சுய விசாரணையும் கண்காணிப்பும்

ஒரு குற்றவாளியின் எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துக் கொண்டாலும் கூட, பிறகு அவருடைய கண், காது, நாவு, வயிறு, கை, கால், மர்ம உறுப்புக்கள் போன்றவைகளுக் கும் ஆத்மாவுக்கு கட்டுப்படுமாறும், ஒரு புதிய கட்டளை பிறப்பிப்பார். ஏனெனில் அவைகள் இவ் வியாபாரத்தில் அதன் ஊழியர்களாவர், அவை கள் மூலமே அனைத்து செயல்களும் வெளியா கின்றன,,,,,

الاسم : المحاسبة والمراقبة


تأليف: ابن قدامة المقدسي

نبذة مختصرة: كتاب مترجم إلى اللغة التاميلية للعلامة ابن قدامة المقدسي - رحمه الله - يتحدث عن مراقبة الله عز وجل ومحاسبة النفس كل يوم حتى لاتقع في الذنوب والاستغفار من الأخطاء والذنوب التي تقع كل يوم.

சுய விசாரணையும் கண்காணிப்பும்


] Tamil – தமிழ் –[سنهالي 

அல்லாமாஃ : இப்னு குதாமா அல் மக்திஸி

தமிழில்
அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Su-dan.







2014 - 1435
 
 
المحاسبة والمراقبة
 « باللغة السنهالية »
تأليف:
العلامة ابن قدامة المقدسي 


ترجمة
عبد الستار بن عبد الرشيد خان


2014 - 1435
 
 




للعلامة ابن قدامة المقدسي 

சுய விசாரணையும் கண்காணிப்பும்

நூலாசிரியர்
அல்லாமாஃ : இப்னு குதாமா அல் மக்திஸி


தமிழாக்கம்
மௌலவி: அப்துல் சத்தார் மதனி  M.A in (Edu) Sudan.




அல்லாமாஃ  இப்னு குதாமா அல் மக்திஸி
இமாம் அவர்களின் முழுப் பெயர் அபூ முஹம்மத் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு குதாமா இப்னு மிக்தாம் இப்னு நஸ்ர் அல் மக்திஸீ என்பதாகும், இவர்கள் பாலஸ்தீனத்தின் நாப்லஸில் உள்ள ஜம்மாஈல் எனும் கிரமத்தில் ஹிஜ்ரி 541 ல் பிறந்தார்கள், பிறகு பத்தாவது வயதில் தன் குடும்பத்தினருடன் டமஸ்கஸை நோக்கிப் பயணமானார்கள். இளம் வயதில் அல் குர்ஆனை மனனமிட்டு எழுத்தணியிலும் சிறந்து விளங்கிய இமாம் அவர்கள் டமஸ்கஸில் உள்ள பல ஆசிரியர்களிடம் கல்வி பயின்றார்கள். பிறகு தன் உறவினரான அல் ஹாபில் அப்துல் கனீ அல் மக்திஸீ என்பவருடன் பக்தாதை நோக்கி பயணமாகி இருவருமாக அங்கிருந்த ஆசிரியர்க ளிடம் சுமார் நான்கு வருடங்கள் கல்வி பயின்றார்கள்.
பிறகு பக்தாதிலிருந்து திரும்பி மீண்டும் டமஸ்கஸை வந்தடைந்த இமாம் அவர்கள் அவருடைய சகோதரன் அபூ உமர் என்பவருடைய வபாத்துக்குப் பின்னர் அல் ஜாமிஉல் முலப்பர் ஜும்ஆப் பள்ளி வாசலில் ஐநேரத் தொழுகை, ஜும்ஆ பிரசங்கம் போன்ற வைகளை நிகழ்த்தினார்கள். ஹன்பல் மத்ஹபைப் பின்பற்றுபவர்களின் ஷெய்க் என அழைக்கப்பட்ட அவர்கள் அப்பள்ளி வாசலில் தொடர்ந்தும் இமாமாக பணிபுரிந்தார்கள். பன்னூல் ஆசிரியராகத் திகழ்ந்த இவர்களை “அல் முக்னி” எனும் இவர்களுடைய நூல் புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.
ஹிஜ்ரி 620 நோன்புப் பெருநாள் தினத்தில் வபாத்தாகிய இமாம் அவர்கள் தான் பணியாற்றிய பள்ளிவாசின் பின் புறத்தில் அமையப்பெற்ற காஸ்யூன் எனும் மலையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

   


முன்னுரை
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உண்டாவதாக, (சலாத்) எனும் கருணையும் (ஸலாம்) எனும் ஈடேற்றமும் நபிமார்களிலும் தூதர்களிலும் சிறந்தவர்களான எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர் களுடைய கிளையார்கள்  மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
கண்ணிய மிக்க இமாம் “குதாமா அல் மக்திஸி என்பவர் அவருடைய (مختصر منهاج القاصدين) என்ற கூலில் பின்வருமாறு கூறுகிறார்;
அல்லாஹ் கூறுகிறான்;
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا ۗ وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
(ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளை யும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து), தனக்கும் தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். ஏனென்றால், அல்லாஹ் (தன்) அடியார் களிடம் மிகக் கருணையுடையவனாக இருக்கின்றான்). ஆல இம்ரான் 30.
           மேலும் அல்லாஹ் கூறுகிறான்;
وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ
(மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் (நிறுக்க) அதனையும் கொண்டு வருவோம். கணக் கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.) அல் அன்பியா 47.
 மேலும் அல்லாஹ் கூறுகிறான்;
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
(அவர்களுடைய தினசரிக் குறிப்புப் புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளி கள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து "எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும் விடாது இதில் வரையப்பட்டிருக் கின்றதே" என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீங்கள் காண்பீர்கள். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உங்கள் இறைவன் எவனுக்கும் (அவனு டைய தண்டனையைக் கூட்டியோ, நன்மை யைக் குறைத்தோ) அநியாயம் செய்ய மாட்டான்). அல் கஹ்ப் 49.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்;
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
  فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (அங்கு) அதனையும் கண்டுகொள்வார்.
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்).  அஸ் ஸில்ஸால் 6,7,8.
மேலே கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களும் மேலும்  குர்ஆனில் வந்திருக் கும் அவை போன்ற  ஏனைய வசனங்களும் மறுமை நாளில் நிகழவிருக்கும் கேள்வி கணக்கின் பாரதூரத்தை சுட்டிக் காட்டு கின்றன.
இத்தகைய ஆபத்துக்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்க கூடிய ஒரே வழி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே சுய விசாரணை நாடாத்தி உண்மையான முறையில் அவர்களைக் கண்காணித்துக் கொள்வதாகும் என மார்க்க அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். ஆகவே எவர் தன்னை உலகில் சுய விசாரணைக்கு உட்படுத்துகிறாரோ  அவருடைய கேள்வி கணக்கு மறுமை நாளில் இலகுவாகி விடும். மேலும் அவர் செல்லுமிடமும் நல்லதாகும். மாறாக எவர் அதை அலட்சியம் செய்கி றாரோ அவருடைய துக்கம் நீடிக்கும். எனவே அல்லாஹ்வை வழிபடுவதைத் தவிர ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு எந்த வழியும் இல்லை என மார்க்க அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வே தனது திருமறையில் சகிப்புத் தன்மையை கடைபிடிக்கவும் (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருக்கும் படியும் ஏவியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்ற வர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.). ஆல இம்ரான் 200.
ஆகவே அறிவாளிகள் “நிபந்தனையிடலை“ அடிப்படையாக கொண்ட ஆறு நிலைகளை மையமாக வைத்து அல்லாஹ்வின் வழிப் பாட்டில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள், அந்நிலைகளாவன;
1-    நிபந்தனையிடல்
2-    கண்காணித்தல்
3-    சுய விசாரணை செய்தல்
4-    தண்டித்தல்
5-    போராடுதல்
6-    கண்டித்தல்   
அந்நிலைகள் ஒவ்வொன்றையும் பின் வருமாறு விளக்கமாக நோக்குவோம்.
நிபந்தனையிடல்
இலாபத்தை நோக்காகக் கொண்ட ஒரு வியாபாரி தனது (வணிகப்)பங்காளிக்கு சில நிபந்தனைகளை விதித்து அவனை விசாரணை செய்வது போல் (மனிதனுடைய) மதியும், தன் ஆத்மாவை பங்காளியாக்கி அதற்கேற்றாற் போல் அதை நற் செயல்களில் ஈடுபடுத்துவது கட்டாயமாகும். அதாவது அதற்கு நிபந்தகளை விதித்து அதை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதும், தொடர்ச்சி யாக அதைக் கண்காணித்துக் கொள்வதும் கடமையாகும். காரணம் அது மோசடி செய்து மூலதனத்தையும் கூட அழித்துடும் வாய்ப்பு கள் (நிறையவே) உள்ளன. ஆகவே (வியாபாரம்) முடிந்ததும் அதை விசாரணைக் கு உட்படுத்துவதும், தான் இட்ட நிபந்தனை களை செவ்வனே நிறைவேற்றுமாறு அதனிடத்தில் வேண்டுவ தும் கட்டாயமாகும். ஏனெனில்  இவ்வியா பாரத்தின் இலாபம் உயர்ந்த “பிர்தவ்ஸ்“ எனும் சுவனமாகும். அவ்வாராயின் உலகின் பல இலாபக் கணக்குகளை பகுப்பாய்வு செய்வதை விட ஆத்மாவுடன் (செய்யப்பட்ட வியாபா ரத்தின்) கணக்கை பகுப்பாய்வு செய்வது மிக முக்கியமான விடயமாகும். அந்த வகையில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டுள்ள ஒவ்வொரு தைரியசாலியும் தன்னுடைய ஆத்மாவின் அசைவு நிலைகளிலும், அமைதியான நிலைகளிலும், ஊசலாட்ட நிலைகளிலும் அதைக் கட்டுப் படுத்தி விசாரணைக்கு நிறுத்த மறந்து விடக்கூடாது,  ஏனெனில் ஆயுலில் நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் விலைமதிக்க முடியாத நகைகளுக்கு சமமானது.
ஒரு மனிதன் வைகரைத் தொழுகையை முடித்துக் கொண்டதும் சுமார் ஒரு மணி நேரம் அவனுடைய ஆத்மாவுக்கு பின் வருமாறு நிபந்தனைகளை விதிப்பது கட்டாயமாகும். ஆகவே தன்னை நோக்கி (ஆத்மாவே) “என்னிடத்தில் ஆயுளைத்தவிர எத்தகைய பொருட்களும் இல்லை, அதுவே எனது மூலதனம் அது அழிந்து விட்டால் வியாபாரத்திலும் இலாபத்தொகையிலும் நான் நம்பிக்கை இழந்து விடுவேன்.” இன்றைய நாள் அல்லாஹ் எனக்கு அருள் புரிந்து அவகாசமளித்துள்ள இறுதி நாளாகும். அவன் எனது உயிரைக் கைப் பற்றியிருந்தால் நட்செயல்கள் புரிய மீண்டும் இவ்வுலக்கு அனுப்புமாறு அவனிடத்தில் கோர ஆசைப்பட்டிருப்பேன். ஆத்மாவே! நீ மரணித்த பின்னர் மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என நினைத்துக் கொள்! இன்றைய தினத்தை வீணாகக் கழித்து விடாதே. ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணித்தியாளங் களை கொண்டது, ஒவ்வொரு மனிதனுக்கும் (மறுமையில்) இருபத்து நான்கு வெற்றுப் பெட்டகங்கள் வழங்கப் படும். அதில் ஒரு பெட்டகம் அவனுக்கு திறந்து காட்டப்படும், அப்போது அந்த ஒரு மணி நேரத்தில் அவன் செய்த நட்செயல்களின் பிரகாசத்தால் அது நிறம்பியிருக்கும். அதைக் கண்ணுற்றதும் அவன் அடையும் மகிழ்ச்சியை, அனைத்து நரக வாசிகளுக்கும் பங்கீடு செய்யப்பட்டால் அவர்கள் அனைவரும் நரக வேதனையே உணராது வியந்து விடும் அளவுக்கு அவன் மகிழ்ச்சியளைவான். முற்றிலும் இருள டைந்து கருநிறத்துடைய மேலும் ஒரு பெட்டகம் அவனுக்கு திறந்து காட்டப்படும், உடனே துர்வாடை வீசி அதன் இருள் அவனை மூடிக்கொள்ளும், ஆம், அது அவன் அல்லாஹ்வுக்கு மாறு செய்து பாவச் செயல்களில் ஈடுபட்ட ஒரு மணி நேரம். அதைக் கண்ணுற்றதும் அவன் அடையும் துக்கத்தையும் இழிவையும், அனைத்து சுவன வாசிகளுக்கும் பங்கீடு செய்யப் பட்டால் அவர்கள் அனைவரும் சுவர்க்க இண்பங்களை மறந்து விடும் அளவுக்கு அவன் துக்கமடைவான். மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் அப்பாற்பட்ட மேலும் ஒரு வெற்றுப் பெட்டகம் அவனுக்கு திறந்து காட்டப்படும், அது தான் அவன் தூக்கத்திலோ, மறதியிலோ அல்லது ஆகுமாக்கப்பட்ட விடயங்களிலோ கழித்த ஒரு மணி நேரம், அது காலியாக இருப்பதைப் பார்த்து துக்கப் படுவான், அதிக இலாபத்தை ஈட்ட முடியுமானவன் தன்னுடைய அசமந்தப் போக்கால் அதை இழந்து தவிப்பதைப் போன்று அவன் கைசேதப்படுவான். இவ்வாறே தன் ஆயுள் முழுவதிலும் அவன் கழித்த எல்லா மணித்தியாளங்களின் பெட்டகங்களும் அவனுக்கு திறந்து காண்பிக்கப்படும். எனவே அவன் தன்னை நோக்கி “இன்றைய தினத்தின் பெட்டகத்தை (நற்கிரிகைகளால்) நிறப்ப நீ முயற்சி செய், அதைக் காலியாக்கி விடாதே, சோம்பலையும், இளைப்பாருவதை யும் தள்ளிப் போட்டு விடு, அன்றேல் பிறர் அடைந்து கொள்ளும் “இல்லிய்யீன்களின்“ அந்தஸ்துகளை நீ கோட்டை விட்டு விடுவாய்”. என்று கூறுவான். 
ஒரு அறிஞர் கூறினார்; ஒரு குற்றவாளியின் எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துக் கொண்டாலும் கூட, “முஹ்ஸினீன்”களைப் போல் நன்மைகள் செய்யும் சந்தர்ப்பத்தை அவர் இழந்து விட்டார் அல்லவா? ஆகவே மேற்கூறிய வாறு நித்தமும் அவருடைய ஆத்மாவுக்கு கட்டளையிட்டுக் கொள்வார். பிறகு அவருடைய கண், காது, நாவு, வயிறு, கை, கால், மர்ம உறுப்புக்கள் போன்றவைகளுக் கும் ஆத்மாவுக்கு கட்டுப்படுமாறும், ஒரு புதிய கட்டளை பிறப்பிப்பார். ஏனெனில் அவைகள் இவ் வியாபாரத்தில் அதன் ஊழியர்களாவர், அவை கள் மூலமே அனைத்து செயல்களும் வெளியா கின்றன. இவ்வுறுப்புக்களின் எண்ணிக்கை யளவே நரகத்தின் வாயில்களும் உள்ளன என்பதை யும் ஆத்மாவுக்கு கற்றுக் கொடுப்பார். இவ்வுறுப்புகளினால் பாவம் செய்பவர்கள் அவ்வாயில்களால் அவசியம் நரகத்துக்கு நுழைய வேண்டியிருப்பதால் அவைகளை பாவங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளு மாறு கட்டளையிடுவார்.  
தேவையற்றவைகளைப் பார்வையிடுவது, பிற முஸ்லிம்களை இழிவாக நோக்குவது, மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவைகளை பார்வையிடுவது போன்றவைகளில் இருந்து கண்களை பாதுகாத்து, அறிவு சார்ந்த பயனுள்ள புத்தகங்களை வாசித்து படிப்பினை பெறுவது, நபி வழியிலும், இறை மறையிலும் உள்ள நற்பணிகளை நோக்கு வது, அல்லாஹ்வின் படைப்புக்களின்  அதிசயங் களை சிந்தனை ரீதியாக அவதானிப்பது போன்ற தனது வியாபாரத்திலும் அது ஈட்டித் தரவிருக்கும் இலாபத்திலும் கண்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு (கண்களுக்கு) கட்டளை யிடுவார்.
இவ்வாரே பிற உறுப்புகளுக்கும் அவை களுக்குத் தக்க கட்டளைகளை விதிப்பது அவசியமாகும். குறிப்பாக நாவு, வயிறு போன்றவைகளுக்கு கட்டளை யிடுவார். நாம் ஏற்கெனவே நாவின் தீமைகளை விளக்கி யிருக்கிறோம். எனவே அதை சச்சரவுகளின் போது  தீர்வுகள் வழங்கு தற்கும், அல்லாஹ் வின் அடியார்களை நேர்வழிக்கு அழைக்கவும், (பிறருக்கு) கல்வியூட்டவும், கற்றவைகளை மீட்டிப் பார்க்கவும், (பொது மக்களுக்கு) அறிவுரைகள் வழங்கவும், அல்லாஹ்வை திக்ர் செய்யவுமே ஈடுபடுத்த வேண்டும். அவ்வாரே வயிற்றை பெரும் பசியை விடுமாறும், மனோ இச்சைகளையும், சந்தேகத்துக்கு உரியவை களையும் தவிர்த்து நடக்குமாறும், அவசிமானவைகளை மட்டும் அளவுடன் உட்கொள்ளுமாறும் கட்டளை யிடுவார். மீறும் பட்சத்தில் வயிற்றை பட்டினி போடுமாறு ஆத்மாவுக்கு கட்டளை யிடுவார். இவ்வாரே அனைத்து உறுப்பு களுக்கும் கட்டளைகள் வழங்குவார்.  
நாளாந்தம் இரவு பகலாக மாறிமாறி வரும் வணக்க வழிபாடுகளில், ஒருவருக்கு செய்ய முடியுமான சுன்னத்தான தொழுகைகளை அதிக அளவில்  தொழுவது தொடர்பாக ஆத்மாவுக்கு புதிய கட்டளைகளை விதிப்பார். இயல்பாகவே உனது ஆத்மா அவைகளை  வழக்கமாக்கிக் கொள்ளும் வரை தினசரி அதற்கு கட்டளைகள் பிறப்பிப்பது அவசியம். அவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டால் நிபந்தனை கள் அவசியமில்லை.
இறைத் தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்: எவன் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு மரணத்திற்குப் பின் வரவிருக்கும் வாழ்க்கையை அழகுபடுத்துவதில் ஈடு பட்டானோ அவனே புத்திசாலி ஆவான். தன்னைத் தன் மனத்தின் தகாத இச்சைகளின் பின்னே அலைய விட்டுவிட்டு அல்லாஹ்விடம் தவறான நம்பிக்கைகளை வைத்துக் கொண்டி ருப்பவன்  சக்தியற்றவன் (முட்டாள்) ஆவான். அறிவிப்பாளர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) நூற்கள் திர்மிதி, இப்னு மாஜா, ஹாகிம், அஹ்மத்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்; (மறுமை யில்) விசாரணைக்கு நிறுத்தப் படுவதற்கு முன்னர் நீங்களே சுய விசாரணை செய்து கொள்ளுங்கள். (மறுமை யில்) (மீஸான் தராசில்) நிறுக்கப்படுவதற்கு முன்னர் உங்களை நிறுத்துக்கொள்ளுங்கள். (விசாரணைக்காக) மாபெறும் அணி வகுப்புக்கு ஆயத்தமாகுங்கள்.
அல்லாஹ்  கூறுகின்றான்;
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ
அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப்படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. அல்ஹாக்கா 18.
கண்காணித்தல்
நாம் மேலே கூறியது போல் ஒரு மனிதன் தனது ஆத்மாவுக்கு கட்டளைகள் பிறப்பித்து, அதற்கு நிபந்தணைகளையும் விதித்து முடிந்து விட்டால், பிறகு அதை தொடர்ச்சி யாக கண்காணிப்பது கட்டாயமாகும்.
ஓரு ஸஹீஹான ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் “இஹ்சான் பற்றி விளக்குகையில்” அடுத்து  ஒரு மனிதர், இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இஹ்சான் என்பது) அல்லாஹ் வை நீங்கள் பார்த்துக்  கொண்டிருப்பதைப் போன்ற உணர் வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை  நீங்கள் பார்க்க வில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் என்று கூறினார் கள். நூல்கள் முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, அபூதாவூத், நஸாஈ, ஹாகிம்.
ஒரு முறை பெரியார் சிப்லி அவர்கள் எத்தகைய அசைவுகளுமின்றி அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருந்த அபுல் ஹுஸைன் அந் நூரி என்பவரிடம் சென்று, இவ்வளவு அமைதியாக இருந்து கண் காணிப்பில் ஈடுபடும் வழிமுறையை எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டார். அதற்கவர் நாங்கள் வளர்த்த ஒரு பூனையிடமிருந்தே அதைக் கற்றுக் கொண்டேன், (ஒரு பிராணி யை) அது வேட்டையாட முனைந்தால்  தன் சருமங்க ளில் ஒன்று கூட அசையாதவாறு பாரங்கல் ஒன்றின் மேல் காத்திருக்கும் என்றார். இவ்வாறு தான் ஒரு மனிதன் மார்க்கக் கல்வியை கற்கவோ அல்லது நல்லமல்கள் செய்யவோ தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முன்னர் தன் ஆத்மாவை கண்காணித்துக் கொள்வார். அதாவது அல்லாஹ்வுக்காகவா, அல்லது அவருடைய மனோஇச்சையின் தூண்டுதலுக்கு இரையாகியா அச்செயலை செய்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார், இதையே “இக்லாஸ்” மனத் தூய்மை என்கிறோம்.
பெரியார் ஹஸன் அவர்கள் கூறினார்கள்; தனது செயல்கள் அல்லாஹ்வுக்குறியதா, அன்றேல் முகஸ்துதி கலந்ததா, என உறுதி செய்த பிறகு அவைகளை செய்பவனுக்கு அல்லது கைவிடுபவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
ஒரு அடியான் (தன்னை) வழிப்பாட்டில் கண்காணிக்கும் முறை, அவன் அதில் மனத்தூய்மையாக இருப்பதாகும். பாவச் செயல்களில் கண்காணிக்கும் முறை         (ஏற்கனவே செய்த) பாவங்களுக்கு வருந்தி, பிறகு அவைகளிலிருந்து வெளியேறி மன்னிப்பு கோறுவதாகும். அனுமதிக்கப் பட்டவைகளில் கண்காணிக்கும் முறை இன்பங்களுக்கு நன்றி செழுத்தி நல்லொழுக்கத்தை  கடைபிடிப்ப தாகும். இவ்வாரே (ஆத்மாவின்) சகல நிலைகளிலும் கண்காணிப்பு அவசியமா கின்றது.
தாவூத் (அலை) அவர்களுடைய குடும்பத்தி னரின் ஞானத்திலிருந்து வஹ்ப் இப்னு முனப்பஹ் (ரஹ்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள்; ஒரு புத்திசாலி மனிதன் தினசரி நான்கு மணி நேரங்களை பின் வருமாறு கழிக்க கடைமைப்பட்டிருக்கிறான். தன் இறைவனு டன் சப்பாஷனை செய்ய ஒரு மணி நேரம், தன்னை சுய விசாரணைக்கு உற்படுத்த ஒரு மணி நேரம், தன்னிடமுள்ள குறைகளையும், உன்மை நிலையையும் எடுத்துச் சொல்லும் நண்பர்களோடு கழிக்க ஒரு மணி நேரம், அனுமதிக்கப்பட்ட இன்பங்களிலிருந்து ஒதுங்கி இருக்க ஒரு மணி நேரம். இவ்வாறு செய்வது  ஏனைய நேரங்களுக்கு உதவியாக அமையும், அத்துடன் உண்டு, குடிப்பதில் செலவிடும் அந்த நேரங்களும் மிகச் சிறந்த அமல்களான சிந்தித்தல், (அல்லாஹ்வை) திக்ர் செய்தல் போன்ற அமல்களிலிருந்து காலியாக இருக்கக்கூடாது,  ஏனெனில் ஒருவர் உட் கொள்ளும் உணவை பற்றி சிந்திப்பது கூட உறுப்புகளால் செய்யப்படும் பல அமல்ளை விட பன்மடங்கு சிறந்தது.
 

 சுய விசாரணை செய்தல்  
 
அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” அல் ஹஷ்ர் 18.
செயல்கள் முடிந்ததும் (ஆத்மாவை) விசாரணைக்கு உட்படுத்துவதையே இத்திரு வசனம் குறிக்கிறது. ஆகவே தான் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்; (மறுமையில்) விசாரணைக்கு நிறுத்தப் படுவதற்கு முன்னர் நீங்களே சுய விசாரணை செய்துக் கொள்ளுங்கள். மேலும் ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; ஒரு இறை விசுவாசி தன் ஆத்மாவின் மீது வலிமைகொண்டவன். ஆகவே அதை விசாரணைக்கு உட்படுத்து வான். மேலும் அவர்கள் கூறினார்கள்; அவன் திடீரென ஒரு பொருளைக் கண்டு வியந்தால் அல்லாஹ் வின் மீது ஆணையாக உன்னை அடைய என்னிடம் எத்தகைய உபாயமும் இல்லை, உனக்கும் எனக்கு மிடையில் திரையிடப் பட்டுள்ளதால் என்னிடமிருந்து நீ விழகி நில். எனக் கூறி அப்பொருளை (ஆத்மாவுக்கு) முழுமையாக அநுபவிக்க விடமாட்டார். பிறகு அதை நோக்கி “நான் இதை நேசிக்கவில்லை, இதற்கும் எனக்கும் எத்தகைய் தொடர்பும் இல்லை? அல்லாஹ் வின் மீது ஆணையாக நான் இதற்கு ஒரு போதும் நெருங்கவும் மாட்டேன் எனக் கூறுவான்.
உண்மையில் இறைவிசுவாசிகள் திருக் குர்ஆனுடன் பிணைக்கப்பட்டவர்கள், அது அவர்களை அழிவுக்கு தள்ளிவிடமாட்டாது. மேலும் ஒரு இறை விசுவாசி உலகின் கைதியாவான் அது அவனை விடுதலை செய்யவே முயல்கிறது, மரணிக்கும் வரை அவன் எதற்கும் அஞ்சவே மாட்டான், அவனுடைய சகல உருப்புகளுக்கும் குறிப்பாக நாவு, பார்வை, கேள்விப்புலன் ஆகியவை களுக்கு (மறுமையில்) பதில் சொல்ல வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது.
ஒரு நாளின், அல்லது மாதத்தின் அல்லது வருடத்தின் இறுதியில் உலகில் உள்ள வியாபாரிகள் தங்கள் வியாபார நடவடிக்கை களுக்கு அவர்களுடைய பங்காளிகளிடம் விசாரணை செய்வார்கள். அடியானும் தன் ஆத்மாவுக்கு நிபந்தனைகள் விதிக்க அதிகாலையில் அவசியம் நேரம் ஒதுக்கிக் கொள்வதுடன், அவனுடைய ஆத்மா செய்த அனைத்து விடயங்கள் தொடர்பாக விசாரணை செய்ய மாலையிலும் சில மணி நேரங்களை ஒதுக்கிக் கொள்வது கட்டாயமாகும். 
சுய விசாரணை என்பது வியாபார மூல தனத்தின் இலாபத்தையும் நஷ்டதையும் சரி பார்த்து கூடுதல் குறைவுகளை அறிந்து கொள்வது போல், சன் மார்க்கத்தின் மூல தனமான கடமையாக்கப் பட்ட வணக்கங்க ளையும் அதனுடைய இலாபமாகிய நல்லொழுக்கங்களையும், நபிலான வணக் கங்களையும், அதன் நஷ்டமாகிய பாவச் செயல்களையும் (விளங்கி) சரி பார்பார்த்துக் கொள்வதை குறிக்கும். (இதன் அடிப்படை யில் ஒரு அடியான்) முதலில் கணக்குப் பார்க்க வேண்டியது கடமையாக்கப் பட்ட வணக்கங்க ளிலாகும். ஒரு குற்றத்தை செய்திருந்தால் விடுபட்ட வணக்கங்களால் அதை ஈடு செய்வதன் மூலம் அந்த ஆத்மாவுக்கு தண்டனை வழங்க வேண்டும். 
அறுபதாவது வயதில் வாழ்ந்து கொண்டி ருந்த இப்னு ஸம்மா என்ற பெரியார் தன்னை ஒரு முறை சுய விசாரணைக்கு உட்படுத்தினார், அப்போது அவர் வாழ்ந்த ஆயுலின் நாட்களை கணக்கிட்டுப் பார்த்ததில் அவை இருபத்தோ ராயிரத்து ஐநூறு நாட்கள் என்பதை அறிந்ததுமே உறத்த குரலில் சப்தமிட்டார். “எங்களுடைய துக்கமே!  இருபத்தோராயிரத்து ஐநூறு பாவங்களுடன் இறைவனை சந்திப்பதா!? அதுவும் தினசரி செய்த பத்தாயிரம் குற்றங்களுடனுமா?” எனக் கூறி விட்டு மயக்க முற்று விழுந்த அவர்களுடைய உயிர் அப்போதே பிரிந்து விட்டது, உடனே அங்கிருந்தவர்கள் “ஓரே பாய்ச்சலில் சுவனத் துக்கு சென்றவரே!” என்ற ஒரு அசரீரி சப்தத்தை செவிமடுத்தார்களாம். ஆகவே ஒவ்வொரு அடியானும் நாளாந்தம் அவன் சுவாசித்த மூச்சுகளினதும், ஒவ்வொரு மணி நேரங்களிலும் அவனுடைய இதயத்தாலும் பிற உறுப்புகளாலும் வெளியான தவறு களுக்காக (ஆத்மாவை) விசாரணைக்கு உட் படுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஒரு மனிதன் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கையளவு கற்களை அவனுடைய வீட்டுக்கு எறிந்து வந்தால் கூட  குறுகிய காலத்தில் அந்த வீடே நிறைந்து விடும். ஆனால் மனிதர்கள் செய்யும் குற்றங்களை (அவர்கள் ஒரு போதும்) கணக்கிட்டுப் பார்ப்பதில்லை, (உண்மையில்) அவைய னைத்தும் பதியப்படுகின்றன, அல்லாஹ் கூறுகின்றான்.
أَحْصَاهُ اللَّهُ وَنَسُوهُ ۚ
அதை அல்லாஹ் கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அதை மறந்து விட்டனர். அல் முஜாதலா 6. 
 அலட்சியம் செய்யும் ஆத்மாவை தண்டித்தல்
ஒரு அடியான் தன் ஆத்மாவை விசாரணைக்கு உட்படுத்தி அதன் அலட்சியப் போக்கையோ அல்லது அது குற்றமிழைத்து இருப்பதையோ கண்டால் ஒரு போதும் பாராமுகமாக இருந்து விடக்கூடாது, காரணம் குறித்த நேரத்தில் அக்குற்றத்தை விடுவது இலகுவாக இருந்தாலும், முற்றாக அதைக் களைந்து விடுவதென்பது சுலமான ஒரு விடயமல்ல. எனவே (குற்றமிழைத்த) தனது பிள்ளையை யோ அல்லது மனைவியையோ தண்டிப்பது போன்று அனுமதிக்கப்பட்ட ரீதியில் அதைத் தண்டிப்பது கட்டாயமாகும்.
உமர் (ரலி) அவர்களைத் தொட்டும் வந்துள்ள ஒரு செய்தியில், அவர்கள் ஒரு முறை அவர்களுடைய தோட்டத்துக்கு சென்று திரும்பினார்கள், அப்போது மக்கள் அஸர் தொழுகையை முடித்திருந்தனர். தான் தோட்டத்துக்குச் சென்ற காரணத்தால் மக்களோடு தொழக்கிடைக்காத குற்றத்துக் காக அத்தோட்டத்தையே ஏழைகளுக்கு தர்மம் செய்தார்கள். லைஸ் என்பவர் இங்கு உமர் (ரலி) அவர்களுக்கு ஜமாஅத் தொழுகை மட்டுமே தவறியது என்றார். வேறு ஒரு அறிவிப்பின் வாயிலாக வந்துள்ள செய்தியில் மக்ரிப் தொழுகை பிந்திய காரணத்துக்காக அவர்கள் இரண்டு அடிமைகளை தர்மம் செய்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை தமீமுத்தாரி (ரலி) எனும் நபித்தோழர் அவர்களால் தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுந்திருக்க முடியவில்லை, அதற்காக அவர்கள் ஒரு வருடம் இரவில் தூங்காமல் நின்று வணங்கினார்கள்.
 ஹஸ்ஸான் இப்னு ஸினான் என்பவர் ஒரு அறைக்குப் பக்கத்தால் நடந்து செல்ல நேர்ந்ததும் “இது எப்போது கட்டப்பட்டது?“ எனக் கேட்டார் பிறகு அவருடைய ஆத்மாவை நோக்கி “தேவையற்ற ஒரு கேள்வியை எழுப்பியதற்காக உன்னை ஒரு வருடம் நோன்பு நோற்று தண்டிக்கிறேன்“ எனக் கூறி, ஒரு வருடம் நோன்பு நோற்றார்கள்.
மேலே கூறப்பட்டவைகளுக்கு மாற்றமாக (மார்க்கத்தில்) அனுமதிக்கப் படாத தண்டனைகளை விதித்துக் கொள்வது முற்றிலும் தவறான செயல்களாகும். உதாரணத்துக்கு பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர் அந்நிய பெண்ணின் தொடையில் கைவைத்த குற்றத்துக்காக அக்கையை தீயிட்டுக் கொழுத்தி செயலிழக்கச்செய்தார். வேறு ஒருவர் பிரிதொரு அந்நிய பெண்ணிடம் செல்ல தனது காலை எடுத்து வைத்த குற்றத்துக்காக, அக்காலை திரும்பப் பெறாது காற்று மழை போன்றவைகளால் சிதைவடை யும் வரை வைத்திருந்தார், மேலும் ஒருவர் ஒரு அந்நிய பெண்ணை பார்த்த குற்றத்துக்காக தன் கண்கள் இரண்டையுமே பிடிங்கி வீசியதாகவும் வந்துள்ளன, இவைகள் அனைத்தும் அவர்களுடைய மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட போதிலும் எங்களுடைய மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விடயங்களாகும்.
எமது மார்க்கத்திலும் அறியாத்தனமாக இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள், உதாரணத்துக்கு கஸ்வான் அல் ஸாஹித் எனும் துறவி ஒரு அந்நிய பெண்ணை பார்த்த குற்றத்துக்காக தன் கண்களுக்கே அடித்து பார்வையிழந்தார். அவ்வாரே கடுமையான குளிர் காலத்தில் குளிப்பு கடமையான ஒருவருக்கு சோர்வு ஏற்பட்ட காரணத்தால் அண்டை போடப் பட்டு அணிந்திருந்த கம்பளி ஆடையுடனே குளிப்ப தாகவும் அதைக் கலைவதோ பிழிவதோ இல்லை என்றும் சத்தியம் செய்து விட்டு குளித்ததாகவும், அது சுமார் இருபது இராத்தல்கள் எடை கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவையனைத்தும் அறியாத்தனமாகும். இப்படி அறியாத் தனமாக வணக்கத்தில் ஈடுபடுவர்களைப் பற்றி எனது “தல்பீஸ் இப்லீஸ்“ (இப்லீஸு டைய பித்தலாட்டங்கள்)  எனும் புத்தகத்தில் நிறையவே கூறிப்பிட்டுள்ளேன். 
     
போராடுதல்
அதாவது நாம் முன்னர் கூறியது போல் ஒரு அடியான் தன் ஆத்மாவை சுய விசாரணைக் கு உட்படுத்தியதும் அதைக் குற்றவாளியாகக் கண்டால் தண்டிப்பதும், ஏதாவது நல்லொழுக்கங்களிலோ அல்லது அவ்ராது கள் ஓதுவதிலோ சோர்வு காட்டினால் அதற்கு மேலதிக அவ்ராதுகளை வழங்கி ஒழுக்க மூட்டுவதும் கட்டாயமாகும். அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களைப் பற்றி வந்துள்ள ஒரு சம்பவத்தில் அவர்களுக்கு ஒரு கூட்டுத் தொழுகை தவறிய காரணத்துக்காக குறித்த இறவு முழுவதையுமே (வணக்கத்தால்) உயிர்ப்பித்தார்களாம். ஒரு அடியானுடைய ஆத்மா மேலதிக அவ்ராது களை ஓத மறுக்கும் பட்சத்தில் முடிந்த அளவையாவது  ஓத வைக்க அதனுடன் போராடுவது கட்டாயமாகும்.
இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; நல்ல மனிதர்களுடைய ஆத்மாக்கள் இயல்பாகவே நற்செயல்கள் புரிவதை ஏற்றுக் கொள்கின்றன, ஆனால் எங்களுடைய ஆத்மாக்களோ அதை நிர்ப்பந்தமாகவே ஏற்கின்றன. அவர்களைப் போல் (ஆத்மாவை) இயல்பு நிலைக்கு மாற்றுவதற்குள்ள ஒரே வழி அக்கரையுடன் வணக்கத்தில் ஈடுபடுவர்களின் செய்திகளை யும் அவர்களின் புகழையும் கேட்பதும், முடிந்த அளவு அவர்களுடன் நேசம் வைப்பதும், அவர்களை பின்பற்றுவதுமாகும்.
ஒரு பெரியார் கூறுகின்றார்; வணக்க வழிபாடுகளின் போது எனக்கு சோர்வு ஏற்பட்டால் முஹம்மத் இப்னு வாஸிஃ என்பவரையும் அவருடைய ஈடுபாட்டையும் சென்று பார்வையிடுவேன் பிறகு அவ்வாறே ஒரு வாரத்துக்கு வணக்கத்தில் ஈடுபடுவேன். ஆமிர் இப்னு அப்துல் கைஸ் என்பவர் தினசரி ஆயிரம் ரகஅத்துகள் தொழுதார்கள். அஸ்வத் இப்னு யஸீத் என்பவர் பசுமை நிறமடைந்து, மஞ்சலிக்கும் வரை நோன்பு நோற்றார்கள். மஸ்ரூக் என்பவர் ஹஜ் செய்வதற்காக வெளியேறி சென்றதும் ஸஜ்தாவில் மட்டுமே கண்ணயர்ந்தார்கள், தாவூத் அத்தாஈ என்பவர் ஐம்பது ஆயத்துகள் மேலதிகமாக ஓதிக் கொள்ளும் பொருட்டு ரொட்டிக்குப் பதிலாக (பிசைந்த மாவின்) கஞ்சியையே  உட்கொண் டார்கள். குர்ஸ் இப்னு வப்ரா என்பவர் தினசரி மூன்று விடுத்தங்கள் அல் குர்ஆனை ஓதி முடித்தார் கள், உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களும், பத்ஹ் அல் மவ்ஸிலி அவர்களும் இரத்தக்கண்ணீர் வடித்தார்கள். நாட்பது முன்னோர்கள் இஷாவுக்கு எடுத்த வுலூவுடன் ஸுப்ஹைத் தொழுதார்கள்.
அபூ முஹம்மத் என்பவர் அல் ஹரீரி என்பவருக்குப் பக்கத்தில் ஒரு வருடத்தைக் கழித்தார், ஆனால் அதற்கிடையில் அவர் தூங்கவோ, கதைக்கவோ, ஒரு மதிலில் சாயவோ, கால்களை நீட்டியோ இருக்க வில்லை அபூ பக்கர் அல் கத்தானி என்பவர் அவர்களிடம் இவ்வறெல்லாம் உங்களால் எப்படி செய்ய முடிகிறது? எனக் கோட்டார் அதற்கு அவர் எனது உள்ளத் தூய்மை  அவையங்களுக்கு துணை புரிந்தது என்றார், வணக்கசாலி ஸூஹ்லாவிடம் சிலர் சென்று உங்களுடைய ஆத்மாவுக்கு கருணை காட்டுங்கள் என வேண்டினார்கள். அதற்க வர்கள் இதுவெல்லாம் கழிந்து செல்லும் சில நாட்கள், இன்றைய தினத்தில் விடுபட்ட நேரத்தை நாளைக்கு அடைந்து கொள்ள முடியாது, எனது சகோதிரிகளே, என் அவையங்கள் என்னை ஏந்தியிருக்கும் வரை நான் அல்லாஹ்வைத் தொழுவேன், எனது ஆயுலின் நாட்கள் (எஞ்சி) இருக்கும் வரை நோன்பு நோட்பேன், என் கண்களில் நீர் இருக்கும் வரை நான் அழுவேன் என்றார்கள்.
 இப்பெரியார்களின் வாழ்க்கை வரலாறு களை வாசித்து, அவர்கள் போராட்டங்கள் நடத்திய தோப்புகளையும் பார்த்து ரசிக்க விரும்புபவர்கள் “ஸிபதுஸ் ஸப்வா” எனும் எனது நூலைப்படிக்கவும்.
கண்டிப்பதும், கடிந்துகொள்வதும்
அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்; “எவர் அல்லாஹ்வுக்காக தன்னை கோபித்துக் கொள்கின்றரோ அவரை அல்லாஹ் அவனுடைய கோபத்தி லிருந்து அகற்றிவிடுவான்.”
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்; “ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் ஒரு தோட்டத்துக்குச் சென்றார்கள். அவர்க ளுக்கும் எனக்குமிடையில் ஒரு மதில் (திரையிட்டு) இருந்தது அங்கு சென்ற அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள், “உமரே! உனது செயல்களைப் பார்த்து நான் வியக்கிறேன், கத்தாபின் புதல்வனே அல்லாஹ்வின் மீது ஆணையாக, உண்மை யில் நீ அல்லாஹ்வை அஞ்சவில்லை யானால் நான் உன்னைத் தண்டிப்பேன்” என கூறினார்கள்.
 புஹ்துரி இப்னு ஹாரிஸா என்பவர் கூறினார்; “நான் ஒரு வணக்கசாலியிடம் சென்றேன், அப்போது அவருடைய ஆத்மாவை கண்டிப்பதற்காக அவருக்கு முன்னிலையில் தீ மூட்டியிருந்தார், அவ்வாறு கண்டித்துக் கொண்டிருக்கையில் அவருடைய உயிர் பிரிந்தது.”
(மனிதா!) உன்னுடைய மிகப்பெரும் பகைவன் உன் ஆத்மா என்பதை நீ தெரிந்து கொள். அது அதிகம் தீமையைத் தூண்டக் கூடியவாறும், அதையே நேசிக்கக் கூடியவாறும் படைக்கப் பட்டுள்ளது, ஆகவே நீ அதை சீர் செய்து, பரிசுத்தப்படுத்தி, அதற்குத் தீமைகளின் பிறப்பிடங்களையும் மறக்கச் செய்து, அடக்குமுறை சங்கிலி களால் அதை இழுத்துச் சென்று இறைவனை வழிப்பட பயிற்றுவிப்பது கட்டாயமாகும். அதை அவ்வாறே விட்டு விட்டால் எஜமானின் கட்டுப்பாட்டையும் இழந்து திக்குத் தெறியாமல் ஓடிவிடும், பிறகு உன்னால் அதை வெற்றிக்கொள்ளவே முடியாது. அன்றி கூடிய கண்டிப்புடன் அதை நீ கட்டுப்படுத்திக் கொண்டால் அமைதியுற்ற ஆத்மாவாக அது மாறி விடலாம். நித்தமும் அதற்கு நீ பின்வறுமாறு நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் விவேகமுள்ளவன் என மார் தட்டிக்கொள்ளும் ஆத்மாவே! நீ இவ்வளவு அறிவீனம் உடையவனா? சுவனத்தை அல்லது நரகத்தை நோக்கி செல்ல இருக்கும் நீ அதில் எதைச் சென்றடைவாய் என்பதை அறியாது விளையாடிக் கொண்டிருக்கலாமா? இன்றைக் கோ அல்லது நாளைக்கோ நீ மரணிப்பாய், மரணம் மிக அண்மையில் உள்ளது, அது திடீரென வரக்கூடியது, அதற்கு வயது வித்தியாசம் தெரியாது, எந்த ஆத்மாவையும் அது திடீரென கபலீரம் செய்யலாம், அல்லது குறித்த ஆத்மாவே நோய்வாய்ப்பட்டு மரணிக்கலாம், இவ்வளவு சமீபமாக இருக்கும் மரணத்துக்கு நீ ஏன் ஆயத்தமாகவில்லை? ஆத்மாவே! இறைவன் உன்னை பார்க்க வில்லை என எண்ணி பாவங்கள் செய்யத் துணியும் நீ, எவ்வளவு மகத்தான இறை மறுப்பில் இருக்கிறாய்? இல்லை அவன் பார்த்துக் கொண்டு இருப்பதை நம்பியும் அதை செய்யத் துணிவது எவ்வளவு மானக் கேடான செயல். அவனுடைய தண்டனையை உன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா? ஒரு மணி நேரம் கழிவரையில் அமர்ந்தோ, அல்லது உனது ஒரு விரலை நெருப்புக்கு நீட்டியோ அதை சற்று பரீட்சித்துப் பார்க்களாமே? ஆத்மாவே! மனோ இச்சை தான் உன்னை நேரான வழியில் செல்வதை தடுக்குமாயின், அழிவில்லாத (மறுமையின்) துய ஆசைகளை (அல்லாஹ்விடம்) கேட்கலாமே? (உலகின்) ஒரு ஆசைக்கு ஈடாக பல ஆசைகளை அடகு வைக்கவும் நேரிடலாம் அல்லவா?.
ஆயுள் பூராக தண்ணீர் அருந்த விருப்ப முள்ளவராயின் மூன்று நாட்களுக்கு நீர் பருகக் கூடாது என வைத்தியரால் கட்டளை இடப்பட்டும், தன் ஆயுள் முழுவதையும் அடகு வைத்து விட்டு ஒரு வேளை நீர் அருந்தி தன் சிற்றின்பத்தை பூர்த்தி செய்யும் ஒரு நோயாளியைப் பற்றி என்ன நினைக்கிறாய்? நீ உலகில் வாழ விருக்கும் காலத்தை மறுமையின் ஆயுளுடன் அல்லது உலகத்தின் ஆயுளுடன் ஒப்பிடுகையில், (மேற் கூறப்பட்ட) நோயாளியின் முழு ஆயுளையும் எஞ்சிய மூன்று நாட்களுடன் ஒப்பிடுவதை விட மிக மிக சொற்பமானது.
இறைவா! மனோ இச்சைக்கு பொறுமை காக்கும் வேதனையா, அல்லது நரகத்தின் வேதனையா கடுமையானதும், நீளமானதும் என்பதை நான் அறிந்திருக்க வேண்டுமே? போராட்டத்தின் வேதனைக்கு பொறுமை காக்க சக்தியற்றவர், மறுமையின் நரக வேதனைக்கு எவ்வாறு சக்தி பெறுவார்? இல்லை சுமார் அறுபது வருடங்கள் கழிந்த பின்னரும் நீ புகழை விருப்பி அழைக்கிறா யா? நீயோ அல்லது புகழுக்கு உரியவர் களோ இப்பூமியில் நிலைத்திருப்பதில்லை. இவ் வுலகம் விரைவில் அழியக்கூடியது, கஷ்டங்கள் நிறைந்தது, அதன் பங்காளிகள் அயோக்கியர் கள் எனவே அதை கைவிடு, அன்றி நீ முட்டாள்களுடன் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்க விரும்பு கிறாயா? அவ்வாராயின் உன் கணிசமான அளவு மூலதனம் அழிந்து விட்டது, எஞ்சியிருக்கும் ஆயுளும் மிகக் குறைவா னது, ஏற்கெனவே அழிந்த மூலதனங்களை எண்ணிப் பார்த்தால் வருத்தப்படுவாய், எஞ்சிய ஆயுளையும் (வீணாகக்) கழிந்த காலங்களைப் போல் அமைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்? ஆகவே எஞ்சிய சொச்ச நாட்களிலாவது (மறுமையின்) நீண்ட நாட்களுக்காக நல் அமல்கள் செய். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு விடைகளை தயாரித்துக் கொண்டு இவ்வுலிகிலிருந்து நீ பலவந்தமாக வெளியேற்றப்படு முன்னர் சுதந்திரவான் களைப் போல் புறப்படு. 

சிந்தித்தல் 
       
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, ஸலாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் தூதர்களில் சிறந்தவரான எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களைப் பின்பற்றிய கிளையார்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
உண்மையில் அல்லாஹ் அவனுடைய திருமறையில் எங்களை சிந்திக்கும் படி  தூண்டியுள்ளான். அவ்வாறு சிந்திப்பவர் களை புகழ்ந்தும் கூறியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்;  
وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا
அவர்கள் வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். “எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை (என்றும் கூறுவார்கள்) ஆலு இம்ரான் 191.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்று கள் உள்ளன. அல் ரஃத் 3.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பற்றி சிந்தியுங்கள் அல்லாஹ் (வின் சுயத்தைப்) பற்றி சிந்திக்காதீர்கள். அதாரம் பைஹகீ.
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்; ஒரு மணி நேரம் சிந்திப்பது, ஒரு இரவு பூராக நின்று வணங்குவதை விட சிறந்தது.
வஹ்ப் இப்னு முனப்பஹ் (ரஹ்) கூறினார்; எந்த ஒரு மனிதருக்கும் நான் ஒரு கருத்தை முன்வைத்தால் அவர் அதை விளங்கி விடுவார், அவ்வாறு விளங்கியவர் அறிந்து கொள்வார், அவ்வாறு அறிந்தவர் அதன் பிரகாரம் செயல்படுவார்.
பிஷ்ருல் ஹாபி (ரஹ்) கூறினார்; அல்லாஹ் வின் மகத்துவம் குறித்து மக்கள் சிந்தித்தால் ஒரு போதும் அவர்கள் அவனுக்கு மாறு செய்ய மாட்டார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்;
سَأَصْرِفُ عَنْ آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ

நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்ப வர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அல் அஃராப் 146.
இத்திருவசனத்துக்கு விளக்கமளித்த பிர்யானி என்பவர் கூறுகின்றார், என்னைப் பற்றி சிந்திப்பதை விட்டும் அவர்களின் இதயங்களை நான் தடுத்து விடுவேன் என்றே அல்லாஹ் இங்கு குறிப்பிடு கின்றான்.
ஒரு பெளர்ணமி நிலவுள்ள இரவில் தாவூத் அத்தாஈ என்பவர் வானங்கள் மற்றும் பூமியின் சான்றுகளைப் பற்றி சிந்தித்தவாறு மொட்டை மாடியில் நடமாடும் வேளையில் தனது அயலவரின் வீட்டில் தவறுதலாக விழுந்து விட்டார். அரை குறை ஆடையுடன் தன் கையில் வாலை  ஏந்தியவாறு பாய்ந்த அயலவர், “அவரை நோக்கி தாவூதே! உம்மை இங்கு தள்ளி விட்டவர் யார்?” எனக் கேட்டார் அதற்கு அவர் அப்படி நான் எதையும் உணரவில்லையே என்றார்.
யூஸுப் இப்னு அஸ்பாத் கூறினார், நீ (ரசித்துப்) பார்ப்பதற்காக இவ்வுலகம் படைக்கப்படவில்லை, மாறாக இவ்வுல கத்தினூடாக (சிந்தித்து) மறுமையைப் பார்பதற்காகவே படைக்கப் பட்டுள்ளது. ஸுப்யான் என்பவர் சிந்தனையின் உச்ச நிலையில் இரத்தச் சிறுநீர் கழிப்பார்களாம்.

சிந்தனையின் வழிகளும் அதன் பயன்களும்
(முதலில்) சிந்தனை என்பது மார்க்க விடயம் வழியாகவும், மார்க்கத்துக்கு அப்பாலும் செல்லக் கூடியது என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். நாம் இங்கு பார்க்கவிருக்கும் மார்க்க வழியாக செல்லும் சிந்தனையை சுருக்கமாக நான்கு பிரிவுகளில் நோக்கலாம். வழிபாட்டு விடயங்கள், பாவச் செயல்கள், அழிவுக்கு இட்டுச் செல்லும் விடயங்கள், பாதுகாக்கும் விடயங்கள்.
மனிதா! உன்னைப் பற்றியோ அல்லது, அல்லாஹ்வின் நெருக்கத்தை தரக்கூடய, அல்லது அவனிடமிருந்து உன்னை தூரமாக்கும் விடயங்களைப் பற்றியோ சிந்திப்பதை மறந்து விடாதே!
இதற்காக (மனிதனை) அழிவுக்கு இட்டுச் செல்லும் அனைத்து விடயங்களும், மற்றும் அவனை பாதுகாக்கும் அனைத்து விடயங்களும், மேலும் அனைத்து பாவச் செயல்களும், அனைத்து நன்மையான காரியங்களும் பட்டியலிடப்பட்ட காகித்தை ஒவ்வொரு சிஷ்யனும் வைத்திருப்பது கடமையாகும். பிறகு தினசரி அதை அவனுடைய ஆத்மாவுக்கு எடுத்துக் காட்டுவான்.
அழிவுக்குள்ளாக்கும் பத்து விடயங்களை இங்கு நோக்குவோம். காரணம் அவைகளில் இருந்து பிழைத்தவர் ஏனையவைகளி லிருந்து பிழைப்பது சுலபம் அவைகளாவன; கஞ்சத் தனம், பெருமை, தற்பெருமை, முகஸ்துதி, பொறாமை, கடுங்கோபம், பசி வெறி, காம வெறி, சொத்தாசை, பதவி மோகம் என்பனவாகும்.
(ஆத்மாவை) பாதுகாக்கும் பத்து விடயங் களாவன; பாவங்களுக்காக வருந்துதல், சோதனையில் பொறுமை காத்தல், விதியை திருப்தி கொள்ளல், அருட்கொடைகளுக்கு நன்றி செழுத்துதல், முகஸ்துதியை கைவிடல், அல்லாஹ்வை பயப்படுதல், உலக (இன்ப) த்தில் துறவரம் கொள்ளல், மனத்தூய்மை, மக்களுடன் நற்குணத்தோடு பழகுதல், அல்லாஹ்வை நேசித்தல், அவனை உள்ளச்சத்தோடு வழிபடுதல் என்பனவாகும்.
(குறித்த பட்டியலில்) மேற் கூறப்பட்ட  இருபது அம்சங்களில், பத்து தீய அம்சங்களையும், பத்து நல்ல அம்சங்களை யும் நாம் கவணித்தோம். அப்பட்டியலில் தான் செய்யாத ஒரு தீய அம்சம் இருக்கக் கண்டால் உடனே அதற்கு கீழ் ஒரு அடையாளம் இட்டு பிறகு குறித்த பாவத்தை விட்டும் விழகியிருக்க உதவி நல்கிய அல்லாஹ் வுக்கு நன்றி செழுத்துவதுடன் அவ்விடத்திலே அப் பாவத்தை மறந்து விடவேண்டும். பிறகு எஞ்சிய ஒன்பது தீய அம்சங்களையும்  பரிசோதித்து அடையளம் இட்டுக்கொள்ள வேண்டும். பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கோரியது போன்ற நல்ல அம்சங்களை கண்டால் அதையும் அடையாளப்படுத்திய பிறகு அதில் எஞ்சிய வைகளையும் எடுத்து நடக்க முயற்சிக்க வேண்டும். 
அவையங்களால் வெளிப்படும் செயல் களையும், (ஸாலிஹீன்களான) நல்லோர்கள், பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும் உதாரணத்துக்கு, சந்தேகமானவைகளை புசித்தல், கோல் சொல்லுதல், புறங்கூறல், தர்க்கித்தல், தற்புகழ்ச்சி, அவ்லியாக்களை நேசிப்பதில் அக்கரை காட்டா திருத்தல், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதை முகஸ்துதிக்காக விடுதல் பேன்றனவாகும்.
சில சமயம் இத்தகைய செயல்களில் நல்லோர்கள் கூட சிக்கி விடுகிறார்கள், வெளிப்புற தீய செயல்களில் இருந்து அவையவங்களை பாதுகாகாமல், இதயத்தை பராமரிக்கச் செல்வது முடியாத காரியமாகும். (பொதுவாக) மனிதர்களில் ஒவ்வொரு பிரிவினரிடமும் இவைகளில் ஏதாவது ஒரு அம்சம் குடிகொண்டிருக்கும், அத்தகையோர் அதை இனம் கண்டு (அகற்றுவதற்கான வழிகளை) சிந்திக்க வேண்டும். 
உதாரணத்துக்கு ஒரு பக்தி மிக்க அறிஞர் கூட பெரும்பாலும் தன்னை மார்க்க அறிஞராக காட்டிக் கொள்வும், கற்பித்தலி லோ, பிரசங்கம் நிகழ்த்துவதிலோ தன் புகழ்  ஓங்கி இருப்ப தையுமே ஆசைப்படுவார், இத்தகையோர் பாரிய பிரச்சினைக்கு முகங் கொடுப்பவர்கள், அவர்களில் உண்மையாளர்கள் மட்டுமே (இறுதியில்) வெற்றி யடைவர். சில சந்தர்ப்பங்களில் அவர்களுடைய அறிவே அவர்களை ஏமாற்றமடையச் செய்யலாம். இத்தகைய பண்புகள் தன்னில் குடி கொண்டிருப்பதாக உணர்பவர்கள் தனிமை யில் இருப்பது சாலச் சிறந்தது, நபித் தோழர்களைப் போல் மார்க்கத் தீர்ப்புகள்  வழங்காது அறிமுகமற்ற ஒருவராக இருப்பது அவசியமாகும். 


சிந்தனையின் மகிமை
“நீங்கள் அல்லாஹ்வின் அருட் கொடை களைப் பற்றி சிந்தியுங்கள், (ஆனால்) அல்லாஹ் (வின் சுயத்தை) பற்றி சிந்திக்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தியை நாம் முன்னர் பார்த்தோம். அவ்வாறு சிந்திப்பதை அல்லாஹ்வும் தடை செய்துள்ளான் காரணம் மனிதனின் மதிக்கு உட்பட்ட உதாரணங் களுக்கும், இதயக் கற்பனைகளுக்கும் அல்லாஹ் முற்றிலும் வித்தியாசமானவன், அவனுடைய சுயத்தை பற்றி சிந்திக முயற்சிப்பவனின் மதி கெட்டு விடும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
 لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன், பார்ப்பவன். அஷ்ஷூரா 11.
அல்லாஹ்வின் படைப்பினங்களைப் பற்றி சிந்திக்குமாறும் அல் குர்ஆனில் அவன் கட்டளை பிறப்பித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ
வானங்களையும், பூமியையும் படைத்திருப் பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. ஆலு இம்ரான் 190.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

قُلِ انظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றைச் பற்றி சிந்தியுங்கள்!” என்று கூறுவீராக! யூனுஸ் 101. 
இந்திரியத் துளியினால் படைக்கப்பட்ட மனிதனும் அல்லாஹ்வுடைய அத்தாட்சியா கும், ஆகவே மனிதன் தன்னைப் பற்றி சிந்திக்க கடமைப் பட்டுள்ளான். அவனைப் படைத்ததில் அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறிக்கும் வியக்கத்தக்க அம்சங்கள் அடங்கி உள்ளன.
 அல்லாஹ் கூறுகின்றான்;

وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ

உங்களுக்குள்ளும் உறுதியாக நம்புவோருக் குப் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா? அத்தாரியாத் 21.
மனிதப் படைப்பு குறித்த சில விடயங்கள் பற்றி “கிதாபுஷ் ஷுக்ர்” எனும் புத்தகத்தில் நாம் கூறியுள்ளோம் விரும்பியவர்கள் அதை தேடிப் படித்துக் கொள்ளட்டும்.
மலைகளுக்குள் இருக்கும் ஆபரணங்களும், தங்கம் வெள்ளி, ரத்தினம் போன்ற கனியங்களும், இன்னும் மசகு எண்ணெய், கந்தகம், தார் போன்றவைகளும் அல்லாஹ் வின் அத்தாட்சிகளே, பூமியை சுற்றியிருக் கும் ஆளமிக்க பிரமாண்டமான சமுத்திரங் களும் அல்லாஹ்வின் அத்தாட்சியே, இப்புவி முழுவதையும் கடலுடன் ஒப்பிடு கையில்  சமுத்திரத்தில உள்ள ஒரு தீவுக்குச் சமமானது தான். (இதற்கும் மேலால்) தரையில் நாம் காண்பதை விட பன்மடங்கு அதிசயங்கள் கடலில் உள்ளன.
மனிதா! சிப்பிக்குள் இருக்கும் முத்தை அல்லாஹ் கடளுக்கு அடியில் எவ்வாறு வைத்தான் என்பதையும், கடலில் உள்ள பவளப் பாறைகளையும், படிப்பினை தரும் அம்சங்களையும் அதில் இருந்து கிடைக்கும் எண்ணற்ற பயன்களையும் சிந்தித்துப் பார்! மேலும் இராட்சதக் கப்பல்களை தண்ணீரின் மேல் அல்லாஹ் சுமப்பதையும், காற்றின் மூலம் அவை இழுத்துச் செல்லப்படு வதையும் சிந்தித்துப் பார்! இதை விடவும் தரை வாழ் உயிரினங்கள் அனைத்துக்கும் மூலமாக இருக்கும் தண்ணீரின் அதிசயத்தை சிந்தித்துப் பார்? ஒரு லிட்டர் தண்ணீர் கிடைப்பதற்கு பதிலாகவோ, அல்லது குடித்த தண்ணீர் உடம்பிலிருந்து வெளியேறுவதற்கு ஈடாகவோ இவ்வுலகையே வழங்கவும் நீ தயங்க மாட்டாய். ஆகவே ஒரு அடியான் இத்தகைய அல்லாஹ்வின் அருட்கொடை களை ஒரு போதும் மறக்க மாட்டான்.
கண்ணால் பார்க்க முடியாத மென்மையான காற்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளது, (சில சமயங்களில்) அதன் வேகத்தையும் கொடூரத்தையும் சிந்தித்துப் பார். ஆகாயத்தில் உள்ள அதிசயங்களில் மேகங்கள், இடி, மின்னல், மழை, வால் நட்சத்திரங்கள், பணிக்கட்டிகள் போன்றவை களையும் அங்கு காணப்படும் இதர அதிசயங்களையும் சிந்தித்துப் பார். நீர் வாழ் உயிரணங்கள் நீந்திச் செல்வதைப் போல் ஆகாயத்தில் உள்ள பறவைகள் தம் இறக்கைகளால் பறந்து செல்லும் அதிசயத் தையும் சிந்தித்துப் பார். பிறகு வானத்தை நோக்கி அதன் மகிமையையும், நட்சத்திரங் கள், சூரியன், சந்திரன், பேன்றவைகளை யும், அங்கு காணப்படும் அனைத்து நட்சத்திரங்களின் நிறத்தையும், அவைகளின் அமைப்பையும், அவைகளின் இருப்பிடங் களையும் அல்லாஹ் அறிந்து வைத்திருப் பதையும் சிந்தித்துப் பார். அவ்வாறே இரவு பகல் மாறி மாறி வருவதையும், சூரியனின் ஓட்டத்தையும், குளிர், கோடை, மாரி, வசந்தம் போன்ற பருவகால மாற்றங் களையும் சிந்தித்துப்பார்.
பூமையை விட சூரியன் பன்மடங்கு பெரியது என்றும், வானத்தில் உள்ள மிகச் சிறிய கோள் கூட பூமியை விட எட்டு மடங்கு சிறியது என்றும் கூறப்படுகின்றது. அவ்வாராயின் வானத்தையும் அதில் உள்ள கனிசமான கோள்களையும், உன் கண்களால் பார்ப்பதற்கு எளிதாக உள்ள சிறிய உருவங்களையும் நீ சிந்தித்துப்பார். இதைவிடப் பெரிய வியப்பு என்னவெனில் முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்டு அலங்க ரிக்கப்பட்ட ஒரு செல்வந்தரின் வீட்டுக்கு சென்று அங்குள்ள வைகளைக் கண்டு வியப்படைந்து அவைகளை உன் மனப் பதிவில் வைத்துக் கொள்கிறாய். ஆனால் உன்னையும், இப்பாரிய (பிரபஞ்ச) வீட்டையும், படைத்த இறைவனை மறந்து விடுகிறாய். ஆம் நீ உன்னையும் உனது இரட்சகனையும் மறந்து விட்டு உன் காமப் பசிக்கும் வயிற்றுப் பசிக்கும் (இரை தேடி) அலைந்து திரிகிறாய். ஒரு அரண்மனைச் சுவரில் வாழும் எறும்புகள் தாம் குடி யிருப்பது அரண்மனை என்பதைக் கூட அறியாத நிலையில், தம் உறவுகளை சந்தித்திக்க நேர்ந்தால் இரை, உரைவிடம் போன்ற (அற்ப) விடயங்களை பற்றி கதைப்பது போல் நீயும் சிந்திக்கின்றாய், இவ்வானத்தைப் பற்றி உனக்குள்ள அறிவு, உன் வீட்டுச் சுவரில் குடியிருக்கும் எறும்புக்கு, வீட்டின் முகட்டைப்பற்றியுள்ள அறிவு தான். 
இவை யாவும் நாம் சுறுக்கமாக முன்வைத்த சில விடயங்கள், விஞ்ஞானிகளால் கூட அல்லாஹ்வின் அனைத்து படைப்பினங்க ளையும் அறிய முடியவில்லை, ஆகவே  அவனுடைய படைப்புகளின் அற்புதங்களை நீ அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு இறைவனு டைய கண்ணியத்தை புரிந்து கொள்வாய்.
இவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் படைப்புகள் என்ற கோணத்தில் சிந்திப்ப வருக்கு அவனுடைய கண்ணியமும், மகத்துவமும் விளங்கும். அன்றி இவை யாவும் இயற்கையின் செயல் என நம்பியவர் வழி கெட்டு விடுவார். இத்தகைய வழி தவறிய முட்டாள்களிடமிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாப்பானாக. ஜின்கள் மலக்குகள் போன்ற கண்ணுக்குப் புலப் படாதவர்களைப் பற்றி சிந்திக்க முடியாத காரணத்தால் அவைகளைப் பற்றி நாம் இங்கு குறிப்பிடவில்லை. அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.    

உங்கள் கருத்துக்களை எமக்க அறிவிக்கவும்.           

[email protected]
 

சுய விசாரணையும் கண்காணிப்பும்

Download

About the book

Author :

Ibn Qudama Al-Magdisi

Publisher :

www.islamhouse.com

Category :

Morals & Ethics