வபாத்தான போது(மரணித்த போது) அவர்கள் வாழ்ந்த வீட்டில் சஹாபாக்கள் நல்லடக்கம் செய்தார்களே தவிர பள்ளிவாசலுக்குள் அடக்கம் செய்ய வில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கொள்கைப் பற்றுள்ள சமூகத்தை உருவாக்குதல்
ஓரிறைக் கோட்பாடுள்ள சமூகத்தை உருவாக்குவதன் மூலமே சமூக புணரமைப்பை நேர்த்தியாக செய்திட இயலும் என்பதே மஸ்ஜிதின் முதல் நோக்க மாகும். அல்லாஹ் என்கிற ஒரு கடவுளை  ஏற்றுக் கொள்வதன் மூலமே ஒரு அணியில் இணையும் சமூகத்தை உருவாக்கிட முடியும். ஒரே சிந்தனை, ஒரே பார்வை, ஒரே செயற்பாடு என்ற பயணத்தை தொடர முடியும்
இதன் பயிற்ச்சியின் ஒரு அங்கமாகவே ஐந்து நேர தொழுகைக்கும் பள்ளிக்கு கண்டிப்பாக வந்து தோளோடு தோளாக இணைந்து நின்று அல்லாஹ்வை வணங்க வேண்டும்.
ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும் பள்ளியில் தொழுகையில் பங்கெடுப்பதற்கு நபியவர்கள் அனுமதி வழங்கி ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணையாது ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் நிறுத்தினார்கள்.
  உயர்ந்தவன், தாழ்தவன், பணக்காரன், ஏழை, ஏளியவன், வெள்ளையன், கறுப்பன் என்ற வேறுபாடின்றி தீண்டாமை எழுவதற்கு வழியின்றி எல்லோரும் வரிசையில்  நின்று தொழ வேண்டும். குனிந்து எழும் போது ஒருவருடைய தலை அடுத்தவருடைய காலில் படக்கூடிய தாக சில நேரம் இருக்கும். படைத்த வனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் வார்த்தெடுப்பதே இதன் இலட்சியமாகும்.
 அல்லாஹ்விடத்தில் உயர்ந்ந முஸ்லிமாக கணிக்கப் படுபவர் இறையச்சத்தில் சிறந்தவர் என்றே நபி(ஸல்) போதித்தார்கள். இதற்கான பயிற்சிக் களம் பள்ளி வாசலாகும்.
சமூகத்தில் செல்வாக்குள்ளவர், அந்தஸ்துள்ள வர்,  படிப்பால் உயரந்தவர், செல்வம் படைத்தவர் என்ற  கௌரவம் பெற்றவர்கள் கூட பள்ளிவாசலுக்குள் வந்து விட்டால், தொழுகைக்காக நின்று விட்டால்  அல்லாஹ் வின் அடிமைகள் என்ற நிலைப்பாட்டிலே தான் நிற்க வேண்டும். ஜனாதிபதியாக இருந்தாலும், மந்திரிகளாக இருந்தாலும் அவர்களும் குடிமக்களோடு இணைந்து நிற்க வேண்டும் அவர்களுக்கான பிரேத்தியகமான இடமோ கவனிப்போ கிடையாது. ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையின் பயிற்ச்சி இதுதான். இந்த பயிற்ச்சியினை பெற்றவர்களால் மட்டும் தான் உலகில் தீண்டாமையை ஒழிக்க முடியும். சகோரத்துவத்தை வளர்க்க முடியும்.
இது போன்ற பயிற்ச்சி ஹஜ் வணக்கத்தின் மூலமும் எடுத்து காட்டப்படுகிறது. உலகின் அனைத்து பாகங் களிலிருந்தும் வந்து புனித ஆலயத்தில் ஒன்று சேர் கிறார்கள். இரண்டு வெள்ளை துணிகளை (ஆண்கள்) அணிந்த வர்கள் ஒரே குரலில் ஒரே வார்த்தையில் யா அல்லாஹ்! உன் அழைப்பை ஏற்று அடி பணிந்தவர்களாக வந்து நிற்கிறோம் என்று குரல் எழுப்புவதைத்தவிர வேறெதுவும் இல்லை. வருடாந்தம் நடைப் பெறும் சர்வதேச சகோதரத்துவ மாநாடு இது.
சட்டத்தால் அதிகாரத்தால் அழிக்க முடியாத, தீண்டாமையை ஏக இறைகொள்கையால் ஒழித்து காட்டுகிறது இஸ்லாம். அல்லாஹ் ஒருவனே என்று நம்பினால் மட்டுமே இந்த புரட்சியை அல்லது எழுச்சியை உலகில் ஏற்படுத்திட முடியும்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு ஓரிறை கொள்கையின் பால் அழைப்பு விடுத்த போது மக்காவின் இணைவைப் பாளர்ககளில் சில முக்கியஸ்த்தவர்கள் முஹம்மத் நபி(ஸல்) அவர்களிடம் வந்து பின்வருமாறு முறையிட்டார்கள்
முஹம்மதே! இதோ உம்முடன் சாதாரண மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் எமக்கு இருக்க முடியாது எமக்கு தனி இடம் வேண்டும் அவர்களுடன் சேர்ந்து இருப்பதை அவமான மாக கருதுகிறோம். நாம் வந்தால் அவர்கள் எழுந்து சென்று விட வேண்டும் என்று நீர் உத்தரவு இட வேண்டும் என்று கோரினர். இவர்களின் கோரிக்கையை ஏற்றால் மக்காவில் உயர் குலத்தாரும் பிரமுகர்களும் இஸ்லாத் திற்கு வந்து விடுவர். இஸ்லாமும் வளர்ந்து விடும் ஆனால் இவர்களின் கோரிக்கைய நிராகரித்து அல்லாஹ் வசனத்தை இறக்கி வைத்தான்.
وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِنْ شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ
எவர்கள் தங்கள் இரட்சகனின் (சங்கையான) முகத்தை நாடி காலையிலும் மாலையிலும் அவனை பிரார்த்தனை செய்கின்றார்களோ, அவர்களை நீர் விரட்ட வேண்டாம். அவர்கள் பற்றிய விசாரணை யில் உம்மிடமோ உம்மை பற்றிய விசாரணை யில் அவர்களிடமோ எந்தப் பொறுப் பும் இல்லை. அப்படி அவர்களை நீர் விரட்டினால் அநி யாயக் காரர்களில் உள்ளவராக ஆகிவிடுவீர் (6:52)
எந்த வழியிலும் பாகுபாடு காட்டுகின்ற  பாத்திரத்திற்கு இடமில்லை. ஒரு இறைவனை ஏற்றுக் கொண்டது போல் ஒரு இனமாகவே ஐக்கியமாகவேண்டும் சமூக புணர மைப்புக்கு அடித்தாளமிடும் கொள்கையில் விட்டு கொடுப்புக்கு இடமில்லை என்பதை அல்லாஹ் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.
அல்லாஹ் யாரையும் ஏற்றத்தாழ்வுடன் படைக்கவில்லை. படைப்பில் எவருக்கும் சிறப்பம்சமும் வழங்கவில்லை. எனவே மனிதர்களும் ஏற்றத்தாழ்வு காண்பிக்கக் கூடாது.
மக்கத்து பிரமுகர்கள் கோரியது போல் சமான்ய மக்களை ஒதுக்கி வைத்தால்  பள்ளிவாசலி லிருந்து பாதையோரம் வரை ஏன் சுடுகாடு வரை அனைத்திலும் ஒதுக்கி வைத்திட வேண்டி வரும். இது சமூக சாபகேடாக அமையுமே தவிர முன்னேற்றமாக அமையாது.
 புனித ஆலயமான கஃபாவை சாமான்ய மக்கள் மற்றும் அடிமைகள் அணுக முடியாதவாறு மக்கத்து இணைவைப் பாளர்கள் நிர்வாகம் செய்து வந்தார்கள். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்நிலையை முற்றிலுமாக மாற்றிய மைத்தார்கள்.
மக்காவில் அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற அபீசீனாவைச் சார்ந்த பிலால் என்பவர் சாமான்ய மனிதர். அவரை தொழுக்கான அழப்பு விடுக்கும் அழைப்பாளராக நியமித்து நபி (ஸல்) அவர்கள் கொளரவப் படுத்தி னார்கள்.
வேற்றுமைக்கு சாவு மணி அடிக்கும் வகையில், சமத்து வத்தை  கடைப்பிடிக்கும் முறையில், பள்ளி வாசலில் தொழு கை மூலம் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பயிற்ச்சி வழங்கு கிறது.
இந்தப் பயிற்ச்சி ஆன்மீக பயிற்ச்சியாகும். இறை விசு வாசத்தை உறுதிப்படுத்தும் பயிற்ச்சியாகும். அன்பை, பாசத்தை, நேசத்தை வளர்க்கும் பயிற்ச்சியாகும்.
سنن الترمذي ت بشار (5/ 128)
عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَعْتَادُ الْمَسْجِدَ فَاشْهَدُوا لَهُ بِالإِيمَانِ
ஒருவர் பள்ளிவாசலுடன் தொடர்ப்புடைய வராக இருந்தால் அவரது ஈமானுக்கு நீங்கள் சாட்சி சொல்லுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்வர்: அபூசயீத் (ரலி) (நூல்: திர்மிதி)
இறைநம்பிக்கையையும் பரஸ்பர அன்பையும் விதைக்கும் களமாக, முக்கிய கேந்திர நிலையமாக இப்பள்ளிவாசல்  காணப்படு கிறது.
இதனுடைய இன்னுமொரு படிப்பினை தான் ஒரு முஸ்லி முடைய நிலவரங்களை மற்ற முஸ்லிம் புரிந்து கொள்வது, சுகதுக்கங்களை அறிந்து கொள்வது,  சகோதர வாஞ்சை யுடன் ஒன்றுபட்டு வாழ்வது என்பதாகும்.
தொடரும் இன்ஷாஅல்லாஹ்
 எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி.
சமூக பணிகளை மேற்கொள்ளல்
சமுதாயத்தினை பள்ளிவாசலுடன் இணைக்க வும் அவர்களது பிரச்சனைகளை அலசவும் சரியான வழிகாட்டல்களை  வழங்கவும்  பள்ளி வாசல்  நிர்வாகிகள், பெறுப்புள்ள வர்களாக உள்ளனர்.
பள்ளிவாசலைச் சூழ ஆரோக்கியமான சமூக கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு பள்ளி வாசலைச் சார்ந்தது. பள்ளிவாசல் மூலம் சமூகம் நல்வழி பெறுகின்றது என்ற எண்ணத்தையும் சிந்தனையையும் மக்களுக்கு நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.
சமூக விரோதச் செயல்களையும் சமூகத்தை குட்டிச் சுவராக்கும் காரணிகளையும் உடனே அடையாளம் கண்டு கூறுதற்கும் களைவதற்கும் நிர்வாகம் முன்னிற்க வேண்டும்.
ஐவேளை ஜமாஅத் தொழுகை கடமையாக்கப் பட்டு பள்ளி வாசலில் நிறைவேற்றப் பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைப் பற்றிய யதார்த்தத்தை மக்களுக்கு புரியவைக்க வேண்டும்
முஸ்லிம்கள்  சமூகமாக வாழ பயிற்றுவிக்கவும் சமூக வாழ்வின் இலட்சியங்களை நிறைவு செய்யவும் பள்ளி வாசல் முதன்மை பெறுகின்றது என்பதை அறியச்செய்ய வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது கூபாவில் பள்ளிவாசலை அமைத்ததும் பின்பு மதீனா சென்ற பின் மஸ்ஜிதுந் நபவியை நிர்மானித்ததும் இத்தகைய நோக்கமாக இருந்தது .
பள்ளிவாசலை மையமாக வைத்து வாழும் முஸ்லிம்களின் அன்றாட நிகழ்வுகளை, வாழ்வின் மட்டத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஏழை, பணக்காரன், எஜமானன், தொழிலாளி, படித்தவன், படிக்காதவன் என்று பல்வேறு மட்டத்திலும் வாழும் மக்களின் நிலவரம் அறியப்படுகின்றது.
இதில் அறிவு மட்டம் மட்டுமின்றி பொருளாதார மட்டமும் பிரதான இடம் வகிக்கின்றது.
அனாதைகள், விதவைகள், மனைவியை இழந்த வர்கள், வயோதிபர்கள், பாதிக்கப்பட்டவர்கள், விஷேட தேவையுடையவர்கள் (அங்கவீனர் கள்) ஆகியோரின்  புள்ளி விபரங் கள் அல்லது கணக்கீடுகள் சமூக புனரமைப்பில் பிரதான இடம் வகிக்கின்றது. இதனை பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிவாசலை மையமாக கொண்டு  வாழும் குடும்பங்களின் எண்ணிகை யாது? ஒவ்வொரு குடும்ப உறுப்பினர் களின் எண்ணிக்கை யாது? குடும்பத்தில் தொழில் புரிபவர் களின் எண்ணிக்கை யாது? பட்டதாரிகள் கல்வி மான்கள் ஆகியோரின் எண்ணிக்கை யாது? வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது? வறுமையின் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை யாது? இது பற்றிய முழுமையான தகவல் திரட்டு பள்ளி வாசலால் நடாத்தப்பட்டு பேணப்பட வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்தினாலும் பள்ளிவாசலுக்கு திரட்டப் படும் சந்தா தொகை எவ்வளவு? அப்பணத்தினால் சமூக தேவை களை எந்தளவு நிவர்த்தி செய்யமுடியும்?
விதவைகள், அனாதைகள், முதியோர்கள், திருமணம் முடிக்க இயலாத ஆண்கள், விஷேட தேவையுடையவர்கள் போன்றோருக்கு மாதாந்தம் பள்ளிவாசலால் எந்தளவு கொடுப்பணவுகள் கொடுக்க முடியும்? படிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் ஏற்படுத்த முடியுமா? அல்லது வசதி படைத்தவர்களை அணுகி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியுமா?  என்பதை நிர்வாகம் சிந்திக்க வேண்டும்
அது போல் பள்ளிவாசலுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுத் தரக்கூடிய பொருளாதார நிலமைப் பற்றியும் திட்டமிட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அஹ்லுஸ் ஸூப்பா என குறிப்பிடக்கூடிய சஹாபாக்க ளில் ஒரு சாரார் இருந்தார்கள். இவர்களுக்கு இருப்பதற்கு இருப்பிடமோ வாழ் வதற்கு குடும்பமோ பொருளாதார வசதியோ இருக்க வில்லை. பள்ளிவாசலுடன் இணைந்த திண்ணை யிலே தங்குவதற்கு நபி(ஸல்) அவர்களால்  ஏற்பாடுகள் செய்து கொடுக்கப் பட்டன. மக்கள் கொடுக்கும் ஸதகாக்கள் அன்பளிப்புக்கள் இவர்களது ஜீவனோபாய மாக இருந்தது. இவர்களை நபி (ஸல்) அவர்கள் பொறுப்பேற்று பாது காத்து வந்தார்கள்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் “உங்களில் எவரிடம் இரண்டு பேருக்கான உணவு இருக்கின்றதோ அவர் திண்ணைத் தோழர் களில் மூன்று பேரை அழைத்துச் சென்று உணவு கொடுக்கட்டும். எவரிடம் மூன்று பேருக்குரிய உணவு இருக்கின்றதோ அவர் திண்ணைத் தோழர் களில் நான்கு பேரை அழைத்துச் சென்று உணவு கொடுக்கட்டும் என  கூறிய போது அபூபக்கர்(ரலி) அவர் கள் மூன்று திண்ணைத் தோழர்களை அழைத்துச் சென்று இரவு உணவு கொடுத்தார்கள். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி. நூல்:புகாரி)
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அபூஹூரைரா (ரலி) அவர்கள் சாப்பிடுவதற்கு எதுவுமின்றி பாதையில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அவ்வழியாக சென்ற நபியவர்கள் அபூ ஹூரைரா(ரலி) அவர்களின் நிலயைப் புரிந்து கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்று பால் கொடுப்பதற்கு தயாரான போது திண்ணைத் தோழர்களையும் அழைத்து வருமாறு கூறி பால் கொடுத்தார்கள்.
இது பற்றி அபூஹூரைரா(ரலி) அவர்கள் கூறும் பின்வரும் செய்தியினை பாருங்கள். பல படிப்பினைகள் இந்த ஹதீஸில் இருப்பதனால் முழுமையாக முன்வைக் கின்றேன்.
صحيح البخاري (8ஃ 96)
6452 - حَدَّثَنِي أَبُو نُعَيْمٍ - بِنَحْوٍ مِنْ نِصْفِ هَذَا الحَدِيثِ - حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، حَدَّثَنَا مُجَاهِدٌ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، كَانَ يَقُولُ: أَللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلَّا هُوَ، إِنْ كُنْتُ لَأَعْتَمِدُ بِكَبِدِي عَلَى الأَرْضِ مِنَ الجُوعِ، وَإِنْ كُنْتُ لَأَشُدُّ الحَجَرَ عَلَى بَطْنِي مِنَ الجُوعِ، وَلَقَدْ قَعَدْتُ يَوْمًا عَلَى طَرِيقِهِمُ الَّذِي يَخْرُجُونَ مِنْهُ، فَمَرَّ أَبُو بَكْرٍ، فَسَأَلْتُهُ عَنْ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ، مَا سَأَلْتُهُ إِلَّا لِيُشْبِعَنِي، فَمَرَّ وَلَمْ يَفْعَلْ، ثُمَّ مَرَّ بِي عُمَرُ، فَسَأَلْتُهُ عَنْ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ، مَا سَأَلْتُهُ إِلَّا لِيُشْبِعَنِي، فَمَرَّ فَلَمْ يَفْعَلْ، ثُمَّ مَرَّ بِي أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَبَسَّمَ حِينَ رَآنِي، وَعَرَفَ مَا فِي نَفْسِي وَمَا فِي وَجْهِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا هِرٍّ» قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «الحَقْ» وَمَضَى فَتَبِعْتُهُ، فَدَخَلَ، فَاسْتَأْذَنَ، فَأَذِنَ لِي، فَدَخَلَ، فَوَجَدَ لَبَنًا فِي قَدَحٍ، فَقَالَ: «مِنْ أَيْنَ هَذَا اللَّبَنُ؟» قَالُوا: أَهْدَاهُ لَكَ فُلاَنٌ أَوْ فُلاَنَةُ، قَالَ: «أَبَا هِرٍّ» قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «الحَقْ إِلَى أَهْلِ الصُّفَّةِ فَادْعُهُمْ لِي» قَالَ: وَأَهْلُ الصُّفَّةِ أَضْيَافُ الإِسْلاَمِ، لاَ يَأْوُونَ إِلَى أَهْلٍ وَلاَ مَالٍ وَلاَ عَلَى أَحَدٍ، إِذَا أَتَتْهُ صَدَقَةٌ بَعَثَ بِهَا إِلَيْهِمْ وَلَمْ يَتَنَاوَلْ مِنْهَا شَيْئًا، وَإِذَا أَتَتْهُ هَدِيَّةٌ أَرْسَلَ إِلَيْهِمْ وَأَصَابَ مِنْهَا وَأَشْرَكَهُمْ فِيهَا، فَسَاءَنِي ذَلِكَ، فَقُلْتُ: وَمَا هَذَا اللَّبَنُ فِي أَهْلِ الصُّفَّةِ، كُنْتُ أَحَقُّ أَنَا أَنْ أُصِيبَ مِنْ هَذَا اللَّبَنِ شَرْبَةً أَتَقَوَّى بِهَا، فَإِذَا جَاءَ أَمَرَنِي، فَكُنْتُ أَنَا أُعْطِيهِمْ، وَمَا عَسَى أَنْ يَبْلُغَنِي مِنْ هَذَا اللَّبَنِ، وَلَمْ يَكُنْ مِنْ طَاعَةِ اللَّهِ وَطَاعَةِ رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُدٌّ، فَأَتَيْتُهُمْ فَدَعَوْتُهُمْ ஜص:97ஸ فَأَقْبَلُوا، فَاسْتَأْذَنُوا فَأَذِنَ لَهُمْ، وَأَخَذُوا مَجَالِسَهُمْ مِنَ البَيْتِ، قَالَ: «يَا أَبَا هِرٍّ» قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «خُذْ فَأَعْطِهِمْ» قَالَ: فَأَخَذْتُ القَدَحَ، فَجَعَلْتُ أُعْطِيهِ الرَّجُلَ فَيَشْرَبُ حَتَّى يَرْوَى، ثُمَّ يَرُدُّ عَلَيَّ القَدَحَ، فَأُعْطِيهِ الرَّجُلَ فَيَشْرَبُ حَتَّى يَرْوَى، ثُمَّ يَرُدُّ عَلَيَّ القَدَحَ فَيَشْرَبُ حَتَّى يَرْوَى، ثُمَّ يَرُدُّ عَلَيَّ القَدَحَ، حَتَّى انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ رَوِيَ القَوْمُ كُلُّهُمْ، فَأَخَذَ القَدَحَ فَوَضَعَهُ عَلَى يَدِهِ، فَنَظَرَ إِلَيَّ فَتَبَسَّمَ، فَقَالَ: «أَبَا هِرٍّ» قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «بَقِيتُ أَنَا وَأَنْتَ» قُلْتُ: صَدَقْتَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «اقْعُدْ فَاشْرَبْ» فَقَعَدْتُ فَشَرِبْتُ، فَقَالَ: «اشْرَبْ» فَشَرِبْتُ، فَمَا زَالَ يَقُولُ: «اشْرَبْ» حَتَّى قُلْتُ: لاَ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، مَا أَجِدُ لَهُ مَسْلَكًا، قَالَ: «فَأَرِنِي» فَأَعْطَيْتُهُ القَدَحَ، فَحَمِدَ اللَّهَ وَسَمَّى وَشَرِبَ الفَضْلَةَ
எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெ வருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக் கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்து கொண்டேன்.
அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் அல் குர்ஆனிலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள். (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்ய வில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் அல்குர்ஆனி லுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.
பிறகு அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்து கொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, ‘அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று என்னை அழைத்தார்கள். நான் ‘இதோ காத்திருக்கிறேன், இறைத் தூதர் அவர்களே! என்றேன். ‘(என்னைப்) பின்தொடர்ந்து வா’ என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன்.
நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார் கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) “இந்தப் பால் எங்கிருந்து வந்தது?”என்று கேட்டார்கள். அவர்கள் ‘இன்ன ஆண் அல்லது இன்ன பெண் தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கி யுள்ளார்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹிர்! என அழைத்தார்கள். நான் ‘இதோ வந்துவிட்டேன், இறைத்தூதர் அவர்களே! என்றேன். ‘திண்ணை வாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்து வாருங்கள்’ என்றார்கள்.
திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி விடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்து வரும்படி ஆளனுப்பி விடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள்.
இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணை வாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலை தான் ஏற்பட்டது. ‘(இருப்பதோ சிறிதளவு பால்) திண்ணை வாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், இப் பாலை அவர்களுக்குக் கொடுத்து விடுமாறு நபியவர்கள் உத்தரவு விட நான் அதனை அவர்களுக்கு கொடுத்து விட  (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படியாமல் இருக்க இயலாது என (மனதுக்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார் கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹிர்’ என அழைத்தார்கள். நான் ‘இதோ காத்திருக்கிறேன், கூறுங்கள் இறைத் தூதர் அவர்களே’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள் என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார்.
இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு ‘அபூ ஹிர்!’ என்று அழைத்தார்கள். நான் ‘இதோ காத்திருக் கிறேன், கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று சொன்னேன். அதற்கவர்கள் ‘நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?) என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான் என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘உட்கார்ந்து (இதைப் பருகுங்கள் என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். இன்னும் பருகுங்கள் என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் பருகுங்கள் என்று சொல்லிக் கொண்டே யிருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன். இறுதியில் இல்லை. சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பி வைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை என்றேன். நபி(ஸல்) அவர்கள் (சரி) அதை எனக்குக் காட்டுங்கள் என்றார்கள். எனவே நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்) பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள் (நூல்:புகாரி)
பள்ளிவாசலை மையமாக  கொண்டு வாழும் மக்களின் மனோ நிலை எப்படி இருக்கும் அதனை தலைவர் புரிந்து கொண்டு எப்படி வழி நடாத்த வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் வழிகாட்டுகின்றது.
திண்ணை வாசிகள் பள்ளியின், திண்ணையில் வாழ்பவர்கள் என்பதனால் அவர்களுக்குரிய பொறுப்பினை ஏற்று பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பாடத்தை நபி(ஸல்) அவர்கள் பள்ளி வாசல் தலைவராகவும் சமூகத் தலைவராகவும் இருந்து காட்டியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் ஏழை மக்களான முஹாஜிரீன்களின்  துயரங்களுக்கு நிவாரண ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.
பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக் கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.
ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியி லிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலி ருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளை  செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:267).
(நூல்: இப்னு மாஜாஇ தப்ஸீர் இப்னு கஸீர்).
மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த அந்த முஹாஜிரீன்களின் வறுமையை போக்கி துயர் துடைப்பதற்காக பள்ளிவாசலில் நிவாரணம் மேற்கொள்ளப் பட்டது என்று இந்த ஹதீஸ் தெளிவாக குறிப்பிடுகின்றது. இது ஒரு முறை நடந்ததல்ல. மாறாக  தங்களது அறுவடை காலத்தின் போது ஈத்தப்பழங்களை பள்ளிக்கு  கொண்டு வந்து கட்டப்பட்டிருக்கும் கையிற்றில் தொங்க விடுகின்ற அளவுக்கு மக்கள் பழக்கப் பட்டிருக்கிறார்கள்.
எனவே மக்களது வறுமையை, துயரங்களை கவனத்தில் கொண்டும் பொதுவான அனர்த்தங் களின் போதும் பள்ளிவாசல் மூலமாக சமூக பணியினை முன்னெடுக்க தொண்டர் படையணியை உருவாக்கி பணிசெய்யவும் பள்ளிவாசல் நிர்வாகம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
ஒரு முறை ஏழ்மையிலும் வறுமையிலும் வாடி வதங்கி ஒரு கூட்டம் மதீனாவுக்கு வந்த போது அந்த மக்களின் ஏழ்மை காட்சியைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே பாங்கு சொல்லச் செய்து தொழுது விட்டு மக்களிடம் இந்த ஏழை வரிய மக்களுக்காக உதவி செய்யுமாறு கட்டளை யிட்டார்கள். உலர்ந்த உணவுகளை சேமித்தார் கள். இது பற்றி நபித் தோழர் முன்திர் இப்னு ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸை பாருங்கள்
 صحيح مسلم (2 704)
عَنِ الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} النساء: 1 إِلَى آخِرِ الْآيَةِ،
{إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} النساء: 1 وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} الحشر: 18 «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ - حَتَّى قَالَ - وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர்குலத்தைச் சேர்ந்தவர் களாக இருந்தனர். இல்லை, அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட. பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவி யையும் படைத்தான், பின்னர் இவ்விருவரி லிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.
மேலும் ‘அல் ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள ‘நம்பிக்கை யாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக் கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது '(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ‘ஸாஉ’ கோதுமை, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்’ என்று கூறி, ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’என்று வலியுறுத் தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலி ருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது, ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்ப தையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட) வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு’என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர் கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் ‘(ஒரு நாள்) முற்பகல் நேரத்தில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம்’ என்றே ஹதீஸ் தொடங்குகிறது.
உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகை தொழுவித்து விட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள்’ என்று சற்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. 
நபி(ஸல்) அவர்களின் உத்தரவை ஏற்று மக்கள் தங்களிடம் இருப்பதை கொண்டு வந்து பள்ளிவாசலில் ஒன்றுசேர்க்கிறார்கள். இரு பெரும் குவியல்களாக அப்பொருட்கள் குவிந்து விடுகின்றன.  அதனைக் கண்டு நபியவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.
 இது போல் பஹ்ரைனில் இருந்து செல்வம் வந்த போது அதனை நபி(ஸல்) அவர்களிட மிருந்து பெற்றுக் கொள்ளும் நோக்கில் மக்கள் சுபஹ் தொழுகையில் பள்ளிவாசலுக்கு வந்தார்கள் . மக்கள் முன்னிலையில் பள்ளிவாசலில் வைத்தே நபியவர்கள் அதனை பங்கிட்டார்கள்.
صحيح البخاري (1 91)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَقَالَ: «انْثُرُوهُ فِي المَسْجِدِ» وَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ ஜص:92ஸ صلّى الله عليه وسلم، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ جَاءَ فَجَلَسَ إِلَيْهِ، فَمَا كَانَ يَرَى أَحَدًا إِلَّا أَعْطَاهُ، إِذْ جَاءَهُ العَبَّاسُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: أَعْطِنِي، فَإِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلًا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْ» فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ إِلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ» فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ» فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ، فَأَلْقَاهُ عَلَى كَاهِلِهِ، ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا - عَجَبًا مِنْ حِرْصِهِ - فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ
பஹ்ரைன் நாட்டிலிருந்து சில பொருள்கள் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. ‘அவற்றைப் பள்ளிவாசலிலேயே கொட்டுங்கள்! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொருட்களிலேயே அதுதான் மிக அதிக அளவாக இருந்தது.  தொழுது முடிந்ததும் அப் பொருட்களின் அருகில் அமர்ந்து கொண்டு காண்பவர்களுக்கெல்லாம் வழங்கி கொண்டி ருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ்(ரலி) வந்து இறைத்தூதர் அவர்களே! (பத்ருப் போரில் முஸ்லிம்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட) நானும் (என் சகோதரர் அபூ தாலியுடை மகன்) அகீலும் விடுதலை பெறுவதற்காக (நான் பெறும் தொகையை)ப் பணயமாக வழங்கி யுள்ளேன். எனவே எனக்கு (தாராளமாக) வழங்குங்கள்!’ என்று கேட்டார்கள்.
‘(உமக்குத் தேவையான அளவுக்கு)அள்ளிக் கொள்வீராக!’ என்று நபி(ஸல்) கூறியதும் அப்பாஸ்(ரலி) தங்களின் துணியில் அது கொள்ளுமளவுக்கு அள்ளினார்கள். பின்னர் அதைத் தூக்க அவர் முயன்றபோது அவரால் இயல வில்லை.
‘இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது இதைத் தூக்கி விடச் சொல்லுங்களேன்’ என்று அவர் கேட்டதற்கு ‘முடியாது’என்று நபி(ஸல்) கூறினார்கள். ‘அப்படியானால் நீங்களாவது என் மீது இதைத் தூக்கி வையுங்கள்!’ என்று அவர் கேட்க நபி(ஸல்) அவர்கள் ‘முடியாது’ என்றனர்.
அதில் சிறிதளவை அள்ளி வெளியே போட்டு விட்டு அவர் தூக்க முயன்றார். அப்போதும் அவரால் இயலவில்லை. ‘இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது தூக்கி வைக்கச் செய்யுங்கள்!’ என்று அவர் கேட்க நபி(ஸல்) அவர்கள் ‘முடியாது’ என்றனர். ‘நீங்களாவது தூக்கி விடுங்களேன்’ என்று அவர் கேட்க அதற்கு ‘முடியாது’என்றனர்.
மேலும் சிறிதளவை அள்ளி வெளியில் போட்டுவிட்டு அதைத் தம் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அப்பாஸ்(ரலி) நடக்கலா னார். அவர் மறையும் வரை நபி(ஸல்) அவர்கள் அவரின் பேராசையை எண்ணி வியந்த வர்களாக அவரையே பார்த்துக் கொண்டி ருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்தி லிருந்து எழும் போது ஒரு வெள்ளிக் காசு கூட மீதமாக இருக்கவில்லை.
அறிவிப்பவர்:அனஸ்(ரலி) நூல் புகாரி )
நபி(ஸல்) அவர்களது காலத்தில்  பள்ளி வாசலில் உலர்ந்த உணவு நிவாரனங்கள் மற்றும் பொது பணிகள் சீராகவும் சிறப்பாகவும் நடந்துள்ளன என்பதனை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சமூக பெறுப்புள்ள இடமாக பள்ளிவாசல் உருவாக வேண்டும்.
சமூக பணியும் இன்னுமொரு வடிவமாகவே ஸகாத்துக் ஸதகதுல் பித்ராவும் அமைந்துள்ளது. ஸகாத் அல்லாஹ் அடையாளம் காட்டிய எட்டு கூட்டத்தினருக்கு மட்டும்  கொடுக்கப்பட வேண்டும். இதிலுள்ள வர்கள் அடிப்படை தேவையுடையவர்கள் இவர்களை அடையாளம் கண்டு கொடுக்க வேண்டிய பெறுப்பு இஸ்லாமிய அரசின் தலைவரின் பொறுப்பு. நிர்வாக பரவலாக்கம் மூலம் பல பகுதியிலிந்தும் இந்த ஸகாத் அறவிடபடப் படும். அத்தகைய நிர்வாக அமைப்புக்களில் ஒன்றாகவே பள்ளிவாசலும் காணப்படுகின்றது. எனவே பள்ளிவாசல் மூலம் இப்பணியினை நேர்த்தியா கவும் நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுக் கப்பட வேண்டும்.
 ஸகாத்துல் பித்ரா என்ற பணியும் திறம்படச் செய்ய வேண்டியுள்ளது. இது தனியாகவும் கொடுக்கலாம் கூட்டாகவும் கொடுக்கலாம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஸகாத்துல் பித்ரா திரட்டப்பட்டு அதனை பாதுகாக்கும் பொறுப்பா ளராக அபூஹூரைரா(ரலி) நியமிக்கப் பட்டிருந்தார்கள் என்ற செய்தியை  சஹீஹூல் புகாரியில் பார்க்கிறோம்.
அது போல் பொது மக்களின் சொத்துக்காக பொறுப்பேற்கக் கூடியவர்கள் பொறுப்புக் களை சுமந்திருக்கக் கூடியவர்கள் அதில் மோசடிகள் செய்யும் போது மக்கள் மன்றத்தில் சுட்டிக் காட்டவும் பள்ளிவாசல் தலைவர் தயங்கக் கூடாது.
صحيح البخاري (9ஃ 70)
أَخْبَرَنَا أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ، قَالَ: اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ بَنِي أَسْدٍ يُقَالُ لَهُ ابْنُ الأُتَبِيَّةِ عَلَى صَدَقَةٍ، فَلَمَّا قَدِمَ قَالَ: هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ஜص:71ஸ المِنْبَرِ - قَالَ سُفْيَانُ أَيْضًا فَصَعِدَ المِنْبَرَ - فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: ' مَا بَالُ العَامِلِ نَبْعَثُهُ فَيَأْتِي يَقُولُ: هَذَا لَكَ وَهَذَا لِي، فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ، فَيَنْظُرُ أَيُهْدَى لَهُ أَمْ لا، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لا يَأْتِي بِشَيْءٍ إِلَّا جَاءَ بِهِ يَوْمَ القِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ، إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ، أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ، أَوْ شَاةً تَيْعَرُ «، ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْنَا عُفْرَتَيْ إِبْطَيْهِ» أَلا هَلْ بَلَّغْتُ ' ثَلاَثًا، قَالَ سُفْيَانُ: قَصَّهُ عَلَيْنَا الزُّهْرِيُّ، وَزَادَ هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حُمَيْدٍ قَالَ: سَمِعَ أُذُنَايَ، وَأَبْصَرَتْهُ عَيْنِي، وَسَلُوا زَيْدَ بْنَ ثَابِتٍ فَإِنَّهُ سَمِعَهُ مَعِي، وَلَمْ يَقُلِ الزُّهْرِيُّ سَمِعَ أُذُنِي، خُوَارٌ: صَوْتٌ، «وَالجُؤَارُ مِنْ» تَجْأَرُونَ: «كَصَوْتِ البَقَرَةِ»
நபி(ஸல்) அவர்கள் பனூ ஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது, ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், ‘நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, ‘இது உமக்குரியது, இது எனக்குரியது’ என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப் படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடி தான் மறுமை நாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும், அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயி ருந்தால் கத்திக்கொண்டிருக்கும் என்றார்கள். பிறகு, அவர்களின் அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, ‘நான் எடுத்துரைத்துவிட்டேனா?’ என்று மும்முறை கூறினார்கள்.
 அறிவிப்பவர்: அபூ ஹுமைத்(ரலி) அவர்கள் நூல்: புகாரி
நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமூகத்தின் புனரமைப்பும் அதன்  எழுச்சியும் பள்ளி வாசலினூடாகவே தோற்றம் பெற்றது. அதனால் இஸ்லாமிய சமூகம் ஆன்மீக ரீதியாகவும் லௌகீக ரீதியாகவும் தன்னை பலப்படுதிக் கொண்டு வெற்றிக் கண்டது.
இன்று பள்ளிவாசல்களின் பணி குறுகிய வட்டத்திற்குள் முடக்கப்பட்டதாலும் ஆன்மீக காரியங்களுக்காக சுருக்கிக் கொண்டதாலும் ஒவ்வொரு இயக்கத்தாரும், அரசியல் தலைவரும் தங்களது குறிக்கோளுக்காக பயன்படுத்திக் கொண்டதாலும் பெறுப்புள்ள, அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சும் நிர்வாகிகள் இல்லாததாலும்  இஸ்லாம் எதிர் பார்த்த பணி மக்களுக்கு முழுமையாக சென்றடைய வில்லை.
இதனால் இந்தப் பணிகளை முன்னெடுக்க பள்ளிவாசலுக்கு வெளியில் சனசமூக நிலையங் கள் இயக்கங்கள்  தோற்றம் பெற்றன.  பள்ளிவாசல் அதன் பெறுமையை இழந்து காணப்படுகிறது.