பிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்

1. பிள்ளை வளர்ப்பில் முதல் பாடம் ஏகதெய்வ அறிவு
2. அதன் அடிப்படையில் சமூகத்தில் வாழும் முறை
3.பெற்றோருக்குசெய்ய வேண்டிய கடமைகள்.
4. பிள்ளைகளுக்கு இஸ்லாமிய ஆடைகளை பழக்குதல்
5. மார்க்க அறிவு வழங்குதல்.
6.ஆண்,பெண்களை பிரித்து வளர்த்தல் என்பன தேவையாகும்.
7. பிள்ளைக்கு வுழு செய்யும் முறையையும் தொழும் முறையையும் பின்வருமாறு கற்றுக் கொடுக்க வேண்டும்.
8. பிள்ளைகளுக்கு இஸ்லாமிய ஆடைகளை பழக்குதல்,. மார்க்க அறிவு வழங்குதல்.ஆண்,பெண்களை பிரித்து வளர்த்தல் என்பன தேவையாகும்.
9.தொழுகை பற்றி கற்பித்தல். ஆடைகள்.
10. ஹலாலான சம்பாத்தியம், ஹலாலான செலவு, கற்பை காத்தல்

பிள்ளை வளர்ப்பும்,
பெற்றோரின், பிள்ளைகளின் கடமைகளும்

 


 

] Tamil – தமிழ் –[ تاميلي 

முஹம்மத் ஜமீல் ஸைனு

M.S.M.இம்தியாஸ் யூசுப்




2015 - 1436
 
 
كيف نربي أولادنا
وما هو واجب الآباء والأبناء؟
« باللغة التاميلية »



محمد جميل زينو



محمد إمتياز يوسف






2015 - 1436
 
பிள்ளை வளர்ப்பும்,
பெற்றோரின், பிள்ளைகளின் கடமைகளும்
முஹம்மத் இப்னு ஜமீல் ஸைனு
தமிழில்: M.S.M. இம்தியாஸ் யூசுப்
PART-01
அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடத்திலே உதவி தேடுகிறோம். அவனி டமே பாவமன்னிப்பு கோருகிறோம். எங்கள் ஆன்மாக்களின் தீங்கை விட்டும் எங்கள் செயற்பாடுகளின் தீங்கை விட்டும் அவனிடமே பாது காவல் தேடுகிறோம்.
அல்லாஹ் யாருக்கு நேர்வழியை காட்டி னானோ அவனை எவராலும் வழிகெடுக்க முடியாது. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனை எவரும் நேர்வழிப் படுத்த முடியாது. உண்மையாக வணங்கி வழிப் படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணைதுணை இல்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மத நபி அல்லாஹ் வின் தூதர் என்றும் அவனது அடிமை என்றும் சாட்சி கூறுகிறேன்.
 குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெற்றோரினதும் பிள்ளைகளினதும் நலன் இதில் தங்கியிருப்பது போல் எதிர்கால சமூகத்தினது நலனும் தங்கி யுள்ளது. இதன் காரணமாகவே இஸ்லாம் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் கவனம் செலுத்து கிறது. இம்மை மறுமை சுபீட்சத்ததை பெற்றுக் கொள்ள பெற்றோருக்கும் பிள்ளை களுக்கும் வழிகாட்டியாக கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக நபி முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்பிவைத்துள்ளான்.
எமது சீர்திருத்தத்தையும், வெற்றியையும் தருகின்ற அல்குர்ஆனில் லுக்மான் (லை) அவர்கள்  தனது மகனுக்கு கூறிய பலனுள்ள அறிவுரைகளை போல் பயன் தரும்  பல சம்பவங்களை  அல்லாஹ் குறிப்பிடுவதை காண்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது சாச்சாவின் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் உள்ளத்தில் சிறுவயதிலே தவ்ஹீத் பற்றிய நம்பிக்கையை விதைத்தையும் ஹதீஸ் களில் காண்கிறோம்.
எனவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும்,  பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமை களையும் வாசகர் இந்நூலில் கண்டு கொள்ள முடியும்.
இந்நூல் வாசகர்களுக்கு பலனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதோடு எனது பணி இஹ்லாசுடன் அமையப் பெறவேண்டும் என்றும் அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
ஆசிரியர்
முஹம்மத் இப்னு ஜமீல் ஸைனு
லுக்மானுல் ஹகீம்  (அலை) அவர்கள் தனது மகனுக்கு கூறிய அறிவுரைகள்
இந்த அறிவுரையை அல்லாஹ் குர்ஆனில் (31:13-19) கூறுகிறான். இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தங்களது குர்ஆன் விளக்க வுரையில் (தப்ஸீரில்) பின்வருமாறு அதனை முன்வைக்கிறார்கள்.
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ
லுக்மான் தனது மகனுக்கு உபதேசம் செய்யும் போது
يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
1.     என் அருமை மகனே அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே, நிச்சயமாக இணை வைத்தல் மிகப்பெரும் அனியாயமாகும்.
அதாவது மரணித்தவர்களை அழைத்து  பிரார்த்திப்பது போன்று அல்லாஹ்வுக்குரிய வணக்கத்தில்  இணை கற்பிக்காது எச்சரிக்கை யாக இரு.
سنن الترمذي ت بشار (5/ 61)
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الدُّعَاءُ هُوَ العِبَادَةُ،
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
துஆ என்பது வணக்கமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மதி)
الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ
“எவர்கள் ஈமான் கொண்டு தங்களது ஈமானில் அனியாயத்தை கலக்க வில்லையோ அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்”.....(6:82) என்ற வசனம் இறங்கியதும் சஹாபாக்களுக்கு மனதுக்கு கஷ்டத்தை கொடுத்தது. இது குறித்து கேட்பதற்காக உடனே நபி(ஸல்) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவர் தனக்கே அனியாயம் செய்து கொள்ளமல் இருப்பர்? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீங்கள் கூறுவது போல் அதன் அர்த்தம் அல்ல. லுக்மான் (அலை) அவர்கள்  தனது மகனுக்கு கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?அவர் தனது மகனுக்கு கூறும் பேரது  என் அருமை மகனே அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே, நிச்சயமாக இணைவைத்தல் மிகப்பெரும்  அனியாயமா கும். (என்று கூறினார். அனியாயம் என்பது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகும் என நபி(ஸல்) கூறினார்கள்.)
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
2.    மனிதனுக்கு அவனது பெற்றோர் பற்றி நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை பலவீனத்திற்கு மேல் பலவீனமாகச் சுமந்தாள். மேலும் அவனது பால்குடி மறத்தல் இரண்டு ஆண்டுகளிலாகும். நீ எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே மீளுதல் உள்ளது.
தனக்கு மட்டுமே வணக்கம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் பெற்றோருக்கும் அவர் களது உரிமையை செலுத்த வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். தாய் கஷ்டத்துடனே தனது பிள்ளையை பெற்றெடுத்தாள். தந்தை பிள்ளைக்கு செலவு செய்யும் பொறுப்பை ஏற்றார். எனவே பிள்ளை அல்லாஹ்வுக்கும் அவனது பெற்றோருக்கும் நன்றி செலுத்த உரிமையுடையவனாக இருக்கிறான்.
وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
3.    உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு நீ இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அவ்விருவருக்கும் நீ கட்டுப் படாதே.  இவ்வுலகில் அவ்விருவருடனும் நல்ல முறையில் சேர்ந்து நடப்பாயாக. என் பக்கம் மீண்டவர்களின் வழியைப் பின்பற்றுவாயாக. பின்னர் உங்கள் மீளுதல் என்னிடம் உள்ளது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு நான் அறிவிப்பேன்.
இமாம் இப்னு கஸீர்(ரஹ்)  கூறுகிறார்கள்.
பெற்றோர் தங்களது (இஸ்லாம் அல்லாத) மார்க்கத்தைப் பின்பற்றுமாறு  உனக்கு அன்பு காட்டினாலும் அதனை நீ ஏற்றுக் கொள்ளக் கூடாது.  இவ்வுலகில் அவ்விருவருடனும், நல்ல முறையில் சேர்ந்து நடப்பதற்கு  அவர்களது அக்கோரிக்கை தடையாகவும் நீ ஆக்கிக் கொள்ளக் கூடாது.  
இதனை நபி(ஸல்) அவர்கள் வார்த்தை உறுதிப்படுத்துகிறது.
அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் எவருக்கும் கட்டுப்படாதே. கட்டுப்படுதல் என்பது நல்ல விடயத்தில் தான் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (நூல்: புகாரி முஸ்லிம்)
يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ
4.    என்னருமை மகனே நிச்சயமாக (நன்மையோ தீமையையோ) அது கடுகின் வித்தளவு இருந்து  அது ஒரு பாறைக்குள்ளே யோ வானங்களிலோ அல்லது பூமியிலோ  இருந்தா லும் அதனையும் அல்லாஹ் கொண்டு வருவான் நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவன் நன்கறிந்தவன்
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்கள்.
அனியாயம் அல்லது பாவம் கடுகின் வித்தளவு இருந்தாலும், அதனை நாளை மறுமை நாளில் நீதமான (மீஸான்) தராசை நிறுத்தும் போது அல்லாஹ் கொண்டு வருவான்.   அது நன்மை யாக இருந்தால் நன்மையாகவும் தீமையாக இருந்தால் தீமையாகவும் இருக்கும்.
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ
5.    என் அருமை மகனே தொழுகையை நிலை நாட்டு வாயாக.
தொழுகையின் கடமைகளை உள்ளச்சத்துடன் நிறை வேற்றுவாயாக
وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ
6 நன்மையை ஏவி தீமையை விட்டும் தடுப்பாயாக.
கடுமையின்றி நளினமாக மென்மையாக நடந்து கொள்வாயாக
وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ
7. (அப்போது) உனக்கு ஏற்படுபவற்றின் (தொல்லைகளின்) மீது பொறுமையாக இருப்பாயாக.
நன்மையை ஏவி தீமையை தடுக்கின்றவர் தொல்லைகளை சந்திக்கவேண்டி வரும்.  அப்போது பொறுமையை கையாளுமாறு அவருக்கு ஏவவேண்டும்.
மனிதர்களுடன் இரண்டரக் கலந்து (நன்மை யை ஏவி தீமையை தடுக்கின்ற போது) பொறுமை காக்கும்  முஃமின், மனிதர்களுடன் இரண்டரக் கலக்காது (நன்மையை ஏவி தீமையை தடுக்காத) முஃமினை விட சிறந்தவர்   என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( நூல்: அஹ்மத்)
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ
8. பெருமைக் கொண்டு உன் முகத்தை மனிதர் களை விட்டும் திருப்பி விடாதே.
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்கள்.
மனிதர்களுடன் நீ உரையாடும் போது அவர்கள் உன்னுடன் உரையாடும் போதும் அவர்களை இழிவாக கருதி புறக்கணித்து விடாதே. மேலும் பெருமையடிக்காதே, மாறாக உன்னுடன் இருப்பவர்களிடம் நளினமாகவும்  சிரித்த முகத்துடனும் நடந்து கொள்
உன் சகோதரனை பார்த்து புன்னகை பூப்பதும் தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (நூல்: திர்மதி)
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
9. பூமியில் கர்வத்துடன் நடக்காதே. நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொண்ட எந்தப் பெருமைக் காரனையும் நேசிக்க மாட்டான்.
பெருமையுடன் அகங்காரத்துடன் வம்புத்தனத் துடன் நடக்காதே அவ்வாறு செய்தால்  அல்லாஹ் உன்மீது கோபம் கொள்வான். அதனால் தான் தற் பெருமைக்காரனை நேசிப் பதில்லை என கூறுகிறான்.
وَاقْصِدْ فِي مَشْيِكَ
10. உனது நடத்தையில் நடுத்தரத்தை கடைப்பிடிப்பாயாக
நடுத்தரமாக நட. மெதுவாகவும் வேகமாகவும் நடக்காதே.  மாறாக அவ்விரண்டுக்கும் இடைப் பட்டதாக  நட.
وَاغْضُضْ مِنْ صَوْتِكَ
11. உன் சப்தத்தை தாழ்த்திக் கொள்வாயாக.
பேச்சில் எல்லை மீறாதே. பயனில்லாத விஷயத்தில்  உன் சப்தத்தை உயர்த்தாதே. 
காரணம் நிச்சயமாக சப்தங்களிலே மிக வெறுக்கத் தக்கது கழுதையின் சப்தமாகும் என அல்லாஹ் கூறுகிறான்:
இமாம் முஜாஹித் (ரஹ்) கூறுகிறார்கள்
சப்தங்களிலே மிகவும் மோசமான சப்தம் கழுதையின் சப்தமாகும். அதாவது யார் சப்தத்தை உயர்த்துகிறாரோ  அவர் அச்சப்தத்தில் கழுதைக்கு ஒப்பாகுகிறார். அத்துடன் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாகுகிறார். கழுதையின் சப்தத்திற்கு ஒப்பிட்டு சொல்ல பட்டிருப்பதாவது அதனை செய்யக் கூடாது (ஹராம்) என்பதை குறிப்பிடுவதற்காகும்.
மேலும் மோசமான இழிவான செயலை நபி யவர்களும் கண்டிக்கிறார்கள்.
صحيح البخاري (3/ 164)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الَّذِي يَعُودُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِهِ»
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல. என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: புகாரி)
صحيح البخاري (4/ 128)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ، فَإِنَّهَا رَأَتْ مَلَكًا، وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، فَإِنَّهُ رَأَى شَيْطَانًا
நீங்கள் சேவலின் சப்தத்தை செவியுற்றால் அல்லாஹ்விடம் அனது அருளை கேளுங்கள். காரணம் அது வானவரை கண்டு விட்டது. கழுதையின் சப்தத்தை செவியுற்றால் ஷைத்தா னிடமிருந்து அல்லாஹ்விடம் பாது காவல் தேடுங்கள். காரணம் அது ஷைத்தானை கண்டு விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறுகி றார்கள் (நூல்: புகாரி முஸ்லிம்) தப்ஸீர் இப்னு கஸீர்
 இந்த வசனங்கள் தரும் வழிகாட்டல்கள்.
1.இந்த உலகிற்கும் மறுமைக்கும் பலன் தரும் அறிவுரைகளை பிள்ளைக்கு கூறுவது மாரக்க மாக்கப்பட்டுள்ளது.
2. உபதேசிக்கும் போது தவ்ஹீதை கொண்டு போதனையை ஆரம்பிக்க வேண்டும். இணை வைப்பதை கண்டிக்க வேண்டும். காரணம் அது மிகப் பெரும் அனியாயம், நற்கருமங்களை அழித்து விடக்கூடியது.
3.அல்லாஹ்வுக்கும் பெற்றோருக்கும் நன்றி    செலுத்துவது கடமை. பெற்றோருடன் சேர்ந்து நடப்பதும் நன்மைகள் செய்வதும் கடமை.
4.அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத விடயங்க ளில் பெற்றோருக்கு வழிபடுவது கடமை.
அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் எவருக்கும் கட்டுப்படாதே. கட்டுப்படுதல் என்பது நல்ல விடயத்தில் தான் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
5.ஏகத்துவவாதிகளான முஃமின்களின் பாதை யை பின்பற்றுவது கடமை. பித்ஆ வாதிகளின் (மார்க்கத்தில் புது வழிகளை புகுத்துபவர் களின்) வழியை பின்பற்றுவது ஹராமாகும்.
6.இரகசியமாகவும் பரகசியமாகவும் அல்லாஹ் வின் கண்கானிப்பு இருந்து கொண்டிருக்கிறது. நன்மையோ தீமையோ அது சிறிதாகவோ பெரிதாகவோ இருந்தாலும் அற்பமாகக் கருதலாகாது.
7. தொழுகையை அதன் உரிய கடமைகளுட ன் அமைதியாக நிறைவேற்றுவது கடமை.
8. தங்களுடைய சக்திக்கேற்ப மிக நளினமாக நன்மையை ஏவி தீமையை தடுப்பது கடமை.
உங்களில் ஒருவர் தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் தனது    கையால் தடுக்கட்டும், முடியாது விட்டால் தனது நாவினால், தடுக்கட்டும். முடியாது விட்டால் தனது உள்ளத்தால் (அதை) வெறுத்து ஒதுக்கட்டும். இது ஈமானின் கடைசி நிலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( நூல்: முஸ்லிம்)
9.நன்மையை ஏவி தீமையை தடுப்பவர் தொல்லைகளை சந்திக்கும் போது பொறுமை காத்தல் வேண்டும். ஏனெ னில் அது உறுதியான காரியங்களில் உள்ளதாகும்.
10. நடக்கும் போது பெருமையடிப்பது ஹரா மாகும்
11. நடத்தையில் நடுநிலமையை கடைபிடிக்க வேண்டும். வேகமாகவுமின்றி மெதுவாகவு மின்றி நடக்க வேண்டும்.
12. தங்களுடைய தேவைகளுக்கும் அதிகமாக சப்தங்களை உயர்த்துவது கூடாது. ஏனெனில் அது கழுதையின் பழக்கமாகும்.
பிள்ளைகளுக்கான நபிகளாரின் அறிவுரைகள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களுடன்  வாகனத்தில் பின்னால் இருந்தேன்.அப்போது பின்வருமாறு என்னிடம் கூறினார்கள்.
يَا غُلاَمُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ
மகனே ! உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிறேன்.
1.நீ அல்லாஹ்வை மனதில் கொள் அல்லாஹ் உன்னை காப்பாற்றுவான்.
அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நட. அவன் தடுத்தவைகளை தவிர்ந்து கொள். இம்மையிலும் மறுமையிலும் உன்னை அவன் பாதுகாப்பான்.
احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ
2.அல்லாஹ்வை மனதில் கொள். அவனை உனக்கு முன்னால் காண்பாய்.
அல்லாஹ்வின் எல்லைகளை  மனதில் கொண்டு அவனது  உரிமைகளை  பேணிக் கொள். உனக்கு ஈடேற்றத்தையும் உதவியை யும் தருபவனாக அல்லாஹ்வை காண்பாய்.
إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ
3. நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடு.
இந்த உலக மறுமை உலக விடயங்களில் உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடம் உதவி தேடு. குறிப்பாக நோயை சுகப்படுத்தல்,  உணவு கேட்டல் போன்ற அல்லாஹ்வைத் தவிர எவரும் சக்திப் பெறாத காரியங்களில் அல்லாஹ்விடம் உதவி தேடு. இது அல்லாஹ்வுக்கே உரிய விஷேட காரியங்களா கும்.
وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ، وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ
4.உனக்கு ஒரு நன்மையை செய்யவேண்டும் என்று சமூகம் ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு விதித்ததை தவிர எந்த நன்மையையும் உனக்கு வந்து சேராது. உனக்கு ஒரு தீமையை  செய்ய வேண்டும் என்று சமூகம் ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு விதித்ததை தவிர எந்த தீமையையும்  உனக்கு வந்து சேராது.
நன்மை, தீமை அல்லாஹ் விதித்த படி நடக்கும் என்று விதியை நம்பிக்கை கொள்ள வேண்டும்.
رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتْ الصُّحُفُ.
5.    எழுது கோல்கள் உயர்த்தப்பட்டு ஏடுகள் மூடப்பட்டு விட்டன.
எக்காரியத்தையும் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்ட வேண்டும்.
(பள்ளிக்கு ஒட்டகத்துடன் வந்த உரிமையாள ரிடம்) நீ ஒட்டகத்தை கட்டி விட்டு அல்லாஹ் வின் மீது பொறுப்புச் சாட்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: திர்மிதி)
6. நீ செழிப்பான நிலையில் இருக்கும் போது   அல்லாஹ்வை நினைவில் கொள், நீ கஷ்டத்தில் இருக்கும் போது அல்லாஹ் உன்னை நினைவில் கொள்வான்.
செழிப்பாக இருக்கும் காலத்தில் அல்லாஹ் வினதும்  மக்களினதும் உரிமைகளை நிறை வேற்று. நீ கஷ்டம் படும் வேளையில் அல்லாஹ் உன்னை காப்பாற்றுவான்.
7.உன்னை விட்டும் தவறிப் போன எந்த வொன்றும் உனக்கு எதுவும் செய்ய முடியாது. உன்னை வந்தடைந்த  எந்தவொன்றும் உன்னை விட்டும் தவறிப் போகாது என்பதை அறிந்து கொள்.
அல்லாஹ் உனக்கு ஒன்றை தடுத்து விட்டால் அது உன்னை வந்து சேராது. அல்லாஹ் உனக்கு ஒன்றை வழங்கி விட்டால் அதனை எவரும் தடுக்க முடியாது.
8.பொறுமையுடன் தான் உதவி இருக்கிறது என்பதை அறிந்து கொள்.
ஆத்மாவுக்கும் எதிரிக்கும் எதிரான உதவி பொறுமையை கையாளும் போது கிடைக்கக் கூடியதாக இருக்கும்.
 இந்த ஹதீஸ் தரும் படிப்பினைகள்.   
 நபி (ஸல்) அவர்கள் குழந்தைகள் மீது நேசம் கொண்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களுடன்  வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த இப்னு அப்பாஸ் (ரலி)  அவர்களை விழித்து மகனே கவனமாக நடந்து கொள் என்று நபியவர்கள் பேசியிருக்கிறார்கள். 
2. அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடக்குமாறும்  பாவங்களை விட்டும் தூரமாகி  செல்லுமாறும் பிள்ளைகளுக்கு ஏவ வேண்டும். இந்த உலகத்தி லும் மறுமையிலும் அது அவர்களுக்கு சுபீட்சத்தை கொண்டு வரும்.
3. ஒரு முஃமின் தேக ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் இருக்கும் போது அல்லாஹ்வினதும் மக்களினதும் உரிமைகளை நிறைவேற்ற வேண்டும். கஷ்டத்துடன் இருக்கும் போது அல்லாஹ் அம்முஃமினை காப் பாற்றுவான்.
4.அல்லாஹ்விடம் கேட்டல், மற்றும் உதவி தேடல் பற்றிய தவ்ஹீத்தின் கோட்பாடு பற்றி பிள்ளைகளின் உள்ளங்களில் விதைக்க வேண்டும். அது பெற்றோரினதும் பராமரிப் பாளர்களினதும் கடமையாகும்.
5. நன்மை தீமை கலாகத்ரின் (விதியின்) மூலம் நடைப் பெறும் என்ற நம்பிக்கையை பிள்ளை களிடம் ஏற்படுத்த வேண்டும். இது ஈமானின் கடமைகளில் ஒன்றாகும்.
6. எதிர்கால வாழ்வை வீரத்துடனும் எதிர் பார்ப்புடனும் (நம்பிக்கையுடனும்) கொண்டு செல்ல நல்ல சிந்தனையுடன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அப்போது தான் சமூகத்திற்கு பலன் தரும் ஒரு மனிதனாவது உருவாகுவான்.
பொறுமையுடன் தான் அல்லாஹ்வின் வெற்றி இருக்கின்றது.  துன்பத்துடன் தான் இன்பம் இருக்கிறது. கஷ்டத்துடன் தான் இலகு இருக்கின்றது என்பது நபி மொழியாகும்.
உங்கள் கருத்துக்களை எமக்கு அறிவியுங்கள்




PART-02

இஸ்லாத்தின் கடமைகள்.
இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப் பட்டுள்ளது, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1.    வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்  தூதராவார்.
அதாவது உண்மையாகவே வணங்கி வழிப் படுவதற்கு தகுதியானவன்  அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ்வுடைய மார்க்க விவகாரத்தில் முஹம்மத (ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டு வழிபடுவது அவசியமாகும்.
2.    தொழுகையை நிலை நாட்டுதல்.
தொழுகைகளின் கடமைகளை பேணி உள்ளச்சத்துடன் நிறைவேற்றுவதாகும்.
3.    ஸகாத் கொடுத்தல்
ஒரு முஸ்லிம் 85 கிராம் பெருமதியான தங்கத்தை ஒரு வருடத்திற்கு சொந்தப் படுத்திக் கொண்டால் அல்லது அதற்கு ஈடாக பணத்தை பெற்றுக் கொண்டால் வருட முடிவில் 2-1/2%  ஸகாத் கொடுக்க வேண்டும். இது அல்லாத ஏனைய பொருட்களுக்கும் அதற்கு நிர்ணயிக்கப் பட்ட விகிதத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும்.
4.    ஹஜ் செய்தல்
புனித மக்காவிற்கு ஹஜ்ஜுக்காக போய் வருவதற்கு சத்தியுள்ளவர் மீது கடமையாகும்.
5.    ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல்
 நோன்பின் போது உணவு, பானம் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து இருப்பதுடன் பஜ்ரிலிருந்து மஃரிப் நேரம் வரை நோன்பை முறிக்கும் காரியங்களிலிருந்து தவிர்ந்து இருத்தல் வேண்டும். (நூல்: புகாரி முஸ்லிம்)
 ஈமானின் கடமைகள்
1.அல்லாஹ்வை நம்புவது
 வணக்க வழிபாடுகளிலும் உயர் பண்பு களிலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என நம்புவதாகும்.
2. அவனது மலக்குகளை நம்புவது
அல்லாஹ்வின் கட்டளைகளை நிறை வேற்றுவதற்காக மலக்குகள் ஒளியினால் படைக்கப் பட்டவர்கள் என நம்புவதாகும்
3. அவனது வேதங்களை நம்புவது.
தவ்றாத், இன்ஜீல், ஸபூர் மற்றும் குர்ஆன் ஆகிய வேதங்களை நம்புவது. இதில் இறுதியாக அருளப்பட்ட குர்ஆன் சிறந்த வழிகாட்டலாகும்
4. அவனது தூதர்களை நம்புவது.
 இறைத்தூதர்களில் முதலாமவர் நூஹ் (அலை) அவர்கள் இறுதியானர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
5.மறுமை நாளை நம்புவது
 மனிதர்களின் செயல்களுக்கு கூலி வழங்கப் படும் நாள் மறுமை நாளாகும்
6.     நன்மை, தீமை அல்லாஹ் விதித்த படி நடைப் பெறும் என்று நம்புவது.
நன்மை தீமை அல்லாஹ் விதித்த படி நடை பெறும் என்று திருப்திக் கொள்வது. ஏனெனில் இது அல்லாஹ்வின் ஏற்பாட்டின் பிரகாரம் நிகழ்வதாகும்.(நூல்:முஸ்லிம்)
 அல்லாஹ் அர்ஷின் மேலால் இருக்கிறான்.
அல்லாஹ் அர்ஷின் மேலால் இருக்கிறான் என்பதை அல்குர்ஆனும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் தெளிவான பகுத்தறிவும் இயற்கைத் தன்மையும் நிரூபிக்கின்றது.
1.    அல்லாஹ் கூறுகிறான்:
الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى
அர்ரஹ்மான் அர்ஷின் மேலால் இருக்கிறான். (20:5)
அதாவது அர்ஷீக்கு மேலால் அல்லாஹ் உயர்ந்து விட்டான் என்று புகாரியில் வரக்கூடிய செய்தியும் தெரிவிக்கின்றது.
2.    ஒரு பெண் பிள்ளையிடம் அல்லாஹ் எங்கே இருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது அவள் அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்றது.  நான் யார் என நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது நீங்கள் அல்லாஹ் வின் தூதர் என்று அப் பெண் பிள்ளை கூறியது.  இவளை விடுதலை செய்து விடுங்கள் இவள் முஃமினான பெண்ணா வாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்  வானத்தில் என்பதன் அர்த்தம் வானத்தின் மேலால் இருக்கிறான் என்பதாகும்.
3.    தொழுகின்றவர் சுஜூதில் இருந்த வாறு  தூய்மையான என இரட்சகன் உயர்ந்து விட்டான் என்று கூறுகிறார்.
பிரார்த்திக்கும் போதும் வானத்தை நோக்கி கைகளை உயிர்த்துகிறார்.
4.    குழந்தைகளிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்று கேட்டால் இயற்கை யாகவே அக்குழந்தைகள் அல்லாஹ் வானத் தில் இருக்கின்றான் என்றே பதில் சொல்லும்.
5.    அல்லாஹ் கூறுகிறான்:
وَهُوَ اللَّهُ فِي السَّمَاوَاتِ
அல்லாஹ் வானங்களில் இருக்கிறான்.(6:2)
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) விளக்கம் கூறும் போது, வழி கெட்ட பிரிவான ஜஹ்மியாக் கள் கூறுவது போல் அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்று நாங்கள் கூற மாட்டோம் என முபஸ்ஸிரீன்கள் (அல்குர் விரிவுரை யாளர்கள்) முடிவு செய்துள்ளனர். வழி கேடர்கள்  கூறுவதை விட்டும் அல்லாஹ் உயர்ந்து விட்டான்.
அல்லாஹ் வானங்களில் இருக்கிறான் என்பதன் அர்த்தம் யாதெனில் அல்லாஹ் வானத்தின் மேலால் இருக்கிறான் என்பதாகும். நாங்கள் சொல்வதை அவன் செவியேற்கிறான் எங்களை பார்க்கிறான். அவன் அர்ஷூக்கு மேலால் இருக்கிறான்.
பயன் தரும் சுவையான சம்பவம்.
என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதை யொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்த போது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்று விட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப் பட்டேன். அவளை நான் அறைந்து விட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்!" என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், “அல்லாஹ் எங்கே இருக்கின் றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், “வானத்தில்” என்று பதிலளித்தாள். அவர்கள், “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள்.
  “அவளை விடுதலை செய்து விடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்" என என்னிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹகம்(ரலி) நூல்: முஸ்லிம்
இந்த  ஹதீஸ் தரும் படிப்பினைகள்.
எந்தவொரு பிரச்சினையின் போதும் அது சிறியதாகவோ, பெரியதாக இருந்தாலும் அதற்கான அல்லாஹ்வின் தீர்வை பெற்றுக் கொள்ள சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்துள்ளார்கள்.
2. அல்லாஹ் வின் பாலும் அவனது தூதரின் பாலும் தீர்ப்புக்காகச் செல்லுதல் வேண்டும்.
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا
நபியே உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தமக்கிடையில் ஏற்பட்ட சர்ச்சை யில் உம்மை நீதிபதியாக்கி பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பை தம் மனங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாது ஏற்று அதற்கு முற்றிலும் கட்டுப்படும் வரை நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள். (4:65)
அடிமைப் பெண்ணை அடித்ததை நபி (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கிறார்கள்
4. முஃமினான அடிமை ஒருவரை விடுதலை செய்ய வேண்டும் நபிகளார் (ஸல்) அவர்கள் அப் பெண்ணின் ஈமானை பரீட்சித்துப் பார்த்த போது அவள் முஃமின் என்று கண்டதும் விடுதலை செய்ய சொல்கிறார்கள்.
5. ஏகத்துவத்தைப் பற்றி கேள்வி கேட்பது மார்க்கமாகும். அல்லாஹ் அர்ஷூக்கு மேலால் உள்ளான். அதனை அறிந்து கொள்வது கடமையாகும்.
6.அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று கேள்வி கேட்பதும் மார்க்கமாகும். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கேள்வி கேட்டுள்ளார்கள்
7. அல்லாஹ் வானத்திற்கு மேலால் உள்ளான் என்று பதில் அளிப்பதும் மார்க்கமாகும். நபி (ஸல்) அவர்கள் அப் பெண்ணின் பதிலை உறுதிப்படுத்தினார்கள். இது குர்ஆனுடன் ஒத்துப் போகும் பதிலாகும். அல்லாஹ் கூறுகிறான்.
أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ
 வானத்திலுள்ளவன் உங்களை பூமிக்குள் உள்வாங்கி விட மாட்டான் என்று நீங்கள அச்சமற்றிருக்கின்றீர்களா(67:16)
 இப்னு அப்பாஸ் (ரலி) கூறும் போது அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்பது வானத்திற்கு மேலால் இருக்கிறான் என்ற அர்த்தமாகும்  என்கிறார்கள்
8.    நபி (ஸல்) அவர்களது நபித்துவத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஈமான்  உறுதியாகும்
9    அல்லாஹ் வானத்திற்கு மேலால் இருக்கிறான் என்பதின் மூலம் ஈமான் உறுதியாகும். இவ்வாறு ஈமான் கொள்வது ஒவ்வொரு முஃமினின் கடமையாகும்.
10. அல்லாஹ் எல்லா இடங்களில் உள்ளான் என்ற தவறான வாதத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. அல்லாஹ் அவனது அறிவின் மூலம் எம்முடன் இருக்கிறான் என்பதே உண்மையாகும்.
11.  அடிமை பெண் பிள்ளையிடம் அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று பரீட்சிப்பதற்காக கேள்வி கேட்டதன் மூலம் நபியவர்களுக்கு மறைவான அறிவு இல்லை என்பதற்கு இது ஆதாரமாகும்.
நபியவர்களுக்கு மறைவான அறிவு உண்டு எனக் கூறும் சூபியாக்களுக்கு இது மறுப்பாக அமைந்துள்ளது.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நபிகளாரின் அறிவுரைகள்.
01.أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
: «كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ» قَالَ: - وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ«وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ள வர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்ள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல்: புகாரி முஸ்லிம்:
02.
صحيح البخاري (6/ 18)
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ». قُلْتُ: إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ». قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»
அல்லாஹ்வின் தூதரே மிகப் பெரிய பாவம் எது? என்று நான் கேட்டேன். அப்போது நபியவர்கள், அல்லாஹ் உன்னை படைத் திருக்கும் போதுஅவனுக்கு ஒன்றை நிகராக்கு வதாகும் என்றார்கள் பிறகு எது என்று கேட்டேன். உன் குழந்தை உன்னுடன் உணவு உன்று விடும் என்று நீ அஞ்சி உன் குழந்தையை கொன்று விடுவதாகும் என்றார்கள். பிறகு எது என்று கேட்டேன். உன் அண்டை வீட்டு பெண்ணுடன் நீ விபச்சாரம் புரிவதாகும் என கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி முஸ்லிம்)
03.
قَالَ: «اتَّقُوا اللهَ، وَاعْدِلُوا فِي أَوْلَادِكُمْ
உங்கள் பிள்ளைகளிடத்தில் நீதமாக நடந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி) நூல் : முஸ்லிம்
பிள்ளைகளிடத்தில் செல்வங்கள் அன்பளிப் புக்கள் உட்பட ஏதேனும் பங்கு வைக்கும் போது நீதமாக பங்கு வைக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்றது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى
الفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ، أَوْ يُنَصِّرَانِهِ، أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ البَهِيمَةِ تُنْتَجُ البَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ
விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கை யான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக்குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர் களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்’ என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நேர்த்தியாக படைக்கப்பட்ட பின் சேதத்தை ஏற்படுத்தும் விலங்கைப் போல் இயற்கை மார்க்கத்தில் படைக்கப்பட்டதற்குப் பின் குழந்தையை பெற்றோர் யூதர்களாக்கி விடு கின்றனர் என இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) கூறு கிறார்கள்.(நூல்: பத்ஹூல் பாரி )
05.
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَهَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: «نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ
ஒரு மனிதன் தன் பெற்றோரை திட்டுவது பெரும் பாவங்களிலுள்ளதாகம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்போது நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! மனிதன் தன் பெற்றோர்களை திட்டுவானா என கேட்டார்கள். ஆம்! இவன் ஒன்னுமொருவரின் தந்தையை திட்டுவான் அவன் இவனின் தந்தையை திட்டுவான். இவன் இன்னுமொருவரின் தாயை திட்டு வான், அவன் இவனின் தாயை திட்டுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு இம்ரு இப்னு ஆஸ்(ரலி) நூல்: புகாரி முஸ்லிம்
06.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: «أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أَبُوكَ
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் சிறந்த தோழமை கொள்வதற்கு மனிதர்களின் மிகவும் உரிமை படைத்தவர் யார்? என்று கேட்டார் அப்போது நபிய வர்கள் உனது தாய் என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார். உனது தாய் எனறு கூறினார்கள் பிறகு யார்? என்று கேட்டார். உனது தாய் என்று கூறினார். பிறகு யார்? என்று கேட்டார் உனது தந்தை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி முஸ்லிம்)
பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்புக்கள்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
விசுவாசம் கொண்டவர்களே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள் (66:6)
தாய், தகப்பன், ஆசிரியர் மற்றும் சமூகம் இந்த மக்களை பயிற்றுவிப்பதில்  அல்லாஹ் வின் முன்னிலையில் பொறுப்பாளர்களாக உள்ளனர். அவர்கள் சிறந்த முறையில் பயிற்றுவித்தால் இம்மையிலும் மறுமை யிலும் அதிஷ்டசாலிகளாக விளங்குவார் கள். கவனயீனமாக இருந்தால் துரதிஷ்ட சாலிகளக மாறுவார்கள். இதன் பொறுப்பை இவர்கள் சுமக்க வேண்டி வரும் இதைக் குறித்துத் தான் நபி (ஸல்) கூறும் போது உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படு வீர்கள். என்று கூறினார்கள்( நூல்:புகாரி முஸ்லிம்)
ஆசிரியர்களே! அல்லாஹ்வின் தூதரின் நற் செய்தியொன்றை நீங்கள் பெற்றுக் கொள்ளங்கள். அதாவது உங்கள் மூலம் ஒருவர் நேர்வழியைப் பெற்றுக் கொண்டால் சிகப்பு ஒட்டகத்தை விட உங்களுக்கு சிறப்பதனதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்:புகாரி முஸ்லிம்)
பெற்றோர்களே! பின்வரும் ஹதீஸின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்செய்தியை பெற்றுக் கொள்ளுங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْه  عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
1. நிலையான தர்மம்
2.  பயன்பெறப்படும் கல்வி.
3.அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனது சாலிஹான) நல்ல பிள்ளை. (இம்மூன்று செயல்கள் மூலம் நன்மைகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
பொறுப்பாளரே! எல்லாவற்றுக்கும் முன்னால் முதலில் உங்களை சீர்திருத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு முன்னால்  நீங்கள் செய்யக்கூடியவை சிறந்ததாக இருக் கட்டும் நீங்கள் விட்டு விடக் கூடியவை மோசமானதாக இருக்கட்டும்
ஆசிரியரே, பராமரிப்பாளரே பெற்றோர் களே உங்கள் பண்பாடுகளை குழந்தை களுக்கு முன்னால்  சிறந்ததாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் (தர்பிய்யத்தும்) பயிற்றுவிப்பும் அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்
ஆசிரியரினதும் பராமரிப்பாளரினதும் கடமைகள்
01. குழந்தைக்கு லாஇலா இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சொல்வதற்கு கற்றுக் கொடுங்கள். அது வளரும் போது இக் கலிமாவின் பொருளை விளங்கப் படுத்துங்கள். அதாவது உண்மை யாகவே வணங்கி வழிபடுவதற்கு தகுதி யானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதாகும்.
02.பிள்ளையின் உள்ளத்தில் அல்லாஹ்வின் நேசத்தையும் ஈமானையும் விதையுங்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் எங்களை படைத்தான்,உணவளிக்கின்றான், பாதுகாக் கின்றான். அவன் தனித்தவன், இணை துணை இல்லாதவன்.
03. அல்லாஹ்விடத்தில் கேட்பதற்கும் அவனிடம் மட்டுமே உதவி தேடுவதற்கும் பிள்ளைகளை பயிற்றுவியுங்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களது சாச்சாவின் மகனுக்கு சொல்லி கொடுக்கும் போது, மகனே! நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடு என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
தடுக்கப்பட்டவைகளிலிருந்து எச்சரிக்கை செய்தல்
01. இறை நிராகரிப்பு, திட்டுதல், சபித்தல், தீய பேச்சுக்கள் பேசுதல் ஆகியவற்றி லிருந்து பிள்ளைகளை எச்சரிக்க வேண்டும்.
இறை நிராகரிப்பு என்பது ஹராமாகும். (இம்மை மறுமையில்) நஷ்டமடைவதற்கு காரணமாக அமைந்து விடும். நரகத்திலும்  நுழையச்  செய்யும் என்பதை நளினமாக புரிய வைக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு முன் எங்களது பேச்சுக்களை பேண வேண்டும், அவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும்.
02.அல்லாஹ்வுக்கு இணை வைப்பதிலி ருந்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
அல்லாஹ்வை விட்டு விட்டு இறந்த வர்களை பிரார்த்தித்தல், அவர்களிடம் உதவி தேடுதல், ஆகியன இணை வைப்பாகும். மரணித்துப் போன இவர்களும் மனிதர்களே, நன்மையையோ தீமையோ செய்வதற்கு சக்திப் பெறமாட்டார்கள்.
وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வை யன்றி உமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியாதவற்றை அழைக்காதீர். நீர் அவ்வாறு செய்தால் நிச்சயமாக நீர் அநியாயக்காரர் களில் உள்ளவராவீர். (10:106)
03. பிள்ளைகளை சூதாட்டதிலிருந்து எச்சரிக்க வேண்டும்.
சீட்டிழுப்பு தாயம், போடுதல்  போன்ற வற்றை பொழுது போக்காக இருந்தாலும் விளையாட விடக் கூடாது. ஏனெனில் அவை சூதுக்கு இட்டுச் செல்லும். விரோதத்தை தோற்றுவிக்கும். அவர்களுக்கு அவர்களது  பணத்துக்கும், நேரத்துக்கும் நஷ்டத்தை கொண்டு வரும். மேலும் அவர்களது தொழுகைகைளயும் பாழ்படுத்தி விடும்.
04. கீழ்த்தரமான சஞ்சிகைகளை வாசித்தல், நிர்வாணப் படங்களைப் பார்த்தல், துப்பறியும் நாவல்கள், பாலியல் கதைகள் ஆகியவற்றறை படிப்பதிலிருந்து பிள்ளை களை தடுக்க வேண்டும். அவர்களுடைய பண்பாடுகளை நாசப்படுத்தக் கூடிய இது போன்ற சினிமா மற்றும் தொலைக்காட்சி காட்சிகள் ஆகியவற்றிலிருந்தும் தடுக்க வேண்டும்.
05. சிகரட் புதைத்தலிருந்து பிள்ளைகளை எச்சரிக்க வேண்டும்.
சிகரட் புகைப்பதால் உடல் நிலை கெட்டு விடும், புற்று நோயை வரவழைக்கும், பற்களில் சூத்தை ஏற்படுத்தும், வாயிலி ருந்து மோசமான வாடை வீசும்,  மாரடைப்பு ஏற்படுத்தும் என்று வைத்தியர் கள் கூறியுள்ளார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.   சிகரட் புகைப்பதால் எந்த நன்மையும் இல்லை.  எனவே புகைப்பதும் அதனை வாங்குவதும் விற்பதும் ஹராமாகும். அதற்கு பதிலாக பழங்களையும் மற்றும் காய்கறி களையும் சாப்பிடுமாறு  அறிவுரை கூறவேண்டும்
06.  சொல்லிலும், செயலிலும் உண்மையை கடைப்பிடிக்க பிள்ளைகளை பழக்க வேண்டும். நகைச்சுவைக்குக் கூட அவர்களிடம் பொய் சொல்லக் கூடாது. அவர்களுக்கு ஏதேனும் வாக்குறுதி கொடுத்தால் அதனை நாம் நிறை வேற்ற வேண்டும்.
காரணம் அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறும் போது எவர் தன் பிள்ளையிடம் இதோ இதை எடுத்துக் கொள் எனக் கூறி அழைத்து விட்டு அதனை கொடுக்க வில்லையாயின் அவர் பொய்யன் ஆவார் எனக் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)
07. இலஞ்சம், வட்டி, திருட்டு, மோசடி போன்ற ஹராமான பணத்திலிருந்து எமது பிள்ளைகளுக்கு உண்ண கொடுக்கக் கூடாது. அது அவர்களை பாவத்திற்கும், கலகத்திற்கும், துரதிஷ்டத்திற்கும் (ஆளாக்கு வதற்கு) காரணமாக்கி விடும்.
08. அழிவைக் கொண்டும் கோபத்தைக் கொண்டும் பிள்ளைகளுக்கெதிராக பிரார்த் திக்கக் கூடாது. ஏனெனில் சில வேளை அப்பிரார்த்தனைக்கு பதிலளிக்கப் பட்டு விடும். சிலநேரம் அவர்களுக்கு வழி கேட்டையும் அதிகரிக்கச் செய்துவிடும். பிள்ளைக்கு பிரார்த்திக்கும் போது அல்லாஹ் உன்னை சீர் செய்வானாக என்று கூற வேண்டும்.
தொழுகையை கற்றுக் கொடுத்தல்
01.    சிறுவயதில் பிள்ளைகளுக்கு தொழுகையை கற்றுக் கொடுக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் தொழுகைகளை பேணுவார்கள்.
 உங்கள் பிள்ளைகள் ஏழு வயதை அடைந்ததும் தொழுகையை கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியதும் (தொழ வில்லையாயின்) அடியுங்கள். படுக்கையை விட்டும் அவர்களை பிரித்து (ஒதுக்கி) விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
வுழு செய்தல், தொழுதல் ஆகிய முறைகளை அவர்களுக்கு முன்னின்று  கற்றுக் கொடுத்து அவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லவும் வேண்டும். குடும்பத் தினருக்கு  தொழுகையின் சட்டங்களை கற்றுக் கொடுப்பதற்காக தொழும் முறையை எழுதி கொடுப்பதற்கு ஆர்வமூட்ட வேண்டும். பெற்றோரும் பொறுப்பாளர்களும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் விடயத்தில் விடக் கூடிய ஒவ்வொரு குறைகளை குறித்தும் அல்லாஹ் விசாரிப்பான்.
02.    பிள்ளைகளுக்கு குர்ஆனை கற்றுக் கொடுக்க வேண்டும். சூரதுல் பாதிஹாவி லிருந்து சின்ன சூரத்துக்களை தொழுகைக் காக கற்றுக் கொடுக்க வேண்டும். தஜ்வீதை கற்று கொள்ளவும் குர்ஆனையும் ஹதீஸை யும் மனனமிடவும் ஒரு ஆசிரியரை நியமிக்கவும் வேண்டும்.
03.     ஜூம்ஆ தொழுகையையும் ஏனைய தொழுகைகளையும் பெரியவர்களுக்கு பின்னால் நின்று ஜமாஅத்தாக தொழுவதற்கு ஆர்வமூட்ட வேண்டும். அவர்கள் தவறு விடும் போது மென்மையாக திருத்திக் கொடுக்க வேண்டும். அவர்களை விரட்டி விட கூடாது. அப்படி செய்தால் அவர்கள் தொழுகையை விட்டு விடுவார்கள். அதன் பிறகு நாங்கள் தான் கைசேப்படவேண்டி வரும்.
04.    ஏழுவயதை அடையும் போது நோன்பு பிடிக்கப் பழக்கினால் பெரியவர்களாகும் போது அதனை பிடித்து வருவதற்கு பழகி விடுவார்கள்.
PART-03
மறைத்தலும் ஹிஜாப் ஆடையை பேணலும்
பெண் பிள்ளையை சிறிய வயதிலிருந்து மறைத்துக் கொள்வதற்கு ஆர்வமூட்ட வேண்டும். அப்போது அவள் பெரியவளாக வளரும் போது அதனை கடைபிடித்து வருவாள். அவளுக்கு குட்டையான ஆடையை அணிவிக்கக்கூடாது. காற்சட்டை மற்றும் கமீஸ்களையும் அணிவிக்கக் கூடாது. ஏனெனில் அது ஆண்களுக்கும் நிராகரிப்பா ளர்களுக்கும் ஒப்பானதாகும். மேலும் அது ஆண்களின் குழப்பங்களுக்கும் ஏமாற்றங்க ளுக்கும் இட்டுச் செல்லும் காரணியாக அமையும்.
அவளுக்கு ஏழுவயதாகும் போது தலையை மூடுவதற்கு ஒரு துணியை வைத்துக் கொள் என்று ஏவவேண்டும்.  பருவ வயதை அடையும் போது முகத்தை மூடுமாறும், கற்பை பேணும் விதமாக நீண்ட அகலமான கறுப்பு ஆடையை அணியுமாறும் ஏவவேண்டும். முஃமினான பெண்கள் அனைவரையும் ஹிஜாபை பேணுமாறு தான் குர்ஆன் அழைப்பு விடுக்கின்றது.
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا الأحزاب: 59
நபியே உம்மனைவியருக்கும், உமது புதல்வி யருக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் முந்தானைகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக அவர்கள் அறியப்படுவதற்கும் நோவினை படுத்தப் படாமல் இருப்பதற்கும் இதுவே மிக நெருக்க மானதாகும். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான். (33:59)
முஃமினான பெண்கள் அலங்காரங்களை காட்டிச் செல்வதையும் அல்லாஹ் தடை செய்கின்றான்.
وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ} الأحزاب: 33
முன்னைய அறியாமைக் காலத்தில் (பெண்கள்) தமது அழகை வெளிப்படுத்தியது போன்று நீங்களும் வெளிப்படுத்தித் திரியாதீர்கள் (33:33)
2. அடுத்தவர்களிலிருந்து வேறுபடுவதற்காக தனித்துவமான ஆடையை பேணுமாறும் இறுக்கமான காற் சட்டைகள் போன்ற ஆடைகளை அணிவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பிள்ளைகளுக்கு கட்டளையிட வேண்டும்.
صحيح البخاري (7ஃ 159)
عنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆண்களில் பெண் களைப் போன்று ஒப்பனை செய்து கொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்; புகாரி
سنن أبي داود (4 44)
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
எவர் ஒரு சமூகத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல் :அபூதாவுத்

பண்பாடுகளும் ஒழுக்கங்களும்.
1.    உண்ணுதல், பருகுதல், கொடுத்தல், வாங்குதல் ஆகியவற்றில் வலது கையினை பயன்டுத்துவதற்கு பிள்ளையை நாம் பழக்க வேண்டும். உட்கார்ந்து உண்ணுவதற்கும் பருகு வதற்கும் அதன்பின் அல்லாஹ்வை புகழ்ந்து துஆ ஓதுவதற்கும் பழக்க வேண்டும்.
2.    சுத்தத்தை பேணுமாறு பழக்க வேண்டும்.  நகங்களை வெட்டுவதற்கும், சாப்பாட்டுக்கு முன்பும், பின்பும் கைகளை கழுவுவதற்கும் பழக்க வேண்டும். மலசல கூடத்திற்கு செல்லும்  ஒழுங்குகளையும், சுத்தம் செய்யும் முறையினை யும் கற்றுக் கொடுக்கவேண்டும்.
தொழுகையை நிறைவேறுவதற்காக நீரினால் கழுவிக் கொள்ளும் முறையினையும், ஆடை அசுத்தப்படாத முறையினையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
3.    அவர்கள் தவறிழைத்தால் அதனை பகிரங்கப் படுத்தாது மென்மையாகவும் இரகசிய மாகவும் அறிவுரை கூற வேண்டும். அவர்கள் பிடிவாதமாக இருந்தால் அவர்களுடன் மூன்று நாட்களுக்கு பேசாமல் இருக்க வேண்டும். அதற்கு மேல் பேசாமல் இருக்கக்  கூடாது.
4.    பாங்கு சொல்லும் போது அமைதியை கைகொள்ளுமாறும் முஅத்தின் கூறுவது போல் பதில் சொல்லுமாறும் பாங்கிற்குப் பின் நபிகளார் மீது ஸலவாத் கூறி பின்வருமாறு பாங்கு  துஆவை  கூறுமாறும் ஏவவேண்டும்.
صحيح البخاري (1ஃ 126)
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ:
 اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ،
பூரணமான இந்த அழைப்புக்கு சொந்தக் காரனே. நிலையான தொழுகைக்குரியவனே. முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வஸீலாவையும் சிறப்பை யும் வழங்குவாயாக மேலும் அவர்களுக்கு நீ வாக்களித்த மகாமன் மஃமூதா எனும் இடத்தில் எழுப்புவாயாக என பாங்கு கூறும்
5.    முடியுமாக இருந்தால் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனியான ஒரு படுக்கையை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அல்லது கணமான துணியொன்றையாவது விரிப்பாக கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கும் ஆண் பிள்ளைகளக்குமென  தனித் தனியான அறைகளை ஏற்பாடு செய்து கொடுப்பது சிறந்ததாகும். அதன் மூலம் அவர்களது பண்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு வழியமையும்.
6.    பாதையில் குப்பைகளை போடக் கூடாது என்றும், பாதையில் மக்களுக்கு இடஞ்சல் ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் பழக்கவேண்டும்.
7.    கெட்ட நண்பர்களை பற்றி எச்சரிப்ப தோடு அவர்களுடன் பாதைகளில் நிற்கின்றார்களா என்று கண்காணிக்கவும் வேண்டும்.
8.    வீட்டில், பாதையில், வகுப்பறையில் பிள்ளைகளுக்கு மென்மையான முறையில் ஸலாம் கூறவேண்டும்
9.    அண்டை வீட்டார்களுக்கு உபகாரம் செய்யுமாறும், நோவினை செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளமாறும் அறிவுரை கூற வேண்டும்.
10.     விருந்தாளிகளை கண்ணியப்படுத்தவும், விருந்தோம்பலை மேற்கொள்ளவும் பழக்க வேண்டும்.
          ஜிஹாதும் துணிவும்.
1. குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்குமென தனியான ஒரு அமர்வை ஏற்பாடு செய்து அதில் நபி(ஸல்) அவர்களினதும் சஹாபாக்களினதும் சரித்திரங்ளையும் வாசிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் துணிவுள்ள தளபதி . அவர்களுடைய தோழர்களான அபூபக்கர்(ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி), முஆவியா (ரலி) ஆகியோர் நாட்டை வெற்றிக் கொண்டார்கள், எங்கள் (ஹிதாயத்) நேர்வழிக்கு காரணமாக இருந்தார்கள். அவர்களது இறை நம்பிக்கை காரணமாகவே வெற்றிக் கொண்டார்கள். அவர்களது போராட்டமும் செயற்பாடும் குர்ஆன் சுன்னாவைக் கொண்டும் உயர்ந்த பண்பாடு களை கொண்டும் இருந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக வரலாறுகளை வாசிக்க வேண்டும்.
2. பிள்ளகைளை துணிவுள்ளவர்களாக பயிற்றுவிக்க வேண்டும். நன்மையை ஏவி தீமையை தடுப்பதற்கும் அல்லாஹூவைத் தவிர எவருக்கும் அஞ்சக் கூடாது என்றும் பயிற்று விக்கவேண்டும். மேலும் இருளைக் காட்டி பொய்களையும் கட்டுக்கதைகளையும்  கூறி அவர்களை பயம்காட்டக் கூடாது.
3. சமூகத்திற்கு எதிராக அநியாயம் புரியும் குற்றவாளிகளுடன் சேரக்கூடாது. குறிப்பாக போதை பொருட்கள், மது சூது போன்ற ஹராமான வியாபாரங்கள் மூலம்  எவ்வளவு பணம் கிடைத்தாலும் அவற்றில் எவ்வித நன்மையும் பரக்கத்தும் இல்லை என்ற உண்மையை  பிள்ளைகளின் உள்ளத்தில் விதைக்க வேண்டும்.
4. பயனுள்ள இஸ்லாமிய கதைப் புத்தங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக அல்குர்ஆன் குறிப்பிடும் வரலாற்று சம்பவங்கள்,  நபிகளாரின் சரிதைகள், சஹாபாக்களில் வீரம் பற்றிய சரிதைகள் ஆகியவற்றை குறிப்பிடலாம். அது போல் நபிகளாரின் குணநலன்கள் உயர்ந்த பண்புகள்  இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் ஆதார பூர்வமான குர்ஆன் சுன்னாவின் அகீதா கோட்பாடுகள் என்பவற்றையும் குறிப்பிடலாம்.
குழந்தைகளிடம் நீதமாக நடத்தல்
صحيح مسلم (3ஃ 1242)
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: تَصَدَّقَ عَلَيَّ أَبِي بِبَعْضِ مَالِهِ، فَقَالَتْ أُمِّي عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ: لَا أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقَ أَبِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُشْهِدَهُ عَلَى صَدَقَتِي، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَعَلْتَ هَذَا بِوَلَدِكَ كُلِّهِمْ؟» قَالَ: لَا، قَالَ: «اتَّقُوا اللهَ، وَاعْدِلُوا فِي أَوْلَادِكُمْ»، فَرَجَعَ أَبِي، فَرَدَّ تِلْكَ الصَّدَقَةَ
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் சிறுவனாக இருந்த போது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் ‘நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்’ என்று கூறினார். ஆகவே என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களி டம் சென்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம் ‘உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?’ என்று கேட்டார்கள். என் தந்தை, ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள், உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பி வந்து அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டார்கள்.
இன்னுமொரு அறிவிப்பில்
صحيح مسلم (3ஃ 1243)
قَالَ: «فَلَا تُشْهِدْنِي إِذًا، فَإِنِّي لَا أَشْهَدُ عَلَى جَوْرٍ»
‘என்னை (இதற்குச்) சாட்சியாக்காதீர். ஏனெனில், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
சகோதரரே! உங்கள் பிள்ளைகளிடையே அன்பளிப்பு மற்றும் வஸீயத் கூறுவதில் நீதியை கடை பிடியுங்கள். வாரிசு சொத்தை பங்கு வைப்பதில் எவருடைய உரிமையையும் தடை செய்யாதீர்கள். அல்லாஹ் கடமையாக் கிய பங்கை கொடுத்து விடுவது உங்கள் மீதுள்ள கடமையாகும். பிள்ளைகளில் ஒரு சிலர் மீது கொண்ட அன்பினால் மற்ற பிள்ளைகளுக்கான வாரிசு உரிமையை கொடுப்பதிலிருந்து உங்கள் மனோ இச்சை உங்களை தடுத்து விடக் கூடாது. அப்படி செய்தால் நரகத்திற்கு நீங்கள் உங்களை உட்படுத்தி விடுவீர்கள். எத்தனையோ மனிதர் கள் தங்களது சொத்துக்களை பிள்ளை களில் ஒரு சிலருக்கு எழுதிவிட்டு மற்றவர்களை விட்டு விடுகிறார்கள். இதனால் அந்த வாரிசுகளுக் கிடையில் குரோதமும் கோபமும் உருவாகிறது. இதற்கான நீதியை வேண்டி அவர்கள் சட்டத்தரணியிடமும்  நீதிபதியிடமும் சென்று தங்கள் செல்வத்தை வீணடிக்கின்றனர்.
இளைஞர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணல்
இளைஞர்களின் பிரச்சனைகளின்  தீர்வுக்கு சிறந்த வழி, முடியுமானால் அவர்கள் மணம் முடிப்பதாகும். மஹரை பெற்றுக் கொள்வதற் கான வழிகளும் இலகுவானால் திருமணத்திற் கான வழியும்  இலகுவாகிவிடும்.
صحيح البخاري (3ஃ 26)
عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»
இளைஞர்களே! உங்களில் எவருக்கு சக்தி  இருக்கின்றதோ அவர் மணம் முடித்து கொள்ளட்டும். ஏனெனில் அது பார்வையை தாழ்த்தி கற்பை பேணிக் கொள்ளும். எவருக்கு சக்தி இல்லையோ  அவர் நோன்பு நோற்கட்டும். அது அவருக்கு பாதுகாப்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( நூல்: புகாரி)
பணக்கார குடும்பத்தைச் சார்ந்த வாலிபனாக இருந்தால் அவர் படிப்பை முடிப்பதற்கு   திருமணம் தடையாக இருக்காது. அவருடைய தந்தை அவருடைய தேவைகளை நிறைவு செய்வதற்கு போதுமானவராக காணப்படு கின்றார்.
எனவே வசதி படைத்த பிள்ளை இருந்து வாலிபத்தை அடைந்தால் அவருக்கான திருமணத்தை பிற்படுத்தாது நடாத்தி வைப்பது தந்தையின் மீதுள்ள கடமையாகும்.
வசதிபடைத்த பிள்ளையாக இருந்தால் தனக்கு முணமுடித்து வைக்குமாறு மிக நளினமாக தந்தையிடம் கேட்க வேண்டும். தந்தையின் திருப்தியை  பெற்றுக் கொள்ள ஆசை வைத்து அழகிய முறையில் நடந்துக் கொள்ளவும்  வேண்டும்.
அல்லாஹ் ஒன்றை ஹராமாக்கினால் அதற்கு பகரமாக நல்லதை ஹலாலாக்கியுள்ளான் என்பதை ஒவ்வொரும் அறிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக வட்டியை ஹராமாக்கி வியாபா ரத்தை ஹலாலாக்கினான். விபச்சாரத்தை ஹராமாக்கி திருமணத்தை ஹலாலாக்கினான். இதுவே இளைஞர்களின் பிரச்சனைக்காக சிறந்த தீர்வாகும்.
திருமணத்திற்கான மஹரையும் செலவினத்தை யும் பெற்றுக் கொள்ள முடியாத ஏழையாக இளைஞர் இருந்தால் பின்வருமாறு தீர்வு காண்பதே சிறந்ததாகும்.
1. மேற்கூறப்பட்ட ஹதீஸில் கூறப்படுவது போல் நோன்பு நோற்க வேண்டும். நோன்பு இளைஞருக்கான பாதுகாப்பாகும். இச்சையை தனிக்கக்கூடியதாகும். நோன்பு உணவையும் பானத்தையும் விட்டு தடுப்பது மட்டுமல்லாது ஹராமான பார்வைகளை விட்டும், பெண்களு டன் நெறுங்கிப் பழகுவதை விட்டும்,  மோசமான  படங்களை பார்ப்பதை விட்டும், கீழ்தரமான சஞ்சிகைகள், பாலியல் தொடர்பான கதைகள் படிப்பதை விட்டும் தடுக்கக் கூடியதாகும்.
எனவே இளைஞர்கள் அன்னிய பெண்களை பார்ப்பதை விட்டும் பார்வையை பேணிக் கொள்ள வேண்டும். கற்பை பேணுவதில் ஆரோக்கியம் இருக்கின்றது. மனோ இச்சைகளை பின் தொடர்வதால் நோய்களும் துன்பங்களும் ஏற்படுகின்றன.  எனவே திருமணத்திற்கான வாய்ப்பை பெறுபவர் மணம் முடித்து கொள்ளட்டும். அது உயர்ந்த பண்பையும் சிறந்த நடத்தையையும் கொண்டு வரும்.
2. பாலியல் உணர்ச்சி மேலோங்கிச் செல்லக் கூடியது என உளவியலாளர்கள் தெரிவித்துள் ளார்கள். எனவே திருமணத்திற்கான வாய்ப்பு இல்லையெனில் மானக்கேடான காரியத்தின் பக்கம் நெருங்காதே. மாறாக தொழுவது, நோன்பு நோற்பது, குர்ஆன் ஓதுவது, ஹதீஸ்களை வாசிப்பது, சிறந்த வரலாறுகளை படிப்பது,  நல்அமல்களில் ஈடுபடுவது, ஆய்வுகள் செய்வது  போன்ற ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு உன்னை கட்டுப் படுத்தலாம் அல்லது இயற்கை காட்சிகளான நதிகள் மரங்கள் மலைகள் சித்திரம் வரைதல் போன்ற பலனுள்ள பொழுது போக்கு களில் ஈடுபடலாம்.
3. உடற் பயிற்சி மேற் கொள்வதில் கவனம் செலுத்துவது, சாரணர் குழுக்களில் பங்கு கொள்வது, ஆண் பெண் கலவன் இன்றி இயங்கும் இலக்கிய கழகங்களில் பங்கு கொள்வது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும் போது  பாலியல் உணர்ச்சிகள் என்ற சிந்தனையை விட்டும் அவை திசை திருப்பக் கூடியதாக இருக்கும். மேலும் உடலுக்கும், பண்பாட்டுக்கும், மார்க்கத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய விபச்சாரத்தை விட்டும் தூரப்படுத்த பிரயோசனமான வழியாகவும் இருக்கும்.
மேலும் வாலிபர் பாலியல் வேட்கையை உணரும் போது உடல் ரீதியான செயற் பாடுகளை மேற் கொள்ள வேண்டும்  அதன் போது அந்த வேட்கையை அது திசை திருப்பி விடும். உதாரணமாக ஓட்டப் போட்டி, பாரம் தூக்குதல், மல்யுத்தம், அம்பு எறிந்து விளையாடுதல், நீச்சல், அறிவியல் போட்டிகள் போன்றவற்றில் ஈடுபடலாம் அப்போது உணர்ச்சிகள் குறையக்கூடியதாக இருக்கும். 
4. மார்க்க நூல்களை வாசிப்பதில் ஈடுபாடு காட்டுதல். அதில் முக்கியமனது குர்ஆனை படித்தல், ஹதீஸ் நூற்கள் தப்ஸீர் நூற்கள் வாசித்தல், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மனனமிடல், நபிகளாரின் வரலாறு, குலபா உர் ராஷிதீன்களின் வரலாறு அறிஞர்களின் வரலாறுகளை வாசித்தல், வானொலியில் அல்லது தொலைக் காட்சியில் ஒளிபரப்பப் படும் குர்ஆனை செவிமடுத்தல்,  மார்க்க ரீதியான அறிவு ரீதியான  உரைகளை செவிடுத்தல் முக்கியமான பிரயோசனங்க ளாகும்.
குறிப்பு:
இளைஞர்களுக்கு பலனுள்ள மருத்துவம் திருமணமாகும். அதற்கு முடியாது விட்டால் நோன்பு நோற்பது, ஆன்மீக பணிகளில் கவனம் செலுத்துவது, உடற் பயிற்ச்சிகளை மேற் கொள்வது, பலனுள்ள அறிவை பெறுவது இவை தீங்கை ஏற்படுத்தாத, பிரயோசனமான சக்தியின் இருப்பிடமாகும்.  பிறகு அல்லாஹ் தடுத்துள்ள வைகளை விட்டும் பார்வையை தடுத்துக் கொண்டு  அல்லாஹ்வின் பால் ஒதுங்கி விடவேண்டும். திருமணத்திற்கான வழியை அல்லாஹ்  இலகு படுத்துவான்.
பதிலளிக்கப்படும் பிரார்த்தனை
صحيح البخاري (2ஃ 54)
حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ، فَقَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، الحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي، أَوْ دَعَا، اسْتُجِيبَ لَهُ، فَإِنْ تَوَضَّأَ وَصَلَّى قُبِلَتْ صَلاَتُهُ '
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'யார் இரவில் விழித்து “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன், அவனுக்கு நிகரானவர் இல்லை, ஆட்சி அவனுக்குரியது, புகழும் அவனுக்குரியது, அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன், நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது” என்று கூறிவிட்டு “இறைவா! என்னை மன்னித்துவிடு” என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும்.
அறிவிப்பவர்: உபதா இப்னு ஸாமித்(ரலி) (நூல்:புகாரி)
குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் விபரீதம்
அல்லாஹ் கூறுகிறான்.
الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا
செல்வங்களும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் அலங்காரங்களாகும்..(18:46)
பிள்ளையும், செல்வமும் அல்லாஹ்வின் அருட் கொடையாகும். அதனை அடைந்து கொள்ளவே மனிதன் முயற்சிக்கின்றான். இவ்விரண்டும் உலக அலங்காரமுமாகும். ஆனாலும் மனித ஷைத்தான்கள் இயற்கைக்கு மாற்றமாக செல்வங்களை, சொத்துக்களை கட்டுப்படுத் துங்கள் என்று கேட்காது பிள்ளைகளின் எண்ணிக்கையை  கட்டுப்படுத்த சந்தேகங்களை உருவாக்கின்றனர்.
பிள்ளையும், செல்வமும் மனித வாழ்விலும், மரணத்திற்குப் பின்னும் பயன்தரக் கூடிய தாகும்.
صحيح مسلم (3ஃ 1255)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ' إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ '
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன.
1. நிலையான அறக்கொடை
2. பயன்பெறப்படும் கல்வி.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள்  (நூல்: முஸ்லிம்)
2. குழந்கைள் அதிகமாக பெறுவதையும் அதிக பிள்ளைகளை பெற்றெடுக்கும் பெண்ணை மண முடிப்பதையும் இஸ்லாம் தூண்டுகிறது.
''அதிகம் அன்புக் காட்டக்கூடிய, அதிக பிள்ளை பெறக்கூடிய பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள். மறுமையில் உங்களைக் கொண்டு பெறுமை படக்கூடியவனாக இருப்பேன்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இர்வாஉல் கலீல் 1788 )
முஸ்லிமான வைத்தியவரின் ஆலோசனைக் கேற்பவேயன்றி, ஒரு பெண் நோய் போன்ற தகுந்த காரணம் இன்றி குடும்பக் கட்டுப்பாட்டை மேற் கொள்வதை இஸ்லாம் அனுமதிக்க வில்லை. இது தவிர பெருளாதார பற்றாக்குறை வறுமை போன்ற காரணிகளுக் காக குடும்ப கட்டுப்பாட்டை மேற் கொள்ளலாகாது.
அல்லாஹ் கூறுகிறான்:
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ
ஷைத்தான் வறுமையை உங்களுக்கு வாக்களிக்கின் றான்.(2:268)
4. இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களின் சனத்தொகையை குறைக்கவே முயற்ச்சிக் கின்றார்கள்.  அதே வேளை அவர்களது பிறப்பு வீதத்தையும் சனத் தொகையையும்  அதிகரிக்கச் செய்து முஸ்லிம்களை விட மேம்பட்டு இருக்க தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்கள். தற்போது எகிப்திலும் இஸ்லாமிய நாடுகளிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது குடும்ப கட்டமைப்பு எனும் பெயரில் இது நடை பெற்று வருகின்றது. இலவசமாக கருத்தடை வில்லைகளை வினியோகித்து குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்து வருகிறார்கள். மார்க்கத்திற்கு முரணான இக்காரியத்தின் விபரீதத்தை முஸ்லிம்கள் அறிவார்களா?
பிள்ளை வளர்ப்பும்,
பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்
PART-04
தொழுகையின் சிறப்புக்களும் அதனை விட்டு விடுபவனுக்குரிய எச்சரிக்கையும்.
இது பற்றி பிள்ளைகளுக்கு பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும்.
وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ  أُولَئِكَ فِي جَنَّاتٍ مُكْرَمُونَ           [المعارج: 34
மேலும் அவர்கள் தொழுகைகைளை பேணிக் கொள்வார்கள். இவர்கள் தான் சுனவச் சோலைகளில் கண்ணியப் படுத்தப் படுவார்கள். (70:34-35)
إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ     [العنكبوت: 34
நிச்சயமாக தொழுகை மானக்கேடானதையும் வெறுக்கத் தக்கதையும்விட்டு தடுக்கும் (29:45)
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ  الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ          [الماعون: 4 - 5
தமது தொழுகையில் பாராமுகமாக இருக்கும் தொழுகையாளிக்குக் கேடுதான்.(107:4-5)
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ  الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ            [المؤمنون: 1، 2
நம்பிக்கையாளர்கள் வெற்றிப் பெற்று விட்டார் கள். அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்ச முடையவர்களாக இருப்பார்கள்.(23:1-2)
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا     [مريم: 59
அவர்களுக்குப் பின் (கெட்ட) வழித் தோன்றல் கள் உருவாக்கினர். அவர்கள் தொழுகையைப் பாழ்படுத்தி மனோ இச்சையைப் பின்பற்றினர். எனவே அவர்கள் இழிவையே சந்திப்பார்கள். (19:59 )
صحيح مسلم (1 462)
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَقَالَ قُتَيْبَةُ: حَدَّثَنَا بَكْرٌ يَعْنِي ابْنَ مُضَرَ، كِلَاهُمَا عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَفِي حَدِيثِ بَكْرٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهْرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ، هَلْ يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ؟» قَالُوا: لَا يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ، قَالَ: «فَذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللهُ بِهِنَّ الْخَطَايَا
உங்களில் ஒருவரின் (வீட்டு) வாசலில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது அதில் அவர் ஒரு நாளைக்கு ஐந்து முறை குளிக்கிறார். அவரது உடலில் அழுக்கேதும் இருக்குமா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபித் தோழர்கள் எந்த அழுக்கும் இருக்காது என கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே ஐந்து நேர தொழுகையின் நிலையு மாகும். ஆவைகளை நிறைவேற்றுவதன்  மூலம் அல்லாஹ் தவறுகளை அழிக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம்.
 مسند أحمد ط الرسالة (38ஃ 20)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ' الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ '
எங்களுக்கும் (இறை நிராகரிப்பாளர்களான) அவர்களுக்குமிடையிலுள்ள வேறுபாடு தொழுகையாகும். எவர் தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் நிராகரித்தவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு புரைதா (ரலி) நூல்: அஹ்மத்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، كِلَاهُمَا عَنْ جَرِيرٍ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، قَالَ: سَمِعْتُ جَابِرًا، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ»
(முஸ்லிமான) மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் நிராகரிப்புக்குமிடையிள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்
வுழுவையும் தொழுகையையும் கற்றுக் கொடுத்தல்
பிள்ளைக்கு வுழு செய்யும் முறையையும் தொழும் முறையையும் பின்வருமாறு கற்றுக் கொடுக்க வேண்டும்.
வுழு செயயும் முறை:
பிஸ்மி கூறி மனிகட்டுகளை கழுவி வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்துதல் இதனை மூன்று முறை செய்ய வேண்டும்.
முகத்தையும் முழங்கைகள் வரை மூன்று முறை கழுவுதல். முதலில் வலதையும் பிறகு இடதையும் கழுவ வேண்டும்.
தலை முழுவதையும் ஈரக்கையால் தடவுவதுடன் (மஸ்ஊ செய்வதுடன்) இரு காதுகளையும்  மஸ்ஊ செய்ய வேண்டும்.
 கரண்டை கால்வரை மூன்று முறை கழுவவேண்டும்.
முதலில் வலது காலும் பிறகு இடது காலும் கழுவ வேண்டும்.
தயம்மும் செய்யும் முறை:
நீரை பயன்படுத்த முடியாத சங்கடமான நேரத்தில் வுழுவுக்கு நீருக்கு பதிலாக மண்ணை பயன்படுத்தி தயம்மும் செய்ய வேண்டும். இந்த ஒழுங்கு முறைகளை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
சுபஹ் தொழுகை
சுபஹ் தொழுகை இரு ரக்அத்களாகும்.
தொழும் போது கிப்லாவை முன்னோக்கி இரு கைகளயும் இரு காதுகள் வரை உயர்த்தி அல்லாஹூ அக்பர் என கூற வேண்டும்.
வலது கையை இடது கையில் வைத்து நெஞ்சின் மீது தக்பீர் கட்டிய பின் துஆ ஓத வேண்டும். இது விடயமாக பல துஆக்கள் வந்துள்ளன அதில் ஏதேனும் ஒரு துஆவை ஓதிக் கொள்ள  வேண்டும் உதாரணமாக பின்வரும் துஆவை குறிப்பிடலாம்.
سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ، تَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
யாஅல்லாஹ் நீ தூய்மையானவன். உன்னை கொண்டே புகழ்கிறேன். உன் பெயர் பாக்கியம் பெற்றது, உன் புகழ் உயர்ந்து விட்டது. உன்னைத் தவிர வேறு வணக்கத்திற்கு தகுதியான கடவுள் இல்லை. (நூல்: முஸ்லிம்)
பிறகு அஊது பிஸ்மி கூறி சூரதுல் பாதிஹாவை ஓத வேண்டும். அதன் பின் குல்உவல்லாஹூ அஹத் போன்ற ஒரு சூராவை ஓத வேண்டும்.
பிறகு கைகளை உயர்த்தி தக்பீர் கூறி ருகூஊ செய்ய வேண்டும். அப்போது இரு கைகளையும் முழங்கால்கள் மீது வைத்து
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
எனது மகத்துவத்திற்குரிய இரட்சகனே நீ தூய்மையானவன் என்று மூன்று முறை கூற வேண்டும் (நூல்: முஸ்லிம்)
பிறகு ருகூஊவிலிருந்து தலையையும் இரு கைகளையும் உயர்த்தி
سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ   اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ
யாஅல்லாஹ் புகழ் அனைத்தும் உனக்கே உரியது என கூற வேண்டும் (நூல்: முஸ்லிம்)
பிறகு தக்பீர் கூறி ஸஜ்தா செய்ய வேண்டும். அப்போது இரு உள்ளங்கை இரு முழங்கால்கள் நெற்றி மூக்கு கால்களின் விரல்கள் ஆகிய உறுப்புக்கள் கிப்லாவை முன்னோக்கி பூமியில் படக்கூடியதாக வைக்க வேண்டும். அப்போது
سُبْحَانَ رَبِّيَ الْاَعْلَى
மகத்துவமிக்க என் இரட்சகன் தூய்மையான வன் என்று மூன்று முறை கூற வேண்டும்.(நூல்: இப்னு மாஜா)
சுஜூதிலிருந்து தலையை உயர்த்தும் போது தக்பீர் கூறி முதலாவது இருப்பில் இருக்கும் போது இரு கைகளையும் தொடைகளின் மீது வைத்து
اللهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي
யாஅல்லாஹ். என்னை மன்னிப்பாயாக எனக்கு அருள் புரிவாயாக. எனக்கு நேர்வழியை காட்டுவாயாக. எனக்கு சுகத்தை தருவாயாக. எனக்கு  உனவு வழங்குவாயாக. என்று கூற வேண்டும். (நூல்: முஸ்லிம்)
பிறகு தக்பீர் கூறி மறுபடியும் ஸஜ்தா செய்ய வேண்டும் மேலே கூறியவாறு ஸஜ்தாவில் ஓதிய துஆவை கூற வேண்டும்.
பிறகு இரண்டாவது ரக் அத்திற்கு எழ வேண்டும். முதல் ரக்அத்தில் ஓதியது போன்று அஊது பிஸ்மியுடன் சூரதுல் பாதிஹாவையும் அதன் பின் சிறயதொரு சூராவை- குர்ஆனில் தெரிந்த வசனங்களை இயலுமானவரை ஓத வேண்டும்.
பிறகு முதலாவது ரக்அத்தில் செய்தது போன்று ருகூஊ சுஜூது செய்து கொள்ள வேண்டும். அத்தஹியாத்தில் இருக்கும் போது தனது தொடையின் மீது கைவிரல்களை சற்று விரித்து வலது கையை வலது தொடையிலும் இடது கையை இடது தொடையிலும் வைக்க வேண்டும் அதன் பின்
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ   اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
“எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டு மாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்ல டியார்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
யாஅல்லாஹ் இப்றாகீம் நபியின்மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அருள் புரிந்தது போல் முஹம்மத் நபியின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக் குரியவன், கீர்த்திமிக்கவன். யா அல்லாஹ் இப்றாகீம் நபியின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் (பாக்கியம்) அபிவிருத்தி புரிந்தது  போல் முஹம்மத் நபியின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் (பாக்கியம்) அபிவிருத்தி புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன்” என்று கூற வேண்டும்.
(நூல்: புகாரி முஸ்லிம். இப்னு மாஜா)
அத்தஹ்யாத்திற்கு பின் நபி(ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேடியது போன்று பாதுகாப்புத் தேடி பிரார்த்திக்க வேண்டும். அந்த துஆ பின்வருமாறு உள்ளது
اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
யாஅல்லாஹ் நரக வேதனையை விட்டும், மண்ணறை வேதனை விட்டும்,  வாழ்வின், மரணத்தின் சோதனையை விட்டும், தஜ்ஜா லின் சோதனையின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் (நூல்|; முஸ்லிம்)
அதன் பின் வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பி ஸலாம் கொடுக்க வேண்டும்
கடமையான மற்றும் சுன்னத்தான தொழுகையின் அட்டவணை
தொழுகைகள்    முன் சுன்னத்    கடமையான தொழுகை     பின்சுன்னத்
சுபஹ்    2    2    -
லுஹர்    2 + 2    4    2
அஸர்    2 + 2    4    -
மஃரிப்    2    3    2
இஷா    2    4    2
வித்ரு 3+2
ஜூம்ஆ    தஹீயதுல் மஸ்ஜித் 2    2    வீட்டில் 2
பள்ளியில் 2+2