முஸ்லிம்கள் அறிய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய கேள்வி பதில்கள்
>தமிழ்-Tamil تاميلي ->
அஷ் ஷெய்க் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ் ஸஃதி நூலாசிரியர்
❧❧
ஜாசிம இப்னு தஇயான்
மொழி பெயர்த்தவர்
முஹம்மத் அமீன்
மீலாய்வுசெய்தவர்
سؤال وجواب في أهم المهمات
اسم المؤلف
العلامة الشيخ عبدالرحمن بن ناصر السعدي
ترجمة:
جاسم بن دعيان
مراجعة:
محمد أمين
முஸ்லிம்கள் அறிய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய கேள்வி பதில்கள்.
1ம் பாகம்
அஷ் ஷெய்க் அப்திர் ரஹ்மான் அஸ் ஸஅதி அவர்களால் கேள்வி பதில்கள் முறையில் எழுதப் பட்ட சிறிய நூல். இதில் தவ்ஹீத் என்றால் என்ன? அதின் பிரிவுகள் என்ன? ஈமான், இஸ்லாம் என்றால் என்ன, அல்லாஹ்வின் திருநாமங்கள் என்ன, அவனது குணாதிசயங்கள் என்ன? ஈமானில் கூடுதல் குறைதல் ஏற்படுமா? அடியார்கள் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? ஷிர்க், அதன் பிரிவுகள் என்ன? நபிமார்கள் மீது எவ்வாறு விசுவாசம் கொள்வது? அல் கத்ர் எனும் விதியை நம்புவது எவ்வாறு? இறுதி நாளை நம்பிக்கை கொள்வது எப்படி? முனாபிக் எனும் நயவஞ்சகம் என்பது என்ன? இது போன்ற எராளமான கேள்விகளுக்கு இங்கு விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளன.
முஸ்லிம்கள் அறிய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய கேள்வி பதில்கள்.
நூலாசிரியர்
அஷ் ஷெய்க் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ் ஸஃதி
தமிழில்
ஜாசிம் இப்னு தஇயான்
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கிறேன்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அழகிய திரு நாமங்களும், பூரணான குணாதிசயங்களும் எங்கும் பரவி இருக்கும் ஆசீர்வதங்களும் அவனுக்கே சொந்தம். மார்க்கத்திலும், இவ்வுலக, மறுமை வாழ்வில் உயர்பெற வழிகாட்ட அனுப்பப்பட்ட முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இது, ஒருவர் மார்க்கத்தில் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய முக்கிய விபரங்களும் இறை விசுவாசத்தின் அடிப்படையையும் விளக்கும் சிறிய கை நூலாகும். இந்த விபரங்களை இலேசாக விளக்குவதற்கு வசதியாக கேள்வி பதில் முறையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கேள்வி 1. தவ்ஹீத் எனும் ஏகதெய்வ நம்பிக்கையின் வரையரைகள் என்ன? அவற்றின் பிரிவுகள் என்ன?
பதில். தவ்ஹீதின் வரையரை விபரங்கள் என்பது அதனுடன் சம்பந்தப் பட்ட சகல விடயங்களிலும் ஏகத்துவத்தை பின்பற்றுவதாகும். அதாவது, அல்லாஹ்வுக்கு அடிபணிதல் பற்றிய அறிவு, அதனை கொள்கையாக அமைத்துக் கொள்வது, அதனை ஏற்றுக் கொள்வது போன்ற சகல விடயங்களும் அல்லாஹ்வின் பரிபூரண தன்மைகள் அவனுக்கு மாத்திரமே உள்ளன என்று அவனை ஏகத்துவப்படுத்தல். சகலதையும் படைத்த அவனுக்கு உண்மையில் ஏகத்துவமும் வழிபாடும் உரிய தாகும். அதன் பின் சகல விதமான வணக்க வழிபாடுகள் அவனுக்கு மாத்திரமே நிறைவேற்றப் பட வேண்டும். இவ்வாறான விளக்கங்களின் படி தவ்ஹீத் மூன்று வகைப்படும்.
முதலாவது; தவ்ஹீத் அர் ருபூபியியா அதாவது, படைத்தல், அவற்றை போஷித்தல், ஏற்பாடு செய்தல், பயிற்றுவித்தல் போன்ற பரிபாலனத்தில் போஷிப்பவனை ஏகத்துவப் படுத்தி அவனையே ஏற்றுக்கொள்வதாகும்.
இரண்டாவது; தவ்ஹீதுல் அஸ்மா வஸ் சிபாத் – அதாவது தன்னை பற்றி அல்லாஹ் எவ்வாறு விவரித்துள்ளானோ அல்லது அவனது தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவனை பற்றி எவ்வாறு உறுதிப்படுத்திக் கூறினார்களோ அந்த முறையில் உறுதிப் படுத்திக் கூறுவது, அவனுக்கு இணை வைப்பது அல்லது மாற்றம் செய்வது அல்லது கூடுதலாக சேர்ப்பது போன்ற எதனையும் செய்யாது அவ்வாறு கூறப்பட்ட அல்லாஹ்வின் தன்மைகளையும் அழகிய திரு நாமங்களையும் உறுதியாக ஏற்றுக்கொள்வது.
மூன்றாவது; சகல வித வணக்க வழிபாடுகளையும், அவற்றின் பிரிவுகளையும், ஒவ்வொரு அம்சங்களையும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிறைவேற்றுவது. இவற்றில் எதிலும் எந்த ஒருவரையும் கூட்டுச் சேர்க்காது நேர்மை யுடன் நிறைவேற்றுவது.
இவை அணைத்தும் தவ்ஹீதின் பிரிவுகளாகும். அல்லாஹ் வின் அடியான் இவை அணைத்தையும் நிறைவேற்றும் வரை அவன் உண்மையான முவஹ்ஹித் எனும் அல்லாஹ்வை எகத்துவப் படுத்திய ஒருவனாக மாட்டான்.
2வது கேள்வி; ஈமான், இஸ்லாம் என்றால் என்ன? இவ்விரண்டின் அடிப்படை என்ன?
பதில்; ஈமான் என்பது அல்லாஹ்வும் அவனது மார்க்க தூதரும் எந்த விஷயங்களை உண்மை என்று கூறி, அவற்றை விசுவாசம் கொள்ளுமாறு எமக்கு கட்டளை யிட்டார்களோ அவை அனைத்தையும் உறுதியாக விசுவாசம் கொண்டு அவற்றை உண்மை படுத்துவதாகும். இஸ்லாம் என்பது செயலுடன் சம்பந்தப்பட்டதாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதும் அவனுக்கு மாத்திரம் கீழ்படிந்து செயல் புரிவதுமாகும்.
ஈமான் மற்றும் இஸ்லாம் என்ற இரண்டு விஷயங்களின் அடிப்படை பற்றி சூரா பகராவில் குர்ஆன் இவ்வாறு விவரிக்கிறது.
قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (136)
“அல்லாஹ்வையும், எங்கள் பால் இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப், இவர்களுடைய சந்ததிகள் ஆகியோரின் பால் இறக்கப்பட்டதையும், மூஸா வுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப் பட்டிருந்த தையும், மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இரட்சகனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்ததையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்; அவர்களிடமிருந்து எவருக்கும் இடையில் நாம் (பிரித்து) வேறுபாடு காட்ட மாட்டோம். இன்னும், அவனுக்கே நாங்கள் முற்றிலும் கீழ்படிகின்றவர்கள்” என நீங்களும் கூறுங்கள்.”
இந்த விஷயம் சம்பந்தமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறினார்கள்.
“ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனுடைய மலக்கு களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும், நன்மையோ அல்லது தீமையோ அல்லாஹ் நாடியபடி நடைபெறும் என்பதை நீங்கள் நம்புவதாகும். மேலும், இஸ்லாம் என்பது வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு நாயன் இல்லை முஹம்மது நபி (ஸல்லல்ஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று விசுவாசம் கொண்டு சாட்சியம் கூறல், ஐங்காலத் தொழுகையை சரியாக நிறைவேற்றல், நீங்கள் சகாத் செலுத்துதல், ரமதான் மாதத்தில் நோற்றல், அல்லாஹ்வின் வீட்டுக்குச் சென்று ஹஜ் கடமைகளை நிறைவேற்றல் என்பன அடங்கும்.
இதன் அடிப்படையில் உள்ளத்தில் ஏற்படும் விசுவாசம் இமான் என்றும் வெளிப்படையாக நிறைவேற்றும் செயல்கள் இஸ்லாம் என்றும் விளக்கப்படுத்தப் பட்டுள்ளது.
கேள்வி 3 ; அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்கள் மற்றும் அவனுடைய பண்புகள் என்பவற்றின் அடிப்படை என்ன?
பதில்; இவற்றின் அடிப்படை மூன்று. அதாவது அல்லாஹ்வின் சகல அழகிய திருநாமங்கள் மீதும் விசுவாசம் கொள்ளல். தன்னை பற்றியும் தன் குணாதிசயங்கள் பற்றியும் அவற்றை பற்றிய நியாயங்களை அவனே கூறியுள்ளபடி விசுவாசம் கொள்ளல். இதன் அடிப்படையில் அவன் சகல ஆற்றல் படைத்தவன், சகல விஷயங்கள் பற்றிய முழுமையான அறிவு அவனுக்கு உண்டு, சகல விஷயங்களையும் தனது ஆற்றலை கொண்டு செயல் புரியக்கூடிய பராக்கிரம் வாய்தவன், தான் விரும்பியவர்களுக்கு தனது அளவற்ற கருணை செலுத்தக் கூடிய பெரும் கருணை வாய்ந்தவன் என்று விசுவாசம் கொள்கிறோம். இவற்றை போலவே அவனது ஏனைய குணாதிசயங்களை யும், பண்புகளையும் இவற்றுக்குரிய நியாயங்களை யும் விசுவாசம் கொள்ள வேண்டும்.
கேள்வி 4; எல்லா படைப்புகளையும் விட உயரத்தில் அல்லாஹ் இருக்கிறான். அவன் அர்ஷின் மீது உயர்ந்து இருக்கிறான் என்ற கூற்றை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்;
எல்லா சிந்தனைகளையும் விட, உலகலாவிய யதார்த்தங்களை விட உயரத்தில் எமது இறைவன் அல்லாஹ் இருக்கிறான் என்று நாம் அறிவோம். அவன் செயல்பாடுகளில் உயர்ந்தவன். குணங்களில் உயர்ந்தவன். சக்தியில் உயர்ந்தவன். அதிகாரத்தில் உயர்ந்தவன். அத்துடன் அவன் தனது படைப்பிணங்களை விட்டும் நீங்கியவன். அவற்றை விட மிகவும் வேறு பட்டவன். அவன் எமக்கு தன்னை பற்றி அறிவித்துள்ளது போல் அர்ஷ் எனும் உயர் பீடத்தில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டுள்ளான். அவ்வாறு அவன் அமைத்துக் கொண்டான் என்று அவன் அறிவித்ததை தவிர எவ்வாறு தன்னை ஸ்தாபித்துக் கொண்டான் என்பது எங்களுக்கு தெரியாத விஷயங்களாகும். அவன் அர்ஷின் மீது நிலை பெற்று இருக்கிறான் என்று அல்லாஹ் அறிவித்ததை தவிர, தான் எவ்வாறு நிலை பெற்றுள்ளான் என்பதை எமக்கு அறிவிக்கவில்லை. படைத்தவனாகிய அல்லாஹ் வின் ஏனைய குணாதிசயங்கள் பற்றியும் நாம் இவ்வாறே கூற வேண்டும். அதாவது அல்லாஹ் அவனது குணாதிசயங்கள் பற்றி எங்களுக்கு அறிவித்துள்ளான் என்பதை தவிர அவற்றை பற்றிய தன்மைகள் பற்றிய முழு விபரங்களை பற்றி எமக்கு அறிவிக்கப்பட்டில்லை. அல்லாஹ் தனது நூல்கள் மூலமும் தனது நபிமார்கள் மூலமும் எமக்கு அறிவித்துள்ள படி அவை அனைத்தையும் அவ்வாறே விசுவாசம் கொள்வது எமது கடமையாகும். இவற்றை பற்றிய விபரங்களை நாம் கூட்டவோ குறைக்கவோ கூடாது.
கேள்வி 5; அல்லாஹ்வின் கருணை பற்றியும், அவன் முதலாவது வானத்துக்கு இறங்குகிறான் என்பது பற்றியும் நீங்கள் என்ன கூற முடியும்?
பதில்; அல்லாஹ்வின் கருணை, அவனது வருகை, அவன் முதலாவது வானத்துக்கு இறங்குதல் போன்று அவன் தன்னை பற்றி குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் நாங்கள் விசுவாசம் செய்கிறோம். அதே போன்று அல்லாஹ்வை பற்றி அல்லாஹ்வின் தூதர் எவ்வாறு வர்ணித்துள்ளார் களோ, அவை அனைத்தையும் அவனது படைப்புக ளுடன் ஒப்பிடாது நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நம்பிக்கை கொள்கிறோம். அவனை போல் எதுவும் இல்லை என்பது இதற்கு காரணமாகும். அவனுக்கு தனிப்பட்ட தன்மை உண்டு. ஆனால் அவனுடைய தன்மைக்கு நிகரான எதுவும் இல்லை. அவனுக்கு உயர்ந்த பண்புகள் உள்ளன, ஆனால் அவனது உயர் பண்புகளுக்கு நிகரான வேறு எவ்வித பண்பும் இல்லை. இந்த விபரங்களை உறுதிப் படுத்தி, அவற்றின் மூலம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, குர்ஆனிலும் சுன்னாஹ்விலும் மிகத் தெளிவாக கூறப்பட்ட முறையில் அல்லாஹ்வை பற்றி கூறிய தன்மைகளை உறுதிப்படுத்தல். அவற்றை எந்த வகையிலும் மாற்றவோ, அவற்றை முற்றாக புறக்கணிக்கவோ, புது அர்த்தங்களை புகுத்தவோ, படைப்புகளை சுட்டிக்காட்டும் தன்மைகளுடன் ஒப்பிடவோ, இணை வைக்கவோ கூடாது.
கேள்வி 6; அல்லாஹ்வின் கூற்று, குர்ஆனில் கூப்படும் விஷயங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்; குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தை களே. அது எவராலும் உருவாக்கப்பட்ட நூலல்ல. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆன் இறுதியில் அவனிடமே மீளும். அதில் உள்ள பிரகடனங்க ளும், கருத்துக்களும் நிச்சயமாக அல்லாஹ் அறிவித்தவைகளே. அவன் பேசாமல் இருக்க வில்லை. தான் விரும்பியதை தான் விரும்பிய நேரத்தில் வெளிப்படுத்துவான். அவனுடைய பேச்சுக்கு எல்லையோ அல்லது முடிவோ கிடையாது.
கேள்வி 7; பொதுவாக ஈமான் (இறை விசுவாசம்) என்றால் என்ன? ஈமான் கூடவோ குறையவோ முடியுமா?
பதில்; விசுவாசம் என்பது உள்ளத்தில் எழும் எண்ணங்களின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்ளும் கொள்கைகள், அவற்றை செயல் முறைகள், உடலாலும் நாவாலும் பிரகடணப் படுத்தல், என்பவைகளை குறிக்கும் பொது வார்த்தையாகும். ஆகையால் மதத்தின் அடிப்படைகள், அதன் கிளைகள் என்பன விசுவாசத்தில் அடங்கியுள்ளன. ஆகையால் நன்மைகளை செய்தல், நல்ல விஷயங்களை பேசுதல், அவைகளில் அதிமாக ஈடுபடுதல் என்பன கொள்கைகளின் சக்தியும் அவற்றின் நல்ல அம்சங்களும் ஆகும். இவற்றின் மூலம் இறை விசுவாசம் அதிகரிப்பதோடு இவற்றுக்கு எதிராக செயல் புரிதல் மூலம் இறை விசுவாசம் குறைந்து விடும்.
கேள்வி 8; அபாக்கியம் பெற்ற பாவியின் நிலை என்ன?
பதில்; ஏக தெய்வ நம்பிக்கையை ஏற்றுக்கொண்ட இறை விசுவாசி எல்லா விதமான பாவங்களையும் விட்டு நீங்கி இருப்பான். அத்துடன் எவற்றின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமோ அவற்றின் மீது நம்பிக்கை வைப்பான். எவரேனும் அடிப்படை இறை விசுவாசத்தை விட்டு நீங்கி விடுகிறானோ அவன் பாவம் செய்தவனாக மாறி விடுகிறான். அவனுடைய இறை விசுவாசம் உறுதியற்று விடும். அவன் தனது விசுவாசத்தை கைவிட்ட குற்றத்துக்கு ஆளாகிறான். அவன் செய்த பாவத்துக்கு தண்டனை வழங்கும் முழு உரிமை அவனை படைத்தவனுக்கு உண்டு. அத்துடன் என்றென்றும் நரகத்தில் தங்குவான். ஆகையால் முழுமையான இறைவிசுவாசம் ஒருவனை நரகத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும், அதே நேரத்தில் குறைபாடு உள்ள இறைவிசுவாசம் நரகத்தில் நிரந்தரமாக இருப்பதை விட்டும் அவனுக்கு பாதுகாப்பளிக்கும்.
கேள்வி 9; விசுவாசிகளுக்கு இருக்கும் அந்தஸ்து எவ்வளவு? அவற்றின் விபரங்கள் என்ன?
பதில்; விசுவாசிகள் மூன்று பிரிவினராக உள்ளனர்.
1. சாபிகூன் எனப்படும் பிரிவினர். இவர்கள் நன்மை செய்வதில் முன் நிலை வகிப்பவர்கள். இவர்கள் கட்டாயமான கடமைகள், முக்கியமான சுன்னத்துக்கள் ஆகியவற்றை தாமும் கடைபிடித்து மற்றவர்களுக்கும் அவற்றை ஏவி நடத்தி வைப்பார்கள். ஹராமான, மற்றும் வெறுப்பூட்டும் செயல்களை தடுத்து தாமும் அவற்றை விட்டும் நீங்கி இருப்பார்கள்.
2. முக்தசிதூன் எனப்படும் சிக்கனமாக செயல் புரிபவர்கள். கட்டாயமாக்கப் பட்ட (பர்ழான) விஷங்களில் மாத்திரம் ஈடுபட்டு, தடுக்கப்பட்ட (ஹராமான) விஷயங்களை விட்டும் நீங்கி இருப்பார்கள்.
3. ழாலுமூன லிஅன்புஸிஹிம் எனப்படும் தமக்கே அநியாயம் செய்துக் கொண்டவர்கள். இவர்கள் நன்மையான காரியங்களை செய்து தீயசெயல் களிலும் ஈடுபட்டவர்கள்.
கேள்வி 10; அடியார்களின் செயல் முறைகள் பற்றிய தீர்ப்பு என்ன?
பதில்; அல்லாஹ்வின் அடியார்கள் அல்லாஹ்வுக்கு அடி அணிந்து எந்தவொரு காரியத்தை செய்தாலும், அல்லது அவனது கட்டளைக்கு மாற்றமாக எந்தவொரு பாவமான காரியத்தில் ஈடுபட்டாலும் அது அல்லாஹ்வின் படைப்பில், அவனது தீர்ப்பில், அவனது தராசில் பதியப் பட்டுள்ளது. ஆனால் மனிதர்கள் எவ்வாறு செயல் புரிந்தாலும்,அல்லாஹ் அவர்களை அந்த விஷயங்கள் சம்பந்தமாக எந்த வகையிலும் கட்டாயப் படுத்தவில்லை. மனிதர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு, அவர்களது சக்திக்கு ஏற்றவாறு செயல்பட அல்லாஹ் சுதந்திரம் அளித்துள்ளான். இது மனிதர்களின் இயற்கையான சுபாவமாகும். அவர்கள் அந்த செயல்களுக்காக விளக்கம் கூறப்படுவார்கள். அவற்றின் அடிப்படை யில் அவர்கள் விளைவுகளும் முடிவுகளும் கொடுக்கப் படுவார்கள். இவை அணைத்தும் அல்லாஹ்வின் படைப்புகளாகும். இதற்குக் காரணம் அவர்கள் படைப்பு, அவர்களது சிந்தனை கள் அவர்களது சக்தி மற்றும் அவர்களுக்கு ஏற்படும் அனைத்தும் அல்லாஹ்வால் படைக்கப் பட்டதே. ஆகையால் அல்லாஹ்வின் படைப்புகள், அவற்றின் தன்மைகள், அவற்றின் பண்புகள், அவற்றின் அசைவுகள் பற்றி அல் குர்ஆனும் சுன்னாவும் குறிப்பிடும் அனைத்து விபரங்களையும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம். அடியார்கள் நன்மையோ தீமையோ செய்யக் கூடியவர்கள். அச்செயல்கள் சம்பந்தமாக அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு குர்ஆனும் சுன்னாவும் கூறும் நியாயங்களை நாங்கள் விசுவாசம் கொள்கிறோம். அதன்படி மனிதனின் ஆற்றலையும் அவனது சிந்தனைகளையும் படைத்தவன் அல்லாஹ். இவ்விரண்டும் மனிதனின் பேச்சு, அவனது செயல் என்பன செயல்பட காரணங்களாக அமைகின்றன. அனைத்தையும் படைத்த இறைவன் அவற்றுக்கு தேவையான காரணங்களையும் படைத்தான். மேலும் அல்லாஹ் சகல ஆற்றல் படைத்தவன். ஆகையால் மனிதர்களை கட்டாயப் படுத்தாது அவர்களுடன் மிகவும் கண்ணியமாக நடந்துக் கொள்கிறான்.
கேள்வு 11; ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை வைப்பது) என்றால் என்ன? அதன் வகைகள் என்ன?
பதில்; ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் இரு வகையாகும். ருபூபிய்யா எனும் அல்லாஹ்வின் நிர்வாகத்தில் இன்னொருவரை இணை வைத்தல். அதாவது படைப்புக்களில் சிலவற்றை படைப்பதற்கும் அவற்றை ஏற்பாடு செய்வதற்கும் அல்லாஹ்வுடன் இன்னுமொரு வருக்கும் பங்குண்டு என ஒரு அடியான் நினைப்பது இந்த வகையான ஷர்க்கில் அடங்கும். இரண்டாவது இபாதத் எனும் இறை வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் இன்னொருவருக்கும் பங்குண்டு என நினைப்பது. இது இரண்டு வகையானது. முதலாவது ஷிர்க்குல் அக்பர் எனும் மிகப் பெரிய இணை வைத்தல். அடுத்தது ஷிர்க்குல் அஸ்கர் எனும் சிறிய விஷயங்களில் இணை வைத்தல். ஷிர்க்குல் அக்பர் என்பது அல்லாஹ்வை தவிர ஏனையவர்களிடம் பிரார்த்தனை புரிதல், அவர்களிடம் நன்மைகள் எதிர் பார்த்திருத்தல், அவர்களுக்கு பயத்துடன் அஞ்சி நடத்தல் போன்ற வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் நடந்துக் கொள்ளுதல். இத்தகைய செயல்கள் ஒருவரை மதத்திலிருந்து அப்புரப்படுத்தி விடும். இவ்வாறு செய்பவர்கள் நரக நெருப்பில் என்றென்றும் நிலை பெறுவர். ஷிர்க்குன் அஸ்கர் எனும் சிறிய ஷிர்க்கான காரியங்கள் என்பவை அல்லாஹ் அல்லாத ஏனைய விஷயங்களின் மீது சத்தியம் செய்தல், அளவுக்கு மீறி எவரையும் புகழ்ந்து பேசுதல், அகம்பாவம் போன்ற வணக்க வழிபாடு சம்பந்தப் படாத விடயங்களில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் அளவுக்கு சமானமாக நடந்துக் கொள்ளும் வழிமுறை களாகும்.
கேள்வி 12; அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கும் முறை என்ன?
பதில்; அல்லாஹ் சகல படைப்புகளையும் விட என்றும் நிலைத்திருப்பவன். தனிப்பட்ட தேவைகள் எதுவும் இல்லாத தனித்தவன். சகல வர்ணனை களையும் விட வேறுபட்டவன். எல்லா வகையிலும் சர்வ சம்பூர்மானவன். சகல கீர்த்தியும் அவனுக்கே உரியன. எல்லா புகழும் அவனுக்கே உரியன. அவன் மிகப் பெரியவன். மிவும் உயர்ந்தவன். படைப்பகளின் அறிவுக்கு எட்டாத உயர்த்தியான குணாதிசயங்கள் அவனுக்கு உரியன. அவனே முதன்மையானவன், அவனுக்கு முன்னால் எதுவும் இல்லை. அவன் வெளியரங்கமானவன், அவனுக்கு அப்பால் எதுவும் இல்லை. அவன் உள்ளரங்க மானவன், அவனுக்கு கீழால் எதுவும் இல்லை. எல்லாவித தன்மைகளை விடவும் மிகவும் உயர்ந்தவன். எல்லா ஆற்றல்களில் இருந்தும் மிவும் சிறந்தவன். எல்லா சக்திகளை விட மிவும் சக்தி வாய்ந்தவன். எல்லா விஷயங்களை பற்றியும் நன்கு அறிந்தவன். எல்லா விஷயங்களிலும் அதிகாரம் படைத்தவன். எல்லா மொழிகளிலும் கேட்கப்படும் எல்லா தேவைகளுக்கும் செவி சாய்ப்பவன். சகலவற்றையும் நன்கு அவதானிப்ப வன். அவனது படைப்புகளை பற்றி மிகவும் உன்னிப்பாக கவணிப்பவன்.அவனது எல்லா தன்மைகளிலும், செயல்களிலும் பெரும் புகழுக்கு ரியவன். அவன் ஆற்றலிலும் சக்தியிலும் மிவும் உயர்ந்தவன். அவன் கருணையாளன். அளவற்ற அருளாலன். அவனது கருணை அனைத்தையும் சூழ்ந்துக்கொள்ளும். நடைபெறும் அனைத்து விஷயங்களையும் அவனது கருணை, அவனது உதவி, மற்றும் அவனது அருள் சூழ்ந்துக் கொண்டிருக்கும். அவனே அரசன். அதிபதிகளுக் கெல்லாம் அதனே மிகப் பெரிய அதிகாரம் அடைத்தவன். அதிகாரத்தை நடத்துபவன் அவனே. அவன் சர்வ ஞானம் படைத்தவன். மிகவும் உயர்ந்தவன். படைப்புகள் எல்லாம் அவனுக்கு அடங்கி நடக்கும். கீழ்ப்படிவதற்கு தகுதியானவன் அவனே. அனைத்தையும் மாற்றியடைக்கும் ஆற்றல் படைத்தவன் அவனுக்கே உண்டு. அவன் என்றும் உயிருடன் இருப்பவன். எல்லா புகழுக்கும் உரிமை கொண்ட அவன் என்றும் நிலைத்திருப்பவன். அவன் ஒருவருக்கும் கட்டுப்படாது இருப்பவன். எவருடைய உதவியும் தேவையற்றவன். அவன் சகல செயல்களிலும் போற்றப்படுபவன். அவன் நாடியதை நடைபெறச் செய்யும் ஆற்றல் படைத்தவன். அவன் நாடாத போது அக்காரியம் நடைபெறுவதில்லை. இவ்வாறெல்லாம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு நாவால் மொழிகிறோம். அவனே எங்கள் இறைவன். படைப்பவன். எவ்வித முன் மாதிரியுமின்றி தான் நாடியதை படைப்பவன். படைக்கப்பட்டவைகளில் காணப்படும் அழகு, அலங்காரம் கொண்ட அமைப்பு, ஆகியவற்றை திட்டமிட்டு அழகிய முறையில் அவனே படைத்தான். வணக்கத்துக் குரிய இறைவன் அவனை தவிர யாரும் இல்லை. அதிகமாக மன்னிப்பளிக்கும், சகல சக்தி படைத்த, சகல அதிகாரம் படைத்த அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். வேறு எவர் பக்கமும் திரும்ப மாட்டோம். அவனை விட்டு திரும்பி போகவுமாட்டோம். அவனையே முழுமையாக வணங்குகிறோம். அவனிடமே உதவி தேடிகிறோம். அவனிடமிருந்தே எல்லா நன்மை களையும் எதிர் பார்க்கிறோம். அவனுக்கே பயப்படு கிறோம். அவனுடைய கருணையையே எதிர்ப்பர்க்கிறோம். அவனது கட்டளைக்கும் அவனது தண்டனைக்கும் நாங்கள் பயப்படு கிறோம். அவனை தவிர எங்களுக்கு வணங்குதற்கு தகுதியான வேறு இறைவன் எவரும் இல்லை. ஆகையால் அவனையே வணங்குகிறோம். அவனிடமே உதவி கேட்கிறோம். அவனை தவிர வணங்குவதற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமை வாழ்க்கையிலும் எமக்கு பொறுப்பாளியான அவனிடமே எமது எல்லா தேவைகளையும் யாசிக்கிறோம். அவனுடைய உதவி நன்மையை தரும். எமக்கு ஏற்படக்கூடிய எல்லாவித தீமை களையும், நஷ்டங்களையும் எம்மை விட்டும் தடுப்பவன் அவனே. இவ்வாறு உளப்பூர்வமாக நாங்கள் சாட்சி கூறுகிறோம்.
கேள்வி 13; நபிமார்களை விசுவாசம் கொள்ளும் முறை பற்றிய விளக்கம் என்ன?
பதில்; நபிமார்கள் எனப்படும் இறை தூதர் களையும், ரசூல் மார்கள் எனப்படும் அல்லாஹ் வின் கட்டளைகளை கொண்டு வந்தவர்களையும் முழுமையாகவும், விளக்கமாகவும் விசுவாசம் கொள்வது எமது கடமையாகும். நிச்சயமாக அல்லாஹ் தனது கட்டளைகளையும், தூதையும் அறிவிக்கும் வழியாக அவர்களை தேர்தெடுத்தான். அவனது மார்க்கத்தை பரப்புதற்கும், அவனுக்கும் அவனது படைப்புகளுக்கம் இடையில் ஊடகமாக அவர்களை அல்லாஹ் அமைத்தான். அவர்கள் நேர்மையாளர்கள் எனவும், அவர்கள் கொண்டு வந்த விஷயங்கள் எவ்வித பிழையுமில்லாதவைகள் என்று நிரூபிக்கும் சாட்சிகள் மூலம் அவர்களை உறுதிப் படுத்தினான். நிச்சயமாக அவர்கள் நன்னடத்தையிலும், நன்மை புரிவதிலும் மற்றவர்களை விட பரிபூரணம் பெற்றவர்களாவர். உண்மையே பேசக் கூடியவர்களாகவும், நற்பண்புகள் நிறைந்தவர்களாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். எவருக்கும் அவர்களுக்கு நெருங்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு விஷேச தன்மைகளை அல்லாஹ் அருளினான். கீழ்தரமான எல்லா காரியங்களை விட்டும் அவர்களை தூரமாக்கினான். அல்லாஹ் அறிவித்த விஷயங்களை தவிர வேறு எதனையும் அறிவிப்பதை விட்டும் அவர்கள் தம்மை தடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அறிவிக்கும் அத்தனை விபரங்களும், அவர்கள் மார்க்கத்தில் காட்டும் நேர்வழிகளும் உண்மாயனவை, அவற்றில் எவ்வித பிழைகளும் இல்லை. இவ்வாறு அவர்கள் அனைவரையும் நாங்கள் விசுவாசம் செய்கிறோம். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த அத்தனையையும் நாங்கள் உண்மையென நம்புகிறோம். அவர்கள் மீது அன்பு வைக்கிறோம். அவர்களுக்கு சங்கை செய்கிறோம். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தமாக அவை அனைத்தை யும் முழுமையாக நம்பிக்கை கொள்வது எமது விஷேட கடமையாகும். அன்னாரை அறிந்துக் கொள்வதும், அன்னார் கொண்டு வந்த மார்க்க அனுஷ்டானங்களை எங்களால் முடிந்த அளவு முழுமையாகவும் விபரங்களுடனும் தெரிந்துக் கொள்வது எம் அனைவர் மீதும் கட்டாய கடமையாகும். இவ்வாறு அன்னார் மீது நம்பிக்கை வைப்பது, அன்னரை பின்பற்றுவது, சகல விடயங்களிலும் அன்னாரின் கட்டளைக்கு அடிபணிவது எனும் செயல்கள் அன்னார் கொண்டு வந்த விபரங்களை உறுதிப் படுத்துவதாகும். அன்னார் கொண்டு வந்த கட்டளைகளை நிறைவேற்றுவதும், அன்னார் தடுத்த விஷயங்களி லிருந்து விழகி நடப்பதும் இதன் மூலமே நடைபெறும். நிச்சயமாக அன்னார் இறுதி நபியாவார்கள். அவருக்குப் பிறகு வேறோரு நபியில்லை. அன்னார் மார்க்க அனுஷ்டானங்கள் அனைத்தையும் முழுமையாக எமக்கு அறிவித்துள்ளார்கள். இந்த அனுஷ்டானங்கள் மரித்தவர் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை நிலைத்திருக்கும்.
(தொடரும்)
Contents
الصفحة العنوان م
1 தவ்ஹீத் எனும் ஏகதெய்வ நம்பிக்கையின் வரையரைகள் என்ன? அவற்றின் பிரிவுகள் என்ன? 1
ஈமான், இஸ்லாம் என்றால் என்ன? இவ்விரண்டின் அடிப்படை என்ன? 2
அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்கள் மற்றும் அவனுடைய பண்புகள் என்பவற்றின் அடிப்படை என்ன 3
எல்லா படைப்புகளையும் விட உயரத்தில் அல்லாஹ் இருக்கிறான். அவன் அர்ஷின் மீது உயர்ந்து இருக்கிறான் என்ற கூற்றை பற்றி உங்கள் கருத்து என்ன? 4
அல்லாஹ்வின் கருணை பற்றியும், அவன் முதலாவது வானத்துக்கு இறங்குகிறான் என்பது பற்றியும் நீங்கள் என்ன கூற முடியும்? 5
அல்லாஹ்வின் கூற்று, குர்ஆனில் கூப்படும் விஷயங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? 6
பொதுவாக ஈமான் (இறை விசுவாசம்) என்றால் என்ன? ஈமான் கூடவோ குறையவோ முடியுமா? 7
அபாக்கியம் பெற்ற பாவியின் நிலை என்ன? 8
விசுவாசிகளுக்கு இருக்கும் அந்தஸ்து எவ்வளவு? அவற்றின் விபரங்கள் என்ன? 9
அடியார்களின் செயல் முறைகள் பற்றிய தீர்ப்பு என்ன? 10
ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை வைப்பது) என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? 11
அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கும் முறை என்ன? 12
நபிமார்களை விசுவாசம் கொள்ளும் முறை பற்றிய விளக்கம் என்ன? 13
விதி அல்லாது தலை எழுத்து என்பது பற்றி விசுவாசம் கொள்வதின் படிகள் எத்தனை? அவை யாவை? 14
இறுதி நாளை விசுவாசம் கொள்வதின் வரையறை என்ன? அதில் அடங்கும் விபரங்கள் என்ன? 15
நிபாக் எனும் நாவஞ்சகம் என்றால் என்ன? அதன் பிரிவுகளும் தன்மைகளும் என்ன? 16
பித்ஆ என்றால் என்ன? அதில் எத்தனை பிரிவுகள் உள்ளன? 17
உங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்படும் முஸ்லிம்க ளுக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன? 18
நபி (ஸல்) அவர்களின் நண்பர்களுக்காக நாம் ஆற்ற வேண்டிய பொறுப்பக்கள் என்ன? 19
இமாமத் என்ற உங்கள் கூற்றின் பொருள் என்ன? 20
ஸிராத் அல் முஸ்தகீம் எனும் நேர்வழி என்றால் என்ன? அதன் தன்மைகள் என்ன? 21
இறை நிராகரிப்பவன், இறைவிவாசம் அற்றவனிட மிருந்து வேறுபடும் மூமினின் தன்மைகள் என்ன? 22